Thursday, June 07, 2018

கமலை எந்த சூழ்நிலையிலும் ரஜினி விட்டுக்கொடுத்ததில்லை.ஆனால்

குருவே!எந்தப் பழக்கமும், பழகப் பழக சுலபமாகிவிடும்...
விடிகாலையில் எழுவதைத் தவிர...அப்டினு சொல்றாங்களே அது நிஜமா? ரூம்ல கதவு ,ஜன்னல் அடைச்ட்டுப்படுத்தா அப்டித்தான்.மொட்டை மாடிலயோ ,மரத்தடிலயோ,வாசல்திண்ணைலயோ படுத்தா(கிராமங்களில்)சேவல் 5 Am க்கு டாண்ணு எழுப்பி விட்ராது

=========


2 கோபம் இருக்கற இடத்துலதான் (மன்னிப்பு) கேட்கும் குணம் இருக்கும்


============


3 உடம்பு தான் ஆயுதம் போராடுங்கன்னு காலா படத்துல சொல்றீங்க. நெஜத்துல போராடினா தொழில்கள் பெருகாதுன்னு சொல்றீங்க. நாங்க எதை நம்ப சார் ?
சிம்ப்பிள்.சினிமாவை ,சினிமாக்காரர்களை நம்பாதீங்க.அரசியலை ,அரசியல்வாதிகளை நம்பாதீங்க.வாழ்க்கைல முன்னேறிடுவீங்க


===========


4 அரசியல்ல ஆளுங்கட்சி யை பத்தியோ,எதிர்க்கட்சியைப்பத்தியோ பேச்சைக்காணோம்.எங்கே பாத்தாலும் ரஜினி பேச்சு ,அவரோட கருத்து பற்றியே விவாதம் நடக்குது.பாசிட்டிவோ,நெகட்டிவோ ரஜினி க்கு இது முக்கியமான காலகட்டம்.
சினிமா "தளபதி" vs அரசியல் தளபதி ஸ்டாலின் ஜெயிக்கப்போவது யாரு?


===========


5 ரஜினியை எதிர்த்துப்பேசிய சந்தோஷ் சை மன்னிப்புக்கேட்க வெச்ட்டாங்க போல.மிரட்டலா?தெரில================6 இமயமலை சென்று யோகா செய்து மனதை ஒரு நிலைப்படுத்தினாலும் சாமான்யனின் கேள்விக்கு பதில் சொல்லாமல் கோபத்தில் பொங்கி வழிந்தால் அண்ணாமலை இமயமலை சென்று என்ன பயன்?


===============7 ஆத்துலயோ,குளத்துலயோ,கிணத்துலயோ"கரை ஓரமா"தண்ணில கால் வெச்சு நின்னா மீனுங்க வந்து காலை கவ்வி விளையாடும்.10 பைசா செலவில்லை.நெட் தமிழன் 500 ரூபா பணம்"கட்டி fish மசாஜ் னு மீன் தொட்டில கால் வெச்சு போட்டோ ஸ்டேட்டஸ் போடறாப்டி


===========8 பலரும் சொல்வது போல "தமிழ்படம்" தான் தமிழ் சினிமா வின் முதல் ஸ்பூப் வகை படம் அல்ல. எஸ் வி சேகர் நடித்த "சினிமா சினிமா"தான் முதல் முழுநீள ஸ்பூப் தமிழ் சினிமா.எஸ்வி சேகரின் பல மேடை நாடகங்கள் (தத்துப்பிள்ளை,அல்வா) அவ்வகையே


============9 எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை என்பது தொழில் வளர்ச்சி அடையவில்லை என அர்த்தம் கொள்ளத்தேவை இல்லை,ஒண்ணை பாத்தாலும் உருப்படியா பாக்கலாம்னு கூட இருக்கலாம்


===============


10 குருவை (S.A.சந்திரசேகரன்) மிஞ்சிய சிஷ்யன் (ஷங்கர்) அரிது.
குருவை (நிர்மலா தேவி) கரெக்ட் பண்ணின கவர்னர் பெரிது============11 மணிபர்சை எப்பவும் பாக்கெட்லயே வெச்சிருக்கறவன் அதுல அதிகமா பணம் வெச்சிருக்க மாட்டான்.


============12 ரயில்/பஸ் ல வழியனுப்ப வந்தவரு பேக்ல பணம் பத்திரம்னு அடிக்கடி எச்சரிக்கை தந்துட்டே இருக்காரு,பக்கத்துல திருடன் இருந்தா அவன் உஷார் ஆகிக்குவான்


=============13 போன வருடம் வாங்கின அதே சம்பளம் இந்த வருடமும் கிடைத்தால் கம்பெனி மாறு அல்லது நீ மாறு.முன்னேற்றம் தாறுமாறு


===============


14 FB,ட்விட்டர் ல இருக்கற பெண் பாலோயர்ஸ் கிட்ட நகைச்சீட்டு ,பலகாரச்சீட்டு சேத்தறேன் ,சேர வர்றீங்களா?னு இன்னுமே யாரும் சீட்டிங்க் பண்ணாம இருப்பது ஆச்சரியமா இருக்கு (ஐடியா தரலை,தோணுச்சு சொன்னேன்)


==============15 பொண்ணு பார்க்கும் முன் பொண்ணோட அம்மாவைப்பார்.
படம் பார்க்கும் முன் படத்தோட ட்ரெய்லர்/டீசர் பார். ஒரு முடிவுக்கு வந்துடலாம்


================16 கலைஞரிடம் இருந்த நகைச்சுவை உணர்வு ,டைமிங்க்,வாதத்திறமை ஸ்டாலினிடம் இல்லை.ஆ ராசா ,துரை முருகன் எல்லாம் அசால்ட்டா பேசி கைதட்டல் அள்றாங்க


============17 சாமி 2 ட்ரெய்லர் மகா மட்டம்.அது கூட தேவல.VIP ங்க அதுக்கும் சொம்பு தூக்கி ஹரிக்கும் ,விக்ரம்க்கும் மென்சன் போட்டு பிரமாதம் ப்ரோ ,கொன்னுட்டீங்க அப்டிங்கறாங்க,முதல் பாதி பொய் ,பின் பாதி நிஜம்


===============18 டாக்டர் ,சளி, இருமலுக்கு சிறந்த மருந்து எது..??
வெந்நீரில் மஞ்சள் தூள் போட்டு ஆவி பிடிச்சா சளி எஸ்வி சேகர் மாதிரி மாயமா மறைஞ்சிடும்..மிளகை அம்மில நுணுக்கி அந்த தூளை காய்ச்சிய பசும்பால்ல கலந்து குடிச்சா இருமல் சீமான் மாதிரி இருந்த இடம் தெரியாம ஓடிப்போய்டும்


==============19 கமலை எந்த சூழ்நிலையிலும் ரஜினி விட்டுக்கொடுத்ததில்லை.ஆனால் ரஜினியை வம்புக்கு இழுக்காமல் கமல் இருந்ததில்லை.


=============20 சினிமாவில் நடிக்கும்போதே படங்களில் படம் முழுக்க வரும் கமல் ரோலை விட ரஜினி 10 நிமிஷம் வரும் ரோல் கைதட்டல் வாங்கிவிடும் ,அந்த ஆதங்கம் கமலுக்கு உண்டு.சக போட்டி நடிகர் ,மக்கள் அபிமானம் ,வசூல் என எட்ட முடியாத உயரத்தில் ரஜினி இருப்பதை கமலால் ஜீரணிக்க முடியலை


==============

0 comments: