Wednesday, June 20, 2018

தடுத்தாட்கொண்ட தவ்ப்புதல்வனே!

எஸ்.வி.சேகர் கிரிமினல் குற்றம் எதையும் செய்யவில்லை - மாஃபா பாண்டியராஜன்
# அவரு செய்யலையோ இல்லையோ உங்களை நல்லா வச்சு செய்யப்போறாங்க நெட்டிசனஸ்.ஒரே மீம்ஸ் மழைதா ின்


===========


2 பள்ளிக்கு கட் அடிப்பது போல ஸ்டாலின் சட்டசபையை கட் அடிக்கிறார்: பொன்.ராதா # போகும்போது சும்மா போறதில்ல,சட்டையை வேற கிழிச்சு விட்டுக்கறாரு.

வெளிநடப்பு வேந்தன் னு பேர் வாங்க ஆசை போல


===========


3 ஆற்று மணல் கொள்ளையை அதிமுக அரசு தான் தடுத்திருக்கிறது: எடப்பாடி பழனிச்சாமி தவ்ப்புதல்வனே! னு பேனர் வெச்சுடுவொம்


========


4 திமுக ஆட்சிக்கு வருவது தடுக்கப்பட ரஜினி பயன்பட வேண்டும் -தமிழருவி மணியன் படம் பாருங்க.பாஜக வைத்தான் ரஜினி அவருக்கே தெரியாம அட்டாக் பண்ணி இருக்காரு


============


5 அரசியல் கேள்விகள் என்னிடம் கேட்காதிர்கள் ~ஜெயகுமார் # அப்ப ஐஏஎஸ் எக்சாம்ல இருந்து 10 கேள்வி கேட்கலாமா?


===========


6 விஜயகாந்த் விழுந்தாலும் எழுந்து திருப்பி அடிப்பார் ... பிரேமலதா ...
!# தள்ளி விட்ட வைகோ வையும் திருமாவையுமா?=============


7 கட்சியை பலப்படுத்த அடுத்த மாதம் தமிழகம் வருகிறார் அமித்ஷா - தமிழிசை
# கட்சிக்காரங்களுக்கு ஹார்லிக்ஸ் ,பூஸ்ட் வாங்கித்தருவாரோ?===========


8 18 MLA க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்க்கு மாற்றம் # இன்னுமா பெஞ்ச் நடைமுறைல இருக்கு?பேக்பெஞ்ச் , சேர் ,சோபா னு முன்னேறியாச்சே?


==========9 தகுதி நீக்கம் செல்லும் - இந்திரா (ஜட்ஜ்1)
தகுதி நீக்கம் செல்லாது - சுந்தர்(ஜட்ஜ்2)
// கேயாஸ் தியரிப்படி டாஸ் போட்டு பைனல் ஜட்ஜ்மண்ட் சொல்லிடுங்கப்பா


==========10 அதிமுகவினர் சொத்து விவரங்களை கைப்பற்றி உள்ளது திமுக!# அனக்கோண்டா vs கோட்ஜில்லா மொமண்ட்; 2 திருடன்களும் இருக்கறதை சமமா பிரிச்சுக்குவாங்க.==============
11 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்ப்பவர்கள் துரோகிகள் : பொன்.ராதா # கொஞ்ச நஞ்சம் இருந்த சந்தேகமும் தீர்ந்தது,நிச்சயமா இது மக்கள் நலனுக்கான திட்டமா இருக்காது===============12 மோடிதான் மீண்டும் பிரதமராக வருவார் என இயேசு என்னிடம் கூறினார் - பால் தினகரன்
# இப்டித்தான் என் கனவில் எம்ஜிஆர் சொன்னார்னு அடிச்சு விட்டாங்க நடராஜன் ,ஜெ


===========13 தமிழக அரசு சார்பில் MLAக்களுக்கு வழங்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தில் எடப்பாடி படம்-செய்தி# திருக்குறளுக்கும் ,எடப்பாடிக்கும் என்ன சம்பந்தம்?
சம்பந்தப்படுத்திக்கிட்டோம் மொமண்ட்


===============14 துணை முதல்வர் ஓ.பி.எஸ்-இன் காலில் விழுந்து வாழ்த்து பெற்ற 3 அமைச்சர்கள் - செய்தி
மைண்ட் வாய்ஸ் −நம்ம பார்முலாவை நம்ம கிட்டயே காட்றாங்களே?
கால்ல விழுந்தவங்க எல்லாம் முதல்வராவும் ,துணை முதல்வராவும் ஆனதாலயா?=============15 4வருடத்தில் 19நாள்கள் மட்டுமே நாடாளுமன்றம் வந்த மோடி-செய்தி# அட்டெண்டென்ஸ் ரொம்ப வீக்கா இருக்கே?மோடி ஜி யுவர் அட்டன்சன் ப்ளீஸ்============
16 18 MLA க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் - உயர்நீதிமன்றம் தீர்ப்பு #
கடப்பாறை கொண்டு நெம்பினாலும் இந்த ஆட்சி கவிழாதுனு eps தைரியமா பேசுனப்பவே தெரியும்,தீர்ப்பு இப்டிதான் வரும்னு============17 விராட்கோலியின் சவாலை
ஏற்று பிட்னஸ் தொடர்பான வீடியோவை வெளியிட்டார் பிரதமர் மோடி # அப்டியே யாராவது அந்த 15 லட்சம் ரூபா ஒவ்வொருவர் a/c லயும் போட்டுவிடற சவால் விடவும்==============18 18 எம்எல்ஏக்கள் வழக்கின் தீர்ப்பு.. அணுகுண்டாகவும் வெடிக்கலாம், புஸ்வாணமாகவும் மாறலாம்: தமிழிசை # மொத்தத்து ல ஒரு தீபாவளி க்கு வெய்ட்டிஙங்============19 பெருந்துறை சிப்காட்: பூமியில் புதைக்கப்பட்ட திடக்கழிவுகள்.. 10 கிமீ சுற்றளவு நிலத்தடி நீர் பாதிப்பு # அடுத்த தூத்துக்குடி பெருந்துறை தான் போல=============20 தமிழகத்தில் 1.60 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் வேலையில்லாமல் உள்ளனர் - அமைச்சர் செங்கோட்டையன் #
அதனாலதான் புது அட்மிஷன் கம்மியா இருக்கு


============

0 comments: