Tuesday, June 19, 2018

தாஜ்மஹால் vs ராம் மஹால்

எங்களிடமுள்ள​ 18 எம் எல் ஏக்களும் சபரிமலை படிக்கட்டு போன்றவர்கள்-தினகரன் # பேரம் பேச வராதீங்க,நடை சாத்தியாச்சுங்கறாரா?


===========


2 எங்களை யாரும் மிரட்டி பணிய வைக்க முடியாது-ஓபிஎஸ்
இதுக்கு மேல பணிவா?ஏற்கனவே முதுகு பெண்ட் ஆகித்தானே இருக்கு?


===========


3 தமிழகத்தில் அ.தி.மு.க. வுக்கு எதிர்கட்சிகளே இல்லை" - அமைச்சர் ஓ.எஸ். மணியன் பெருமிதம்
கண் டாக்டரை பார்க்கவும்


==========4 ஒரு தலித்தை முதல்வராக்குவது கலைஞரின் கனவு-கனிமொழி
கடைசிவரை நம்ம தளபதிய முதல்வர் ஆக்காமயே இருந்துட்டாரே?============


5 தேர்தல் வந்தால்தான் எத்தனை பேர் திமுகவில் இருந்து பிச்சிகிட்டு வெளியே வருவர் என்பது தெரியும்- அழகிரி
# கிரி கிரி அழகிரி அசெம்ப்ளி க்கு ஆசப்படறாரா?


===========


6 மோடிதான் மீண்டும் பிரதமராக வருவார் என இயேசு என்னிடம் கூறினார் - பால் தினகரன்
# அப்டியே ஏசு கிட்ட இதுக்கு எதுனா பரிகாரம் இருக்கா?னு கேட்டுச்சொல்ல முடியுமா?


===========


7 மத்திய அரசு பணிகளில் சேர அடிப்படை இந்தி அறிவு கட்டாயம்: செய்தி # இங்க்லீஷ் தெரிஞ்சிருந்தா போதுமே?எதுக்கு ஹிந்தி?===========8 சேலம் −சென்னைநெடுஞ்சாலை திட்டத்தில ்4000 கோடி ஊழல் செய்துள்ளதாக லஞ்ச ஊழல் ஒழிப்புத் துறையிடம் திமுக புகார் கொடுத்துள்ளது. # நிச்சயம் இதில் உண்மை இருக்கும்.அதிமுக EPS ன் பெரும் ஊழல் இதில் இருக்கலாம்.தடை செய்யப்பட்வேண்டிய திட்டம்


=============


9 மோடி என்பவர் குளோபல் லீடர்-எஸ்.வீ.சேகர்
# ஆனா"தமிழகத்துக்கு மட்டும் அவர் இமேஜ் டர்ர்ர்=============10 தேநீர் விற்ற நான் லண்டன் அரண்மனை வரை வந்திருப்பதற்கு 125 கோடி மக்கள் தான் காரணம் - மோடி # 125 இல்லை 132 கோடி மக்களை ஏடிஎம் வாசல்ல க்யூ"வில் நிற்க வைத்ததற்கு யார் காரணம்?


==========


11 2022-ம் ஆண்டுக்குள் ஒவ்வொருவருக்கும் வீடு: பிரதமர் மோடி # ஒருத்தனை ஏமாத்தனும்னா முதல்ல அவன் ஆசையைத்தூண்டனும்−சதுரங்கவேட்டை அரசியல்===========12 யாருக்கும் அடிப்பணிய வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை!- அமைச்சர் ஜெயக்குமார்

இது மோடிக்கு தெரியாம பாத்துக்கவும்


===========13 காலா பார்த்தால் 5 நட்சத்திர ஹோட்டலில் 50% தள்ளுபடியில் உணவு -ஹோட்டல் கிளாரியன்
அதிரடி அறிவிப்பு # தண்டம் வேற முட்டுக்கோல் வேற
சுண்டைக்காய் கால் பணம் ல வாங்கனும்னா பலாக்காயை முக்கா பணம் தந்து வாங்கனும்=============


14 விஸ்வரூபம் 2 படத்திற்கு வரும் எதிர்ப்புகளை அரசியல்வாதியாக எதிர்கொள்ள தயாராகிவிட்டேன்" - கமல் # எதிர்ப்பு வரனும் ,பரபரப்பா பேசப்படனும்,நெகடிவ் பப்ளிசிட்டில படம் ஓடனும்கறதுக்காகவே ஹிந்தி வர்சன்ல சர்ச்சைக்குரிய வசனம் வெச்சிருக்கீங்க போல (முசல்மான் வரி)=============

15 திமுக, மதிமுக கட்சிகள் அண்ணன் தம்பி போன்றது- வைகோ.#
திமுக வுலயே
அண்ணன் தம்பி பிரச்சனை இன்னும் நீறு பூத்த நெருப்பா இருக்கு,இவரு வேற


==========


16 அடுத்த ஆண்டு நடைபெரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் பாஜகவை பலப்படுத்த முயற்ச்சி - தமிழிசை # அப்போ பாஜக இங்கே பலவீனமாதான் இருக்குனு ஒத்துக்கறீங்க?


=============


17 மத்திய அரசுக்கு அ.தி.மு.க. துணைபோகிறது வைகோ குற்றச்சாட்டு # மத்திய அரசு வேற,அதிமுக மாநில அரசு வேற னு இன்னும் இவர் நம்பிட்டு இருக்கார் போல==============18 தமிழகத்தில் ஆட்சியை கலைக்கும் எண்ணம் பா.ஜ.கவுக்கு இல்லை - இல.கணேசன் # கலைச்சா அடுத்த தேர்தல்ல திமுக வந்துடும்,அதுக்கு நம்ம தஞ்சாவுர் தலையாட்டி பொம்மை பெஸ்ட்னு மோடி நினைச்ட்டார் போல


============


19 தாஜ்மஹால் பெயரை ராம் மஹால் என்று மாற்றலாம்! -- உ.பி பிஜேபி எம்.எல்.ஏ. சுரேந்தர் சிங் அமைதியா இருக்கறது இவருக்கு பிடிக்கல போல.===============20 மதிய உணவில் பிள்ளைகளுக்கு மாம்பழச்சாறு வழங்கும் திட்டத்தை அரசு கைவிட்டுவிட்டது. ்.-அன்புமணி # மாம்பழம் பாமக சின்னம்னு லேட்டாதான் தெரிஞ்சுட்டாக போல


============

0 comments: