Tuesday, June 26, 2018

ஓவியாவை தற்கொலைக்கு தூண்டிய வழக்கு

கலைஞர் ,எம்ஜிஆர்,ஜெ இவர்களின் தகிடுதித்தங்கள் அறிய இவர்கள் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து மணிரத்னம் இயக்கிய "இருவர்"இன்று காலை 9 மணிக்கு@ஜெயா டிவி.காணாத இளையதலைமுறை கண்டு உணரவும்.
ARR ன் ஹிட் பாடல்கள் ,நல்ல இயக்கம் இருந்தும் ரிலீஸ் ஆன நேரத்தில் பெரிய அளவில் ஹிட் ஆகாத படம்


==========


2 ஒவ்வொருவருக்கும் ஆதர்ச நாயகன் அவரவர் அப்பாதான்.வெளி உலகில் நமக்கு வழிகாட்டியும் அவரே!முக சாயலிலும் சரி,நன்னடத்தையிலும்"சரி அவரவர் அப்பா குணாதிசங்கள் வெளிப்படும்.எளிமை ,உழைப்பு ,தியாகம் இவற்றின் மறுவடிவம்


=============


3 அதிகாரபலம் ,அரசியல் சக்திகள்,ஜாதி வெறி இவற்றுக்கு எதிராகப்போராடுகையில் உன் மீது சேறு இரைக்கப்படுகிறது எனில் நீ போகும் பாதை மிக சரியானது என்று பொருள்.


=============

சென்றாயன் என்ன அமைதிப்படை அமாவாசை மாதிரி பம்மறாப்டினு பாத்தா சொந்த ஊரு தேனியாம்.OPS ஊரு===========


5 பெருந்துறை சென்ற தமிழக அரசு பேருந்தில் இந்தியில் எழுதப்பட்ட பெயர்ப்பலகை. னு ஆளாளுக்கு எதிர்க்கறாங்க.வட மாநிலங்களிலிருந்து 40,000 தொழிலாளர்கள் வந்து வேலை செய்யறாங்க,அவங்க புரிஞ்சுக்கத்தான்.


===============


6 சேலம் சென்னை 8 வழி சாலை மிகப்பெரிய ஊழல் நடக்க வாய்ப்பு.பல விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.நிலம் அடிமாட்டு விலைக்கு வாங்கப்படும்


=============


7 S.A
சந்திரசேகர் டிராபிக் ராமசாமி ரோலுக்கு மிகப்பொருத்தம்.அவரைப்போல் இவர் நெற்றியில் திலகம் இடவில்லை என்ற குற்றச்சாட்டு தேவையற்றது.அவரது அடையாளம் போராட்டம்தான்.புரட்சி இயக்குநர் என அந்தக்காலத்துலயே பெயர் எடுத்தவர்

===============


8 வாட்ஸ்அப்பில் வரும் திருமண அழைப்பிற்கு வாட்ஸ் அப்பிலேயே வாழ்த்து சொல்வது தானே முறை?
அது அகராதி.திருமண ஏற்பாடு நெருக்கடியில் அவருக்கு என்ன கஷ்டமோ?நேரிலோ,போனிலோ,மெசேஜிலோ எப்படி அழைத்தாலும் நேரில் போய் வாழ்த்தி வருவதே தமிழர் பண்பாடு


================


9 ரஜினி யால் எப்படி ஒரு தலைமுறையே சிகரெட் பிடிப்பதை ஒரு ஸ்டைலாகக்கற்றார்களோ,அதே போல் ,ஹிந்தி கற்றுக்கொள்வது தவறு என ஒரு கூட்டம் நினைக்க காரணமா இருந்தது கலைஞர்.அவர் வீட்டு பேரன்,பேத்திகளெல்லாம் ஹிந்தி கற்றுக்கொண்டர்கள்.தொண்டர்கள் அறியாமையில் ஹிந்தி ஒழிக கோஷம் போடறாங்க


==============


10 தெரிந்தோ ,தெரியாமலோ ரஜினி ஒரு மிகப்பெரும் கூட்டம் புகைபிடிக்க அடிகோலினார்.ஆனால் தெரிந்தே கலைஞர் மக்களிடம் மொழி உணர்வைத்தூண்டி விட்டு அதில் குளிர் காய்ந்தார்


===============


11 பழமுதிர் சோலையில் பழம் வாங்கினால்தான் கவுரவம் என பணக்காரர்கள் மெழுகு பூசப்பட்ட ஆப்பிள்,கலர் சேர்க்கப்பட்ட கெமிக்கல் கரைசலில் ஊற வைத்த திராட்சை ,நாவல் பழம் சாப்பிட்டு வலிய நோயை வரவழைத்துக்கொள்கிறார்கள்.உழவர் சந்தையில்,காய்கறி மார்க்கெட்டில் நேரடியாக விவசாயிகளிடம் வாங்குவதே சரி


===============


12 கிராமங்களில் ஒரு கட்டு 5 ரூபா ,நகரங்களில் ரூ 10 ரூபா,மாநகரங்களில் ரூ 15 ரூபா எனக் கிடைக்கும் கீரை வகைகள் (கரிசலாங்கண்ணி,மிளகுதக்காளி,அரைக்கீரை)ஏதாவது ஒன்றை கடைந்தோ,பொரியலாகவோ தினசரி உணவில் சேர்த்துக்கொண்டால் அல்சர்,வயிறு உபாதைகள் உங்கள் வாழ்நாளில் வராது


==================


13 கீரைக்கட்டு /இலை தளதள என மினுமினுப்புடன் இருந்தால் தவிர்க்கவும்.கெமிக்கல் தெளித்தது.அங்கங்க பூச்சி கடிச்சு ஓட்டை ஓட்டையா இருப்பதே நல்ல கீரை


===============


14 எல்லாத்துலயும் பாசிடிவ்வாதான் இருப்பேன்னு அடம் பிடிக்காதீங்க,ஏன்னா எய்ட்ஸ் ரத்தப்பரிசோதனை ல நெகடிவ்னு ரிசல்ட் வந்தாதான் நல்லது


===============


15 ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்னவங்க ஒரு 100+ இருக்கும்,காஜல் அகர்வாலுக்கு வாழ்த்துப்பா பாடறவங்க எண்ணிக்கை இன்னைக்கு நைட்க்குள்ள லட்சத்தை தொட்டுடும்


==============


16 ரயில் நின்றதும் இடம் பிடிக்க அடிதடி நடக்குது.பயணிகளை இறங்கவே விடாம ஏறிட்டு இருப்பது வழக்கம்.இதை தவிர்க்க ரயில் வரும் ,மக்கள் இறங்கும் பிளாட்பார்ம்க்கு எதிர் திசையில் இறங்கி நின்னுட்டா அவங்க பாட்டுக்கு அந்தப்பக்கம் இறங்கறப்ப நாம இந்தப்பக்கம் ஏறிக்கலாம்


===============


17 பசுமை வழி சமையல் என்பது கீரை கடைவதே!


==============


18 சேலம் சென்னை 8 வழி சாலை அமைப்பதே தவறு.அதிலும் அரசு ஆக்ரமிக்கும் நிலத்துக்கான இழப்பீட்டுத்தொகை 1894 பிரிட்டிஷ்காரங்க போட்ட சட்டப்படி அடிமாட்டு விலைக்கு பேரம் பேசுவது விவசாயிகள் வயிறில் அடிக்கும் செயல்.2013 ல் திருத்தப்பட்ட சட்டப்படி நட்ட ஈடு தரவேண்டும்


==============


19 அதிமுக அடிமை அணி ஐடி விங்க் ஆரம்பிச்சிருக்காங்களாம்,ஒரு ட்வீட்க்கு 225 ரூபாயாம்.இனி 200 ரூபா கோஷ்டிங்களுக்கு இன்க்ரீமண்ட்தான்


============


20 ஓவியாவை தற்கொலைக்கு தூண்டிய வழக்கு, மருத்துவ முத்தம் என்ற பித்தலாட்டமுகமூடியில் ஆரவ் செய்த மோசடிகள் இதெல்லாம் இந்த மாதர் சங்கங்க கண்ணுக்கு தெரியாது.சிம்பு பீப் சாங் விட்டார்னு குதிப்பாங்க


=================

0 comments: