Thursday, June 07, 2018

kaalaa

1 ஜெயலலிதா ஒரு வாரம் கழித்து அப்போலோவில் சேர்ந்திருந்தால் நான் அமைச்சராகி இருப்பேன்- கருணாஸ்
ஜெ உயிரோட இருந்தப்ப இதை சொல்லி இருந்தா அந்த அம்மா இவரை அப்போலோல சேத்தி இருக்கும்


===========2 மக்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திய ரஜினிகாந்த் மீது தேசத்துரோக வழக்கு பதிய வேண்டும் - ் சரத்குமார் # முதல்ல தேசதுரோக வழக்குன்னா என்ன?அது எதெதுக்கு பிரயோகிக்கப்படுதுனு தெரிஞ்சிட்டு கருத்து சொல்லுங்க நாட்டாம=============3 ரஜினியின் பேச்சு பாஜக குரலா? அல்லது அதிமுகவின் குரலா என்ற சந்தேகம் எழுகிறது!
-ஸ்டாலின் # யாரோட குரலோ,ஆனா துண்டு சீட்டு பாக்காம கரெக்டா சொல்லிட்டாரே?தடுமாறலயே?


=============4 தமிழகத்துக்கு விடிவு காலம் பிறக்கும்னா கூவத்தூர் ரகசியங்கள் சொல்ல தயங்க மாட்டேன் -கருணாஸ்
விடிவெள்ளியே!உங்களால பலர் வாழ்க்கைல சனியே!சீக்கிரம் சீக்ரெட்ட எடுத்து விடுங்க


=============5 அனைத்து விஷயங்களிலும் குழப்பமின்றி தெளிவாக கருத்து தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த் - தமிழிசை
# பாஜக கருத்தை தான் ரஜினி னு சொல்றாரோனு எங்களுக்கு குழப்பமா இருக்கு============6 ஸ்டெர்லைட் ஆலைக்கு அடிக்கல் நாட்டியவர் ஜெ. தான்.. மாதிரி சட்டசபையில் ஸ்டாலின் சரமாரி தாக்கு துண்டு சீட்டு பாக்காம சொன்னாரா?


=============7 திருமணமான பெண்கள் அனைவருக்கும் அவரவர் கணவர் டிரைவர்தான் ,கடைவீதி வரை டிராப் பண்ணிடுங்க
அம்மா வீட்ல விட்டுடுங்க ஆபீஸ் போறப்போ அந்த முக்குல எறக்கி விட்டுடுங்க


==============


8 பெருந்துறை சிப்காட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் , 26 -ஆம் தேதி முதல் சிப்காட் வளாகத்தில் போராட திட்டம்
நிலத்தடி நீர் பாதிப்பு,பல தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பறி போகும் ,ஆனாலும் வேற வழி இல்லை 10,000 வேலைவாய்ப்புகளுக்காக 2 லட்சம் குடும்பம் பாதிக்கப்படக்கூடாது===========9 செய்தி : அம்மன் வேடத்தில் பிக்பாஸ் ஜூலி
# அடுத்ததா சினேகன் சிவபெருமானா வருவாரோ?ஆரவ் கிருஷ்ணபரமோத்மா==============10 மன்மோகன் சிங் இப்போது பேச தொடங்கிவிட்டார், நீங்கள்தான் மியூட் ஆகிவிட்டீர்கள்
# அவரும் எதிர்க்கட்சி ஆனதும் பேசத்தொடங்கிடுவார்


===========


11 குதிரை பேரத்திற்கு பெயர் போனது காங்கிரஸ்தான்” - பிரகாஷ் ஜவடேகர் # நாம யானை பேரத்துக்கு பேர் போனவங்களா?


================12 மோசமான ஆட்சியில் இருந்து நல்ல ஆட்சியை நோக்கி இந்தியா இன்று சென்று கொண்டிருக்கிறது - பிரதமர் மோடி # அப்ப இந்த 4 வருசமா நல்ல ஆட்சி இல்ல,இனிமே வரப்போற ஆட்சிதான் நல்ல ஆட்சியா?


==============13 தூத்துக்குடிக்கு சென்று நாடகமாட விரும்பவில்லை - பொன்னார் #
அப்போ ரஜினி நாடகமாடினார்ன்னு சொல்ல வரறீிங்க? நீங்க அங்கே போனா நடமாட முடியாதபடி ஜனங்க பண்ணிடுவாங்க,அவ்ளோ காண்ட்ல இருக்காங்க


============14 முதல்வர் கனவுடன் யார் வேண்டுமானாலும் வரலாம்; முதல்வராக ஸ்டாலினுக்கு மட்டுமே தகுதி உண்டு - வைகோ #
2 வருசத்துக்கு முன்னேயே இதை சொல்லி இருந்தா பாவம் ம ந கூ வே உருவாகி இருக்காது.விகாந்த்தும் அவர்வழில அக்கடானு இருந்திருப்பார்.இப்டி உசுப்பேத்தி ...


==============15 நடிகனான என்னை பார்ப்பதால் தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சி கொள்வார்கள் - ரஜினி காலத்துல கரெக்டா வந்துட்டாரேனு சந்தோஷப்படுவாங்க,அடுத்த வாரம் காலா ரிலீசுக்கு இப்பவே ப்ரமோ?


=============16 4 ஆண்டு சாதனையை சொல்ல ஓராண்டு போதாது - தமிழிசை பேட்டி படும் வேதனையை சொல்ல 40 வருசம் போதாது


============17 ஆளுநர்களின் அலவன்ஸ் தொகை அதிகரிப்பு # அவங்களுக்கு எவ்வளவோ எக்ஸ்ட்ரா செலவு இருக்கு.நிர்மலா தேவிகளுக்கு டிப்ஸ்,கமிஷன் குடுக்கனும்


===========18 முதல்வராக ஸ்டாலினுக்கு மட்டுமே தகுதி உண்டு - வைகோ
தெரியுது தமிழ்நாட்டுஜனங்களுக்குத்தெரியலயே?கடைசி வரை செயல்தலைவரை எதிர்க்கட்சித்தலைவராவே வெச்சிருக்காங்க


============19 மு.க.ஸ்டாலினை முதல்வராக்க வேண்டுமென்ற வைகோவின் உறுதியை விசிக வழிமொழிகிறது
- திருமாவளவன் # அடேங்கப்பா,முக்கியத்தலைவர்கள் எல்லாம் முடிவு எடுத்துட்டாங்க,இனி ஜனங்க தான் பாக்கி


=============20 ரஜினியின் கருத்துக்கு 80 சதவீத மக்கள் வரவேற்பு: தமிழருவி மணியன் கருத்து
கணக்கு குத்துமதிப்பா எடுத்ததா?குத்துமதிப்பு ஜட்ஜ் குமாரசாமி கணக்கா?


=============

0 comments: