Tuesday, June 12, 2018

நீளமாக நகம் வளர்க்கும் பழக்கம் இல்லாத பெண் டைப்பிஸ்ட்கள் தேவை

மேடம் ,நீங்க ராஜ துரோகம் பண்ணிட்டதா சொல்றாங்களே?

அவங்க கொள்ளை அடிச்சதை நான் கொள்ளை அடிச்சேன்,இது தப்பா?


============


2 எல்லா பாடத்துலயும் பாஸ் ஆன உங்க பையன் ஒரு பாடத்துல மட்டும் பெயில் ஆகிட்டானாமே?ஏன்?

அவன் விஜய்"ரசிகன்."வரலாறு" புக்கை தொடக்கூட மாட்டானாம்


==============3 யாமம் என்றால் கருப்பு. யாமினி என்றால் கருப்பழகி என்று சொல்லலாம்.

அதெப்டி டீச்சர்? கருப்பினி னு தானே அர்த்தம் வருது?


============


4 மேடம் ,எவனோ ஒருத்தன் உங்க முதுகுல ,நெஞ்சுல ,தொடை ல கோலம் போட்டுட்டு போய் இருக்கான்,நீங்க தூங்கீட்டீங்களா?

யோவ்,அது டாட்டு ,நானா போய் போட்டுக்கிட்டது


============5 டாக்டர் ,தினமும் "கோலம்" போடும் பெண்களுக்கு..
"சுகபிரசவம்" அமையுமாமே?நிஜமா?
வீட்டு வேலைகள் குனிஞ்சு நிமிர்ந்து செஞ்சாலே சுகப்பிரசவம் அமையும்.அதுக்கு வேலைக்காரி வெச்சுக்கறாங்க.வேலைக்காரிங்களுக்கு சுகப்பிரசவம் ஆகுது,இவங்களுக்கு ஆபரேஷன் தான்


===========6 திரும்புற பக்கம் எல்லாம் எவனாச்சும் எதாச்சும் பொண்ணு கிட்ட பேசிட்டு தான் இருக்கான் நம்ம தான் வேடிக்கை மட்டும் பாத்துட்டு இருக்கோம்

நீங்க வேடிக்கை பாக்கறதாலதான் அவங்க வெறும் பேச்சோட நிறுத்திட்டாங்க


=7 ஆணோ, பெண்ணோ ரகசிய தகவல் இருந்தால் மட்டும் டிஎம் பயன்படுத்தலாம் என்பதுதான் எனது எண்ணம் 🙏

சொல்லீட்டீங்க இல்ல?இனி டெய்லி 10 பேரு "என் கிட்ட ஒரு ரகசியத்தகவல் இருக்கு"னு வரப்போறாங்க


============


8 நானும் வழுக்கைத்தலைல டோப்பா வெச்சுக்கிட்டேன் ,இனி நயன்தாரா க்கு என்னை பிடிக்குமில்ல?

என்ன உளர்றே?
"விக்"னேஷ்"வரன்களை"த்தான் அவரு விரும்பறாராமே?


=================


9 வித விதமா என்ன சாப்டாலும் கொஞ்சம் சாம்பார் சாதம் ,கொஞ்சம் ரசம் சாதம்,கொஞ்சம் தயிர் சாதம் சாப்டா தான் நல்லாருக்கு😋😊

ஓஹோ,இந்த மூணு சாப்ட்டாலே எங்களுக்கு வயிறு நிரம்பிடுமே மேடம்,இவை போக என்ன சாப்பிடுவீங்க?
புளிசாதம்,லெமன் சாதம் ,தக்காளி சாதம்.டயட்ல இருக்கறதால இதோட போதும்================10 சார் ,தியேட்டர்"ல கூட்டமே இல்ல

வசனம் எழுதுனவர்தான் காரணம்
எப்டி?
வேங்கை மகன் ஒத்தைல நிக்கேன் னு பஞ்ச் எழுதுனாரு,செண்ட்டிமண்ட்டா ஒத்தைல நிக்க வேண்டியதா போய்டுச்சு


===========


11 டைரக்டர் சார்,துருவ நட்சத்திரம் மாதிரி ஒரு படம் நீங்க எடுக்கனும்,அதை நாங்க பாக்கனும்

அட்லி = மாதிரி என்ன மாதிரி.படம் ரிலீஸ் ஆகட்டும்,தக்காளி,அதே கதையை படமா எடுத்துடறேன்

============


12 குருவே!பேசாத வார்த்தைக்கு நீ எஜமான்
பேசிய வார்த்தை உனக்கு எஜமான். என்ற தத்துவம் உண்மையா?
ஆமா,ஆனா பேசுனாலும் ,பேசலைன்னாலும் ,கருத்து சொன்னாலும் ,சொல்லலைன்னாலும் அடி வாங்கறதும் "எஜமான்" தான்


==============13 சார்,காலா படம் ஓட முடியாம பண்ணிட்டோம்

அடேங்கப்பா ,எப்டி?
தமிழனா இருந்தா காலா பாக்காதே,காலா பாக்காதவங்க RT பண்ணு ன்னோம் 384 Rt ,எப்பூடி?
அட அறிவுக்கொழுந்தே,தமிழ் நாட்டோட மக்கள் தொகை தோராயமா 7 கோடி + ,அதுல ரஜினி ரசிகர்கள் குறைந்தபட்சம் 70 லட்சம் பேரு.384 எங்கே?70L எங்கே?


===========


14 அவ நம்பர் கேட்டா அவங்க அப்பா நம்பர் தந்து இருக்கா 🤧இப்ப என்ன பண்ண?

அவங்க அம்மா நெம்பர் கேளுங்க.அப்பா ,தங்கைனு பேமிலி மெம்பர் நெம்பர் எல்லாம் கேளுங்க.


=============


15 மாப்ளை,கல்யாணம் ஆகி 10,நாள் ஆகியும் ஏன் முதலிரவு நடத்தல?

டெய்லி எதுனா சாக்கு சொல்லி உங்க பொண்ணு வெளிநடப்பு பண்ணிடறாப்டி==============


16 சார்,மீடியாவுக்கோ ,மத்தவங்களுக்கோ தகவல் தெரிவிக்காம மக்களுக்கு உதவி செஞ்சதுக்கு நன்றி,மகிழ்ச்சி

ம்ம்
சார்,அந்த க்ளிப்பிங்க்ஸ் எப்படி வெளியாச்சு?
யாருக்குமே தெரியாம போய்டக்கூடாதுனு ஒரு ஏற்பாடு


==============


17 ரைட்டர் சார்,கதையை தபால்ல அனுப்பாம ஏன வேற ஒருத்தரோட ் வாய்ஸ் மெசேஜா அனுப்பறீங்க?

எடிட்டர் சார்,எழுத்துக்களே பேசவேண்டும்.. எழுத்தாளனல்ல..னு நீங்கதானே சொன்னீங்க?


================


18 மேனேஜர்,சார் நீளமாக நகம் வளர்க்கும் பழக்கம் இல்லாத பெண் டைப்பிஸ்ட்கள் தேவைனு விளம்பரம்"பண்ணி இருக்கீங்களே?ஏன்?

1 கீ போர்டு அடிக்கடி மாத்த வேண்டியதா போய்டுது
2 நகக்கீறல் பட்டா விஷம் னு டாக்டர் சொன்னாரு
3.சம்சாரம் வேற சந்தேகப்பிராணி


=================19 விஜய் ரசிகர்கள் = இந்த ஸ்மார்ட்போன் காலத்துல, வீட்ல, பக்கத்துக்கு வீடுகள்ல ஒருத்தர் கிட்ட கூட ஸ்மார்ட்போன் இல்லாம இருக்குமா ?

இருக்கும்.ஆனா பைக்ல கிளம்புனது,மெயின் ரோடு ,டீக்கடை,வீடு ,இப்படி வரிசையா கரெக்ட்டா போட்டோ வருதே அது அப்படி?


===========20 சார்.ஆறுதல் சொன்ன சம்பவம் எத்தனை மணிக்கு நடந்தது?

இன்று அதிகாலை 1.30 am
பொதுவா பேப்பர் எத்தனை மணிக்கு லாஸ்ட் நியூஸ் கவரேஜ்?
மிட் நைட் 12 − 12.30.ஏன்னா 3 மணிக்கு பேப்பர் பஸ் ஏறிடனும்
அப்போ இன்னைக்கு பேப்பர்ல இந்த நியூஸ் எப்டி வந்தது?
நாங்கதான் முன் கூட்டியே...சாரி.தெரில


============

0 comments: