Wednesday, June 13, 2018

பெரும்பாலான லவ் மேரேஜ் அந்தமான்ல நடக்குதோமே?ஏன்? ஒரு ஆராய்ச்சி

தலைவரே!உங்க 200 ரூபா கோஷ்டிங்க காலா படம் பார்ப்பவன் தமிழ்இன துரோகி னு ஒரு பொய்ப்பிரச்சாரத்தை பரப்பறாங்க


ஆமா,தலைமை சொல்படி...
நம்ம சன் டிவி தானே அந்த காலா பட டிவி ரைட்ஸ் வாங்கப்போகுது?;
ஆமா,
அப்போ வியாபாரத்துக்காக அதை வாங்கறவர் தமிழ் இன துரோகி ஆகிட மாட்டாரா?===========


2 பெண்களுக்கு சொத்துரிமை இருக்குன்னு சட்டம் திருத்துனாங்க சரி.ஆனா நெஜமாவே சொத்து குடுக்குறாங்களா?


நாங்க குடுக்கறதுக்கு முன்னே அவங்க எடுத்துக்கறாங்க.அவங்களாப்பாத்து மிச்சம் மீதி போட்டா தான் ஆம்பளைங்களுக்கு===========3 தலைவரே!உங்க 200 ரூபா கோஷ்டிங்க காலா வை தியேட்டர்ல பார்க்கமாட்டோம் ,தமிழ்ராக்கர்ஸ்ல பாப்போம்னு சொல்றாங்க,தலைவன் எவ்வழி தொண்டர்கள் அவ்வழி


புரியல
நீங்க திருட்டு ரயில் ஏறி வந்தீங்க,உங்க ஆளுங்களும் திருட்டுத்தனமா பாக்கறேங்கறாங்க==============4 தலைவரே!காலா படத்துல ரஜினி பாஜக வை தாக்கற மாதிரி வசனம் இருக்காம்,இப்ப நாம எப்டி கம்பு சுத்தறது?னு தெரியல


இதுக்குத்தான் சாணக்கியத்தனம் வேணும்.பணத்துக்காக தான் சார்ந்த கட்சியையே தாக்கறவர்தான் ரஜினி னு பிளேட்டை திருப்பிப்போடு,முட்டாப்பசங்க நம்பிடுவானுங்க============5 அவளுக்கு மழை பிடிக்கும் என்ற ஒரே காரணத்தால் மழையில் நனைந்து கொண்டிருக்கிறேன்..


உங்களுக்கு சளி பிடிக்கும் பிடிக்கட்டும் என்ற ஒரே காரணத்துக்காக அப்டி அடிச்சு விட்ருக்கும்=========== 6


6 தலைவரே!1996 ல ரஜினியால பயன் அடைந்தவர் யாரு?


நாமதான்
2010 ல எந்திரன் படம் மூலம் ரஜினியை வெச்சு சன் பிக்சர்ஸ் சம்பாதிச்சது?
நமக்குதான் சேரும்
2019 ல வர இருக்கும் எந்திரன் பாகம் 2 (2.0) மூலம் ரஜினி யால வரப்போற வருமானம்?
அதும் நமக்குதான்
அப்போ ஏன் ரஜினியை திட்றீங்க?==========


7 டியர்,கணவராகவே இருந்தாலும் மனைவியின் ஏடிஎம் கார்டை பயன்படுத்த கூடாது னு கோர்ட் சொல்லிடுச்சே?


வெளில போய் விசாரிச்சுப்பாரு,நாட்ல 90% பொண்டாட்டிங்கதான் புருசனோட கார்டு ,வீடு,சொத்து னு உபயோகிக்கறாங்க==========


8 டாக்டர் ,மழைல நனைஞ்சு தான் நேத்து காய்ச்சல் வந்தது,இன்னைக்கு மறுபடி மழைல நனைஞ்சா காய்ச்சல் குணமாகிடுமா?


அது அவங்கவங்க பாடி கண்டிஷனைப்பொறுத்தது,இப்டித்தான் முள்ளை முள்ளால எடுக்கறேன்னு பலர் 2 வது முள்ளை உள்ளங்காலுக்கு அனுப்பிடறாங்க
===========


9 சார்,கமல்ஹாசனை விட டைரக்டர் ரஞ்சித் தான் திறமைசாலி,சமூகபிரக்ஞை உள்ளவர்னு ஒரு கூட்டம் கிளம்பி இருக்கே?


தம்பி,அவங்களை கூப்புல உட்கார வை,கமல் மாதிரி ரஞ்சித் பேர் வாங்க இன்னும் 20 வருசம் ஆகும்===========10 சார் ,லோன் ட்யு வை எப்போ கட்டுவீங்க?


யூ ஆர் அன் லக்கி பெலோ
ஓஹோ,எப்டி சார்?
இப்ப தான் வேற ஒரு பேங்க் லோன் ட்யூ கட்டிட்டு வர்றேன்
நீங்க அதிர்ஷ்டக்காரர் சார் எப்டி?
பல டைம் இழுக்கடிச்சும் உங்க"மேல எனக்கு கோபம் வர்ல பாருங்க,உங்களுக்கோ உங்க குடும்பத்துக்கோ எந்த கெடுதலும் வர்ல===========


11 தலைவரே!நீங்க சேத்து வெச்ச இல்லீகல் சொத்து தான் உங்க உயிர்னு சொன்னீங்க?


ஆமா
இப்ப உங்க உயிருக்கு ஆபத்து னு சொல்றீங்களே?எந்த உயிருக்கு?===========


12 படம் பாத்துட்டு வந்து என் மகன் சொல்றான் - காலா கதையும் சுறா கதையும் ஒண்ணுன்னு சொல்றான்-whattey


மேடம்,இப்போ நீங்க கலாய்க்கறது விஜயையா?ரஜினியையா?ரஞ்சித்தையா?===========


13 கோவக்காரன் அருவாள எடுத்தாத்தான் தப்பு

காவக்காரன் அருவாள எடுத்தா தப்பில்ல
ஓஹோ,ஒரு வேளை காவக்காரன் பயங்கரக்கோவக்காரனா இருந்தா
===============14 தலைவரே!உங்க 200 ரூபா கோஷ்டிங்களுக்கு தமிழே ஒழுங்கா எழுத வரல.இந்த லட்சணத்துல நகைச்சுவை வேற


ஏன் ?என்ன ஆச்சு?
கலா வை புறக்கணிப்போம் ,கலா வை தியேட்டரில் பார்க்க மாட்டோம்னு தப்புத்தப்பா வீரமுழக்கம் இடுறாங்களே?============15 சார்,சினிமா விமர்சனத்தை பாத்து ஒரு சினிமாவைப்பாக்கலாமா?வேணாமா?னு முடிவு எடுக்கறது தப்பு னு சிலர் சொல்றாங்களே?


முதல்ல விமர்சனம் எதுக்குனு புரிஞ்சுக்கனும்
7 கோடி பேர் தலா 100 ரூபா குடுத்துப்பார்க்க படம் ஒர்த்தா?இல்லையா?னு ஒருத்தன் ஒரு 100 ரூபா செலவுல பண்றதுதான் விமர்சனம்
================16 குருவே! திருமணம் என்பது பெண்கள் தங்கள் குழந்தைத்தனத்தையும் சிரிப்பையும் தொலைக்கும் நாள் என்பது உண்மையா?


ஏன்?மேரேஜ்க்கு முன் பொண்ணுங்க சீரியலே பாக்கறது இல்லையா?ஆம்பளைங்க பர்சையும் ,நிம்மதியையும் தொலைக்கறாங்கனு வேணா சொல்லலாம்..================17 நான் வெச்ச சுண்டைக்காய் குழம்புல அப்பளம் கை தவறி விழுந்துடுச்சு

அடடா ,என்ன செஞ்சே?அதை எடுத்துட்டியா?
இல்ல,இன்னும் 4 அப்பளம் வேணும்னே குண்டால போட்டு புது ரெசிபி அப்பளகுழம்பு னு சொல்லிட்டேன்


================18 பெரும்பாலான லவ் மேரேஜ் அந்தமான்ல நடக்குதோமே?ஏன்?

அந்தமான் நிக்காஹ்பார் தீவுகள்னு நினைச்ட்டாங்க போல


==============

19 டைகர் ஃபால்ஸ்ல சூப்பர்பா தண்ணி கொட்டுதாம்... போலாமா ?

அருவி ன்னாலே தண்ணிதான் கொட்டும்,டைகர் பால்ஸ்னா டைகரும் ,மங்க்கி பால்ஸ்னா"மங்க்கியுமா கொட்டும்?


=============20 நம்ம லேப்டாப்பை சுத்தம் செஞ்ச பின் ஒர்க் ஆகல

சுத்தம். எப்டி சுத்தம் செஞ்சீங்க?
சர்ப் எக்செல் கரைசல் ல ஊற"வெச்சுத்தான்


============

0 comments: