Monday, June 04, 2018

டெய்லி விஸ்கி சாப்பிட்டா சுகர் வருமா? டாக்டர்?

தலைவரே!முழு அடைப்புப்போராட்டத்துல எல்லா நிறுவனங்கள் ,கடைகள் கலந்துக்குமா?


ஆமா,ஆனா சன் டிவி ,கலைஞர் டிவி உள்பட நம்ம சேனல்கள் 13 மட்டும் விதி விலக்கு
அது ஏன் தலைவரே?
மடத்தனமா பேசாதய்யா.உபதேசமும் பந்த்தும் ஊருக்குத்தான் ,நமக்கில்லை.ஒரு நாள் சேனல் வருமானம் எவ்ளோ தெரியுமா?=========


2 தலைவரே!உங்க 200 ரூ கோஷ்டிங்க தகவல் தொடர்பு சாதனம் என்ற அளவில் இருப்பதால் டிவி க்கு பந்த்தில் விலக்கு அளிக்கப்படுது பயங்கர புத்திசாலித்தனமா பதில் சொன்னாங்க


அப்பாடா,தப்பிச்சேன்
அப்போ பந்த் அன்னைக்கு டிவி ல நியூஸ் மட்டும்தான் ஓடனும்.சீரியல் வரக்கூடாது.இதை ஏத்துக்க முடியுமா?
==========3 தலைவரே!நம்ம கைவசம் இப்போ எத்தனை MLA இருக்காங்க?


88
எல்லாரும் பதவியை ராஜினாமா பண்ணிட்டா ஆட்சி கலைய ஒரு வாய்ப்பிருக்குனு சிலர் சொல்றாங்களே?ஏன் பண்ணலை?
மறுபடி தேர்தல்ல தோத்துட்டா 88×60 மாசம்× 1,05,000ரூபா லாஸ் தானே?நமக்கு வருமானம்தானே முக்கியம்?============


4 குருவே!சுயமா"சிந்திக்கற அறிவில்லாதவங்கனு"ஒரு"க்ரூப்பை இன்னொரு க்ரூப்"திட்றாங்களே!அது ஏன்?


கேவலம் 200 ரூபா காசுக்காக.
தமிழ் இனத்தையே பலி"கொடுத்து 10 தலைமுறைக்கு சொத்து சேர்த்தவங்களை ஆதரிக்கற கூட்டம் சொல்றதை நம்பலாமா?ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பவன் உழைக்க முடியாதவன்
===========


5 தம்பி,உங்க தலைவர்" கோடிக்கணக்குல மக்கள்"பணத்தை"திருடுனாரா?இல்லையா?


டேய்,நீ 7 வருசத்துக்கு முன்ன பொட்டிக்கடைல ஆரஞ்சு"முட்டாய் திருடுனியா?
பேச்சை மாத்தாதீங்க,நான் திருடனாவே இருக்கட்டும்,உங்க தலைவர் திருடுனாரா?இல்லையா?
கோர்ட்ல நிரூபிக்க முடியல,
வழக்குல தப்பிச்ட்டாரு============6 சார்,உங்களுக்கு என்றும் 16 மார்க்கண்டேயன் வரம் கிடைச்சிருக்கா?


இல்ல
உங்க தாத்தா ,பாட்டி ,அப்பா ,அம்மா இவங்களுக்கு வயசாகுமா?
ஆகும்,எதுக்கு சம்பந்தம் இல்லாம கேள்வி?
இல்ல.யாரையோ "கிழவி"னு திட்றீங்களே?வயசானா எல்லாருக்கும் அந்த ஸ்டேஜ்தான்,நீங்க மட்டும் ஸ்பெஷலா?


============7 குருவே!ஜெ ,சசிகலா உருவாகக்காரணமே எம்ஜிஆர் தான் னு பேசிக்கறாங்களே?


எம்ஜிஆர் அரசியலுக்கு வர காரணமே கலைஞர்தான்
அது எப்டி?
ஒழுக்கமா திருடுனதை ஒத்துக்கிட்டிருந்தா அவர் பாட்டுக்கு சினிமா வேலையைப்பாத்துட்டிருந்திருப்பாரு,யோக்கியன் ஆக இருப்பவன் கணக்கு கேட்டா காமிக்கனும்============
8 குருவே!அப்பா கொள்ளைக்காரனா இருந்தா மகனும் அப்டியே இருப்பாரா?நல்லவரா இருக்க மாட்டாரா?வாய்ப்பு குடுப்பமே?


அப்டியா?விஷ பாம்பு புற்றுல கை விடுவியா?
அய்யோ மாட்டேன் ,கொத்திடும்
மடத்தனமா பேசாதீங்க,அப்பாவோ ,குட்டியோ கொத்தறதுதானே பாம்பின் குணம்?
இப்போ பாம்புக்குட்டி தான் இருக்கு
===========


9 தலைவரே!உங்க 200 ரூபா கோஷ்டிங்க பாஜக வை கேவலமா திட்றாங்களே,திடீர்னு பாஜக கூட கூட்டணி வைக்க வேண்டிய (ரெய்டு) நிர்ப்பந்தம் வந்தா என்ன செய்வீங்க?


யோவ்,வை கோ வைக்கூடத்தான் கேவலமா திட்னோம்,இப்போ கை கோர்க்கலை?அரசியல்வாதிக்கு ஏதுய்யா சூடு ,சொரணை,கொள்கை.?
பணம்,பதவி தான் முக்கியம்


=============10

டைரக்டர் சார் ,ராஜா ராணில ஆர்யா அப்பா , அம்மாவ காட்டவே இல்ல! ஆனா கதைப்படி அம்மா உயிரோட தான் இருக்காப்ல! 😢ஏன் இப்டி செஞ்சீங்க?
அதெல்லாம் தெரியாது.ஒரிஜினல் வெர்சன் மவுனராகம் ல காட்டலை,நானும் காட்டலை.நமக்கு சொந்தமா யோசிச்சு பழக்கம் இல்ல

==============11 டீச்சர்.கடலை மாவுக்கு இங்க்லீஷ்ல என்ன?


gram flour
நல்ல வேளை,நான் chatting flour னு நினச்சிருந்தேன்


=========12 தலைவரே!ரஜினி"நடிச்ச மாவீரன் படத்துல அவரு நடிச்சிருக்காரா?


இல்லை
பாகிஸ்தான் பார்டர்ல இந்திய ராணுவம் சார்பா போருக்குப்போனாரா?
அதுவும் இல்ல
அப்றம் எதை வெச்சு மாவீரன்"பட்டம் குடுத்திருக்கீங்க? வெட்டி குரு
மா மரத்துல உக்காந்து எதுனா வீர சாகசம் பண்ணாரா? இல்லீங்க


==========


13 டேய் ,இங்க வா!நான் உன்"கிட்டே என்ன சொன்னேன்?


டாஸ்மாக்கை மூடச்சொன்னீங்க
நீ என்ன பண்ணி வெச்சிருக்கே?
கூட்டம் வராத 890 அரசுப்பள்ளிகளை மூடி இருக்கேன்
எத்தனை காமராஜர்கள் வந்தாலும் உன் அறிவுக்கண்ணை திறக்கவே முடியாது அடிமைஅரசு


=========


14 தலைவரே!நம்ம கட்சியை வளத்தவன் பூரா யாருன்னு நினைக்கிற , சொந்த காசுல டீ வாங்கி குடிச்சுட்டு கட்சி வேலைய பாத்த பயலுகதான் !னு நெட்டிசன்ஸ் சிலாகிக்கறாங்களே,அது உண்மையா?


ஆமா,கோடிக்கணக்குல ஊழல் பண்ணி கறுப்புப்பணத்தை பதுக்கி வெச்சிருந்தாலும் அவன் கிட்டயே கட்சி நிதியும் வசூலிப்போம்12 டாக்டர்,பாதாம் பருப்பு சாப்ட்டா பசியை கட்டுப்படுத்துமாமே?


பருப்பு மாதிரி பேசாதீங்க.சாப்பாடு சாப்ட்டா தானா பசி அடங்கிடாதா?-=-----------


13 குருவே!வீட்ல மனுஷனை நிம்மதியா ஒரு நிமிஷம் கூட உட்கார விடுறது இல்லை.

சீக்கிரத்தில சாமியாரா போயிடுவேன் போல
சிஷ்யா! ஒரு பொண்ணையே சமாளிக்க முடியாத நீ நூற்றுக்கணக்கான ஆசிரமப்பெண்களை எப்படி சமாளிப்பே?
==============


14 குருவே!பாகுபலி போஸ்ல உங்க கூட இருக்கற அனுஷ்கா யாரு?


யோவ்,அது அனிரூத் ,நல்லா பாரு.நம்ம ஆசிரமத்துக்கு ஆண் வந்தாலும் ,பெண் வந்தாலும் அவங்க"கதி அதோ கதி==============15 ஜெ சம்பந்தப்பட்ட வீடியோ , ஆடியோ இன்னும் 8 இருக்கு
ஓஹோ அதை எல்லாம் எப்போ ரிலீஸ் பண்ணுவீங்க?
இன்னும் 3 வருசம் ஓட்டனுமே? ஒவ்வொரு 6 மாசத்துக்கும் ஏதாவது ஒரு பிரச்சனையை டைவர்ட் பண்ண இதை யூஸ் பண்ணூவோம்

===============

16 டெய்லி விஸ்கி சாப்பிட்டா சுகர் வருமா? டாக்டர்?ச்சே ச்சே ,சாவு தான் சீக்கிரம் வரும்,சுகரெல்லாம் வராது===============


17 குருவே!உங்களை எங்கே வந்தா சந்திக்கலாம்?


அழகு எங்கெல்லாம் இருக்கோ அங்கெல்லாம் இந்த அடியேன் இருப்பான்
ஓஹோ,பல பக்கம் புழங்கற ஆளா?சுவாமி
===============18 தலைவரே!நம்ம 200 ரூபா கோஷ்டிங்களுக்கு பேமண்ட் எப்டி?தினக்கூலியா 200 ரூபாயா?ஒரு ஸ்டேட்டஸ் போட 200 ரூபாயா?


யோவ்,நாங்க கஷ்டப்பட்டு ஊழல் பண்ணி சம்பாதிச்ச பணத்தை இப்டி அள்ளிக்கொடுத்தா என்ன ஆகறது? சும்மா வாய் வார்த்தையா சொல்றதுதான்,ஒத்தைப்பைசா கிடையாது
============19 தலைவரே!ஜெ ஆடியோ பெரிய அளவில் மக்கள் கவனத்தை திசை திருப்பலையே,அடுத்ததா என்ன பண்ணப்போறீங்க?


நிர்மலா தேவி சம்பந்தபட்டவங்களோட வீடியோ ரிலீஸ் பண்ணப்போறோம்===========20 எம்"டி சார்.கேரளா"ல நிபா வைரஸ் தாக்குதாம்.சப்போஸ் எங்க"டீம்க்கு எதுனா ஆச்சுன்னா கம்பெனி என்ன நடவடிக்கை எடுக்கும்?

உங்க டீம் க்கு ரீ ப்ளேஸ்மெண்ட்டா புது டீம் ரெடி பண்ணும,் டோண்ட் ஒர்ரி


================

0 comments: