Monday, June 18, 2018

பாஜக அடுத்து எதிர்க்க இருக்கும் படங்கள்

காலாவின் எதிர்பாராத வெற்றியால் ஆடிப்போய் இருப்பவர்கள்
1 நம்ம 200 ரூபா கோஷ்டிகள் ( அரசியலிலும் ஜெயிச்சிடுவாரோனு பயம்) 2 விஜய் ரசிகர்கள் (சூப்பர் ஸ்டார் நாற்காலி யை பிடிக்கமுடியலையே!) 3 இயக்குநர் ரஞ்சித் முன்னேற்றத்தை விரும்பாத உயர்ஜாதி மக்கள்


============


மனைவியின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி கணவர் பணம் எடுக்கக்கூடாது; ஏடிஎம் கார்டுகளை சம்பந்தப்பட்ட நபர் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது விதி - வழக்கு ஒன்றில் எஸ்.பி.ஐ வங்கி தகவல் # அவங்க மட்டும் நம்ம ரேஷன் கார்டு ,க்ரெடிட் கார்டு ,ஆதார் கார்டு அல்லாத்தையும் யூஸ் பண்ணிக்குவாங்க===========3 ப்ளூசட்டை அண்ணன் தன் விமர்சனத்துல ரஜினி முதல்ல தனி மனுசன்,இப்ப கட்சி ஆரம்பிச்ட்டாரு னு சொல்றாரு.நாமதான் அப்டேட்டா இல்ல போல.ரஜினிக்கே தெரியாம ரஜினி எப்போ கட்சி ஆரம்பிச்சாரு?


==========


4 காலா வை ரிலீஸ் பண்ணிட்டு ரஜினி அடுத்த நாளே அடுத்த பட ஷூட்டிங்க்கு கார்த்திக் சுப்புராஜ் & டீமோட கிளம்பிட்டாரு,நெட் தமிழன் இன்னும் அது சரி இல்ல,இது சரி இல்ல,வசூல் கம்மி னு கும்மி அடிச்ட்டு இருக்கான்


=============


5 என் உலகமே ரொம்ப சின்னதாயிடுச்சு !னு நெட் தமிழன் டபுள் மீனிங்க் ல நைட் 10 மணிக்கு மேல ட்வீட் போடறாப்டி.அது ஏதோ சோக புலம்பல் னு நினச்சு 10 பேர் ஆறுதல் வேற.5 வருசம் முன் நடுநிசிகீச்சு(நநிகீ)னு புகழ்பெற்ற மிட்நைட் ட்வீட்சுல இப்டி வரும்============6 ஒரு ஆம்பளை இன்னொரு ஆம்பளைக்கு எதுக்கு டிஅம் அனுப்பறாங்க?டி எல்லயே கேட்கலாமே?============


7 ஆம்பளைங்க டிபி மாத்தும்போது எந்த பில்டப்பும் தராம கமுக்கமா மாத்திட்டு கம்முனு அவங்க வேலையைப்பாக்கறாங்க,பொண்ணுங்க டிபி மாத்தும்போது மட்டும் பாலோயர்சுக்கு சாபம் குடுப்பாங்க எல்லாரும் சாவுங்க அப்டினு.கிட்டத்தட்ட 80% பேர்


==========


8 சீக்கிரம் பிக்பாசை ஆரம்பிச்ட்டா ஜனங்க அதுல பிசி ஆகிடுவாங்க.இந்த வாரம் ரைட்டர் சாருநிவேதிதா எந்த ஆம்பளையை கரெக்ட் பண்ணப்போறாரு,அடுத்த வாரம் எந்த லேடியை? னு


===================


9
நல்லவேளை,ரயில்வே ரிசர்வேசன் ல ஜாதி பாத்து லோயர் பெர்த் மிடில் பெர்த் அப்பர் பெர்த் ஒதுக்கறதில்ல


==============


10 80% பேர் போற பாதை இது என பாதுகாப்பாக நினைக்காதே!20% பேர் போனாலும் ஆரோக்யமான ,பாதுகாப்பான வழியையே தேர்ந்தெடு


=================


11 ஒண்ணுமே எழுதத்தோணல....ன்னா நெட் தமிழன் சும்மா இருக்கறதில்ல,ஒண்ணுமே எழுதத்தோணல....னு ஒரு ஸ்டேட்டஸ் போட்டுடறாப்டி,கத்துக்கனும்யா உங்க கிட்ட


=============


12 பெரியாரிஸம் பேசும் பல அங்கிள்களின் மனைவிமார்கள் ஏன் FB வரும் அளவிற்க்கு கூட அப்டேட்டடாக இல்லை ?
காரணம் சிம்ப்பிள். ட்வீட்டப்க்கு பெண்களே வருவதில்லை என வருடாவருடம் அங்கலாய்ப்பவர்கள் ,விழா ஏற்பாட்டாளர்கள் தன் வீட்டு தங்கை ,மனைவி,அம்மா என அழைத்து வந்து முன்னுதாரணமா ஏன் இல்லை?

============


13 பெரும்பாலான மாத சம்பளகாரரின் பேங்க் பாஸ் புக்கில் வரவு செலவு மாதம் 2 வரிதான்.சேலரி க்ரெடிட்டட்.amount debited===========


14 மக்கள்ட்ட விழிப்புணர்வு அதிகமாகிட்டே வர்றது மகிழ்ச்சியான விஷயம்.விடியற்காலை நாலே முக்காலுக்கு ஒருத்தன் ஒரு ஆண்ட்டி கிட்ட சாப்ட்டாச்சானு குசலம் விசாரிச்ட்டு இருக்கான்.அடுப்பே 7 மணிக்குதான் பத்த வைப்பாங்க


================


15 விஸ்வரூபம் முதல் பாகத்தை விட 2ம் பாகம் அதிக ஹிட் ஆகும் என கணிக்கிறேன்.போஸ்டர் டிசைன் ,அரசியல் பரபபரப்பு ,பிக்பாஸ்"2 முக்கியக்காரணிகள்==========


16 கலைஞருக்குப்பின் மேடைகளில் பேசி கை தட்டல் வாங்கக்கூடிய திறமை ,வாதத்திறமை,சாமார்த்தியம் ,புள்ளி விபரங்களை துண்டு சீட்டு பார்க்காமல் சொல்லி விடும் அழகு ஆ ராசாவுக்கே வாய்த்துள்ளது


============


17 கடற்கரை ஓரம் குளிப்பதாக இருந்தாலும்
குளத்தோரம்,வாய்க்கால் ஓரம் ஆழம் இல்லா பகுதிகளில குளிப்பதாக இருந்தாலும் நீச்சல் தெரியாமல் இறங்காதே!மற்றவரையும் இறங்க விடாதே!"இறக்க"விடாதே!


==============


18 பாஜக அடுத்து எதிர்க்க இருக்கும் படங்கள்
1 விஸ்வரூபம் 2 ( கமல் பாஜக வுக்கு எதிர் கருத்துள்ளவர் என்பதால்) 2 ஜிப்சி ( ராஜூமுருகன் வெளியிட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ராமர் தோள் மேல் கே போட்ட முஸ்லீம் பெண்)===============


19 விஸ்வரூபம் 2 ட்ரெய்லர் பக்கா.ஆக்சன் காட்சிகள் அள்ளுது,கிளாமர் காட்சிகள் துள்ளுது.============


20 சாக்சி 420(ஹிந்தி),ஹேராம், விருமாண்டி, விஸ்வரூபம் வரிசையில் கமலுக்கு இயக்குநராக விஸ்வரூபம் 2
5வது படம். என்பது உண்மையா? அதிகாரபூர்வமான அறிவிக்கப்பட்ட வரிசை அது,விட்டுப்போனது சங்கர்லால் ,குணா (இணை இயக்கம்) அன்பே சிவம் குருதிப்புனல் மகாநதி கடமை கண்ணியம் கட்டுப்பாடு(மேற்பார்வை)


===========

0 comments: