Tuesday, June 05, 2018

வாங்குன சம்பளத்துல 3000 ரூவாய காணோம்..

தலைவரே!நம்ம ஆட்சியோட சாதனைகள் என்னென்ன?


1 நிர்மலா"தேவி
2 ் IPL ல சென்னை கப் வின் பண்ணினது


============


பேரம் பேசி ஒரு பொருளை பாதி விலைக்கு வாங்கும் திறமை இந்திய பெண்களிடம் மட்டுமே உண்டு


அப்டியா?அதுல ட்விஸ்ட் என்னான்னா பொண்ணுங்க வந்தாலே ரேட்டை டபுளா கூட்டிச்சொல்லிடறதுதானாம்====================


3 Dr.சிகரெட்ட பழக்கத்த விட்ருனு சொல்ல ஒரு தோழி இல்லயே.எப்டி விடறது?


சரக்கு,கஞ்சா,அபின்,பான் பராக்்னு 1008 கெட்ட பழக்கம் இருக்கும்,ஒவ்வொண்ணையும் விட தலா ஒரு தோழி வேணும்னா எங்கே போறது?==============4 மாமா,உங்க பொண்ணு தலைல தேங்காய் எண்ணெயே வைக்காதா?


ஆல்ரெடி பொண்ணு "ஆயில்"ய நட்சத்திரம்தானே?அதெதுக்கு தனியா ஆயில்னு கேக்கறா===================


5 டைரக்டர் சார் ,உங்க பட ப்ரமோ போஸ்டர்ல "பெண்களின் கண்ணியம் காத்த படம்"னீங்களே,அப்டி என்ன காத்தீங்க?


ஹீரோயின் புருசன்,கள்ளக்காதலன் 2 பேரோட நிறுத்திடுச்சு.கள்ளக்காதலனோட நண்பன் ட்ரை பண்ணப்ப முடியாது னு மறுத்துடுச்சே?=================6 ஜோசியரே!கடைல பெருமாள் படம் வெச்சிருந்தா வியாபாரம் படுத்துக்குமாமே?


அது தெரில,ஆனா விதிவிலக்கு
திருப்பதி லட்டு கடை
லாட்ஜ்
கட்டில் ,மெத்தைகடை,=============


7 சார்,எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு,அதனால கெஜட்ல பேரு மாத்தனும்


அதுக்கும் ,இதுக்கும் என்ன சம்பந்தம்?
என் பேரு "கன்னி"கா==============


8 சூப்பர்ஸ்டர் யாரு?னு கேட்டா சின்னக்குழந்தையும் சொல்லும்னு பாடுனீங்க,ஆனா 25 வயசு ஆளுக்கே தெரியலை,நீங்க யாரு?னு கேட்டாராமே?


ஆமா,அவர் 1ம் சின்னக்குழந்தை இல்லையே?25 வயசானவர்தானே?==============9 ஆடி கார் வாங்காலாமுன்னு இருக்கேன்..


எது நல்ல மாடல்ன்னு சொல்லவா?
இரு,முதல்ல சீட்டாடிடுவோம்.ஜெயிச்சா அப்றம் பாப்பம்=============


10 அதிமுக அமைச்சர்களுக்குப்பிடிக்காத ரஜினி படம் எது?


உழைப்பாளி யா?
இல்ல , நான் அடிமை இல்லை=============11 தலைவரே!1996 ல ரஜினி உங்க கட்சிக்கு ஆதரவு தெரிவிச்சப்ப உங்களுக்கும் ,உங்க 200 ரூபா கோஷ்டிக்கும் இனிச்சுது,இப்ப தனிக்கட்சி ஆரம்பிக்கறார்னதும் கசக்குதே,அது ஏன்?


வைகோ வோ ,ரஜினியோ நம்ம பக்கம் இருந்தா நமக்கு ஆதாயம்.எதிரே நின்னா ஏது ஆதாயம்.ஆதாயம் இல்லாம அரசியல்வாதி ஆத்தோட போகமாட்டான்============


12 டார்கெட் இருக்க கூடாது,

மைன்ட் ப்ரஷர் இருக்க கூடாது,
கான் கால் இருக்க கூடாது,
வாட்சப் குரூப் ரிப்போர்ட் இருக்க கூடாது, அப்படி ஒரு வேல வேனும் 😓
அதுக்கு நீங்க அரசியல் கட்சில தான் சேரனும்,சும்மா வாழ்க ,ஒழிக கோஷம் போட்டா போதும் ,செம சில்லறையாம்===============13 தலைவரே!சினிமாக்காரங்க அரசியலுக்கு வந்து என்னத்தை சாதிக்கப்போறாங்க?னு நக்கல் அடிச்சீங்களா?


ஆமா
பராசக்தி படத்துக்கு வசனம் எழுதுனது யாரு?
நான்தான் அது சினிமாவா?நாடகமா? சினிமா
அப்போ சினிமாக்களுக்கு வசனம் எழுதுன நீங்களும் ஒரு வகைல சினிமாக்காரர்தானே?
ஆமா
இப்ப முதல் பத்தியை படிங்க===============14 இன்ஸ்பெக்டர் ,மலேசியா விமானத்தை கண்டுபிடிச்சாச்சா?


இன்னும் இல்லைங்க
எஸ் வி சேகரை அரெஸ்ட் பண்ணியாச்சா?
இன்னும் இல்லைங்க ஏன்?
50 வருஷத்துக்கு முன்ன காணாம போன ராஜராஜ சோழன் சிலையையே நேத்து தான் கண்டுபுடிச்சோம்,அதுக்குள்ள அவசரப்பட்டா எப்டிங்க?===============15 வாங்குன சம்பளத்துல 3000 ரூவாய காணோம்..


அடடா,உங்க சம்பளம் அவ்ளோ?
அதான் சொன்னேனே?3000 ரூபா============16 புக் எடுத்து ஒரு பக்கம் படிச்சு முடிக்கல ஒரு பிஸ்கட் பாக்கெட் சாப்பிட்டு முடித்தாச்சு.. 😩😩


அடேங்கப்பா.மேடம் ,நீங்க பொன்னியின் செல்வன் நாவலை படிச்சு முடிக்க 82,564 பிஸ்கட் பாக்கெட் செலவாகும் போலயே?==================17 குருவே!தன்மானம்னு 1 இருந்திச்சி அவள லவ் பண்ண ஆரம்பிச்சதில் இருந்து எங்க போச்சினே தெரியல


காதலிக்கறவனும் ,கல்யாணம் பண்ணுனவனும் தன்மானம் பாக்கக்கூடாது.
படைப்பாளியும் ,எழுத்தாளனும் சன்மானத்தை எதிர்பார்க்கக்கூடாது===========

18 டாக்டர்,லிப்ஸ்டிக் போட்டா
அலர்ஜி ஆகி உதட்ல கொப்பளம் வந்துடுது
ஓஹோ,செவ்"வாய்" தோஷம் உள்ள ஜாதகம் போல


=============


19 குருவே!பொண்ணுங்க கிட்ட பேசவே தெரியாதுனு சொல்ற பசங்கதான் ஜாஸ்தி இருப்பாங்க போல?

எனக்கென்னமோ அப்டி தோணலை.டிஎம் ல அவங்க பேசறதே நமக்கு தெரியாது இல்லையா?


===============


20 தலைவரே!நீங்க ரொம்ப சின்ன வீட்ல தான் குடி இருக்கீங்கனு உங்க 200 ரூபா கோஷ்டிங்க சொல்லுதே?அது உண்மையா?

ரொம்ப என்பது வார்த்தை விரயம்


=============

0 comments: