Monday, June 25, 2018

சினேகனுக்கு அண்ணன் தாடிபாலாஜி

குருவே!"yes" or "no"

பதில் சொல்ல கூட
டைம் இல்லாத
வாழ்க்கை நடத்துணும்னு
பிசியான ஆளு கூட பகவான்
ஒரு பதில் சொன்னா அதுக்கு சந்தேகம் கேட்டு ஓராயிரம் கேள்விங்க பொண்டாட்டிங்க கேட்டா பாவம் ஒரு புருசன் என்்ன செய்வான்?அந்த ஒரு பதிலும் சொல்லாம விட்டுட்டா?
என் தலையில் எழுதிட்டான்
============


2 குருவே!இந்த ஜோசியம், ஜாதகம்லாம் நிஜம்மாவே இருக்குமோ?நல்ல காலம் கஷ்டகாலம் அதன்படிதானோ?


இதெல்லாம் உண்மைனு நம்பறவரை ஜோசியக்காரர்களுக்கு நல்லகாலம்.நம்பலைன்னா அவங்களுக்கு கஷ்டகாலம்
=============


3 யுவர் ஆனர் ,என் கேசை 2 ஜட்ஜ் ங்க விசாரிச்சு தீர்ப்பு சொல்லனும்


ஏன்?
அப்பத்தான் 2 பேரும் வெவ்வேற தீர்ப்பை லூசுத்தனமா சொல்வாங்க,நான் தப்பிக்க முடியும்===========4 குருவே!பசங்க கண்ண விட பொண்ணுங்க கண்ணு தான் கெத்து & அழகு னு சொல்றாங்களே?அது உண்மையா?


அழகுனு வேணா சொல்லிக்கட்டும்,ஏன்னா அழகுதான் அவங்களோட சொத்து,
ஆனா கெத்து என்பது ஆண்பால் சொல்.ஒப்பனை இல்லாமலே ஆம்பளைங்க கெத்து
=============


5உங்க வீட்டு மாடு கன்னு போட்டுடுச்சுங்களா?மேடம்?
தெரிலங்க,இப்ப அதுவா முக்கியம்.கண்ணு போட்டுட்டு இருக்கோம்.eye contest===============


6 டாக்டர்.ஒரு முத்தம் குடுத்தா 6.4 கலோரி எரிக்கப்படுதாமே?அப்ப வாக்கிங் ,ஜாக்கிங்க் பதிலா இந்த எக்சசைசே டெய்லி ப்ண்ணினா உடம்பு இளைச்சிடாதா?
களைச்சிடும்============7 குருவே!BJP ஆட்கள் தவிர, வேறு யாரும், Rajniயை ஆதரித்து பதிவு இடவில்லை. னு சிலர் சொல்றாங்களே?


காமாலைக்காரனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்
திமுக காரனுக்கு தன்னை எதிர்ப்பவர் எல்லாம் காவி.
இதே ரஜினி அரசியலில் தனிக்கட்சி துவங்கலை,திமுக ஆதரவுனு சொன்னா ரஜினி வாழ்க!னு கோஷம் போடுவாங்க============


8 நடுநிலை ஒருவனுக்கு நல்லவன் என்கிற பிம்பத்தை தருமா?


ஏன் தராது?மரக்கன்று நடு நிலை ,செடி நடு நிலை எடுங்க,உலகம் கொண்டாடும்=============


9 குருவே!டயட் ஃபாலோ பண்ணலாம்னு நினைக்கும்போது ஞாயிற்றுக்கிழமை வந்திடுது.என்ன பண்ண?


6 நாள் கனகச்சிதமா சீரான உணவு உட்கொண்டு ஒரு நாள் புல்கட்டு கட்டினால் நீ டயட்டில் இருந்து என்ன பயன்?
===========


10  குருவே!எந்தப் பழக்கமும், பழகப் பழக சுலபமாகிவிடும்...

விடிகாலையில் எழுவதைத் தவிர...அப்டினு சொல்றாங்களே அது நிஜமா?
ரூம்ல கதவு ,ஜன்னல் அடைச்ட்டுப்படுத்தா அப்டித்தான்.மொட்டை மாடிலயோ ,மரத்தடிலயோ,வாசல்திண்ணைலயோ படுத்தா(கிராமங்களில்)சேவல் 5 Am க்கு டாண்ணு எழுப்பி விட்ராது===============


11 ஓவியாக்கு பிக் பாஸில் இருந்ததால் மன நிலை பாதிப்பு ஏற்பட்டதே, ஏன் திரும்ப பிக் பாஸுக்கு வராங்க?

டிஆர்பி எகிறனும்னா விஜய் டிவி க்கு ஓவியா வேணும்.


=================


12 ஒரு டைம் மோர்க்குழம்பு
வெச்சப்ப சொதப்பிட்டேன்... தண்ணியா ஆகிருச்சு
மோர்க்குழம்புன்னா நீர்த்துப்போய்தான் இருக்கும்,தயிர்க்குழம்பு தான் கெட்டியா இருக்கும்னு சமாளிக்கவேண்டியதுதான?


================


13 சார் ,உங்க பையன் ஆர்மி ல சேரப்போறானாமே?

ஆமா,இன்னும் 10 நாள் ஆகும்
எதுக்கு!?
பிக்பாஸ் 2 இப்ப தானே ஸ்டார்ட் ஆகி இருக்கு?இனிதான் யாருக்கு ஆர்மி ஆரம்பிக்கறாங்கனு பாத்து சேருவான்


=================14 உங்க பையன் சி கா ரசிகனா?

யா
இப்போ?
யா சேத்துக்குங்க
புரில
யாசிகா ரசிகன் ஆகிட்டான்.சிவகார்த்திகேயனை இன்னும் 100 நாள் மறந்துடுவான்


================


15 big boss ஜனனி அஜித் ரசிகை

அப்டி சொல்றே?
இங்க எல்லாருமே வின் பண்ணத்தான் "அல்ட்டிமேட்" டா வந்திருக்காங்கனு சொல்ச்சே?===========16 மம்முட்டிக்கு ஜோடியா ஜனனி நடிச்சா என்னாகும்?

ஜனனி அய்யர் த கிரேட் னு பேர் எடுப்பார்


============17 சார் ,பிக்பாஸ் 2 ல ஏகப்பட்ட சிங்கர்ஸ் இருக்காங்க போல

ஆமா,ஆனா அழகிய சிங்கர் இல்ல
ஆமா,அவர் ரைட்டர் ஆச்சே?


==============


18 ஜனனிக்கும் யாஷிகாவுக்கும் ஒரே கண்ணு

இல்லீங்களே?2 பேருக்கும் தலா 2 கண் இருந்ததே?
ஐ மீன் 2 பேருக்கும் முட்டைக்கண் ணு னு சொல்ல வந்தேன்
ஆனா கரு விழியும் இருந்ததே?


===============


19 பிக்பாஸ் 2 ல யாருக்காவது உடம்பு சரி இல்லைன்னா என்ன ஆகும்?

நான் பாத்தவரை எல்லாருக்கும் நல்லாதானே இருக்கு
யோவ் ,நான் உடல் ஆரோக்யத்தை சொன்னேன்
அதான் அனந்து வைத்யநாதன் இருக்காரே?வைத்தியம் பாத்துடமாட்டாரா?


===============


20 சினேகனுக்கு அண்ணன் தாடிபாலாஜி

எப்டி சொல்றே?
அவரு கவிதை சொல்லிட்டு பொண்ணுங்களை கட்டிப்பிடிச்சாரு.இவரு தன் சொந்தக்கத ,சோகக்கத,மொக்க ஜோக் எதுனா சொல்லி யாரையாவது கட்டிப்பிடிக்கப்போறாரு


==============

0 comments: