Monday, June 11, 2018

எஸ்வி சேகரை ஏன் இன்னும் கைது செய்யல?

ஒரு விடையில்லா கேள்வி கேளுங்களேன் பாப்போம் ???


விடை இல்லா கேள்வி எது?===========


2 குருவே!காலையில் எழுந்ததும் குருவிக்கு அரிசி போடறது சுகமான அனுபவம்😄

ஆயிரம் பேர்க்கு அன்னதானம் பண்ணின திருப்தி கிடைக்கும் 👍
னு சொல்றாங்களே ,அது உண்மையா?
சும்மா சால்ஜாப்பு தான்.1000 பேருக்கு அன்னதானம் போட்டா 1000×ரூ50=50,000 ரூபா செலவாகும்,குருவிக்கு ரேசன் அரிசி போட்டா போதும்===============3 தலைவரே!இந்தியாவிலேயே முதல் முதலாக என்று பல முதல்களுக்கு சொந்தக்காரர்னு உங்களை சிலாகிக்கறாங்களே?


ஆமா,பல முதல்களுக்கு சொந்தக்காரன்தான்,ஆனா இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்ட்க்கு இந்த விஷயம் தெரிய வேணாம்================4 சாமி,உங்க ஐடி கார்டும் ,ஆதார்கார்டும் காட்டுங்க


நான் சாமி இல்ல பூதம்
அப்போ ஏன் டைட்டிலை சாமி 2 னு வெச்சீங்க?பூதம் னே வெச்சிருக்கலாமே?
நான் தாய் வயித்துல பிறக்கல,பேய் வயித்துல பிறந்தவன்
பெத்த அம்மாவை கேவலப்படுத்தறது தான் பஞ்ச்சா?=============5 குருவே!கடந்த வருடம் இருந்த திமுக எதிர்ப்பு அளவு இந்த வருடம் முழுமையான ஆதரவாக மாறியிருக்கிறது!னு படிச்ச புத்திசாலிங்க எல்லாம் பேசிக்கறாங்களே ,அது உண்மையா?


நெட்டிசன்கள் ஒருவேளை மாறி இருக்கலாம்.அவங்க ஓட்டு போட வாக்குச்சாவடி போகப்போறதில்ல.கிராமத்து ஜனங்க ,சாமான்ய மக்கள் மாறல===========6 டியர் ,உன் முதுகுல ஒரு மச்சம் இருக்குன்னியே,நான் பாக்கனும்


முடியாது,நான் மன்னர் பரம்பரை
அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?
புறமுதுகு காட்ற பழக்கம் எங்க பரம்பரைக்கே கிடையாது=============7 எங்க ஜவுளிக்கடைல ஆண்ட்ரியா,நமீதா போட்டோ ப்ரிண்ட் போட்ட கட்டை பை தர்றோம்


அட,செம கட்டை பை னு சொல்லுங்க===========8 சூர்யாவோட அடுத்த படப்பேரு "கடைக்குட்டி சிறுத்தை" யா தான் இருக்கும்


அதெப்டி சொல்றே?
கார்த்தியோட அடுத்த பட டைட்டில் "கடைக்குட்டி சிங்கம்"=========


9 தலைவரே! உங்க 200 ரூபா கோஷ்டிங்க ரஜினி,கமல் 2 பேரையும் எதிர்க்கறாங்களே ,அது ஏன்?


என் ஜாதகப்படி எனக்கு நடிகராலதான் ஆபத்து.அன்று MGR ,நேற்று விஜய்காந்த் ,இன்று/நாளை ரஜினி,கமல்==========


10 Dr.நான் ரஜினி ரசிகன்.காலா ஸ்டைல்ல தாடி மட்டும் நரைக்க எதுனா வழி இருக்கா?


தாடி ல தேன் தடவுங்க.நரைச்சுடும்===========


11 டாக்டர் ,எனக்கு ஆறு எது? ஒன்பது எது?னு சில சமயம் குழப்பிடுது


நாம மணல் கொள்ளை அடிப்பமே?அது தான் முன்னாள் ஆறு
அதில்லை டாக்டர் 95 க்கு பதிலா 65 வயசு னு மேடை ல உளறிட்டேன்
இனிமே உங்க பேரை வாசிக்கறதா இருந்தாலும் துண்டு சீட்டு இல்லாம பேசீடாதீங்க================12 டாக்டர். நாவல் பழம் முஸ்லீம்கள் மட்டும் சாப்பிடற பழமா?


என்னய்யா உளர்றே?
பேச்சு வழக்குத்தமிழ்ல "நவாப்"பழம்கறாங்களே?============13 சார்,இந்த வாட்சப் மெசேஜை உங்க க்ரூப்ல இருக்கறவங்களுக்கு ஷேர் பண்ணுங்க


ஷேர் பண்ணா ரிஸ்க் அதிகம்,மியூச்சுவல் பண்ட் வேணா பாதுகாப்பு=============14 குருவே!அந்தக்காலத்துல பொண்ணுங்க சில சமயம் வெட்கப்படுவாங்களாமே?பாத்திருக்கீங்களா?


கேள்விப்பட்டிருக்கேன்.1980s ல==============15 தலைவரே!இந்தியாவிலேயே அதிக ஊழல் பண்ணி அதிக சொத்து சேர்க்க உங்களால மட்டும்தான் முடிஞ்சது,அது எப்படி?


எல்லாருக்கும் ஒரு குடும்பம்.எனக்கு 3 குடும்பம்.3 மடங்கு அதிகமா ஊழல் பண்ண வேண்டிய நெருக்கடி==================

16 என்னை ஜல்லிக்கட்டு நாயகன் என்று அழைப்பதை தவிர்க்க வேண்டும்

புல் கட்டு கட்ற (சரக்கு) நாயகன் னு அழைக்கலாமா?==============17 நாவல் பழம் கிலோ எவ்ளோ?

க்ரைம் நாவல் பழம் கிலோ
ரூ 160 , பாக்கெட் நாவல் பழம் கிலோ ரூ 190
அப்டின்னா? அடிபட்டது,காயம் பட்டது 160
fresh fruit pkt 190


===============


18 தலைவரே!தமிழகத்துல சிஸ்டம் சரியில்லைனு சொன்னது யாரு?

நான்தான்
அரசு நிர்ணயித்த டிக்கெட் விலை எவ்ளோ?
ரூ 160 120 100 80 60 50
ரூ 1000 , 750 ,500 ,200
நம்ம பட FDFS டிக்கெட் எவ்ளோ?
நான் ஆட்சிக்கு வந்தபின் சரிசெய்யப்படும்
இப்ப சிஸ்டம் சரி பண்ண வேண்டியது யாரோட பொறுப்பு?


==============


19 தலைவரே!நம்ம படம் ரிலீஸ்ல பிரச்சனை வந்தப்ப என்ன சொல்லி புலம்புனீங்க?

நாட்டை விட்டுப்போறதைத்தவிர வேற வழி இல்லைன்னேன்
இப்போ சக நடிகர் பட ரிலீஸ்ல பிரச்சனைன்னதும் என்ன சொன்னீங்க?
பட ரிலீஸ் எல்லாம் ஒரு பிரச்சனையா?ன்னேன்
அப்போ உங்களுக்கு ஒரு நியாயம் ,அடுத்தவருக்கு ஒரு நியாயம்?


===============


20 சார்.எஸ்வி சேகரை ஏன் இன்னும் கைது செய்யல?கோர்ட்டே அனுமதி அளிச்சிடுச்சே?

அவரைக்கைது செய்யத்தடை இல்லைனுதான் கோர்ட் சொல்லுச்சு,கைது செய்னு சொல்லலை,ஐ ஆம் வெயிட்டிங்க்


===========

0 comments: