Wednesday, June 27, 2018

ஓ.பன்னீர்செல்வம், = சத்யராஜ்?

மயிலாடுதுறையில் முதல்வர் பழனிசாமி முன்னிலையில் 200 பாஜகவினர் அதிமுகவில் இணைந்தனர் - செய்தி
ல 200 பேர் இருந்ததே பெரிய ஆச்சரியம்.இவங்க ஆளுங்களை அவங்க இழுக்கறாங்கனு தமிழிசை புகார் வாசிக்காம இருப்பது அடுத்த ஆச்சரியம்


=============


2 என்னைப்போல் ஆயிரம் பழனிசாமி அதிமுகவில் உருவாக முடியும் - முதலமைச்சர் பழனிசாமி
சாமி போடறதுக்கு ஆளுக்கா பஞ்சம்?


==============


3 நான் முதல்வராகத்தான் கட்சியே தொடங்கினேன் -சீமான்
# அதுதான் ஆக முடியாதுனு தெரிஞ்சிடுச்சே,கலைச்சிடலாமில்ல? நாங்க கூட மக்களுக்கு சேவை செய்யத்தான்னு நினைச்ட்டோம்


================


4 எமிஷன் டெஸ்ட் மோசடி.. ஆடி கார் நிறுவன தலைவர் ரூபர்ட் ஸ்டாட்லர் கைது! #"ஆடி "அடங்கும் வாழ்க்கையடா னு அன்னைக்கே பாடியவர் தீர்க்கதரிசி தான்


==============


5 அரசியல் படங்களில் காலாவை விட 'மெர்சல்'-தான் சிறந்த படம் - எஸ்.ஏ.சந்திரசேகர்
வர்ற மாதிரி காமடி பண்ணாதீங்க காலா ரஞ்சித்தோட ஒரிஜினல் படைப்பு


=================6 முதல்ல வரியை ஒழுங்கா கட்டுங்க... அது வரைக்கும் பெட்ரோல், டீசல் விலையெல்லாம் குறைக்க முடியாது !! - அருண் ஜெட்லி
# இந்தியாவிலேயே ஜிஎஸ்டி அதிகமாக கட்டி வரும் மாநிலங்கள் தமிழகம் ,கர்நாடகா,ஆந்திரா,கேரளா தான்.அவங்களுக்கு என்ன சகாயம் பண்ணீங்க?


==============


7 '8 வழிச் சாலையால் லட்சம் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள்' - அகில இந்திய விவசாயச் சங்கம் | # பெட்ரோல் டீசல் செலவு குறையும் ,சென்னை டூ சேலம் 2 மணி நேர பயணம் இந்த 2 சால்ஜாப்களை வெச்சு ஒரு லட்சம் விவசாயகுடும்பங்களை நிர்க்கதில விடனுமா?============


8 தமிழகத்தில் 'எய்ம்ஸ்' மருத்துவமனைக்கான இடத்தை மத்திய அரசே முடிவு செய்யும் - சுகாதார துறை செயலர்.
# எல்லாமே மத்திய அரசுதான் முடிவு செய்யும் கற அரசாங்க ரகசியத்தை ஜனங்க உணர்நதுட்டாங்க


===============


9 அதிமுக - பாஜக கூட்டணி அமைய வாய்ப்புள்ளது -அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
2019 / 2021 ல உங்களுக்கு ஆப்பு உள்ளது


=======


10 வன்முறையை தூண்டும் விதமாக பேசிய நடிகர் மன்சூர் அலிகானுக்கு சிறைதான் சரியான இடம் - அமைச்சர் ஜெயக்குமார்
# அப்போ பெண் பத்திரிக்கையாளர்கள் பற்றி அவதூறான கருத்தை ஷேர் பண்ணி டெலிட் செஞ்ச எஸ்வி சேகருக்கு எது சரியான இடம்?


==============11 குப்பை கிடங்காக மாறும் எவரெஸ்ட் சிகரம் # எவ"ரெஸ்ட் ரூம்" ஆக்கிட்டாங்க போல


==============


12 நெல்லை கோர்ட்டில் ஆஜராக எஸ்வி சேகருக்கு உத்தரவு
நாளா அல்வா குடுத்துட்டு இருந்தாரு,இப்ப அல்வா சிட்டிக்கே போக வேண்டிய சூழல்===============


13 மோடியை தனியாக சந்தித்தேன் ஆனால் அவர் வாக்குறுதி எதுவும் தரவில்லை : எடப்பாடி
குடுத்ததைக்கூட பாலிஷா சொல்றாப்டி

=============


14 காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரையை ஆளுனர் பதவி நீக்கம் செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் - ஹலோ!தளபதி.அவரைத்தான் ஹைகோர்ட் டிஸ்மிஸ் பண்ணிடுச்சே?சன் நியூஸ் பாக்கல?


==============


15 ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை தினகரன் திருடிவிட்டார் : அமைச்சர் −திண்டுக்கல்சீனிவாசன் ஒவ்வொரு உண்மையா வெளில வருது.சீக்கிரம் இவர் வாய்க்கு ஒரு பூட்டுபோட்டுடுவாங்க

===============


16 எஸ்.வி.சேகருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது - செய்தி
# இதுக்குத்தான் இவ்ளோ டேபிள் சேர் எல்லாம் உடைச்சுக்கிட்டு இருந்தமா?


===============


17 புற்றுநோயை முழுமையாக குணப்படுத்த முடியும் - அப்போலோ நிறுவனர் பிரதாப் ரெட்டி
நோய் பேஷண்ட்க்கே பாதாம் அல்வா தர அனுமதிச்சவர் ஆச்சே?


==============


18 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதே மத்திய அரசின் இலக்கு!"- பிரதமர் நரேந்திரமோடி # 8 வழி சாலை போடறோம்னு நிலத்தை கையகப்படுத்தி அடிமாட்டு ரேட்டு தருவாரு.எப்டி டபுள் ஆகும்?


==============


19 'ஜல்லிக்கட்டு நாயகன்' ஓ.பன்னீர்செல்வம், 'காவிரி நாயகன்' எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். # 2 தகவலும் தப்பு.ஜல்லிக்கட்டு பட நாயகன் சத்யராஜ். வைகாசி பொறந்தாச்சு பட காவேரி யின் நாயகன் பிரசாந்த்


==============


20 சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலினை பேச அனுமதிக்க அரசு அஞ்சுகிறது: துரைமுருகன்.
போய் தப்பு தப்பா பழமொழி சொல்வாரு,எல்லாரும் சிரிப்பாங்க.காமெடி பஜார் ஆகிடும்===================

0 comments: