Tuesday, June 26, 2018

ருத்ராட்ச மாலை அணிந்தா எந்த நோயும் வராதா

சார்,உங்க நிர்வாகம் தர்ற சம்பளத்தை மூணா பிரிச்சு 3 கன்சர்னுக்கு தரப்போறேன்

ஓஹோ,அப்ப நீங்க சாப்பாட்டுக்கு என்ன பண்ணப்போறீங்க?
புரில
உங்களுக்கு சம்பளமே 3 வேளை சாப்பாடுதான்


============


2 எங்களுக்கு ஒரே குழந்தை.அதை விட்டு ஒரு நாள் கூட பிரிஞ்சிருக்க மாட்டோம்

ஓஹோ,அப்ப புருசன் ,பொண்டாட்டி 2 பேரும் பிக்பாஸ் வீட்டுக்குள்ளே போறீங்களே?குழந்தையை விட்டு பிரியமாட்டேன்னீங்க?


================


3 தலைவரே!ஐஸ்வர்யா தத்தாவை வெளில இருந்து ஆதரிக்கறீங்களாமே?ஏன்?

ஜாகிங் போகுது.குதிக்குது,2 நிமிஷத்துக்கு ஒரு டைம் குனியுது,இதுக்கு மேல என்ன வேணும்?


================

4 என் ஹாஸ்டல் ரூம் கதவுல "கதவை யாரு உங்க அப்பனா சாத்துவான்" னு எழுதி வெச்சிருக்கேன்

ஓஹோ,எதுக்கும் ரிஜிஸ்டர்"பண்ணி வெச்சுக்குங்க.தமிழ்ப்பட டைட்டிலா வந்துடப்போகுது


==============


5 டாக்டர்,மோதிர விரலை மடக்கி சூர்ய முத்திரை ல வெச்சிருந்தா உடல் எடை குறையுமா?

ஏம்மா ,உங்க 2 கைல இருக்கற 16 வளையல்கள் ,8 மோதிரங்கள் எல்லாத்தையும் கழட்டி வச்சா வேணா கொஞ்சம் வெய்ட் குறையும்


=================


6 தலைவரே!தூம் 3 ரேஸ் 3 இந்த 2 ஹிந்திப்பட உரிமையை நம்ம டிவி வாங்கி இருக்காமே?

ஆமா,செம துட்டு
ஹிந்திப்படத்தை ஆதரிச்சா தமிழ்ப்பட மார்க்கெட் அழிஞ்சுடாதா?
மடத்தனமா பேசற.ஹிந்திப்படம் பாக்கறவன் ஹிந்திப்படம் பாக்கட்டும் ,தமிழ்ப்படம் பாக்கறவன் தமிழ்ப்படம் பாக்கட்டும்
பிரமாதம் தலைவரே


===================7 குருவே!யாசிகா ஆம்பள மாதிரி இருக்கா. முகலட்சணமே இல்லை.னு பொண்ணுங்க பேசிக்கறாங்க,ஆனா பசங்க fans club ஆரம்பிச்ட்டாங்களே?

ஆம்பளைங்க எந்தக்காலத்துல முகத்தை முதல்ல பாத்தான் ?


===============


8 சார்,உங்களுக்கு அரசியல் அறிவே இல்லை

அப்டியா?உங்க அறிவை செக் பண்ணிடுவோம்.கக்கன்,காமராஜர் சொத்து மதிப்பு எவ்ளோ?
வெறும் 1000 ரூபா கலைஞர்,எம்ஜிஆர்,ஜெ இவங்க சொத்து மதிப்பு எவ்ளோ?
அபிமானத்தலைவர் தப்பு பண்ணா அதை ஒத்துக்கிட்ட தொண்டன் /ரசிகன் இல்ல
சினிமால சம்பாதிச்சாங்க


===============


9 யோக்கியனுக்கு இருட்டுல என்ன வேலை?

தூங்கற வேலை.யோக்கியனா இருந்தாலும் அயோக்கியனா இருந்தாலும் தூங்கறப்ப இருட்டுல தானே இருந்தாகனும்?=============10 குருவே!ருத்ராட்ச மாலை அணிந்தா எந்த நோயும் வராதாமே?

அது உண்மைன்னா பதஞ்சலி பார்ட்டி எதுக்கு பாரீன் ஹாஸ்பிடல் போறாரு? ஹாஸ்பிடல்ல உடல் நலக்குறைவால காஞ்சி பார்ட்டி ஏன் சாகறாரு?


==============


11 குருவே!பூமியில் பிறந்த பெண்ணிற்கு செவ்வாய் தோஷம் எப்படி வரும்.. அதுவும் 24 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் செவ்வாய் கிரகத்தால்?

சூரியன் கூடத்தான் ரொம்ப தூரத்துல இருக்கு,மே மாசத்துல அக்னி வெயில் தகிக்கலையா?செவ்வாய் தோஷமும் சயின்ஸ் தான்.குறிப்பிட்ட ரத்த வகை


===============


12 தலைவரே!,
பசுமை வழிச்சாலை ன்னா என்ன அர்த்தம்?புரியலை.சாலையோட இரு புறமும் மரக்கன்று நடுவீங்களா?
அதெல்லாமில்லை.மரங்களை அல்லாம் வெட்டீட்டு,வயல்வெளிகளை அல்லாம் அழிச்ட்டு பசுமையா இருந்த வழிகள்ல கறுப்புதார் ரோடு போடுவோம்.50% கமிஷன் வேற===============


13 சார்,பிக்பாஸ் 2 ல பரிபூரண சைவ உணவு சாப்பிடறவங்க பாதிப்பேரு இருக்காங்களே?

மட்டன்,சிக்கன் னு தண்டச்செலவு,செம கட்டு கட்டிடறாங்க.சைவம்னா தக்காளி சாதம் ,தயிர் சாதம்னு பட்ஜெட் சின்னதாகிடுமில்ல ?


==============


14 டாக்டர்.கொல்லைப்புறம் சிக்கல் இல்லாம போக டெய்லி ஆபாயில் சாப்பிடனும்னு சிலர் சொல்றாங்களே?நிஜமா?

ஆபாயில் தனமா பேசாதீங்க,பூவன் பழம்(பூம்பழம்)டெய்லி நைட் சாப்ட்டா போதும்

================


15T மேடம் ,இது பழங்குடியினர் எடுத்த ஒரிஜினல் தேன்.நாகர்கோவில் ஸ்பெஷல், ஒரு லிட்டர் பாட்டில் 650 ரூபா,வாங்கிக்குங்க

சாரி,எக்ஸ்போர்ட் க்வாலிட்டி தான் வாங்குவேன்
எது?ஷாப்பிங்க் மால் ல நாட்டுச்சக்கரை கரைசல் கலப்படம் பண்ணி தர்றாங்களே அதுவா?1000 பெரியார் வந்தாலும்.


==================


16 காலைலே சோதனை. மூணு பேரு ஒரே நேரத்துல கடன் கேக்குறாங்க. நா யாருக்கு குடுக்க.?

கைல 10 பைசா இல்லைங்கற பதிலை மட்டும் கொடுங்க.ரத்த சொந்தம் தவிர உற்றார் ,உறவினர்,நண்பர் யாருக்கு கடன் தந்தாலும் திருப்பி தரமாட்டாங்க.அல்வா தான் தருவாங்க.கடன் வாங்கும்போது நம்மை தெய்வம்பாங்க


==============


17 மேடம்.டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்வில் கலந்துக்கிட்டீங்க

ஆமா
நம்ம கட்சியோட பகுத்தறிவுக்கொள்கை என்ன சொல்லுது?
கடவுள் இல்லைனு
ஆனா கிறிஸ்மஸ் வாழ்த்து ,ரம்ஜான் வாழ்த்து சொல்ற நீங்க இந்துக்கடவுளை ஏன் மறுக்கறீங்க?
அது அது...


===============


18 தலைவரே!நம்ம தானைத்தலைவர் மஞ்ச துண்டு போட்டிருக்கறது எதுக்கு?

குடும்ப ஜோசியர் செண்டிமண்ட்டா நல்லதுன்னாரு
உங்க மனைவி யாகம் பண்ணுனது எதுக்கு?
உங்க தங்கை ரம்ஜான் விழா ல கலந்துக்கிட்டது?
நான் அப்டியாவது முதல்வர் ஆவேன்னு நப்பாச
சிறுபான்மை ஓட்டுக்காக காலம் காலமா செய்யறதுதான?

=============19 புகைப்படங்களை
திருப்பி பார்த்தலில்
ஆனந்தம் பேரானந்தம்
நான் டெய்லி என் மேரேஜ் போட்டோவை திருப்பி பாப்பேன்
ஓஹோ,திருப்பிப்பாத்தா பிளாங்க்கா வெள்ளையாத்தானே இருக்கும்?

================


20 சார்,கக்கன்,காமராஜர் வழி நடக்கறேன்ட்டு பொண்ணுங்களை சைட் அடிச்ட்டு,அவங்களை வர்ணிச்ட்டு இருக்கீங்களே?

கலாய்ச்சீட்டீங்க போல.உங்களுக்கு மேரேஜ் ஆகிடுச்சா?
யா எத்தனை மனைவிங்க? 1 தான்
,உங்க தலைவர் மாதிரி 3 பேரை கட்டிக்கலையா?ஒரு கோடி தொண்டர்களும் தன் தலைவன் வழி னா 3 கோடி லேடீஸ் தேவை


==============

0 comments: