Wednesday, June 06, 2018

நான் சாமி இல்ல ,பூதம்

மிஸ்!் உங்க முகராசி என் கடைல வியாபாரம் நல்லா நடக்குது பொட்டு வைக்காம வெச்ச போட்டா நல்லா இல்லை அன்று வியாபாரமும் சுமார்தான் அதனால் அதை தவிர்த்து விடுங்கள்.

யோவ் ,லூசாய்யா நீ?சென்னைல இருக்கற நான் பொட்டு வெச்சா கன்யாகுமரில இருக்கற உனக்கு வியாபாரம் செழிக்குமா?


=============2 மாமா,உங்க பொண்ணுக்கு சப்பாத்தி சுட்டுத்தர யாரும் சொல்லித்தர்லையா?

சுட்டுப்போட்டாலும் என் பொண்ணுக்கு சமையல் வராதுங்க


============


3 டைரக்டர் அட்லி
டைரக்டர் அமுதன் என்ன வித்யாசம்?
ஹிட் ஆன ஒரு படத்தை ,அதன் கதையை திருடி படம் எடுத்து கெட்ட பேர் வாங்குனா அட்லி.
ஹிட் ஆன 20 பட காட்சிகளை உல்டா பண்ணி காமெடி படம் எடுத்து நல்ல பேர் வாங்குனா அது அமுதன்


===============


4 ரஜினி ரசிகர்களை "காலா"ட்படையினர்னு சொல்லலாமா?


============5 டாக்டர் ,இன்னைக்கு மட்டும் ஒரு பாக்கெட் பால்கோவா.. 5 Milk bikis பாக்கெட் பிஸ்கெட் சாப்பிட்டிருக்கேன்..எவ்ளோ கலோரி ஏறி இருக்கும்?

அது சொல்ல முடியாது,சுகர் வேணா 50 பாயிண்ட் ஏறி இருக்கும்============6 தலைவரே!உங்க கட்சி ஆளு வட்டாட்சியரை கெட்ட வார்த்தைல திட்னாராமே?இதை எல்லாம் நீங்க கேட்க மாட்டீங்களா?

கேட்டா என்னையும் அதே மாதிரி திட்றாப்டி,எதுக்கு வாயைக்குடுத்து வாங்கிக்கட்டிக்கனும்?


==============7 தூங்கிட்டே ட்விட்டர் பாத்து மொபைலை மூஞ்சில போட்டேன் மூக்கு சப்பையாகிடுச். 😫😫

அடடா,இனி எல்லாரும் சப்ப பிகருனு கிண்டல் பண்ணுவாங்களே?ஸ்டேட்டசை எரேஸ் பண்ணிடுங்க


============8 டாக்டர்.அடிக்கடி குப்புறக்கா படுத்து தூங்கினா சப்ப மூக்கா ஆகிடுமா?

டெய்லி மல்லாக்க படுத்துத்தூங்கற சைனீஸ் மூக்கை பாருங்க.அதெல்லாம் பரம்பரை பரம்பரையா வர்றது============9 டாக்டர் ,இளையராஜா பாட்டு கேட்டே பல பேருக்கு இதய நோய் குணமாச்சுன்னு ஒரு உருட்டு ஓடுது,னு சொல்றாங்க,அது நிஜமா?

யோவ்,அது உண்மைன்னா ஹாஸ்பிடலை இடிச்ட்டு மியூசிக் செண்ட்டர் திறந்திட மாட்டமா?


=============10 குருவே!அடிக்கடி இமயமலை போனா சாந்தி கிடைக்குமா?

கிடைக்கும்,ஆனா அதுக்கு சாந்தி யும் இமயமலைல இருக்கனும்.அது பாட்டுக்கு சிவன்மலை,பழனிமலை,திருவண்ணாமலைனு சுத்திட்டு இருந்தா கஷ்டம்


=================


11 அத்த அவசரத்துக்கு பணம் எடுக்கத்தானே ஏடிஎம் கார்டு?

அத்தையோட அவசரத்துக்கு மாமா தானே கார்டு தரனும்?நான் ஏன் என் கார்டைத்தரனும்?===============12 டியர்.அடுத்த வாரம்தானே நமக்கு கல்யணம்.அதுவரை பொறுத்துக்கக்கூடாதா?

மாதிரி சட்டசபை நடத்தற மாதிரி மாதிரி முதல் இரவு நடத்தி முன்மாதிரியா ஆகலாம்னு பாத்தேன்


============


13 என்னை உஷார் பண்ண இதுவரை எவனும் பொறக்கலை

அய்யோ பாவம்
ஏன்?
இப்பவே உங்களுக்கு ஒரு 24 இருக்கும்.இனி ஒருத்தன் பிறந்து ஜோடி சேர எப்டியும் இன்னும் 18 வருசம் ஆகுமே?


==============14 தலைவரே!யார் கைல செக்(cheque) புக் இருந்தாலும் ஓடி வந்து அதை இழுக்கறீங்களே?ஏன்?

வருங்கால சந்ததியினர் என்னை "செக் இழுத்த செம்மல்"னு பாராட்டட்டும்னுதான்


===============15 தலைவரே!சொத்து ,பணம் பெருசா?உயிர் பெருசா?

உயிர் தான்
அப்போ அடிக்கடி ் "என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புக்களே" னு மேடைல பேசி ஏமாத்தறீங்களே?உங்க கோடிக்கணக்கான சொத்துக்கள்ல 0.000001 % தொண்டர்களுக்கு எழுதி வைக்கலாமில்ல?
ஆ!


==============16 தலைவரே!ரயில் மறியல்ல என்ன தைரியத்துல ஈடுபட்டீங்க?

எந்த ட்ராக்ல ரயில் வராது?னு ஸ்டேஷன் மாஸ்டர் கிட்ட முதல்ல கேட்டுக்குவேன்


============17 தலைவரே!உங்க ஆட்சி பொற்கால ஆட்சினு போற்றப்படுதே?எப்டி?

அந்தக்காலகட்டத்துலதான் ஊழல் செஞ்சு பொன்னும் ,பொருளும் 10 தலைமுறைக்கு சேர்த்த முடிஞ்சுது


=============18 தலைவரே!கதாநாயகர்களை விட அதிகம் சம்பளம் வாங்கிய கதாசிரியர் னு உங்களுக்கு ஒரு பேர் இருக்கே?

ஆமா,அப்பவும் ,இப்பவும் ,எப்பவும் மத்தவங்களை விட அதிகமா "வாங்கியவன்,வாங்குபவன்" நான்தான்


============


19 தலைவரே!நம்ம இமேஜ் கூடுனது இந்தி எதிர்ப்புப்போராட்டத்துலதானே!?

ஆமா
நம்ம குடும்பத்துல பேரன,பேத்தி எல்லாருமே ஹிந்தி கத்துக்கிட்டாங்களே ,அது எப்டி?
மடச்சாம்பிராணி மாதிரி பேசாதய்யா.நாலு மொழி கத்துக்கிட்டாதானே வெளியூர் போகவர ஈசி?கிணத்துத்தவளையாவே தொண்டர்களை வெச்சிருக்கனும்


============

20 நான் சாமி இல்ல ,பூதம்

வெறும் பூதமா?மாத்ருபூதமா?


============

0 comments: