போடா போடி
சிம்பு,
வரலெட்சுமி சரத்குமார், ஷோபனா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'போடா
போடி'. தரண் இசையமைத்து இருக்கிறார். இப்படத்தின் மூலம் விக்னேஷ்
இயக்குனராக அறிமுகமாகிறார். நாயகனுக்கும் நாயகிக்கும் நடுவில் எப்படி காதல் உருவாகி, இருவரும் இணைந்தார்கள் என்பது பல காதல் படங்களின் கதையாக இருக்கும். ஆனால் 'போடா போடி' படத்தில் காதலிக்கும் போது நடைபெறும் பிரச்னைகளை மையமாக வைத்து முழுப்படத்தினையும் எடுத்து இருக்கிறார்கள். படத்தில் இசையும் நடனமும் ஒரு பகுதியாக இல்லாமல் கதையோடு ஒன்றி இருக்கும் என்கிறது படக்குழு.
'போடா போடி' படத்திற்காக லண்டனுக்கு பல்வேறு காலகட்டங்களில் போய் படமாக்கி இருக்கிறார்கள். வரலெட்சுமி சரத்குமார் இப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார்.
நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த இப்படத்தை ஒருவழியாக தீபாவளிக்கு வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள். ' லவ் பண்ணலாமா வேண்டாமா ' என்ற பாடல் முதலில் ' போடா போடி ' படத்தினை அறிமுகம் செய்தது.
அப்பாடல் YOUTUBE இணையத்தில் ஹிட்.. அதனைத் தொடர்ந்து படத்தினைப் பற்றி எந்த ஒரு தகவலையும் வெளியே கசியாமல் படத்தினை உருவாக்கி இருக்கிறார்கள்.
' போடா போடி ' படத்தின் மிகப்பெரிய பலம் பாடல்கள் தான். லவ் பண்ணலாமா வேண்டாமா, போடா போடி காதலை காதலிக்கிறேன், I AM A KUTHU DANCER என அனைத்து பாடல்களுமே இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.
இசை உரிமையை பெற்று இருக்கும் சோனி நிறுவனம் வெளியிட்ட முதற்கட்ட சி.டிக்கள் அனைத்துமே விற்று தீர்ந்து தற்போது இரண்டாம் கட்ட சி.டிக்கள் விற்பனையில் இருக்கிறது.
'போடா போடி' படம் குறித்து சிம்பு " 'போடா போடி’ ரொம்ப ஸ்டைலான படம். சென்னையில் எடுக்கும் படங்களுக்கு அழகு சேர்க்க வெளிநாட்டில் டூயட் வைப்போம். ஆனா, இந்தப் படம் முழுக்கவே வெளிநாட்டில் நடக்கும் கதை. 'ஹம் ஆப் கே ஹைன் கௌன்’ மாதிரி கலர்ஃபுல்லான படம். அப்போ எவ்வளவு வேலை இழுக்கும்? படப்பிடிப்புக்கு அனுமதி வாங்குறதே பெரிய வேலையா இருக்கு. வெய்ட் பண்ணுங்க... 'விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் என்னைப் பிடிச்ச மாதிரி, இந்தப் படத்திலும் எல்லாருக்கும் என்னைப் பிடிக்கும்!'' என்று தெரிவித்து இருக்கிறார்.
விரைவில் சென்சார் முடித்து படத்தினை தீபாவளிக்கு டான்ஸ் பட்டாசு கொளுத்த தீர்மானித்து இருக்கிறார்கள்.
நன்றி - விகடன்
ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை உண்டு பண்ணியிருக்கும் ‘போடா போடி’ படத்தின் கதை திடீரென்று லீக்காகியிருக்கிறது. இந்த சம்பவம் நடந்திருப்பது சிம்பு உள்ளிட்ட ‘போடாபோடி’ டீமுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சிம்புவுக்கு ஜோடியாக நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி நடித்திருக்கும் இந்தப் படத்தின் ஸ்டோரி டான்ஸை மையப்படுத்தி இருப்பதாகத் தெரிகிறது.
இளம்வயதில் தோன்றும் காதல் சரியானதுதானா? அப்படி வரும் காதலும், அதனால் ஏற்படும் பிரச்சனைகளும் என்னென்ன? என்பது தான் படத்தின் ஸ்க்ரீன்ப்ளேவாம்.
கதைப்படி, சென்னையில் இருந்து வெஸ்டர்ன் டான்ஸ் கற்றுக் கொள்வதற்காக அமெரிக்கா செல்கிறார் சிம்பு. போகிற இடத்தில் நடனத்தை மட்டும் கற்றுக் கொண்டால் பரவாயில்லையே, அங்கே படிக்கும் வரலட்சுமியுடன் காதலையும் கற்றுக் கொள்கிறார்.
நடனப்பள்ளியை நடத்தி வரும் ஷோபனா காதலிக்காதீங்க என்று சொல்லியும் அதை காதில் போட்டுக் கொள்ளாமல் இருவரும் விழுந்து விழுந்து காதலிக்கிறார்கள். காதல், பின்பு ஈகோ பிரச்சினையில் வந்து நிற்கிறது.
ஒருநாள் தனது சித்தப்பாவான விடிவி கணேஷிடம் வந்து நிற்கிறார் வரலட்சுமி. ப்ரிமேரிட்டல் செக்ஸில் ஈடுபட்டத்தன் மூலம் கர்ப்பமாகி விட்டதாக சொல்கிறார். அவசர அவசரமாக இருவருக்கும் கல்யாணத்தைப் பண்ணி வைக்கிறார் கணேஷ். இளமையில் ஜாலியாக இருக்க வேண்டிய காலத்தில் கல்யாணம் பண்ணிக் கொள்ளும் இருவருக்கும் குழந்தை பிறக்கிறது.
திருமண வாழ்க்கையில் ஏற்படும் ஈகோ இருவரையும் பிரித்துவிடுகிறது. பிரிந்தவர்களை அவர்களின் காதலும் அவர்கள் நேசிக்கின்ற டான்ஸூம் அவர்களை எப்படி சேர்த்து வைக்கிறது என்பது தான் போடா போடியின் கலர்ஃபுல்லான ஸ்க்ரீன்ப்ளேவாம்.
கதையப் படித்தால் “விண்ணைத் தாண்டி வருவாயா” படத்தின் இரண்டாம் பாகம் போல இருப்பதாக சந்தேகம் வருகிறதா..? கரெக்ட் அதேதான்.
நன்றி - ரைட் நியூஸ்

பல வருடங்களாக தயாரிப்பில் இருந்த போடா போடியை சிம்பு பெரிய மனது வைத்து முடித்து தந்திருக்கிறார். நடனத்தை மையமாகக் கொண்ட படம், பெரும் பகுதி வெளிநாட்டில் படப்பிடிப்பு, கிளைமாக்ஸ்கூட நடனம்தான்... எல்லாமே ரிஸ்க்கான இந்தப் படத்தை இயக்கியிருக்கும் விக்னேஷ் சிவா வேறு அறிமுகம்.
இந்த ஒரு அம்சம் படம் குறித்து நிறைய எதிர்பார்க்க வைக்கிறது. இன்னொன்று சரத்குமாரின் மகள் வரலட்சுமி. அவருக்கு இது முதல் படம். நடனம் தெரிந்த காரணத்துக்காக இவரை தேர்வு செய்ததாக சிம்பு கூறியிருக்கிறார். சல்சா நடனக் கலைஞராக அவர் வருகிறாராம்.
முக்கிய தீம் நடனம் என்றான பிறகு ஷோபனா இல்லாமலா? அவருக்கு முக்கியமான வேடம். இவர்களுடன் கணேஷ், சமரத் என்று வேறு பலரும் நடித்திருக்கிறார்கள். சிம்புவின் தோஸ்த்கள் சந்தானம், பிரேம்ஜி இருவரும் கெஸ்ட் ரோலில் வருகிறார்கள்.
தரண் இசையில் பாடல்கள் ஓரளவு ஹிட்டாகியுள்ளன. படமும் ஹிட்டாகும் என்று நம்புவோம். சென்சார் போடா போடிக்கு யு சான்றிதழ் தந்துள்ளது.
நன்றி - வெப்துனியா
இளவயதுக் காதல் சரியா…? தவறா…? சாலமன் பாப்பையா பட்டிமன்ற தலைப்புபோல இருக்கிறதே என்று பார்க்கிறீகளா? இதுதான் போடா போடி படத்தின் ஒருவரிக்கதை! சிம்பு விரலை நம்மி நடித்த படங்கள் எல்லாம் உரலில் ஒட்டிக்கொண்ட உமியைப் போல ஊத்திக் கொண்டத்தில் இனி ஒழுங்காக கதையையும், இயக்குனர்களையும் நம்ம ஆரம்பித்தார். அதன்பிறகு அவருக்கு வரிசையாக வெற்றிகள்! விண்ணைத் தாண்டி வருவாயா, வானம் என தொடரும் வெற்றிப் படங்களின் பட்டியலில் இணைய வருகிறது போடா போடி!
வெறும் ஆக்ஷனையும், நடனதையும், பெண்களை டீஸ் செய்வதையும் வைத்தே பிழைப்பை ஓட்டி வருகிறார் என்ற விமர்சனமும், இதன்வழியாக அவர் மீது படிந்து கிடந்த ‘பிளே பாய்’ இமேஜையும் மொத்தமாக துடைத்துப் போட்டது விண்ணைத் தாண்டி வருவாயா படம்!
அந்தப் படத்தில் சிம்பு ஏற்று நடித்த ‘கார்த்திக்’ என்ற உதவி இயக்குனர் கதாபாத்திரம், தமிழ் இளைஞர்கள், யுவதிகள் மத்தியில் ஒரு ‘கனவுக் காதலன்’ என்ற புதிய, மெண்மையான இமேஜைக் சிம்புவுக்குக் கொடுத்தது! எங்குபோனாலும் த்ரிஷாவை “ ஜெஸி…! ஜெஸி..! “ என்று ரசிகர்கள் பெயர் சொல்லி அழைத்ததைப் போல, சிம்புவையும் “ கார்த்திக் !” என்று அழைத்தார்கள்!
ஆடிப்போனார் சிம்பு! ஒரு நேர்மையான கதாபாத்திரத்தை ரசிகர்கள் எத்தனை நேசிக்கிறார்கள் என்பதை அவர் புரிந்து கொண்டதன் விளைவாகவே போடா போடியை தேர்ந்தெடுத்தார் சிம்பு! இதை அவரே சொல்லியிருக்கிறார் தனது மைக்ரோ பிளாக்கில்! “ கார்த்திக் கதாபாத்திரத்திரத்தின் வழியாக எனக்குக் கிடைத்த நல்ல பெயரை தக்க வைத்துக் கொள்ள போடா போடி எனக்கு பெஸ்ட் சாஸ்சாக அமைந்து விட்டது! இதை விடிவியின் பாகம் இரண்டு என்று கூட சொல்லிவிடலாம்” என்று கூறியிருக்கிறார்.
இளவயதுக்காதல் சரிதானா? அது கரைசேர எத்தனை புயல்களை கடந்து வர வேண்டியிருக்கிறது என்பதை மேற்கத்திய ,மற்றும் இந்தியாவின் பாரம்பரிய நடனமான பரதத்தையும் கதைக்களமாகக்கி சொல்லியிருகிறார்களாம்! நனடம் கதைக்களம் என்பதால் பழைய டி. ராஜேந்தர் படங்களில் வருவதுபோல என்று இல்லாவிட்டாலும் ஒரு நடணப்போட்டியை மையமாக வைத்து கிளைமாக்ஸை உருவாக்கி இருக்கிறார்கள்.
இதானால் திரையரங்கம் மட்டுமல்ல இளம் ரசிக மனங்களும் அதிரப்போவது உறுதி என்கிறார்கள்! டான்ஸ்தானாம். சிம்பு, வரலட்சுமி, ஷோபனா என்று ஆடி தீர்த்திருக்கிறார்கள்!

சென்னையில் இருந்து மேற்கத்திய நடனம் கற்றுக்கொள்ள அமெரிக்க செல்கிறார் சிம்பு! போன இடத்தில் அங்கேயே படித்து வளரும் வரலட்சுமியுடன் காதல்! அந்த நடனப்பள்ளியை நடத்திவரும் ஷோபனாவின் எச்சரிக்கையை மீறி காதலிக்க தொடங்குகிறார்கள்! இருவரும் சேர்ந்து சில நிகழ்ச்சிகளில் ஆடவும் செய்கிறார்கள்! இந்தமாதிரி உரசிக் கொள்கிற நேரங்கள் தீப்பொறியாக பற்றிக் கொள்ள… சிம்பும்-வரலட்சுமியும் ஒருவர் உடல்மீது மற்றொருவர் இனக்கவர்ச்சி கொள்கிறார்கள்.
பிறகு அதுவே காதலாக கன்வர்ட் ஆகிறது! காதல் வந்தால் என்ன ஆகும்? பொசசிவ்நெஸ் பிடித்து ஆட்டும்! ஆண்மனசு…பெண் மனசு .. முட்டலும் மோதலும் ஒட்டலும் உரசலும் என்று ஈகோ வெடிக்கிறது இருவருக்குள்ளும்! ஒருவழியாக சிம்புவின் சித்தப்பா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விடிவி கணேஷிடம் ஒரு பெரிய புகாரோடு வந்து நிற்கிறது சிம்பு – வரலட்சுமியின் காதல்!
ஆமாம்! ப்ரிமேரிட்டல் செக்ஸில் ஈடுபட்டத்தன் மூலம் கர்ப்பமாகி நிற்கிறார் வரலட்சுமி! அவசர அவசரமாக கல்யாணம் பண்ணி வைக்கிறார் கனேஷ்! அதன்பிறகு என்ன? இளமையைக் கொண்டாட வேண்டிய வயதில் சிம்புவும் வரலட்சுமியும் பெற்றோர் ஆகிறார்கள்! குழந்தைபிறந்த பிறகு இளவயதுக்காதல் இல்லறத்தை நடத்திச் செல்ல சரிபட்டு வராது என்பதை தனிக்குடித்தனம் உணர்த்துகிறது! இந்த இடத்தில் நிகழும் ஒரு சின்ன ஈகோ யுத்தத்தில் இருவரும் பிரிந்து விடுகிறார்கள். இப்படிப் பிரிந்தவர்களை அதே காதலும், அவர்கள் நேசிக்கும் நடணமும் எப்படிச் சேர்த்து வைக்கிறது என்பதுதான் போடா போடியின் கலர்ஃபுல் திரைக்கதை!
சிம்பு எனது சினிமா வாழ்க்கையில் இந்தப் படம் முக்கியமான படமாக இருக்கும் என்கிறார். அதேபோல ஒரு அறிமுக நட்சத்திரத்துக்கு இதுபோல ஒரு வாய்ப்பு அமைவது மிக அபூர்வம் என்று புகழ்கிறார் சரத்குமாரின் மகளான வரலட்சிமி! அம்மாவின் அழகையும், அப்பாவின் கம்பீரத்தை சேர்த்துச் செய்த கலவையாக இருக்கும் வரலட்சுமியிடம் அறிமுகப்படத்திலேயே அம்மாவாக நடிக்கும் துணிச்சல் எப்படி என்றால்…
“எனக்குக் குழந்தைன்னா ரொம்பப் பிடிக்கும். ‘போடா போடி’ படம் ‘அலைபாயுதே’ பட பாணியில் ஒரு க்யூட் லவ் ஸ்டோரி. ஸ்வீட் நத்திங்ஸ்ல ஆரம்பிச்சு, டீன் ஏஜ் காதல், பொசஸிவ்னெஸ்னு நிறைய ட்ரீட் இருக்கு. ஒரே படத்தில் காதல், குழந்தை, பாசம்னு நடிக்க ஸ்கோப் இருந்த கேரக்டர். இந்தப் படத்தில் நடிக்கலைன்னாதான் நிறைய மிஸ் பண்ணியிருப்பேன்!” என்று போடா போடியை காதலிக்கிறார்! இந்தப் படத்துக்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விருது தனக்கு கிடைப்பது உறுதி என்று நம்பவும் செய்கிறார்!
அடுத்து சிம்பு தனது மைக்ரோ பிளாக்கிங் தளத்தை போடா போடிக்கா நேர்ந்துவிட்டத்தைப் போல தினம் ஒன்று இந்தப் படத்தைப் பற்றியே ஸ்டேடஸ் போட்டுக் கொண்டிருப்பார்! அப்படிப்பட்டவர் போடா போடி பற்றி என்ன சொல்கிறார்?!
“போடா போடி ரொம்ப ஸ்டைலான படம்! சென்னையில் எடுக்கும் படங்களுக்கு அழகு சேர்க்க வெளிநாட்டில் டூயட் வைப்போம். ஆனா, இந்தப் படம் முழுக்கவே வெளிநாட்டில் நடக்கும் கதை. ‘ஹம் ஆஃப் கே ஹைன் கௌன்’ மாதிரி கலர்ஃபுல்லான படம். அப்போ எவ்வளவு வேலை இழுக்கும்? படப்பிடிப்புக்கு அனுமதி வாங்குறதே பெரிய வேலையா இருந்துச்சு! ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில என்னைப் பிடிச்ச மாதிரி, இந்தப் படத்திலயும் எல்லாருக்கும் என்னைப் பிடிக்கும்! கீப் இட் அப் சிம்புன்னு நீங்களே சொல்வீங்க!” என்கிறார்!

அறிமுக இயக்குனர் விக்னேஷ் சிவா எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு இசை தரண்குமார்! பாடல்கள் இளைஞர்ககளின் மனங்களை அள்ளியிருக்கின்றன. ஹாலிவுட் ஒளிபதிவாளரான டங்கன் டெல்ஃபோர்ட் இந்தப் படத்தில் அமெரிக்கா, கனடா, லண்டன் நகரங்களின் அழகை அள்ளியிருகிறார். அதேபோல பேட்மேன் உட்பட பல பிரமாண்ட ஹாலிவுட் படங்களுக்கு கலை இயக்குனராக பணிபுரிந்த ‘யூட் பெர்க்’ இந்தப் படத்துக்கும் ஆர்ட் டிரைக்டராக பணியாற்றி இருக்கிறார். அமெரிக்க நடனக்கலைஞர்களும் பணிபுரிந்திருக்கும் இந்தப் படத்தை எடிட் செய்திருப்பவர் ஆண்டனி. தயாரிப்பு பிரபல தயாரிப்பாளர்கள் நேமிசந்த் ஜபக், வி.ஹித்தெஷ்குமார் . போடா போடி சிம்பு ரசிகர்களுக்கு ஒரு ரொமாண்டிக் தீபாவளியை பரிசளிக்கப் போகிறது…….!! சிம்பு Roczzzzzzzz….!!
நன்றி - யூத் கஃபே
aடிஸ்கி 1- துப்பாக்கி
- http://www.adrasaka.com/2012/
2
போடா போடி - சினிமா விமர்சனம்
,http://www.adrasaka.com/2012/3.
2 comments:
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் அன்பரே
Wish u a happy deepavali
Post a Comment