Sunday, September 30, 2012

ரெசிடென்ட் ஈவில் = சம்சாரம்

True Story ...!
1.தமிழகத்தில் சிகரெட்டிற்கு முதலிடம், பீடிக்கு அடுத்த இடம்  # அப்போக்கூட தமிழன் வெள்ளையனுக்குத்தான் அடிமையா இருக்கான் பாருங்க


--------------------


2. 2014 க்குள் ஐ.மு., கூட்டணி அரசு கவிழும்-அத்வானி # சொல்லிட்டாருய்யா ஜோசியரு,மனசுக்குள்ளே சுப்ரமணியம் சுவாமின்னு நினப்பு



--------


3. வாழ்க்கையின் சுவாரஸ்யம்,நம் எதிர் வீட்டில் குடி இருக்கும் ஃபிகரை  பொறுத்தே தீர்மானம் ஆகிறது!!





--------------


4. கன்யாகுமரியில் குடி இருக்கும் ஆண்கள் கொஞ்சம் கிளுகிளுப்பாக உணர்வார்கள்  # கன்னி, குமரி



---------------------



5. மழை வந்தாலும் சரி, வரா விட்டாலும் சரி பெண்கள் கல்லூரி வாசலில் ஜொள்ளாறு ஓடிக்கொண்டே இருப்பதால்  மண் வளம் காக்கப்படுகிறது



--------------------


6. அஸ்கா என்றால் இனிப்பு, அனுஷ்கா என்றால் கிளுகிளுப்பு # தித்திப்பு



--------------


7. ரெசிடென்ட் ஈவில் = சம்சாரம்



-------------------



8,ஜட்ஜ் - உங்க படத்தோட கதை அவருதுன்னு சொல்றாரே?


டைரக்டர் - இந்தாங்க சிடி, பாருங்க, படத்துல கதை இருந்தா என்னை செருப்பை கழட்டி அடிங்க



-------------------------


9. டியர், நம்ம காதல் ரொம்ப  ஆழமானதுதானே?



ம்க்கும்,இதை மட்டும் கேளு, ஆனா கிட்டே விட்ராதே!



---------------------------


10. குடிப்பழக்கம் இல்லாதவன் அலா”ரம்” வெச்சுக்க மாட்டான்




---------------------





11. பூ வைப்பவர் பூவையர் என்றால், அந்தப்பூவையரை திட்டுபவரை பூவையர் வையர்னு சொல்லலாமா?




--------------------------


12. காந்தியோட பிறந்த நாள் காந்தி ஜெயந்தின்னா ஜெயந்திக்கு பிறந்த நாள்னா அது ஜெயந்திஜெயந்தியா?  # பொழுது போகாத பொம்மு




--------------


13. டீச்சர் - ஹோம் ஒர்க் பண்ணிட்டியா?



லொள் ஸ்டூடண்ட் - ச்சீய், அதெல்லாம் மேரேஜ்க்குப்பிறகுதான்



-----------------------


14. சகி = மனைவி # சகி = சகித்துக்கொள் # ஒரு சொல் இரு பொருள்



------------------


15. கதவை  சாத்திட்டு உன்னை அடிச்சது உன் சம்சாரமா இருந்தா உயிர் போற வலியா இருந்தாலும் வெளில சொல்ல முடியாது # கந்தரகோல் பாண்டியன்



--------------------



முள்ளு சீதா (Graviola அல்லது Soursop)

The Sour Sop or the fruit from the graviola tree is a miraculous natural cancer cell killer 10,000 times stronger than C...
16. வேதனையோட போனவனுக்கு வெறும் தண்ணி,வேடிக்கை பார்க்க வந்தவனுக்கு ஸ்பெஷல் டீ # எக்சாம் ஹாலில் மாணவன், சூப்பர்வைசர்




-------------------


17. உன்னால் முடிந்ததை சிறப்பா செஞ்சா அது திறமை,  மற்றவர்களால் செய்ய முடியாததை நீ செய்தால்  அது தன்னம்பிக்கை  # கா தத்ஸ்




-----------------


18. வெல்டிங்க் பட்டரைல வேலை செய்யறவன் பத்த வைச்சா , பில்டிங்க் ல வேலை செய்யற சித்தாள் குத்த வெச்சா குத்தம் சொல்ல முடியாது




---------------------


19. டியர் டாடி, நோ மணி, நோ ஃபன் - பை யுவர் சன் # டியர் சன், சோ சேடு, வெரி பேடு - பை யுவர் டாட்   #  SMS





--------------



20. மியூசிக் டீச்சர்  மிருதுளா - உனக்குப்பிடிச்ச இசை க்கருவி எது?



லொள் மாணவன் - லஞ்ச் பெல்



----------------------


PM is the highest authority
மங்குனிக்கு புரிஞ்சா சரி!



21. ரோஸின்னு பேர் வெச்சிருக்கும் ஃபிகர் எல்லாம் ரோஸ் கலர்ல இருக்கும்னு எதிர்பார்க்கக்கூடாது




--------------------


22 உங்க சம்சாரத்தின் மீது நீங்க செம கோபமா இருக்கும்போது  நீங்க செய்ய வேண்டிய ஒரே காரியம் அவ சேலையை துவைத்து வைப்பதே !




--------



23. நான் உனக்கு காதல் கவிதை தந்தேன், அதைக்கூட  வார இதழுக்கு அனுப்பி காசு பார்த்து விட்டாய் !






-----


24. மதுரை ஆதீனத்தின் அடுத்த சன்னிதானமாக நித்தி ஐ நியமனம் செய்தது சட்டப்படி சரியல்ல- இந்து சமய அறநிலையத் துறை # செட்டப்படி சரிதான்- பதிலடி



---------------


25. சார், நேத்து ரிலீஸ் ஆன உங்க படம் பார்த்தேன்!


அடடே, இன்னும் ஓடுதா? சபாஷ்! ஊத்திக்கிச்சுன்னு சொன்னாங்க



-----------------------




3 comments:

Anonymous said...

இருபது ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் இணையம் இருந்தத்தா என்ன ?

சிகரெட் முதலிடம் என்றால் வெள்ளையனுக்கு அடிமையா.. என்ன லாஜிக் இது ...

என் எதிர் வீட்டில் ஒரு கிழவி தானுங்கோ இருக்கு .. :(

பக்கதில கேரளா இருக்கிறதாலோ கிளுகிளுப்போ என நினைச்சுபுட்டேன் .. !

சசிகலா said...

காதல் ஆழமானது தங்களை மிகவும் பாதித்து இருக்குமோ ?

அன்பு said...

வணக்கம்ண்ணே.....
ரெண்டாவது புகைப்படத்தை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே?