Showing posts with label நாளைய இயக்குநர். Show all posts
Showing posts with label நாளைய இயக்குநர். Show all posts

Tuesday, March 05, 2013

சூது கவ்வும் இயக்குநர் கம் தீயா வேலை செய்யணும் குமாரு வசனகர்த்தா பேட்டி

வரிசையாக் குறும்படங்கள் எடுத்துப் பழகிட்டோமா? எந்தக் கதைக்குத் திரைக்கதை எழுதினாலும், 10, 20 நிமிஷத்துக்குள்ள படமே முடிஞ்சிருது. சுந்தர்.சி சார் இயக்கும் 'தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்துக்கு வசனம் எழுதினேன். அப்போதான் ஒரு சினிமாவுக்கான ஸ்க்ரிப்ட்டுக்கு, எதையும் கொஞ்சம் மேல இருந்து பார்க்கணும்னு கத்துக்கிட்டேன். இப்போ ஆல் இஸ் வெல்!'' - பளிச்செனச் சிரிக்கிறார் நலன். 'நாளைய இயக்குநர் சீஸன்-1’ வின்னர். இப்போது 'சூது கவ்வும்’ என்று வெள்ளித் திரைக்குப் படையெடுக்கிறார்.  


 ''திருச்சி பையன். எம்.டெக். படிச்சிட்டு ஈவென்ட் மேனேஜ்மென்ட் வேலை பார்த்துட்டு இருந்தேன். சும்மா இருக் கிறப்போ நெட்ல ஹாலிவுட் படங்களின் ஸ்க்ரிப்ட் படிச்சுட்டு இருப்பேன். ஏதோ ஒரு வெளிநாட்டு சேனலில் ஒரு நிகழ்ச்சி பார்த்தேன். ஆறேழு இளைஞர்கள் போட்டி போட்டுக் குறும்படங்கள் எடுப்பாங்க. அதை அக்குவேறு ஆணிவேரா அலசி ஆராய்ஞ்சு சிறந்த குறும்படத்தைத் தேர்ந்தெடுப்பாங்க நடுவர்கள் குழு. இங்கேயும் அப்படி ஒரு நிகழ்ச்சி வந்தா நல்லா இருக்கு மேனு மனசுல நினைப்பு ஓடிட்டே இருக்கிறப்ப, 'நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சி அறிவிப்பு வந்துச்சு. ஓவர் டோஸ் உற்சாகத்துல வீட்ல பொய் சொல்லிட்டு, 15 ஆயிரம் ரூபா பணத்தோட குறும்படம் எடுக்க வந்துட்டேன்.'நெஞ்சுக்கு நீதி’, 'உண்மையை சொல்லணும்னா’, 'நடந்தது என்னன்னா?’, 'துரும்பிலும் இருப்பார்’னு எட்டுக் குறும்படங்கள் எடுத்தேன். ஒவ்வொரு குறும்படமும் எனக்கு ஒரு பாடம் கத்துக்கொடுத்துச்சு. 'நாளைய இயக்குநர்’ டைட்டில் ஜெயிச்சதும் உடனே சினிமாவுக்கு வரக் கூடாதுனு உறுதியா இருந்தேன். நிறையக் கத்துக்கிட்டே இருந்தேன். அதனால்தான் என் நண்பர்கள் கார்த்திக் சுப்புராஜ், பாலாஜி மோகன் எல்லாம் முத்திரை பதிச்ச பிறகு ஃபீல்டுக்கு வந்திருக்கேன்.''''அதென்ன குறும்பட இயக்குநர்கள் எல்லாருக்கும் விஜய் சேதுபதி செல்லமா இருக்கார்?'' ''விஜய் சேதுபதி என் நண்பர். என் குறும்படத்தில் நடிச்சவர். அந்த நட்பில் 'சூது கவ்வும்’ ஸ்க்ரிப்ட் படிச்சிட்டு கமென்ட்ஸ் சொல்லச் சொன்னேன். படிச்சுட்டு 'நானே நடிக்கிறேன்’னு ஆசையா சொன்னார். 'சும்மா இருங்க சேது... நாப்பது வயசு கேரக்டருக்கு செட் ஆக மாட்டீங்க. நான் இந்த கேரக்டரை உங்களுக்குத் தந்து கஷ்டப்படுத்த மாட்டேன்’னு சொல்லிட்டு நான் மறந்துட்டேன். கொஞ்ச நாள் கழிச்சு முடி, தாடிக்கு வெள்ளை டை அடிச்சுட்டு, கொஞ்சம் வெயிட் போட்டு, அந்த கேரக்டராவே வந்து நின்னார். அப்போ அவர் அடம்பிடிச்சது எவ்வளவு நல்லதுனு இப்போ சந்தோஷப்படுறேன். படத்தின் லீட் கதாபாத்திரத்தில் நடிக்கிறவருக்கு இருக்கும் அந்த டெடிகேஷன்தான் எங்களைப் போன்ற முதல் பட இயக்குநர்களுக்குத் தன்னம்பிக்கை தர்ற விஷயம். அந்த வகையில் விஜய் சேதுபதி குறும்பட இயக்குநர்களின் ஃபேவரைட்டா இருக்கார்.''  ''குறும்பட அனுபவம் சினிமாவுக்கு உதவும்கிறது ஓ.கே. ஆனா, இந்த டிரெண்ட் தொலைநோக்கில் சினிமாவுக்கு நல்லதா, கெட்டதானு ஒரு பக்கம் விவாதம் ஓடிட்டு இருக்கே..?'


'
''இப்போதான் குறும்பட இயக்குநர்களை மதிச்சு பொறுமையாக் கதை கேட்கும் பழக்கமே இண்டஸ்ட்ரியில் வந்திருக்கு. அதுக்குள்ள அதைப் பத்தின விவாதங்கள் எதுக்குங்க? எல்லாரும் ரசிக்கிற மாதிரி குறும்படம் இயக்குவதும் ரொம்ப சவாலான வேலைதானே. ரொம்பக் குறைஞ்ச பட்ஜெட், அவுட்டோர் அனுமதிகள், ஒரு வாரத்துக்குள் படம் பண்ண வேண்டிய நெருக்கடி, உதவி இயக்குநர், புரொடக்ஷன் மேனேஜர்னு பலர் பார்க்க வேண்டிய வேலையை தனி ஒரு ஆளா பார்க்கிறதுன்னு பல அவஸ்தைகள், அனுபவங்களுக் குப் பிறகுதான் ஒவ்வொரு குறும்பட இயக்குநரும் தன் படைப்பை உருவாக்குகிறார். அதனால், அவங்களைக் குறைச்சு மதிப்பிடத் தேவையில்லை!''நன்றி - விகடன்

Monday, August 15, 2011

நாளைய இயக்குநர் - மெகா ஃபைனல் - காமெடி கதைகள் - விமர்சனம்

நாளைய இயக்குநர் நிகழ்ச்சில வாரா வாரம் ஆர்டினரியா கதைகள் வர்றப்போ ஹாய் மதன் எப்படி கமெண்ட் தந்தாரோ அதே பாணில தான் இப்போவும் ஃபாலோ பண்றார்.ஷூட்டிங்க் எடுத்தது ஒரே நாளாக இருந்தாலும் ஃபைனல்ல வர்ற 9 கதைகளும் வாரா வாரம் ம் 3 கதைகள் வீதம்  3 வாரம் ஒளிபரப்பாகி 4 வது வாரம் தான் எது பெஸ்ட்னு செலக்‌ஷன் ஆகும். இவர் அந்தந்த வாரத்துல வந்த 3 கதைகள்ல 2 தேறாதுன்னு ஓப்பனா சொல்லிடறாரு.. இதனால எது ஃபர்ஸ்ட் வரப்போகுதுன்னு கெஸ் பண்ணிட முடியும்.


அதே மாதிரி டிரஸ்ஸிங்க் சென்ஸ் 10% கூட இல்லாத மொக்க ஃபிகர் தொகுப்பாளினி படம் எடுத்த ஒவ்வொரு குறும்பட இயக்குநர்ட்டயும் போர் அடிக்கற மாதிரி ஒரே கேள்வியைத்தான் கேட்கறாரு. அது - உங்க படம் எப்படி வந்திருக்கு? வின் பண்ணிடுவீங்கன்னு நம்பிக்கை இருக்கா? இது எப்படி இருக்குன்னா தியேட்டர்ல , இண்ட்டர்வெல்ல ,வெளில ,கேண்ட்டீன்ல தெரிஞ்சவங்க பார்க்கறப்ப என்ன பேசறதுன்னு தெரியாம அப்புறம் தியேட்டருக்கா?  படத்துக்கா?  என அசடு வழிவது போல் தான் இது. பாப்பாவுக்குத்தான் இதெல்லாம் தெரியலைன்னா இயக்குநர் இதை கரெக்ட் பண்ணக்கூடாதா? ( ஐ மீன்  பாப்பாவோட இந்த ஹேபிட்டை. )1. தமிழ் சீனு -  7 1/2  ( ஏழரை )

குடுகுடுப்பைக்காரன் எதேச்சையா ஒரு வீட்ல வந்து “ உங்களுக்கு ஏழரை ஸ்டார்ட் ஆகிடுச்சு, இனி கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணம் எல்லாம் கோவிந்தாதான்,ஓட்டாண்டி ஆகப்போறீங்கன்னு சொல்றான். அதே மாதிரி சம்பவங்கள் நடக்குது.. வீட்டுக்கு டொனேஷன் கேட்டு வந்தவங்களுக்கு 100 ரூபா குடுக்கறதுக்கு பதிலா அப்பா ஃபோன்ல பேசறப்ப நடந்த மிஸ் அண்டர்ஸ்டேண்டிங்க் கால்குலேஷன் கான்வெர்சேசனால் ( அடேங்கப்பா. எம்புட்டு நீளமான வாக்கியம் !!) லட்ச ரூபாயை தாரை வார்த்த மகன் பயந்து ஊரை விட்டே ஓடிறாரு.


7 1/2 வருசங்கள் கழிச்சு மகன் ரிட்டர்ன் வர்றப்ப வீட்ல அம்மா தான் இருக்காங்க, அப்பா அவுட் ஆஃப் ஸ்டேஷன். அப்போ ஒரு ஃபோன் வருது. அப்பாவை கடத்தி வெச்சிருக்கோம், 20 லட்சம் கொடுத்தா ஆளை மீட்டுக்கலாம்னு. உடனே ரூ 20 லட்சம் கொண்டு போய் ஸ்மெக்ளிங்க் பார்ட்டிக்கிட்டே கொடுத்தா ஆள் மாறாட்டம், கடத்தப்பட்டது இவரோட அப்பாவே இல்லை. பக்கத்து ஊர் பிரசிடெண்ட். 


அப்பா வந்தா அடிப்பார்னு மகன் இப்பவும் ஆள் எஸ்கேப்.. 

பல லாஜிக் மீறல்களோட கதை இருந்தாலும் ஜாலியா போச்சு.. முதல் பரிசு வாங்க வாய்ப்பில்லை. ஆனா படம் ஓக்கே ரகம் தான்

ரசித்த வசனங்கள்

1. ஹூம், நல்லாருந்த குடும்பத்துல குடுகுடுப்பை நாதஸ்வரம் வாசிச்சுட்டு போய்ட்டானா?

2. மணி எவ்ளவ்ம்மா?       7 1/2 


என்னது? எட்டரை  ஆகிடுச்சு?

சாரி, வாட்ச் நின்னுடுச்சு போல.. 

3. ம்க்கும், ஏழரை லட்சம் கடன் பாக்கி , இந்த லட்சணத்துல அவர் கைல துப்பாக்கி.. விளங்கிடும். 

இயக்குநரிடம் சில கேள்விகள்

1. 20 லட்சம் பணயப்பணம் கேட்ட அடுத்த நொடியே வீட்டின் பீரோவில் இருந்து அவ்வளவு பணமும் ரெடி பண்ணிடறாங்க. எப்படி? இந்த காலத்துல ஆ ராசா வீட்ல கூட அவ்வளவு பணம் கேஷா இருக்காதே? பேங்க்ல தானே இருக்கும்?

2. பொதுவா பணயப்பணம் கை மாறும்போது கடத்தப்பட்ட ஆள் இருக்காரா அங்கேன்னு செக் பண்ணுவாங்க.. அது பண்ணலை.. ஏன்?

3. அப்பாவை கடத்திட்டாங்கன்னுதுமே   அவர் செல் நெம்பருக்கு ஃபோன் போட்டு கிராஸ் செக் பண்ணவே இல்லையே?


இதுல அப்பா கேரக்டர்ல  ஸ்டண்ட் நடிகர் அழகு நடிச்சிருந்தார்.. இந்தப்படத்துக்கு பிரில்லியண்ட் காமெடின்னு பிரதாப்போத்தன் பாராட்னார்.ஹாய் மதன் படம் ஓக்கே, ஆனா இன்னும் காமெடி நல்லா ட்ரை பண்ணி இருந்திருக்கலாம்னு கமெண்ட் பண்ணாரு.2. ராகேஷ் - ஹீரோ 

சின்ன வயசுல   இருந்து ஸ்பைடர்மேன், சூப்பர்மேன்னு காமிக்ஸ் கதைகள் படிச்சு வளர்ற ஒரு பையன் ஒரு கட்டத்துல பூமியை  வேற்றுக்கிரக வாசிகள் ஆக்ரமிச்சுட்டாங்க என்றதும் ஒரு உயரமான கட்டிடத்துல இருந்து தொப்னு குதிக்கறாரு. அவர் சூப்பர் மேன் ஆனாரா? சுடுகாட்டுப்பொணம் ஆனாரா? என்பது சஸ்பென்ஸ்.
ஃபேண்டசி வகையறா படம் என்றாலும் காதில் பூ சுற்றும் கதை தான். காமிரா ஆங்கிள்கள், ஹீரோவின் பாடி லேங்குவேஜ் எல்லாம் கந்த சாமி விக்ரம் நினைவுபடுத்தியது.


நினைவில் நின்ற வசனங்கள்


1. மரணம் தான் எல்லா விஷயங்களுக்கும் முடிவு என்றால் அது என் விஷயத்தில் தொடக்கமா? முடிவா?ன்னு தெரியலை. 

2. எப்போதெல்லாம் உலகை இருள் சூழ்கிறதோ அப்போதெல்லாம் ஒரு ஒளிக்கீற்று வந்து பூமியை காப்பாற்றும் அரிய சக்தியை உருவாக்கும்..

இயக்குநரிடம் சில கேள்விகள்

1. சூப்பர்மேன் ஆனதா கற்பனை பண்ணிக்கும் ஹீரோ எடுத்ததும் 30 மாடிக்கட்டிடத்துல இருந்து குதிச்சுப்பார்த்து ஏன் ரிஸ்க் எடுக்கனும்? 10 அடி தூரத்துல இருந்து முதல்ல குதிச்சிருக்கலாமே?

2. வேற்றுக்கிரகவாசிகள் பூமியை சூழ்ந்துட்டாங்க என்றதும் மக்களின் பதட்டம் + போலீஸ் ஆக்‌ஷன் சரியா காட்டலையே?


இதுக்கு கமெண்ட் சொன்ன ஹாய் மதன் ஒரே ஷாட் அடிக்கடி ரிப்பீட் ஆகுதுன்னார். நோ கிளாரிட்டி அப்டின்னு பிரதாப் சொன்னார். இந்தப்படமும் முதல்ல வராது. 3. கல்யாண் - புதியவன் 

இது செம கலக்கலான கதை. ஒருத்தன் பைக்ல போறான், வழில ஒரு ஆள் லிஃப்ட் கேட்கறான். அவனும் இவனை ஏத்திக்கறான், வழி நெடுக லிஃப்ட் கேட்டவன் தொண தொணன்னு பேசிட்டே வர்றான்.. லிஃப்ட் கொடுத்தவனுக்கும் சரி , படம் பார்க்கறவங்களூக்கும் சரி செம கடுப்பா இருக்கு. 

பாதி வழிலயே இறக்கி விடறான்.. அப்புறம் இவன் சாரி கேட்டு இனி எதும் பேசலை அப்டின்னு பிராமிஸ் பண்ணிட்டு  மறுபடியும் பைக்ல தொத்திக்கறான். இப்போ டிராஃபிக் போலீஸ் வண்டியை நிறுத்தி லைசன்ஸ், ஆர் சி புக் கேட்குது. 

பைக் ஓட்டிட்டு வந்தவன் பம்பறான். லிஃப்ட் கேட்டவன்  அப்போதான் பைக்கோட ஒரிஜினல் டாக்குமெண்ட்ஸை போலீஸ்ட்ட தர்றான். அப்போதான் தெரியுது.. லிஃப்ட் கொடுத்தவன் தான் பைக்கை திருடுனவன், லிஃப்ட் கேட்டவன் பைக் ஓனர்.. நல்ல ட்விஸ்ட்.. 

திருடனை மன்னிச்சு விட்டுடறான். 

கலக்கலான காமெடி வசனங்கள்

1. எங்கே போறீங்க?

இண்ட்டர்வியூக்கு.

இது உங்களுக்கு எத்தனாவது இண்டர்வியூ?

30 வது இண்ட்டர்வியூ

 கேட்கறேனேன்னு கோவிச்சுக்காதீங்க.. இண்ட்டர்வியூ போறதுதான் உங்க குலத்தொழிலா?

2. மார்க்கெட்டிங்க் தொழில்ல மட்டும் கஸ்டமர் எவ்வளவு கோபப்பட்டாலும் நாம் ரிலாக்ஸா இருக்கனும்.

3. சார். நீங்க இண்ட்டர்வியூவுக்கா வந்திருக்கீங்க? 

இல்லீங்க, பால் வாங்க வந்திருக்கேன்.  கேட்கறான் பாரு கேள்வி.

இந்தப்படத்துல ஹீரோவா நடிச்சவர் செம யதார்த்தம்.. பைக்ல போறப்ப நடக்கற சம்பாஷணகள் ஆரம்பத்துல தேவை அற்றதா தோன்றினாலும் சஸ்பென்ஸை மெயிண்ட்டெயின் பண்ன அந்த எஸ்டாபிளிஸ்மெண்ட் தேவைப்படுது.


இந்த வாரத்தில் வந்த 3 படங்கள்ல மேக்கிங்க் ஸ்டைல், கதை , திரைக்கதை ,வசனம்  உட்பட எல்லாத்துலயும் இதுதான் பெஸ்ட், அதுவும் இல்லாம போனவாரம் வந்த 3 கதைகளை விட இதான் பெஸ்ட். சோ இந்த படத்துக்கு முதல் அல்லது 2 வது பரிசு சான்ஸ் உண்டு..

Wednesday, August 10, 2011

நாளைய இயக்குநர் - மெகா ஃபைனல் - கலக்கல் கதைகள் - விமர்சனம்

நாளைய இயக்குநர்  ஃபைனல்க்கு போறதுகு முன்னால அதனோட 3ஆம் பாக செலக்‌ஷனுக்கான விளம்பரம் பற்றி சின்னதா ஒரு விமர்சனம். கே பாக்யராஜ் ரெடி ஸ்டார்ட் கேமரா ஆக்‌ஷன் அப்டினு சொல்லி  சில டயலாக் பேசறார்.. இந்தியாவின் சிறந்த திரைக்கதை ஆசிரியரும், பல வெள்ளி விழாப்படங்களின் இயக்குநருமான அவர் இந்த 2 நிமிட விளம்பரப்படத்துல  சோபிக்க முடியலைங்கறதைப்பார்த்தா வருத்தமா இருக்கு, ரொம்ப செயற்கையான முக பாவனைகள்.

ஃபைனல் நிகழ்ச்சிக்கு பல வி ஐ பி கள் எல்லாம் வந்திருந்தாங்க. பாலு மகேந்திரா,பாண்டிராஜ் என பல வி ஐ பி களை பார்க்க முடிந்தது. இவங்க எல்லாம் அந்த நிகழ்ச்சியை பார்க்கறதால படைப்பாளிகளுக்கு இன்னும் படம் எடுக்க ஊக்குவிப்பா அமையும்.

ஹாய் மதன் வந்ததும் சொன்ன ஒரு பஞ்ச் நல்லா இருந்தது. இந்த ஃபைனல்ல யார் வின் பண்ணப்போறாங்கன்னு நிறையப்பேர் கேட்கறாங்க.ஏற்கனவே வின் பண்ணுனவங்க தான் இங்கே வந்திருக்காங்க என்று அவர் சொன்னதும் அனைவரும் ஒரு புத்துணர்ச்சியோடு கிளாப்ஸ்..


1. திருப்பூர் ராம் - சைனா டீ ( காமெடி சப்ஜெக்ட் )

ப்பனிங்க் ஷாட்டே டெர்மினேட்டர் டீக்கடைல ஆரம்பிக்குது. புது வகை டீத்தூள் விற்கும் ஆள் கடைக்கு வர்றான். பணம் எதுவும் வேணாம், ஒரு டீ போட்டு கஸ்டமருக்கு குடுங்கங்கறான்.அது போலவே செஞ்சா டீ குடுத்தவன் ஆள் அவுட். 

பதறிப்போன டீக்கடை ஓனர் டெட்பாடியை வண்டில வெச்சு எடுத்துட்டுப்பொறாரு.. ஒரு மறைவான இடத்துல அவரை டிஸ்போஸ் பண்ணிட்டு அவங்க ரிட்டர்ன் ஆகறப்ப போலீஸ் பார்த்துடுது. டீ குடிச்சு செத்துப்போனதா நம்பப்படும் ஆள் உண்மைல சாகலை. மயக்கம். கடன் தொல்லை தாங்காம விஷம் குடிச்சவர் அந்த டீயை குடிச்சதாலதான் பிழைச்சாரு.. 

இப்போ அந்த டீக்கு ஏக கிராக்கி. 

கேட்க ரொம்ப சாதாரண கதையா தெரியும் ,ஆனா விஷூவலா பார்க்கறப்ப செமயா இருந்தது. 

மனம் கவர்ந்த சில வசனங்கள்

1. நல்ல காலம் பொறக்குது, நல்ல காலம் பொறக்குது

யோவ் , குடுகுடுப்பை,வாத்தியத்துக்கே வக்கில்லாம தானே வாயால வாசிக்கறே.!!?
2. ஊர்ல இருக்கற எல்லாருமே எங்க கடைல தான் டீ குடிப்பாங்க./. 

அடேய், ஊர்ல மொத்தமே 32 பேர்தான். 

3. இந்த பஞ்சாயத்து என்னா சொல்லுதுன்னா போஸ்ட் மார்ட்டம் பண்ணீயே ஆகனும்..

ஆமாமா.. நானும் அதை ஆமோதிக்கிறேன், போஸ்ட் மார்ட்டம் பண்ணீயே ஆகனும்.. யோவ். ஒரு சந்தேகம். போஸ்ட் மார்ட்டம்னா என்ன?

4. விஷத்தை முறியடிக்கும் டீ இது .. விலை ரூ 50

இந்தாய்யா ரூ 500


இதுல நடிச்ச எல்லாருமே ஒரு கிராமத்து ஆளுங்க, நேட்டிவிட்டி இருந்தது.. பார்வையாளர்களிடையே நல்ல வர்வேற்பு பெற்ற இந்தப்படம் ஏனோ ஜட்ஜூங்களை அவ்வளவா கவரலை.. ஆனா அதை ஓப்பனா கமெண்ட்டி இருக்க தேவஃஇ இல்லை. ஏன்னா ஃபைனல் என்பதால் யார் வின்னர் என்ற சஸ்பென்ஸை கடைசி வரை மெயிண்டெயின் பண்ண வேணாமா?2. . ரவிகுமார் - ஜீரோ கிமீ  ( ஃபேண்ட்டசி)

வேலை வெட்டி இல்லாத ஹீரோ எதேச்சையா திருப்பூர் டூ சென்னை போக ஒரு  மாயாஜால ரூட் கண்டுபிடிக்கறாரு..  அதாவது குறிப்பிட்ட இடத்துல ஆள் உள்ளே போனா அடுத்த செகண்ட் அவர் சென்னைல இருப்பார். உடனே அந்த இடத்தை விலைக்கு வாங்கறார்..

தனது பாரம்பரியம் மிக்க வீட்டை விக்கறார். ஜோசியர் தான் அந்த வீடு ராசி இல்லைன்னு ஐடியா குடுக்கறார். வீட்டை வித்து கிடைச்ச பணத்துல தான் இந்த மேஜிக் இடம் வாங்கறார். வாங்கி ட்ராவல் ஏஜென்சி நடத்தறார்.. செம காசு.. ரூ 500 டிக்கெட்.. திடீர்னு ஹைவெஸ் டிபார்ட்மெண்ட்ல வந்து அந்த இடத்தை அபகரிச்சுக்கறாங்க..

ஹீரோவோட வீட்டை விலைக்கு வாங்குன சேட்டு ராசி இல்லைன்னு ஓ சி ல அதை ரிட்டர்ன் பண்ணிடறாரு. இப்போ தன் வீட்டுக்கு போற ஹீரோ பரண்ல அமெரிக்கா போற மேஜிக் ரூட் கண்டு பிடிக்கறார்..

அப்பாவின் சொத்து விற்கக்கூடாதுங்கற மறைமுகமான நீதியோட ,அட, இப்படி நடந்தா எவ்வலவு நல்லாருக்கும் என பார்வையாளர்களை ஏங்க வைத்த ஒன் லைன் கற்பனை.  வெல்டன் ரவிக்குமார்.

இந்த படம் முதல் பரிசு வாங்கலைன்னாலும் நிச்சயம் 2 வது அல்லது 3 வது பரிசு வாங்குவது நிச்சயம்.. மொத்தம் 9 படம் . இந்த வாரம் 3 படம். இனி 6 படம் வர இருக்குது.
3. தீபக் - ஆசை 

ஒரு தூக்கு தண்டனைக்கைதியின் கடைசி நிமிடங்கள் எப்படி இருக்கும்? என்பதுதான் படத்தோட ஒன்லைன்.. ஆனானப்பட்ட ஆட்டோ சங்கர் ஆகட்டும், வீரப்பன் ஆகட்டும் அவங்களோட கடைசி நிமிடங்களை பார்க்கும்போது நமக்கு இரக்கம் வரத்தான் செய்யுது. அது மனித மன இயல்பு..

சின்ன வயதில் 13 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் பண்ணுன கொடூரமான ஆள் கேஸ் நடந்து தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுகையில் தனது கடைசி ஆசையாக தனது மகளிடம் மன்னிப்பு கேட்டதாக சொல்ல சொல்கிறார்.

இதே போல் 8 தூக்கு தண்டனை களின் கடைசி ஆசையை நிறைவேற்றும் அசைன்மெண்ட் எடுத்துக்கொண்ட ஒருவர் அதை நிறைவேற்றுகிறார். இதான் கதை..

மனம் கவர்ந்த வசனங்கள்

1. சோத்துல உப்பே இல்லையே? சாகப்போறவனுக்கு சொரணை இருக்கக்கூடாதுன்னு போடாம விட்டுட்டீங்களா?

2. மனுஷனுக்கு தோணும் ஆசை தான் அவன் தப்பு பண்ணக்காரணம்.. ஆசைப்படாத மனுஷனே உலகத்துல கிடையாது..
இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்

1. தூக்குதண்டனைக்கைதிகளின் கடைசி ஆசையை நிறைவேற்றும் கேரக்டர்ல நடிக்கறவர் “ என் பேரு அகிலன்” அப்டின்னு சொல்றப்ப தன் நெஞ்சுல கை வெச்சு சொல்றாரு.. இது 25 வருடங்களுக்கு முன்னால் நாடகங்களில் கையாளப்பட்ட பாணி..  அதுவும் 4 டைம் அதே மாதிரி சொல்றப்ப இயக்குநரின் அனுபவம் இன்மை தெரிகிறது..

2. தூக்கு தண்டனை கைதி தன் மக கிட்டே மன்னிப்பு கேட்கறதா சொன்னது தன்னால் கெடுக்கப்பட்ட பெண் மூலம் பிறந்த வாரிசா? அல்லது இது வேறா? என்பது  தெளிவா சொல்லப்படலை.. ஒரு வேளை தான் கெடுக்கப்பட்டதால் பிறந்த பொண்ணு கிட்டே மன்னிப்பு கேட்பதாக சொல்லி இருந்தால் கதையில் இன்னும் அழுத்தம் கூடி இருக்கும்..

இந்தப்படம் பார்க்க உருக்கமா இருந்தாலும் லாஜிக் மிஸ்டேக்ஸ், கதை கரு ஆகிய விஷயங்களில் சராசரி எனும் நிலை தான்..


Monday, July 04, 2011

நாளைய இயக்குநர் - டபுள் ரோல் கதைகள் -விமர்சனம்

ஹாய் மதன்,பிரதாப் போத்தன் 2 பேரும் கோட் சூட்ல நீட்டாவும்,தொகுப்பாளினி வழக்கம்போல நைட்டில கசங்கலாவும் ஆஜர்....இன்னைக்கு டபுள் ரோல் கதைகள் அப்டின்னு மதன் சார் சொல்லிட்டு அது பற்றி ரொம்ப சிலாகித்து பெசினார்.. டபுள் ரோல் அந்தக்காலத்துல இருந்தே பிரமாதமான வரவேற்பு பெற்றவைகள்னு.. எடுக்கறது ரொம்ப கஷ்டம்னாரு.. (பார்க்கறது அதை விட கஷ்டம்)

1. நகுலன் - ராஜேஷ்குமார்
இந்தப்படம் போட்டு 2 வது செகண்ட்லயே அபூர்வசகோதரர்கள் இன்ஸ்பிரேஷன்னு தெரிஞ்சிடுச்சு.. அப்பு கமல் மாதிரி ஹீரோ (இவர் தான் இயக்குநரும் ) அவருக்கு தாழ்வு மனப்பான்மை.. தான் அநாதை,யாரும் நம் மீது அன்பு செலுத்துவது இல்லைன்னு.. இது பற்றாதுன்னு குடைக்குள் மழை பார்த்திபன்  மாதிரி இல்லாத ஒரு கேரக்டர் கூட பேசிக்கற மனப்பிறழ்வு நோய் வேற.. 

ஸ்கூட்டில போற ஃபிகர் கிட்டே பேச ஆசைப்படறாரு.. அது கண்டுக்கவே இல்லை.. (இந்தப்பொண்ணுங்க யாரைத்தான் கண்டுக்குவாங்களோ?).. இவர் ஆற்றாமைல பொங்கி அழறாரு.. இசை வேற சோகத்துல போட்டு தாளிக்கறாங்க.. கடைசில எப்படியோ அந்த ஃபிகர் அவரை வண்டில ஏத்திக்கிட்டு கிளம்புது..  

ஹீரோ முழங்காலை கட்டி ரொம்ப சிரமப்பட்டு தான் நடிச்சிருக்கார்.. என்ன பிரச்சனைன்னா நமக்கும் பார்க்க சிரமமா இருக்கு.. டிரமாட்டிக்கா இருக்கு.. சித்தரிக்கப்பட்ட ,செயற்கையான சோகம் மாதிரி நம்ம மூளைக்குள்ள ஒரு அவார்னெஸ் பல்பு எரியுது.. சாரி டைரக்டர் சார்.. 

இயக்குநரிடம் சில கேள்விகள்

1. அதிகம் பழக்கம் இல்லாத அந்த பொண்ணு ஹீரோவை பரிதாபப்பட்டு எங்காவது டிராப் பண்ணினா ஓக்கே.. திடு திப்னு வீட்டுக்கே கூட்டிட்டு போக ஓக்கே சொல்லுமா?
2. அதிக பழக்கம் இல்லாத ஆணிடம் அப்படி பாசமா முகத்தை தடவி கொடுக்குமா?

3. ஹீரோ மாதிரியே இருக்கும் அந்த இன்னொரு கேரக்டர் யாரு? இவரோட கற்பனையா? அண்ணனா? அதற்கு படத்துல விளக்கமே இல்லை.. 


இயக்குநர் சபாஷ் பெறும் இடம்

டைட்டிலுக்கான  விளக்கத்தை ஹாய் மதன் கிட்டே டைரக்டர் சொன்னது டச்சிங்கா இருந்துது..  நகுலன் அப்டிங்கறதை வேகமா,தொடர்ச்சியா சொல்லிட்டே வந்தா அது நான் குள்ளம், நான் குள்ளன்னு வரும் ..அது படத்தோட மையக்கரு.ன்னாரு.. குட் ஒன். 


2. சித்திரப்பாவை - சரத்ஜோதி 

ட்வின்ஸ் சிஸ்டர்ஸோட கதை.. மனநிலை பாதிக்கப்பட்ட பெண்.. அடிக்கடி ஏதாவது வரைஞ்சிட்டே இருக்கா.. மன நிலைக்காப்பகத்துல அவ ஒரு முறை எங்கேயும் வர சம்மதிக்காம மாடில அபாயமான இடத்துல நின்னு  வரையறா.. அவளை கீழே விழாம காப்பாற்றப்போகும் அவளின் சகோதரி ஸ்லிப் ஆகி கீழே விழுந்துடறா.. அக்கா க்ளோஸ். தங்கை.. எகெயின் டிராயிங்க் கிளாஸ்..


  இந்தப்படத்தின் மூலமா இயக்குநர் என்ன சொல்ல வர்றார்னே தெரியல.. மனநிலை தவறியவர்களை பாதுகாக்கும்போது நாம முதல்ல ஜாக்கிரதையா இருக்கனும்னு சொல்ல வர்றாரோ? 

இயக்குநரிடம் சில கேள்விகள் 

1. மனநலக்காப்பகம் அப்படி அபாயமான மாடியை கொண்டிருக்குமா? பேஷண்ட்டை அங்கே போக அலோ பண்ணுமா?
2. மகள் இறந்தாள் என்ற செய்தி ஃபோனில் அம்மாவுக்கு தெரிவிக்கப்படும்போது அந்தம்மா கிட்டே ஒரு ரீ ஆக்‌ஷனே இல்லையே? ஏன்? ஆ ராசா ஊழலில் மாட்னார்னு கேட்டு மக்கள் சகஜமா இருக்கற மாதிரி  என்ன ஒரு அலட்சியம்?

3.மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணால அவ்வளவு தெளிவான ஓவியத்தை வரைய முடியுமா?

இயக்குநர் சபாஷ் பெறும் இடம்

 பட ஹீரோயினை நடிக்க வைத்த விதம் ,மற்றும் அந்த நடிகை தேர்வு..  

看完震惊了,这才叫艺高人胆大


3. மைக்கேல் மதன் காமராஜ் - தமிழ் சீனு 

 ஒரே மாதிரி முகத்தோற்றம் உள்ள இருவரில் ஒருவர் செய்யும் தவறால் இன்னொருவர் மாட்டிக்கொள்ளும் கதை.. கேட்க பழைய கதையாக தோன்றினாலும் காமெடியாக கொண்டு போனதால் தப்பித்தார் இயக்குநர்..

போலீஸ் ஸ்டேஷனில் ஹீரோவும், போலீஸூம் பேசும் வசனங்கள் நல்லதொரு காமெடி ஸ்க்ரிப்ட் கிடைத்தால் இயக்குநர் கிளப்புவார் என்று கட்டியம் கூறுகிறது.. 


க்ளைமாக்சில் “ கை கழுவிட்டு வாய்யா சாப்பிடலாம்” என மனைவி கூறுவது டச்சிங்காக இருந்தது.. 

 இந்த வாரம் போட்ட 3 படங்களுமே சுமார் ரகங்கள் தான்.டிஸ்கி - மேலே சொன்ன படங்களின் யூ டியூப் லிங்க் 


http://www.techsatish.net/2011/07/kalaingar-tv-naalaiya-iyyakunar-03-07.html
 

Wednesday, May 11, 2011

நாளைய இயக்குநர் - ஆக்‌ஷன் கதைகள் 3 - விமர்சனம்

P8050080.JPG
8.5.2011 எலக்‌ஷன் ரிசல்ட்க்கு முன் வரும் கடைசி நிகழ்ச்சி இது. கே பாலச்சந்தர் சாரின் பேட்டியை கட் பண்ணி கட் பண்ணி 3 கதைகளுக்கும் நடு நடுவே கொஞ்சம் கொஞ்சம் போட்டாங்க.. இது எப்படி இருந்துச்சுன்னா ஸ்கூல் அல்லது காலேஜ் ஃபங்க்‌ஷன்ல பரிசு வழங்கும் நிகழ்ச்சியை ஆங்காங்கே கலை நிகழ்ச்சிக்கு நடுவே போடற மாதிரி.. வேற வழி.. நம்ம ஜனங்க டேஸ்ட் அப்படி.. ம் ம் .பேட்டில மதன் சார் தான் எல்லா கேள்வியையும் கேட்டாரு.. பிரதாப் போத்தன் எந்த கேள்வியும் கேட்கலை. ஆனா அவருக்கு 7 தடவை க்ளோசப் ஷாட்வேற.. அண்ணன் கமல் கெட்டப்ல இருந்தாரு..ஹி ஹி (அண்ணி மட்டும் ரசிச்சிருப்பாங்க ஹா ஹா )


தொகுப்பாளினி போட்டிருந்த டிரஸ் பற்றி சொல்லியே ஆகனும்.சமீபத்துல இவ்வளவு கேவலமான டிரஸ்ஸை நான் பார்க்கவே இல்ல.(அதான் இப்போ பார்த்துட்டியே ? அப்புறம் என்ன?)பொண்ணுங்க மாடர்ன் டிரஸ் போடறது தப்பே இல்லை.. ஆனா அது அட்ராக்ட்டிவ்வா இருக்கனும்.சரி.. விடுங்க.. இதுக்கு மேல ஏதாவது சொன்னா அது எங்க இஷ்டம்..நீ விமர்சனம் பண்ண வந்தது நிகழ்ச்சியையா? டிரஸ்ஸையா? அப்படிம்பாங்க.. ஏற்கனவே நமக்கு ஏழரை நடக்குது.. ( அது ஏன் நடக்குது..? சீக்கிரம் ஓடிட்டா தேவலை)


1. ராகேஷ் - 50 -50 ( ஃபிஃப்டி ஃபிஃப்டி)

பில்லா,ரன் லெவலுக்கு பில்டப் மற்றும் ஃபைட் சீனுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட முதல் குறும்படம் என்ற அளவில் இது முக்கியமான படம்.எனக்கு தெரிந்து ஒரு ஷார்ட் ஃபிலிமில் இந்த அளவு பர்ஃபெக்ட் ஃபைட் சீன் வந்ததே இல்லை. அதே போல் ஹீரோ பில்டப்புக்கான ஹம்மிங்க் மியூசிக்,பில்டப் பேக்ட்ராப் எல்லாம் கலக்கல்.ஆனால் கதை தான் துக்ளியூண்டு.

ஒரு கேங்க்ஸ்டர்ஸ் குரூப்பில் பண பரிவர்த்தனையில் ஒரு கோல்மால் நடக்குது. ஹீரோ போய் அந்த பணத்தை வாங்கி வருகிறார். இதான் கதை.ஆனா எடுத்த விதம் பக்கா.. 

சாக்லேட் பேபி மாதிரி முகம் வைத்திருக்கும் ஹீரோவை நீ கொயந்தை பையண்டா என சீண்டி சீண்டியே அவனை தூண்டி விடுகிறார்கள். அவன் தனி ஆளாக கேங்க்ஸ்டர் முகாம் போய் ஃபைட் பண்ணி பணத்தை மீட்டு வருகிறான்.

இதற்கு டைட்டில் ஏன் 50 - 50 வைத்தார்கள் என தெரியவில்லை. நான் சாதா அல்ல ,இப்புடுச்சூடு கண்ணா,நான் பார்க்கத்தான் பப்பா அடிச்சா டாப்பா  மாதிரி டப்பிங்க் வாசனை  அடிக்கும் டைட்டில் வைத்திருக்கலாம்.ஒளிப்பதிவு ,எடிட்டிங்க் போன்ற தொழில் நுட்பங்கள் ரசிக்க வைத்தது. இந்த படத்துக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணி புரிந்த  பிரபுக்கு பெஸ்ட் டெக்னீஷியனுக்கான பரிசு கிடைத்தது சந்தோஷம்.


2. அருண்குமார் - கையில் எடுக்க வேண்டுமா?

அண்ணன் மிஸ்கின்னின் தீவிர ரசிகர் போல . பெரும்பாலான ஷாட்ஸை எல்லாம் அவர் மாதிரியே கேமரா கோணங்கள் வைத்து எடுத்தாரு. கால்கள் மூலம் கதை செல்லும் திசை சொல்வது..

ஒரு அப்பார்ட்மெண்ட்ல ஒரு தம்பதி, பக்கத்து வீட்ல ஒரு போலீஸ் ஆஃபீசர் பக்கத்து வீட்டு தம்பதி கல்யாண நாள் அன்று கணவன் வெளில போனதும் மனைவியை போலீஸ் ஆஃபீசர் பலாத்காரம் பண்ண அதை அந்த போலீஸ் ஆஃபீசரின் நடவடிக்கையை செல்ஃபோனில் படம் பிடித்த பெண்ணை அவர் மீண்டும் இன்னொரு சந்தர்ப்பத்தில் போட்டுத்தள்ள முயலும்போது இறந்த மனைவியின் கணவன் பழிக்குப்பழி வாங்குகிறான்.

இந்தப்படம் கிட்டத்தட்ட 30 நிமிஷப்படமா எடுத்தாத்தான் புரியும்.. டைரக்டர் ஏகப்பட்ட காசிகளை ஷூட் பண்ணிட்டு எடிட்டிங்க்ல தடுமாறி இருக்கறது நல்லாவே தெரியுது.இதுக்கு என்ன பண்ணனும்னா 8 நிமிஷப்படத்துக்கு உண்டான மாதிரி சிம்ப்பிளா சின்ன படமா எடுத்துக்கனும்.சும்மா கசாமுசான்னு அரை மணீ நேரப்படமா எடுத்துட்டு அதுக்குப்பிறகு 7 நிமிடப்படமா எடிட்டிங்க் பண்ணுனா எடுத்தப்ப இருந்த எஃப்ஃபக்ட் கிடைக்காது.

இந்தப்படத்துல ஒரு பாராட்டத்தக்க விஷயம் கணவன், மனைவி ஊடல் கொண்ட நிலையில் கணவ்ன் ஆஃபீஸில் செகரட்டரி ரூட் போடறப்ப கணவன் அவளை தவிர்ப்பது மாதிரி காட்னது... ஆண்களெல்லாம் காலரை தூக்கி விட்டுக்க ஒரு சான்ஸ்.கதை இந்த திசைல தான் போகுதுங்கறதை டைவர்ட் பண்ண அந்த சீனை இயக்குநர் வெச்சிருக்கனும். நல்ல உத்தி..

ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளுக்காக சட்டத்தை கையில் எடுக்க வேண்டுமா? என்பது தான் கதையின் தீம் என்றாலும் டைட்டில் எஸ் ஏ சந்திர சேகர் காலத்தில் எடுத்த பட தலைப்பு மாதிரி சுரஹ்ட்தே இல்லாமல் இருக்கு. இந்தப்படத்துக்கு பக்கத்து வீட்டு பரிமளா,ஃபிகரு இங்கே.. மர்டர் எங்கே? இப்படி டைட்டில் வெச்சிருக்கலாம்.. ( இதை சம்பந்தப்பட்ட டைரக்டர் படிச்சா இப்படி கேவலமா டைட்டில் வைக்கறதுக்கு தான் வெச்ச டைட்டிலே தேவலாம்னு நினைப்பாரோ/? ஹி ஹி )

இந்தப்படத்துல குறிப்பிட்டு சொல்ல வேண்டிய முக்கிய அம்சம் ஹீரோயின் அம்சமா இருந்தாங்க.. ( பார்த்தீங்களா? ஃபிகர் நல்லாருந்தா மரியாதை தானா வருது..# தமிழேண்டா)அதுவும் கல்யாண நாள் அன்னைக்கு அவரது மங்கள கெட்டப் செம..  (சரி சரி கர்ச்சீப் எடு).இந்தப்படத்துக்கு ஃபைட் சீன்ல பேக் டிராப்ல காயத்ரி மந்திரம் போட்டது நல்லாருந்ததுன்னு கே பி சார் கமெண்ட் பண்ணுனார்.

 


3. சரத் ஜோடி - புழுதி ஆட்டம்

டைட்டிலைப்பார்த்ததுமே இது வில்லேஜ் சப்ஜெக்ட்னு நினைச்சது சரி தான். செம நேட்டிவிட்டியோட எடுக்கப்பட்ட இந்தப்படத்துக்கு முதல் பரிசு கிடைச்ச துல ஆச்சரியம் இல்லை.பசங்க பட ஸ்டைலில் எடுக்கப்பட்ட குழந்தைகளுக்கான படம்,. கிரிக்கெட் விளையாடற டீம்ல ஒரு சண்டை. கிரிக்கெட் பேட்டை ஒரு குரூப் ல ஒரு பொடியன் எடுத்துட்டு ஓடிடறான்.அவனை துரத்திட்டு போய் 3 பசங்க மீட்கறப்ப அவங்க சைக்கிள் எதிரி குரூப் கிட்டே சிக்கிடுது.. ஆட்டம் தொடரும்னு சப் டைட்டிலோட படம் முடியுது.. 

 இதுல பாராட்ட வேண்டிய முக்கிய அம்சம் படப்பிடிப்பு நடந்த இடம். பக்கா சேரியை செலக்ட் பண்ணி கேமரா வை லாங்க் ஷாட்ல வெச்சு லெங்த்தி
.ஷாட்டா எடுத்து தள்ளின டைரக்டரை பாராட்றதா? ரொம்ப இயல்பா சேரிப்பசங்க மாதிரியே பாடி லேங்குவேஜ்,வசன உச்சரிப்புல கலக்குன சின்னபசங்களைப்பாராட்றதா?செம கலக்கல்.

எல்லா சின்னப்பசங்களையும் மேடை ஏற்றி கவுரவிச்சாங்க.. ஆனா செம கலக்கு கலக்குன அந்த குண்டு பையன் மிஸ்ஸிங்க்..

இந்தப்பட டைரக்டர் மேடைல பலராலும் பாராட்டப்பட்றப்ப அவர் காட்டிய நிதானம் ஆச்சரியப்பட வெச்சுது.. ரொம்ப சிம்பிளா ஸ்மைலிங்கோட அதை எதிர் கொண்டது அண்ணன் ரொம்ப பக்குவப்பட்டிருக்கார்னு தோணூச்சு.. வெல்டன்..

 டிஸ்கி - மேலே உள்ள ஸ்டில்ஸ்களுக்கும், குறும்படங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சும்மா ஒரு ரசனைக்காக....

Monday, March 07, 2011

நாளைய இயக்குநர் - காதல் + கண்ணீர் கதைகள்

http://www.tamilgood.com/movies/wp-content/uploads/2011/01/Naalaiya-Iyyakunar55.jpg 
6.3.2011 அன்று ஞாயிறு காலை 10.30 மணிக்கு கலைஞர் டி வி ல நாளைய இயக்குநர் நிகழ்ச்சில  ஹாய் மதன் சொன்ன தொடக்க வரி மனதைத்தொடுவதாக இருந்தது.இன்னொருவர் கஷ்டங்களைப்பார்த்து நெகிழ நாம் கத்துக்கனும்.அதற்கு அச்சாரமா டிராஜடிங்கற தலைப்புல இந்த வார படங்கள் அமைஞ்சிருக்குன்னார்.

அய்யய்யோ டிராஜடியா? மாட்னோம்டா அப்டின்னு நான் சலித்துக்கொண்டே தான் பார்த்தேன்.என் எண்ணங்களை தவிடு பொடி ஆக்கும் படி முதல் படமே கலக்கலான தொடக்கமா அமைஞ்சது..

1. அன்புடையீர்  - திருப்பூர் ராம்.

ஒரு சோக கதையை ஆக்‌ஷன் ஃபார்முலாவுல சொல்ல முடியுமா?ங்கற பிரமிப்பான தொடக்கத்தோட படம் அமைஞ்சது.ஒரு தூக்குத்தண்டனைக்கைதி தப்பி ஓடறப்ப போலீஸ் துரத்துது.. அந்த சேசிங்க் சீன்ல யே ஃபிளாஸ்பேக் அப்பப்ப வருது.

இந்த குறும்படத்தோட கதை சொல்லல் பாணி என்னை ரொம்பவே கவர்ந்துடுச்சு.மொத்தம் ஓடற 7 நிமிஷத்துல கதையை சொல்லி ஆகனும்,அதுல சோகம் இருக்கனும்,சுவராஸ்யமும் இருக்கனும்ங்கற கண்டிஷன்ஸை எல்லாம் அனாசயமா ஏத்துக்கிட்டு ஆக்‌ஷன் த்ரில்லர் லேபிள்ல சேர்த்தும் அளவு வித்தியாசமான படமாக இயக்கப்பட்ட இந்தப்படம் சமீபத்தில் நான் பார்த்த 65 குறும்படங்களில் சிறந்த படம் என கொள்ளலாம்.

படத்தோட பிளஸ் பாயிண்ட் ஹீரோயின். ரொம்ப பாந்தமான குடும்பப்பாங்கான மனைவியா வர்றவர் ரொம்ப இயல்பா நடிச்சிருக்கார்.கைதி தப்பி நேரா தன் வீட்டுக்கு வந்து தன் மனைவியையும் ,கைக்குழந்தையையும் பார்க்க வந்தவர் தன் மனைவி வேற ஒரு ஆள் கூட குடும்பம் நடத்துறதை பார்த்து திக் பிரமை அடைஞ்சு நிக்கறார்...

இந்தக்கதைல எனக்கு சில டவுட்ஸ்

1.கணவன் கைது ஆன உடனே ஒரு மனைவி உடனே செக்யூரிட்டிக்காக அப்படி வேற ஒரு ஆள் கூட போவாரா?

2. கதைல ஹீரோயின் (மனைவி) தனக்கு ஆண் குழந்தை தான் பிடிக்கும்கறா.. ஹீரோ பெண் குழந்தை தான் பிடிக்கும்கறான். பொதுவா பொண்ணுங்க எந்தக்குழந்தையா இருந்தாலும் ஓக்கே அது அவங்க குழந்தைன்னு நினைப்பாங்க.. ஆண்கள் தான் வாரிசுக்கு ஆண் வேணும்னு நினைப்பாங்க.

3.  தூக்கு தண்டனைக்கைதியை துரத்தி பிடிக்கும் போலீஸ் ஆஃபீசர் அந்த கைதிக்கு முன்னாலயே தன்னோட உயர் அதிகாரிக்கு ஃபோன் போட்டு ,”சார்.. உடனே வாங்க.. நான் தனியா இவனை சமாளிக்க முடியாது”ங்கற  மாதிரி பேசுவாரா? ரிவால்வரால கால்லயோ, கைலயோ சுட்டு காயத்தை ஏற்படுத்தி கைதியை பலவீனன் ஆக்கி இருக்கலாமே..
http://1.bp.blogspot.com/_9QHTaa7VmZM/S4u_pUw-tgI/AAAAAAAAARo/Nu8YWq5UfAQ/s320/director.png
இந்தப்படத்தில் கவர்ந்த வசனங்கள்

1. தப்பு செஞ்சவங்க நிறைய பேரு வெளில இருக்கறப்ப நான் மட்டும் ஏன் சாவனும்?

2,  எனக்கு பெண் குழந்தைன்னா உசுரு.மனைவியைக்கூட ஒரு குழந்தையாத்தான் பார்த்துக்கறேன்.

3. அப்பாவோட வாசம் தெரியாமயே என் குழந்தை வளர்ந்துட்டு இருக்கு

இந்தக்கதைக்கான ரிசல்ட் ஆடியன்சிடமும் சரி,ஜட்ஜூங்க ரெண்டு பேர்ட்டயும் சரி அபாரமா இருந்தது.ஒரு படைப்பாளிக்கு கிடைக்கற சிறந்த அங்கீகாரமே பாராட்டுதான் என்ற அளவிலும்,பாராட்டு சிறந்த கிரியா ஊக்கி என்ற அளவிலும் அந்த காட்சியைப்பார்க்க மனசுக்கு மகிழ்ச்சியா இருந்தது.

2. நான் அமாவாசைல பிறந்தவன் - அழகு ராஜா

ஒரு அசிஸ்டெண்ட் டைரக்டரோட போராட்டங்கள்,அவமானங்கள்,வலி இவற்றை சொல்லும் கதை. பொதுவா இந்த மாதிரி கதைகள் ஜனங்களால அதிகமா விரும்பப்படறது இல்ல... அன்றாட வாழ்வியலில் ஏற்படும் பிரச்சனைகளை மையமா வெச்சு படம் எடுக்கறதே நல்லது. இதுக்கு சினி ஃபீல்டுலயே உதாரணம் சொல்லலாம். தாவணிக்கனவுகள், சினிமா சினிமா,முகவரி...(இதில் முகவரி வெற்றிப்படம் என்றாலும் எதிர்பார்த்த வெற்றி இல்லைன்னு அதன் இயக்குநரே பேட்டி குடுத்திருக்கார்,)


பிடித்த வசனங்கள்

1. எனக்கு நடக்கறது  ஒண்ணும் புதுசு இல்லை...தமிழ் சினிமாவுல கதை சொல்ல நடையா நடந்துட்டு தான் இருகேன்..

2.  என்னய்யா.. ஒரு கிஸ் சீன்க்கு இத்தனை டேக் எடுக்கறே... நல்ல வேளை ரேப் சீன் எடுக்காம போயிட்டோம்..

இயக்குநருக்கு சில வார்த்தைகள்

1 . சினிமா வாய்ப்பு கிடைக்கலைன்னு மனம் வருத்தம்தான் படுவாங்க,இதுக்கு யாரும் தற்கொலை செய்ய மாட்டாங்க. அப்படியே எங்காவது ஒரு சம்பவம் நடந்திருந்தாலும் அதை படமாக்குவதால் புது ஆட்களுக்கு தன்னம்பிக்கை யை வளர்ப்பது போல்தான் நாம்(அதாவது நீங்க) படம் எடுக்கவேண்டுமே தவிர நெகடிவ் எண்ணங்கள் ஏற்படும்படி அல்ல.

2. தூக்கு மாட்டிக்கொள்ளும் ஹீரோ 3 முறை மட்டுமே கால்களை உதறுவது போல் சீன் இருக்கு.. கிட்டத்தட்ட 13 முறை உதறுவானாம்.அந்த கொடூரத்தை காட்டுவதற்கு சிம்ப்பிளாக சிம்பாலிக் ஷாட் வைத்திருக்கலாம்.
http://whatslatest.com/blog/wp-content/uploads/2009/10/paritala-sunitha.jpg
3. கடைசி வரை -சத்தி 

காதல் ஜோடி லவ் பண்றாங்க. காதலனுக்கு ஒரு விபத்துல கண் பார்வை போயிடுது.உடனே பிராக்டிகல் சேஃப்டி லைஃப்ஃபை காதலி செலக்ட் பண்றா. வீட்ல பார்க்கற மாப்பிள்ளைக்கு ஓக்கே சொல்றா....ஆனா காதலன் நடந்த சம்பவத்தை நண்பன் கிட்டே சொல்றப்போ காதலி மேல தப்பில்லைங்கற மாதிரி சப்போர்ர்ட்டா பேசறான்  .

1. என்னடா நண்பா.. பேசிட்டு இருந்தே , திடீர்னு ஆளைக்காணோம்..போய்ட்டியோன்னு பார்த்தேன்.

பாதிலயே விட்டுட்டுப்போக நான் என்ன உன் ஆள் தேவியா?


2.பார்வை இல்லாததால என் கவனம் கலையறதில்லை.. கூர்மையான புலன்கள் ....

3.  ஒரே ஜோக்கை ரெண்டு மூணு தடவை படிச்சுப்பாரு ,சிரிப்பே வராது..அதே மாதிரி பல தடவை அழுது பார்த்துட்டா எதுவுமே சோகம் இல்ல...( சோகத்தோட வலி குறைஞ்சிடும்)

4. ஹீரோயின் - உங்களை எந்த அளவுக்கு நான் விரும்பறேனோ அந்த அளவுக்கு  என்னை நான் அதிகமா விரும்பறேன். 


காதல் கதை எடுக்கறவங்க  அந்த கதைக்கு வில்லனா காதலர்களே மாறிடறதா காட்டறப்ப அந்த கதைல , காதல்ல வலு குறைஞ்சிடுது....இதை கவனத்துல வெச்சுக்கிட்டு திரைக்கதை அமைப்பது நல்லது.

இயக்குநருக்கு சில வார்த்தைகள்

1. காதலர்கள் ஜாலியா பேசிட்டு இருக்கறப்ப ஒருத்தர் கண்ணை ஒருத்தர் பார்த்துப்பேச ஆசைப்படுவாங்க.. அதனால கூலிங்க் கிளாஸ் போட்டுட்டு பார்க்ல உட்கார்ந்து பேசற சீன் தேவை இல்லை.ஹீரோவை பந்தாவா காட்டனும்னு நினைச்சா பைக்ல போறப்ப, நடந்து வர்றப்ப அப்படி காட்டுனா போதும்.

2.காதலி காதலனை கை விடற ஷாட்ல அவ கண்ல வருத்தமே இல்ல..வேற வழி இல்லாம அப்படி பண்றாங்கறதை நல்லா தெளிவா காட்டனும்.சப்போஸ் நடிகைக்கு ஆக்டிங்க் வர்லைன்னா ( IF THE EXPECTING PERFORMANCE IS NOT OBTAINED) லாங்க் ஷாட் வைச்சு சமாளிக்கலாம்.
http://2.bp.blogspot.com/_9QHTaa7VmZM/TDIgJMQJesI/AAAAAAAAAXU/bZJCvmlw9Ps/s1600/clapboard.jpg
4. ஒரு நாள் - தீபக்   

இந்தப்படம் ஒரு பிரமிப்பான அனுபவத்தை குடுத்தது.2008 நவம்பர் மாதம் 26ந்தேதி நடந்த உண்மைசம்பவத்தை மையமா வெச்சு எடுக்கப்பட்டிருக்கு.

ஒரே ஒரு கேரக்டரை வெச்சு இவ்வளவு பவர் ஃபுல்லா ஒரு திரைக்கதையை எழுத முடியுமா?அதை ரொம்ப பர்ஃபக்‌ஷனோட எடுக்க முடியுமா?என அனைவரையும் வியக்க வைத்து முதல் பரிசை தட்டி சென்ற படம். கடந்த ஆறு வாரங்களில் முதல் பரிசை பெறும் படங்கள் சரியான தேர்வுதானா  என மெல்லிய சந்தேக நூலிழை மனதில் ஓடும். ஆனா இந்தப்படம் சந்தேகத்துக்கு இடமில்லாம அனைவரது கவனத்தையும் பிரமாதமா கவர்ந்தது.

ஊடலுடனான கோபத்தில் மனைவி பெட்ரூம்ல படுத்திருக்கா.. அப்போ கணவன் கிட்டே இருந்து ஃபோன்.இவ எடுத்து 2 வார்த்தை கோபமா பேசிட்டு வெச்சிடறா..அவன் உடனே மெசேஜ் அனுப்பறான்.அடுத்த டைம் ஃபோன் பண்ணுனதும் அவ எடுத்துப்பேசும்போது மெல்ல மெல்ல தான் தீவிரவாதிகளால் தாக்கபட்ட ஹோட்டலில் இருப்பதாகவும், தன்னுடன் இருந்த அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் எனவும்,தான் மரண வாசலில் இருப்பதாகவும் பதட்டத்தோட சொல்றான்.

இறக்கும் தருவாயில் மனைவியுடன் கணவனுக்கோ,கணவ்னுடன் மனைவிக்கோ பேசும் வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும் என்பதே கதையின் ஒன் லைன். அதற்கான கதைக்களனாக டெரரிஸ்ட் சம்பவத்தை கையில் எடுத்தது படத்தின் வெற்றியை உறுதி செய்யவும் , கதையில் நம்பகத்தன்மையை ஏற்படுத்தவும்..

இந்த படத்துல நடிச்ச ஹீரோயின் நல்ல அழகான முகம். சடக் சடக் என மாறும் அம்சமான முக பாவனைகள். கோபம், ஊடல், காதல், பயம் , மரணத்தின் விளிம்பில் கணவன் இருப்பதும் வரும் பதட்டம் எல்லாமே கலக்கலான அம்சங்கள்.மேக்கப் அதீதமாக இல்லாமல் மிதமான இயற்கையான அழகு முகம் ஒரு பிளஸ் என்றால் அவரது பாடி லேங்குவேஜ்ஜூம் அற்புதம்.

சாகும் தருவாயிலும் கணவன்  பேசும் ஒரு டயலாக் கண் கலங்க வைத்தது,.
http://www.cinesnacks.in/tamil-movies/actress/Kajal-Agarwal-01/kajal-agarwal-photos-031.jpg
டாக்டரை கல்யானம் பண்ணுனது கூட ஒரு வகைல நல்லதா போச்சு.இப்போ முதல் உதவி சிகிச்சை எப்படி பண்றதுன்னு சொல்றியே.. நம்ம குழந்தையையும் டாக்டருக்கே படிக்க வைக்கனும்.

டைரக்டருக்கு சில வார்த்தைகள்

1. ஒரே ஒரு கேரக்டர் என முடிவு செஞ்சு ஷூட் பண்ணுனது பிரமாதமான ஐடியா என்றாலும் அதை ஒரே ஷாட்டில் சொல்லி இருந்தா இன்னும் பிரமாதமாய் இருந்திருக்கும்.கட் ஷாட்டே தேவை இல்லை. ஒரே ரூம். ஒரே கேரக்டர் எனும்போது குணா படத்தில் ஹாஸ்பிடல் சீனில் வரும் 4 நிமிட காட்சியில் கமல் அறையை சுற்றி வந்து பேசும்போது எப்படி கேமரா கோணங்கள் இருந்ததோ அப்படி இருந்திருந்தா கலக்கலா இருந்திருக்கும்.

2. அந்த சம்பவம் நடக்கறப்ப ஹீரோ ஹீரோயிண்ட்ட தீவிரவாத சம்பவம் பார்க்க டி வி யை ஆன் பண்ணு என சொல்றார்,அப்போ சிம்பாலிக் ஷாட் வைக்கும் உத்திக்காக கே டி வி ல ரோஜா படம் ஓடற மாதிரி காட்டி இருக்கீங்க. அந்த ஹோட்டல் சம்பவம் உண்மையா நடந்த அன்று அந்த படம் எந்த சேனல்லயும் இல்லை.

எனிவே ஹாட்ஸ் ஆஃப் தீபக்

பரிசு கொடுத்து முடிச்ச பிறகு எலிமினேஷன் ரவுண்ட் இது என்பதால் ஒருவர் எலிமினேட் பண்ணப்பட போகிறார் என அறிவித்தார்கள். அந்த மேடையில் 260 பேர் பார்த்துக்கொண்டிருக்காங்க. டி வி ல கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் அதைப்பார்க்கறாங்க.. அப்போ போய் ஒருவரை மேடைல அழைச்சு கை குடுத்து உங்களை எலிமினேட் பண்றோம்.. சாரி என சொல்றாங்களே...

இது எந்த விதத்தில் சரி...? நிறைகளை பொதுவாக எல்லோருக்கும் முன் சொல்லுங்கள். குறைகளை தனியாக கூப்பிட்டு சொல்லுங்கள்.தோல்விகளை ருசித்தவன் என்ற முறையிலும்,சக படைப்பாளி அவமானப்படுத்தப்படுகிறான்  என்ற தார்மீக கோபத்திலும் எனது கண்டனத்தை பதிவு செய்கிறேன்.

அப்புறம் ஒரு சந்தோஷமான நிகழ்வு நடந்தது. இந்த வாரம் முதல் பரிசு போட்டிக்கு ராமின்  அன்புடையீர்,தீபக்கின் ஒரு நாள் ரெண்டுமே சம தகுதி இருந்தாலும் கடைசில முடி இழையில் முன்னணி பெற்றதாக அறிவிக்கப்பட்டது ஒரு நாள் படமே... 

வாழ்த்துக்கள்.

திருப்பூர் ராம் எனது நண்பர். நான் இதுவரை நேரில் சந்தித்ததில்லை. செல் ஃபோன் அறிமுகம் மட்டும்.

Tuesday, March 01, 2011

நாளைய இயக்குநர் - சயின்ஸ் ஃபிக்‌ஷன் கதைகள் -3ம் கலக்கல் ரகம்

http://tv.burrp.com/images/s/t/6/t66b2mgg_1093_1_150.jpg
கலைஞர் + கலைஞர் டி வி நிர்வாகம் தெரிஞ்சோ தெரியாமலோ செஞ்ச உருப்படியான ஒரே நல்ல காரியம் நாளைய இயக்குநர் நிகழ்ச்சிதான்.27.2. 2011 அன்னைக்கு வானம் மேகமூட்டமா இருந்தது.. என்னடான்னு பார்த்தா பிரதாப் போத்தன் எல்லாரையும் ஊக்குவிக்கும்படியா பேசுனாரு.வழக்கமா “பப்ளிக்கா மட்டம் தட்டும் இவர் பாராட்டுனது ஆச்சரியம். ஆனா பாராட்டறப்பக்கூட அவர் ஏன் சிடு சிடுன்னு இருந்தாரோ தெரியல.. பாவம் அவரோட குடும்பம்...

1. எதையும் தாண்டி புனிதமானது. - அருண்ராஜ்

ரன் லோலா ரன், தமிழில் 12 B  ஆகிய படங்களில் வந்த  KNOT  தான்.ஒரு செகண்ட் லேட்டா கிளம்பி இருந்தா மனிதனின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? என்பதை அலசும் படம்.

7 நிமிடங்களில் இந்த கதையை இவ்வளவு அழகான திரைக்கதை ஆக்க யாராலயாவது முடியுமா?ன்னு பிரமிப்பா இருக்கு.ஒரு லவ் ஜோடி.. ஆக்சிடண்ட்ல மாட்டி பொண்ணோட உயிர் போயிடுது... ஹாஸ்பிடல்ல அந்த பையனைப்பார்த்து இன்னொரு பொண்ணு லவ் பண்றா...

இன்னொரு டிராக்ல அந்த ஆக்சிடெண்ட் நடக்காம இருந்தா....அதே பொண்ணு அவனை சந்திக்கவே இல்லை...

ஆக்சிடெண்ட் நடந்திருந்தா அவனை லவ் பண்ற பொண்ணு நீ இல்லாம நான் இல்லைங்கறா.. அதே ஆக்சிடெண்ட் நடக்காம இருந்தா அந்த பொண்ணு அவனை சந்திக்கவே இல்லை...

காதல் என்பது சந்திப்புகளில் வருவது..., நிகழ்வுகள் என்பது தற்செயலானதா? விதிப்படியா? போன்ற பிரமாதமான அலசல்களோட காட்சிப்படுத்தும் திறமை இந்த குறும்பட இயக்குநருக்கு கிடைச்சிருக்கு.
http://2.bp.blogspot.com/_7oDMkPZLPfQ/SWbVEnKLd3I/AAAAAAAAPYY/FvX9Y3RBzXc/s400/keerthi-sneha.jpg
இந்தப்படத்தில் கண்ட (கேட்ட) வசனங்கள்

1. THERE IS NO PAST IN LOVE  ( காதல்ல ,முடிஞ்சு போன காதல்னு எதுவுமே கிடையாது)

2. லவ்வுல ரெண்டே வகை தான்.1. நாம லவ் பண்றது நிஜம். 2. கடைசி வரை லவ்வே பண்ணாம இருக்கறது..

3.காதல்ங்கறது  நாம யார் கூட வாழ ஆசைப்படறோம்கறதுல இல்ல...நாம யார் இல்லாம வாழ முடியாதுன்னு நினைக்கறோமோ.. அது தான்.

இந்தப்படத்துக்கான ஒளிப்பதிவு, எடிட்டிங்க் எல்லாம் பக்கா.. இதுல 2 ஹீரோயின். நானும் பல படங்கள்லயும் ,குறும்படங்கள்லயும் பார்த்துட்டேன்.முதல் ஹீரோயினை விட 2வது ஹீரோயின் அழகா ,ஃபிகரா இருக்காங்க.. ஆனா அவங்களுக்கான காட்சிகள் கம்மி ..இது ஏன்? ( ஒரு ஆதங்கத்துல கேக்குறேன்.. ஹி ஹி )
http://vannitube.com/wp-content/uploads//2010/10/2029.jpg
கே பாலச்சந்தர் சொன்ன கமெண்ட் - காலம் தான் எல்லாவற்றையும் முடிவு செய்கிறது,, காதலையும் கூட .

ஹாய் மதன், பிரதாப் போத்தன் 2 பேரும் காமெடி பண்ணுனாங்க.. படம் பிரமாதமான KNOT. இன்னும் அழுத்தமா சொல்லி இருக்கலாம் அப்படின்னு ஒரு கருத்து சொன்னாங்க...ஒரு வேளை ஹீரோவை ஹீரோயின் டச் பண்ணாம விட்டதை சொல்றாங்களோ என்னவோ.. இந்தப்படத்துக்குத்தான் முதல் பரிசு குடுத்திருக்கனும்.ம்ஹூம்... தர்லை.சாகித்ய அகாடமி விருதுல இருந்து எம் பி பதவி வரை சர்ச்சையில் தான் ஓடும்போல.

2. உயிர்  - ராஜேஷ் 

டைட்டிலைப்பார்த்ததும் சாமி டைரக்ட் பண்ணி சங்கீதா அண்ணியா நடிச்ச உயிர் கதைதான் ஞாபகம் வந்தது. நல்ல வேளை. கதை வேற.

ஒரு ஆக்சிடெண்ட் நடக்குது. 4 பேர் மரணத்தின் வாசலில் இருக்காங்க.. அவங்க உடல் ரோட்ல இருக்கு.ஆனா அவங்களோட ஆத்மா வான் லோகத்தில் சென்று விவாதம் செய்யுது.. 4 பேர்ல ஒருத்தருக்கு மட்டும்தான் உயிர் பிழைக்க வாய்ப்பு இருக்கு.
ஒரு வயசான ஆள் நான் விலகிக்கறேன்னு அந்த கால சக்கரத்துல இருந்து குதிச்சிடறார்.அடுத்து ஒரு பணக்காரி மீதி இருக்கற 2 பேரையும் ஜெ கணக்கா விலை பேசறா.. கோபம் வந்த மெக்கானிக் கேரக்டர் அவளைப்பிடிச்சு தள்ளி விட்டுடறார்.மீதி இருக்கற 2 பேர்ல ஒரு கட்டத்துல மெக்கானிக் கீழே விழுந்துடறார். மிச்சம் இருக்கற ஒருத்தர் மட்டும் உயிர் பிழைக்கறார்.

இதை டைரக்ட் பண்ணுன ராஜேஷ்  அடிப்படைல சுஜாதா ரசிகர் போல.. அதே மாதிரி காட்சிப்படுத்துதல்ல பூர்ணம் விஸ்வநாதன் பாணியை கையாண்டிருக்கார்.மனிதனின் மரணத்துக்குப்பிறகு என்ன நடக்குது? விபத்தில் சிக்கும் மனிதர்களில் சிலர் இறந்துடறாங்க.. சிலர் பிழைச்சிக்கறாங்க.அது என்ன சூட்சுமம்?என்பது தான் கதையின் கரு.

வித்தியாசமான சிந்தனைதான்.ஆனா மியூசிக்கல் சேர் ஃபார்முலாவுல 4 உயிர்களும் விண்வெளில வாதாடுவதில் நம்பகத்தன்மை குறைவு.இந்தப்படத்துக்குத்தான் முதல் பரிசு கிடைச்சது.கே பி, ஹாய் மதன், பிரதாப் 3 பேரும் இந்த படத்தை ஆஹா ஓஹோன்னு புகழ்ந்தாங்க.
http://lh3.ggpht.com/_xDJKOay4yj4/SEIR-O0wAyI/AAAAAAAAACQ/tHcEJv83Ldg/madhan.jpg
ஆனா என்னைப்பொறுத்தவரைக்கும் ஒரு படம் பரிசு வாங்க 

1. வித்தியாசமான சிந்தனை 2. மனித மனங்களுக்கு ஒரு படிப்பினை 3. அனைவருக்கும் புரியும் வகையில் எளிமை 4.காட்சிப்படுத்துவதில் புத்திசாலித்தனம்

இந்த நான்கும் முக்கியம்னு நினைக்கறேன்.முதல் பாயிண்ட்டும், 4வது பாயிண்ட்டும் உயிர் படத்துல இருந்துது.ஆனா 4 பாயிண்ட்ஸூமே எதையும் தாண்டி புனிதமானது. படத்துல இருந்துது.

3.மறுபடியும் - கார்த்திக் பாலாஜி

சுபா எழுதுன மாலைமதி நாவலான பொன் ஜிதா வின் மையக்கருவை சுட்டு எடுத்த படம்.ஒரு சயிண்ட்டிஸ்ட் ஆராய்ச்சில செத்துப்போன மனிதனை உயிர்ப்பிக்கும் மருந்தை கண்டுபிடிக்கறாரு. ஆக்சிடெண்ட்டில் இறந்து போன ஒரு ஆளை உயிர் கொடுத்து எழுப்பி (!!??) விடறாரு.. செத்துப்போன ஆள் உயிரோட வர்றதைப்பார்த்த அவனது காதலி,குடும்பம் எல்லாருமே பயந்து ஓடறாங்க...அவன் மறுபடி ஒரு ஆக்சிடெண்ட்ல மாட்டி மறுபடியும் செத்துடறான். இப்படி செத்து செத்து விளையாடற காமெடி வேணாம்னு டாக்டர் அந்த ஆராய்ச்சியையே கை விட்டுடறாரு...

ஒரு நல்ல கதை மோசமான திரைக்கதையால் எப்படி நாசமாப்போகும்ங்கறதுக்கு நல்ல உதாரணம் இந்தப்படம்.

கே பி யின் கமெண்ட் - BIRTH IS BEAUTIFUL THING & ALSO DEATH IS BEAUTIFUL THING

இன்னோரு சந்தோஷமான மாற்றம்,இந்தப்படத்து டைரக்டரை மதன் தனியா கூப்பிட்டு சில பர்சனல் அட்வைஸ் பண்ணுனாரு...நிறைகளை உரத்து சொல், குறைகளை மெதுவாக ,தனியாக சொல் என்ற பாலிஸி போல.. குட்.
( நாம் பதிவுலகில் கமெண்ட் போடறப்ப பாசிட்டிவ் கமெண்ட்டை பப்ளிக்கா போட்டுட்டு குறை இருந்தா தனி மெயில்ல சொல்ற மாதிரி..) சிலர் இருக்கங்க மைனஸ் பாயிண்ட்டை கமெண்ட்டா போட்டுட்டு பாராட்டை மெயில் பண்ணுவாங்க..
கலைஞர் டி வில விமர்சனப்போட்டியும் இருக்கு.அடுத்த வாரத்து;ல இருந்து அனுப்பறவங்க அனுப்பலாம். ஞாயிறு காலை 10.30 ட்டூ 11.30.முகவரி

J V MEDIA
194,G3,GOLDEN NEST,3RD MAIN ROAD,SRI SAI NAGAR,VIRUKAMPAAKKAM,CHENNAI -92

டிஸ்கி -1 : இதே பதிவை காப்பி பண்ணி பேஸ்ட் பண்ணிடாதீங்க.. நான் ஏற்கனவே அனுப்பிட்டேன் நேத்தே..பரிசு ரூ 8000 மதிப்புள்ள எலக்ட்ரானிக் சாதனம்.

டிஸ்கி 2 : இந்த 3 படங்களை இயக்கிய இயக்குநர்கள் அல்லது அவர்கள் நண்பர்கள் படம் சம்பந்தப்பட்ட ஸ்டில்ஸ்,அல்லது டைரக்டர் ஸ்டில் அனுப்புனா இதே பதிவை எடிட் பண்ணி அட்டாச் பண்ணிடறேன்...Wednesday, February 09, 2011

நாளைய இயக்குநர் VS சுஜாதா கதைகள் - விமர்சனம்

http://i1.ytimg.com/vi/SXqp9v22yvU/0.jpg 
கலைஞர் டி வி ல வர்ற உருப்படியான புரோகிராம்னா அது நாளைய இயக்குநர்  நிகழ்ச்சிதான்.வளரும் இளம் இயக்குநர்களை ஊக்குவிக்கும்படியா குறும்படங்கள் வாரா வாரம் 4 போட்டு பரிசும் தர்றாங்க.கடந்த 3 வாரங்களா பிரபல எழுத்தாளர்களின் சிறுகதைகளை மையமா வெச்சு குறும்படங்கள் வர்றது வரவேற்கத்தக்க விஷயம்.

1. மழைக்காலங்கள் ( சுபா)  - இயக்கியது அருண்குமார்

ஒரு மனிதனின் வாழ்வில் பல்வேறு கால கட்டங்களில் சந்திக்கும் மழைக்காலத்தை பற்றி கவிதையா சொல்ல முயன்றிருக்கிறார்.கதையா படிக்கறப்ப இருந்த பாதிப்பு குறும்படத்துல வர்லை. பொதுவா இது சகஜமா நடக்கறதுதான்.ஏன்னா எழுத்தாளணின் பேனா எழுதிய விஷயங்களை படிக்கிற வாசகன் தன் கற்பனைக்கேற்றபடி இந்த சம்பவத்தை நினைச்சுப்பாத்துக்கறான்.. அதுவே திரையில் பார்க்கும்போது அவன் நினைச்ச பிம்பத்துக்கும், இயக்குநர் காட்டற பிம்பத்துக்கும் ஒரு இடைவெளி வந்துடுது.அதனாலதான் கதைகள் படங்களாக ஆகும்போது இயக்குநர் இரண்டு மடங்கு எச்சரிக்கையுடன் பணி ஆற்ற வேண்டி இருக்கு.பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் அருண்.

2.மஹா என்கிற மாடு   ( சுஜாதா) -இயக்கியது திருப்பூர் ராம்

அமரர் சுஜாதா எழுதுன குதிரை என்ற ஹாஸ்யக்கதையை கையில் எடுத்துக்கிட்ட நண்பர் திருப்பூர் ராம் அடிப்படையில் ஒரு கவிஞர்.கவிதைல கலக்குனவர் காமெடிக்கதைல கை வரிசை காட்டுனது பாராட்டப்பட வேண்டியது.

மூலக்கதைல ஹீரோவை குதிரை ஒண்ணு கடிச்சிடும்.அதனால அவன் சந்திக்கிற பிரச்சனைகளை காமெடியோட சொல்லி இருப்பாரு சுஜாதா.ராம் இந்த கதைல குதிரைக்குப்பதிலா மாடு கடிக்கற மாதிரி கதையை கொண்டு போயிட்டாரு.
http://2.bp.blogspot.com/_kRKT9yRa-tQ/TKhFePBWArI/AAAAAAAAA4E/bUPz5EGBHwc/s1600/Naalaya.jpg
ரசித்த வசனங்கள்

1. டாக்டர்.. என்னை ஒரு மாடு கடிச்சிடுச்சு.. கடிச்சுட்டு முறைச்சுது..

உங்க சதை டேஸ்ட்டா இல்லையோ என்னவோ..?


2. வாடா .. ஜூஸ் கடைக்குப்போலாம்..

சரி.. எனக்கு அருகம்புல் ஜூஸ் குடு...

அடப்பாவி மாடு கடிச்சதுல இருந்து நீ மாடாவே மாறிட்டு வர்றே....

3. சரி,, மாடு கடிச்ச ராசி எப்படி இருக்குதுன்னு போய்பார்ப்போம்..யோவ்.. கிளி ஜோசியரே...எனக்கு ஒரு சீட் எடுத்து ராசிபலன் சொல்லுய்யா..

பரவால்ல .. உங்களுக்கு கோமாதா சீட்டு வந்திருக்கு.

மறுபடியும் மாடா... எஸ்கேப்.....


இந்தக்கதைல மாடு கடிச்சவரோட நண்பனா வர்றவரோட நடிப்பு நல்லாருந்தது.மாடு கடிச்ச நபரோட நடிப்பு ஓவர் ஆக்டிங்க்.இயக்குநர் ஒவ்வொரு சீன்லயும் தடுமாறி இருக்கறது அப்பட்டமா தெரியுது.ஒரு சீன் முடிக்கறப்ப நாம இந்த சீனை பக்காவா எடுத்துட்டோம்னு நம்பிக்கை வரனும். ஆனா ராம் ஏனோ சுஜாதா கதைங்கறதால டென்ஷன் ஆகிட்டார் போல..

ஆனா ஒரு ஆச்சரியம் இந்த படத்துக்குத்தான் முதல் பரிசு கிடைச்சது.

3. குகை ( பி கே பி ) - இயக்கியது மணிவண்ணன்

தொல்பொருள்ராய்ச்சியாளர் தனது நண்பனும், பி ஏவுமான வில்லனை கூட கூட்டிட்டு போறார். போற வழில ஏற்படற வாக்குவாதத்தால வில்லன் ஹீரோவை போட்டுத்தள்ளிடறான்.மறுபடி ரிட்டன் ரயில்ல வர்றப்ப மற்ற ஃபிரண்ட்ஸ் மூலம் தான் கொலை செஞ்சவன் தன்னை நல்ல நண்பனா நினைச்சான் அப்படிங்கற மேட்டர் தெரிஞ்சு குற்ற உணர்ச்சி தாங்காம தற்கொலை பண்ணிக்கறான்.இதுதான் கதை. கதைல பெரிய மைனஸ் நம்பகத்தன்மை கொஞ்சம் கூட இல்லை.

பாராட்ட வேண்டிய ஒரே விஷயம் இந்த 5 நிமிஷ குறும்படத்துக்காக இயக்குநர் ராஜஸ்தான் பாலைவனம் போய் படம் பிடிச்சதுதான்.பொதுவாவே தமிழ் சினி ஃபீல்டுல ஒரு பழக்கம் உண்டு. கதை சரி இல்லைன்னா படம் பூரா ஃபாரீன் லொக்கேஷன்ஸ்ல எடுத்து மைனஸ்ஸை பிளஸ் ஆக்க ட்ரை பண்ணுவாங்க.அதைத்தான் நம்ம மணியும் பண்ணி இருக்கார். ஆனா எடுபடலை.
http://tamil.webdunia.com/entertainment/tvtime/news/0905/07/images/img1090507079_1_1.jpg
4.  அதே முகம் ஆசை முகம் ( சுஜாதா) - இயக்கியது ரங்கநாதன்

2 வெவ்வேறு கால கட்டங்களில் நடக்கும் கதைகள் எந்தப்புள்ளில எப்படி இணையுதுன்னு சொல்ற மேஜிக் ரியலிச கதை.ஒரிஜினல் சிறுகதையின் தலைப்பு ஒரு கதையில் இரு கதைகள்.

சரித்திர காலத்தில் நடக்கும் கதையில் இளவரசியாக நடிப்பவர் சுமார் ஃபிகர்தான். கலக்கலான ஃபிகராக போட்டிருக்கலாம்.( சம்பளம் ஓவரா கேட்டிருப்பாரோ?)அவர் ஷகீலா ரேஞ்சுக்கு லோ கட்  டிரஸ்ஸில் வருவது பாத்திரத்தின் கண்ணியத்தையே குறைத்து விட்டது.அதே போல் லிப்ஸ்டிக்கும் ஓவர் டோஸ்.

2வது கதையில் வரும் இளஞ்சோடிகளின் வாக்குவாதம் அழகு கவிதை.

பளிச் வசன மின்னல்

டியர்.. உன் எண்ணங்கள்ல வண்ணம் (கலர் ) இல்லை.. எல்லாம் பிளாக் & ஒயிட்டாவே இருக்கு.. எனக்கு நீ சரிப்பட்டு வரமாட்டே..

இயக்குநர் ரொம்ப மெனக்கெட்டு பண்ணி இருந்தார்.இதுக்குத்தான் முதல் பரிசு கிடைக்குனு நினைச்சேன்.ஆனா ஹாய் மதன்  2 கதையும் எந்தப்புள்ளில இணையுதுன்னு நீங்க  காட்டவே இல்லைன்னு காரணம் சொன்னார். அவர் சுஜாதாவோட ஒரிஜினல் கதையை படிக்கல போல.

அப்படி காட்ட வேண்டிய அவசியம் இல்ல. ஏன்னா அப்படி ஒரு சம்பவம் நடக்க சான்ஸ் இல்ல. சும்மா பார்வையாளரை திகைப்பில் ஆழ்த்த கணடறியப்பட்ட உத்தி அது.

சரி விடுங்க , ரசனை என்பது மனிதனுக்கு மனிதன் மாறுபடும் தன்மை உடையது.

TASTE DIFFER FROM PERSON TO PERSON.

Tuesday, February 01, 2011

நாளைய இயக்குநர் - 30 01 2011 - விமர்சனம்

http://2.bp.blogspot.com/_sRZFTVNAIsk/TKp7ZucvaFI/AAAAAAAAAVY/Rpmc36kNBLs/s320/kalaingar-Tv-Naalaya-Iyakkunar_tamilkey-250x130.jpg 
முதல் படமா பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதுன சிறுகதையை குறும்படமா எடுத்த சத்ய சந்தரனோட சொல்ல மாட்டேன் படம் போட்டாங்க. அவர் அமரர் சுஜாதாவோட ரசிகர் போல . வசனங்கள் எல்லாம் ரொம்பவே ஷார்ப்.ஒருபேஷண்ட் டாக்டர்ட்ட வர்றான். சார்.. நான் எது சொன்னாலும் நெகடிவ்வா செய்யற கேரக்டர்ங்கறான். சரி உங்க பிரச்ச்னை என்ன?ன்னு கேட்டா சொல்ல மாட்டேன் அப்ப்டிங்கறான்.. சரி சொல்லாதீங்கன்னதும் சரி டாக்டர்.. சொல்றேங்கறான்.. இப்படி காமெடியா போற கதைல டாக்டரோட லோடு செய்யப்பட்ட ரிவால்வரை பேஷண்ட் கைல எடுக்கறான்.. டாக்டர் பதட்டத்துல அவன் கேரக்டர் ஞாபகம் இல்லாம டேய்.. கன் லோடு பண்ணீ இருக்கு சுட்டுடாதேங்கறார். டப்புன்னு சுட்றான்..

ஹீரோ நடிப்பு வசனம் 2-ம் ஓக்கே.. சுமார் டைரக்‌ஷன்.

2.  சா அறிவழகன் எழுதுன கதை ..டைட்டில் மரண அடி.பிரமாதமான டைரக்‌ஷன்.கதையோட KNOT  என்னன்னா சுடுகாட்டு வெட்டியான் தன்னோட மகனை பரம்பரைத்தொழில் செய்ய பணிக்கறான்.. அவன் அதைக்கேக்காம வேலை வேலைனு அலையறான்.கடைசில அப்பா இறந்ததும் வேற வழி இல்லாம குலத்தொழிலை செய்யறான்..

இந்தக்கதைல 2 விஷயம் பாராட்டலாம். நம்ம அப்பா இருக்கறவரை நமக்கு அவரோட மதிப்பு தெரியறதில்லை.அவர் இறந்த பிறகுதான் அவரோட பெருமையை உணர்றோம். (எனக்கு அப்பா தவறிட்டார்)அதை ரொம்ப இயல்பா எடுத்திருக்காங்க.இன்னொன்னு குலத்தொழில் விஷயம்.நம்ம அப்பா பண்ணுன தொழிலை செய்ய நாம கூச்சப்படறோம்.. அப்புறம் முட்டி மோதி வேற வழி இல்லாதப்ப அதை ஏத்துக்கறோம்..

படத்துல கலக்கலான வசனங்கள்

1. எல்லாருமே பல்லக்குல ஏறி உட்கார்ந்துட்டா அப்புறம் பல்லக்கை சுமக்குறது யாரு?

2. அப்பா.. எதுக்கு உன் கதையை எல்லாம் என் கிட்டே சொல்றே..?

வேற யாரு என் பேச்சை கேக்கறா..?

3. ஒரு மனுஷன் 100 பேருக்கு நல்லது பண்ணீ இருந்தாலும் 4 பேருக்காவது கெட்டது பண்ணாமயா இருந்திருப்பான்..?அதை மனசுல வெச்சுக்கிட்டுத்தான் இந்த வெட்டியான் வேலையை செய்ய முடியும்..

4. வெட்டியான் பையன் வேலை கேட்டு நடையா நடக்கிறானே.. அவனுக்கு ஒரு வேலை போட்டுத்தர்றது?

அது சரி.. அப்புறம் வெட்டியான் வேலையை யார் செய்யறது?இவனுங்களை எல்லாம் மேலே வரவே விடக்கூடாது.

படத்துல ரெண்டே 2 கேரக்டர்.. அப்பா ,பையன்  2 பேர் நடிப்பும் அருமை. கேமராவும் கலக்கல். இந்தப்படத்துக்குத்தான் முதல் பரிசு குடுப்பாங்கன்னு நினைச்சேன்...ஆனா 2வது பரிசுதான் கிடைச்சது.

http://vannitube.com/wp-content/uploads//2010/09/208.jpg
3. அருள் வரதனோட சத்யம் படம் அகதா கிறிஸ்டி எழுதுன WHO IS THE WITNESS  நாவல்ல வர்ற ஒரு சம்பவத்தை அடிப்படையா வெச்சு எழுதப்பட்ட சிறுகதை.

ஒரு கேரளா கிராமம்.. சுடுகாடு.ஒரு ஆள் வெயிட் பண்றான். போலீஸ் ஆஃபீசர் வர்றார்.. யாரப்பா நீ?ன்னு விசாரிக்கறாரு.. 20 வருஷத்துக்கு முன்னே காலேஜ் படிக்கறப்ப பெரிய ஆள் ஆனதும் இந்த தேதில இன்ன நேரத்துல சந்திக்க்றதா பிளான்..அப்படின்னு சொல்ல சரின்னு அவர் கிளம்பி போறாரு. போலீஸ் கூட்டம் வந்து அவனை கைது பண்ணுது. அவன் போலீசால் தேடப்படற குற்றவாளி.. அந்த போலீஸ் ஆஃபீசர்தான் அவனோட நண்பன்.. இந்த ட்விஸ்ட் எதிர்பார்த்ததுதான் என்றாலும் சுவராஸ்யமாவே இருந்தது.. ஆனா 2 பேருக்கும் நடிப்பு சரியா வர்லே.. படத்துல பாரட்ட வேண்டிய அம்சம் கேமரா கோங்கள்.

4. ஆனந்த விகடன்ல கதாவிலாசம் எழுதி இலக்கிய உலகை ஒரு கலக்கு கலக்கின எஸ் ராம கிருஷ்ணன் எழுதுன கதையை வீட்டுக்கணக்குங்கற டைட்டிலோட படமாக்குன அருண் பிரசாத்துக்கு முதல் பரிசு.

கதை என்ன? அப்பா ஒரு உருப்படாத கவிஞன். சினிமாவுக்கு பாட்டு எழுதறேன்.. சான்ஸ் கிடைக்கும்னு கனவோட இருக்கற உதவாக்கரை. அவனோட மனைவி வேலைக்குபோய் சம்பாதிச்சு குடும்பததினை பாத்துக்கறா. (மனைவியோட முகம் ஒரு ஷாட்ல கூட காட்டாம விட்டது டைரக்‌ஷன் டச்..)அவனுக்கு ஒரு மக. அந்த சின்னப்பொண்ணை கடைக்கு அனுப்பி ஓ சி ல சிகரெட் வாங்குறது.. பக்கத்து வீட்ல அஞ்சு பத்து கடன் வாங்குறதுன்னு இருக்கான்.. ஒரு சமயம் ஹவுஸ் ஓனர் காலி பண்ண சொல்லிடறார். அவன் குடும்பத்தோட காலி பண்ணிட்டு போயிடறான்.காலி பண்ணுன வீட்ல அந்த  சின்னப்பொண்ணு அப்பா யார் கிட்டே எவ்வளவு கடன் வாங்கி இருக்கார்னு சுவர்ல எழுதி வெச்சிருக்கா.

கேக்க சாதாரணமா இருக்கற இந்தக்கதைல அந்த சின்னபொண்ணோட நடிப்பு பிரமாதமான தூணா படத்துக்கு கை குடுத்திருக்கு...வெல்டன்..
எங்கப்பா ஒரு நாள் பெரிய ஆளா வருவாரு..உங்க கடனை எல்லாம் அடப்பாரு என எல்லோரிடமும் சலிக்காமல் கூறும்  நடிப்பு கலக்கல்.