Showing posts with label KALAIGNAR TV. Show all posts
Showing posts with label KALAIGNAR TV. Show all posts

Monday, September 19, 2011

நாளைய இயக்குநர் - கீர்த்திக்கு நோஸ்கட் விட்ட கே பாக்யராஜ் - விமர்சனம்

நாளைய இயக்குநர் ஆரம்பித்த நாள் முதல் கீர்த்தி செஞ்சுட்டு வர்ற கேலிக்கூத்துக்கள் உலகப்பிரசித்தம்... இயக்குநர்களாக வரும் இளைஞர்களிடம் அதி புத்திசாலித்தனமாக கேள்வி கேட்பதாக நினைத்து லூஸ்தனமாய் கேள்வி கேட்பது.. பின் வழிவது .. ஆனால் ஹாய் மதனோ, பிரதாப் போத்தனோ செய்யாத ஒரு வேலையை கே பாக்யராஜ் செஞ்சாரு.. அது என்னான்னா.......

1. ஸ்டீபன் - 1 4 3

கீர்த்தி - வாங்க ஸ்டீஃபன்.. உங்க படத்தோட பேரு என்ன?

1 4  3

லவ் சப்ஜெக்ட்டா?

கே பாக்யராஜ் - ஏம்மா , கீர்த்தி அவர் தான் தெளீவா டைட்டில் பேரை சொல்லிட்டாரு.. அப்புறம் என்ன லவ் ஸ்டோரியானு ஒரு கேள்வி.. ?

. சாரி. சார்.. தெரியாம கேட்டுட்டேன்.. 

படத்தோட கதை கவிதையா சொல்லப்பட்டிருந்தது./.. 

ஸ்கூல்   ஒரு கிறிஸ்டீன் டீச்சரை இந்து வாத்தியார் காதலிக்கிறார். அதை வெளிப்படுத்தும்போது. சாரி.. எனக்கு வீட்ல வேற அலையன்ஸ் பார்த்தாச்சுன்னு சொல்லி எஸ் ஆகறாங்க.. 

பல வருடங்களுக்குப்பிறகு ஒரு பேங்க்ல அவங்க 2 பேரும் மீட் பண்றாங்க. வாத்தியாருக்கு இன்னும் கல்யாணம் ஆகலை.. அந்த டீச்சர் காரணம் கேட்கறாங்க.. அப்போ கரெக்டா அவருக்கு டோக்கன் நெம்பர் வரிசை வந்துடுது.. நெம்பர் 143 .. எனக்கான அழைப்பு இப்போ வந்துடுச்சுனு சொல்லி அவர் எழறார்.. 

ரொம்ப நீட்டா கதை சொல்லப்பட்டிருக்கு..

1980 கதை நடக்கறதா காட்டுனாலும் பீரியட் ஃபிலிமுக்கான மெனக்கெடல் இருந்துச்சு.. 

இயக்குநரிடம் சில கேள்விகள்

1. எனக்கு தெரிஞ்சு 1 4 3 என்பது 1994 தான் புழக்கத்துக்கு வந்தது.. ஆனா கதை நடக்கும் கால கட்டம் 1980...

2. ஹீரோயின் ஸ்டெல்லா கிறிஸ்டியனா இருந்தாலும் இந்து போலவே அழகாக பொட்டு வெச்சு பூ வைத்திருக்கிறார்.. எப்டி? ( அவர் தீவிர மதப்பற்று உள்ளவராக காட்டி விட்டதால் சமாளிஃபிகேஷனுக்கு வழி இல்லை.. )

3. அந்தப்பள்ளியில் உள்ள மாணவர்கள், மாணவிகள் , டீச்சர் என எல்லோருக்கும்  1 4 3 பற்றி தெரிந்திருக்கிறது, ஆனால் ஹீரோ வாத்தியாருக்கு மட்டும் தெரியவில்லை.. அவர் என்ன சின்னத்தம்பி பிரபுக்கு சின்னத்தம்பியா?

ரசிக்க வைத்த காட்சி - தனது காதலை சொன்ன வாத்தியார் டீச்சரிடம் வேணும்னா எங்க  அம்மா அப்பாவை உங்க கிட்ட வந்து பேசச்சொல்றேன்.. என பம்முவது.


கே பி கமெண்ட்  -  எனக்கு வீட்ல வேற அலையன்ஸ் பார்த்தாச்சுன்னு சொல்லிடறதோட முடிச்சிருக்கலாம், எதுக்காக அந்த டீச்சர் தான் கிறிஸ்டியன் .. அவர் ஹிந்துன்னு எக்ஸ்ட்ரா பிரச்சனையை கிளப்பனும்..?மத்தபடி படம் நீட். இசை அழகு.. மாண்டேஜ் ஓக்கே... 


2. பாரதி பாலா - அவள் பெயர் அழகி..

ஓப்பனிங்க் ஷாட்ல ஒரு ஃபிகர் அலங்காரம் பண்ணிட்டிருக்கறதை ஸ்டெப் பை ஸ்டெப்பா காட்டறாங்க.. பார்க்கற ஆடியன்ஸ் பாப்பாவுக்கு மேரேஜ் போலன்னு நினைக்க வைக்குது.. ஒரு ஃபிளாஸ்பேக்.. பாப்பா ஒரு காலிப்பையலை லவ் பண்ணுது. வீட்ல முறைப்பையனை கட்டிக்க சொல்றாங்க.. அவளோட லவ்வர் வீட்டை விட்டு ஓடிப்போயிடலாம்.. உன் கிட்டே இருக்கற பணம் , நகை எல்லாம் எடுத்துட்டு வந்துடுங்கறான்

இந்த பொண்ணுங்களுக்கு அறிவே இல்லை.. எத்தனை படம் பார்த்தாலும் கரெக்ட்டா ஒரு கெட்டவன் கிட்டே மாட்டிக்குவாங்க.. நல்ல ஆணை மனம் புண் படற மாதிரி பேசுவாங்க

அவ்வளவுதான். அவன் மேரேஜ் பண்ணி அவளை அந்த மாதிரி இடத்துல வித்துடறான். இதெல்லாமே குறிப்பால் உணர்த்தப்படுது.. இப்போ அவ அலங்காரம் பன்றது மேட்டருக்கு ரெடி ஆக.. ஒரு குரல் கேட்குது.. ஏம்மா பொண்ணு ரெடியா? கஸ்டமர் ரெடி

இந்தப்படத்துல ஹீரோயின் செம ஃபிகர்.. நல்ல அமைதியான நடிப்பு.. அவளோட மாமன்  பையனா வர்றவர் காமெடி நடிப்பில் கலக்கறார்.. பொத்தி வெச்ச மல்லிகை மொட்டு பாட்டுக்கு அவர் பொண்ணுக்கு வளையல்போட்டு விடுவதும், அதற்கு ஹீரோயின் காட்டும் ரி ஆக்ஷனும் கலக்கல்..

கே பி கமெண்ட் - ஹீரோயின் செலக்ஷன் ஓக்கே.. பிளசண்ட் & இன்னொசண்ட்
பொண்ணுக்கு மாமா பிடிக்கலைன்னு சொல்லத்தேவை இல்லை.. கதையோட நாட் ஹீரோயின் காதலனை பேஸ் பண்ணித்தானே இருக்கு?



3.  சஞ்சய் - சத்தியம்

ஒரு போலீஸ் ஜீப்ல 3 கொலைக்குற்றவாளீகளை கூட்டிட்டு போறாங்க.. ஒரு எம் எல் ஏவை கொன்ற கூலிப்படைகள் , யார் ஏவியதுன்னு சொல்ல மாட்டேங்கறாங்க.. 

ஒரு அடர்ந்த காட்டுப்பகுதில ஜீப் நிக்குது.. 3 பேர்ல ஒருத்தனை இன்ஸ்பெக்டர் தனியா கூட்டிட்டு போறார்... கேமரா அவங்க பின்னால போகலை.. ஜீப்லயே காட்சி நிக்குது.. டுமீல்னு ஒரு குண்டு வெடிக்கற சப்தம் கேக்குது... 

அவ்ளவ்தான் அந்த இன்ஸ்பெக்டர் மட்டும் ரிட்டர்ன் வர்றார்.. இப்போ 2 வது ஆளை கூட்டிட்டு போறார்.. கொஞ்ச நேரத்துல அதே போல் டுமீல்னு ஒரு குண்டு வெடிக்கற சப்தம் கேக்குது.. இப்பவும் அந்த இன்ஸ்பெக்டர் மட்டும் ரிட்டர்ன் வர்றார்...இப்போ 3வது ஆளுக்கு ஈரக்குலை எல்லாம் நடுங்குது.. 

கால்ல விழுந்து கதறிடறான்.. லோக்கல் வி பி ஒருத்தர் தான் கொலை செய்யத்தூண்டுனதா ஒத்துக்கறான்.. இப்போ இறந்ததா நினைக்கப்பட்ட 2 பேரும் உயிரோட வர்றாங்க. இப்போ தான் உண்மை தெரியுது,.. என்கவுண்ட்டர் நடக்கவே இல்லை.. உண்மையை வரவைழைக்க என்கவுண்ட்டர் பயம் மட்டும் ஊட்டப்பட்டிருக்கு.. 

போலீஸ் ஜீப்பில் கைதிகள் கலாய்த்த வசனங்கள்

1. சார்..போர் அடிக்குது பாட்டுப்போடுங்க.. அட்லீஸ்ட் கிரிக்கெட் ஸ்கோராவது போடுங்க கேட்போம்..

2. என்ன சார்.. மிரட்றீங்களா? 60 வயசு வரை வாழ்ந்து என்ன பண்ணப்போறேன்? ஐஸ்வர்யாராய் கூட குடும்பமா நடத்தப்போறேன்? உங்கே சுடுங்க சர்ர்.. இங்கே சுடுங்க.. 

3.  .. இவர் பெரிய ராகவன் பி எஸ்.. கால் பண்றார்... டேய் போடா..... 

இயக்குநரிடம் சில கேள்விகள்

1. கான்ஸ்டபிளா வர்றவர் அவ்ளவ் லீனா மனோபாலாவுக்கு தம்பி மாதிரி இருக்காரே? கொஞ்சம் பாடி உள்ள ஆளை போட்டிருக்கக்குடாதா?

2. என்கவுண்ட்டர் நாடகத்துல குண்டு சத்தம் மட்டும் தான் கேட்குது.. !! அய்யோ என மனித அலறல் சத்தம் கேட்கலை.. துப்பாக்கி முனைல மிரட்னா அவன் அலறிட்டு போறான்.. இன்னும் எஃபக்டா இருந்திருக்குமே?

கே பி கமெண்ட் - கொலைக்கைதிகளா ஜீப்ல அழைச்சிட்டு போகப்படறவங்க ஒரு பயம் இல்லாம ஜாலியா கமெண்ட்  அடிச்சுட்டே வர்றாங்க.. அது எப்படி?

சுந்தர் சி - நீங்க கீர்த்திட்ட பேசறப்போ ஜெயிச்சுடுவீங்களா?ன்னு கேட்டதுக்கு ம் ட்ரை பண்றோம்.. பார்க்கலாம்னு அசால்ட்டா பதில் சொன்னீங்க.. அது தப்பு நம்மால முடியும்கற கான்ஃபிடண்ட்டோட உழைக்கனும்,, அது லைஃப்லயும் சரி.. சினிமாலயும் சரி.. 


4. ராமானுஜம் - மீண்டும் ஒரு குழந்தை


 ஒரு ஆகாவளி தன்னோட நோயாளி அம்மாவை ஹாஸ்பிடல்ல நைஸா விட்டுட்டு எஸ் ஆகிடறான்..அந்தம்மாவுக்கு மேட்டர் தெரில.. பையன் வருவான் வருவான்னு வெயிட்டிங்க்.. ஹீரோ வந்து என்ன மேட்டர்னு கேட்டா அந்தம்மா இந்த சீட்டை என் பையன் என் கிட்டே கொடுத்து இங்கே விட்டுட்டு போயிருக்கான், வந்துருவான்குது. 

அந்த சீட்ல பையனோட ஃபோன் நெம்பர் எழுதப்பட்டு இந்தம்மா இறந்துட்டா மட்டும் இந்த நெம்பருக்கு ஃபோன் பண்ணுங்கன்னு எழுதப்பட்டிருக்கு,,

மேட்டர் தெரிஞ்சதும் அம்மா ஷாக் ஆகிடறாங்க.. என்னை ஏதாவது அநாதை ஆசிரமத்துல சேர்த்து விட்டுடுங்கனு சொல்றாங்க.. ஹீரோ தன்னோட வீட்டுக்கே கூட்டிட்டு போறார்.. எனக்கு 2 குழந்தைங்க. 3 வதா நீங்களும் இருந்துடுங்க எங்களுக்கு குழந்தையாங்கறார்..

இயக்குநருக்கு சில கேள்விகள்

1. 50 லட்சம் பங்களாவில் வசிப்பவர் காரிலோ, பைக்கிலோ வராமல் ஏன் ஆட்டோவில் வர்றார்?


2. அந்தம்மாவை வீட்டுக்கு கூட்டிச்செல்ல முடிவு எடுத்தது ஓக்கே, அதைப்பற்றி ஃபோன்ல அவர் மனைவிக்கு தகவலாகக்கூட ஏன் சொல்லலை?

படத்தில் மனம் தொட்ட வசனங்கள்

1. எத்தனை வேலை இருந்தாலும், பிஸியா இருந்தாலும் பெத்தவங்களை காப்பாத்தறது முக்கியக்கடமை

2. லைஃப்ல எல்லாருமே குழந்தைகளா வர்றோம், அப்புறம் பெற்றோர் ஆகறோம், மீண்டும் குழந்தைகளா ஆகறோம்... குறிப்பிட்ட வயசுக்குப்பிறகு..

கே பி கமெண்ட் - படம் டாக்குமெண்ட்ரி எஃபக்ட் தருது.. ஒரு சாதாரண கம்பவுண்டர் அவ்ளவ் மெச்சூரிட்டியா வசனம் பேசறது நம்பற மாதிரி இல்லை

ஆட்டோ டிராவல் பண்றப்ப லைடிங்க் எஃபக்ட் அழகா கொடுத்திருக்காங்க.. டப்பிங்க் ஆர்ட்டிஸ்ட் அந்த வயசான அம்மாவுக்கு நல்லா குரல் குடுத்திருக்காங்க.. 

அம்மாவா நடிச்சவங்க ரொம்ப பழைய நடிகை.. புதிய தலை முறை மட்டும் அல்லது முதிய தலைமுறைக்கும் நாளைய இயக்குநர் நிகழ்ச்சி ஒரு ஏணியா இருக்கு.. 

மேலே சொன்ன துல முதல் படத்துக்கு சிறந்த படம் அவார்டும், சிறந்த நடிக்கான விருது அவள் பெயர் அழகி ஹீரோயினுக்கும், சிறந்த டெக்னீஷியனுக்கான விருது கடைசிப்படத்துல ஒளிப்பதிவாளருக்கும் கிடைச்சது. 

Living DOLL

Monday, August 15, 2011

நாளைய இயக்குநர் - மெகா ஃபைனல் - காமெடி கதைகள் - விமர்சனம்

நாளைய இயக்குநர் நிகழ்ச்சில வாரா வாரம் ஆர்டினரியா கதைகள் வர்றப்போ ஹாய் மதன் எப்படி கமெண்ட் தந்தாரோ அதே பாணில தான் இப்போவும் ஃபாலோ பண்றார்.ஷூட்டிங்க் எடுத்தது ஒரே நாளாக இருந்தாலும் ஃபைனல்ல வர்ற 9 கதைகளும் வாரா வாரம் ம் 3 கதைகள் வீதம்  3 வாரம் ஒளிபரப்பாகி 4 வது வாரம் தான் எது பெஸ்ட்னு செலக்‌ஷன் ஆகும். இவர் அந்தந்த வாரத்துல வந்த 3 கதைகள்ல 2 தேறாதுன்னு ஓப்பனா சொல்லிடறாரு.. இதனால எது ஃபர்ஸ்ட் வரப்போகுதுன்னு கெஸ் பண்ணிட முடியும்.


அதே மாதிரி டிரஸ்ஸிங்க் சென்ஸ் 10% கூட இல்லாத மொக்க ஃபிகர் தொகுப்பாளினி படம் எடுத்த ஒவ்வொரு குறும்பட இயக்குநர்ட்டயும் போர் அடிக்கற மாதிரி ஒரே கேள்வியைத்தான் கேட்கறாரு. அது - உங்க படம் எப்படி வந்திருக்கு? வின் பண்ணிடுவீங்கன்னு நம்பிக்கை இருக்கா? இது எப்படி இருக்குன்னா தியேட்டர்ல , இண்ட்டர்வெல்ல ,வெளில ,கேண்ட்டீன்ல தெரிஞ்சவங்க பார்க்கறப்ப என்ன பேசறதுன்னு தெரியாம அப்புறம் தியேட்டருக்கா?  படத்துக்கா?  என அசடு வழிவது போல் தான் இது. பாப்பாவுக்குத்தான் இதெல்லாம் தெரியலைன்னா இயக்குநர் இதை கரெக்ட் பண்ணக்கூடாதா? ( ஐ மீன்  பாப்பாவோட இந்த ஹேபிட்டை. )



1. தமிழ் சீனு -  7 1/2  ( ஏழரை )

குடுகுடுப்பைக்காரன் எதேச்சையா ஒரு வீட்ல வந்து “ உங்களுக்கு ஏழரை ஸ்டார்ட் ஆகிடுச்சு, இனி கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணம் எல்லாம் கோவிந்தாதான்,ஓட்டாண்டி ஆகப்போறீங்கன்னு சொல்றான். அதே மாதிரி சம்பவங்கள் நடக்குது.. வீட்டுக்கு டொனேஷன் கேட்டு வந்தவங்களுக்கு 100 ரூபா குடுக்கறதுக்கு பதிலா அப்பா ஃபோன்ல பேசறப்ப நடந்த மிஸ் அண்டர்ஸ்டேண்டிங்க் கால்குலேஷன் கான்வெர்சேசனால் ( அடேங்கப்பா. எம்புட்டு நீளமான வாக்கியம் !!) லட்ச ரூபாயை தாரை வார்த்த மகன் பயந்து ஊரை விட்டே ஓடிறாரு.


7 1/2 வருசங்கள் கழிச்சு மகன் ரிட்டர்ன் வர்றப்ப வீட்ல அம்மா தான் இருக்காங்க, அப்பா அவுட் ஆஃப் ஸ்டேஷன். அப்போ ஒரு ஃபோன் வருது. அப்பாவை கடத்தி வெச்சிருக்கோம், 20 லட்சம் கொடுத்தா ஆளை மீட்டுக்கலாம்னு. உடனே ரூ 20 லட்சம் கொண்டு போய் ஸ்மெக்ளிங்க் பார்ட்டிக்கிட்டே கொடுத்தா ஆள் மாறாட்டம், கடத்தப்பட்டது இவரோட அப்பாவே இல்லை. பக்கத்து ஊர் பிரசிடெண்ட். 


அப்பா வந்தா அடிப்பார்னு மகன் இப்பவும் ஆள் எஸ்கேப்.. 

பல லாஜிக் மீறல்களோட கதை இருந்தாலும் ஜாலியா போச்சு.. முதல் பரிசு வாங்க வாய்ப்பில்லை. ஆனா படம் ஓக்கே ரகம் தான்

ரசித்த வசனங்கள்

1. ஹூம், நல்லாருந்த குடும்பத்துல குடுகுடுப்பை நாதஸ்வரம் வாசிச்சுட்டு போய்ட்டானா?

2. மணி எவ்ளவ்ம்மா?       7 1/2 


என்னது? எட்டரை  ஆகிடுச்சு?

சாரி, வாட்ச் நின்னுடுச்சு போல.. 

3. ம்க்கும், ஏழரை லட்சம் கடன் பாக்கி , இந்த லட்சணத்துல அவர் கைல துப்பாக்கி.. விளங்கிடும். 

இயக்குநரிடம் சில கேள்விகள்

1. 20 லட்சம் பணயப்பணம் கேட்ட அடுத்த நொடியே வீட்டின் பீரோவில் இருந்து அவ்வளவு பணமும் ரெடி பண்ணிடறாங்க. எப்படி? இந்த காலத்துல ஆ ராசா வீட்ல கூட அவ்வளவு பணம் கேஷா இருக்காதே? பேங்க்ல தானே இருக்கும்?

2. பொதுவா பணயப்பணம் கை மாறும்போது கடத்தப்பட்ட ஆள் இருக்காரா அங்கேன்னு செக் பண்ணுவாங்க.. அது பண்ணலை.. ஏன்?

3. அப்பாவை கடத்திட்டாங்கன்னுதுமே   அவர் செல் நெம்பருக்கு ஃபோன் போட்டு கிராஸ் செக் பண்ணவே இல்லையே?


இதுல அப்பா கேரக்டர்ல  ஸ்டண்ட் நடிகர் அழகு நடிச்சிருந்தார்.. இந்தப்படத்துக்கு பிரில்லியண்ட் காமெடின்னு பிரதாப்போத்தன் பாராட்னார்.ஹாய் மதன் படம் ஓக்கே, ஆனா இன்னும் காமெடி நல்லா ட்ரை பண்ணி இருந்திருக்கலாம்னு கமெண்ட் பண்ணாரு.



2. ராகேஷ் - ஹீரோ 

சின்ன வயசுல   இருந்து ஸ்பைடர்மேன், சூப்பர்மேன்னு காமிக்ஸ் கதைகள் படிச்சு வளர்ற ஒரு பையன் ஒரு கட்டத்துல பூமியை  வேற்றுக்கிரக வாசிகள் ஆக்ரமிச்சுட்டாங்க என்றதும் ஒரு உயரமான கட்டிடத்துல இருந்து தொப்னு குதிக்கறாரு. அவர் சூப்பர் மேன் ஆனாரா? சுடுகாட்டுப்பொணம் ஆனாரா? என்பது சஸ்பென்ஸ்.
ஃபேண்டசி வகையறா படம் என்றாலும் காதில் பூ சுற்றும் கதை தான். காமிரா ஆங்கிள்கள், ஹீரோவின் பாடி லேங்குவேஜ் எல்லாம் கந்த சாமி விக்ரம் நினைவுபடுத்தியது.


நினைவில் நின்ற வசனங்கள்


1. மரணம் தான் எல்லா விஷயங்களுக்கும் முடிவு என்றால் அது என் விஷயத்தில் தொடக்கமா? முடிவா?ன்னு தெரியலை. 

2. எப்போதெல்லாம் உலகை இருள் சூழ்கிறதோ அப்போதெல்லாம் ஒரு ஒளிக்கீற்று வந்து பூமியை காப்பாற்றும் அரிய சக்தியை உருவாக்கும்..

இயக்குநரிடம் சில கேள்விகள்

1. சூப்பர்மேன் ஆனதா கற்பனை பண்ணிக்கும் ஹீரோ எடுத்ததும் 30 மாடிக்கட்டிடத்துல இருந்து குதிச்சுப்பார்த்து ஏன் ரிஸ்க் எடுக்கனும்? 10 அடி தூரத்துல இருந்து முதல்ல குதிச்சிருக்கலாமே?

2. வேற்றுக்கிரகவாசிகள் பூமியை சூழ்ந்துட்டாங்க என்றதும் மக்களின் பதட்டம் + போலீஸ் ஆக்‌ஷன் சரியா காட்டலையே?


இதுக்கு கமெண்ட் சொன்ன ஹாய் மதன் ஒரே ஷாட் அடிக்கடி ரிப்பீட் ஆகுதுன்னார். நோ கிளாரிட்டி அப்டின்னு பிரதாப் சொன்னார். இந்தப்படமும் முதல்ல வராது. 



3. கல்யாண் - புதியவன் 

இது செம கலக்கலான கதை. ஒருத்தன் பைக்ல போறான், வழில ஒரு ஆள் லிஃப்ட் கேட்கறான். அவனும் இவனை ஏத்திக்கறான், வழி நெடுக லிஃப்ட் கேட்டவன் தொண தொணன்னு பேசிட்டே வர்றான்.. லிஃப்ட் கொடுத்தவனுக்கும் சரி , படம் பார்க்கறவங்களூக்கும் சரி செம கடுப்பா இருக்கு. 

பாதி வழிலயே இறக்கி விடறான்.. அப்புறம் இவன் சாரி கேட்டு இனி எதும் பேசலை அப்டின்னு பிராமிஸ் பண்ணிட்டு  மறுபடியும் பைக்ல தொத்திக்கறான். இப்போ டிராஃபிக் போலீஸ் வண்டியை நிறுத்தி லைசன்ஸ், ஆர் சி புக் கேட்குது. 

பைக் ஓட்டிட்டு வந்தவன் பம்பறான். லிஃப்ட் கேட்டவன்  அப்போதான் பைக்கோட ஒரிஜினல் டாக்குமெண்ட்ஸை போலீஸ்ட்ட தர்றான். அப்போதான் தெரியுது.. லிஃப்ட் கொடுத்தவன் தான் பைக்கை திருடுனவன், லிஃப்ட் கேட்டவன் பைக் ஓனர்.. நல்ல ட்விஸ்ட்.. 

திருடனை மன்னிச்சு விட்டுடறான். 

கலக்கலான காமெடி வசனங்கள்

1. எங்கே போறீங்க?

இண்ட்டர்வியூக்கு.

இது உங்களுக்கு எத்தனாவது இண்டர்வியூ?

30 வது இண்ட்டர்வியூ

 கேட்கறேனேன்னு கோவிச்சுக்காதீங்க.. இண்ட்டர்வியூ போறதுதான் உங்க குலத்தொழிலா?

2. மார்க்கெட்டிங்க் தொழில்ல மட்டும் கஸ்டமர் எவ்வளவு கோபப்பட்டாலும் நாம் ரிலாக்ஸா இருக்கனும்.

3. சார். நீங்க இண்ட்டர்வியூவுக்கா வந்திருக்கீங்க? 

இல்லீங்க, பால் வாங்க வந்திருக்கேன்.  கேட்கறான் பாரு கேள்வி.

இந்தப்படத்துல ஹீரோவா நடிச்சவர் செம யதார்த்தம்.. பைக்ல போறப்ப நடக்கற சம்பாஷணகள் ஆரம்பத்துல தேவை அற்றதா தோன்றினாலும் சஸ்பென்ஸை மெயிண்ட்டெயின் பண்ன அந்த எஸ்டாபிளிஸ்மெண்ட் தேவைப்படுது.


இந்த வாரத்தில் வந்த 3 படங்கள்ல மேக்கிங்க் ஸ்டைல், கதை , திரைக்கதை ,வசனம்  உட்பட எல்லாத்துலயும் இதுதான் பெஸ்ட், அதுவும் இல்லாம போனவாரம் வந்த 3 கதைகளை விட இதான் பெஸ்ட். சோ இந்த படத்துக்கு முதல் அல்லது 2 வது பரிசு சான்ஸ் உண்டு..

Thursday, August 11, 2011

நில மோசடி வழக்கில் மாட்டிய திமுக வி ஐ பிகள், ஜெ அதிரடி,கதிகலங்கி நிற்கும் சன் டி வி , கலைஞர் டிவி

நிலநடுக்கத்தில் 2,800 குற்றங்கள் : அ.தி.மு.க. ரிக்டர் ஆபரேஷன்!

ஜெயலலிதா திட்டமிட்டு உருவாக்கும் 'நிலநடுக்கத்தின்’ ரிக்டர் அளவு நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறது. இது தி.மு.க - வின் உள்கட்டமைப்பில், அளவுக்கு மீறிய அதிர்வுகளையும் சரிபண்ண முடியாத பிளவுகளையும் உருவாக்கிக்கொண்டே இருக்கிறது.

 சி.பி - ஈரோடு என் கே கே பி ராஜாவுக்குத்தான் மொத ஆப்பு.. அண்ணன் ஆடிப்போய்ட்டார் இல்ல?

ஆளும் கட்சியான அ.தி.மு.க-வின் தவறுகளைச் சுட்டிக்காட்டி எதிர்ப்பு அரசியல் பண்ண முடியாமல், தங்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு அரசியல் மட்டுமே செய்தாக வேண்டிய நெருக்கடியை இந்த நிலநடுக்கங்கள் தி.மு.க-வுக்கு உருவாக்கிவிட்டன!


சி.பி - அவனவன் ஃபாரீன் போய் செட்டில் ஆனா போதும், சொத்தே வேணாம், ஆளை விடுங்கடா சாமின்னு அலரிட்டு இருக்காங்களாம்.. 


முதல்வர் ஜெயலலிதா தெரிந்து செய்தாரா அல்லது தெரியாமலே தொடங்கினாரா எனத் தெரியவில்லை. தி.மு.க-வின் அஸ்திவாரத்தை ஆட்ட நிலப் பிரச்னைதான் சரியான வழிமுறை என்று கையில் எடுத்தார்.


சி.பி - செஸ்ல குதிரையை பயன்படுத்தி ஒரு மூவ் வைப்போம், ஆனா எதிர்பாராத விதமா அது ராஜாவுக்கும், ராணிக்கும் டபுள் செக் ஆகிடும், அது போல அம்மாவும், அய்யாவும் மாட்டாப்போறாங்க இதுல.. 

முதலாவது கூடிய அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவுக்குப் பின்னால், ''தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் நில அபகரிப்புகள் தொடர் பான ஏராளமான புகார்கள் வந்து கொண்டு இருக்கின்றன. தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொள்ளும்போதே, அநியாயமாகத் தட்டிப் பறிக்கப்பட்ட நிலங்களைத் திரும்பப் பெற்றுத் தருவேன்’ என்று நான் அறிவித்து இருந்தேன்.

சி.பி - ஆமாமா, அம்மாவுக்கு என்ன கோபம்னா நம்ம ஆட்சில நம்மால பண்ண முடியாத , நமக்குத்தோணாத பல ஆங்கிள்கள் இவங்களூக்குத்தோணி இருக்கே? அப்டின்னு ஒரு அங்கலாய்ப்பு , 

அந்த நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. இதுவரை 2,800-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்து குவிந்து உள்ளன'' என்று அறிவித்தார் முதல்வர். கடந்த ஆட்சியில் புகார் கொடுக்காதவர்கள், புகார் கொடுக்கவிடாமல் தடுக்கப்பட்டவர்கள், புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கைவிடப்பட்ட வர்கள், யாருக்கும் சொல்லாமல் உயிர் பயத்தால் மறைத்துக் கொண்டவர்கள் எனப் பலரும் தங்கள் மனுக்களுடன் மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர்கள் முன்னால் நின்றார் கள். 'இதற்குத்தானடா காத்திருந்தோம்’ என்பது மாதிரி, மொத்தமாக கோழிகளை அமுக்க ஆரம்பித்தது ஆளும் அரசு!

சி.பி - 2800 புகார்ல பாதிக்குப்பாதி உண்மைன்னு வெச்சுக்கிட்டாக்கூட ... அடேங்கப்பா..!!!!!!!!!!!!



''நியாயமான வழக்குகளாக இருந்தால், அநியாயமாகத் தட்டிப் பறிக்கப்பட்ட நிலங்களாக இருந்தால், வழக்குப் போடுவதில் தவறு இல்லை. இந்த நடவடிக்கைகளைக் கடந்த தி.மு.க. ஆட்சி என்று மட்டும் வைத்துக்கொள்ளாமல், அதற்கும் முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் தட்டிப் பறிக்கப்பட்டவைக்கும் சேர்த்து வழக்குகள் போட வேண்டும்.

சி.பி - நமக்கு ஒரு கண் போனா பரவாயில்லை, எதிரிக்கு 2 கண் போகனும், இது தானே தமிழனின் பண்பாடு பலே பேஷ்.. சபாஷ்.. 

விசாரணை நடத்த வேண்டும். குறிப்பாக, முதல்வர் ஜெயலலிதாவால் வாங்கப்பட்ட சிறுதாவூர் நிலமும் இத்தகைய புகாருக்கு உள்ளானதுதான்'' என்று கருணாநிதி பதிலடி கொடுக்க, ''ஏற்கெனவே அன்றைய விலைக்கு நிலங்களை விற்றவர் கள், இன்று விலை கூடிவிட்டதற்காக அதிக பணத்துக்கு ஆசைப்பட்டு புகார் கொடுக்கிறார்கள். நான் ஒரு நிலத்தை டி.ஆர்.பாலுவிடம் 10 லட்சம் கொடுத்து வாங்குகிறேன். அதன் விலை கூடிய பிறகு, அதிக பணத்துக்கு பாலு ஆசைப்பட்டு, என் மீதே வழக்குப் போட்டால் ஏற்க முடியுமா?'' என்று மன்னார்குடி கூட்டத்தில் கேட்டார் ஸ்டாலின்.

சி.பி - ஏப்பா லபோ திபோன்னு அடிச்சுக்கறீங்க? உங்க மேல தப்பில்லைன்னா ஏன் கோபம் வருது..?


இவை அனைத்துக்கும் தமிழக அரசின் பதில் இரண்டே வரிகள்தான். 'பொதுமக்கள் கொடுக்கும் புகார்களின் அடிப்படையில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. யார் மீதும் இட்டுக்கட்டி, எந்தப் பொய் வழக்கையும் போடவில்லை!’

சி.பி - அப்படித்தான் பொய்யா வழக்கு இருந்தா என்ன? இவங்க என்ன சத்திய சீலர்களா/ இவங்களும் பொய்யர்கள் தானே?   பொய்யர்கள் மேல் பொய் வழக்குப்போடா தப்பில்லை



மூன்று மாதங்களுக்கு முன்னால் விவசாயத் துறை அமைச்சராக இருந்த வீரபாண்டி ஆறுமுகம், கைத்தறித் துறை அமைச்சராக இருந்து கருணா நிதியால் பதவியைவிட்டும் கட்சியை விட்டும் நீக்கப்பட்டு, மறுபடியும் சேர்த்துக்கொள்ளப்பட்ட ஈரோடு என்.கே.கே.பி.ராஜா ஆகிய இருவரும் கோவை சிறை யில் இருக்கிறார்கள்.

மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் தளபதியும் திருவாரூர் மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணனும் பாளை சிறையில் வைக்கப்பட்டார்கள். தென் சென்னை மாவட்டச் செயலாளரும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ- வுமான ஜெ.அன்பழகன் கோவை சிறையில் இருக்கிறார். தி.மு.க-வின் தலைமைச் செயற்குழு உறுப்பினரும் மு.க.அழகிரியின் வலதுகரமுமான 'பொட்டு’ சுரேஷ் பாளை சிறையிலும், மதுரை வேளாண் விற்பனைக் கிடங்கின் முன்னாள் தலைவரும் மு.க.அழகிரியின் இடதுகரமுமான 'அட்டாக்’ பாண்டி, திருச்சி சிறையிலும் இருக்கிறார் கள். தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் கைதாகி விடுதலை பெற்ற எஸ்ஸார் கோபி மதுரை சிறையில் இருக்கிறார்.


சி,பி - ஆஹா, திமுகவில் தான் எத்தனை தியாகிகள்!!!!!!!!!!!!!

மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவரும் தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பின ருமான வி.கே.குருசாமி பாளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதில் 'பொட்டு’ சுரேஷ், 'அட்டாக்’ பாண்டி, வி.கே.குருசாமி, புரசை ரங்கநாதன் ஆகிய நால்வருடன் சேர்த்து பூண்டி கலைவாணன் மீதும் குண்டர்கள் தடுப்புச் சட்டம் பாய்ந்து உள்ளது. திருச்சி மாவட்டத் தி.மு.க. துணைச் செயலாளரும் முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் வலது கரமுமாகிய குடமுருட்டி சேகர், கஞ்சா வைத்துஇருந்ததாகக் கைது செய்யப்பட்டார்.

சி.பி - இந்த பன்னாடைங்க பேரைப்பார்த்து சினிமாரவுடிகளுக்குப்பேர் வைக்கிறாங்களா? அல்லது இவனுங்க சினிமா பார்த்து வெச்சுக்கறானுங்களா? 

ராமநாதபுரத்திலும் திருப்பூரிலும் தி.மு.க-வின் கீழ்மட்டப் பதவிகளில் இருந்த பலரும் நில அபகரிப்பு வழக்குகளில் கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். இன்னும் பலர் மீது புகார்கள் வரிசை கட்டி வரத் தொடங்கி உள்ளன.

சி.பி - எல்லா பரதேசிகளூம் மட்டம் தான், இதுல கீழ் மட்டம் என்ன? மேல் மட்டம் என்ன? 


செய்தித் துறையின் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி மீது வில்லிவாக்கத்தில் நில அபகரிப்புப் புகார், சென்னை மாநகரக் காவல் துறையில் பதிவாகி உள்ளது. திருச்சி யில் உள்ள காஞ்சனா ஹோட்டல் சொத்தைக் கைமாற்றி விடும் விவகாரத்தில் போக்குவரத்துத் துறை முன்னாள் அமைச்சர் நேரு, அவரது தம்பி ராமஜெயம், திருச்சி துணை மேயர் அன்பழகன் ஆகியோர் சம்பந்தப்பட்டதாக நாமக்கல்லைச் சேர்ந்த கதிர்வேல் என்பவர் கொடுத்த புகார் இப்போதுதான் புகைய ஆரம்பித்துள்ளது. மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் முன் ஜாமீன் போட்டார் நேரு. '16-ம் தேதி வரைக்கும் அவரைக் கைது செய்யக் கூடாது’ என்று விசாரணை தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

சி.பி - அண்ணன் 16 ஆம் தேதிக்குள்ள ஃபாரீன் போயிடுவாரு பாருங்க. 



வருவாய்த் துறை அமைச்சராக இருந்த திண்டுக்கல் ஐ.பெரியசாமி மீது காவல் துறை இயக்குநரிடம் அண்ணா நகரைச் சேர்ந்த டாக்டர் சுந்தர்ராஜன், என்பவர் தந்திருக்கும் புகாரைப் படிக்கவே பயமாக இருக்கிறது. சொத்தை அபகரிக்க நடந்த மோதலில் பல திடுக்கிடும் திருப்பங்களும் மர்ம மரணங்களும்கொண்ட திகில் கதைபோல அது இருக்கிறது. உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடி தன்னுடைய கல்லூரியின் வளர்ச்சிக்காக மற்றொரு நிர்வாகத்தின் கல்லூரியை எப்படி முடக்கினார் என்பதும், தனது கல்லூரிக்கான இடத்தைக் கையகப்படுத்த எடுத்துக்கொண்ட முயற்சிகளும் போலீஸ் விசாரணையில் உள்ளன.


அனைத்துக்கும் மேலாக, மதுரை உத்தங்குடியில் நாகர் ஆலயத்துக்குச் சொந்தமான இடம், மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மனைவி பேருக்குக் கைமாறியதில் வில்லங்கம் இருக்கிறதா என்பதையும், கருணாநிதியின் படங்களுக்கு ஆஸ்தான தயாரிப்பாளராக இருந்த லாட்டரி அதிபர் மார்ட்டின் பங்களிப்பு எத்தகையது என்பதையும் போலீஸ் விசாரித்துக்கொண்டு இருக்கிறது. திருவொற்றியூர் பரணிகுமாரை மீன்வளத் துறை முன்னாள் அமைச்சர் சாமியும் அவரது தம்பி சொக்கலிங்கமும் தாக்கியதாகப் புகார்.


''பொய் வழக்குகளை வேகவேகமாகப் போட்டு, கழக மாவீரர்களை சல்லடைக் கண்களால் துளைத்துவிடலாம் என்று நினைக்கிறார் ஜெயலலிதா. குண்டர் சட்டத்தை தி.மு.க-வினர் மீது பயன்படுத்துவதைப் பார்த்து, 'ஒரு பயங்கரமான ஆட்சியை நான் நடத்துகிறேன் பார்’ என்று காட்ட நினைக்கிறார்'' என்று கருணாநிதி திருவாரூரில் சொல்லி இருக்கிறார்.


கைதானவர்கள் குற்றவாளிகள்தானா என்பதை போலீஸ் நிரூபிக்கட்டும். நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கட்டும். ஆனால், புகார் கொடுத்தவர்கள் பலர் அப்பாவிகள்தான். மதுரை திருமலை நாயக்கர் கோயிலுக்கு அருகில் இருக்கும் வீட்டை யும் கடையையும் பறிகொடுத்த கல்பனா, ''நான் அட்டாக் பாண்டியோட சொந்தக்காரங்க. அவர் பேரைச் சொன்னா, ஊரே அதிரும்ல'' என்று சொல்லி, தன்னை மிரட்டியதாகச் சொல்கிறார். திருமங்கலம் பாப்பாவையும் அவரது கணவர் சிவனாண்டி யையும் பொட்டு சுரேஷ் தன் அலுவலகத்துக்கு வரச் சொல்லி மிரட்டியதாகச் சொல்கிறார்கள்.


சேலம் அங்கம்மாள் காலனியில் உள்ள 23 குடும்பங்கள் நான்கு ஆண்டுகளாக நடுத்தெருவில் நிற்கின்றன. உத்தங்குடி நாகர் ஆலயத்தின் வி.வி.சுப்பிரமணியன் ஐயர் நில அபகரிப்பையும், அதனால் ஒருவர் காணாமல் போன கதையும் பரபரப்பு. காடுவெட்டிப் பாளையத்தில் பேப்பர் மில்லை கை மாற்றிவிடும் விவகாரத்தில் ஜெ.அன்பழகனின் அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டு மிரட்டப்பட்டதாக சீனிவாசன் புகார் கொடுத்துள்ளார். அவனியாபுரம் பாண்டியராஜின் மனைவி பாண்டீஸ்வரி தனது கணவரைக் கொன்று, அதை ஒரு விபத்தாகக் காட்டிவிட்டார்கள் என்று எஸ்ஸார் கோபி தரப்பு மீது கை நீட்டுகிறார். மிகமிக மேலோட்டமாகப் பார்த்தால், கஞ்சா வைத்து இருந்ததாகக் கைது செய்யப்பட்ட திருச்சி பிரமுகர் தவிர, அனைத்துமே பாதிக்கப்பட்டவர்களால் போடப்பட்ட வழக்குகளாகவே இருக்கின்றன.


இந்த நடவடிக்கைகளைப் பார்த்து நம்பிக்கைகொண்ட பலரும், புதிய புகார்களுடன் புறப்பட்டு உள்ளார்கள். போகிற போக்கைப் பார்த்தால், இந்த நில நடுக்கத்தில் இருந்து தி.மு.க. தப்பிப்பது பெரும்பாடாக இருக்கும். சிவில் வழக்குகளில் கிரிமினல் செக்ஷன்களும் சேரும்போது சிக்கிய தனி மனிதர்களின் மொத்த வாழ்க்கையும் வழக்குடன் மல்லுக்கட்டுவதாகவே முடிந்துபோகும். அத்தகைய சுழலில் தி.மு.க-வினர் சிக்கியது மட்டும் அல்ல... கட்சியையும் கொண்டுபோய் நிறுத்தி இருக்கிறார்கள்!

சி.பி - நல்ல வேளை ஆட்சி மாறுச்சு, இல்லைன்னா இந்த முறையும் செகண்ட் ரவுண்ட் நில மோசடியை ஆரம்பிச்சிருப்பாங்க.  இந்த மேட்டரைப்பற்றி சன் டிவி,அல்லது கலைஞர் டி விலயோ மூச் விட மாட்டேங்கறாங்க. ஏன்னா அந்த நிர்வாகிகள் மேலயும் வழக்கு இருக்கே?


 thanx - vikatan 

Monday, May 23, 2011

நாளைய இயக்குநர் - சைக்கோ த்ரில்லர் கதைகள் - விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihWKj9-NVkXiBzK0qlVTypn8jpsN2OtjvAUSPSQtji5z_hLzFH4g6u0EmJp8wgOFhahwhaCn7XluJDwSbA_3YK0mNdrUdTahWQQi7fRmRfOMDCDF-1htB8GV4pNwXQxXzjE0zv5G3dNguY/s1600/cowboy2.jpg 

நாளைய இயக்குநர் நிகழச்சில இன்னைக்கு (22.5.2011)ஹாய் மதன் கோட் சூட்லயும் ,பிரதாப் போத்தன் ஃபார்மல் டிரஸ்லயும் வந்தாங்க.. ஹாய் மதன் ரெகுலரா ஒரு ஓப்பனிங்க் இண்ட்ரோ தொகுப்பாளினி கிட்டே கொடுக்கறாரு.. நல்ல விஷயம் தான். ஆனா அதை அவர் பிரதாப் கிட்டேயே சொல்லலாம். ஏன்னா 1. தொகுப்பாளினி கிட்டே பேசறப்ப அவரோட பாடி லேங்குவேஜ்ல ஒரு செயற்கைத்தன்மையும்,லைட்டான அலட்டலும் வெளிப்படுது 2. அந்தப்பொண்ணு அவர் அளவு நாலெட்ஜ் இல்ல.. ஒர்த் இல்ல.. சும்மா கிளாமருக்காக ஒப்புக்கு சப்பாணி மாதிரி மப்புக்கு ஊறுகாய் மாதிரி.. 

இன்னைக்கு தொகுப்பாளினி போட்டிருந்த டிரஸ் போன வாரம் போட்டிருந்த அளவு கேவலமா இல்லை.. ஓரளவுக்கு கேவலமா இருந்தது.. கிராமங்கள்ல பொண்ணுங்க நைட்டி போட்டுக்கிட்டே காலைல மளிகைக்கடைக்கு வந்துடுவாங்க.. அந்த மாதிரி .. பார்க்கற மத்த ஆண்களுக்கு சந்தோஷம்.. அந்த பொண்ணோட புருஷனுக்கு சங்கடம்.. ஹி ஹி

அப்புறம் அந்த பொண்ணு ஜட்ஜ்ங்களை நீங்க போய் உங்க சீட்ல உக்காருங்கன்னு சாதாரணமாத்தான் சொல்றாங்க.. ஆனா எனக்கு பார்க்க அவங்க ஆர்டர் பண்ணுன மாதிரி இருக்கு.. மேல்சாவனிஷம் என்பது இது தானோ?


1. காஃபி - தீபன்

பொதுவா சைக்கோ திரில்லர் கதைகள் எல்லோருக்கும் பிடிக்கறதில்லை.. ஆனா எனக்கு ரொம்ப பிடிக்கும்( ஒரு வேளை நானும் ஒரு சைக்கோவோ?#டவுட்டு)ஓப்பனிங்க் ஷாட்ல ஹீரோ க்ளோஷப்ல நம்ம கிட்ட கதை சொல்றார். அவர் காஃபிக்கு அடிமை.. காஃபில மட்டும் 43 ஃபிளாவர் இருக்கு.. என்னால காஃபி சாப்பிடாம இருக்கவே முடியாது.. ப்ளா ப்ளா.. இத்யாதி,,

அவரோட மனைவி லேட் நைட்ல வீட்டுக்கு வர்றப்ப ஏன் லேட்?னு கேட்கறார். அதுக்கு மனைவி உன்னை மாதிரி சைக்கோவுக்கு அதை கேட்க உரிமை இல்லை.. அப்டின்னு சொல்றப்பவே பாப்பா எங்கேயோ போய்ட்டு வந்திருக்கு தப்பான்னு தெரிஞ்சிடுது.. தொடரும் உரையாடல்ல அவ தொடர்ந்து அவனை கேவலப்படுத்திட்டே இருக்கா.. 

மனைவி கேவலப்படுத்துனா  கணவன் கண்டுக்கக்கூடாதுங்கற பேசிக் நாலெட்ஜ் இல்லாம ஒரு கட்டத்துல அவளை போட்டுத்தள்ளிட்டு காஃபி குடிக்கற வேலையை தொடர்றான். 

இந்த ஷாக்கை விட க்ளைமாக்ஸ் ஷாக் ஒண்ணு இருக்கு.. 

இது வரை நம்மை பார்த்து கதை சொல்லிட்டு இருந்த  ஹீரோவோட முகம் பார்க்கும் கேமரா அப்படியே திரும்புது.. எதிரே ஒரு டாக்டர்.. 

ஏன் டாக்டர்..? எனக்கு காஃபி பிடிக்கும்னு தெரிஞ்சும் எனக்கு குடுக்காம நீங்க மட்டும் குடிக்கலாமா?

பார்த்தா டாக்டர் வாய்ல சிசர் ஏறி செத்துக்கிடக்கார்.. அந்த லூஸ் அவரையும் போட்டு தள்ளிட்டான் போல..

 கதை ஓக்கே.. நீட் டைரக்‌ஷன்.

ஆனா ஹாய் மதனும், பிரதாப்பும் இந்த கதை எந்தளவு சாத்தியம்னு டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தாங்க.. கமல் ஒரு படத்துல பழமொழி சொன்ன அனுபவிக்கனும், ஆராயக்கூடாதுன்னு சொல்வாரு.. அந்த மாதிரி சைக்கோ கதைகள் எல்லாம் ஜஸ்ட் ஒரு கற்பனை.. அதை ஜாலியா எடுத்துக்கனும்..

இந்தப்படத்துக்கான கே பாலச்சந்தர் கமெண்ட்.. - சிம்ப்பிள் & இண்ட்ரஸ்ட் நேரேஷன் ஆனா நம்பகத்தன்மை குறைவு..


2.  மனு தர்மம் - அருண் வர்மா

ஹீரோவுக்கு ஏதோ பணத்தேவை.. யாருக்கோ ஒரு பெரிய தொகை கொடுக்க வேண்டிய கட்டாயம்.. அந்த டைம்ல பாத்ரூம்ல அப்பாவுக்கு ஒரு ஆக்சிடெண்ட்.. யாரோ அவரை காயப்படுத்திட்டாங்க..  அங்கே போனா அவன் கண் முன்னால அப்பா உயிருக்கு போராடிட்டு இருக்கார். அவன் நினைச்சா காப்பாத்தலாம். ஆனா அவர் இறந்துட்டா இன்சூரன்ஸ் பணம் வரும்னு ஹீரோ நினைச்சு காப்பாத்த முயற்சியே பண்ணலை.. 

அப்புறம் ஹீரோவை குற்ற உணர்ச்சி வாட்டுது.. தன் அண்ணனுக்கு ஃபோன் பண்ணி வர சொல்லி  அம்மாவை நல்லா பாத்துக்கன்னு சொல்லிட்டு குற்ற உணர்ச்சில தற்கொலை பண்ணிக்கறார்.. 

இது கொஞ்சம் விபரீதமான கதை தான். இது பார்க்கறவங்க மனசை பாதிக்கும்.. இதை எல்லாம் சென்சார் பண்ணனும்னு தோணுது.. ஏன்னா பார்க்கறவங்க மனசுல 1000 பேர்ல ஒருத்தருக்காவது அப்டி பண்னலாமோன்னு ஒரு எண்ணம் வந்தாலே டேஞ்சர் தான்.. 

திரைக்கதைல கொஞ்சம் குழப்பம்.. கேமரா சுமார்.. பேசற வசனம் புரில.. ( ஒரு வேளை மணி ரத்னம் மாதிரி ட்ரை பண்றாரோ என்னன்வோ?)


3.  அருண் - 00.00 ( 12 மணி மிட்நைட்)

இந்தக்கதை செம த்ரில்லிங்கா இருந்தது.. 

ஒரு பொண்ணு மிட்நைட்ல ஒரு தனிமையான இடத்துல வெயிட்டிங்க்.. அப்போ 2 ரவுடிங்க அவளை பலவந்தமா கடத்திட்டு போய் பக்கத்துல இருக்கற ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துல  அட்டெம்ப்ட் ரேப்பிங்க்.. 
அப்போ ஒருத்தன் அங்கே எண்ட்ரி ஆகறான். அப்பாடா.. ஹீரோன்னு பார்த்தா அவனும் வில்லன்.. அவன் அந்த 2 பேர்ட்ட சனடை போட்டு அவளை அடைய நினைக்கறான்..

சேசிங்க்ல ஒரு கட்டத்துல எல்லாரும் செத்துடறாங்க.. அப்போ அந்த பொண்ணோட ஆன்மா மட்டும் சொல்லுது

” எனக்காக அவன் காத்துட்டு இருப்பானே ? நான் எப்படி போவேன்?”

அந்த கதறல் இன்னும் என் காதுல ஒலிச்சுக்கிட்டே இருக்கு..

 இந்தப்படத்தை கே பாலச்சந்தர் ரொம்பவே பாராட்னார்.... 

கே பாலச்சந்தர் பாராட்றப்ப அதுல உள்ளார்ந்த சந்தோஷம் தெரியுது.. சக படைப்பாளியை  பாராட்டனும், கவுரவிக்கனும் என்ற பக்குவமும், அனுபவ ஆற்றலும் அவர் கிட்டே வெளிப்படுது.. 
ஹாய் மதன் பாராட்றப்ப அவரோட மேதா விலசத்தை லைட்டா வெளிப்படுத்திடறாரு.. அதாவது அவர் பார்த்த மற்ற ஃபாரீன் படங்களை உதாரணமா காட்டி தனக்கு பல படங்கள் பார்த்த அனுபவம் இருக்குன்னு சொல்லாம சொல்றார்..

பிரதாப் போத்தன் பாராட்றதே இல்லை .. பெரும்பாலும்.. அப்படியே பாராட்னாலும் வேண்டா வெறுப்பா முகத்தை வெச்சுக்கறார்.. பாவம் வீட்ல எப்பவும் சண்டை போல..

Tuesday, April 26, 2011

நாளைய இயக்குநர் - ஆக்‌ஷன் த்ரில்லர் கதைகள் 3 - விமர்சனம்


இந்த வாரம் 24.4.2011 ஞாயிறு அன்று கலைஞர் டி வில நாளைய இயக்குநர் நிகழ்ச்சி எப்பவும் போல கொண்டாட்டத்தோட தொடங்குச்சு,,ஹாய் மதன், பிரதாப் போத்தன் 2 பேருமே இப்பவெல்லாம் நல்லா உற்சாகமா பேசறாங்க..  அப்பப்ப விட் அடிக்கறாங்க.. அது சூழ்நிலையின் இறுக்கத்தை தணித்து கலகலப்பாக்குது.. குட் சேஞ்ச்... 

1.அப்துல்லா,சிவா, டேனியல் - ரவிக்குமார்

ஓப்பனிங்க் ஷாட்லயே ஹீரோ கார்ல போறப்ப அவரை வில்லன் போட்டுத்தள்ள பிளான் பண்றான். 2 பேருக்கும் என்ன பிரச்சனை? எல்லாம் பொம்பள சமாச்சாரம் தான்.. ( அதானே பார்த்தேன்)ஹீரோயினை வில்லன் லவ்வறான்.. ஆனா அவ ஹீரோவைத்தான் லவ்வறா.. ( அப்பத்தானே ஃபார்முலா ஒர்க் அவுட் ஆகும்?)ஹீரோ. வில்லன் 2 பேரும் கடத்தல் பிஸ்னெஸ் தான் பண்றாங்க.. (பின்னே சமூக சேவையா பண்ணப்போறாங்க)

ஹீரோ பணத்தை எடுத்துட்டு எஸ்கேப் ஆக திட்டம் போடறப்ப வில்லன் அவரை போட்டுத்தள்ள வழில வெயிட்டிங்க்..

ஹீரோ கார்ல போறப்ப ஒரு ஆள் வேகமா பின்னால துரத்திட்டே வர்றான்.. என்னமோ சொல்ல வர்றான்.. ஆனா ஹீரோவுக்கு பயம், வில்லன் தான் ஆள் அனுப்பி இருக்கான்னு நினச்சு காரை வேகமா ஓட்டி கரெக்ட்டா வில்லன் வெயிட் பண்ணிட்டு இருக்கற இடத்துல கொண்டு போய் சாத்தி அவனும் அவுட், வில்லனும் அவுட்.. ( ஹீரோ,வில்லன் 2 பேருக்கும்  சம்பளம் தர வேண்டியதில்லை.. டைரக்டருக்கு சவுகர்யம்..) 

அப்புறம் பார்த்தா துரத்திட்டு வந்தவன் ஹீரோவோட கார் டிக்கி ஓப்பன் ஆனதை எச்சரிக்க வந்தானாம்... அவன் ஆக்சிடெண்ட் ஆன காரை செத்துப்போன 2 பேரை பார்த்துட்டே ஹீரோ வெச்சிருக்கற லட்சக்கணக்கான பணத்தை லபக்கிடறான்.. அவ்வளவு தான் கதை..

லாஜிக் சொதப்பல்கள்

1. இந்தக்காலத்துல கார் பேனட் திறந்திருக்குன்னு பைக்ல போறவன் சொல்றதே அதிகம்.. அதுல 160 கி மீ வேகத்துல போற காரை துரத்திட்டு வந்து சொல்ல அவன் என்ன கேனயா?அவன் பாட்டுக்கு போயிட்டே இருப்பான். நிஜ வாழ்வுல.. 

2.ஹீரோவோட கார் வர்றதைப்பார்த்த பின்பு வில்லன் கல்லை எடுத்து ரோட்ல குறுக்கே போடறான்.. 4 கல்லை எடுத்து போடவே 2 நிமிஷம் ஆகுமே.. 160 கிமீ  வேகத்துல வர்ற கார் அந்த 20 மீட்டர் தூரத்தை 3 செகண்ட்ஸ்ல கடந்துடுமே..?முதல்லயே எடுத்துப்போட்டா என்ன?

மேஜிக் கலக்கல்கள்

1. படத்துல கார் ஆக்சிடெண்ட் ஆகற சீன் நல்ல சவுண்ட் எஃபக்ட்டோட  கிராஃபிக்ஸ்னு தெரியாத அளவு நீட்டா பண்ணி இருந்தாங்க.. எடிட்டிங்க்கும் பக்கா.. 

2. படத்துல யாருக்கும் வசனமே இல்லை.. எல்லாம் பேக் டிராப்ல கதை சொல்லும் உத்தி தான்.. நல்லா திங்க் பண்ணி எடுத்திருக்காங்க..


ஹாய் மதன் கமெண்ட் - இந்த படத்துல வர்ற கார் நல்லா பிடிச்சிருந்ததுன்னு சொன்னீங்களே.. பிரதாப் ஜி அந்த பிராண்ட் பிடிச்சதா? சீன் பிடிச்சதா?

 2. ஆட்டம் - ராஜேஷ் குமார்

ஜீன் கிளாட் வேண்டம் நடிச்ச பிளட் ஸ்போர்ட்,விஜய்-ன் பத்ரி படம் பார்த்த எஃபக்ட்ல இந்த படம் எடுத்திருப்பாங்க போல.. குத்துச்சண்டை தான் கதைக்களன் கூடவே தொட்டுக்க ஊறுகாயாய் காதல்.. 

ஹீரோ ஹீரோயினை லவ்வறாரு ஜிம்ல பார்த்து வந்த பழக்கத்துல... ஹீரோயின் அப்பா காதல் கல்யாணத்துல முடிய ஒரு கண்டிஷன் போடறாரு.. பாக்சிங்க் டோர்னெமெண்ட்ல அவரோட சிஷ்யன் ஜெயிக்கனும்.. அதுக்கு ஹீரோ தோக்கனும்.. அவரு அதை விட்டுக்குடுத்தா இவரு இதை விட்டுக்குடுப்பாராம்.. ( வடிவேலு மாதிரி கேவலமான அப்பா போல)

ஆனா ஹீரோ என்ன முடிவெடுக்கறாரு?( என்னத்தை பெரிசா எடுப்பாரு?)பாக்சிங்க்ல ஜெயிச்சுட்டு அதே மேடைல பொண்ணை தூக்கிட்டு போறாரு.. போறப்ப ஒரு பஞ்ச டயலாக் வேற.. “ அந்த விளையாட்ல ஜெயிச்சாச்சு.. இனி வாழ்க்கை ஆட்டம்..இதுலயும் ஜெயிப்போம் இல்ல?

அப்பா கண் முன்னாலயே பொண்ணை தூக்கிட்டு (நிஜமாவே ) போறாரு.. அந்த இங்கிதம் தெரியாத ஹீரோயினும் சிரிச்சுக்கிட்டே அவன் கூட போயிடறா ( நல்ல குடும்பத்துப்பொண்ணு போல.. )

லாஜிக் சொதப்பல்கள் 

1. ஆர்ட்டிஸ்ட்ஸ் செலக்‌ஷன் சரி இல்லை.. ஹீரோ வில்லன் 2 பேரும் பாக்சிங்க் சேம்ப்பியன் என்றால் விக்ரம் ,சரத்குமார் ரேஞ்சுக்கு இல்லைனாலும்  ஓரளவாவது பாடி வேணாமா? ராமராஜன் மாதிரி, அப்பாஸ் மாதிரி சோப்ளாங்கிகளை போட்டது தப்பு.. 

2. சர்வ தேச டோர்னமெண்ட் நடக்கையில் ஒரே ஆரவாரம், மக்கள் கூட்டம் காட்டனும்.. அட்லீஸ்ட் கிராஃபிக்ஸ்லயாவது.. ஆனா நிஜத்துல சும்மா ஏதோ சாவடில செட் போட்டு எடுத்து நம்மை சாவடிக்கறாங்க.. 

மேஜிக் கலக்கல்கள் ( வசனங்களில்..... )

1. ஒவ்வொரு ஸ்போர்ட்ஸ்மேன் லைஃப்லயும் மறக்க முடியாத கேம் ஒண்ணு உண்டு

2.. டியர்... ஏதாவது பேசேன்... 

 எனக்கு ஸ்போர்ட்ஸ்னா உயிர்.. பாக்சிங்க்ல ஏதாவது சாதிக்கனும்.. ப்ளா..ப்ளா
.....

 நீ ரொம்ப மொக்கை போடறே,, நானே சொல்லிடறேன்.. ஐ லவ் யூ

3.  யூ நோ வாட்..? யூ லுக்கிங்க் சோ ஸ்மார்ட்.. 
 3. ----------------------------- -திருப்பூர் ராம்

 நிகழ்ச்சித்தொகுப்பாளினி படத்தோட டைட்டில் என்ன?னு கேட்டதுக்கு ராம் அதை சஸ்பென்சா படத்தோட கடைசில சொல்றேன்னார்.. நான் கூட எதுக்கு இந்த பில்டப்பு என நினைச்சேன்.. ஆனா க்ளைமாக்ஸ்ல அவர் சொன்னது கரெக்ட் தான்னு தோணுச்சு.. 

ஒரு கடத்தல் குரூப்.. பணம் வேணும்னு கேட்டு ஒரு ஆண், ஒரு பெண் (அவங்க 2 பேருக்கும் இதுக்கு முன்னே அறிமுகம் இல்லை) 2 பேரையும் கடத்திட்டு வந்து அடைச்சு வெச்சிருக்காங்க.. அவங்க தான் ஹீரோ, அண்ட் ஹீரோயின்னு கெஸ் பண்ணாம இருந்தா நாம படம் பார்க்கவே லாயக்கில்லை.. 

இதுல ஹீரோ ஹீரோயின் ஒரு கட்டத்துல லவ்வறாங்க.. ஹீரோவை விடுவிக்க பணயத்தொகை வந்துடுது.. ஆனா ஹீரோயினை விடுவிக்க பணம் வர்லை.. பணம் இல்லைன்னு ஹீரோயினோட அப்பா கையை விரிச்சுடறாரு.
 ( தத்தி வில்லனுங்க.. கடன் இல்லாத தொழில் அதிபர் மகளை கடத்த மாட்டாங்க.. ?) இப்போ ஹீரோ ரன்னிங்க்ல கார்ல ஃபைட் போட்டு 3 வில்லன்களையும் போட்டு ஹீரோயினை காப்பாத்தறாரு.. அவ்வளவுதான். கதை.

 லாஜிக் சொதப்பல்கள் 

1. ஒரு பணக்கார வீட்டுப்பையன் திடீர்னு 3 பேரை ரிவால்வரால சுடுவது எப்படி?அவன் என்ன ஜேம்ஸ்பாண்டா?

2.கடத்தப்பட்ட அந்த பொண்ணும், பையனும் அதிகபட்சமா 8 மணி நேரம் அடைக்கப்பட்டிருக்காங்க.. அதுக்குள்ள லவ் வருமா? ( அதுக்குள்ள வர்லைன்னா வேற எதுக்குள்ள வரனும்னு எதிர்பார்க்கறே..?) 

3. கடத்தப்பட்டவங்களை எந்த மாங்கா மடையனா இருந்தாலும் ( நிஜமான மாங்கா மடையர்கள் மன்னிக்க) தனித்தனி ரூம்ல தான் அடைச்சு வைப்பான்.. எதுக்கு 2 பேரையும் ஒரே ரூம்ல அடைச்சு வைக்கனும்? ( அடேய் சி பி நீ தாண்டா மாங்கா மடையன்.. ஒரே ரூம்ல அடைச்சு வெச்சாத்தானே 2 பேரும் லவ்வர்ஸ் ஆக முடியும்?)

மேஜிக் கலக்கல்கள் ( வசனங்களில்..... )


1. எந்தப்பிரச்சனை வந்தாலும் தைரியமா இருக்கறதுதான் முதல் தேவைன்னு எங்கப்பா அடிக்கடி சொல்வாரு.. ( உங்கப்பா மட்டும் இல்ல.. எல்லாரோட அப்பாவும் தான் சொல்வாங்க.. ஆனா அதை ஃபாலோ பண்ணனுமே..?)

2. மிஸ்.. உங்க பேரென்ன?

 உயிரோட இருந்து மறுபடி நாம சந்திக்கும் வாய்ப்பு வந்தா பேர் சொல்றேன்..




3. ம் ம் இப்போ உங்களை காப்பாத்திட்டேன்.. இப்பவாவது பேர் சொல்லுங்களேன்.. 

 தேன் மொழி..  ( இதுக்குத்தான் இந்த பில்டப்பா? நான் கூட சொப்பன சுந்தரின்னு நினைச்சேன்)


செமி ஃபைனலுக்கு 3 பேரும் செலக்ட் ஆகிட்டாங்க.. 3வதா வந்த ராம் படம் பிரைஸ் வாங்குச்சு.. ஹீரோ ,ஹீரோயின் சேர்வாங்களா? மாட்டாங்களா?ன்னு ஒரு பரிதவிப்பை ஏற்படுத்துனாங்காட்டி அது செலக்ட் ஆச்சாம்.. ஓக்கே.. 

 ஒரு முக்கியமான விஷயம்.. 3 குறும்படங்கள்லயும் ஹீரோயின்ஸ் அழகு ஃபிகர்கள் தான் .. லாங்க்‌ஷாட்ல பளிச்னு மின்ன்னல் மாதிரி காட்டிட்டதால ( அதாவது சரியா காட்டாததால) அவங்களை சரியா வர்ணிக்க முடில.. ( ஆமா.. இவரு பெரிய சாண்டில்யன். வர்ணிச்சுட்டுத்தான் மறு வேலை)

 அதனால நாளைய இயக்குநர்களுக்கு ஒரு வார்த்தை ஹீரோயின்ஸ்க்கு க்ளோசப் ஷாட் வைங்க.. நீங்க மட்டும் ரசிச்சா போதுமா? ஹி ஹி