Wednesday, July 18, 2012

மூன்றாம் வருடத் துவக்கம் - அட்ராசக்க -டாப் 6 தமிழ் பிளாக்ஸ்

http://www.thedipaar.com/pictures/resize_20110322194501.jpg 

2 வருடங்கள் ஓடிடுச்சு.. அட்ராசக்க வலைப்பூ ஆரம்பிச்சு. ஒவ்வொரு பிறந்த நாள் அன்னைக்கும் தமிழன் என்ன செய்வான்னா ஏதாவது சபதம் எடுப்பான், அப்புறம் மறந்துடுவான்..அந்த மாதிரி இந்த 3 வது பிறந்த நாள் அன்னைக்கும் ஏதாவது செய்யனுமே.. அதனால என்ன பண்ணப்போறோம்னா முதல்ல அட்ரா சக்க வலைப்பூபற்றி, அப்புறம் தமிழ் வலை உலகின் டாப் 6 பிளாக்கர்ஸ் யார் - ஒரு பார்வை, அப்புறம் நன்றி நவிலல்..


முதல் வருடம் முடிந்த போது அட்ராசக்க ஸ்டேட்டஸ் -640 பதிவுகள் (அதுல காப்பி பேஸ்ட் 89) ,  643 ஃபாலோயர்ஸ் ,10,80,000 ஹிட்ஸ் , அலெக்ஸா ரேங்க்கிங்க்ல 49,000 & ட்விட்டர்ல 3290 ட்வீட்ஸ்,அதுல ஃபாலோயர்ஸ் 655.


2வது வருடம் நேத்தோட முடியுது. 1532 பதிவுகள் (அதுல காப்பி பேஸ்ட் 289) ,  1249 ஃபாலோயர்ஸ் 27,58,734 ஹிட்ஸ் , அலெக்ஸா ரேங்க்கிங்க்ல 71,886 & ட்விட்டர்ல 26,048  ட்வீட்ஸ்,அதுல ஃபாலோயர்ஸ் 3105, இண்ட்லி ஃபாலோயர்ஸ் 282



இதுல ஃபாலோயர்ஸ் வளர்ச்சி பார்த்தா முதல் வருடத்தை விட கம்மிதான்.. டபுள் ஆகலை.. மற்ற பதிவர்கள் எல்லாம் டபுள் பண்ணிடறாங்க.. நான் பண்ண முடியலை.. அலெக்சா ரேங்க்ல பின்னால போய்ட்டேன். காரணம்  பிளாக்ஸ்பாட் டாட் இன் என கூகுள் மாற்றியதால் 3 மாசம் வேஸ்ட் ஆகிடுச்சு.. எப்படின்னா டொமைன் வாங்கினது மார்ச் 2012ல.. அப்போ அலெக்சா ரேங்க் 44,000 ல இருந்து அதல பாதாளத்துக்கு போயிடுச்சு. 50 லட்சம் ரேங்க்.. அலெக்சா ரேங்க் என்பது வலை உலகில் உலக அளவில் அந்த கம்ப்பெனி தரும் ரேங்க்.. எந்த அளவு கம்மியா இருக்கோ அந்த அளவு வளர்ந்துட்டு வர்றோம்னு அர்த்தம்.இன்னும் நல்லா உழைக்கனும்.. 


என் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் முக்கியமானவை 

1. காப்பி பேஸ்ட் பதிவுகள் 

2. நடிகைகள்ன் கிளாமர் ஃபோட்டோஸ் போடறேன்

3. ராமநாராயணன் படம் மாதிரி கச கசன்னு போஸ்ட் போட்டுட்டே இருக்கேன்

4. விஜய்யை அதிகமா ஓட்டறேன், அஜித்க்கு சப்போர்ட் பண்றேன்

5. மற்ற பதிவுகளுக்கு முன்போல் வருவதில்லை

6. ட்விட்டர்ல ஓவரா மொக்கை போடறேன்,அதையே ஒரு போஸ்ட்டா தேத்திடறேன்


7. மற்றவர்கள் யாரும் காப்பி பேஸ்ட் பண்ணாத மாதிரி லாக் பண்ணி வெச்சிருக்கேன்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEibVf59Nf2pHoT2oIL-IX1CGIQpoSkr3N2YZXXv9SUweX44lBVWHpJCJXkAYJEcGppis8bbsDU5G62i9HUHRe6iHceaa0I2-XIWXrviwhpsk1LPTOOmVCtMQ_NBOq98jW9O9K30Rqc-ew9S/s1600/Polyresin_Indian_God_Lord_Krishna.jpg

விளக்கங்கள்


1. நமக்குப்பிடிச்ச ஒரு படம் ரிலீஸ் ஆகுது, ஒரு நல்ல நாவல் படிக்கறோம், ஒரு நல்ல ஹோட்டல்ல சாப்பிடறோம், அடுத்து என்ன பண்றோம்?அதை நம்ம நண்பர்கள் கிட்டே ஷேர் பண்றோம்.. ட்விட்டர்ல நல்ல ட்வீட் படிச்சா அதை ஆர் டி பண்றோம்.. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.. அந்த மாதிரிதான் காப்பி பேஸ்ட் போஸ்ட் என்பதும்.. நான் படிச்ச நல்ல சிறுகதைகள், பேட்டிகள், கட்டுரைகள் மற்றவர்களும் படிச்சு பயன் பெறட்டும் என்பதே அதன் நோக்கம்.. ஏற்கனவே அதை படிச்சவங்க ஜஸ்ட் பாஸ்.. அவ்ளவ் தான்..



2. நடிகைகளின் கிளாமர் போஸ்ட் எல்லா போஸ்ட்டுக்கும்  போடறதில்லை
,சினிமா விமர்சனங்களில் மட்டும் தான். படங்களில் இடம் பெறாத படமா கிடைச்சா போடறேன்.. கிளாமர் தூக்கலா இல்லாம பார்த்துக்க முயற்சிக்கறேன்


3. முதல்ல எல்லாம் ஒரு போஸ்ட் தான் போட்டேன். காப்பி பேஸ்ட் போட்டா நீக்கிடுவோம்னு தமிழ் மணம் திரட்டி எச்சரிச்சாங்க.. ஆனா பல காரணங்களால என்னால காப்பி பேஸ்ட் போஸ்ட் போடாம இருக்க முடியல.. அதனால அவங்க என் வலைப்பூவை அவங்க திரட்டில இருந்து நீக்கிட்டாங்க.. அதனால எனக்கு டெயிலி 800  ஹிட்ஸ் குறைஞ்சுது.. அதே போல் இண்ட்லி திரட்டி முதல்ல எல்லாம் எல்லா போஸ்ட்டையும் ஹிட் பண்ணிச்சு , அதன் மூலம் டெயிலி 1800 ஹிட்ஸ் எனக்கு வந்துச்சு.. ஆனா ஏனோ அவங்களும் பிரபலமான இடுகைகள் பிரிவில் என்னுதை சேர்ப்பது இல்லை. அதனால இண்ட்லி மூலமா வந்த ஹிட்ஸ் 1800 போயிடுச்சு, அப்போ டோட்டல் லாஸ் 2600 ஹிட்ஸ். அதை சரிக்கட்ட, பேலன்ஸ் பண்ண போஸ்ட்டோட எண்ணிக்கையை  ஏற்ற வேண்டியதா போச்சு.. ஒரு நாளுக்கு சராசரி 2000 விசிட்டர்ஸ், பேஜ் வியூஸ் 5000 , இதுதான் என் டார்கெட். அதுக்குத்தகுந்தாற்போல் போஸ்ட் போடறேன்



4.விஜய், அஜித் எல்லா ரசிகர்களும் என்  நண்பர்களே. காவலன், நண்பன் இரண்டு படங்களுக்கும் பாசிட்டிவ் விமர்சனம் எழுதி இருக்கேன்.. வேலாயுதம் சுமார்னு சொல்லி இருக்கேன், மங்காத்தா விமர்சனத்தில் பெண்களை கவராது எனவும் அசல் டப்பா எனவும் சொல்லி இருக்கேன், ட்விட்டர்ல சில விஜய் ரசிகர்கள் அஜித்தை ஓவரா கலாய்க்கறப்போ சும்மா விளையாட்டுக்கு அவங்களுக்கு எதிர் ட்வீட் போடறேன்..பில்லா 2 படத்தை பிரமோட் பண்ற மாதிரியும் ட்வீட் போட்டேன், கிண்டல் பண்ணியும் ட்வீட் போட்டேன்..


5. அம்மாவின் ஆட்சியில் கரெண்ட் அடிக்கடி கட் ஆவதால் நெட்டில் நான் இருக்கும் நேரம் குறைவு. இருக்கும் கொஞ்ச நஞ்ச நேரத்தில் என் பிளாக்கில் பதிவு போடவே நேரம் சரியா இருக்கு. இருந்தாலும் இப்போ ஓரளவு சீராகிடுச்சு, இனி டெயிலி மினிமம் 10 பிளாக்காவது வர முயற்சி பண்றேன்


6. ட்விட்டர்ல எல்லா ட்வீட்டும் பிரமாதமாப்போட்டுட முடியாது, ஆனானப்பட்ட மணிரத்னமே ராவணன், ஆயுத எழுத்து போன்ற டப்பா படம் குடுத்திருக்காரு.. மனசுல பட்டதை ட்விட்டா போடறோம்.. சிலது முன்னே பின்னே தான் இருக்கும் , கண்டுக்காதீங்க.. அந்த ட்வீட்ஸ் வேஸ்ட்டா போயிடக்கூடாதுன்னு டெயிலி அதிகாலை 5 மணீக்கு ஒரு பதிவா போட்டுடறேன்


7. நான் மற்ற பதிவு காப்பி பேஸ்ட் பண்ணி போடும்போது நன்றி - என அவங்க பேரை சொல்லிடறேன், ஆனா சில பிரபல சினிமாவலைத்தளங்கள் என் பேர் குறிப்பிடாம சினிமா விமர்சனத்தை சுட்டு போட்டுடறாங்க.. அதை கண்ட்ரோல் பண்ணவே அப்படி வெச்சிருக்கேன்./. மீறி யாராவது சுட்டாலும் எந்த பிளாக்னு கண்டு பிடிச்சுடலாம்..


இப்போ டாப் 6 வலைப்பூக்கள்


1. சவுக்கு - பிளாக் ஆரம்பிச்சு ரெண்டரை வருடங்கள் தான் ஆகுது, ஆனா அமோக வரவேற்பு, காரணம் அரசியல் ரகசியங்கள் அம்பலப்படுத்தும் அசாத்திய துணிச்சல்.. ஆல்ரெடி உளவுத்துறையில் ஒர்க் பண்ணி இருப்பதால் பல விபரங்கள் கிடைக்குது. 792 பதிவுகள்  ,  ---- ஃபாலோயர்ஸ் 89,90,621 ஹிட்ஸ் , அலெக்ஸா ரேங்க்கிங்க்ல 99,919. எனக்குத்தெரிஞ்சு இவ்வளவு குறுகிய கால கடத்தில் அபார வளர்ச்சி அடைந்த தமிழ் வலைப்பூ எதுவும் இல்லை.. நெம்பர் ஒன் இதுதான்..அதிக பட்ச ஆன்லைன் ஸ்டேட்டஸ் ஒரே டைமில் - ஆன் லைன் 324 பேர்.சினிமா விமர்சனம் போடாமல் வெறும் அரசியல், விழிப்புணர்வு மட்டுமே போட்டு ஹிட்ஸ் அள்ளுபவர்.. ரெண்டரை வருஷமா பிளாக் எழுதுறார்



2. உண்மைத்தமிழன்- ஒரு படம் ரிலீஸ் ஆச்சுன்னா இவர் எழுதும் பதிவின் நீளம் உண்மையான பட ஸ்கிரிப்டை விட நீளமா இருக்கும்னு கிண்டலா எல்லாரும் சொன்னாலும் ரொம்ப டீட்டெயிலா விமர்சனங்கள் இருக்கும்.. தமிழ் சினிமாவில் சாமான்யர்கள் அறிந்திராத பல நுணுக்கமான விஷயங்கள் இருக்கும். கூகுள் சர்ச்சில் இவரது சினிமா விமர்சனங்கள் தான் முன்னணியில் இருக்கு.. 881 பதிவுகள்1224 ஃபாலோயர்ஸ் ஒரு கோடியே 36 லட்சத்து 10,250  ஹிட்ஸ் , அலெக்ஸா ரேங்க்கிங்க்ல 3,37,775,அதிக பட்ச ஆன்லைன் ஸ்டேட்டஸ் ஒரே டைமில் - ஆன் லைன்  221 பேர்.தமிழ் வலைப்பூக்களில் அதிக ஹிட்ஸ் பெற்றவர் இவர் தான். தனக்கு அடுத்து வரும் கேபிளை விட இவர் டபுள் மடங்கு ஹிட்ஸ் பெற்று முன்னிலையில் இருக்கார்,5 1/2 வருசமா பிளாக் எழுதுறார்.


3. கேபிள் சங்கர்  - கொத்து புரோட்டா, சாப்பாட்டுக்கடை இரண்டிலும் செம ஃபேமஸ் ஆனவர்.. இவரது சினிமா விமர்சனத்தை படிக்காத சினிமா பிரபலங்கள் ரொம்ப கம்மி. டெயிலி நைட் டைமில் தான் பதிவு போடுவார்.. இப்போ சினிமாத்துறையில் எண்ட்டர் ஆகிட்டார்.. ( எண்ட்டர் கவிதைகள் ராசி போல ) 1131பதிவுகள்  ,1839ஃபாலோயர்ஸ் ,53,29,431 ஹிட்ஸ் அலெக்ஸா ரேங்க்கிங்க்ல 94,223,அதிக பட்ச ஆன்லைன் ஸ்டேட்டஸ் ஒரே டைமில் - ஆன் லைன் 180  பேர். 6 வருடங்களா எழுதறார்


4. ஜாக்கி சேகர் - ஆங்கிலப்படங்கள், உலகப்படங்கள் விமர்சனம், சென்னை மக்கள், நகரம் பற்றிய விழிப்புணர்வுப்பதிவு, சாண்ட்வெஜ் நான் வெஜ் போன்றவை இவரது பிளஸ். வலை உலகில் அதிகம் பேரால் தனி மனித தாக்குதல் பெற்றவர் என்ற பெருமையும், அதை கொஞ்சம் கூட கண்டுக்காமல் இருப்பவர் என்ற பெருமையும் உண்டு.இவரைத்தாக்கவெனவே 6 வலைப்பூக்கள் தனியா இருக்கு.. 1115 பதிவுகள்  ,1480 ஃபாலோயர்ஸ் ,36.36,689 ஹிட்ஸ் அலெக்ஸா ரேங்க்கிங்க்ல 1,79,364 ,அதிக பட்ச ஆன்லைன் ஸ்டேட்டஸ் ஒரே டைமில் - ஆன் லைன்  160   பேர்.  நாலரை வருடங்களா எழுதறார்


5. வினவு  - அரசியல், கல்வி சமப்ந்தப்பட்ட விழிப்புணர்வுக்கட்டுரைகள் எழுதிப்புகழ் பெற்றவர்கள். ஒரு காலத்தில் தமிழ் மண கட்டண சேவை மூலம் முகப்புப்பக்கத்தை ஆக்ரமித்தவர்கள்.. இவங்க குருப்ல 12 பேர் இருக்காங்க.. மாத்தி மாத்தி எழுதுவாங்க போல  ,1434 பதிவுகள்  3507  ஃபாலோயர்ஸ் ,59 லட்சம் ஹிட்ஸ் அலெக்ஸா ரேங்க்கிங்க்ல 1,06,090 ,அதிக பட்ச ஆன்லைன் ஸ்டேட்டஸ் ஒரே டைமில் - ஆன் லைன்  170   பேர்.  நான்கு வருடங்களா எழுதறார். இவருக்கும் அட்ராசக்கவுக்கும் உள்ள ஒற்றுமை இருவரும் ஒரே நாள், மாதம் ( ஜூலை 17) எழுத வந்தாங்க,  4 வருடங்களா எழுதறாங்க


6. சித்தர்கள் ராஜ்ஜியம் - மேலே சொன்ன 5 வலைப்பூக்களும் அரசியல், அல்லது சினிமா சார்ந்து புகழ் பெற்ற பிளாக்ஸ்னா இது ரொம்பவே வித்தியாசம். எந்த திரட்டியிலும் இணைக்காம 3430 ஃபாலோயர்ஸ், 694 பதிவுகள்
32,36,250 ஹிட்ஸ்,  2 1/2 வருடங்களா எழுதறார்.. முழுக்க முழுக்க சித்தர்கள் பற்றிய அரிய தகவல்கள் , கட்டுரைகள் மட்டுமே இருக்கும்.. மற்ற எந்த தமிழ் வலைப்பூவுக்கும் இல்லாத பெருமை டோட்டல் விசிடர்ஸை விட பேஜ் வியூஸ் 5 மடங்கு இருப்பதே..  மற்ற எல்லா பிலாக்கர்ஸும் அதை 1 :3 என்ற விகிதத்தில் வைத்திருக்கும்போது , சிலர் 1;2 என வெச்சிருக்கும்போது இவர் மட்டும் 1;5 என்ற விகிதத்தில் வைத்து இருக்கார்.. 



நன்றியுடன் நினைத்துப்பார்க்கும் நபர்கள்

1.நல்லநேரம் சதீஷ்குமார் - http://www.astrosuper.com/பத்திரிக்கைகளில் ஜோக்ஸ் எழுத ஆரம்பித்த காலத்திலிருந்தே இவர் எனக்கு பழக்கம். நிரஞ்சனா,ரிப்போர்ட்டர் போன்ற இதழ்களில் இருவரும் பணி ஆற்றினோம்.. இருவருக்கும் உள்ள பொதுவான அம்சம் நகைச்சுவை உணர்வு,கலாய்த்தல்...இருவருக்கும் உள்ள வேறுபாடு கடவுள் நம்பிக்கை,ஜோதிடம்.. அவருக்கு 2லும் அளவு கடந்த நம்பிக்கை....கால ஓட்டத்தில் அவர் ஜோதிடராகவே ஆகி விட்டார்.. எனக்கு இன்னும் கடவுள் நம்பிக்கை வரவில்லை.. அவர் பிளாக்கில் களவாணி பட விமர்சனம் முதன் முதலில் எழுதினேன்..படம் சூப்பர் ஹிட் என்று ரிலீஸ் ஆன அன்றே மாலை 3 மணிக்கு விமர்சனம் போட்டேன்..  பிறகு 2 மாதங்களில் தனி பிளாக் அவரே ஓப்பன் பண்ணிக்கொடுத்தார்.. நான் ஈரோடு,அவர் சித்தோடு என்பதால் அடிக்கடி இருவரும் சந்திக்க வாய்ப்பு உண்டு. அளவளாவுவோம்.. கருத்துப்பரிமாற்றங்கள் காரசாரமாக நடக்கும்.. 

2. ரமேஷ் ரொம்ப நல்லவன் சத்தியமா -   http://sirippupolice.blogspot.com/2011/07/1.htmlநான் எழுதிய 640 போஸ்ட்களில் 184 போஸ்ட்களுக்கு மீ த ஃபர்ஸ்ட் என கமெண்ட் போட்டவர்..ஆரம்ப நாட்களிலேயே இவர் எனக்கு அளித்த ஊக்குவிப்பு என் எழுத்தை மேம்படுத்த உதவியது.. செம காமெடியான ஆள்.. மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவார்.. சென்னை சென்ற போது ஒரு முறை சந்தித்து எங்கள் நட்பை பலப்படுத்திக்கொண்டோம்..பிறகு விகடன் காப்பி பேஸ்ட் போஸ்ட்,பிளாக்கில் ஃபிகர்கள் ஃபோட்டோ போடுவது என அவருக்கு சில விஷயங்கள் பிடிக்காத போது, ஓப்பனாக ஃபோன் பண்ணி எதிர்ப்பு தெரிவித்தார்.. என்னை நேரடியாக தாக்கி 3 பஸ்கள் விட்டார்.. இருந்தாலும் இன்னும் நட்பு நீடிக்கிறது.. அவரது ஆசைப்படி அந்த இரண்டையும் முழுதாக என்னால் தவிர்க்க முடியா விட்டாலும் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வருகிறேன்..

3. திருப்பூர் புரட்சித்தலைவன் - இவரும் ஆரம்ப கட்ட நண்பர் + வாசகர்.. என் பதிவுகள் நன்றாக இருந்தால் ஓக்கே என்பார், குறை இருந்தால் ஓப்பனாக சொல்வார்.. இந்த மாதிரி ஓப்பன் மைண்ட் வாசகர்கள் தான் ஒரு படைப்பாளிக்குத்தேவை.. கண்ணாடி போல.. ஏன்னா நாம எது எழுதுனாலும் அது செம அப்டின்னு தான் நாம் நினைப்போம்.. ஆனா மற்றவர்களுக்குத்தான் உண்மை நிலவரம் புரியும்.. 

4. பன்னிக்குட்டி ராம்சாமிhttp://shilppakumar.blogspot.com/ ஒரே அலை வரிசை எண்ணம் கொண்ட இருவர் நண்பராக அமைந்து விட்டால் அதை விட ஒரு நல்ல கொடுப்பினை ஒரு மனிதனுக்குக்கிடைக்காது.. என்னை விட படிப்பு,அனுபவம்,திறமை அனைத்திலும் முன்னே இருந்தாலும் எங்களை கண்ணுக்குத்தெரியாத ஒரு பாச வலையால் கட்டியது இருவருக்கும் பொதுவான காமெடி உணர்வு, கலாய்க்கும் கலாட்டாத்தனம்.. என் பதிவுகளுக்கு இவரது கமெண்ட்கள் மேலும் மெருகு சேர்த்தது.. பல வாசகர்கள் ஃபோன் பண்ணி இதை தெரிவித்தார்கள்..ஈரோட்டில் இவர் ஒரு முறை வந்த போது நேரில் சந்தித்தோம். அது பற்றி தனியே ஒரு பதிவு விரைவில் போடுவேன்..எனது பஸ்கள் களை கட்ட இவரது கமெண்ட்ஸ் முக்கிய காரணம்..

5. விக்கி உலகம் தக்காளி  http://vikkiulagam.blogspot.com/
காதல் கோட்டை படத்தில் வருவது போல் இருவரும் பார்க்காமலேயே நட்பு வளர்த்தோம்.. தினமும் 8 டூ 9 ஃபோனில் பேசுவார்.. (அவர் தான் பேசுவார் ஹி ஹி )பதிவுலகம் பற்றி பரிமாறிக்கொள்வோம்.. இவர் ஒரு ராணுவ வீரர் என்பது சமீபத்தில் தான் தெரிந்தது.என் மதிப்பு பன்மடங்கு உயர்ந்தது..வியட்நாமில் இருக்கிறார்.. நான் பழகிய வரை தன் மனைவியைத்தவிர எந்த ஒரு பெண்ணையும் மனதாலும் நினைக்காத அபூர்வ மனிதர்.. ஆனால் நான் சும்மா கமெண்ட்ல கலாய்ப்பேன்.. இப்போது அவர் மனைவி வியட்நாம் வந்த பிறகு சரியாக என்னிடம் பேசுவதில்லை.. ( மனைவிட்ட திட்டு வாங்கவே நேரம் சரியா இருக்காம்)

http://edesibabes.com/wp-content/uploads/2009/02/superior_college_girls.2q7woacrj9yc0w4csowgkkww8.agtqkzp57u8sw4wcokksok0g0.th-595x394.jpg

6. லேப்டாப் மனோ - http://nanjilmano.blogspot.com/பதிவுலகில் என்னை டேய் என உரிமையுடன் அழைக்கும் ஒரே பதிவர். (இதுதான் சாக்குன்னு ஆளாளுக்கு அப்படி கூப்பிடக்கூடாது)நெல்லை பதிவர் சந்திப்பில் தான் நேரில் சந்தித்தோம்.. ஆள் புரோஃபைலில் கேப்டன் மாதிரி மிரட்னாலும் நேரில் உதய கீதம் மோகன் மாதிரி சாஃப்ட் டைப். 

7.இலங்கை அதிரடிப்பதிவர் நிரூபன்http://www.thamilnattu.com/
எனது பிளாக் பாஸ்வோர்டு இவரிடம் உண்டு.. எப்போ வேணும்னாலும் உதவின்னு கேட்டா செஞ்சு குடுப்பார், (ஆளாளுக்கு தொந்தரவு  பண்ணாதீங்கப்பா.. அப்புறம் எனக்கு பண்ண மாட்டார்)நல்ல மனிதர்.. இவரது பல கட்டுரைகள் என்னை வியப்பில் ஆழ்த்தியதுண்டு.. 

8. மாத்தி யோசி ஜீவன் - http://maaththiyosi-maaththiyosi.blogspot.com/ஃபிரான்சில் பணியாற்றிய இவர் என் ஆத்மார்த்த நண்பர். பதிவுலகில் விக்கி தக்காளிக்கு என் நட்பில் முதல் இடம் என்றால் இவருக்கு அடுத்த இடம்.. நான் பல சமயம் மனம் கலங்கிய நாட்களில் எல்லாம் எனக்கு ஆறுதல் அளித்து உதவி செய்தவர்.. ஒத்தடம் கொடுத்தவர்.

எனது பிளாக்கிற்கு பின்னூட்டம் போட்டது மூலம் அறிமுகம் ஆனவர்.. நான் ஆஃபீஸ் வேலையாக வெளியே ஃபீல்டு ஒர்க்கில் இருக்கும்போது என் பிளாக்கில் பதிவு போடுபவர் இவர் தான். கோவை பெண் பதிவர் கொலை வழக்கு என்னும் ஒரு தொடர் பதிவுக்கு காரண கர்த்தா இவரே.. அந்தப்பதிவு விரைவில் வெளிவரும்.. உண்மைக்கதை அது..

10. சித்தர்கள் ராஜ்ஜியம் தோழி - http://siththarkal.blogspot.com/இவர் ஒரு இலங்கைப்பதிவர்.என் பிளாக்கில் பல லே அவுட் மாற்றங்களை கொண்டு வந்தவர். நான் மற்ற விகடன் பதிவுகளை காப்பி பேஸ்ட் செய்தாலும் என் பதிவை யாரும் காப்பி பேஸ்ட் பண்ணி விடக்கூடாது (!!!!) எனும் உயர்ந்த கொள்கைக்கு உதவி செய்தவர்..  

( ரொம்ப தொல்லைப்பா)

இந்தக்கட்டுரை நீண்டு கொண்டே போய் விடும் அபாயம் இருப்பதால் இத்துடன் நன்றி நவிலல் நிகழ்ச்சியை நிறுத்துகிறேன்.. 

காமெடி,சினிமா,கலாய்த்தல் என்ற பாதையிலிருந்து கொஞ்சம் விலகி இனி சமூகம் சார்ந்த  விழிப்புணர்வுப்பதிவுகள்,அனுபவப்பதிவுகள் அதிகம் போட உத்தேசித்து உள்ளேன்..  கமெண்ட் போடும் நண்பர்கள் தங்கள் கருத்தை கூறவும்.. 

 அன்பு உள்ளங்கள்க்கு நன்றி 

கருண்,உணவுலகம்அண்ணன், செங்கோவி, ம தி சுதா ,டகால்டி,ஹேமா, மைந்தன் சிவா பட்டா பட்டி,வைகை,கவிதைக்காதலன்,யாதவன்,ராஜபேட்டை ராஜா,டெரர் கும்மி குரூப்ஸ்,உண்மைத்தமிழன்,கேபிள் சங்கர்,அப்துல்லா அண்ணன்,ராஜராஜேஸ்வரி,சங்கவி,ஜேம்ஸ்பாண்ட் சதீஷ், ஃபிலாசஃபி பிரபாகரன்,தமிழ்வாசி,,பாபு,சேட்டைக்காரன்,பிரகாஷ்,கூடல்பாலா,ராம்வி,கடம்பவனக்குயில்,மணிவண்னன்,ராஜராஜெஸ்வரி,
ஆஞ்சலின்,சவுந்தர்,குணசேகரன்,கோவை நேரம் ,மதுரன்,காங்கேயம் நந்தகுமார்,செல்வா,சசிகுமார்,ரமேஷ்பாபு,ஜீ,அமைதி அப்பா,ரியாஸ் அகமது ,கோகுல்,மைந்தன் சிவா,ஷிவா ஸ்கை,சரியல்ல,சத்யா,நிகழ்வுகள்,கானோ வரோ,கல்பனா ,உமாகிருஷ்,சசிகா மேனகா,லக்‌ஷ்மி,ஹேமா, சித்ரா, நாய்க்குட்டி மனசு ரூபினா,ஜோசஃபின் ,துஷ்யந்தன்,மற்றும் விடுபட்ட உள்ளங்கள் என்னை மன்னிக்கவும் ( சி பி பிளாக்ல மன்னிப்பு கேட்காம இருந்தா எப்படி? ஹி ஹி )


ஆனா ஒண்ணு.. நண்பர்கள்க்கு நன்றி சொல்ல ஆரம்பிச்சா அதுக்கு தனி பதிவே போடனும்.. முடிஞ்ச வரை நினைவில் நிற்பவர்களுக்கு பெயர் சொல்லி நன்றி சொல்லிக்கறேன்

http://greetings.webdunia.com/cards/tm/thank_you/thaks02.jpg
லே அவுட், டெம்ப்ளேட் விஷயங்களில் அடிக்கடி உதவி புரிந்து வரும் சித்தர்கள் ராஜ்ஜியம் தோழி, நிரூபன், கடம்பவனக்குயில்,ராஜி நால்வருக்கும் முதல் நன்றிகள்

பிளாக் ஆரம்பித்த புதிதில் கமெண்ட்ஸ் போட்டு ஊக்குவித்த சிரிப்பு போலீஸ் ரமேஷ்,ராம்ஜி யாஹூ,திருப்பூர் புரட்சித்தலைவன்க்கு என் நன்றிகள்

ஆரம்ப கட்டத்தில் தன் கமெண்ட்ஸ் மூலம் என்னை ஊக்குவித்த பன்னிக்குட்டி ராம்சாமி & டெர்ர் குரூப் நண்பர்கள்க்கு நன்றி

பதிவுலகின் உயிர் நண்பர்களும், அவ்வப்போது உயிரை எடுக்கும் நண்பர்களுமான விக்கி உலகம் தக்காளி, நாஞ்சில் மனோ எனும் லேப்டாப் மனோ இருவருக்கும் ஸ்பெஷல் நன்றிகள்

                
இராஜராஜேஸ்வரி- மணிராஜ்
ராம்வி-மதுரகவி
சித்ரா-கொஞ்சம் வெட்டிப்பேச்சு,
கடம்பவனக் குயில்- கடம்பவன பூங்கா
அம்பாளடியாள்- அம்பாளடியாள்
சாதாரணமானவள்- சாதாரணமானவள்
கீதா- கீதமஞ்சரி
மாலதி-மாலதியின் சிந்தனைகள்
ஹேமா- வானம் வெளித்த பின்னும்
ரூஃபினா செல்ல நாய்குட்டி
ஜோஸ்பின் -ஜோஸ்பின் கதைக்கிறேன்,
கல்பனா-
ஏஞ்சலின்-காகித பூக்கள்
லக்‌ஷ்மி-குறை ஒன்றும் இல்லை
சசிகா -மேனகா-
இந்திரா - மொக்கை இந்திரா 
thenammaiதேனம்மை லெக்ஷ்மணன் 

ஆஃபீசர்- உணவு உலகம்
சதீஷ்குமார்- நல்லநேரம்
பன்னிக்குட்டி ராம்சாமி- ஸ்டார்ட் ம்யூசிக்
ரமேஷ் சுப்புராஜ்- சிரிப்பு போலீஸ்
 மாத்தி யோசி -ஜீவன்
ராஜேந்திரன் - நண்டு நொரண்டு
மனோ- நாஞ்சில் மனோ
.விக்கி- விக்கியின் அகடவிகடங்கள்
பிரகாஷ்-தமிழ்வாசி பிரகாஷ்
ராஜா-ராஜபாட்டை
கருண்- வேடந்தாங்கல்
சௌந்தரபாண்டியன் கவிதைவீதிசௌந்தர்
.K.S.S.ராஜ்- நண்பர்கள்/நண்பர்கள்
துஷ்யந்தன்-
மனசாட்சி மனசாட்சி பஜ்ஜி கடை
மதுமதி- தூரிகையின் தூறல்
ரமணி- தீதும் நன்றும் பிறர் தர வாரா

ஆரூர் மூனா செந்தில்

சேட்டைக்காரன்


சேலம் தேவா, கோகுலத்தில் சூரியன் வெங்கட், நாகராஜ சோழன் எம் ஏ, நாய் நக்ஸ் நக்கீரன்

கணேஷ்- மின்னல்வரிகள்
சுரேஷ்குமார்-வீடு
சீனா அய்யா- வலைச்சரம்
ரத்தனவேல்- ரத்தனவேல் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து,
கோவை நேரம்- கோவை நேரம்
நிரூபன் நாற்று
ரெவரி- மெல்ல தமிழ் இனி வாழும்
செல்வா- செல்வா கதைகள்
சென்னை பித்தன்
ரஹீம் கலாஸி
சங்கவி- சங்கவி
செங்கோவி- செங்கோவி
சூர்யஜீவா- ஆணிவேர்
ஐ.ரா.ரமேஷ்பாபு- உரைகல்
கும்மாச்சி- கும்மாச்சி
சசிகுமார்- வந்தேமாதரம்
சரியில்ல-
பெ.சொ.வி-
M.R.
கோவிந்தராகன். மதுரை
மதுரன்
ஹாலிவுட் ரசிகன்
கோகுல்- கோகுல் மனதில்
தனிமரம்
பிலாசபி பிராபகரன் - பிரபா ஒயின் ஷாப்
ரமேஷ் வெங்கடபதி
கேரளக்காரன் ஆனாலு அதிரி புதிரி
வைகை
சேலம் ரியாஸ், மொஹம்மத்

யானைக்குட்டி
அனைவருக்கும் என் நன்றிகள்.. 


வாழ்த்து சொல்பவர்கள் தங்கள் ஆலோசனையையும் சொல்லவும்.. பிளஸ் என்ன? மைனஸ் என்ன? என்பதையும் கூறவும்.. அப்போதுதான் என்னை செதுக்கிக்கொள்ள, திருத்திக்கொள்ள ஏதுவாக இருக்கும்.. 


ட்விட்டர் ஃபிரண்ட்ஸ் , கரூர் ஜெகன் @ ஆல்தோட்டபூபதி, ஈரோடு தங்கதுரை : )), , Senthil Nathan , jeevan , Parisalkaaran ,ராஜன் , , C.Kesavan,@ Sudha,, நையாண்டி,@ SeSenthilkumar,, மதுரை ரியாஸ், கரையான்,DKCBE, பாரத்...பாரதி...,, புலவர் தருமி, GiRa, vivaji,

சிங்கப்பூர் சாந்தி, பல்ஸ்மாலா, கோவை அரட்டைகேர்ள், கோவை சவுமி, மதுரை உமாகிரிஷ்,சென்னை மோஹனா,சோனியா, மங்கை,கோவை கிரேட் விஜி, @ sbnu , பூங்குழலி :) , :) , JanuShath அனைவருக்கும் என் நன்றிகள்

தொடர்ந்து ஆதரவு அளிக்க அனைவரையும் வேண்டி  விரும்பி கேட்டுக்கொல்கிறேன்.. அடச்சே கொள்கிறேன்....


டிஸ்கி - மேலும் என்னிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதை கமெண்ட்டில் போடவும் ( பண உதவி  எல்லாம் கேட்கக்கூடாது ஹி ஹி )

69 comments:

வெற்றிவேல் said...

நண்பரே, அனைத்து பதிவர்களின் பெயருக்குப் பின்னால் அவர்களது ப்ளாக் இடுக்கை இணைப்பை கொடுத்திருந்தால், மிகவோ=உம நன்றாக இருந்திருக்கும்... சிறு கடினமான பணிதான், ஆனால் செய்திருக்கலாம்...

சி.பி.செந்தில்குமார் said...

@இரவின் புன்னகை

:-0 வேணும்னேதான் குடுக்கலை

காரணங்கள் 2

1. கூகுள் சர்ச்ல அவங்க பேரை போட்டாலே லிங்க் வந்துடும்

2. அவங்களை அறிமுகம் பண்ற அளவு இவன் வந்துட்டானா? என்ற கேள்வி வராம தவிர்க்க

கூடல் பாலா said...

வாழ்த்துக்கள் அண்ணா!

TERROR-PANDIYAN(VAS) said...

எப்பா சாமி படிச்சி முடிக்கிரதுகுள்ள மூச்சி முட்டுது.. இவ்வளவு பெரிய பதிவுக்கு பதில் வாழ்த்துகள் :)

வெளங்காதவன்™ said...

வாழ்த்துக்கள்!

அம்பாளடியாள் said...

வாழ்த்துக்கள் மென்மேலும் தங்கள் வலைத்தளம் சிறந்து விளங்க
சிறப்பான நற் செய்திகள் பொலியட்டும்!....மிக்க நன்றி சகோதரரே பகிர்வுக்கு .

வெளங்காதவன்™ said...

//TERROR-PANDIYAN(VAS) said...

எப்பா சாமி படிச்சி முடிக்கிரதுகுள்ள மூச்சி முட்டுது.. இவ்வளவு பெரிய பதிவுக்கு பதில் வாழ்த்துகள் :)////

ச்சே! திருந்தவே மாட்டியா நீ?
வாழ்த்துக்கள்யா அது... போ...போயி சேகர் அண்ணன்ட்ட ட்ரெயினிங் எடுத்திட்டு வா!!!

:-)

TERROR-PANDIYAN(VAS) said...

காப்பி செய்யும் ஆப்ஷன் இல்லாத காரணத்தால் பிடித்த / பிடிக்காத வரிகளை எப்படி கோட் செய்வது என்று முடிந்தால் விளக்கவும்...

TERROR-PANDIYAN(VAS) said...

சமூகம் சார்ந்த விழிப்புணர்வு பதிவுகள் எழுதுவது பற்றி...

ஆணியே புடுங்க வேண்டாம்.

(நமக்கு ஏன் பாஸ் அந்த வேலை)

rajamelaiyur said...

congrats.. thala

Thirumalai Kandasami said...

வாழ்த்துக்கள்

Unknown said...

சித்தப்பு வாழ்த்துகள்....

இன்னியோட பதிவு போடுறத நிறுத்தப் போறீங்களா....!அவ்வ்வ்வ்வ்வ்வ்

Unknown said...

எனக்கு ஓவரா குடைச்சல் கொடுப்பவர்கள் என்று என் பெயரையும் நாய்நக்ஸ் பெயரையும் ஏன் போடலை......நாங்க கோவத்தில இருக்கிறோம் மாலை 6.00மணிக்கு போன் போடுவோம் ஜாக்கிரதை!

சி.பி.செந்தில்குமார் said...

@koodal bala

நன்றி! சந்தடி சாக்குல அண்ணானு சொன்னா அப்புறம் அங்கே வந்து மானாவரியாக மைனஸ் ஓட்டு போடப்படும்

சி.பி.செந்தில்குமார் said...

@TERROR-PANDIYAN(VAS)

என்னது> இந்தப்பதிவை முழுசா படிச்சுட்டீங்களா? அடங்கோ, அப்பொ கேள்விகள் கேட்கலாமா?

சி.பி.செந்தில்குமார் said...

@வீடு சுரேஸ்குமார்

அதான் நீங்களே சொல்லிட்டீங்களே

சி.பி.செந்தில்குமார் said...

@Thirumalai Kandasami


நன்றிகள் ;-0

Unknown said...

ரொம்ப நன்றி காட்டும் நமது நண்பர் சிபிசெந்தில்குமாரை வாழ்த்தி பிஸ்கட் மாலையை அணிவிக்கிறோம்..எல்லோரும் ஜோரா கைதட்டுங்க..! # நெஞ்ச நக்கிட்டாருங்கோவ்!

சி.பி.செந்தில்குமார் said...

@ரமேஷ் வெங்கடபதி

பொறை பிஸ்க்கட்டா?

பால கணேஷ் said...

யப்பா... ஒருத்தரையும் விடாமல் நன்றி சொல்வது பெரிய விஷயம் செந்தில். அசத்திட்டீங்க. மூன்றாம் ஆண்டு துவக்கத்தில் மென்மெலும் வெற்றிகளைக் குவிக்க என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

ராஜி said...

மூன்றாம் ஆண்டை தொடங்கியிருக்கும் அட்ராசக்கை வலைப்பூவிற்கும், அதுல மொக்கை பதிவா சாரி நல்ல கருத்தாழமிக்க பதிவா போட்டு தள்ளும் சிபி சாருக்கு என் வாழ்த்துக்களை சொல்லிக்குறேனுங்க.

முத்தரசு said...

அட... மூணாவது வருஷம் தொடக்கம் வாழ்த்துக்கள் சித்தப்பு வாழ்த்துக்கள்..

நன்றி ஞாபகத்தில் இருக்கேனே.
(வேறு ஓர் மன அழுத்தம் ஆகைனால் தொலைபேச இயலவில்லை)

சேகர் said...

தயவு செஞ்சு அந்த ரேடியோ பொட்டிய தூக்குங்க.. இம்ச தாங்க முடியல..சமூகம், சீர்திருதம்னு, அப்டியே கொஞ்சம் கவிதையும் நான் எழுதுனேன். நீங்க தான சினிமா விமர்சனம் எழுத சொன்னீங்க. இப்ப நீங்களே சமூகம், சீர்திருதம் போனா நாங்க என்ன பன்றது...ஆக, மொத்ததுல மூணு வருசமா ஆபீஸ்ல பாதி நேரம் வேலை செய்யாம டிமிக்கி குடுதிருகீங்க..

உலக சினிமா ரசிகன் said...

வாழ்த்துக்கள் சிபி.
சிறுகதைகளை தொடரவும்.
அதை மட்டும் மிஸ் பண்ணவே மாட்டேன்.

ராஜி said...

வாழ்த்து சொல்பவர்கள் தங்கள் ஆலோசனையையும் சொல்லவும்.. பிளஸ் என்ன? மைனஸ் என்ன? என்பதையும் கூறவும்.. அப்போதுதான் என்னை செதுக்கிக்கொள்ள, திருத்திக்கொள்ள ஏதுவாக இருக்கும்
>>>
ம்க்கும் சொல்லிட்டா மட்டும் திருந்திடுற மாதிரிதான்

ராஜி said...

வெறும் நன்றி நவிலல் சொல்லிட்டா மட்டும் போதாது. இன்னும் பேமெண்ட் வந்து சேரலை அதை முதல்ல கவனிங்க.

தாமரைக்குட்டி said...

வாழ்த்துக்கள் சிபி சார்.... மூன்றாவது வருடம் கலக்கோகலக்குன்னு கலக்க வாழ்த்திக்கிடுதேன்.... குறைசொல்ல்வதெற்கெல்லாம் இல்லை..... நீங்க எப்பவுமே என்னோட பேவரிட் தான்....

dfgtrdefg said...

மூன்றாம் ஆண்டில் கலக்க வரூம் " அட்ரா.. சக்க" அதிரடி சக்க வாழ்த்துகள்

Unknown said...

வ‌லைத்த‌ள‌த்தில் த‌ன‌க்கு என்று ஒரு இட‌த்தை த‌க்க‌ வைத்துக் கொண்டு,

மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும்

"அட்ரா...ச‌க்க‌..."

மென் மேலும் வ‌ள‌ர‌

அடியேனின் அன்பு வாழ்த்துக்க‌ள்...

த‌ங்க‌ள் ப‌திவில் ப‌டித்த‌தில் பிடித்தது...

சினிமா விம‌ர்ச‌னங்க‌ள் குறிப்பாக‌ வ‌ச‌ன‌ங்க‌ள்...

ந‌கைச்சுவைக‌ள்...

நேர‌ம் இல்லாத‌ கார‌ண‌த்தால் எல்லா ப‌திவுக‌ளும் என்னால் ப‌டிக்க‌ முடிய‌வில்லை...

வ‌ரும் ஆண்டில் மேலும் மிக‌ ந‌ல்ல‌ "ஹிட்" ப‌திவ‌க‌ளை கொடுக்க‌ இறைவ‌ன் த‌ங்க‌ளுக்கு (ந‌ம்பிக்கை இல்லை என்றாலும்) ம‌ற்ற‌வ‌ர்க‌ளின் பிரார்த்த‌னைக்காக‌ அருள் புரிவாராக‌.

என்றும் ந‌ட்புட‌ன்

க‌ந்த‌ன்...

உணவு உலகம் said...

வாழ்த்துக்கள் சிபி.

காப்பிகாரன் said...

வாழ்த்துக்கள் சிபி உங்கள் பயணம் தொடரட்டும் நாங்க என்னத்த சொல்றது உங்க ஸ்டைல்ல யே கலக்குங்க

உணவு உலகம் said...

//பணமெல்லாம் கேட்கப்பிடாது//
கேட்டாலும் உடனே கொடுத்திட்டுத்தான் மத்த வேலை பார்ப்பீங்க.

Angel said...

வாழ்த்துக்கள் !!வாழ்த்துக்கள் செந்தில் .

Unknown said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்

Unknown said...

வாழ்த்துக்கள் தல..மென்மேலும் பல பதிவுகள் இட வாழ்த்துக்கள்!!கமன்ட் இடாவிட்டாலும் வாசித்துக்கொண்டு தான் இருப்போம்.

Anonymous said...

வாழ்த்துக்கள்.... நான் பொதுவா உங்க சினிமா விமர்சனம்தான் படிப்பேன்..பல விசயங்கள நல்லா உன்னிப்பா கவனிச்சு ரொம்ப டீடெயில்லா எழுதுவீங்க.. மோஸ்ட் ஆப் த டைம்ஸ் நீங்க கொடுக்கிற மார்க் ஆ.வி மார்கோடா ஒத்து போறது ரொம்பவே பாராட்டபட வேண்டிய விஷயம்... வசனங்கள் போடுறது உங்களோட யுனிக்னஸ்னு கூட சொல்லலாம், அதுல பல நேரங்கள்ல அந்த வசனங்கள் படத்துல வந்த வசனங்களாவே இருக்கும், சில நேரங்கள்ல ஒன்னு ரெண்டு மீனிங் மாறி, ஒன்னு ரெண்டு வர்ட்ஸ் மிஸ்ஆகி இருக்கும், ஆனாலும் அவ்வளவையும் ஞாபகம் வச்சி போடுறதே பெரிய விஷயமே!! இயக்குனரை பாராட்டுவதும் நல்லா இருக்கும்..
குறைகள் இருந்தால் சொல்ல சொன்னதால் ஒரு விஷயம்: அந்த இயக்குனரிடம் சில கேள்விகள், லாஜிக் மிஸ்டேக்ஸ், ஆலோசனைகள்ன்னு ஒன்னு போடுவீங்களே, அதில் நீங்கள் குறிப்பிடும் சில விடயங்கள் ரொம்பவே சரியா இருந்தாலும், பல நேரங்கள்ல ரொம்பவே அபத்தமா , அதிகபிரசங்கிதனமா இருக்கும்.. இப்ப எல்லாம் அதை நான் படிக்காம அப்புடியே ஸ்கிப் பண்ணிருவேன்( சாம்பிளுக்கு சமீபத்துல நான் காண்டாகுன ஒன்னு நான் ஈ விமர்சனத்துல//க்ளைமேக்ஸ்ல அந்நியன் படத்துல வர்ற மாதிரி ஹீரோவான ஈ மீண்டும் ஈயாக மறு ஜென்மம் எடுக்குது, எப்படி? ஒரு முறை ஒரு பிறவி எடுத்துட்டா மறுபடி அதே பிறவி வரும்?//


அத விடுங்க... சொன்னாலும் சொல்லாட்டியும் அந்த டாப் 6ஐயும்(எல்லோரையும் படிச்சதில்ல) விட நீங்க டாப்பு!!

நாய் நக்ஸ் said...

நாராயணா,,,..இந்த கொசு தொல்லை தாங்க முடியலை...
இவற யாருப்பா...இட்டாந்தது...?????????

அவரு மட்டும் கிடைச்சா.....

வாழ்த்துவேன்னு சொன்னேன்....

அப்புறம்....வீடு சுரேஷ் சொன்ன மாதிரி....

இத்தொட நிறுத்திக்கையா.....

வேணும்னா...நான் யாரையாவது தீ குளிக்க சொல்லுறேன்....

சுரேஷ்ஸு...வா...இரவு போன் பண்ணுவோம்....

”தளிர் சுரேஷ்” said...

மூன்றாம் ஆண்டில் அடிஎடுத்து வைக்கும் அட்ரா சக்கவுக்கு வாழ்த்துக்கள்! தங்களின் இப்போதைய பாணியே தொடரட்டும். எப்போதாவது தொட்டுக்கொள்ள ஊறுகாய் மாதிரி சமூக விழிப்புணர்வு பதிவுகள் இருந்தால் போதுமானது. வாழ்த்துக்கள்!

sathishsangkavi.blogspot.com said...

வாழ்த்துக்கள் சிபி... அடிச்சு ஆடுங்க...

R. Jagannathan said...

முதலில் மனமார்ந்த வாழ்த்துக்கள்! நான் தினம் பார்க்கும் 3, 4 வலைப் பதிவுகளில், உங்களுடையதும் ஒன்று! வீட்டில் கணினி இல்லையென்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள், ஆனாலும் தினம் 3, 4 பதிவுகள் போட எப்படி முடிகிறது என்று நான் வியக்கிறேன். எத்தனை படங்கள் பார்க்கிறீர்கள்! மற்ற வலைஞர்களின் பதிவு, உங்களுக்கு வரும் பின்னூட்டங்கள், ட்வீட்டுகள், மற்ற புத்தகங்கள் படித்து இங்கு போடுவது என்று எல்லாவற்றிற்கும் எப்படி நேரம் கிடைக்கிறது! நல்ல நண்பர் வட்டம் வேறு வைத்திருக்கிறீர்கள்! நகைச்சுவை கலாட்டாவில் நீங்கள் நம்பர் 1! - ஜெகன்னாதன்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வாழ்த்துக்கள் தல..

ம.தி.சுதா said...

சீபி எத்தனை விமர்சனங்கள் எழுந்தாலும்... பதிவுலகம் என்பதற்கப்பால் நீங்கள் ஒரு நல்ல மனிதர் என்பதை நான் நன்கு அறிவேன்...

இந்த பதிவுலகம் எம்மை இணைத்திருந்தாலும் எம் நட்பு எல்லாவற்றையும் கடந்தது..

வாழ்த்துக்கள் சீபி...

சென்னை பித்தன் said...

வாழ்த்துகள் சிபி

கோவை நேரம் said...

வாழ்த்துக்கள்.அப்புறம் இதுலயும் காபி பேஸ்ட் தானா...? போன வருஷம் இருக்கிற மேட்டர் நிறைய இருக்கே..இது வருடா வருடம் தொடருமா..?

கோவை நேரம் said...

அப்புறம் அந்த ரேடியோ வை அமுத்துயா...ஒரே சத்தமா இருக்கு..

ADMIN said...

வாழ்த்துகள் சி.பி. சார்.. தொடர்ந்து கலக்குங்க... உங்கள் நன்றி உணர்வு மெச்சத்தக்கது. யப்பா எத்தனைப் பேர்களை நினைவு வச்சி சொல்லியிருக்கீங்க...

தொடர்ந்து அலெக்சா ரேங்கிலும் முன்னேற, வாசகர்கள் மனதில் இடம்பெற என்னுடைய வாழ்த்துகள்..!வாழ்த்துகள்..! வாழ்த்துகள்...!

JR Benedict II said...

வாழ்த்துக்கள் அண்ணா

Unknown said...

வாழ்த்துக்கள் பாஸ்! :-)

rajamelaiyur said...

நக்ஸ் பிளாக்கை டாப் 6 இல் சேர்க்காததை வன்மையாக கண்டிக்கிறோம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

congrats.

ரா.ரமணன் said...

மூன்றாம் ஆண்டில் காலடி வைக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள் :)) வழமை போல் எங்கள் விஜய் அஜித் சண்டை தொடரும் :)))

அன்புடன்
ரா.ரமணன்

K.s.s.Rajh said...

வாழ்த்துக்கள் பாஸ்
முதலில் நன்றிகள் இந்த சிறியவனையும் ஞாபகம் வைத்து நன்றி கூறியதுக்கு

இப்ப எல்லாம் உங்கள் தளத்தில் கமண்டுகள் அதிகம் போடுவதில்லை என்றாலும் தொடர்ந்து உங்கள் பதிவுகளை வாசித்துக்கொண்டுதான் இருக்கின்றேன் ஒரு சினிமா பார்பது என்றால் உங்கள் விமர்சனம் பார்த்த பிறகுதான் இப்ப பெரும்பாலும் படங்கள் பார்பது என் வழமை

மீண்டும் வாழ்த்துக்கள் பாஸ்

ஹாலிவுட்ரசிகன் said...

வாழ்த்துக்கள் தல ... தொடர்ந்து கலக்குங்கோ.

நமக்கு அந்த அளவு எழுத எத்தனை வருஷம் போகுமோ தெரியலயே? அவ்வ்வ். முதல் வருஷம் 640 பதிவா?

கேட்டுக்கொண்டதற்கமைய,

பிடித்தது - சுடச்சுட தமிழ்ப்பட விமர்சனம், தமிழ்ப்பட நகைச்சுவை வசனங்கள், ஷ்பெசல் ஜோக்ஸ், சிறுகதைகள்.

நேரம் இல்லாத காரணத்தாலும், அதிக போஸ்ட் போடுவதாலும் கூடுதலாக தவிர்ப்பது - மொக்கை ஆங்கிலப்பட விமர்சனங்கள் (படம் மட்டுமே மொக்கை...விமர்சனம் அல்ல), ஃபேஸ்புக்கில் போடும் ஸ்டேடஸ் மீண்டும் போஸ்டில் வருவது, தமிழக நியுஸ் பதிவுகள்.


என் பெயரையும் லிஸ்டில் வைத்தமைக்கும், சித்தர்கள் வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியமைக்கும் நன்றி...நன்றி.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாழ்த்துகள் தலைவரே....... வருசா வருசம் எங்களையும் போட்டு ஸ்கூல் ஆண்டுவிழா மாதிரி கொண்டாடி ஜமாய்க்கிறிங்க....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// "என் ராஜபாட்டை"- ராஜா said...
நக்ஸ் பிளாக்கை டாப் 6 இல் சேர்க்காததை வன்மையாக கண்டிக்கிறோம்///////

யோவ், நக்ஸ் ப்ளாக்கை பத்தி கருத்து சொல்ற அளவுக்கு சிபி பெரியாளாகிட்டாரா? பிச்சிபுடுவேன் பிச்சி....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// TERROR-PANDIYAN(VAS) said...
எப்பா சாமி படிச்சி முடிக்கிரதுகுள்ள மூச்சி முட்டுது.. இவ்வளவு பெரிய பதிவுக்கு பதில் வாழ்த்துகள் :)/////

என்னது மூச்சு முட்டுதா? ராஸ்கல் கக்கூஸ்ல உக்காந்து படிச்சியா?

K said...

வணக்கம் சி பி!

முதலில் வாழ்த்துக்கள்! நீங்கள் சாதிக்கப் பிறந்தவர் + கடின உழைப்பாளி! எனவே என்றைக்கு வெற்றிகள் உங்களுக்குக் கிடைக்கும்! கிடைக்க வேண்டும்!

அடுத்து, மறக்காமல் என்னையும் நினைவு கூர்ந்தமைக்கு மிக மிக நன்றிகள்! உங்களின் இந்த நன்றி மறவாத பண்பு தான் உங்களை இந்தளவு உயரத்தில் வைத்திருக்கிறது!

நீங்கள் மேலும் சாதனை புரிய வாழ்த்துக்கள்!!

கே. பி. ஜனா... said...

வாழ்த்துக்கள்!

மகேந்திரன் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே...

Unknown said...

உங்கள் கடின உழைப்புக்கு முதலில் ஒரு சலுட்.
வாழ்த்துக்கள் மேலும் புகழ் பெற.....

Unknown said...

மூன்றாம் ஆண்டு பிளாக் பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள்...நீ மேன்மேலும் வளர்ந்து நீ எடுக்கும் படத்துக்கு நான் என் பார்வைன்னு எழுதும் காலம் விரைவில் வரும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன்....யாரென்ன சொன்னாலும் உன் பாதையில் நீ போயிட்டே இரு...வெல்க நீ...தொடர்க உம் பணி நாளை உனதே!

Unknown said...

மனமார்ந்த வாழ்த்துகள்

iyyanars said...

முதலில் வாழ்த்துகள் தல....அப்புறம் எது ..பதிவுகளுக்கு ஆலோசனையா?...அட போங்க பாஸு...இதுக்கு நியாயமா,நாங்கதான் உங்க கிட்ட ஆலோசனை கேட்கணும்...அப்புறம் ஒன்னே ஒன்னு `மைண்டுல `வச்சுக்குங்க...உங்கள நிறையப் பேர் பாராட்டுனா...நீங்க பிரபலம்;ரொம்பப் பேர் திட்டினால்...நீங்க `ரொம்பப் பிரபலம்!`...நீங்க ரொம்பப் பிரபலம் ஆகணும் பாஸு...அதுதான் என் ஆசை!...ஹிஹி சும்மா தமாசு!

vetha (kovaikkavi) said...

Nalvaalthu..sakothara.....
Vetha.Elangathilakam.
http://kovaikkavi.wordpress.com

Muthu Kumar said...

c.p sir pattaya kilapunga apdiye unga ooru aalana ennai marnthudathinga

Muthu Kumar said...

tomorrow chennimalai varuveengala sir? ungala meet panda mudiyuma?

சேலம் தேவா said...

கலக்குங்ண்ணா...வலையுலகின் புள்ளி விபரப்புலியே...பல புத்தகங்களை படித்து அதில் தேர்ந்தெடுத்து சுவாரஸ்யமான கட்டுரைகளை தருவது எனக்கு மிகவும் பயன்படுகிறது.தொடரட்டும் உங்கள் பணி...ரொம்ப சந்தோஷம்ண்ணா.... :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

@TERROR-PANDIYAN(VAS)

நிறுத்திடு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

@TERROR-PANDIYAN(VAS)

நிறுத்திடு