Friday, April 20, 2012

பொண்ணுங்க துப்பட்டாவை சரியா போடாததுக்கு காரணம் என்ன? ( ஜோக்ஸ்)

Hii Frnds..Raziah Farook மற்றும் 35 பிறர் பேர்களுடன்
1.என் புருஷனோட குடுமி என் கைல அப்டினு என் சம்சாரம் சொல்லவே முடியாது, நான் தான் சம்மர் கட்டிங்க் அடிச்சுக்கறேனே!


-------------------------------

2. பெரும்பாலான பெண்கள் கொழுக் மொளுக் என இருப்பதற்குக்காரணம் அவர்கள் கணவர்களே! எல்லா வேலையையும் அவங்க தானே செய்யறாங்க?


--------------------------------

3. நாலு பேருக்கு நல்லதுண்ணா எதுவுமே தப்பில்லை - 9 தாரா # சிம்பு, பிரபு தேவா , ஆர்யா, ஜூனியர் என் டி ஆர்


-------------------------

4. ஆங்கிலடுவிட் யார்போட்டாலும் நானும் படிப்பதில்லை, ஆனா விடிகாலைல 4 டூ 6 ஃபிகர்ங்க போடறeng ட்வீட்ஸ் மட்டும்எழுத்துக்கூட்டி படிச்சுடுவேன்


-------------------------

5. யாரும் ஹேண்ட்ஸ் அப்னு சொல்லாமயே இந்த கிளாமர் நடிகைங்க எல்லாம் போஸ்டர்ல ஏன் ஒரு கையை மட்டும் தூக்கி போஸ் தர்றாங்க? டவுட்டு டேவிட்


---------------------------------




6. -காரணமே தேவையில்லாமல் சண்டையிடவும் பின்  குறை சொல்லவும் முடியுதா? அப்ப அவுங்கதான் உங்க ஆள்ங்க! ;)


----------------------------

7. தமி்ழ் பொண்ணுங்க துப்பட்டாவை சரியா போடாததுக்கு காரணமே  ஃபிகரை பட்டா போட்டவன் கண்டிஷன் பண்ணாததுதான் # எ கீ


----------------------------------


8. பஸ்ல பொண்ணுங்களுக்கு மலரினம்னு லேபிள் கொடுத்து கவுரப்படுத்துனது ஓக்கே, ஏன் ஆண்களுக்கு வண்டினம்னு லேபிள் கொடுக்காம திருடர்கள் ஜாக்கிரதை?


--------------------------

9. பூ வைக்கும் ஃபிகர்கள் பூவையர் என்றால் அவங்களுக்குப்பூ வாங்கிக்கொடுத்த ஆண்கள் பூவையர்க்கு பூ வாங்கியவர்?


-----------------------------

10. சம்பாதிக்கும் திமிரை கணவனும், சம்போகம் தரும் திமிரை மனைவியும் பரஸ்பரம் வெளிக்காட்டிக்கொள்ளாதவரை  தாம்பத்யம் இனிக்கும்


----------------------------

11. படி தாண்டா பத்தினி லிஃப்டில் போனாள்.. நகரத்தின் அபார்ட் மெண்ட் கலாச்சாரம்


-------------------------------

12. பெண்குழந்தை பிறந்த பின்தான் தன் வாழ்க்கைத்தரத்தையும், சம்பாதிக்கும் திறத்தையும்  உயர்த்திக்கொள்ளும் முனைப்பில் ஈடுபடுகிறான் பொறுப்புள்ள அப்பா


-------------------------------------

13. அப்பாவின் பழைய வேட்டியோ, பாட்டியின் பழைய சேலையோ குழந்தைக்கு தொட்டில் துணி ஆகிறது கிராமத்து வீடுகளில்


---------------------------------

14. கோயில் வாசலில் பிச்சைக்காரர்களை கண்டு கொள்ளாதவர்கள், கோயிலின் உள்ளே கடவுளிடம் பிச்சை கேட்பது விந்தை


------------------------

15. ஊமத்தம்பூ, நந்தியாவட்டைப்பூ  போன்ற வெண்மைப்பூக்களை பெண்கள் கூந்தலில் சூடுவதில்லை # நீதி மலர் என்றாலும் கலர் வேணும்


-----------------------------------

16. என் பொண்ணுக்கு சமைக்கத்தெரியாது என்பதை பெருமையாகச்சொல்லும் பெண்ணின் பெற்றோரே! என் பையனுக்கு சம்பாதிக்கத்தெரியாது என்றால் ஏற்பீரா?


-------------------------------

17. சிங்கத்தை அதன் குகையிலையே சந்திக்கும் வல்லமை  ஆண்களுக்கு உண்டு. மாமியார் வீட்டுக்கு மனைவியை பார்க்கப்போறோமே?



------------------------------------

18. சட்டசபைக்கு வந்த முக-கையெழுத்து போட்டுவிட்டு சென்றார்! # எங்க கேப்டன் கை நாட்டு இட்டு சென்றார், ஹி ஹி


-----------------------------

19. குறுகிப் போனவற்றின் மேல்தான் பெருகி விடுகிறது ப்ரியம் # குறுக்கு சிறுத்தவளே, அன்பே, இலியானா!


-------------------------

20. மில் வாங்கினவனெல்லாம் அடக்கி வாசிக்கறாங்க, இந்த டிரெட் மில் வாங்கிட்டு சிலர் பண்ற அலப்பரை இருக்கே அய்யய்யோ.. 

5 comments:

கோவை நேரம் said...

காலை வணக்கம் பங்காளி

கோவை நேரம் said...

ஓஹோ..படத்துக்கு போகனும்னு இன்னிக்கு அதிகாலையிலே போஸ்ட் போட்டு விட்டீங்களா...

கோவை நேரம் said...

இன்னிக்கு என்ன படம்..அனேகமா ஏதாவது கில்மா வா இருக்கும்னு நினைக்கிறேன்

கோவை நேரம் said...

அடடா...இன்னிக்கு அந்த மாதிரி படம் இல்லையே....

விஸ்வநாத் said...

NO.16 நச். அருமை.