1 வறுமை ஒழிக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்த இந்திரா,காந்தி , 20 அம்ச திட்டங்களை செயல்படுத்தினார். ஆனால், காங்., வறுமையை ஒழிக்கவே இல்லை.-நிதின் கட்கரி # அரசியல் வாதிகள் ஆட்சிக்,கு வந்தால் வறுமையை ஒழிப்போம்னு சொல்றது அவங்களோட வறூமையை, ஜனங்களோடதுனு நினைச்சா அது நம்ம அறியாமை
==================
2 கடந்த ஐந்து ஆண்டுகளில், மோடி, மக்களுக்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைவதற்கு, அவர் காரணமாக இருந்துள்ளார்.-தமிழக காங்., தலைவர், கே.எஸ்.அழகிரி # ஜிஎஸ்டி , பணமதிப்பிழப்பு ?
==================
3 . இதுவரை நடந்த தேர்தல்களில், எதிர்க்கட்சிகள் மீது, வருமான வரித் துறையை கட்டவிழ்த்து, ஏவியது கிடையாது. இந்தியாவில், இதுவே முதல் முறை.-துரைமுருகன் # அந்த தைரியத்துலதான் பணப்பட்டுவாடா நடத்த முடிவு எடுத்தீங்களா?-
எதற்கும் ஒரு ஆரம்பம் வேணுமில்ல/?
===================
4 : முதல்வர், இ.பி.எஸ்., தேர்தல் பிரசாரத்தில், நாகரிகமாக, அன்பாக, மக்களை கவரும் வகையில் பேசினார்.-ராஜேந்திர பாலாஜி # ஒரு சீப்பு வாழைப்பழத்துக்கு 2000 ரூபா தந்தது ஓவர் அன்புங்கோ
================
5 இந்தத் தேர்தல், கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை, தொகுதி முழுவதும், மவுனப் புரட்சி நடந்துள்ளது.-பொன்.ராதா # 40% பேர் ஓட்டுப்போடலை, சைலண்ட் மோடுல செல் ஃபோனை வெச்ட்டா அதுக்குப்பேரு மவுனப்புரட்சியா?
===================
6
விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்தும் சென்னையில் வாக்குப்பதிவு குறைந்தது: கடைசி இடத்துக்கு சென்ற மயிலாப்பூர் பேரவைத் தொகுதி # எழுதுனவன் ஏட்டைக்கெடுத்தான், படிச்சவன் பாட்டைக்கெடுத்தான்கற கதை தான் பாமரர்கள் தவறாம வாக்களிச்சடறாங்க, படிச்சவங்க தான் டி வி பாத்துட்டு வீட்லயே இருந்துடறாங்க
================
7
‘ஹேக்கிங்’ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால் திணறும் சைபர் கிரைம்: போலீஸார் வங்கி கணக்கில் பணத்தை திருடும் மோசடி கும்பல் # ஜனங்க கிட்டே திருடுனா போலீஸ் கிட்டே புகார் தரலாம், போலீஸ் கிட்டேயே ஆட்டையைப்போட்டா யார் கிட்டே புகார் தர?
===================
8
தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதே பெரும் சவாலாக இருந்தது: - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு # அதையும் மீறிப்பணப்பட்டுவாடா நடந்திருக்குன்னா அரசியல்வாதிங்க எவ்ளோ டேலண்ட்?
================
9
வாக்களித்த மக்களுக்கு பாஜக அரசு துரோகம் செய்துவிட்டது: பிரியங்கா காந்தி சாடல் # வாக்குக்கு பணம் பட்டுவாடா பண்ணலையா?
=============
10
வேகத்தடை’ மம்தா பானர்ஜி தூக்கமின்றி தவிக்கிறார்: மேற்குவங்க கூட்டத்தில் மோடி பேச்சு # கமல் வீட்ல கரணட் கட் பண்ணி விட்ட மாதிரி மம்தா வீட்லயும் கரண்ட் கட் பண்ணி விட்டுட்டாங்களா? ஃபேன் இல்லாம எப்படி தூங்குவாரு?
================
11 பண மதிப்பிழப்பு செய்யப்பட்டபோது, பாதிக்கப்பட்ட நீங்கள், இந்த தேர்தலில், சரியான பதில் அளிக்க வேண்டும்.-மம்தா பானர்ஜி: # சாரதா சிட்பண்ட்ஸ் ல பணம் போட்டவங்க, பணம் இழந்தவங்க சரியான பதில் கொடுக்கனும்னு அவங்க பிரச்சாரம் பண்ணுவாங்களோ?
================
12 தேர்தல் ஆணையத்தின் பணிகள், ஓரளவு திருப்தி அளித்தன. மேலும் விமர்சனம் செய்ய விரும்பவில்லை-பொன்.ராதா # அதென்ன ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால், விமர்சனம் பண்ணா முழுசா பண்ணீடனும்
=============
13 இந்த லோக்சபா தேர்தலில், வெற்றி பெறுவோம் என்பதில் மிகுந்த நம்பிக்கையுடன், நாங்கள் உள்ளோம்-அஹமது படேல்: # அவ்ளோ நம்பிக்கை இருந்தும் ராகுல் ஏன் அமேதி வைய நாடுனு 2 குதிரை,ல சவாரி பண்றாரு?
=================
14 இந்தியாவை நாம் பாதுகாக்க வேண்டும் என்றால், மோடியை மீண்டும் பிரதமராக்க வேண்டும். பாகிஸ்தானுக்கும், பயங்கரவாதிகளுக்கும் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்-அமித் ஷா #இந்தியாவுக்கு என்ன செஞ்சோம்னு சொல்லி ஓட்டு கேளுங்க , சும்மா பாகிஸ்தான், செங்கிஸ்காண்ட்டு
===============
15 மத்திய அரசும், பிரதமர் மோடியும் யாருக்கும் தொந்தரவு கொடுப்பதில்லை.- அமைச்சர் ராஜ்நாத் சிங் # எதிர்க்கட்சிகள் வீட்ல மட்டும் ரெய்டு விடறாரே? அது தொந்தரவு தானே?
=================
16 லோக்சபா தேர்தலின் போது, ம.தி.மு.க.,வை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டதற்காக, ஸ்டாலினுக்கு நன்றி. -வைகோ # நீங்க 2 பேருமே ஒரே கூட்டணில எண்ட்ரி, ஒரே கண்ட்ரி ,உங்களுக்குள்ள எதுக்கு நன்றி?
===========
17 வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்பதே எங்களின் கணிப்பு-வைகோ # வாக்காளர்களுக்கு பணம் யாரு அதிகம் கொடுத்தாங்களோ அவர்களுக்கே வெற்றி வாய்ப்பு பிரcashசமாக இருக்குமாமே?.
==================
18 மோடி மீண்டும் பிரதமரானால், ஜனநாயகம் அழிந்துவிடும்.-சித்தராமையா # காங் ஆட்சிக்கு வந்தால் பணநாயகம் தழைத்தோங்கும்?
==================
19 வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து போட்டியிட தயார்: பிரியங்கா # ராகுல்க்கு ஒரு வையநாடு ம்ாதிரி மோடிக்கு ஒரு ஆல்ட்டர்நேட் தொகுதி ரெடி பண்ணனும் போல
==============
20 'கூட்டணி குறித்து பேசி, எங்கள் நேரத்தை காங்கிரஸ் வீணடித்து விட்டது' -, ஆம் ஆத்மி # விடாதீங்க, நீங்களும் எதுனா பேசி அவங்க நேரத்தை வீணடிங்க, தானிக்கு தீனி , இதுதான் லேட்டஸ்ட் பாணி
==================
0 comments:
Post a Comment