Tuesday, September 08, 2026

THudakkam (2026)- மலையாளம்- சினிமா விமர்சனம் (க்ரைம் ஆக்சன் திரில்லர்)@JioHotstar


Thudakkam (2026)- மலையாளம்- சினிமா விமர்சனம் (க்ரைம் ஆக்சன் திரில்லர்)@JioHotstar
த கம்ப்ளீட் ஆக்டர் என்று கேரளாவில் கொண்டாடப்படும் மோகன்லாலின் மகள் விஸ்மயா கதாநாயகியாக நடிக்கும் முதல் படம்.ஆள் நம்ம ஊர் வரலட்சுமி சரத் குமார் மாதிரி ஜைஜாண்டிக்காக இருக்கிறார்.ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா,பார்க்கறியா?என்று பஞ்ச் டயலாக் பேசினால் மேட்ச் ஆக இருக்கும்.
ஓம் சாந்தி ஒசானா (2014),ஒரு முத்தஸ்ஸி கதா(2016),சாராஸ்(2021) ,2018(2023) ஆகிய நான்கு வித்தியாசமான படங்களை இயக்கிய ஜூட் ஆண்ட்டணி ஜோசப் இயக்கியிருக்கும் ஐந்தாவது படம் இது மோகன் லாலின் சொந்தப்படம்.
கேரளாவில் 7/8/2026 முதல் வெளியாகி இருக்கும் இந்தப்படம் இப்போது தமிழ் நாட்டிலும் ஆங்கில சப் டைட்டிலுடன் முக்கிய நகரங்களில் வெளியாகி இருக்கிறது.
துடக்கம் என்ற மலையாள சொல்லுக்குத்தமிழில் தொடக்கம்,ஆரம்பம் என்று அர்த்தம்.
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகி தன் அப்பாவுடன் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் வசித்து வருகிறார்.அப்பா அரசாங்க ஊழியர்.கிராம நிர்வாக அதிகாரி (வில்லேஜ் ஆபீசர்).
அப்பாவிடம் ஆபீசில் இருவர் ஒரு வேலையை தங்களுக்கு சாதகமாக முடித்துத்தரச்சொல்லிக்கேட்கிறார்கள்.அப்பா மறுக்கவே அவரை மிரட்டி விட்டு செல்கிறார்கள்.
ஊரில் ஒரு சீரியல் கில்லர் வேற சுத்திட்டு இருக்கான்.
ஒரு நாள் நாயகி பேங்க் எக்சாம் எழுத தன் தோழியுடன் வீட்டை விட்டுக்கிளம்பியவர் மாலை ஆகியும் வந்து சேரவில்லை.பதட்டமான அப்பா நாயகிக்கு போன் பண்ண அட்டெண்ட் செய்து பேசும் நாயகி ஏதோ பிரச்சனையில் மாட்டி இருப்பதாக அப்பா உணர்கிறார்.போன் கால் கட் ஆகிறது. பின் போன் ஸ்விட்ச் ஆப் ஆகிறது.
பயந்து போன அப்பா போலீஸில் புகார் கொடுக்கிறார். இதற்குப்பின் நடக்கும் சம்பவங்கள் தான் மீதித்திரைக்கதை
நாயகியாக விஸ்மயா அளவாக நடித்திருக்கிறார்.ஆனால் அந்த கேரக்டர் டிசைனுக்கு அவர் அந்த அளவு பொருத்தமில்லை.பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் சரத் குமாரைக்கட்டி வைத்து வில்லன் க்ரூப் சம்பவம் செய்வார்கள்.அப்போது ஆடியன்ஸ். அதை ஏற்றுக்கொள்ளவில்லை.ஜிம் பாடி ஜைஜாண்டிக்காக இருக்கும் ஹீரோவை ஒல்லி வில்லன் மடக்கியது எப்படி?எனக்கேள்வி கேட்டார்கள்.இயக்குநர் சேரன் அந்தக்கேரக்டரில் நடித்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும் என பிரபல வார இதழ் கருத்துக்கூறி இருந்தது. அது போல் தான் நாயகியும் ,ஆஜானுபாவகமான தோற்றம் இருந்தும் சராசரி பயந்த சுபாவப்பெண்ணாகப்பொருந்தவில்லை.
வில்லனாக ஆஷிஷ் ஜோ ஆண்ட்டனி மிரட்டி இருக்கிறார்.பூ விழி வாசலிலே படத்தில் பாபு ஆண்ட்டனி வசனமே பேசாமல் பார்வையிலேயே மிரட்டி இருப்பார்.அதற்கு இணையான நடிப்பு..தயாரிப்பாளர் அதாவது மோகன்லாலின் பினாமி ஆண்ட்டனி பெரும்பாவூர் அவர்களின் மகன் தான் இந்த ஆஷிஷ் ஜோ ஆண்ட்டனி.இது இவரது முதல் படம்.
நாயகியின் அப்பாவாக சாய் குமார் நல்ல குணச்சித்திர நடிப்பு.
சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஆக மனோஜ் கே ஜெயன் கம்பீரமாக வருகிறார்.
மியா ஜார்ஜ்,ஜாபர் இடுக்கி ,ஆடுகளம் நரேன் என ஒரு நட்சத்திர பட்டாளமே இருக்கிறது.அனைவரின் நடிப்பும் கச்சிதம்.
ஜோமோன் டி ஜான் + அகில் ஜார்ஜ் இருவரும் ஒளிப்பதிவை கவனித்திருக்கிறார்கள்
பாடல்கள் இரண்டும் சுமார் ரகமே.
ஜேக்ஸ் பிஜோய் தான் இசை.பின்னணி இசையில் மிரட்டி இருக்கலாம்.ஆனால் சுமார் ரகம் தான்.சில இடங்களில் முத்திரை பதித்திருக்கிறார்.
சமன் சாக்கோவின் எடிட்டிங்கில் படம் 137 நிமிடங்கள் ஓடுகிறது.
லினிஷ் நெல்லிக்கல் கதை எழுத ,அகில் கிருஷ்ணா,லினிஷ் நெக்லிக்கல் ,ஜூட் ஆண்ட்டனி ஜோசப் ஆகிய மூவரும் திரைக்கதை எழுத ,தனியாக இயக்கி இருக்கிறார் ஜூட் ஆண்ட்டனி ஜோசப்.
சபாஷ் டைரக்டர்
1 மோகன் லால் கெஸ்ட் ரோலில் ஆக்சன் சீக்வன்சில் கலக்கி இருக்கிறார்.தியேட்டரில் அவர் வரும் சீனில் ஆரவாரம் அடங்கவே இல்லை.
2 வில்லனின் மிரட்டலான நடிப்பும் ,ஆக்சன் சீக்வன்சும்
லாஜிக் மிஸ்டேக்ஸ்
1. காணாமல் போன பெண்ணைத்தேடும் போலீஸ் டீம் சி சி டி வி என்று ஒன்று இருப்பதையே மறந்து விட்டார்களா? செல்போன் டவர் எங்கே?என்று அதை மட்டும் தான் ட்ராக் செய்கிறார்கள்.
2 காணாமல் போன நாயகியைக்கண்டு பிடிக்க போலீஸ் எடுக்கும் முயற்சிகள் முதல் அரை மணி நேரம் பரபரப்பாகக்காட்டி விட்டு அந்த சீன சாதாரணமாக முடித்தது ஏமாற்றம்.இதுக்குத்தான் இவ்ளோ பில்டப்பா?எனக்கேட்கத்தோன்றுகிறது.
3 முதல் பாதியில் இருந்த பரபரப்பு ,,விறுவிறுப்பு பின் பாதியில் இல்லை.
4 நாயகியின் கேரக்டர் டிசைன் ரொம்ப ரப் அண்ட் டப் ஆனவர் (,Rough & Tough) என சொல்லி விட்டு ஒரு சீனில் பெட் ரூமில் யாரோ எட்டிப்பார்க்கிறார்கள் என அலறுவது ஏனோ?
5 நாயகியின் பக்கத்து வீட்டுக்காரர்கள் ஏதோ பெரிய சம்பவம் செய்யப்போகிறார்கள் என பில்டப் எல்லாம் தருகிறார்கள்.ஆனால் எதுவும் செய்யவில்லை.
6 நாயகிக்கான ஓப்பனிங்க் சாங்க் தேவையில்லாதது.அதே போல் அப்பா. பேரை நீ காப்பாத்தனும் என்ற டயலாக்கும் செயற்கையாக மோகன்லாலைத்திருப்திப்படுத்த வைத்தது மாதிரி இருக்கிறது
7 பின் பாதி திரைக்கதை நாயகியைத்துரத்தும் சைக்கோ வில்லன் என்ற ஒரு வரியில் முடிந்து விடுவதால் பார்க்கும் நமக்கு ஆயாசம் வருகிறது. யூகிக்கக்கூடிய திரைக்கதை தான் என்பது பலவீனம்
.
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங். 16+
CPS கமெண்ட். சுமாரான க்ரைம் திரில்லர் படம் தான்.மோகன் லாலின் சொந்தப்படமாக இருந்தும் ,அவர் மகளே நாயகியாக நடித்தும் ஒரு சூப்பர் ஹிட் படமாக அமையாமல் போய் விட்டது. ரேட்டிங்க். 2.5 / 5

Thudakkam
Theatrical release poster
Directed byJude Anthany Joseph
Screenplay byJude Anthany Joseph
Akhil Krishna
Linish Nellikkal
Story byLinish Nellikkal
Produced byAntony Perumbavoor
Starring
CinematographyJomon T. John
Akhil George
Additional cinematography:
Sudeep Elamon
Edited byChaman Chakko
Music byJakes Bejoy
Production
company
Distributed byAashirvad Cinemas
Release date
  • 7 August 2026
Running time
137 minutes[1]
CountryIndia
LanguageMalayalam