Tuesday, May 28, 2013

ஜான்சன் அண்ட் ஜான்சன் பவுடர் = 2013 ஃபிகர் # எப்படி?

1.டியர்.5 வருசமா லவ் பண்றோம்.திடீர்னு கழட்டி விட்டா எப்டி ?
,50 வருசம் மார்க்கெட்ல இருந்த ஜான்சன் & ஜான்சனையே கழட்டி விட்டுட்டாங்க

------------------------
2.சாதா அப்பாவுக்கும், கவர்மெண்ட் ஜாப்பில் இருக்கும் அப்பாவுக்கும் என்ன வித்தியாசம்? 

சாதா அப்பா - மரம் மாதிரி வளர்ந்திருக்கே.அறிவில்ல. ? GOVT JOB DAD - அரச மரம் மாதிரி வளர்ந்திருக்கே.அறிவில்ல?

------------------------


3.ஆல் வன்னியர்ஸ் யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ் ! மரக்காணம் கலவரத்துக்குப்பின் நீங்க எல்லாம் பாமக வை மறக்கோனும்.

-------------------------4.லேடி போலீஸ் - நைட்டியை கிண்டல் பண்ணினே இல்ல.நட ஸ்டேஷனுக்கு. என்னங்க அநியாயம்? நைட்டி போட்டவங்க கோபப்படக்கூடாது

-----------------------------
5.நைட் டீ குடிப்பது் தப்பு.பகல் ல நைட்டியோட சுத்தினா ஒரே அப்பு # சும்மா ரைமிங்க்காக

-----------------------------
6.உன் கழுத்தில் கை வைத்தேன்.நீ (NECK ) நெக்குருகிப்போனாய்!

----------------------------
7.நமக்குள் ஏதோ இருக்கு என ஊரே கொளுத்திப்போட்டது.ஜெகஜோதி யாய் பற்றி எரிகிறது நம் காதல்

------------------------------
8.அன்பே! உனக்கே உனக்கான ஒரே பாலோயராக இருக்க ஆசைப்படறேன்.என்ன சொல்றே?

------------------------------
9.உன் கழுத்தில் அணிந்திருக்கும் நெக்லசை பரிசோதிக்கும் என் கள்ளத்தனத்தை நீ உணர்ந்தே தான் அனு மதிக்கிறாய்

------------------------------

10.உன் மீது நான் காதலில் விழுவதும் ,வேண்டுமென்றே உன் மீது நான் விழுவதும் வீழ்ச்சி அல்ல !

---------------------------------
11.என்னைப்பார்க்கும்போதெல்லாம் சிணுங்கி னாயே! என்னைப்பார்க்கமுடியாத போதெல்லாம் வருந்தி னாயே !

---------------------------------
12.பிரிவினைவாதிகளாய் இருக்கும் உன் உதடுகளை ஒன்று சேர்க்கும் ஒருங்கிணைப்பாளன் நான். ( கோ ஆர்டினேட்டர் ஆப் த டெர்மினேட்டர்)

-------------------------------
13.நமது காதல் உறுதி செய்யப்பட்டபின் நீ எந்தப்புறம் இருந்து என்னைப்பார்த்தாலும் அந்தப்புரத்தில் இருப்பது போலவே உணர்கிறேன்

---------------------------------14.உன் வாசங்களை என்னுள் நிரப்பி விட்டு வீடெங்கும் நேசத்தை தெளித்து விட்டு நீ பாட்டுக்கு போய் விட்டாய்

-----------------------------
15.பேஷன்ட் பிழைச்சுடுவாரா ? டாக்டர் நாராயணசாமி - 15 நாள் கழிச்சுத்தான் எதையும் சொல்ல முடியும்

------------------------------
16.ஹலோ.அன்புமணி சார்.உள்ளே போன அப்பாவைப்போய்ப்பார்த்தீங்களா? ம் ம் அரசாங்க செலவில் அவங்களே கூட்டிட்டுப்போனாங்க

----------------------------------

17.ஆண்களிடம் அசால்ட்டாகப்பழகி விடலாம்.பெண்களிடம் பழக மிக்க ஜாக்கிரதைத்தன்மையும் ,வரம்பு மீறாத கண்ணியமும் தேவைப்படும்------------------------------

18.ஜெ ( மைன்ட் வாய்ஸ் ) - எப்படியோ முதல் கட்டமா ஒரு செட் அப்பா பையனை உள்ளே தள்ளியாச்சு.அடுத்த டார்கெட்...

-----------------------------
19.டாடி.மேரேஜ் பண்ண எவ்ளவ் செலவு ஆகும் ? அது கம்மிதான் ஆகும்.ஆனா பண்ணின பிறகு டெய்லி செலவு ஆகிட்டே இருக்கும்

------------------------------

20.மணமான மணாளனின் வீட்டு சுவரில் எழுதப்பட்ட வாசகம் - என்னை யாரும் தொந்தரவு செய்யாதீர்கள்.ஏற்கனவே ஒருத்தி ரொம்ப தொந்தரவு பண்ணிட்டிருக்கா

0 comments: