Tuesday, May 21, 2013

உங்களுக்கு அமைஞ்ச ஃபிகரு ஒரு ”தீர்த்த தரிசி”யா? அய்யய்யோ ஆபத்து

1. டேமேஜர் - இந்த பிராஜக்ட்டுக்கு உங்க மேக்சிம் கோஆபரேஷன் எதிர்பார்க்கிறேன். ஸ்டெனோ ஸ்ருதி - வாட்?


 டேமேஜர் -சாரி.மேக்சிமம்.-------------------------


2. பிரதமரை மாற்றும் எண்ணமில்லை:காங்கிரஸ்# நயன் தாராவே லவ்வரை மாத்துனாலும் காங்கிரஸ் பிரதமரை மாத்தாது போல
----------------------


3. அன்பே.நீ ஒரு தீர்த்த தரிசி.உன் கண் முன் மாங்கா தேங்கா பட்டாணி எதைப்பார்த்தாலும் வாங்கி சாப்பிட்டு தீர்த்து விடுகிறாயே!--------------------------


4. திமுக தனித்து நின்றாலே 20 இடங்களில் வெற்றி பெறும்- கே.என்.நேரு # சி எம் முன் நேரு க்கு நேரா சொல்ல திராணி இருக்கா ?


---------------------


5. மேரேஜ் ஆன பொண்ணுங்களின் அறிவிக்கப்படாத யூனிபார்ம் நைட்டி-----------------------


6. என்னது? லிப்ஸ் லவ் யூ வா? புரியலையே? நேத்து ஐ (EYE) லவ் யூ சொன்னேன்.இன்னைக்கு லிப்ஸ் லவ் யூ.நாளை நெக் லவ் யூ ஹி ஹி -------------------------


7. டியர், இப்போத்தானே கிஸ் அடிச்சீங்க, மறுபடி எதுக்கு ? ஹி ஹி இது மீள் முத்தம் -------------------------


8. டியர் , எனக்கு லூஸ் ஹேர் நல்லாருக்கா? ஜடை ஓக்கேவா? லூஸ் ஹேரே ஓக்கே தான் , ஜடை நல்லாருக்குன்னா பின்னி விடச்சொல்வே -----------------------------


9. டிரைவ் சேஃப்லி = எந்த ஃபிகரை ஓட்டறதா இருந்தாலும் அருகே அப்பா இருக்காரா?னு பார்த்து பின் கமெண்ட் அடி # சபாஷ் துபாஷ்


--------------------------


10. இது வரை எந்தத்தப்புமே செய்யாத நான் உன்னைப்பார்த்ததும் மனம் மாறி விட்டேன் # டெய்லி உப்புமா செஞ்சா தப்புமா


--------------------------


11. நயாகரா அருவி போல பிரம்மாண்டமாய் என்னுள் நீ இறங்குகிறாய் என்றால் அது ஃபால்ஸ் இன்ஃபர்மேஷன் ஆகி விடாது------------------------


12.  காலையில் எழுந்ததும் உன் முகத்தில் விழித்தேன் # ரிஸ்க் எடுக்கறது நமக்கு ரஸ்க்  சாப்பிடற மாதிரி , ஹி ஹி-----------------------


13.  போடா, இனி உன் கூட பேச மாட்டேன் என ஊடாடினாள் . அதான் இப்போ பேசிட்டியே? என நகையாடினேன்---------------------------


14. சின்னச்சின்ன விஷயத்துக்கு எல்லாம் கிள்ளிக் கிள்ளி வைக்கிறாயே? நீ என்ன கிள்ளி வளவன் பரம்பரையா?
---------------------


15. டியர், பக்கத்துல நான் இருக்கும்போது ஏன் தனக்குத்தானே  பேசிட்டு இருக்கீங்க?உன் கிட்டே பெசினா அது வாங்கிக்குடு இத வாங்கிக்குடுன்னு செலவு வைப்பியே?


----------------------

16. ரொமாண்டிக்காக பேசத்தெரியவில்லை என்று குறைபடுக்கொள்கிறாயே? எப்படிப்பேசுவது என சொல்லிக்காட்டித்தொலையேன் ;-)


------------------------


17. அன்பே! உங்கப்பா ஜெராக்ஸ் கடை ஓனரா? உன் தங்கச்சிங்க எல்லாரும் உன்னை மாதிரியே இருக்காங்களே?-------------------


18. காதலியை மீன்கள் அதிகம் உள்ள குளக்கரை நீரில் நிற்க வைத்தால் பாதம் கடிக்கும் மீன்கள் கூச்சம் தாங்காமல் காதலி உங்களை கட்டிக்கொள்ள வாய்ப்பு--------------------------19. என் மன அழுத்தங்கள் அனைத்தையும் உன் உள்ளங்கையின் ஒரு ஆறுதல் அழுத்தம் மறக்கடித்து விடுகிறது----------------------

20. செவிச்செல்வம்னா கம்மல் , ஜிமிக்கியா?
---------------------------

0 comments: