Saturday, May 04, 2013

காமசூத்ரா -படம் சூப்பர் ஹிட் - இந்தியப் பெண்களின் வரவேற்பு -மீரா நாயர் பேட்டி

"காதலும் செக்ஸும் கடவுளை அடையும் வழிகள்தான்!”
 
 
மீரா நாயர்
 
 
 
 
 
லிவுட்டில் இந்தியப் பெயரைப் பதிவு செய்திருக்கும் முதல் பெண் இயக்குநர் மீரா நாயர்!


எடுத்தது மிகக் குறைந்த எண்ணிக்கையிலான படங்கள்தான் என்றாலும், அத்தனையும் சர்ச்சையைக் கிளப்பியவை. கடைசியாக இவர் எடுத்த 'காமசூத்ரா’ படம் கிளப்பிய புயலில் நாடே அதிர்ந்தது. அடுத்த சர்ச்சைக்கு அச்சாரம் போடும்விதமாக, மீண்டும் மும்பையை மையமாக வைத்து 'பம்பாய் 2000’ என்ற புதுப்பட புராஜெக்ட்டில் மும்முரமாக இறங்கிஇருக்கிறார் மீரா.தென்னாப்பிரிக்காவில் தன் வீட்டில் இருந்த மீரா நாயர், பாரீஸில் இருக்கும் நமது நிருபருக்கு வீடியோ கான்ஃபரன்ஸிங் முறையில் அளித்த பேட்டி...


''சினிமாவுக்குள் எப்படி நுழைஞ்சீங்க..?''


''நான் நல்ல படிப்பாளி. அதனால எல்லாரை யும்போல நானும் ஒரு டாக்டராகவோ, இன்ஜினீயராகவோ வருவேன்னுதான் ஆரம்பத் தில் நம்பிக்கிட்டிருந்தேன். ஆனா, ஸ்கூல் முடிக்கிறப்பதான் என்னோட தாகம் வேறனு எனக்கே புரிஞ்சுது. எனக்கான துறை நாடகம்தான்னு உணர்ந்தேன். அனல் பறக்கக்கூடிய பிரச்னைகளை முன்வைத்துத் தயாரிக்கப்பட்ட பரீட்சார்த்த நாடகங்கள், தெருமுனை நாடகங்கள்னு எல்லாவற்றிலும் வெறியா நடிச்சேன். அவை எனக்குத் தவம் மாதிரி!


அந்தச் சமயத்துலதான் ஹார்வர்டு யுனிவர் சிட்டில, முழு ஸ்காலர்ஷிப்போட நாடகத் துறையில் படிக்க எனக்கு சீட் கிடைச்சது. ஆனா, நாடகங்களைப் பற்றிப் படிக்கப் படிக்க, அவை ரொம்பக் கட்டுப்பெட்டித் தனமானவைனு புரியவும், என் இன்ட்ரஸ்ட் சினிமா பக்கம் திரும்பியது. 


அதிலும் வெறுமனே நடிச்சுட்டுப் போக இஷ்டம் இல்லை. கதை, கேமரா, நடிகர் -நடிகைகள், ஃபைனான்ஸ், ஷூட்டிங், எடிட்டிங்னு எல்லாமே என் கன்ட்ரோல்ல இருக்கணும்னு விரும்பினேன். 'கிரியேட்டிவ் ஃப்ரீடம்’ எனக்கு ரொம்ப முக்கியம். இப்படித்தான் சினிமா இயக்குநராக அவதாரம் எடுத்தேன்.என்னதான் ஹாலிவுட்டில் படம் எடுத்தா லும், இந்தியர்களையே நடிக்கவைப்பது என்று எனக்குத் தனிப்பட்ட ஒரு கொள்கையும் உண்டு...''


''இந்தியாவின் வறுமையை மட்டுமே படம் பிடித்து, சர்வதேச அரங்கில் விற்கிறீர்கள் என்று உங்கள் மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு தெரியுமா..? உதாரணம் 'சலாம் பாம்பே’ படம்.''''இந்தப் 'பாராட்டு’ எனக்கு மட்டும் புதுசு அல்ல; ஏற்கெனவே சத்யஜித்ரேவுக்குக் கிடைத்ததுதான். 'சலாம் பாம்பே’ பற்றிப் பேசுவோம். படம் பார்க்காமலேயே விமர்சனம் செய்தவர்களைப் பற்றி நான் ஒன்றும் சொல்லமுடியாது. ஆனால், அந்தப் படத்தைப் பார்த்தவர்களுக்கு உண்மை புரிந்திருக்கும். இந்தியா வின் வறுமையும் இருண்ட விஷயங்களும் மட்டுமே அதில் 'ஹைலைட்’ செய்யப்படவில்லை.


 'சாவா.... வாழ்வா’ என்று அன்றாட வாழ்க்கையின் பல்வேறு பிரச்னைகளை வெற்றிகரமாகச் சமாளித்து உயிர் வாழும் மும்பை தெருவோரக் குழந்தைகளின் பிரச்னைகளைத் தான் அந்தப் படம் வெளிப்படுத்துகிறது.இந்தப் படத்துக்காகத் தெருவோரக் குழந்தைகள் 30 பேரைவெச்சு, மூணு மாசம் வொர்க்ஷாப் ஒண்ணு நடத்தினோம். இந்தப் படத்தின் கலெக்ஷனைக்கொண்டு 'சலாம் பாலக் டிரஸ்ட்’னு ஆரம்பிச்சோம். வீடற்ற குழந்தைகளின் படிப்பு, மருத்துவம், சாப்பாட் டுச் செலவுகளை இந்த 'டிரஸ்ட்’ மூலமா கவனிச்சுக்கிட்டு இருக்கோம்.''


'' 'காமசூத்ரா’ படம் எடுத்ததுபற்றி..?''''செக்ஸ் பற்றிய போலித்தனமும் அறியாமையும் மலிஞ்சுகிடக்கிற இந்த நாட்டுல, 'காமசூத்ரா’ படத்துக்கு சென்சார் பிரச்னை வரும் என்பது நான் எதிர்பார்த்ததுதான். ஆனால், நான் ஒரு பெண் என்கிற ஒரே காரணத்துக்காக இந்த அளவு எதிர்ப்பு வரும் என்பது நான் எதிர்பார்க் காதது. 


முழுசா ரெண்டு வருஷம் சுப்ரீம் கோர்ட் படி ஏறி, இறங்கவேண்டியதாயிடுச்சு. படத்தின் மற்ற அம்சங்களைப் பொறுத்தவரை யில், நான் நினைச்சதைச் சாதித்தாலும் 'ஸ்டோரி’ல கொஞ்சம் அடி வாங்கிடுச்சு 'காமசூத்ரா’ படம். ரொம்ப ஸ்ட்ராங்கான இரண்டு பெண்கள் தங்கள் தனித்தன்மையை ஆண்களிடம் விட்டுக்கொடுக்காமல், அதே சமயம் தங்களுக்குள்ளேயே எப்படிக் காதலைப் பகிர்ந்துகொள்கிறார்கள் என்பதைத்தான் 'காமசூத்ரா’ சொல்கிறது.சராசரி இந்திய சினிமா மாதிரி, ஹீரோயினுக் குத் துண்டுத் துணியை மாட்டிவிட்டு, ஆபாச அசைவுகளுடன் 'சோளி கே பீச்சே கியா ஹை’ என்று டான்ஸ் ஆடவிட்டிருந்தால் உடனே சென்சாரில் அனுமதி கிடைத்திருக்குமோ என்னவோ?!இந்த மாதிரி பாசாங்குகள் எதுவும் இல்லாமல், செக்ஸ் பிரச்னைபற்றித் தெளிவாக ஒரு படம் எடுத்தேன் பாருங்கள்... அது என் தப்புதான். 'அச்சச்சோ... ஒரு பெண் இப்படிப் படம் எடுக்கலாமா? நம்ம கலாசாரம், கௌரவத்தைக் குழிதோண்டிப் புதைச்சுட்டாளே’னு குதிக்க ஆரம்பிச்சுட்டாங்க... இத்தனைக்கும் 'காதலும் செக்ஸும் கடவுளை அடைவதற்கான வழிகளில் ஒன்று’ என்ற தத்துவம் சொல்லப்பட்டது நம் நாட்டில்தான்!'''' 'காமசூத்ரா’வுக்கு இந்தியப் பெண்களின் வரவேற்பு எப்படி இருந்தது?''


''உங்களுக்குத் தெரியுமா? இந்தியாவுல இந்தப் படம் சூப்பர் ஹிட். தியேட்டர்ல ஆண்களோட சேர்ந்து படம் பார்க்கிறதுக்குப் பெண்களுக்குத் தயக்கம் ஏற்படும்னு உணர்ந்தேன். அதனால, படம் ரிலீஸ் ஆகும்போதே, ஒவ்வொரு தியேட்டரிலும் வாரத்துக்கு மூணு நாள் பெண்களுக்காகப் பிரத்தியேகமா 'மேட்னி ஷோ’ போடணும்னு விநியோகஸ்தர் களிடம் ஒப்பந்தம் போட்டேன். இந்த ஐடியா சூப்பரா 'வொர்க் அவுட்’ ஆச்சு. 'இன்ட்டிமேட் லவ்’ பத்தியெல்லாம் பெண்கள் தெரிஞ்சுக்க விரும்ப மாட்டாங்கனு சொல்றதெல்லாம் சுத்த ஹம்பக். அதுக்கு 'காமசூத்ரா’வின் வெற்றியே சாட்சி!''


- பாரீஸிலிருந்து
எ.அன்பரசன்


மீரா நாயர் பிறந்தது புவனேஸ்வரில். டெல்லி பல்கலைக்கழகத்தில் சோஷியாலஜி முடித்த கையோடு அமெரிக்காவுக்குப் பறந்தவர், கிட்டத்தட்ட 10 வருடங்கள் அங்கேதான் வசித்தார். 'மிசிசிபி மசாலா’ படத்துக்காக உகாண்டா தலைநகர் கம்பாலாவுக்குப் போனது, இவர் வாழ்க்கையில் திருப்புமுனை. அங்கே இவர் சந்தித்த அரசியல் விஞ்ஞானி மஹ்முத் மம்தானிதான், இன்று இவரது கணவர். ''சினிமாவுக்காக உலகம் பூரா சுத்தினாலும் என் கணவரும் குழந்தையும் இருக்கும் இடம்தான் எனக்குச் சொர்க்கம்!'' என்கிறார் மீரா.


thanx - vikatan


 readers views


1.
>>செக்ஸும் கடவுளை அடைவதற்கான வழிகளில் ஒன்று’ << இதைதான் "ஓஷோ" தன்னோட "காமத்தில் இருந்து கடவுளுக்கு" (செக்ஸ் டு சூப்பர் கான்ஷியஸ்னஸ்) புத்தகத்தில் அழகாக சொல்லி இருப்பார்....
ரவி, தலைப்பை வைத்து அது காமத்தை பேசும் என்று நினைக்காதிர்கள், அது மிக, மிக, மிக, மிக, ...... அற்புதமான புத்தகம். வாசித்துப்பாருங்கள். நித்தி அரைவேக்காடு. நான் கூட அறைவேக்கடுதான் காரணம், பதில்கள் என்னிலிருந்து வருவதில்லை, நான் அறிந்தவற்றிலிருந்து வருகிறது. ஆனால் ஓசோ அப்படியல்ல, அவரை படித்திருந்தால் நிச்சயமாக நித்தி உங்கள் நினைவில் வந்திருக்க மாட்டார். அல்லது நித்தி அரைவேக்காடு என்பதை மிக எளிதாக புரிந்துகொண்டிருக்க முடியும்.
அப்போ ஏன் நித்தியை பிடித்தார்கள் !
சலாம் பாம்பே மற்றும் மிஸ்சிபி மசாலா ( டென்ஸல் வாஷிங்டன் நடித்தது ) தவிர மற்ற அனைத்து படங்களும் அரை வேக்காடு படங்கள். ஒண்ணு பஞ்சாபிகளைப் பற்றியதாக இருக்கும் இல்லைன்னா,வெள்ளையர்களை மனதில் வைத்து எடுத்த படங்களாய் இருக்கும்.
கமல் எடுத்த படத்திற்கு கருத்துச் சுதந்திரம் என்று கூறியதுகள் இவரைப் படமேடுக்கவிடாமல் துரத்தியது..
அட 'காமசூத்ரா'வில ஒண்ணுமே இல்ல... சப்புன்னு இருக்கும்...
என்னது 1.1.98-ல video conferencing ஆ? என்ன பூ சுத்துறீங்க?
இப்ப காம சூத்ரா எடுங்கள் makkal ரொம்ப மாறிட்டாங்க ....பலான பட சன்னி லியோனையே நம் மக்கள் ஏற்று கொண்டு விட்டார்கள்
உங்க துணிச்சல் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. பெண்களை அடிமையாக்கி, தன் உடல் ஆசைக்கு மட்டும் தெய்வமாக நினைக்கு ஆண்களின் போலித்தனத்தை தோலுரித்து காட்டி இருக்கிறீர்கள் காம சூத்த்ராவில். மறைவிலேயே பெண்களை காமத்துக்கு பயன்படுத்தி, வெளி உலகில் பெண்களை தெய்வமாகவும், பெண்களின் பாதுகாவலராகழ்வும் நடித்து வரும் ஆண்களின் அடிமைத்தனத்தை விளாசி இருப்பது நல்ல முயற்சி.
இந்திய பெண்ணாக இருந்தாலும் புதுமை விரும்பியாக இருக்கும் மீரா நாயருக்கு ஜெய்...
>>நான் நினைச்சதைச் சாதித்தாலும் 'ஸ்டோரி’ல கொஞ்சம் அடி வாங்கிடுச்சு 'காமசூத்ரா’ படம்<< கதையா முக்கியம்????
>>ஆனா, ஸ்கூல் முடிக்கிறப்பதான் என்னோட தாகம் வேறனு எனக்கே புரிஞ்சுது<< ஒ..ஒ..ஒ... சரிங்க.... எங்களுக்கும் புரிஞ்சுது ....
ரே இந்தியாவை உள்ளபடியே காட்டியவர். என்பதால் வறுமையைக் காட்ட வேண்டியதாயிற்று .

இவர் "எப்படி இந்தியாவைக் காட்டினால் வெள்ளக்கார மச்சான்களுக்குப் பிடிக்கும்" என்று யோசித்துப் படம் எடுப்பவர். இரண்டும் ஒன்றா?
இதைத்தானே சுவாமி நித்தியானந்த போன்றவர்களும் போதிக்கிறார்கள். தின்று கொழுத்த பேர்களுக்கு செக்கும் சிவலிங்கமும் ஒன்றாகவே தெரியும்.
ரே அவர்களுடன் ஒப்பீடு செய்யுமளவுக்கு, இந்தியாவில் எவனும் இன்னும் படம் எடுக்கவில்லை.
காமசூத்ரா ஒரு அற்புத கலைவடிவ படம். மேலும், மீரா நாயர் மிட்சல் என்பவரை மணந்து விவாகரத்து பின்னரே மஹமூத்தை திருமணம் - இரண்டாம் - செய்தார். செக்ஸ் கடவுளை அடையும் வழி என்று புரிந்து கொண்டதால் தானோ என்னவோ நம் அரசியல்வாதிகள் அந்த ஆட்டம் போடுகிறார்கள் :)
காமசூத்ரா’படத்தில் ரேகா நடித்து உள்ளார்.
காம சூத்ரா ஒரு boring படம்! ஒரு ஆர்வம் தூண்டாத கட்சி அமைப்பு, amateur நடிப்பு!

செக்ஸ் காட்சிகள் இல்லை என்றால் இந்த படம் வசூலில் மண்ணை கவ்வி இருக்கும்! நம்பிக்கை இல்லை என்றால் வீடியோ பாருங்கள்!

0 comments: