Saturday, May 11, 2013

கோவை மெகா ட்வீட்டப் - 12/ 5 / 2013

 ட்விட்டர்க்கு வந்து 3 வருசம் ஆச்சு . இதனால பெருசா என்ன யூஸ் இருக்குன்னு யாரும் இனி கேட்டுட முடியாது , விஜய் டி வி அவார்டு நிகழ்ச்சிக்கு பிரபல ட்விட்டர்களுக்கு அதாவது ஃபாலோயர்ஸ் 1000 இருந்தா போதும் அவங்களுக்கு இலவச விழா நுழைவுச்சீட்டு தர்றதா சொல்லி இருக்காங்க . நம்ம ஆட்கள் பலரும் போய்ட்டாங்க 


 இது சந்தோஷமான விஷயம் . போன வருஷம் மாதிரி இந்த வருஷமும் மெகா ட்வீட்டப் நடக்க இருக்கு .  போன முறை சென்னையில் . இந்த தடவை கோவையில் / 


 கொங்கு மண்டலத்துல ட்வீட்டப் நடத்தறதால  பல யூஸ் இருக்கு . ஏன்னா தமிழ் நாட்டிலேயே அதிக ட்விட்டர்கள் இருப்பது கொங்கு மண்டலத்தில் தான், குறிப்பா கோவையில் தான் . ஈரோடு , கோவை , சேலம் , திருப்பூர் ஆகிய ஏரியாக்களில் பிரபல ரவுடிகள் அதாவது பிரபல ட்வீட்டர்கள் இருக்காங்க  இவங்க எல்லாம் சந்திச்சு என்ன ஆகப்போகுது என யாரும் அங்கலாய்க்க வேண்டாம் . இத்தனை நாட்களாய் எழுத்துக்களில் அறிமுகம் ,  இப்போ நேர்ல யார் யார் எப்டினு பார்க்க வாய்ப்பு 


 இந்த சான்சை விட்டா மறுபடி கிடைக்காது .


நேரில் வரத்தயங்கும்  சில பெண் ட்வீட்டர்கள்  மாறு வேடத்தில் வருவதாக உளவுத்துறை தகவல் 


 விழாவை விஜய் டி வி  யும் பிரபல இன்னொரு டி வி யும் ஒளி பரப்ப இருக்குது . உங்களை டி வி ல பார்த்து பன்னாட்டா உங்க ஃபிரண்ட்ஸ் கிட்டே காட்டி பந்தா பண்ணிக்கலாம்( சொல்ல முடியாது , உங்களை டி வி ல பார்க்கும் பக்கத்து வீட்டு ஃபிகர் தானா செட் ஆகலாம்)


1. ட்விட்டர் எம் ஜி ஆர் ரவிக்குமார் மிமிக்ரி நிகழ்ச்சி 


2. சன் டி வி அழகி சீரியலில் 2 பேரை கரெக்ட் பண்ணிய  க்ரேசி கோபால் கலக்கலான மிமிக்ரி நிகழ்ச்சி  ( திரைக்கு பின்னால் எவ்ளவ் என சரியா தெரியலை )


3.  எப்போ பாரு ட்விட்டர்லயே குடி இருக்கும் கருப்பு வின் கவிதை நிகழ்ச்சி  

இவரது உலகப்புகழ் பெற்ற ஹைக்கூ 


 குடை பிடிக்கிறாள் தாய் 

 குடைக்கு வெளியே கை நீட்டி 

 மழை பிடிக்கிறது மழலை 


4.  ஜேசுதாஸ்  போல பாட இருக்கும் கிரி


5. . சினிமாவில் எண்ட்டர் ஆக இருக்கும் ஐ ஆம் கார்க்கி , பரிசல் காரன் , ராஜன்  உட்பட பல பிரபல ட்வீட்டர்கள் ஆஜர் ஆக இருக்காங்க

6. சும்மா ட்வீட் போட்டே ஃபிகர் கரெக்ட் பண்ணுவது எப்படி என இலவசமா விட்டுட்டே இரு மாமா டேவிட் இதுவரை தான் கரெக்ட் பண்ணிய ஃபிகர்களின்  கதையை எப்படி அணுகினார் என்பதை விலா வாரியாக விழாவில் விளக்க இருக்கிறார் 


7. ஃபேக் ஐ டி ஸ்பெஷலிஸ் கனல் தனது 18 ஃபேக் ஐ டிகள் பற்றிய குறிப்பையும்  ட்விட்டர்  ஹேண்டிலையும் வெளியிட இருக்கிறார் , அது போக அவர் பாலக்காட்டு ஆஃபீசில் பணி ஆற்றும் சேர நன்னாட்டிளம் பெண்கள் 8 பேரின் ஆல்பம் ( யோவ் சாதா ஆல்பம் தான் ) கொண்டு வர்றாராம் 

 எல்லாரும் அலை கடலென திரண்டு வாரீர்.


மெகா ட்விட்டப் அழைப்பிதழ் ( எக்ஸ்பர்ட் சத்யா )
----------------------------------------------------------------

சென்னையில் கடந்த வருடம் நடந்த மெகா ட்விட் அப்பில் முடிவு செய்தபடியே 2013ம் ஆண்டின் மெகா ட்விட் அப் கோவையில் வரும் மே 12,2013 அன்று நடைபெற உள்ளது.

போன வருசம், முந்தைய திமுக ஆட்சியின் மின்பகிர்மானக் குறைபாட்டால் தமிழ்நாடெங்கும் கடும் மின் தட்டுப்பாடு நிலவியதை நாம் அறிவோம். அதனால் தான் சென்னையில் டிவிட் அப்பை ஏற்பாடு செய்தோம்.

ஆனால் புரட்சித்தலைவி, தங்கத்தாரகை மாண்புமிகு அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியில் மின்வெட்டு படிப்படியாக சீர் செய்யப்பட்டு தற்போது மின்மிகை மாநிலமாக தமிழ்நாடு ஆகியுள்ளதையடுத்து, மின் மிகை மிகை மாவட்டமான கோவையிலே இரண்டாவது மெகா டிவிட் அப்பினை ஏற்பாடு செய்துள்ளோம்.

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் நம் பலத்தை தேசியக் கட்சிகளுக்கு உணர்த்த சென்ற முறை போலவே மக்கள் அனைவரும் பெருந்திரளாய்க் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கோவைக்கு மாநிலம் முழுவதிலிருந்தும் நிறைய பஸ்கள் உள்ளன. மணல் லோடு லாரிகளும், சரக்கு ரயில்களும் கூட இருக்கின்றன. எதிலாவது தொங்கிக்கொண்டு வரப்பாருங்கள்!

டிவிட்டப்பினை நடத்துவதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்கிறோம். வீட்டில் அடிவாங்கியாவது கிளம்பிவருவதற்குண்டான ஏற்பாடுகளை நீங்கள் செய்யுங்கள்.

தமிழ்நாடெங்கும் தகிக்கும் அனல் வெயிலால் அவதிப்படும் டிவிட்டர் சந்துவாழ் மக்களுக்கு தென்னக சுவிஸர்லாந்தாம் கோவையில்(அவ்வ்வ்வ்வ்!) ஒரு நாள் உல்லாசமாய் உலாத்த ஒரு அரிய வாய்ப்பு. அலைகடலென திரண்டு வாரீர்.

- விழாக்கமிட்டியார்

இடம்: ஹோட்டல் மங்களா இன்டர்நேசனல் , காந்திபுரம் மொபசல் பஸ் நிலையம் பின்புறம். கோவை.

நாள் : 12-5-2013 ஞாயிறு.

நேரம்: மாலை 3 மணி.


இரவு டின்னருடன் விழா நிறைவுபெறும்.

மேலும் தகவல்களுக்கு அழைக்கவேண்டிய எண்கள் : +919944723392

தங்களது மேலான உதவிகள் மற்றும் கருத்துகளை [email protected] க்கு மடலிடவும்.

நன்றி. 


சந்திப்பில் பங்குபெறவிருப்பவர்கள், தங்கும்வசதியோ வேறேதேனும் உதவியோ தேவைப்பட்டால், mail அல்லது Mention செய்யவும்


டிஸ்கி - விழா நடக்கும் ஹோட்டல் பெயரை நினைவில் வைத்துக்கொள்ள குறுக்கு வழி - மங்களம் உண்டாகட்டும் , இண்ட்டர் நேஷனல் ஃபிகர் 

2 comments:

Giri Ramasubramanian said...

///ஜேசுதாஸ் போல பாடவிருக்கும் கிரி//

இது ஜேசுதாசுக்குத் தெரியுமா?

#அவ்வ்வ்வ்வ்

#ஏனய்யா! ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்

Unknown said...

ஒரு சிறிய உதவி..

மின்சாரம் பற்றிய ஒரு இடுகை இட்டிருரிக்கிறேன்.

படித்து பார்த்து ஆவன செய்யுங்கள்

http://kannimaralibrary.co.in/power9/
http://kannimaralibrary.co.in/power8/
http://kannimaralibrary.co.in/power7/
http://kannimaralibrary.co.in/power6/
http://kannimaralibrary.co.in/power5/
http://kannimaralibrary.co.in/power4/
http://kannimaralibrary.co.in/power3/
http://kannimaralibrary.co.in/power2/
http://kannimaralibrary.co.in/power1/

நன்றி,
வினோத்.