Monday, May 20, 2013

கோவை ட்விட்டர்கள் மாநாடு பாகம் 1விழா நடை பெறும் ஹோட்டல்                             
விழா நடை பெறும் ஹோட்டல்எக்ஸ்பர்ட் சத்யா 2 மாசம் முன்னால ட்வீட்டப் பற்றி டைம் லைன்ல முத ட்வீட் போட்டதுமே திருப்பூர் ஆகாய மனிதன்   எனும் யுவராஜ் எப்போ போலாம்?  எப்படி போலாம்னு கேட்க ஆரம்பிச்சுட்டார் ( ஆகாய மனிதன் பெயர்க்காரணம் - ஒரு ஃபிகர் எதேச்சையா இவரைப்பார்த்தாலே அப்படியே ஆகாயத்துல பறக்கற மாதிரி ஃபீல் பண்ணி டைரில 3 பக்கம் எழுதுவார் )


என்னால வாக்கு குடுக்க முடியல ( இவரு பெரிய அரசியல்வாதி ) . ஏன்னா ஆஃபீஸ்ல இப்போ அடிக்கடி திருச்சி , புதுக்கோட்டை கேம்ப் அனுப்பிடறாங்க .நயன் தாராவின் காதல் மாதிரி நம்ம ஆஃபீஸ் வாழ்க்கை நிரந்தரம் இல்லாததாவும் , எப்போ எங்கே இருப்போம்னு சொல்ல முடியாத எஸ் வி சேகர் அரசியல் வாழ்வு மாதிரி ஆகிடுச்சு . அதனால மே 12 அன்னைக்கு ட்வீட்டப் நடக்குதுன்னா மே 11 அன்னைக்குத்தான் வர்றேனா? இல்லையா? என முடிவாகும் அப்டினு சொல்லிட்டேன். 


மே 11 ஃஅன்னைக்கு நைட் ஹோம் மினிஸ்டர் , டேமேஜர் ஆகிய இரு பெரும் தலைவலிகளிடம் இருந்து தப்பித்து கோவை மெகா ட்வீட்டப்க்கு போக முடிவானதும் ஆகாய மனிதனுக்கு மெசேஜ் அனுப்பினேன்.. போலாம் ரைட் அப்டினு ரிப்ளை அனுப்புவார்னு பார்த்தா  பீட்சா படம் க்ளைமாக்ஸ் மாதிரி ஒரு ட்விஸ்ட் . மூணாறு போய்ட்டாராம் / ( பின்னணில ஒரு ஃபிகர் வாய்ஸ்) ஃபிகர் யாரு , என்ன ஊரு, எந்தா பேரு என்பது எல்லாம் கேட்பது  அநாகரிகம் என்பதாலும் கேட்டாலும் எதுவும் சொல்லாத கல்லுளி மங்கன் அவர் என்பதாலும்  அந்த டீட்டெயில்ஸ் இந்த பதிவுக்கு அவசியம் இல்லாதது என்பதாலும் நாம அடுத்த கட்டத்துக்கு போலாம் / 

ட் விட்டர் பிரபல ரவுடிகள் @vattajileppi @joseph_selva and @Er_Thameem  ( கண்ணாடியில் பிம்பம் தெரியுதே?)              
ட் விட்டர் பிரபல ரவுடிகள் @vattajileppi @joseph_selva and @Er_Thameem ( கண்ணாடியில் பிம்பம் தெரியுதே?)ட்விட்டரின் ஜெண்டில்மேன் கோவை அறிவுக்கரசு சாருக்கு மெசேஜ் அனுப்பிச்சேன் . சார் காலைல 7 மணி கோவை பாசஞ்சர் ல வர்றேன் . 10 மணிக்கு ரயில்வே ஸ்டேஷன் வந்துடுவேன் . காலைல ஏதாவது சினிமாவுக்கு போய்ட்டு  மத்தியானம் ட்வீட்டப் போலாம்னேன் . மனிஷன் அதுக்கு  சரி போலாம்னோ, இல்லை போக முடியாதுன்னோ கட் அண்ட் ரைட்டா பதில் சொல்லலை .  கோவை உங்களை வரவேற்கிறதுன்னு பொத்தாம்பொதுவா நெடுஞ்சாலை போர்டு வாசகம் மாதிரி சொன்னார் . அப்பவே நான் உஷார் ஆகி இருக்கனும் .

கோவை வந்தாச்சு என  அவருக்கு மெசேஜ் அனுப்பினதும்   அவர் ஃபோன் பண்ணினார் . அவர் குரல்ல ஒரு சோகம் தெரிஞ்சுது . அவர் மச்சினிக்கு மேரேஜ் ஃபிக்ஸ் ஆகிடுச்சாம் .கல்யாண வேலைகள் இருப்பதாகவும் மதியம் ட்வீட்டப்பில் பார்ப்போம் எனவும் சொல்லிட்டார். ( இவர் மச்சினிக்கு மேரேஜ்னா இவர் ஏன் சோகமா இருக்கனும்? ) 

இவரைப்பத்தி ஒரு முக்கியத்தகவல் சொல்லிடறேன் . கோவையில் உள்ள இரு முக்கிய பெண் ட்வீட்டர்களை நேரில் சந்தித்த ஒரே ட்வீட்டர் இவருதான் . இவரு வந்தார்னா அது பற்றி ஒரு பதிவு தேத்தலாம்னு இருந்தேன் . போச்சே, 

பிரபல ரவுடிகள் @prabu_b  .@chinnapulla                 
பிரபல ரவுடிகள்
சரின்னு ரயில்வே ஸ்டேஷன்;ல இருந்து வெளில வந்து  காந்தி புரம் பஸ் ஸ்டேண்டுக்கு எப்படிப்போகனும்? எந்த பஸ் அங்கே போகும்னு கேட்டேன். ஒருத்தர்  இந்த வழியாப்போகும் எல்லா பஸ்சுமே  காந்தி புரம் தான் போகுதுன்னார் . 


 காந்தி புறம் இறங்கி ஒரு ஆட்டோக்காரர்ட்ட விசாரிச்சேன் . மங்களா இண்டர்நேஷனல் ஹோட்டல் எங்கே இருக்கு? 

 உக்காருங்க சார் போலாம் 75 ரூபா தான் ஆகும்னார் 


 யோவ் , ஈரோட்ல இருந்து கோவை வரவே நான் 20 ரூபாதான் செலவு பண்ணேன். இங்கே இருந்து 10 அடி தூரம் இருக்கற இடத்துக்கு எதுக்கு அத்தனை ரூபா? வழி சொல்லு போதும்னேன் .  என்னை படு கேவலமா ஒரு பார்வை பார்த்து வழி சொன்னார் 2 பேர் தங்கறதா ரூம் போட்டுட்டு 6 பேர் அட்டூழியம் பண்ணிட்டிருக்காங்க                    
2 பேர் தங்கறதா ரூம் போட்டுட்டு 6 பேர் அட்டூழியம் பண்ணிட்டிருக்காங்க  ( எல்லாரும் ட்வீட் போட்டுட்டு இருக்காங்க , எக்சாம் ஹால்க்குள்ளே போகும்போது அப்பதான் படிப்பமே அப்டி )

 நடை பாலம் இருக்கே அதுல போய் அந்த பக்கம் இறங்குனா  நேரா ஒரு ரோடு போகும் . அதுதான் ஹோட்டல் போகும் ரோடுன்னார். 


 ஒரு பர்லாங்க் தூரம்  நடக்கனும். ( ஒரு மைல் = 8 பர்லாங்க் ).                   


தேனி பெரிய குளம் @Er_Thameem ,கோவை  மாப்ளே @nanbanai                
தேனி பெரிய குளம் @Er_Thameem ,கோவை மாப்ளே @nanbana ஹோட்டல் ரிசப்ஷன்ல 2 ஃபிகருங்க .அப்பாடா ட்வீட்டப் போர் அடிச்சாக்கூட அப்பப்ப கீழே ரிசப்ஷன் வந்து சார்ஜ்  ஏத்திக்கலாம்னு மனசை தேத்திக்கிட்டேன் ( ஃபிகரை தேத்த முடியாதே , அட்லீஸ்ட் மனசையாவாது தேத்துவோம்)


முதன் முதலா கண்ல பட்ட ட்வீட்டர் வட்ட ஜிலேபி . பேசாம இவருக்கு நெட்டை ஜிலேபின்னு பேர் வெச்சிருக்கலாம் . ஆள் ஆறடி 3 அங்குலம் . தமிழ் நாட்டு ட்வீட்டர்களிலேயே  அதிக உயரம் அண்ணன் தான் . அப்புறம் ஜோசப் செல்வாதிருத்தப்பட்ட வடிவில் @chinnapulla   , @prabu_b

 @chinnapulla , @prabu_b 

ஜோசப் செல்வா வைப்பற்றி ஒரு வரில சொல்லிட முடியாது . ஃபிகர் கரெக்ட் பண்றதுல இவர் ஒரு கார்த்திக் , சிம்பு வை தூக்கி சாப்பிடற ஆள் . இவர் லீலைகளைப்பற்றி எழுதுனா 1998 ல மாலை மலர் ல தொடரா வந்த காதல் மன்னன் விக்கிர மாதித்தன் மாதிரி செம ஹிட் ஆகும் . பின்னால டைம் கிடைச்சா பார்ப்போம் . 


சின்னப்புள்ள அப்டினு ஒரு ட்வீட்டரை நான் ஃபாலோ பண்ணி இருந்தேன். அது சின்னதா நல்ல  ஃபிகரா இருக்கும்னு நினைச்சா  அது ஆம்பளை ட்வீட்டராம் , அடங்கோ . கனவே கனவே கலையாதே அப்டினு ஒரு தீம் மியூசிக்


 அண்ணே ஒரு விளம்பரம் அடிப்படைல ஒரு ஓவியர் . இவர் கிட்டே இருக்கும் திறமை என்னான்னா ஆளைப்பார்த்து 12 நிமிஷத்துல  பென்சில் ஓவியமாவோ , வாட்டர் கலர் ஓவியமாவோ வரைவார் . அட்டகாசமா இருக்கும் இவரது சமீபத்திய ஹிட் ஆல் தோட்ட பூபதி யின் வாட்டர் கலர் ஓவியம் , ஆதிரை ஓவியம் 


 விழாவுக்கு வந்த வெளியூர் ட்வீட்டர்கள் எல்லாரும் ஒன் பை ஒன்னா லைன் கட்டி அவர் கிட்டே தங்களை  வரைய வெச்சு வாங்கிட்டாங்க . அதை ஓவியக்கண்காட்சியா வைக்க பிளான் போல .அண்ணே ஒரு விளம்பரம் அரைகுறைய வரையறாரு@vilambaram  ,@Araikurai                 
அண்ணே ஒரு விளம்பரம் அரைகுறைய வரையறாரு@vilambaram ,@Araikurai

 வட்ட ஜிலேபி  டிஃபன் ஆர்டர் பண்ணினார் . ரோஸ்ட் ,  பொங்கல் எல்லாம் வந்தது . சாப்ட்டுட்டு பேசிட்டு இருந்தோம் . 


 ஹோட்டல்ல ரூம் க்ளீன் பண்ற பொண்னுங்க கூட கோட் சூட் போட்டுட்டு வருதுங்க , அடேங்கப்பா . பில் தீட்டிடுவாங்கன்னு நினைச்சு ரூம் ரெண்ட் எவ்ளவ்னு கேட்டா  2000 ரூபா தானாம் .  2 பேர் தங்கறதா ரூம் போட்டு கிட்டத்தட்ட குட்டி கிராமமே டேரா போட்டிருக்கு ஒரு ரூம்ல . டிவைடு பண்ணினா தலைக்கு 25 ரூபா தான் ஷெரிங்க் அமவுண்ட் வரும்னு நினைக்கறேன் . 


 ஜோசப் செல் ஃபோனில் எடுத்த சில கலக்கல் காமெடி  வீடியோக்கள் காட்டினார் அவர் நண்பர் ஒரு ஜட்ஜாம் , அவர் மப்பில் செஞ்ச அட்டகாசங்கள் , பீச்சில் செல் ஃபோனைத்தொலைத்தது , வட்ட ஜிலேபி , ஜோசப் செய்த அட்டகசங்கள் எல்லாம் அதில் பதிவாகி இருந்தது / 


 ஜாலியா மதியம் வரை  அரட்டை நடந்தது. விழாவுக்கு அரட்டை தான் வர்லையேன்னு கேட்கக்கூடாது யாரும். 
மதுரை ரவுடி @prasanna2903 அம்பா சமுத்திரம் கேடி ,@aidselva                  
மதுரை ரவுடி @prasanna2903 அம்பா சமுத்திரம் கேடி ,@aidselva- தொடரும்

0 comments: