Sunday, May 19, 2013

நேரம் - சினிமா விமர்சனம் ( தினமலர் )

 
தினமலர் விமர்சனம்


"நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்", "பீட்சா", "சூது கவ்வும்" படங்களின் வரிசையில் வித்தியாசமான கதையம்சத்தில் விறுவிறுப்பாக வெளிவந்திருக்கும் படம் தான் "நேரம்". என்ன ஒரே மாற்றம்.? விஜய் சேதுபதிக்கு பதில் இதில் நிவின் எனும் புதுமுகம் கதாநாயகராக அறிமுகமாகியிருக்கிறார் அவ்வளவே!

அமெரிக்காவில் சின்னதாக ஒரு பாம் வெடிக்க (குண்டு அல்ல...), இந்தியாவில் "நேரம்" ஹீரோ வெற்றி எனும் நிவினுக்கு கைநிறைய சம்பளத்துடன் கூடிய ஐ.டி. கம்பெனி வேலை பறிபோகிறது. தங்கையின் திருமணத்திற்காக ஊரையே தன் வட்டித் தொழிலால் கட்டி மேய்க்கும் வட்டி ராஜா எனும் சிம்ஹாவிடம் கைநீட்டி கொஞ்சம் பணம் அதிக வட்டிக்கு வாங்குகிறார். 
கூடவே சின்ன வயது முதல் கூட படித்த வேணி எனும் நாயகி நஸ்ரியா நசிம்மை காதலிக்க தொடங்குகிறார். முதலில் இவர்களது காதலை ஏற்றுக்கொள்ளும் வேணியின் அப்பா தம்பிராமையா, நிவினுக்கு வேலை இல்லை என்று தெரிந்ததும் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். வேணி, வெற்றியுடன் ஓடிப்போய் வாழ வீட்டை விட்டு கிளம்புகிறார். அதேநாளில் வட்டிராஜாவுக்கு ஐம்பதாயிரம் வட்டி பணத்தை செட்டில் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் வெற்றி!


வீட்டில் இருந்து வெளியேறிய வேணி, வெற்றிக்காக வெயிட் பண்ணும்போது பட்டபகலில் தனது தங்க செயினை வழிப்பறி கொள்ளையர்களிடம் பறி கொடுக்கிறார். அதே நேரம் வெற்றியும், நண்பரிடம் வட்டிராஜாவுக்கு கொடுக்க வாங்கி வந்த ஐம்பதாயிரம் பணத்தை பிட்பாக்கெட் பேர்வழிகளிடம் பறிகொடுத்துவிட்டு பரிதவித்து போகிறார்.
 இந்நிலையில் ஊரில் இருந்து வெற்றியை தேடி வரும் அவரது தங்கை புருஷன், வரதட்சனை பணத்தின் மீதியை பிஸினஸ் செய்யப்போகிறேன் பேர்வழி... என வாங்கி போக வருகிறார். வேணியின் அப்பா போலீஸ்க்கு போகிறார். காத்திருக்கும் காதலி, தேடும் போலீஸ், டவுரி மீதியை கேட்கும் மச்சான், வட்டி ராஜாவின் கெடு என ஏகப்பட்ட சிக்கலில் தனது கெட்ட நேரத்தால் சிக்கி தவிக்கும் ஹீரோ வெற்றி எனும் நிவினுக்கு நல்ல நேரம் பிறந்ததா?, இழந்ததை எல்லாம் மீட்டாரா? என்பது நேரம் படத்தின் வித்தியாசமும், விறுவிறுப்புமான மீதிக்கதை!

"உன்னை கட்டிக்கப்போறவ ரொம்ப கஷ்டப்படுவா... என எங்கம்மாவும், ப்ரண்ட்ஸூம் சொல்லுவாங்க, கஷ்டப்பட வர்ரியா..." என தன் காதலை நாசுக்காக வெளிப்படுத்தும் வெற்றி எனும் நிவின், வட்டிராஜாவிடம் பணம் வாங்க போன இடத்தில் அவர் பண்ணும் சேட்டைகளால் காட்டு முகபாவனைகள், தேர்ந்த நடிகர்களையே திக்குமுக்காட செய்துவிடும் ரகம்! மனிதர் முதல் படத்திலேயே பர்ஸ்ட்கிளாஸில் பாஸ் செய்து விடுகிறார். கீப்இட் அப் நிவின்!
 


நாயகர் மாதிரியே, நாயகி வேணியாக வரும் நஸ்ரியா நசீமும் நடிப்பிலும் சரி, குடும்பபாங்கிலும் சரி செம சூப்பர்ப்! அம்மணி அடுத்தடுத்த படங்களில் கொஞ்சம் கிளாமர் காட்டினார் என்றால் தமிழ் சினிமாவின் நம்பர்-ஒன் இடத்திற்கு போனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை...!

வில்லன் வட்டி ராஜாவாக வரும் சிம்ஹா, செம சூப்பர்ப்பா! கழுத்து நிறைய தங்கசங்கிலிகளும், கூட இரண்டு கருப்பு சிவப்பு அடியாட்களுமாக படு பந்தாவாக வட்டி வசூலிக்கும் இவரது பாணியே தனி. டச்போனை ஆப்ரேட் செய்யத்தெரியாமல் "பத்தாயிரம் ரூபாய்க்கு போன் பட்டன் இல்லை... வேஸ்ட்!" என அவர் அலுத்துக் கொள்ளும் ஒரு காட்சி போதும் தியேட்டரே சிரிப்பில் அதிர்கிறது!

வேணியின் அப்பா தம்பிராமையா, எஸ்.ஐ., கட்டகுஞ்சாக வரும் ஜான் விஜய், நாசர், அவரது தம்பி மாணிக்கம் அலைஸ் மாணிக் - அனந்த்நாக், லைட்ஹவுஸ் - ரமேஷ் திலக், காளான் - ஆனந்த், ஜான் - சபரீஷ் வர்மா உள்ளிட்ட ஒவ்வொரு பாத்திரமும் பலே சொல்ல வைக்கும் படைப்புகள்!
 


அதேநேரம் ஊரிலேயே ஒரே ஒரு வட்டிக்காரர் இருப்பது மாதிரியும், அவரிடமே ஹீரோ, ஹீரோவிடம் பிக்பாக்கெட் அடிக்கும் ஆசாமிகள், ஹீரோவுக்கு வேலை தரும் நாசரின் தம்பி என எல்லோரும் அநியாய வட்டிக்கு கடன் வாங்கியிருப்பது, எஸ்.ஜான் விஜய்க்கு கட்ட குஞ்சு என வித்தியாசமாக பெயர் சூட்டியிருக்கும் இயக்குனர், நாயகியின் அப்பா தம்பி ராமைய்யாவுக்கு சரவணன் என சாதாரணமாக அவரது வயதுக்கு பொருந்தாத பெயரை சூட்டியிருப்பது உள்ளிட்ட ஒரு சில குறைபாடு இருந்தாலும், டைட்டில் கார்டு போடும் இடத்தில் விதவிதமான கை கடிகாரங்கள், சுவர் கடிகாரங்கள், காலமானிகள் என ஆரம்பத்திலேயே நம்மை வாய்பிளக்க வைக்கும் இயக்குனர், அடுத்தடுத்த காட்சிகளிலும் நமது திறந்த வாயை மூட விடாமல் இறுதிவரை அழைத்து செல்வது சிலிர்ப்பு!

ராஜேஷ் முருகேஷனின் மிரட்டும் பின்னணி இசையும், ஆனந்த் சி.சந்திரனின் அசத்தும் ஒளிப்பதிவும், பிரதீப்பாலாரின் டைமிங் வசனங்களும், அல்போன்ஸ் புத்ரனின் எழுத்து - இயக்கத்தில் "நேரத்தை - நல்ல நேரம்" ஆக்கியுள்ளன என்றால் மிகையல்ல!

மொத்தத்தில், "நேரம்" - ரசிகர்களுக்கு மட்டுமல்ல, இப்பட சம்பந்தப்பட்ட அனைவருக்கும் "நல்ல நேரம்!"
thanx -தினமலர்
 
 

3 comments:

sornamithran said...

அவங்க நேரம் நல்லாருக்குன்னு சொல்றீங்க....

Unknown said...

en ketta neram, intha padathuku poi tholachiten....

test said...

உங்கள் வலைதளத்தை அழகுபடுத்த வேண்டுமா இந்த லிங்கை கிளிக் பண்ணுக http://www.bigmasstemplate.blogspot.in/