Wednesday, May 01, 2013

மே தின சிறப்பு சினிமா ரிலீஸ் - ஒரு பார்வை

 

1.மூன்று பேர் மூன்று காதல் - கேளடி கண்மணி, ஆசை, ரிதம், பூவெல்லாம் கேட்டுப்பார், சத்தம் போடாதே போன்ற படங்களை இயக்கிய ‌வஸ்ந்த் சிறிய இடைவெளிக்கு பிறகு இயக்கும் படம் மூன்று பேர் மூன்று காதல். இதில் அர்ஜுன், விமல் உட்பட மூன்று ஹீரோக்களும், சுர்வின், லாசினி, முக்தாபானு என மூன்று ஹீரோயின்களும் நடிக்கிறார்கள், குறிஞ்சி, மருதம், நெய்தல் என மூன்று நிலபரப்புகளில் நடக்கும் மூன்று கதைகள் இணைந்த படம். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். 


வசந்த் இயக்கும் மூன்று பேர் மூன்று காதல் ஷூட்டிங் முடிந்து வெளிவரத் தயாராகி விட்டது. அர்ஜுன், விமல் இவர்களுடன் தாமிரபரணி பானு நடிக்கிறார். சுர்வீன், லாசினி என்ற இரு புதுமுகங்கள் அறிமுகமாகிறார்கள். யுவன் இசை அமைத்துள்ளார். படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இடம்பெறுகிறது. இப்போது படத்துக்காக 6வது பாடல் ஒன்றை உருவாக்கி இருக்கிறார் யுவன். இது படத்தின் புரமோஷனுக்கான பாடல். விஜய் டிவியின் லிட்டில் சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றி பெற்ற ஆஜித் இந்த பாடலை பாடியுள்ளார். "ஸ்டாப் தி பாட்டு..." என்று துவங்கும் இந்தப் பாடல்களை தற்போது ஆன்லைனில் வெளியிட்டுள்ளனர். விரைவில் தொலைக்காட்சியில் காணலாம். படத்தின் காட்சிகளுடன் ஆஜித் பாடுவதும் வீடியோ ஆல்பத்தில் இடம்பெறும்

 ஈரோடு ஆனூரில் ரிலீஸ் 

 

2. சூது கவ்வும் -அட்டகத்தி', 'பீட்சா' போன்ற வரவேற்பு பெற்ற படங்களை தயாரித்தவர் திருக்குமரன் எண்டர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம். இந்நிறுவனத்தின் தயாரிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் 'சூது கவ்வும்'.

விஜய் சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி நடித்து இருக்கும் 'சூது கவ்வும்' படத்தினை நலன் குமாரசாமி இயக்கி இருக்கிறார். நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர் நலன் குமாரசாமி  என்பது குறிப்பிடத்தக்கது.

'சூது கவ்வும்' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் கலந்து கொண்டு படக்குழுவினை வாழ்த்தினார்கள்.

படத்தின் FIRST LOOK TEASER, கானா பாலா பாடியிருக்கும் 'காசு பணம்' பாடல் TEASER மற்றும் Theatrical டிரெய்லர் ஆகியவை திரையிடப்பட்டது. பாடல், டிரெய்லரை பார்த்தவர்கள் அனைவருமே வித்தியாசமாக இருப்பதாக படக்குழுவினை பாராட்டினார்கள்.

'சூது கவ்வும்' படத்தினை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வெளியிட இருக்கிறது. திங் மியூசிக் நிறுவனம் இசை உரிமையை வாங்கியுள்ளது.

: விஜய்சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ள படம், ‘சூது கவ்வும்’. மே 1,ம் தேதி வெளிவருகிறது. படம் பற்றி இயக்குனர் நலன் குமரசாமி கூறியதாவது: பார்த்து வந்த வேலையை இழந்த நான்கு பேர், வேலை இல்லாத விஜய் சேதுபதியுடன் இணைந்து ஒரு தவறான காரியத்தில் இறங்குகிறார்கள். ஆனால் அது அவர்களை நல்ல இடத்தில் கொண்டு போய் நிறுத்துகிறது.

தேர்தல் அறிவிப்பு தொடங்கி, தேர்தல் முடிவது வரையில் நடக்கும் சம்பவங்களை கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட கதைதான். ஆனால் அரசியல் படம் அல்ல. சென்னையின் முக்கிய சாலைகளில் துரத்தல் காட்சிகளைப் படமாக்கி இருக்கிறோம். ஆஸ்திரேலியாவில் பின்னணி இசை சேர்த்திருக்கிறோம். விஜய் சேதுபதி 40 பிளஸ் நடுத்தர மனிதராக நடித்திருக்கிறார்.

ஈரோடு ராயலில் ரிலீஸ்


சூது கவ்வும் - சினிமா விமர்சனம்


 


3.  எதிர்நீச்சல்- 3 படத்தில் நடித்த தனுஷ் அடுத்து தனது சொந்த பட நிறுவனமான ஒன்டர்பார் பிலிம்ஸ் சார்பில் ஒரு படத்தை தயாரிக்கிறார். இந்த படத்துக்கு, எதிர்நீச்சல் என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இதில், தனுஷ் நடிக்கவில்லை. கதாநாயகனாக சிவகார்த்திக்கேயன் நடிக்கிறார். 180, இங்லீஷ் விங்லீஷ் படத்தில் நடித்த பிரியா ஆனந்த் கதாநாயகியாகவும், அட்டகத்தி நாயகி நந்திதா இன்னொரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்.

டைரக்டர்கள் பாலுமகேந்திரா, வெற்றிமாறன் ஆகியோரிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்த ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இந்த படத்தின் கதை-திரைக்கதை-வசனம் எழுதி இயக்குகிறார். ஆடுகளம், எங்கேயும் எப்போதும் ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஆர்.வேல்ராஜ் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்துக்காக தனுஷ் 2 பாடல்களை எழுதியிருக்கிறார். மற்ற பாடல்களை தாமரை, கார்க்கி ஆகிய இருவரும் எழுத, ஒய் திஸ் கொல வெறி புகழ் அனிருத் இசையமைக்கிறார். 

 சிறந்த நடிகர், பாடலாசிரியர் கம் பாடகர் (கொலைவெறி) என பல்வேறு  துறைகளில் கலக்கிவந்த நடிகர் தனுஷ், தற்போது தயாரிப்பாளராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார். சிவகார்த்தி‌கேயன், பிரியா ஆனந்த் நடிப்பில் உருவாகி வரும் எதிர்நீச்சல் படத்தின் மூலம் தயாரிப்பாளராகியுள்ளார்.இந்த படத்தில் இரு பாடல்களை எழுதியுள்‌ளதோடு மட்டுமல்லாமல் பாடல்களையும் பாடியுள்ளார் தனுஷ். கொலைவெறி பாடல், அனிரூத் இசையமைத்துள்ளார். இந்த கூட்டணியில் வெளி வந்த கொலைவெறி பாடல் சர்வதேச அளவில் ஹிட்டானது. இதையடுத்து  எதிர்நீச்சல் படத்தின் பாடல்களும் ‌மிகப்பெரிய வெற்றியடையும் என்ற நம்பிக்கையில் ஆடியோ உரிமை அதிக விலை கொடுத்து வாங்க சோனி மியூசிக் நிறுவனம் முன்வந்துள்ளது. 


சிவகார்த்திகேயன் நடிக்கும், "எதிர்நீச்சல் படத்தின் படப்பிடிப்பு, தற்போது சென்னையில் துவங்கியுள்ளது. இப்படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக, ப்ரியா ஆனந்தும், இன்னொரு கேரக்டரில் தன்சிகாவும் நடிப்பதாக இருந்தது. இப்போது, தன்சிகா வேடத்துக்கு, "அட்டகத்தி நந்திதா ஒப்பந்தமாகியுள்ளார். "அட்டகத்தி பாணியில் இதுவும் காமெடி கலந்த காதல் கதையில் உருவாகிறதாம். ஏற்கனவே, "3 படத்தில் காமெடியனாகவே நடித்த சிவகார்த்திகேயன், "இப்படத்தில் காமெடி கலந்த ஹீரோவாக புதிய கெட்டப்பில் நடிக்கிறார். "இப்படத்திற்கு பிறகு, நல்லதொரு ஜனரஞ்சகமான ஹீரோவாக ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொள்வர் என்கிறார், சிவகார்த்திகேயன்.

தனுஷ் நடிப்பில் ஐஸ்வர்யா இயக்கிய ‘3’ படத்துக்குப் பிறகு வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் தயாரிக்கும் படம், ‘எதிர்நீச்சல்’. சிவகார்த்திகேயன், பிரியா ஆனந்த், நந்திதா நடிக்கின்றனர். ஒரு பாடல் காட்சியில் தனுஷ், நயன்தாரா ஆடியுள்ளனர். ஒளிப்பதிவு, ஆர்.வேல்ராஜ். இசை, அனிரூத். பாடல்கள்: தனுஷ், தாமரை, மதன் கார்க்கி. படத்தை எழுதி, இயக்கும் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் கூறியதாவது:

வாழ்க்கையில் எந்த விஷயத்தை அணுகினாலும், அதை பாசிட்டிவ்வாக அணுக வேண்டும். அப்படிச் செய்தால்தான் வெற்றி கிடைக்கும் என்ற கருத்தை மையப்படுத்தி உருவான படம். மார்க்கெட்டிங் பிரிவில் பணியாற்றும் இளைஞனாக சிவகார்த்திகேயன், ஸ்கூல் டீச்சராக பிரியா ஆனந்த், தடகள கோச்சாக நந்திதா நடிக்கின்றனர். நான் எழுதிய ‘சத்தியமா நீ எனக்கு தேவையில்ல’ பாடல் காட்சியில் தனுஷ், நயன்தாரா, சிவகார்த்திகேயன் இணைந்து ஆடியுள்ளனர். நாகர்கோயிலில் ஷூட்டிங் நடந்தது. இந்தப் பாடலை தனுஷ், வேல்முருகன் பாடியுள்ளனர். 


ஈரோடு அபிராமி , அன்னபூரணி  யில் ரிலீஸ்


எதிர் நீச்சல் - சினிமா விமர்சனம்http://www.adrasaka.com/2013/05/blog-post_2.html