Thursday, May 16, 2013

தம்பதிகளின் அகராதியில்......

இனிய காலை வணக்கம் நண்பர்களே....
1. நீ என்னுடன் பேசாமல் இருக்கும் பொழுதுகள் நான் யாருடனும் பேசாமல் இருக்கும் தருணங்கள்----------------------


2. உன் அன்பின் ஆழம் அதிகரிக்க அதிகரிக்க உன் பொசசிவ்னெசும் அதி கரிக்கிறது--------------------------


3.  பெரும்பாலும் பூச்சரங்கள் டார்க் பச்சை நிற நூலில் கட்டப்படுகிறது # பூக்காம்புக்கு மேட்ச்க்கு மேட்ச்-------------------------4. இரண்டு கண்ணாடி விரியன் பாம்புகள் பின்னிப்பிணைந்தது போல் உன் ஒற்றைச்சடை---------------------------


5. டவுன் பஸ்ஸில் முன்புறம் பெண்களுக்கான பக்கவாட்டு சீட் போட்டது பின் உள்ள அனைத்து ஆண்களுக்குமான சைட் சான்ஸ்--------------------------
Photo: SHATH Photography..


6. பலாச்சுளையை தேன் ல ஊற வெச்சு சாப்பிடறதைக்கண்டுபிடிச்சது யாரா வேணா இருக்கலாம்.ஆனா பலாக்கொட்டையை வேக வெச்சு கத்திரிக்கா குழம்புல போடறதை தமிழன்தான் கண்டுபிடிச்சிருப்பான்் -------------------------


7. யாருடன் கூட்டணி என இப்போது கூறமாட்டேன்: விஜயகாந்த் . # இவரு பெரிய நயன் தாரா.லவ்வர் யார்னு சொல்லமாட்டாராம்் .-----------------------


8. கனகாம்பரப்பூ வெச்சிருக்கும் பிகர் என்பதால் தலைக்கனம் இல்லாத பொண்ணுனு சொல்லிட முடியாது----------------------


9. குழந்தை தூங்கியாச்சா?னு கேட்டா தம்பதிகளின் அகராதியில் தூங்க வை என அர்த்தம் # மாமழை போற்றுதும் கடுங்குளிர் போற்றுதும்--------------------


10. மேடம்.நீங்க டென்த் படிக்கற பொண்ணுனு என்னால நம்பவே முடில
. லட்சுமிமேனன் -,எதையும் மேலோட்டமாப்பார்த்துமுடிவுபண்ணக்கூடாது -----------------------


New Collections from Veny Beauty Saloon !
Telefone : 044 730 84 63


11. எல்லாத்தரப்பு ஆட்களுக்கும் பிடித்த மதம் அவரவர் காதலியின் சம் மதம் ்------------------------


12. சிரசாசனம் செய்யும்போது சாப்பிடுவது போன்றதுதான் உன்னுடன் இருக்கும் தருணங்களில் நான் பேசுவது
----------------------

13. கள்ளுண்ணாமையை நான் எதிர்க்கிறேன் # உன் உதடு கள்--------------------


14. பொதினா இலை ,கொத்துமல்லித்தழை வாசனை வரிசையில் என்னைக்கவர்ந்த வாசம் உன் அருகாமை நறுமணமே-------------------


15. இரு குழந்தைகளுக்கிடையே போதிய இடைவெளி வேண்டும் என்று தான் அரசு சொல்லி இருக்கு.நம் இருவருக்கிடையே அல்ல-----------------


Photo: மதிய உணவு தயார். :-)


16. கவிதைக்கும் எனக்கும் ரொம்ப தூரம் என யாரும் சொல்லி விட முடியாது.உன்னுடன் ஒட்டியே நடக்கிறேனே?்---------------------


17. நீ கண்ணியமாக சேலை உடுத்தி வரும்போது நான் உன் காதலனா?பக்தனா? என்ற சந்தேகம் எனக்கே வந்து விடுகிறது-----------------------


18. நான் இதழியல் படித்தாலும் உன் இதழ் பற்றிய எந்த விபரங்களையும் இது வரை அறிய நீ விட்டதில்லை # லாக் ஆப் நாலெட்ஜ் இன் லிப்பாலஜி-----------------------


19. மழையில் நனைந்த கூந்தலையும் ,நினைவில் நின்ற காதலனையும் காய வைப்பதில் உன்னை யாரும் மிஞ்சி விட முடியாது--------------------20. பூனைக்கு மணி கட்டுவது யார்? பூனம் (பான்டே) க்கு சேலை கட்டிவிடுவது யார்?---------------------
21. நீ பெரிதாக என்னிடம் ஏதும் பேசி விடப்போவதில்லை.அதிகபட்சம் ம் ம் ஹூம் தான்.ஆனாலும் அதிலும் எனக்கு ஒரு கிறங்கடிக்கும் போதை கிடைச்சுடுது்--------------------


22. வேலைப்பளுவில் உன்னை அலைபேசியில் அழைக்காமல் இருந்திருக்கலாம்.ஆனால் உன்னை நினைக்காமல் இருந்ததில்லை.---------------------


23. மழை வரும் அறிகுறி.இன்னும் ஊடல் கொண்டு முகத்தை திருப்பிக்கொண்டிருந்தால் நீ காதல் தற்குறி-----------------


24. மேடம்.நீங்க புதுசா யாரையோ லவ் பண்ணிட்டு இருக்கீங்களாமே ? யா யா யா யா யா யா ( 6 யா) ----------------------


25. உன் நெற்றிக்குங்குமம் மழை நீரில் கரைந்து நாசி வழியே இறங்கி உதட்டை அடைந்திருக்கிறது.அய்யய்யோ ரத்தமா? என பொய்யாய் பதறலாமா? என ரிகர்சல் பார்த்துக்கொண்டிருக்கிறேன் ----------------------------- 
Photo: SHATH Photography..!
Janu & Anjay :)

0 comments: