Friday, April 26, 2013

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 26 .4.2013 ) 6 படங்கள் முன்னோட்ட பார்வை

 

1.நான் ராஜாவாகப் போகிறேன் - உதயம் வி.எல்.எஸ். சினி மீடியா சார்பில் கே.தனசேகர், வி.சந்திரன் தயாரிக்கும் படம் நான் ராஜாவாகப் போகிறேன். இதில் நாயகனாக நகுல், நாயகியாக சாந்தினி நடிக்கின்றனர். நிஷாந்த், கவுரவ், மணிவண்ணன், சுரேஷ், ஏ.வெங்கடேஷ், ஜெயசிம்மா, முத்துராமன், சேத்தன், குமரவடிவேல், டெல்லிகணேஷ், மயில்சாமி, அவனிமோடி, கஸ்தூரி, ஆர்த்தி, வனிதா விஜயகுமார் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி பிருத்வி ராஜ்குமார் இயக்குகிறார். படம் பற்றி அவர் சொல்கிறார். ஆக்ஷன், திரில்லர் படமாக தயாராகிறது. பதினைந்து வருடம் கழித்து மக்கள் பயனடையும் வகையில் தொலை நோக்கு திட்டங்களை நிறைவேற்றும்படி குரல் கொடுத்து திரிபவர் மணிவண்ணன். அவர் கருத்துக்களை சாந்தினி பின்பற்றினார். இதனால் மணிவண்ணனுக்கு பிரச்சினைகள் உருவாகி அது சாந்தினிக்கும் தாவுகிறது.

சாந்தினியை காதலிக்கும் நகுலையும் அது தொற்றுகிறது. அதிலிருந்து எப்படி மீள்கிறார்கள் என்பது கதை. நகுல், ஐ.டி. படிக்கும் மாணவ ராகவும், சாந்தினி சட்டக் கல்லூரி மாணவியாகவும் வருகிறார்கள்.

இசை: ஜி.வி.பிரகாஷ்குமார், ஒளிப்பதிவு: ஆர்.வேல்ராஜ், வசனம்: வெற்றிமாறன். பாடல்: கார்க்கி, எடிட்டிங்: கிஷோர், இணை தயாரிப்பு என்.வி.டி.தேவ ராஜ்.

ஈரோடு தேவி அபிராமி , ஸ்ரீலட்சுமி யில் ரிலீஸ்  


2.யாருடா மகேஷ் - யாருடா மகேஷ் படத்தின் பெயர். சமீபமாக இளம் இயக்குனர்கள் வழக்கமான திரைக்கதை அமைப்பை விடுத்து புதிதாக முயற்சி செய்கிறார்கள். யாருடா மகேஷின் ட்ரெய்லரைப் பார்த்தால் இதுவும் அப்படியொரு முயற்சி போலதான் தெரிகிறது. சூதுகவ்வும் படத்துக்குப் பிறகு யாருடா மகேஷின் ட்ரெய்லர்தான் யு டியூபில் ஹிட். செம ரகளை. ஆண்டனி நவாஸ், ஆர்.மதன் குமார், சத்திய நாராணயன் என்று மூன்று பேர் இணைந்து படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

இதில் ஆர். மதன் குமார்தான் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எல்லாமும். கோபி சுந்தர் இசை.

சிவா என்பவன் மகேஷை தேடிச் செல்வதுதான் படத்தின் ஒன் லைன். ரொமாண்டிக் காமெடியாக உருவாக்கியிருக்கிறார்கள். கன்னடத்தில் நடித்து வரும் சந்தீப் கிஷன் ஹீரோ. ஹீரோயின் டிம்பிள். இவர்கள் தவிர நண்டு ஜெகன், லிவிங்ஸ்டன், உமா பத்மநாபன், ஸ்ரீநாத், சுவாமிநாதன், சிங்கமுத்து ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இயக்குனர் ஆர். மதன் குமார் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தை இயக்கிய மணிகண்டனின் முன்னாள் உதவியாளராம். 


ஆனால் குருவைப் போல சொதப்பலாக இல்லாமல் நன்றாக இயக்கியிருப்பதாக கேள்வி. நா.முத்துக்குமார் பாடல்கள் எழுதியிருக்கிறார். கலர் பிரேம்ஸும், ரெட் ஸ்டுடியோஸும் இணைந்து படத்தை தயாரித்துள்ளது. 

 தமிழ் சினிமாவில் முக்கிய ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு. இந்தியிலும் முன்னணியில் இருக்கிறார். திரையுலகைச் சேர்ந்தவர்கள் ரத்தினவேலு என்ற பெயரை சுருக்கி ராண்டி என்று செல்லமாக அழைப்பார்கள். இதனை புதுமுகங்கள் இணைந்து உருவாக்கும் யாருடா மகேஷ் என்ற படத்தில் கிண்டல் செய்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் டிரெய்லர் தற்போது யூ டியூப்பில் ஒளிபரப்பாகிறது. இதில் ஒருவர் "ரத்தினவேலுவை ராண்டின்னு கூப்பிடுவீங்க அப்போ குழந்தை வேலுவேவை.....டின்னு கூப்பிடுவீங்களா?" என்று பேசும் வசனம் வருகிறது. இது ஒளிப்பதிவாளர் ரத்தினவேலுவை கடுமையாக கோபத்திற்கு ஆளாக்கியது.

இதுகுறித்து ஒளிப்பதிவாளர் சங்கத்தில் ரத்தினவேலு புகார் செய்திருக்கிறார். சங்கத்திலிருந்து யாருடா மகேஷ் இயக்குனர் மதனிடம் விளக்கம் கேட்டிருக்கிறார்கள். "அதை சும்மா ஜாலிக்காகத்தான் வைத்தோம் யாருடைய மனதையும் புண்படுத்த அல்ல. படத்தில் அந்த வசனத்தை மோட் செய்து விடுகிறோம்" என்று உறுதியளித்திருக்கிறார் என்கிறது ஒளிப்பதிவாளர் சங்க வட்டாரம்.

ஈரோடு   சண்டிகா , சங்கீதா வில் ரிலீஸ் 

பட இயக்குநர் பேட்டி @ விகடன்


http://www.adrasaka.com/2013/01/blog-post_9873.html


யாருடா மகேஷ் - சினிமா விமர்சனம்

 http://www.adrasaka.com/2013/04/blog-post_8161.html

 


3.ஒருவர் மீது இருவர் சாய்ந்து - விஜய் நடித்து ஹிட்டான 'லவ் டுடே' மாதவனின் 'ஆர்யா' போன்ற படங்களை இயக்கிய பாலசேகரன் புதிதாக 'ஒருவர் மீது இருவர் சாய்ந்து' என்ற படத்தை  கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்கிறார். ஆட்ரியா டெக் பிலிம்ஸ் சார்பில் நாராயணராஜு தயாரிக்கிறார்.

இதில் நாயகனாக லகுபரன், நாயகியாக சுவாதி நடிக்கின்றனர். இவர்கள் 'ராட்டினம்' படத்தில் அறிமுகமானவர்கள். இன்னொரு நாயகியாக சான்யதாரா நடிக்கிறார். முக்கிய கேரக்டரில் பாக்யராஜும், கவுரவத் தோற்றத்தில் விசுவும் வருகின்றனர். மாஸ்டர் பரத், சிங்கம் புலி,  ராஜ்கபூர், ஆர்த்தி, பரவை முனியம்மா, பாண்டு, சின்னி ஜெயந்த், அரவிந்த் ஆகியோரும் நடிக்கின்றனர்.

காதல், காமெடி படமாக தயாராகிறது. இரு பெண்களை பற்றிய முக்கோண காதல் கதை சினிமாவில் நிறைய காதல் படங்கள் வந்துள்ளன. யாரும் சொல்லாத விஷயம் படத்தில் இருக்கும். இளமை கலந்த கலர்புல் படமாக  வந்துள்ளது.

சென்னை, பழனி, பாண்டிச்சேரி, பொள்ளாச்சி பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. தற்போது  இறுதி கட்ட பணிகள் நடக்கின்றன.

இசை: ஷிவா, ஒளிப்பதிவு: விஜயகோபால், எடிட்டிங்: வி.டி.விஜயன்.

 ஈரோடு ஸ்ரீநிவாசாவில் ரிலீஸ் 

4. IRON MAN 3 - ஏற்கனவே இரண்டு பாகங்கள் வெளிவந்து வெற்றி பெற்ற ‘அயன்மேன்’ படத்தின் மூன்றாவது பாகம் இப்போது தயாராகியுள்ளது. வழக்கம்போல, அயர்ன்மேன் ஸ்டார்க், தான் உருவாக்கி வைத்திருந்த உலகத்தை அழித்த எதிரிகளை தேடிச் செல்கிறார். அந்த போராட்டத்தில் தனது சக்தி அனைத்தையும் இழக்கிறார். துன்பமான காலகட்டத்தில் அவருக்கு இதுவரை விடை தெரியாமல் இருந்த ஒரு கேள்விக்கு விடை தெரிகிறது. அதை வைத்து மீதி எதிரிகளை முறியடிப்பது கதை. ரோபர்ட் டோனிவே, கெய்நத் பல்ட்ரோச் நடித்துள்ளனர். ஷேன் பிளாக் இயக்கி உள்ளார். இந்தியாவில் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் ஏப்ரல் 26,ம் தேதி யுடிவி ரிலீஸ் செய்கிறது. 

ஈரோடு அபிராமியில் ரிலிஸ். ஒரு வாரம் தான் ஓடும், ஏன்னா அடுத்த வெள்ளி இந்த தியேட்டரில் எதிர் நீச்சல் ரிலீஸ் 

5. Aashiqui 2 - The entire star cast of Aashiqui 2 was spotted attending a concert to celebrate its music in Mumbai last night. The main leads of the film, Aditya Roy Kapur and Shraddha Kapoor along with director Mohit Suri were seen enjoying the melodious songs that were sung by the talented singers. Aashiqui 2, which is produced by Bhushan Kumar, is all set to hit the theatres on 26th April 2013.

ஈரோட்டில் ரிலீஸ் இல்ல

6. ஓ -ோ டப்பிங்க் பம் போல . ெலங்குப்ப ஒரிஜினல் டைட்டில் என்னெரியை . காஜல் அகர்வால் மிரி ெரியு . வக்கஆம்ப்ளங்கஞ்சியார்ப்பில்லை என்பால் ஹீரோ யார்னெரிய

 ஈரோடு ஸ்டாரில் ிீஸ்   


0 comments: