Friday, April 05, 2013

சேட்டை - சினிமா விமர்சனம்

 

ஹீரோ ஒரு பத்திரிக்கைல பணி ஆற்றுபவர். அவருக்கு எங்கிருந்தோ ஒரு கோடீஸ்வரக்காதலி வலியனா வந்து மாட்டுது. ( நமக்கு டொக்கு ஃபிகர் கூட மாட்றதில்லை) அந்த உத்தமக்காதலி அடிக்கடி ஹீரோவைத்தள்ளிட்டுப்போய் “ கண்ணா லட்டு தின்ன ஆசையா?ன்னு பூடகமா கேட்குது ( இதை விட ஓப்பனா யாரும் கேட்கவே முடியாது ) ஹீரோ கேரக்டர் கேனக்கிறுக்கு கேரக்டர் போல . அதெல்லாம் முடியாதுங்கறார். இது ஒரு டிராக்ல ஓடுது.

ஹீரோவை அதே லைன்ல அதாவது பிரஸ் ரிப்போர்ட்டர் ஃபிகர் தானா ஒன் சைடா லவ் பண்ணுது . அவரோட 2 சைடும் நல்லா இருந்தும் ஹீரோ கண்டுக்கலை. அவ்ளவ் உத்தமனா? அடேங்கப்பா . கேரக்டரை மெயிண்ட்டெயின் பண்றாங்களாம். எம் ஜி ஆர் கூட இவ்ளவ் கண்ணியம் காத்ததில்லை , அப்பப்ப ஹீரோயினைத்தடவிட்டு கடைசில தங்கச்சி மறந்துடும்பாரு  .

மேலே சொன்ன 2 லவ்வும் அப்பப்ப ஊறுகாய் மாதிரி , மெயின் கதை என்னான்னா ஒரு கடத்தல் கும்பல் வைரக்கற்கள் கொண்ட ஒரு பொம்மையைக்கை மாத்துது, அது தவறுதலா ஹீரோயின் கிட்டே மாட்டி ஹீரோ கிட்டே போய் அவரோட 2 நண்பர்கள் கிட்டே போய் ... என்ன தலை சுத்துதா? திரைக்கதையும் அப்டித்தான்... 


ஆர்யா தான் ஹீரோ. நிஜ வாழ்வில் நயன் தாராவும் த்ரிஷாவும் இவருக்காக அடிச்சுக்கிட்டதா காத்து வாக்கில் ஒரு செய்தி உண்டு . கதைல அதை அப்டியே நாசூக்கா சொல்லி இருக்காங்க.. புக் பண்ணூம்போதே இது ஒரு மொக்கைக்காமெடி ஃபிலிம் , ஆல்ரெடி ஹிந்தில ஹிட் ஆன  படத்தின் ரீ மேக் தான், நீங்க சும்மா வந்துட்டுப்போனா போதும்னு சொல்லி இருப்பாங்க போல , மனுஷர் அதிகமா அலட்டிக்கலை . வந்தவரை ஓக்கே ஹீரோயின் நெம்பர் ஒன் ஹன்சிகா .கொழுக் மொழுக் கன்னம் ( கன்னம் மட்டுமா ... ) ஹீரோவுக்கே படத்துல வேலை இல்லாதப்போ இவருக்கு மட்டும் என்ன கவர்மெண்ட் ஜாப்பா இருக்கப்போகுது , ஒரு டூயட் , 3 கட்டிப்பிடி சீன் அவ்ளவ் தான் .இவர் அப்பப்ப குஷ்பூ மாதிரி மேனரிசம் காட்டுவது , சிரிப்பது  எல்லாம் ஓவர் , ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் சுந்தர் சி வந்து டொக் டொக் -னு கதவை தட்டப்போறார் , கபர்தார் 


 ஹீரோயின் நெம்பர் 2 அஞ்சலி , இவர் கழுத்துக்குக்கீழே நமிதாவுக்கு சவால் விடும் அளவு வளர்ச்சி அடைவது கூடத்தேவலை, கழுத்துக்கு மேலே குறிப்பா கன்னங்கள் 2 ம் கேப்டன் கன்னத்துக்கே சவால் விடும்படி பீர் சாப்பிட்டு வீங்கிப்போய் கிடக்கு , பார்க்க சகிக்கலை . அஞ்சலி ரசிகர்கள் மன்னிக்க 


ஹன்சிகா , அஞ்சலி 2 பேர்ல யார் அதிக திறமையைக்காட்டி இருக்காங்கன்னு பார்த்தா சந்தேகமே இல்லாம ஹன்சிகாதான் . குறிப்பா அவர் பீச் ல குளிச்சுட்டு கும்மாளம் இடும்போது  ஆஹா! பிரமாதமா திறமை காட்டி இருக்கார். இதுக்கு ஏதாவது அவார்டு உண்டா ? தெரில  சந்தானம் படத்தின் முதுகெலும்பு . இவரோட பிளஸ் பாயிண்ட்டே அப்பப்ப டைமிங்கா கவுண்ட்டர் டயலாக் அடிப்பதுதான். அவரையும் வயித்தால போற பேஷண்ட் ஆக்கி வடிவேல் ரேஞ்சுக்கு இறக்கி விட்டுட்டா எப்டி? இயக்குநர் அங்கே தான் சந்தானத்தின் கேரக்டரைசேஷன் ல சறுக்கிட்டார்,. அதையும் மீறி சந்தானம் 6 இடத்துல கவுண்ட்டர் டயலாக் அடிச்சு  அது போக 19 மொக்கை ஜோக்ஸ் வழங்கி இருக்கார். பிரேம் ஜி.. சப்போர்ட்டிங்க் காமெடி . சொல்றேனேன்னு யாரும் தப்பா நினைக்காதீங்க , இவர் வரும் காட்சிகள் மகா எரிச்சல் . அவருக்கு தனி டூயட் வேற , க்ளோசப் ல அவர் வாயை ஏன் அப்டி காட்றாங்கன்னு தெரியல.. அவர் ஆளும் தலையும் .. முடியல (நடிகர்  செந்தில் கேரக்டர் மாதிரி ட்ரை பண்றாரோ? )

 நாசர் தான் வில்லன் . அங்கங்கே கிச்சு கிச்சு 


இசை தமன் . 2 பாட்டு தேறுது , பின்னணி இசை சுமார் . ஒளிப்பதிவும் சராசரி 

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்1. கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம இந்தப்படத்துக்கு யு சர்ட்டிஃபிகேட் வாங்குனது. சென்சாரே அப்டி கொடுத்தாக்கூட இவங்க ஏ தான் வேணும்னு கேட்டு வாங்கி இருக்கனும், அப்டி இருக்கு பல காட்சிகள்2. ஹன்சிகா , அஞ்சலி என 2 முன்னணி ஹீரோயின்சை புக் பண்ணி  முடிஞ்சவரை அவங்க திறமையை வெளிக்கொணர பாடுபட்டது 3. சி செண்ட்டர் ரசிகர்களை சிரிக்க வைக்கும் மொக்கைக்காமெடி டயலாக்ஸ் 


4. ஹீரோயின் ஹன்சிகா குட்டைப்பாவாடை அல்லது மிடி மாதிரி ஏதோ ஒரு கர்ச்சீப்பை அணிந்து வரும் காட்சிகளில் எல்லாம் கேமராமேன் கவுரவம் பார்க்காமல் தரையோடு தரையாக படுத்து ஜூம் செய்தது , குறிப்பா அந்த பீச் காட்சி.. 

இயக்குநரிடம் சில கேள்விகள்1. ஹீரோயின் கோடீஸ்வரி. அவர் ம் என சொன்னா 100 கோடி கூட கிடைக்கும், ஆனா லூஸ் வில்லன் அவளைக்கடத்தி வெச்சுட்டு கேவலம்  1 3/4 கோடிக்காக வைரத்தை பேசிட்டு இருக்காரு . 


2. ஹீரோ ஹீரோயினை தடவறாரு , கிஸ் பண்றாரு மேட்டர் தவிர எல்லாமே பண்றாரு, ஆனா “ எனக்கு இவ செட் ஆக மாட்டா. சரி வராது என டயலாக் பேசி லவ்வையே கேவலப்படுத்தறாரு


3. ஆர்யா , அஞ்சலி 2 பேரும் வரும்போது சம்பந்தமே இல்லாம ஹன்சிகா முன்னால  “ ஆமா , நான் அவளை கிஸ் பண்ணேன்னு ஒப்புதல் வாக்கு மூலம் கொடுக்காரே? ஆர்யா, உங்களைக்கேட்டாங்களா முருகேசா? 


4. எம் ஜி ஆர் , சிவாஜி காலத்துல ஆள் மாறாட்ட,ம் நடந்தது ,  வைரம் ஆள் மாறி டெலிவரின்னு சொன்னா அதுல ஒரு நியாயம் இருந்துச்சு , டெக்னாலஜி வளர்ந்த இந்தக்காலத்துல யார் கிட்டே வைரம் தரனும்னு ஒரு ஃபோட்டோக்கூடவா இருக்காது . கன்ஃபர்மேஷன் ஃபோன்ல பண்ணிக்க மாட்டாங்களா? 5. ஆர்யா , ஹன்சிகா கூட கில்மா பண்ண பிள்ளையார் சுழி போடும்போது ( பிள்ளையார் மன்னிக்க ) அஞ்சலி கிட்டே இருந்து ஃபோன். அவர் சக ஊழியை மட்டுமே , அர்ஜெண்ட் மேட்டர் வா அப்டினு சொன்னதும் இவர் ஏன் கிளம்பனும்? 5 நிமிஷம் தானே ஆகும் ,மேட்டரை முடிச்சுட்டு போய் இருக்கலாம். அந்த சீன்ல ஹன்சிகா சீறுவார்னு பார்த்தா கண்டுக்கவே இல்லை 


6. எதுக்கு அவசரமா வரச்சொன்னேன்னு கேட்டதுக்கு அஞ்சலி கூலா ஜஸ்ட் சரக்கு அடிக்க  அப்டிங்கறார். முடியல 


7. காதலி தன்னை விட வசதின்னு த்தெரிஞ்சு தானே ஹீரோ லவ்வறாரு . சரி வராதுன்னு சொல்றவர் ஹீரோயின் கொடுத்த காரை மட்டும் ஒனத்தியா வாங்கிக்கிட்டது எப்டி? 


8. நெம்பர் டூ போறது யதார்த்தம் தான், எல்லாரும் டெயிலி போறதுதான் , அதுக்காக காமெடிங்கற பேர்ல இப்டி இறங்கி வரனுமா? நாளைக்கே சரி வேணாம், அடுத்த வாரமே இந்தப்படத்தை டி வி ல போடறப்போ சாப்டுட்டே யாராவது படம் பார்த்தா குமட்டாதா? 9. சந்தானம் கேரக்டர் நாய் நக்ஸ் ( நக்கி ) அப்டினு வெச்சது நாய் நக்ஸ் நக்கீரன் என்ற வலைப்பூ ஓனர் மனசுல வெச்சுத்தான். டைட்டில் கர்டுல அவருக்கு நன்றியே போடலையே? பத்திரிக்கைப்பேட்டில மட்டும் அதை ஒத்துக்கிட்டவர் டைட்டில்ல் ஏன் அங்கீகாரம் தர்லை ?


10. இந்தப்படத்தின் பின்னணி இசை பல இடங்களில் நாடக் எஃபக்ட் . 


11. எக்சாம் ஹால் ல ஃபோன் பேசலாமா? 


மனம் கவர்ந்த வசனங்கள்

1. மல்லிகா அபார்ட்மென்ட்ல பிராத்தல் நடக்குது சார்.


நாடு எங்கேய்யா போய்ட்டு இருக்கு? 


அங்கே தான் போய்ட்டு இருக்கு2. வீட்டுக்குள்ளே குப்பைத்தொட்டி வெச்சுப்பார்த்திருக்கேன், ஆனா  ஒரு வீடே குப்பைத்தொட்டி ஆகி இப்போதான் பார்க்கறேன் 3. பாதாளச்சாக்கடைக்கு கதவு , ஜன்னல் வெச்சது மாதிரி ஒரு வீடு ./


4. ட்ரிங்க் ட்ரிங்க் 


 என்ன சத்தம் அது? 


 10 நிமிஷத்துக்கு முன்னே நீ காலிங்க் பெல் அடிச்சியே , அதுதான் , கொஞ்சம் லேட் பிக்கப் , ஹி ஹி 5. வெங்கட் எனும் பேரை வெங்க்கின்னு கூப்பிடறதில்லை? அது மாதிரி நாய் நக்ஸ்ங்கற பேரை சுருக்கி நக்கி ஆக்கிட்டேன், எப்டி? 6. டியர் , உங்களுக்காக புது சர்ட் வாங்கி வெச்சிருக்கேன் 


 எப்டியும் கழட்டத்தானே போறோம்? எதுக்கு இது? ( சுத்தம் ) 


7. டேய் , கிசு கிசு எழுதுற எனக்கே கூச்சமா இருக்கு, என்னடா பண்றே அவளை ?


8.  டேய் , உன் ஆளுக்கு தங்கச்சி இருக்கான்னு கேட்டு சொல்லுடா, கரெக்ட் பண்ணிடலாம் 


 ஒரிஜினல் இருக்கும்போது ஜெராக்ஸ்க்கு ஏன் ஆசைப்படறே? அவளையே எடுத்துக்கோ ( உலகத்துல எந்த உண்மைக்காதலனும் இப்டி உளற மாட்டான் )  


 என்னமோ காபித்தூள் எடுத்துக்கோங்கற மாதிரி அசால்ட்டா சொல்றானே? 9. ஹாய் , மரத்தடி மாலாவா? 


 ஆமா, அன்னைக்கு ஷூட் எடுத்தீங்களே? வரவே  இல்லை?

 தொப்புளைக்காட்டி போஸ் குடுனு சொன்னேன்


 ஏண்டா , சமையல் குறிப்புக்கு எதுக்கு தொப்புளைக்காட்டனும்?

 இப்பவெல்லாம் யார்டா புக் படிக்கறாங்க ? சும்மா பார்க்கறதுக்குத்தானே? ( டைம் பாஸ் விகடனை நக்கலிங்க்? )


10.  ஒண்ணும் இல்லை, இங்க்லீஷ் பேப்பர் கிலோ 8 ரூபாய்க்கு விக்குதுங்கற திமிர்ல பேசறாங்க


11.  என்ன தமிழ் பேசறா? அவளை எல்லாம் தமிழ் கற்பழிப்பு வழக்குல உள்ளே போடனும் 12. மாமி, என்னாதிது? வாழைப்பழத்தை ஆபரேஷன்  பண்ணிட்டு இருக்கேள்? ( டபுள் மீனிங்க் ) 13.  தம்பி! என்ன பண்றேள்?

 சாப்டுண்டு இருக்கேன்

 அதான், சாப்பாட்டுக்கு என்ன பண்றேள்னு கேட்டேன்14.  பக் வீட் ஆண்ட்டி - அவர் என்ன செஞ்சாலும் சூப்பரா இருக்கும் சேட்டா சேட்டாதான் 


இப்டியே போனா அங்கிளுக்கு டாட்டாதான் 
15. ஒட்டுத்துணில தெச்ச தலகாணி மாதிரி  உனக்கு ஒரு உடம்பு .அப்டி இருந்தும் ஜிம் பாடி மாதிரி எதுக்கு பில்டப்?16.  மனோ பாலா - பரதம் கறது ஒரு கலை. அவங்க என்னதான் குச்சி வெச்சுக்குத்துனாலும் நீங்க நாட்டியத்துல கவனமா இருக்கனும் ( டபுள் மீனிங்க் )


17.  உன் கிட்டே 2 முக்கியமான விஷயம் பேசனும் 

 நானும் காலைல இருந்து  2 விஷயமாத்தான் போய்ட்டு இருக்கேன் 18.  ஒரு பட்டாம்பூச்சியை ஒரு கரப்பான் பூச்சி  எப்டி கட்டிப்பிடிக்குது பாருங்க 


19.  டேய் , உனக்குக்கிடைச்சா எனக்கு கிடைச்ச மாதிரி டா


 என்னாது ?

சந்தோஷம் தான் . காதலின்னு பயந்துட்டியா?


20. முக்கியமான ஒரு வேலையை பாதிலயே விட்டுட்டு வந்திருக்கேன் ஹி ஹி 21. ஒர்க்கிங்க் டைம்ல நான் தண்ணி அடிக்கறதில்லைங்க 


இப்போ நாம ஒர்க் பண்றோம்னு யார் சொன்னது? ரிலாக்ஸ் மேன் 22.  நாசர் அடியாளிடம் - ஏண்டா , கல்யாண வீட்டுக்கா வந்திருக்கோம்? உக்காந்து சாப்டுட்டு இருக்கே? 23.  என்னங்க ? போஸ்ட்ல என்ன? 


 முருகர் விபூதி தபால் ல வந்திருக்கு 


 அதை எடுத்துட்டு  ஏன் பாத்ரூம் போறீங்க ?

 குளிச்சுட்டு பூசிக்கத்தான் 


 நீங்க தான் ஆல்ரெடி குளிச்சுட்டீங்க்ளே? 


 சோப் போட மறந்துட்டேன் 


24.  லவ்ங்கறது கனவு மாதிரி, மேரேஜ்ங்கறது அலாரம் மாதிரி, அலாரம் அடிச்சதும்  கனவை கலைச்சிடனும்


25. என்னதான் டேஸ்ட்டா இருந்தாலும் பபிள்கம்மை ஒரு கட்டத்துல துப்பித்தான் ஆகனும், அது மாதிரி தான் பழைய லவ்வும் 26. மனசுக்குப்பிடிச்சவங்க கிட்டே லவ்வைப்பிரப்போஸ் பண்றதை  விடப்பெரிய வேலை இந்த உலகத்துல எதுவும்  இல்லை # சேட்டை


27. இதை ஏன் என் கிட்டே முன்னாலயே சொல்லலை?

 நீங்க கேட்கவே இல்லையே?28.  அது ஏன் சார் உங்க மண்டையை டேபிள் ஃபேன் மாதிரி ஸ்லோவா திருப்பறீங்க? 29/ இவர் யாரு? பார்க்க பயங்கரமா இருக்காரே? 


 மூஞ்சி கழுவின பிறகு பாருங்க. இன்னும் பயங்கரமா இருப்பான் 


30. நீ நல்ல வழி ல   செலவு பண்ணு , இல்லை நாகர் கோயில் வழில செலவு பண்ணு  அதைப்பத்தி எனக்குக்கவலை இல்லை 


31. தப்பு பண்றவங்க எல்லாம் நம்ம பேப்பரைப்பார்த்து பயப்படனும்


 அப்போ நாம தான் முதல்ல பயப்படனும் 32. மேரேஜ்க்கு முன்னால இதெல்லாம் தப்பு , நம்ம தமிழ்க்கலாச்சாரம் ஒத்துக்காது 


 ஹன்சிகா - இச் .. இப்போ?

 ஐ டோண்ட் நோ தமிழ் யா 33.  நான் என்ன பிராண்ட் ஜட்டி போடனும்கறதைக்கூட உங்கப்பா தான் முடிவு பண்ணுவாரா? 34. இந்த மாதிரி சோகக்கதைக்கு எல்லாம் நான் மயங்க மாட்டேன்

 சரி வேற ஒரு காமெடிக்கதை இருக்கு, சொல்லவா? 35. முல்லைக்குத்தேர் கொடுத்தான் பாரி , உங்க வீட்ல நெம்பர் டூ போய்ட்டேன் சாரி 


 36 ஓடி வந்த வேகத்துக்கு களைப்பாற 2 பேரும் ஜூஸ் குடிக்கறிங்க போல ஓ இதான் முத்தமா? 


37 . திடீர்னு கண்ணாடில உன் ஃபேஸ்க்குப்பதிலா வேற ஒரு ஃபேஸ் இருந்தா உனக்கு எப்டி இருக்கும் ? 

 அடடே, அழகா இருக்கே அப்டினு 

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 40  குமுதம் ரேங்க் - ஓக்கே  ரேட்டிங்க் 2 / 5 


சி பி கமெண்ட் - ரொம்ப மொக்கை கிடையாது. டைம் பாஸ் ஆகும். எவனாவது இளிச்சவாயன் ஓ சி ல கூட்டிட்டுப்போனா பார்க்கலாம், சொந்தக்காசை செலவு பண்ணிப்போற அளவு படம் ஒர்த் இல்லை .


 

4 comments:

விஸ்வநாத் said...

அஞ்சலி படத்தப் போடும் போது "horizontal zoom -in " பண்ணி போடுங்க அண்ணே;

SENTHIL said...

Neenga o c la padam paathingala yaar antha ilicha vaayan

By premji

SIVATHENNARASU said...

ஹன்சிகா பத்தி போட்டிருக்கீங்க. But, அஞ்சலியின் கவர்ச்சி பற்றி போடலியே?!!? ஹி! ஹி! ஹி!

நான் கார்த்திகேயன்/naaan.karthikeyan said...

அந்த இளிச்சவாயன் எனக்கு எப்ப மாட்ட போறானோ