Friday, April 19, 2013

ஊமை விழிகள் இயக்குநர் ஆர் அரவிந்தராஜ் பேட்டி

திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு கம்பீரமான அடையாளம் ஏற்படுத்திக் கொடுத்தவர் இயக்குநர் அரவிந்தராஜ். அப்போது பிரமாண்ட செலவில் 'ஊமை விழிகள்’ இயக்கியவர், இப்போது சிம்பிள் பட்ஜெட்டில் 'கவிதை’ இயக்குகிறார்.''சினிமாவுக்கு வந்து பல வருஷமாச்சு. வயசும் 50-க்கு மேல் ஆயிடுச்சு. சினிமாவில் என்னதான் சாதிச்சோம்னு திரும்பிப் பார்த்தா, ஒண்ணுமே புலப்படலை. 'எதிர் நீச்சல்’ படத்தில் ஒரு கேரக்டர் எப்பவும் இருமிக்கிட்டே இருக்கும். ஆனா, அந்த கேரக்டர் முகத்தை பாலசந்தர் ஸ்க்ரீன்ல காட்டவே மாட்டார். ஆனா, 'இருமல் தாத்தா’னு அந்தப் பேர் மட்டும் இப்பவும் மனசுல நிலைச்சிருக்கே... அப்படி பளிச்னு மனசுல நிக்கிற மாதிரி புதுசா ஏதாவது செய்யணும்னு தோணுச்சு... அதுதான் 'கவிதை’ படம்!


பிரமாண்டமான கப்பல் காதல் 'டைட்டானிக்’. ஆனா, ஒரு சின்னப் படகில் தவிக்கும் நாயகியின் காதல் 'கவிதை’ இந்த மினி டைட்டானிக். பிப்ரவரி 14-ம் தேதி 'ஐ லவ் யூ’ சொல்ல காதலனைத் தேடி கடற்கரைக்கு வரும் காதலி சுனாமியில் சிக்கிடுறா. கடல் நீருக்குள் கவிழ்ந்திருக்கும் படகுக்குள் இருக்கும் சின்ன காற்று இடைவெளியில் மூச்சு விட்டுட்டு இருக்கா. 24 மணி நேர நிகழ்வுகள்ல அவ தப்பிக்கிறாளா, இல்லையாங்கிறதுதான் படம்.


 ரெண்டு மணி நேரம் ஓடும் படத்துல ஸ்க்ரீன் முழுக்கத் தெரிவது கடலில் சிக்கிய படகு ப்ளஸ் ஹீரோயின் மகாகீர்த்தியின் முகம் மட்டும்தான். செல்போன் உரையாடல் மூலம் பின்னணிக் குரலாக நாயகியின் அம்மா, காதலன், சுனாமி மீட்புக் குழுவினரின் குரல்கள் கேட்கும். 28 சதுர அடி தான் 'கவிதை’ படத்தின் மொத்த ஸ்க்ரீன் ஸ்பேஸும். பிளாக் ஸ்க்ரீன் மிக்ஸிங்னு ஒரு டெக்னிக்கைப் படத்தில் பயன்படுத்தி இருக்கோம். அதாவது, சுனாமி சீன் வரும்போது ஸ்க்ரீன் இருட்டா ஆகிரும். அப்போ சுனாமி ஏற்படுவதைத் துல்லியமான சத்தங்கள் மூலமாக மட்டுமே நீங்கள் உணரும்வகையில்  பிரமாதமா செய்திருக்கோம்!''


   
''சுவாரஸ்யமான முயற்சிதான். ஆனா, புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல், உங்க மகள் மகா கீர்த்தியையே ஹீரோயினா நடிக்கவெச்சது ஏன்?''   ''வழக்கமா 'நான் நடிக்க வந்தது ஒரு ஆக்சிடென்ட்’னு எல்லா நடிகைகளும் பேட்டி கொடுப்பாங்க. ஆனா, என் பொண்ணு நடிகையானது நிஜமாவே ஆக்சிடென்ட்தான்.  'கவிதை’ படத்தில் கீர்த்தி நடிக்க ஆசைப்பட்டா. ஆனா, நான் 'நோ’ சொல்லிட்டேன். அப்புறம் மஞ்சுனு ஒரு குஜராத் பெண்ணை நடிக்கவெச்சோம். முக்கால்வாசிப் படம் முடிஞ்சு, 20 லட்சத்துக்கு மேல செலவும் ஆயிடுச்சு. திடீர்னு அந்தப் பொண்ணு எஸ்கேப். கண்டுபிடிக்கவே முடியலை. மஞ்சு நடிச்ச காட்சிகளை எல்லாம் எடுத்துட்டா படமே இல்லை. புராஜெக்ட்டையே மறந்துட்டேன்.


திடீர்னு ஒரு நாள் ஞாபகம் வந்து 'கவிதை’ புராஜெக்ட்டைத் தூசு தட்டினேன். அப்போ தயாரிப்பாளர் பெஞ்சமின்தான் கீர்த்தி நடிச்சா நல்லா இருக்கும்னு சொன்னார். விஷ§வல் கம்யூனிகேஷன் படிச்ச பொண்ணு. 2012 'மிஸ் தமிழ்நாடு’ ஜெயிச்ச பொண்ணு. முக்கியமா பாதிப் படத்தில் எங்கேயும் தப்பிச்சுப் போக முடியாத பொண்ணு. இவ்ளோ தகுதிகள் இருக்கேனு கீர்த்தியையே ஹீரோயின் ஆக்கிட்டேன். அப்பா சினிமாவில் இருந்தவரே தவிர, கீர்த்திக்கு சினிமா புதுசுதான்.  இன்னொரு விஷயம்... 'ஊமை விழிகள்’ பட யூனிட்ல லைட்பாயா வேலை பார்த்த பெஞ்சமின்தான், 'கவிதை’ படத்தின் தயாரிப்பாளர்!'' வாசகர் கருத்து 1. இது ஒரு ஹாலிவுட் படத்திலிருந்து திருடிய கதை... படத்தின் பெயர் "Burried". 2. ஆங்கிலத்தில் வந்த "Buried" கதைதான் இது. அதில் ஈராக்கில் சிக்கிய ஒரு truck driver -இன் 24 மணி நேர போராட்டம்.

Buried - 2010
Paul is a U.S. truck driver working in Iraq. After an attack by a group of Iraqis he wakes to find he is buried alive inside a coffin. With only a lighter and a cell phone it's a race against time to escape this claustrophobic death trap. 
3. சுவாரஸ்யமான முயற்சியா .. அட பாவி... Buried படத்தோட காப்பி மாதிரி தெரியுதே...சரி சரி inspiration னு வச்சிக்கலாம்...4. How is that Indian movie makers simply copy a story line from a foreign movie and claim that to be their creation? This story line is a copy of the movie "Buried". 


 நன்றி - விகடன்

1 comments:

'பரிவை' சே.குமார் said...

நல்ல பகிர்வு...
பகிர்வுக்கு நன்றி.