Thursday, March 07, 2013

ஒன்பதுல குரு - செம காமெடி படம் - லட்சுமிராய் பேட்டி

 

சிறந்த காமெடி கதை “ஒன்பதுல குரு” படத்துக்கு இயக்குனர்கள் பாராட்டு: 300 தியேட்டர்களில் நாளை ரிலீஸ்

நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளர் பி.டி.செல்வகுமார் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள படம் ‘ஒன்பதுல குரு’. இதில் நாயகனாக வினய், நாயகியாக லட்சுமிராய் நடித்துள்ளனர். பிரேம்ஜி, சத்யன், அரவிந்த் ஆகாஷ், ஷாம் போன்றோரும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்கள்.


செல்லத்துரை ஒளிப் பதிவு செய்துள்ளார். “கே” இசையமைத்துள்ளார். காமெடி கதையாக தயாராகியுள்ளது. இப்படம் தமிழ்நாடு முழுவதும் 300 தியேட்டர்களில் நாளை ரிலீசாகிறது. ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு இருப்பதால் பெரிய நடிகர்களுக்கு இணையாக அதிக திரையரங்குகளில் இப்படத்தை வெளியிடுகின்றனர்.


“ஒன்பதுல குரு” படத்தின் பாடல்கள் ஏற்கனவே வரவேற்பை பெற்றுள்ளன. இதில் இடம் பெற்றுள்ள “வா மச்சி வா மச்சி வீட்டை விட்டு” பாடல் ஹிட்டாகியுள்ளது. இன்டெர் நெட்டில் இரண்டு லட்சம் பேர் கேட்டுள்ளனர். பவர் ஸ்டார் சீனி வாசனும் இதில் “அலையாத சும்மா சும்மா” பாட்டுக்கு நடனம் ஆடி உள்ளார்.


இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரும் முக்கிய கேரக்டரில் வருகிறார். இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல் காட்சிகள் திரையுலக முக்கியஸ்தர்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டன. இதை பார்த்த இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் சிறந்த காமெடி படமாக வந்துள்ளது என்று இயக்குனர் பி.டி.செல்வ குமாரை பாராட்டினார்.


அவர் கூறியதாவது:-


நடிகர் விஜய் வீட்டில் இருபது வருடமாக பி.டி. செல்வகுமார் பணியாற்றுகிறார். அவர் இயக்கியுள்ள “ஒன்பதுல குரு” படம் ஜாலியான காமெடி படமாக வந்துள்ளது. இன்றைய இளைஞர்களுக்கு பிடித்த படமாக உருவாக்கி உள்ளார். விஜய் ரசிகர்கள் கண்டிப்பாக படத்தை பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.


நடிகர் ஜீவா பேசும் போது, இன்றைய இளைஞர்களுக்கு பிடித்த மாதிரி “ஒன்பதுல குரு” படத்தை எடுத்துள்ளனர். கேரக்டர்களுக்கு பொருத்தமான நடிகர்களையும் தேர்வு செய்து நடிக்க வைத்துள்ளனர். சில காட்சிகளை பார்த்து மிகவும் ரசித்தேன் என்றார்.


இயக்குனர் வெங்கட் பிரபு கூறியதாவது:-


“ஒன்பதுல குரு” படத்தின் கதை எனக்கு தெரியும். பிரேம்ஜி அடிக்கடி இந்த படத்தை பற்றி என்னிடம் கூறுவது உண்டு. இன்றைய இளைஞர்கள் காமெடி படங்களை அதிகம் ரசிக்கிறார்கள். அவர்களுக்கு பிடித்த மாதிரி இந்த படம் வந்துள்ளது. இளைஞர்களின் ஜாலி கலாட்டாக்கள், திருமணமாகி சந்திக்கும் பிரச்சினைகள் இதில் அலசப்பட்டு உள்ளன.


இவ்வாறு அவர் கூறினார்.


இசையமைப்பாளர் ‘கே’ கூறும்போது, “வா மச்சி வா” பாடல் பெரிய ஹிட்டாகியுள்ளது. நிறைய பாராட்டுகள் குவிகிறது. பெண்களுக்கும் இப்பாட்டு பிடித்துள்ளது என்றார். “ஒன்பதுலகுரு” படத்தை காஸ்மா அன்ட்பாஸ் பிலிம்ஸ் சார்பில் எஸ்.சிவக்குமார், ஆர்.சிவக்குமார் ஆகியோர் தயாரித்துள்ளனர்.


 


தென்னிந்திய சினி பியூட்டிகளில் சென்ஷேசனல் நியூஸ் மேக்கர் லட்சுமிராய். சினிமா, பெர்சனல், காதல், கிசுகிசு என எல்லாமும் பேசலாம் அவரிடம்...

 

 1.  இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்', "காஞ்சனா' என லாரன்ஸூடன் நல்ல சினேகமாகத்தானே இருந்தீர்கள். ஆனால், திடீரென முனி பார்ட் 3-க்கு டாப்ஸி வந்து விட்டாரே....

.ஸோ வாட்...! அதைப் பற்றித்தான் முதலில் கேட்க வேண்டுமா? எனக்கு பேய் கதைகள் என்றால் ரொம்பவே பிடிக்கும். "இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்' நடிக்கிற போதே "காஞ்சனா' பற்றி என்னிடம் பேசியிருந்தார் லாரன்ஸ்.""இது மாதிரி கதை வந்தால் எனக்கு நல்ல ஸ்கோர் கிடைக்கும்'' என்று அப்போது சொல்லியிருந்தேன். அதை நினைவில் வைத்து திடீரென்று அழைத்து "காஞ்சனா'வில் வாய்ப்பு தந்தார். அப்போதே நான் அதை எதிர்பார்க்கவில்லை. இப்போது என் இடத்தை டாப்ஸி பிடித்துக் கொண்டார் என்று சொல்லுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. சினிமாவில் எனக்கென ஒரு மைலேஜ் இருக்கிறது. அதற்குள்தான் என்னால் சர்வே செய்ய முடியும். இது எனக்கான கேரக்டர் என யாரும் எழுதி வைக்க முடியாது.

"மங்காத்தா' படத்தில் ""நாம சாப்பிடுற ஒவ்வொரு அரிசியிலும் நம்ம பேர் எழுதியிருக்கும்''ன்னு அஜித் சார் சொல்லுவார். அதுதான் உண்மை. எனக்கு அது இல்லை. இது இல்லை என புலம்பும் கேரக்டராக நான் வளரவில்லை. லாரன்ஸூக்கும் எனக்கும் இப்போதும் நட்புதான். அதற்காக அவரிடம் நான் சண்டை போட முடியாது. "முனி பார்ட் 3' கதை பற்றி எனக்குத் தெரியும். அது வேறு மாதிரியானது. அதற்கு டாப்ஸி மாதிரியான ஒரு நடிகைதான் தேவைப்படுவார். ப்ளீஸ் அதை விட்டுடுங்க.

2. நல்ல உயரம், வசீகரிக்கும் அழகு, முன்னணி நடிகர்கள் முதல் நேற்று வந்த ஜூனியர் வரைக்கும் நட்பு இருந்தும் உங்களால் ஏன் தமிழ் சினிமாவில் நல்ல இடத்தை பிடிக்க முடியவில்லை?

நல்ல இடம் எப்படி இருக்கும்? அதற்கான தகுதிகளை முதலில் சொல்லுங்கள். நான் இருக்கும் இடம் பற்றி சொல்லுகிறேன். இதுவரை எனக்கு எந்த ஏமாற்றமும் இல்லை. தினம் தினம் நல்லது நடக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறோம். அப்படி நடக்கிறதா என்ன? பொறுமையாக காத்திருப்பவர்களுக்கு நல்லது பெரிதாக நடக்கும் என்று சொல்லுவார்கள்.



நான் பொறுமையாக இருக்கிறேன். நல்லது நாளைக்கே நடக்கலாம். மூன்று மொழிகளில் 40 படங்கள் வரை நடித்தாகி விட்டது. என் முகம், நடிப்பு பற்றி இனி சொல்லித்தான் ரசிகர்களுக்கு தெரிய வேண்டிய அவசியமில்லை. நடித்த எல்லா படங்களிலுமே என் கேரக்டரை நான் நன்றாக செய்து முடித்திருக்கிறேன். அந்த நம்பிக்கை மட்டுமே என்னை நன்றாக வைத்துக் கொள்ளும். எல்லா படங்களிலும் பிடித்துதான் நடித்தேன். அதில் எனக்குரிய இடங்கள் கிடைக்காமல் போனால் நான் என்ன செய்வேன்?



யாரிடமும் சென்று எந்த வாய்ப்பையும் நான் இதுவரை கேட்டதில்லை. "தாண்டவம்', "மங்காத்தா' படங்களில் சின்ன கேரக்டரில் வந்தது பற்றி கேட்கிறார்கள். அந்த டைரக்டர்ஸ் என்னை நம்பி வந்தாங்க. நடித்துக் கொடுத்தேன். கதைக்காக நான் எந்த கேரக்டரையும் ஏற்க தயாரா இருக்கிறேன். நல்ல நடிகைக்கான குணம் இதுதானே. அப்ப நான் எந்த இடத்தில் இருக்கிறேன் சொல்லுங்கள்....


3. ....வினய், பிரேம்ஜி, சத்யன்னு "ஒன்பதுல குரு' கலகலப்பாக வந்திருக்கிறதாமே? உங்களுக்கு அதில் என்ன ரோல்?


"ஒன்பதுல குரு' ஒரு க்யூட் ஸ்டோரி. காதல், கலாட்டா, ரொமான்ஸ், கிளாமர் எல்லாமே அதிகமாக இருக்கும். எனக்கு ஒரே படத்தில் காதல், அதே சமயம் கலாட்டான்னு நடிக்க இப்போதுதான் இந்தப் படம் அமைந்திருக்கிறது. உண்மையிலேயே நடிக்க ஸ்கோப் உள்ள படம். ரொமான்ஸ், கிளாமர்ன்னு இடைவேளை வரைக்கும் படம் இளமைத் துள்ளலாக இருக்கும். அந்த படத்தில் நடிக்கவில்லையென்றால் உண்மையிலேயே ஒரு நல்ல சினிமாவை மிஸ் செய்திருப்பேன். சினிமாவுக்கு வந்த சமயத்தில் இருந்தே பி.டி.செல்வகுமாரை தெரியும்.


""மேடம் நான் ஒரு படம் பண்றேன். நீங்கதான் ஹீரோயின்''னு அடிக்கடி சொல்லுவார். விளையாட்டு வார்த்தைகள் என்று நினைத்தேன். ஒரு நாள் ஸ்கிரிப்ட்டை கையில் கொடுத்து படிக்க சொல்லிவிட்டார். ஒவ்வொருத்தரையும் மற்றவர்கள் ஒவ்வொரு விதமாக எடை போட்டு வைத்திருப்பார்கள். என்னை அவர் ஒரு கதைக்காக அப்படி நினைத்து வைத்திருப்பார் என்று நினைக்கவில்லை. அவ்வளவு சூப்பரா படம் வந்திருக்கிறது.

 பார்க்க எனக்கே ஆசையா இருக்கிறது.

4. கன்னட சினிமாவில் அதிகமாக நடிக்க ஆரம்பித்து விட்டீர்கள் போல?

என் தாய் மொழி சினிமா அதுதானே. இருந்தாலும் நான் தமிழில்தான் அறிமுகமானேன். தமிழ் சினிமாக்களை பார்த்து விட்டுதான் கன்னடத்தில் இருந்தே வாய்ப்புகள் வந்தன. மற்றபடி தமிழ் சினிமாதான் எனக்கு அதிகம் பிடிக்கும். இங்கே வாய்ப்புகள் இல்லாத போது, எனக்கு தெரிந்த என் மொழி சினிமாக்களில் நடிக்கிறேன். தமிழ், கன்னடம், மலையாளம் இந்த மூன்று மொழிகளில் மட்டுமே இப்போது நடித்து வருகிறேன். மற்ற மொழி சினிமாக்களில் நடிப்பது குறித்து இப்போது எந்த முடிவும் எடுக்கவில்லை.

த்ரிஷா பத்து வருஷத்துக்கும் மேலாக சினிமாவில் நடிக்கிறாங்க. 30 வயதை கடந்தாலும் அனுஷ்காவின் கால்ஷீட் வாங்க கூட்டம் வரிசையில் நிற்கிறது. ஒவ்வொருத்தரும் ஒரு வகையில் ரெக்கார்ட் பிரேக் பண்றாங்க. அது மாதிரி எதாவது லட்சியம் உங்களுக்கு இருக்கிறதா?

இந்த கேள்விக்கு பதில் சொல்லுவது கஷ்டம்தான். நான் சினிமாவுக்கு வந்தபோது சிம்ரனுக்கு அடுத்து நான்தான்னு சிலர் சொன்னாங்க. ஆனா இன்றைக்கு வரைக்கும் சிம்ரன்னா அது சிம்ரன்தான். அந்த இடத்தை யாராலும் பிடிக்க முடியவில்லை. ஜோதிகாவின் இடம் கூட இன்னும் காலியாகத்தான் இருக்கிறது. யாருக்கும் யாரும் நிகர் கிடையாது. அவரவர்களுக்கு தெரிந்ததை ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி செய்கிறார்கள். கிளாமர்தான் எனக்கு செட்டாகும்ன்னு பலர் தீர்மானித்து வைத்திருக்கிறார்கள். அதை உடைக்கும் விதத்தில் "இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்' படம் நடித்து காண்பித்தேன். இருந்தாலும், அதன் பின்னும் கிளாமர் கதைகள்தான் தேடி வந்தன. ஹாலிவுட் பாணியில் ஆக்ஷன் படங்களில் நடிக்க ஆசை. அது மாதிரி ஒரு கதைதான் எனக்கு வேண்டும். மற்றபடி சினிமாவில் எந்த லட்சியமும் இல்லை....இருக்கவும் கூடாது.

5. டோனி தொடங்கி எல்லா கிசுகிசுக்களுக்கும் வெளிப்படையாக பதில் சொல்லுவீங்க. ஆனால், இப்போ உங்களை பற்றி கிசுகிசுக்களே இல்லையே.... என்ன மேஜிக்?

நடிகையாக பார்ப்பதை விட என்னை சக மனுஷியாக பார்த்தால் நான் இன்னும் அன்பானவளாக மாறுவேன். கிசுகிசுக்கள் வருகிற நேரங்களிலும், அதை பற்றி என் நண்பர்கள் பேசும் நேரங்களிலும் எனக்கு கோபமே வராது. ஏனென்றால் நான் இருப்பது சினிமாவில். அதில் அப்படிப்பட்ட பேச்சுக்களைத்தான் எதிர்பார்க்க முடியும். இப்போதைக்கு என்னிடம் காதல் இல்லை. ஆனால் அது சில நேரங்களில் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. சில சினேகம் காதலாக மாறி விடுகிற தருணம் வரும் போது, சினிமா உலகம் தவறாக சித்தரித்து அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகிறது. எனக்கு நிறைய காதல் வந்திருக்கிறது. ஒன்றுமே நிலைக்கவில்லை. இப்போதெல்லாம் யாரையும் நான் காதலிப்பதே இல்லை. கிசுகிசுக்கள் இல்லாமல் போனதற்கு அதுதான் காரணமாக இருக்குமோ...? ஆனால் ஒன்று மட்டும் உண்மை. காதல் இல்லாமல் வாழ முடியாது.

 

 thanx - dinamani, 123 cinema

 

 

1 comments:

'பரிவை' சே.குமார் said...

ஒன்பதுல குரு... நல்ல படம்ன்னு சொல்றாங்க.... பார்க்கலாம்... கண்டிப்பா பவர் லஷ்மிராய் டான்ஸ்க்காக பார்த்தாகனும்....