Friday, November 18, 2011

வித்தகன் - வின்னர் - சினிமா விமர்சனம்

http://gallery.tamilkey.com/wp-content/uploads/2011/10/Viththagan-Tamil-Movie-2011-Poster-488x400.jpg 

அசிஸ்டெண்ட் கமிஷனராக பகலில் வேலை பார்க்கும் குண்டக்க மண்டக்க ஆர். பார்த்திபன் இரவில் ராபின் ஹூட்டாக மாறி ரவுடிகளை போட்டுத்தள்ளுகிறார்.. அப்போ அவர் எப்போ தூங்குவார்? எப்போ ரெஸ்ட் எடுப்பார்னு எல்லாம் யாரும் கேக்காதீங்க.. ஏன்னா நானும் கேட்கலை.. புரொடியூசரும் கேட்டிருக்க மாட்டார்னு நம்பறேன்... இது பார்த்திபனோட 50 வது படம்கறதால கொஞ்சம் விளையாண்டு பார்க்கலாம்னு ஆசைப்பட்டிருக்கார்.. 

படத்தோட விமர்சனத்துக்குள்ள போறதுக்கு முன்னால பார்த்திபனுக்கும் கமலுக்கும் உள்ள ஒரு சைக்காலஜிக்கல் ஒற்றுமையை பார்க்கலாம்..  குணா படத்தில் இருந்து கமலுக்கு ஒரு எண்ணம்.. ஸ்க்ரீன்ல தான் வர்ற ஒவ்வொரு சீனும் தான் மட்டுமே கவனிக்கப்பட வேண்டும்.. தன் நடிப்பு பிரத்யேக கவனத்தை பெற வேண்டும்னு நினைப்பாரு.. லேசா செயற்கை தட்டி நடிப்பாரு.. அதே போல பார்த்திபன்க்கும் ஒரு ஆசை.. தான் தான் செம பிரில்லியண்ட்.. மத்தவங்க எல்லாம் கேனை. அவன் இண்ட்டர் நேஷனல் கிரிமினல் ஆக இருந்தாலும் சரி மாக்கான் தான்னு நினைக்கறார்..

அவரோட எண்ணம் ரொம்ப தப்பு.. வில்லன் கேப்டன் பிரபாகரன்ல வர்ற மன்சூர் அலிகான் மாதிரி பலசாலியா, காக்கிசட்டை சத்யராஜ் மாதிரி புத்திசாலியா, ஏழாம் அறிவு வில்லன் போல் பிரமிக்க வைக்கும் அளவு காட்டிட்டு, அதுக்குப்பிறகு ஹீரோ வில்லனை வெல்வது போல் காட்னாத்தான் செம இண்ட்ரஸ்ட்டா இருக்கும்..

சரி படத்தோட கதைக்கு போலாம்.. ஹீரோவோட அப்பா ஒரு போலீஸ்காரர்.. அவர் ரவுடிகளை, சமூக விரோதிகளை ஒடுக்கறதால அதுல ஒருத்தன் அவரோட மகளை கொலை பண்ணிடறான்.. அதாவது ஹீரோவோட தங்கை.யை மர்டர்டு..வெறுத்துப்போன ஹீரோவோட அப்பா  வேலையை ரிசைன் பண்ணிட்டு வேற ஊர் போயிடறார்.. 

http://www.123stills.com/wp-content/uploads/2010/01/No-Buzz-About-Poorna%E2%80%99s-Viththagan.jpg

அப்பாவுக்கு தெரியாமயே ஹீரோ போலீஸ் வேலைக்கு படிச்சு அசிஸ்டெண்ட் கமிஷனர் ஆகி சமூக விரோதிகளை போட்டுத்தள்ளறார்.. தன் தங்கையை கொலை செஞ்ச வில்லன் இப்போ தாய்லாந்து நாட்டுல ... படம் லோ பட்ஜெட் என்பதால் ஹீரோ தாய்லாந்து போக முடியல.. தன்னோட சாணக்கியத்தனத்தால வில்லனை இங்கே வரவழைக்கறார்.. 

சாதாரண எக்ஸிக்கியூட்டிவ் முடிக்க வேண்டிய வேலையை கம்பெனி பாஸே செஞ்சா எப்படி இருக்கும்? அப்டி இருக்கு அந்த வில்லன் தமிழ் நாடு வர்றது..

சரி.. ஹீரோ ஆடும் ஆடுபுலி ஆட்டத்துல ஹீரோயினுக்கு என்ன வேலை? அவரை எப்படி கதைக்குள்ள கொண்டு வர்றது? ரொம்ப ஈசி.. ஹீரோ செய்யற ஒரு கொலையை அவர் நேர்ல பார்த்துடறார்.. என்ன ஏது? எதுக்காக அவர் கொலை செஞ்சார்ங்கற ஃபிளாஸ்பேக் எல்லாம் அவர் தெரிஞ்சுக்காததுக்கு முன்னேயே அவர் ஒரு போலீஸ் ஆஃபீசர்னு தெரிஞ்சதும் லவ்வ ஆரம்பிச்சடரார்.. ( நல்ல லவ்வுய்யா)

இடைவேளை ட்விஸ்ட் வேணுமே , அதுக்காக ஹீரோ போலீஸ்ல மாட்டிக்கறார்.. இடைவேளைக்குப்பிறகுதான் டர்னிங்க் பாயிண்ட்.. தண்டனை முடிஞ்சு ஹீரோ வெளீல வந்து தாதா முன்னேற்றக்கழகம்னு எதும் ஆரம்பிக்காமயே தாதா ஆகிடறார்.. 

இப்போ ஊர்ல 3 தாதா.. ஒண்ணு ஹீரோ தாதா..  2 வில்லன் தாதா.. 3 சைடு வில்லன் தாதா.. 2வது வில்லன் தாதா ஹீரோ கிட்டே கெஞ்சறாரு.. நீங்க 3வது வில்லனை போட்டுடுங்க...அப்போ நான் முதல் இடத்துக்குப்போயிடுவேன்.... நீங்க 2வது இடத்துக்கு வந்துடலாம்னு.. 

ஹீரோ தன்னோட அதி புத்திசாலித்தனத்தால என்ன செய்யறார்.. எப்படி ஜெயிக்கறார்? பழி வாங்கறார்ங்கறதுதான் மிச்ச மீதி திரைக்கதை..

பார்த்திபன் சும்மா சொல்லக்கூடாது மிடுக்கான அசிஸ்டெண்ட் கமிஷனர் ரோல்லயும் சரி.. தெனாவெட்டான தாதா ரோல்லயும் சரி. அசால்ட்டான நடிப்பு.. படம் முழுக்க அவரது எள்ளல்கள், நக்கல்கள், நையாண்டிகள் கொட்டிக்கிடக்கு.. ரசிக்கலாம்.. சில இடங்களில் மட்டும் ஓவர்..

பூரணி  சும்மா ரிலாக்‌சேஷனுக்கு , அதாவது ஆடியன்ஸூக்கு.. 2 டூயட் உண்டு.. ஆனால் மேற்படி ரசிகர்கள் எதிர்பார்க்கும் மேற்படிகள் இல்லை.. 

மெயின் வில்லன் நடிப்பு ஓக்கே.. டெபுடி கமிஷனராக, அரசியல்வாதியாக வருபவர் நடிப்பும் அருமை.. 

எடிட்டிங்க் செம ஷார்ப்.. ஒளிப்பதிவு கண்ணுக்கு உறுத்தல் இல்லாமல் இருக்கு,.. இசை ஓக்கே 2 பாடல்கள் ஆல்ரெடி ஹிட்.. 

http://pirapalam.com/wp-content/uploads/2011/11/18-vithagan300.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. ஹீரோயின் அருகே ஹீரோ ஜீப்பில் போகும்போது ஹீரோயின் கண்களுக்கு வில்லனாகத்தெரியும் ஹீரோவின் 2 கண்கள் மட்டும் தனியாகப்போய் ஹீரோயின் ஜாக்கெட் விளிம்பில் எட்டிப்பார்க்கும் சீன் என்னதான்  ஜிம் கேரியின் மாஸ்க் பட உருவல் என்றாலும் ரசிக்கும்படி இருக்கிறது..

2.   டி வியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போலீஸ் ஆஃபீசர் பார்த்திபன் ஹீரோயின் கண்களுக்கு மட்டும் அவரை எச்சரிப்பது போன்ற ஹீரோயின் கற்பனை செம காமெடி.. 

3. ஒரு பாடல் காட்சியில் பூரணாவின் சேலையில் இருக்கும் பூ டிசைன் அப்படியே பூவாக மலர்வது செம உத்தி.. கலக்கல் சீன் அது. 

4. இடைவேளைக்குப்பிறகு தாதா ஆகும் ஹீரோவின் ஆஃபீஸ்க்கு ஹீரோயின் வரும்போது அவரது ஆஃபீஸ் இண்ட்டீரியர் டெக்கரேஷன் செம.. ஆர் பார்த்திபன் ஆர்ட் டைரக்‌ஷனில் தனி கவனம் செலுத்துபவர் என்பதற்கான சான்று.. 

5. வசனகர்த்தா பார்த்திபனின் அபார உழைப்பு படத்தின் வெற்றிக்கு பக்க பலம் சேர்க்கிறது..  அவரது நக்கல் நையாண்டி வசனங்கள் மட்டும் 42 ஜோக்ஸ் தேறும்.. 

6. போர் அடிக்காமல் பர பர என காட்சிகளை நகர்த்திச்செல்லும் வேகம் அழகு..

7. ஒரு பாடல் காட்சியில் அதிகாலை செய்தித்தாள் போலே நீ வந்தாய் என்ற அழகு வரிகளுக்கு உயிர் ஊட்டும்படி ஒரு புறா கதவை திறந்து உள்ளேவருவது சோ க்யூட்.. 

8. வில்லன் கூட வரும் எடுபுடி கிழவன் செம காமெடி நடிப்பு டயலாக் டெலிவரி.. செமhttp://suriyantv.com/wp-content/uploads/2011/10/vithakan-vizha.jpg
இயக்குநர் ஆர் பார்த்திபனிடம் சில கேள்விகள், பல சந்தேகங்கள். சில ஆலோசனைகள்

1.  மகன் அப்பாவை டேய் என கூப்பிடுவது கவுண்டமணியின் காமெடிக்கு ஓக்கே.. வில்லனின் மகனுக்குமா? அது கூட தேவலை.. கொலை நடந்த அன்று நீ எங்கே போனே? என அப்பா கேட்கறப்ப ஒரு மகன் அப்படியா தன் தந்தையிடம்  நான் ஃபிகர்ட்ட ஜல்ஸா செய்ய போனேன்னு சொல்வான்?

2. ஒரு கொலை நடக்குது. அதை செஞ்ச ஹீரோ கொலை ஆன டெட் பாடி சர்ட் பாக்கெட்ல இருந்து செல் ஃபோனை எடுத்து எஸ் எம் எஸ் அனுப்பறார் வில்லனுக்கு.. அதை பார்த்து அங்கே வர்ற வில்லன் கொலை செஞ்சதா மாட்றதா சீன்.. மெசேஜ் பார்த்து அவன் கால் பண்ணீ கன்ஃபர்ம் பண்ண மாட்டானா? போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்ட வெச்சு கொலை நடந்த ஒரு மணி நேரம் கழிச்சே வில்லன் வந்தான் கற உண்மை தெரியாம போகாதா? அந்த செல் ஃபோன்ல ஹீரோவோட கை ரேகை இருக்கே?

3.  ஹீரோயின் பூரணா முகம் உடம்புக்கு செமயா பவுடர் போடறாங்க பாராட்டறேன்.. ஆனா முதுக்குக்கு நோ மேக்கப்... இதனால டூயட் சீன்ல அவர் நேரா நிக்கறப்ப கலரா தெரியறார்.. திரும்பறப்ப கறுப்பா தெரியறார்.. ( அவர் முதுகை எல்லாம் உன்னை யார் நோட் பண்ண சொன்னது?ன்னு கேக்காதீங்க.. அதை நான் பார்க்கலை.. பக்கத்து சீட் ஆள் சொன்னார்.. )

4. எல்லா படத்துலயும் வில்லன்க ஏதாவது கெட்ட தகவலை சொல்ற தன் ஆளுங்களையே டபக் டபக்னு சுட்டுட்டே இருக்காங்களே.. ஆள் பற்றாக்குறை வராதா? இந்தப்படத்துல 4 பேர் அவுட்.. பாவம்..

5. டூயட் சீன்ல கூட ரிவால்வர் வெச்சுக்கிட்டே ஹீரோ அலையறாரே.. அது ஏன்? வித்தகன் வித் த கன்  என்பதாலா?

6. க்ளைமாக்ஸ்ல ஹீரோயினை போட்டுத்தள்ளும் வில்லன் அதே ஸ்பாட்க்கு ஹீரோவை ஏன் வரச்சொல்லனும்? கொஞ்சம் தள்ளி வர சொல்லக்கூடாதா? ஹீரோயின் செயின் , ரத்தம் எல்லாம் அங்கே இருக்கே.. அதை  ஹீரோ பார்த்துட்டா ஹீரோயினை பிணையக்கைதியா வெச்சு நாம பண்ற டிராமா ஹீரோவுக்கு தெரிஞ்சுடுமேன்னு கூட  யோசிக்காத மாங்கா மடையனா?

7. பார்த்திபன் சார்.. 1 சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே.. போலீஸ் யூனிஃபார்ம் கெட்டப் செம.. ஆனா தாதா கெட்டப் நல்லாவே இல்ல.. ஏதோ நோய் வந்து இளைச்ச ஆள் மாதிரி இருக்கு.. 


http://4.bp.blogspot.com/-UN61G6LEdlo/TcqCwXkF4yI/AAAAAAAAB8M/kjW_O4zsmaM/s1600/poorna-hot-navel-stills-01.jpg

 எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 42


எதிர்பார்க்கப்படும் குமுதம் மார்க் - ஓக்கே 

சி.பி கமெண்ட் - ஆர் பார்த்திபனின் ரசிகர்கள், அவரது நக்கல் நையாண்டியை ரசிப்பவர்கள் பார்க்கலாம்.. ஃபேமிலியோட பார்க்கர மாதிரி டீசண்ட்டாதான் இருக்கு..

ஈரோடு ஆனூர் -ல் பார்த்தேன்

டிஸ்கி - வழக்கமாக போடும் ரசித்த வசனங்கள் போடாததற்கு காரணம்

. ஆல்ரெடி பதிவு நீளம்.. வசனங்கள் மட்டும் 45 டயலாக்ஸ் சேர்ந்துடுச்சு.. அதை தனி பதிவா போட்டுக்கலாம்-னு ஐடியா

25 comments:

Rishvan said...

padangal arumai..... kalakunga....rishvan... please read my blog www.rishvan.com

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ஆஜர் .

கோவை நேரம் said...

வந்துட்டேன் ...

கோவை நேரம் said...

இருங்க படிச்சிட்டு வரேன் ..

கோவை நேரம் said...

விமர்சனம் அருமை.பார்க்கலாம்...

சேகர் said...

அம்முவாகிய நான் படத்த நானும் ஆனூர் தியேட்டர்ல தான் அண்ணா பார்த்தேன். இதையும் பார்துடுவேன் இந்தவாரமே.

K.s.s.Rajh said...

இந்தக்கதையை இன்னும் எத்தனை படத்திலதான் காட்டுவாங்க முடியல.....

பார்த்தீபன் படம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் என்று நினைச்சால் அவருமா?வெளங்கிரும்

நன்றி அண்ணே படம் பார்க்கும் காசுமிச்சம்....

ஆரூர் முனா செந்திலு said...

அது எப்படிண்ணே நீங்க மட்டும் இவ்வளவு விரைவா விமர்சனம் போடுறீங்க, உங்களுக்கு வேலையிருக்கு, குடும்பத் தலைவர் வேற. இவ்வளவுக்கும் இடையில் சுடச்சுட விமர்சனம் பெரிய விஷயம் தான்.

நபூ.சௌந்தர் said...

சூப்பர்..

Pulavar Tharumi said...

அருமையான விமர்சனம். இது ஒரு குழப்பமான படமாக இருக்கும் போல :)

RAM SRIDHAR said...

வித்தகன் பட விமர்சனத்தில் தேவையே இல்லாமல் கமலை எதற்கு இழுக்க வேண்டும் என்று தெரியவில்லை. தான் ஹீரோவாக நடிக்கும் படத்தில் தன்னுடைய கேரக்டர் மட்டுமே பேசப்படவேண்டும் என்ற எண்ணம் முந்தாநாள் பெய்த மழையில் நேற்று முளைத்த காளான்களான தனுஷ், சிம்பு போன்றவர்களுக்கே இருக்கும் கமல் அப்படி நினைப்பதில்/செயல்படுவதில் என்ன தவறு? கமல் நடிப்பில் செயற்கைத்தனம் தெரிந்தால் என்ன? நடிப்பே தெரியாதவன் எல்லாம் நடிக்கும்போது கமல் செய்வதில் என்ன தவறு? நண்பரே, பார்த்திபன் ஒரு புத்திசாலி, திறமைசாலி என்றெல்லாம் சொல்லி பட விமர்சனம் தாராளமாக செய்யுங்கள், தேவையில்லாமல் கமலை இழுக்காதீர்கள்.

சி.பி.செந்தில்குமார் said...

@ raam sridhar

நண்பா.. நான் சம்பந்தம் இல்லாமல் கமலை இழுக்கவில்லை. ஒரு உதாரணம் தான்.. அதற்காக கமல் திறமையான் , நடிகர் இல்லை என்றாகி விடாது.. அவரது டாமினேஷன் பற்றி சொல்ல நேர்ந்தது

"யானை குட்டி" ஞானேந்திரன் said...

வித்தகன் -வின்னர் ---- என்ற உடன் படம் வெற்றி படம் என்றுநினைத்துவிட்டான்
யானைக்குட்டி.ஆனாலும் விமர்சனம் சி .பி ..டச் ...கலக்கல் .

"யானை குட்டி" ஞானேந்திரன் said...

கமல் பற்றி -குணா படம் முதல் -என்பது அது உங்களின் தனிப்பட்ட கருத்து.

குணா படத்துக்கு பின் தேவர் மகன்,மகாநதி ,சதி லீலாவதி,நம்மவர்,குருதிபுனல்

இந்தியன் , குறிப்பாக
அன்பே சிவம், உனைப்போல ஒருவன் ,விருமாண்டி போன்ற பட ங்களில்

தான் மட்டும் தான் என்ற எண்ணம் இல்லாத நடிப்பு என்பது எனது பணிவான தகவல் . உங்கள் விமர்சனம் ஒரு வரலாற்று பதிவு .அதில் தனிப்பட்ட

நெருடல் கண்டால் -கமல் ரசிகனாக நானும் என் கருத்தை பதிவ செய்கிறான்


யானைக்குட்டி ...மற்ற படி கலக்குங்கள் நண்பா.

veedu said...

கமல் நடிப்பில் செயற்கைதனம் இருப்பது உண்மை அது கமர்சியல் படங்களில் குணாவிற்கு பிறகுதான் குருதிபுனல்,பாசவலை,மகாநதி,ஹேராம்,போன்ற படங்கள் வந்தது என்று தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்

சரி அதவிடுங்க வித்தகன் மக்கள்ட்ட வித்தை புரியாது போலிருக்கே விமர்சனம் அமர்க்களம்
-----------------------------------
விக்கிய பற்றிய டிஸ்கி நான் தேவையில்லைன்னு நினைக்கிறேன் நட்பு கிடைக்கிறது எளிதல்ல
உடைவது...உடனே அப்புறம் உங்கள் விருப்பம்

புள்ளைக மேல கண்ணுபட்டிருச்சு போல திருஸ்டி சுத்திபோடுங்கப்பா.....

வெண் புரவி said...

என்ன தல... கமலை இழுத்து விட்டுடீங்க..!
அன்புள்ள கமல்-ல ஒரே சீன்ல வருவார் தெரியுமா?
அப்படியானு கேக்காதீங்க!

veedu said...

நன்றி

மொக்கராசு மாமா said...

பார்த்தீபன் படத்துக்கு புடிச்ச வசனங்கள் போடனும்னா, நீங்க புதுசா இரு பதிவு இல்லலே, புதுசா ஒரு பிளாக்கே தொறக்கனும்,,, ஹீ ஹீ...

மொக்கராசு மாமா said...

//தன் தங்கையை கொலை செஞ்ச வில்லன் இப்போ தாய்லாந்து நாட்டுல ... படம் லோ பட்ஜெட் என்பதால் ஹீரோ தாய்லாந்து போக முடியல.. தன்னோட சாணக்கியத்தனத்தால வில்லனை இங்கே வரவழைக்கறார்.. ////

இது செம கமெண்ட்டு.. டிபிக்கல் சி.பி. கமெண்ட்டு..

ராஜி said...

விமர்சனம் அருமை

தமிழ்வாசி - Prakash said...

அண்ணே, தவறாமல் படம் பார்த்து விமர்சனம் போட்டு அதிலும் ஒரு எதிர் கருத்தை உள் (கமல்-ரெண்டு மூணு பேரு சொல்லி இருக்காங்க) வைத்து... உங்க சேவையே சேவை.


நம்ம தளத்தில்:
சின்ன பீப்பா, பெரிய பீப்பா: இரண்டு பெண்களின் அரட்டைக் கச்சேரி

katrukolpavan said...

super vimarcanam ....

Kamala iluka vendam udaranatukum....

Apdi irunta dan kamal....

Unnai pola oruvann,Anba sivam,indian,.....niraya variety kodupavar dan kamal....

ஆகாயமனிதன்.. said...

பூர்ணா முதுகு கலர பக்கத்து சீட்டுக்காரர் சொன்னாரா ?
பக்கத்து எலைக்கு பாயாசம் !
#லொள்ளு cp
உங்க வீட்டம்மா திட்டுவாங்கன்னு கில்மாவுல சொல்றீங்களோ ?

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
vicky said...

vimarsanathuku nandri