Saturday, April 02, 2011

கலைஞர் டி வி யின் முகத்திரையை கிழித்த ஜூ வி... கேப்டன் வேட்பாளரை அடித்த விவகாரம்- காமெடி கும்மி

டந்த 29-ம் தேதி தர்மபுரி மாவட்டத்தில், தே.மு.தி.க. மற்றும்
http://www.southdreamz.com/wp-content/uploads/2008/03/arasangam-new-stills-6.jpg
கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்காக விஜயகாந்த்தின் கிறுகிறு பிரசாரம்!  ( சரக்கு ஜாஸ்தியோ? )
மாலை 3 மணிக்கு தர்மபுரி ராஜகோபால் கவுண்டர் பூங்கா அருகே, பேச்சைக் கேட்கக் கூட்டம் திரண்டிருக்க... வேனில் விஜயகாந்த்தோடு பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி​யின் அ.தி.மு.க வேட்பாளர் பழனியப்பன், பென்னாகரம் தொகுதியின் இ.கம்யூனிஸ்ட் வேட்பாளர் நஞ்சப்பன், தர்மபுரி தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் பாஸ்கர் ஆகியோர் இருந்தனர்! ( அதுல அடி வாங்கப்போறது யாரோ? என்ற சஸ்பென்ஸோடா? )


பேசத் தொடங்கிய விஜயகாந்த், ''ஊழலும், குடும்ப ஆதிக்கமும் நிறைந்த கருணாநிதியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கணும். அதுக்குத்தான் மக்களாகிய உங்கள் விருப்பப்படி அ.தி.மு.க-வுடன் கூட்டணி வெச்சுக்கிட்டேன். நமது கூட்டணி வேட்பாளர்களுக்கு நீங்கள் ஒவ்வொருவரும் போடும் ஓட்டு, தி.மு.க. ஆட்சிக்கு வைக்கப்போகும் வேட்டு. ( நாங்க எங்கேய்யா விரும்புனோம்? நீங்களா சொல்லிக்கறீங்க.. )

ஊழலில் கொட்டமடிக்கும் தி.மு.க-வோடு சில சாதித் தலைவர்களும் கைகோத்திருக்காங்க. 'தமிழ் வாழ்க’ன்னு வெளியில சொல்லிக்கிட்டுத் திரிஞ்சாலும், தமிழும், தமிழ் இனமும் அழியக் காரணமா இருப்பதே இந்தக் கருணாநிதிதான். ( ஓஹோ.. அது தெரிஞ்சும் ஏன் நீங்க நடிகர் சங்கத்தலைவரா இருந்தப்ப்ப அவருக்கு பாராட்டு விழா நடத்துனீங்க?)

ஆனா, அவர்கூட போய் திருமாவளவன் இருப்பதை நினைச்சாத்தான் எனக்கு வேடிக்கையா இருக்குது. அதே மாதிரி 'மரம் வெட்டி’ன்னு ஒரு சாதித் தலைவர் இருக்கார். என் பெயரைத் தன் வாயால் உச்சரிக்க மாட்டேன்னு அவர் சொல்லிட்டதால், நானும் அவர் பெயரை சொல்ல விரும்பலை.(ஓஹோ.. தானிக்கு தீனி சரியாப்போச்சாக்கும்.. படுவாக்களா? பிச்சுப்புடுவேன் பிச்சு.. பேரை சொல்ல என்ன வெட்கம்?)

அந்த மரம் வெட்டித் தலைவரும், ஊழல்வாதியான கருணாநிதியுடன் ஆதாயத்துக்காகக் கூட்டுப் போட்டிருக்கார். 'சாதியே வேண்டாம்’கிற வர்க்கத்தைச் சேர்ந்தவன் நான். ஆனா, இங்கே பல தலைவர்கள் சாதியைக் கையில் எடுத்துத்தான் பிழைப்பை ஓட்டிக்கிட்டு இருக்காங்க. தன் சொந்த சாதி சனங்களுக்கு அவங்களால் என்ன நன்மைன்னு யோசிங்க... மக்களின் நலனைப்பத்திக் கவலைப்படாம, சுயலாபத்துக்காகத்தானே கருணாநிதி​யைத் தூக்கிப் பிடிக்கிறாங்க...'' என்று விளாசினார். ( இந்த டகால்டி எல்லாம் இங்கே வேணாம்.. கல்யாண மண்டபத்தை இடிச்ச கோபத்துல தானே நீங்க தி மு க  எதிர்ப்பு நிலையை எடுத்தீங்க? அது சுய நலம் தானே..?)


பேச்சை முடிக்கும் தறுவாயில், வேனுக்குள் அமர்ந்திருந்த தர்மபுரி தே.மு.தி.க. வேட்பாளர் பாஸ்கர் எழுந்து நின்று, விஜயகாந்த் அருகில் நின்று கூட்டத்தைப் பார்த்து கும்பிட்டார், உடனே விஜயகாந்த், ''அதனால் மக்களே, இதையெல்லாம் மனசுல வெச்சு, உங்க வேட்பாளர் பாண்டியனுக்கு மறக்காம ஓட்டுப் போடுங்க!'' என்று கேட்டுக்கொண்டார். பெயரை மாற்றிச் சொன்னதும் வேட்பாளர் பாஸ்கர், விஜயகாந்த் காதைக் கடிக்கவே, ''மன்னிக்கனும்... ஏதோ ஞாபகத்துல பாண்டியன்னு சொல்லிட்டேன். பாஸ்கருக்கு ஓட்டுப் போடுங்க!'' என்று திருத்திக் கூறி, பிரசாரத்தை நிறைவு செய்தார். ( மப்புல உளறிட்டு சமாளிப்பு வேற. சொன்னா கோபம் வந்துடுது...வேட்பாளர் பேரே ஞாபகம் இல்லைன்னா வாக்குறுதி எப்படி ஞாபகம் இருக்கும்?)


விஜயகாந்த் பேசியபோது, நடுநடுவே கையில் இருந்த இரண்டு மைக்குகளும் கோளாறாகி சவுண்ட் கட் ஆனது. மைக்கையும், கூடியிருந்த மக்களையும் மாறி மாறிப் பார்த்தபடியே ''இது வேற ஒண்ணு...'' என்றவர், மைக்குகளை அசைத்துச் சரிசெய்ய முயல... அப்போது மைக்குகளின் பாகங்கள் கழன்று, வேனுக்குள் விழுந்தன. அதைப் பார்த்து மைக்செட் அமைப்பின் லட்சணத்தை மேலும் கிண்டல் செய்யும் தோரணையில் மக்களைப் பார்த்தவர்... தன் ஸ்டைலில் நாக்கை மடித்துக் கடித்தபடியே வண்டிக்குள் இருந்த மைக்செட் அமைப்பாளரிடம் மைக்குகளைக் கொடுத்துவிட்டு, அவர் தலையில் தட்டினார். ( ஓஹோ அதுகு பேரு தட்றதா? மப்புல சப்பு சப்புன்னு அடிச்சுப்போட்டு.. )


ஆனால், சில மணி நேரத்தில் நடந்ததுதான் ஹைலைட்... ஒரு டி.வி-யில், ''தர்மபுரி பரப்புரையின்போது பொது இடத்தில் விஜயகாந்த், வேட்பாளரை அடித்து உதைத்தார்... மக்கள் கடும் அதிர்ச்சி... இன்றிரவு 10 மணி செய்தியில் காணத் தவறாதீர்கள்'' என்று ஃப்ளாஷ் நியூஸ்  ஓடியது. பின்னர் இரவு 10 மணிச் செய்தியில் ஒரு வீடியோ காட்சி ஒளிபரப்பப்பட்டது.(பின்னே சும்மாவா? வெறும் கைலயே நாங்க முழம் போடறவங்க..அவல் கிடச்சா விட்ருவமா?)


உயரமான இடத்தில் இருந்து படமாக்கப்பட்ட அந்த வீடியோவில் விஜயகாந்த் கை, வேனுக்கு  உள்ளே இருந்த ஒருவரின் தலையில் படுவதை மட்டும் சவுண்ட் எஃபெக்ட் சேர்த்து, மீண்டும் மீண்டும் ஒளிபரப்பினார்கள். அதைத் தொடர்ந்து அந்தக் காட்சி, 'மக்கள் தொலைக்காட்சி’, 'கலைஞர் செய்தி’, 'சன் செய்தி’ சேனல்களிலும் ஒளிபரப்பாகவே... தமிழகம் முழுக்கப் பரபரப்பு! ( எடிட்டிங்க் வேலைல சன் டி வி , கலைஞர் டி வி களுக்கு மாஸ்டர் பட்டமே தரலாம்..)


நடந்த சம்பவம் பற்றி தர்மபுரி தே.மு.தி.க. வேட்பாளர் பாஸ்கரிடம் நாம் கேட்டோம். ''மைக் தொல்லை செய்தபோது, சரிசெய்யும்படி மைக் அமைப்பாளரிடம் கேப்டன் கொடுத்தார். அப்போது கீழே இருந்த அவரது தலையில் இயல்பாக கேப்டன் கைபட்டது. அப்போது நானும் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியின் அ.தி.மு.க வேட்பாள​ரான பழனியப்​பனும் வேனுக்குள்​தான் உட்கார்ந்து இருந்தோம். ஆனா, 'என்னைத்தான் கேப்டன் அடிச்​சார்’னு தப்பான ஒரு செய்தியை ஆளும் கட்சி தரப்பு சேனல்களும் திட்டமிட்டுப் பரப்புறாங்க. இதுக்கு சட்டரீதியாகப் பாடம் புகட்டுவோம்!'' என்றார் கொதிப்பாக. ( தக்காளி.. அடி வாங்கிட்டு சமாளிக்குது பாரு.. )


விஜயகாந்த் கை ஓங்கியதை ஒரு குறிப்பிட்ட டி.வி. இவ்வளவு பெரிதாக்க என்ன காரணம் என்று தே.மு.தி.க. புள்ளிகளிடம் விசாரித்தபோது, ''விஜயகாந்த், தன் பேச்சுக்கிடையில் ராமதாஸை மரம் வெட்டித் தலைவர் என்றுதான் குறிப்பிடுகிறார். மேலும் சாதி அரசியலை ஒரு பிடி பிடித்தார். அந்தக் கோபத்தின் உச்சகட்ட வெளிப்பாடுதான் இவ்வளவு பரபரப்புக்கும் காரணம். (இவரு மட்டன் சிக்கனைத்தான் ஒரு பிடி பிடிப்பாரு... ?)

இதுவரைக்கும் ராமதாஸைத் திட்டி எந்தத் தலைவரும் இவ்வளவு காரசாரமாகப் பேசியது இல்லை. முதல் தடவையாக அவரைப்பற்றி கடுமையாக கேப்டன் பேசுகிறார் என்றதும், அதைத் திசைதிருப்ப இப்படிச் செயல்படுகிறார்கள். எங்கள் கேப்டன் கேட்ட கேள்விகளுக்கு ராமதாஸை முதலில் பதில் தரச் சொல்லுங்கள்!'' என்றார்கள்.( தலைவரா? எங்கே எங்கே? )


தமிழக அரசியலில் டாக்டர் ராமதாஸ் பற்றி விஜயகாந்த் வைக்கும் விமர்சனங்களை இதுவரை எந்த அரசியல் தலைவரும் செய்தது இல்லை என்பதுதான் உண்மை! ( சொந்தப்பிரச்சனைக்கு ரெண்டு பேரும் அடிச்சுக்கறாங்க.. கஜேந்திரா பட பெட்டி தூக்கிட்டு போன விவகாரத்துல 2 பேருக்கும் பிரச்சனை.. என்னமோ மக்கள் பிரச்சனைல மக்களுக்காக போராடுனது மாதிரி ஒரு பில்டப் எதுக்கு?

30 comments:

காங்கேயம் P.நந்தகுமார் said...

நம்ம சி.பி.அண்ணனுக்கு ஜுவியும் ஆவி பத்திரிக்கை தான் இப்ப கை கொடுக்குது. நடக்கட்டும் எல்லாம் நன்மைக்கே!

காங்கேயம் P.நந்தகுமார் said...

மது மன்னனை கூட ஆதரிக்கும் ஒரே பத்திரிக்கை இதுவாகத்தான் இருக்கும்.

ம.தி.சுதா said...

////அவர்கூட போய் திருமாவளவன் இருப்பதை நினைச்சாத்தான் எனக்கு வேடிக்கையா இருக்குது.////

இந்த அரசியல் ஏதோ வெள்ளைக்காரன் காதலியை வச்சிருப்பது போல அல்லவா இருக்கிறது... ஹ..ஹ..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
ஈழத் தமிழனுக்கு கருணாநிதியில் பிடித்த ஒரே சம்பவம்

ம.தி.சுதா said...

சிபி நான் கிரிக்கேட் பார்க்கணும் அப்புறம் வாறன்...

காங்கேயம் P.நந்தகுமார் said...

அண்ணே ஜுவி, மற்றும் ஆவி யின் விசுவாசம் சிலர் வீசிய எலும்பு துண்டுக்கு வாலட்டுவதை காட்டுகிறது.

MANO நாஞ்சில் மனோ said...

அடகொய்யல நீர் மட்டை பந்து பார்க்க போகலையா...

காங்கேயம் P.நந்தகுமார் said...

அடி கொடுத்தவனே ஒத்துக்கிட்டான். அடி வாங்குன அந்த கொடுக்கு மைக்கை எடுத்துதா? மொத்தத்திலே எல்லாருமே மப்புலதான் இருந்திருப்பானுங்க போலிருக்கு

MANO நாஞ்சில் மனோ said...

//தக்காளி.. அடி வாங்கிட்டு சமாளிக்குது பாரு.. )//

வெங்காயம்...

MANO நாஞ்சில் மனோ said...

//.( தலைவரா? எங்கே எங்கே? )//

வேனுக்குள்ளேதான் எட்டி பாரும் ஒய்...

MANO நாஞ்சில் மனோ said...

//சொந்தப்பிரச்சனைக்கு ரெண்டு பேரும் அடிச்சுக்கறாங்க.. கஜேந்திரா பட பெட்டி தூக்கிட்டு போன விவகாரத்துல 2 பேருக்கும் பிரச்சனை.. என்னமோ மக்கள் பிரச்சனைல மக்களுக்காக போராடுனது மாதிரி ஒரு பில்டப் எதுக்கு?///


என் கால்'ல இருக்குறதை கழட்டட்டுமா மக்கா....

காங்கேயம் P.நந்தகுமார் said...

பாஸ்கரை போய் பேட்டி கண்டாங்களாம். மைக்கை தான் அவர் எடுத்தாராம். அதை அவர் வாங்கினாராம். அதை தப்பா எழுதிட்டாங்களாம். ஆமா எப்படி இந்தமாதிரி புகழ்பெற்ற பத்திரிக்கையெல்லாம் எழுதுது. சாமி கலிகாலம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

aanaa vijayakanthe avar adichchatha oththukkittaare

பொ.முருகன் said...

பாஸ்கர்,கேப்டன் இன்னொரு ரவுண்டு கூப்பிட்றார் போரிங்கிளா [அட பிரச்சாரத்க்துக்குதன்]

பொ.முருகன் said...

பாஸ்கர்,கேப்டன் இன்னொரு ரவுண்டு கூப்பிட்றார் போரிங்கிளா [அட பிரச்சாரத்துக்குத்தான்]

Asiya Omar said...

செந்தில் குமார் நான் கூட கேப்டன் வேட்பாளரை சாத்திப்போட்டாரோன்னு தான் நினைத்தேன்,ஆமாம் சகோ,நீங்க எந்தப்பக்கம்?

ஜெய்லானி said...

எடிட்டிங்னா இதுதான் எடிட்டிங் பேஷ்..பேஷ்...ரொம்ப நன்னாயிருக்கு ..ஹி..ஹி..!!


வஞ்சப்புகழ்ச்சியில பதிவு டாப் :-))

Lali said...

அருமையான பதிவுகள், மனம்விட்டு சிரிக்க சிந்திக்க வைக்கிறீர்கள், வாழ்த்துக்கள் :)

http://karadipommai.blogspot.com/

செங்கோவி said...

//அடி கொடுத்தவனே ஒத்துக்கிட்டான். அடி வாங்குன அந்த கொடுக்கு மைக்கை எடுத்துதா? மொத்தத்திலே எல்லாருமே மப்புலதான் இருந்திருப்பானுங்க போலிருக்கு// அப்படிப் போடு அருவாளை!..யோவ் சிபி, அப்போ ஜூவியோட புளுகை நம்புதீரா?

Unknown said...

நான் வந்த தடம் தெரியுதா ஹிஹி!

VJR said...

சி.பி. வெவரமான ஆளுன்னு பாத்தா பச்சக் கொழந்தயாயில்ல இருக்கீங்க.

அடிச்சவனே ஒத்துகிட்டான், அப்புறம் என்ன வெளக்கம்? கேவலமா இல்ல?

Adirai Seithi said...

எவ்ளோ அடிசாலும் தாங்குறாண்ட பாஸ்கர்

Adirai Seithi said...

Pls Visit Adirai Seithi

http://www.adiraiseithi.blogspot.com/

Unknown said...

//'என்னைத்தான் கேப்டன் அடிச்​சார்’னு தப்பான ஒரு செய்தியை ஆளும் கட்சி தரப்பு சேனல்களும் திட்டமிட்டுப் பரப்புறாங்க. இதுக்கு சட்டரீதியாகப் பாடம் புகட்டுவோம்!'' என்றார் கொதிப்பாக. ( தக்காளி.. அடி வாங்கிட்டு சமாளிக்குது பாரு.. )//
ரொம்ம்ப நல்லவன் பாஸ்! :-)

சக்தி கல்வி மையம் said...

உன்னோட பொறுப்புணர்ச்சி என்னாச்சு.. ஞாயிறு பதிவைக் கானோமே?

Unknown said...

ஞாயிறு ஏதாச்சும் அரசியல் மீட்டிங்கு போயிருப்பாரு...
அல்லது வடிவேலுக்கு ஸ்க்ரிப்டு எழுதிக் குடுக்க போயிருப்பாரு..
விஜயகாந்த் வடிவேலை விட சி பி மேல தான் காண்ட்டாய் இருக்காராம்!!

சகமனிதன் - இவன் உங்களில் ஒருவன் said...

அடப்பாவிங்களா!! இப்புடி எல்லாமா டெக்னாலஜியை மிஸ் யூஸ் பண்ணுவது!! சினிமாக் காரனுக்கே எடிட்டிங்,மார்பிங்,ரீ ரெகார்டிங் எல்லாம் பண்ணி ஆப்பு வைக்கிறாங்க!! கஷ்டம்!!
அப்படியே இங்கே வந்துட்டு போங்க!!

http://sagamanithan.blogspot.com/

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
Anonymous said...

உங்க தலைப்பு பொருத்தமா இருக்கும்...அட்ரா சக்க!

செங்கோவி said...

என்ன. அண்ணனைக் காணோம்?..ஒருவேளை உள்ள தூக்கி வச்சுட்டாங்களா?..இதுக்குத் தான் நாம உண்டு, நமீதா உண்டுன்னு இருப்போம்னு சொன்னேன்..கேட்டாரா?

vels-erode said...

இனனைக்கி தேதில மட்டமான பத்திரிக்கை எதுன்னு என்னை கேட்டால் ( என்னை ஏன்டா கேக்குறீங்க டீடைலு?) அது ஆ.வி. மற்றும் ஜூ.வி. ன்னுதான் மப்பு ஏத்தாமல் சொல்லுவேன். அவ்வளவு கேனததனமா எழுதறாயங்க.....! இதுல இவனுக ஜெயா,விஜி,கருணாநிதி,ராம்தாஸ்....னு, கமெண்ட் அடிக்கறானுக, ராஸ்கல் பத்திரிக்கை. ஊருல எவனாவது 'குறி' சொனனா பேட்டி எடுத்து ரெண்டு பக்கம் போட்டுட்டு, கடைசி வரில, '21-ஆம் நூற்றாண்டில் இன்னும், இப்படி?' -ந்னு கமெண்ட் போட்டுடடு சக்தி விகடன்-லவிழுந்து விழுநது 'குறி' சொல்து எப்படின்னு கட்டுரைப்போடுவானுக. ப்ச்....எல்லாம் கேப்மரிகதான்.