Thursday, April 21, 2011

மியூச்சுவல் ஃபண்ட்,கிரெடிட் கார்டு சம்பந்தமான சந்தேகங்கள் இருக்கா?


கிரெடிட் கார்டு வட்டிக்கு சேவை வரி உண்டா?


1. கே:மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்திருக்கிறேன். வீடு மாறப் போகிறேன். புதிய முகவரியை ஃபண்ட் மற்றும் பங்குச் சந்தை தொடர்பான ஆவணங்களில் மாற்ற என்ன செய்ய வேண்டும்?


மோகன்ராஜ், கிளை மேலாளர், ஜியோஜித் பி.என்.பி. பரிபாஸ் ஃபைனான்ஷியல் சர்வீசஸ், கரூர். 
 
ப:முதலில் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றில் புது முகவரியை மாற்றிக் கொள்ளுங்கள். அதன் நகலுடன் முகவரி மாற்று படிவத்தை நிரப்பி ஷேர் புரோக்கரிடம் கொடுத்துவிட்டால் போதும். டீமேட் மற்றும் டிரேடிங் அக்கவுன்டில் முகவரி மாற்றம் செய்யப்பட்டுவிடும். மியூச்சுவல் ஃபண்டிலும் இதே நடைமுறைதான்.
------------------------------------------------

2. கே:2,400 சதுர அடி மனையில் மொத்தம் 3,600 சதுர அடி பரப்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி இருக்கிறார்கள். அதில், ஒருவர் 850 சதுர அடி ஃபிளாட்டை வாங்குகிறார் எனில், அவருக்கான பிரிக்கப்படாத பகுதி 'அன்டிவைடட் ஷேர்’ எத்தனை சதுர அடி கிடைக்கும்?
- ஏ.எஸ்.ராஜேஷ்குமார், சென்னை.
மணிசங்கர், தலைவர், ஃபெடரேஷன் ஆஃப் தமிழ்நாடு ஃபிளாட் அண்ட் ஹவுசிங் புரோமோட்டர்ஸ். 

ப:2,400 ச.அடி மனையில் 3,600 ச.அடி கட்டடம் கட்டப்படுகிறது எனில், இதன் விகிதம் 2400/3600 = 0.66. இதனை 850-ஆல் பெருக்கினால் கிடைப்பது, அதற்கான பிரிக்கப்படாத மனை. அதாவது, 850 ச. அடி ஃபிளாட்டுக்கு பிரிக்கப்படாத மனையின் அளவு 566.66 ச.அடி. பிரிக்கப்படாத மனையின் அளவு சரியா என்பதைக் கண்டுபிடிக்க, மொத்தமுள்ள வீடுகளுக்கான பிரிக்கப்படாத மனையின் அளவைக் கூட்டினால், மொத்த மனையின் பரப்பு வர வேண்டும்.

-------------------------------------------

3. கே:என் வயது 36. தற்போது என்னிடம் 30,000 ரூபாய் இருக்கிறது. இதனை பங்கு, ஃபண்ட், கோல்டு இ.டி.எஃப். போன்றவற்றில் எதில் முதலீடு செய்யலாம்?
-மெயில் மூலமாக ராதா 
முத்துகிருஷ்ணன், நிதி ஆலோசகர், வைஸ்வெல்த் அட்வைசர்ஸ். 

ப:உங்களது தற்போதைய முதலீடுகள் என்னென்ன, வருங்காலத் தேவை என்ன என்று எதுவும் தெளிவாகக் கூறவில்லை. எனினும், உங்களின் வயதைக் கொண்டு உங்களிடம் இருக்கும் 30,000 ரூபாயை இரண்டு வகையில் முதலீடு செய்யலாம். அதாவது, நீண்டகாலத் தேவைக்கு எனில் நிறுவனப் பங்குகள் மற்றும் பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் சரிபாதியாகப் பிரித்து முதலீடு செய்யலாம். இதுவே குறுகியகால முதலீடு எனில், அவசரத்திற்கு எடுக்கும் வகையில் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டு வைக்கலாம்.


4. கே:கோல்டு இ.டி.எஃப். திட்டத்தில் எஸ்.ஐ.பி. மூலம் முதலீடு செய்ய முடியுமா? 

- சரண்யா, திருத்துறைப்பூண்டி.
புவனா ஸ்ரீராம், நிதி ஆலோசகர். 

ப:எஸ்.ஐ.பி. மூலம் கோல்டு இ.டி.எஃப். திட்டத்தில் நேரடியாக முதலீடு செய்ய முடியாது. ஆனால், புதிதாக வந்திருக்கும் கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட் மூலம் மாதம் குறைந்தபட்சம் 100, 500, 1,000 ரூபாய் என உங்கள் வசதிக்கேற்ப எஸ்.ஐ.பி. மூலம் முதலீடு செய்து வரலாம்.  ரிலையன்ஸ் கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட், கோட்டக் கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட் ஆகியவை மூலம் இந்த முதலீட்டைச் செய்யலாம்.


5. கே:எனது ஒரிஜினல் பிறந்த தேதி 7-7-1979. பான் கார்டு, டிரைவிங் லைசன்ஸ் போன்றவற்றில் இதே தேதிதான் இருக்கிறது. ஆனால், பள்ளிச் சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட்டில் 16-7-1979 என்று இருக்கிறது. இதனை மாற்ற முடியுமா? அதற்கு என்ன வழி?

-டி.வெங்கடேஷ், பெங்களூர்.
தவ்லத் தமீன், தலைமை பாஸ்போர்ட் அதிகாரி. 

ப:உங்களின் பிறப்புச் சான்றிதழில் சரியான பிறந்த தேதி இருக்கிறது எனில், அதன் சான்றழிக்கப்பட்ட நகலுடன், என்ன காரணத்தால் பாஸ்போர்ட்டில் பிறந்த தேதி மாறியது என்பதைத் தெளிவாக எழுதி, அத்துடன் 1,000 ரூபாய் கட்டணம் செலுத்தி பாஸ்போர்ட் அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். அவர்கள் ஆவணங்களைப் பரிசீலனை செய்து பாஸ்போர்ட்டில் பிறந்த தேதியை சரிசெய்து கொடுப்பார்கள்.


6. கே:கிரெடிட் கார்டு பயன்படுத்தி வருகிறேன். இதில், வட்டிக்கு சேவை வரி போடுகிறார்கள். இது சரியான நடைமுறைதானா? 

- ராகவன் ஸ்ரீதரன்,  மெயில் மூலமாக
விஜயகுமார், ரிலேஷன்ஷிப் மேனேஜர், ஸ்டாண்டர்டு சார்ட்டர்ட் பேங்க்.   

ப:பொதுவாக கிரெடிட் கார்டு கடனுக்கான வட்டி வங்கிக்கு வங்கி மாறுபடும். ஆனால், வட்டிக்கான சேவை வரி என்பது அனைத்து வங்கிக்கும் பொதுவானதே. அதாவது 10.3% சேவை வரி கிரெடிட் கடனுக்கான வட்டிக்கு கணக்கிடப்படுகிறது. உதாரணத்திற்கு 10,000 ரூபாய்க்கான வட்டி 200 ரூபாய் எனில், சேவை வரி 20.60 ரூபாய். நீங்கள் வட்டி கட்டும்போது சேவை வரியும் சேர்த்து 220.60 ரூபாய் கட்ட வேண்டி வரும்.

 தொடரும்.


நன்றி - நாணயம் விகடன்

34 comments:

Unknown said...

hehe!

Unknown said...

hi hi hi!

பாட்டு ரசிகன் said...

ஒரு நாளைக்கு எத்தனை பதிவுங்க...

Unknown said...

உண்மையிலேயே பாராட்டுறேன்யா இந்த பதிவுக்காக உன்னை!

சி.பி.செந்தில்குமார் said...

haa haa ஹா ஹா

பாட்டு ரசிகன் said...

கொஞ்சம் படிச்சிட்டு வருகிறேன்..

சி.பி.செந்தில்குமார் said...

>> விக்கி உலகம் said...

உண்மையிலேயே பாராட்டுறேன்யா இந்த பதிவுக்காக உன்னை!

மழை வரப்போகுது

சி.பி.செந்தில்குமார் said...

>>பாட்டு ரசிகன் said...

கொஞ்சம் படிச்சிட்டு வருகிறேன்.

ஃபுல்லாவே படிங்க.. ஏன் கொஞ்சம் மட்டும்?

பாட்டு ரசிகன் said...

யாவருக்கு இருக்கும் பொதுவான கேள்விகள் தான்...


நாணய விகடன் தொகுப்பு...
நல்லாயிருக்கு...

பாட்டு ரசிகன் said...

http://tamilpaatu.blogspot.com/2011/04/blog-post_21.html

MANO நாஞ்சில் மனோ said...

சொம்பு செமையா எங்கயோ நசுக்க பட்டிருக்கு சிபி'க்கு....

MANO நாஞ்சில் மனோ said...

உருப்படியா சொல்லி இருக்கே மச்சி பாராட்டுக்கள்....

MANO நாஞ்சில் மனோ said...

//
விக்கி உலகம் said...
உண்மையிலேயே பாராட்டுறேன்யா இந்த பதிவுக்காக உன்னை!//

எங்கேயோ கருகுன வாசம் வருது....

சி.பி.செந்தில்குமார் said...

நேத்து நான் மக்கா.. இன்று மச்சி.. நாளை..? ஹி ஹி எனக்கு தங்கச்சி யாரும் இல்லாதது நல்லதா போச்சு

MANO நாஞ்சில் மனோ said...

// சி.பி.செந்தில்குமார் said...
>>பாட்டு ரசிகன் said...

கொஞ்சம் படிச்சிட்டு வருகிறேன்.

ஃபுல்லாவே படிங்க.. ஏன் கொஞ்சம் மட்டும்?///

என்னாது ஃபுல்லா எங்கே எங்கே.....

MANO நாஞ்சில் மனோ said...

//
சி.பி.செந்தில்குமார் said...
நேத்து நான் மக்கா.. இன்று மச்சி.. நாளை..? ஹி ஹி எனக்கு தங்கச்சி யாரும் இல்லாதது நல்லதா போச்சு///

ஹி ஹி ஹி ஹி ஹி நான் என்ன மப்புல இருக்கேன்னு நினச்சீரோ பிச்சிபுடுவேன் ராஸ்கல்....

MANO நாஞ்சில் மனோ said...

//பாட்டு ரசிகன் said...
http://tamilpaatu.blogspot.com/2011/04/blog-post_21.html///


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் இந்த அநியாயத்தை கேக்க ஆருமே இல்லையா.....

பாட்டு ரசிகன் said...

http://tamilpaatu.blogspot.com/2011/04/blog-post_21.html

Mahan.Thamesh said...

சார் பயனுள்ள தகவல்களை பகிர்துள்ளிர்கள்;நன்றி

Mahan.Thamesh said...

நீங்கள் திருந்தி விட்டதாக மாத்தி யோசி இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது;

MANO நாஞ்சில் மனோ said...

//பாட்டு ரசிகன் said...
http://tamilpaatu.blogspot.com/2011/04/blog-post_21.html//


எட்றா அந்த வீச்சருவாளை....

பாட்டு ரசிகன் said...

////
MANO நாஞ்சில் மனோ said...

//பாட்டு ரசிகன் said...
http://tamilpaatu.blogspot.com/2011/04/blog-post_21.html//


எட்றா அந்த வீச்சருவாளை....////

இதை படக்கிற வரைக்கு போட்டுகிட்டே இருப்பேன்..
நான் கஷ்டப்பட்டு பதிவு போட்டா இன்னும் வந்து படிக்கல...

MANO நாஞ்சில் மனோ said...

// பாட்டு ரசிகன் said...
////
MANO நாஞ்சில் மனோ said...

//பாட்டு ரசிகன் said...
http://tamilpaatu.blogspot.com/2011/04/blog-post_21.html//


எட்றா அந்த வீச்சருவாளை....////

இதை படக்கிற வரைக்கு போட்டுகிட்டே இருப்பேன்..
நான் கஷ்டப்பட்டு பதிவு போட்டா இன்னும் வந்து படிக்கல...
//

அடபாவி நான் வடை தின்னுட்டுதானே வந்தேன் உம்ம பதிவுல....

சசிகுமார் said...

பயனுள்ள தகவல்கள் செந்தில்

முக்கிய அறிவிப்பு

நண்பர்களே வந்தேமாதரம் தளம் பிளாக்ஸ்பாட்டில் இருந்து vandhemadharam.com ஆகா மாற்ற பட்டிருக்கிறது. ஆகவே தங்களின் பிளாக் லிஸ்டில் வந்தேமாதர பிளாக்கை இணைத்து இருந்தால் அதை மாற்றி www.vandhemadharam.com என்ற புதிய முகவரியை இணைத்தால் தான் வந்தேமாதர தளத்தின் புதிய பதிவுகள் அப்டேட் ஆகும் என்பதை தங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.

இப்படிக்கு

சசிகுமார்
([email protected])

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

Useful informations CP. super!

Chitra said...

பகிர்வுக்கு நன்றி.

ஒரு சந்தேகம்: பத்திரிகையில் இருந்து செய்திகள் எடுத்து அப்படியே போடும் போது, அவர்களிடம் அனுமதி வாங்க வேண்டுமா?

MANO நாஞ்சில் மனோ said...

//FOOD said...
Blogger MANO நாஞ்சில் மனோ said...
அடபாவி நான் வடை தின்னுட்டுதானே வந்தேன் உம்ம பதிவுல....//
மனோ சார், மனோ சார், வட டெய்லி தின்னுனா வவுறு வலிக்கும்.///


இது சாபமா அட்வைஸா ஹே ஹே ஹே ஹே ஹே ஆபீசர்......

MANO நாஞ்சில் மனோ said...

//Chitra said...
பகிர்வுக்கு நன்றி.

ஒரு சந்தேகம்: பத்திரிகையில் இருந்து செய்திகள் எடுத்து அப்படியே போடும் போது, அவர்களிடம் அனுமதி வாங்க வேண்டுமா?//

சிபி'யை நம்பாதீங்க மேடம்....கொலைவெறியில நிறைய பேர் அவரை தேடிட்டு இருக்காங்க குண்டாந்தடியோட....

சென்னை பித்தன் said...

படித்த நல்லவற்றைப் பகிர்ந்துகொள்ளும் உங்களுக்கு வாழ்த்துகள்!

Unknown said...

சி பி யின் மாற்றம் நினைத்து பார்க்க முடியாதது...
பாவம் நடிகைகள் தப்பிவிட்டார்கள் போலும் அவரின் கண்களில் இருந்து..
நமக்காக அவர்களை பத்தி ஒரு பதிவு மக்கா??

ஹேமா said...

நிச்சயமா நிறையப் பேருக்கு உதவியா இருக்கும் இந்தப் பதிவு.

சிபி...சுகம்தானே !

செங்கோவி said...

என்னமோ நடக்குது..மர்மமா இருக்குது!

நிரூபன் said...

பயனுள்ள தகவல்கள் சகோ, தமிழகத்தில் கிரெடிற் கார்ட் சேவை வரி பற்றி அறியாதவர்கள் அறிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன். நன்றிகள், நன்றிகள்.

Thenammai Lakshmanan said...

செந்தில்ஜி ஏதேது பங்குவர்த்தகம்., ரியல் எஸ்டேட்., அழகு நிறுவனம் என தனியா ஒர் பத்ரிக்கையே நடத்துறப்புல இருக்கே..:)) தனியொரு வலைப்பதிவரா இவ்வளவு சாதனையும் செய்வதற்கு வாழ்த்துக்கள்