Saturday, April 30, 2011

சந்தனக்கடத்தல் மன்னன் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி ஜூ வி பேட்டி - காமெடி கும்மி

எல்லா அரசியல்வாதிகளும் சுயநலமிகள்

சிறை மீண்ட முத்துலட்சுமி ஆவேசம்
நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு கர்நாடக சிறையில் இருந்து ரிலீஸ் ஆகி
வெளியில் வந்திருக்கிறார் சந்தனக் கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி.

 ஆமா.. சுதந்திரப்போராட்ட தியாகி .. வெளில வந்துட்டாங்க.. மாலை போட்டு ஆரத்தி எடுக்க வேண்டியதுதான்.. 
மேட்டூர் அருகே உள்ள பொட்டனேரி கிராமத்தில், அக்கா வீட்டில் தங்கியிருக்கும் முத்துலட்சுமியை சந்தித்தோம். பேச்சில் ஏகத்துக்கும் இப்போ கன்னட வாசம்! 

பேட்டி எடுத்தா கேள்விகளால் வசப்படுத்தனும்.. இப்படி வாசம் பிடிக்கக்கூடாது.. 

''கிட்டத்தட்ட மூணு வருசம் ஜெயிலுக்குள்ளயே ஓடிப்போச்சு. 2008-ம் வருஷம் நவம்பர் 26-ம் தேதி ராத்திரி ஒரு மணி இருக்கும். எங்க வீட்டுக் கதவை யாரோ தட்டினாங்க. வெளியில ரெண்டு பொம்பளை போலீஸ்  இருந்தாங்க. 'நாங்க
மாதேஸ்வரன்மலை போலீஸ்காரங்க. உங்களை அரெஸ்ட் பண்ண வந்திருக்கோம்...’னு தமிழ் கலந்த கன்னடத்தில் சொன்னாங்க.


'எதுக்கு..?’ன்னு புரியாமல் கேட்டேன். '11 தடவை உங்களை கோர்ட்ல ஆஜராகச் சொல்லி​யும், நீங்க ஆஜராகாம கோர்ட்டை அவமதிப்பு செஞ்சதுக்காக, உங்களை கைது செய்யச் சொல்லி பிடி வாரன்ட் போட்டிருக்கு’ன்னு சொன்னாங்க.

 அதெப்பிடி? மாலை 6 மணீக்கு மேலே பெண் கைதியை லாக்கப்ல வைக்க சட்டம் இல்லையேன்னு கேட்க வேண்டியது தானே?

'கோர்ட்ல ஆஜராகச் சொல்லி எந்த நோட்டீஸும் வரவே இல்லை’ன்னு நான் சொன்னது எதையும் அவங்க கேட்கத் தயாரா இல்ல. கட்டின புடவை​யோட அந்த நடு ஜாமத்துல என்னைக் கைது பண்ணிக் கூட்டிட்டுப் போயிட்டாங்க.''


1. ''சிறையில் எப்படி உணர்ந்தீர்கள்?''

''என்னை மைசூர் ஜெயில்ல அடைச்சாங்க. சின்ன ரூம், அதுல 16 பேர் தங்கி இருந்தோம். கால் நீட்டிக்கூட படுக்க முடியாது. ஆரம்பத்துல பல நாள் ராத்திரி தூக்கமே வராது. காட்டுக்குள்ள அவரோட நான் வாழ்ந்த வாழ்க்கையை நினைச்சிப் பார்த்​துட்டுப் உட்கார்ந்திருப்பேன்.

பொழுது விடிஞ்சிடும்.
ஜெயிலுக்குள்ள நக்சலைட் இயக்கத்தைச் சேர்ந்த பெண்கள் சிலரும் இருந்தாங்க. அவங்​களுக்குத் தமிழ், கன்னடம் ரெண்டும் தெரியும். அவங்கதான் என்கூட ரொம்ப அன்பாப் பழகி​னாங்க.

கோர்ட்டுக்கு கன்னடத்துல நான் எழுதச் சொன்ன லெட்டரை எல்லாம் அவங்கதான் எழுதிக் கொடுத்தாங்க. இப்போ ஓரளவுக்கு நானும் கன்னடம் பேசக் கத்துகிட்டேன். கன்னடத்துல கையெழுத்துப் போடவும், கொஞ்சம் படிக்கவும் தெரியும். எல்லாம் அவங்க கத்துக் கொடுத்ததுதான். நான் சோர்ந்துகிடந்தப்ப எல்லாம் எனக்கு ஆறுதலாக இருந்ததும் அவங்கதான்!''

 உடனே நம்மாளுங்க நக்சலைட்டுக்கும் ,உங்களுக்கும் என்ன தொடர்பு?ன்னு ஒரு கேஸ் போட்டு இருப்பாங்களே?


2. ''சிறைக்குள் மண்ணெண்ணெய் கடத்தியதாக உங்கள் மீது புகார் சொல்லப்பட்டதே..?''

''அது ஒரு பெரிய கூத்துங்க! ஜெயிலுக்குள்ள இருக்குற பொண்ணுங்களுக்கு எம்ப்ராய்டரி சொல்லிக் கொடுத்தாங்க. நானும் கத்துக்கிட்டு இருந்தேன். எம்ப்ராய்டரிக்கு டிரேஸ் பேப்பர்ல பயன்படுத்த மண்ணெண்ணெய் தேவைப்பட்டது. அதுக்காகக் கேட்டேன்.

உங்க வீட்டுல இருந்து கொண்டுவந்து கொடுக்கச் சொல்லுன்னு வார்டன் சொன்னார். அக்காகிட்ட சொன்னேன். அவங்க ஒரு சின்ன டப்பாவுல 50 மில்லி கொண்டுவந்தாங்க.
நான் தற்கொலை பண்ணிக்கிறதுக்காக மண்ணெண்​ணெய் கடத்தினதா என் மேல் புகார் பதிவு செஞ்சு விசாரணை நடத்தினாங்க.

அதுக்குப் பிறகுதான் மைசூர்ல இருந்து பெங்களூரு ஜெயிலுக்கு மாத்திட்​டாங்க. ஜெயிலுக்குள் எம்ப்ராய்டரியைத் தெளிவாக் கத்துக்கிட்டேன். நானே ஒரு சேலையில எம்ப்ராய்டரி போட்டேன் பாருங்க...'' என்று ஒரு சேலையைக் காட்டுகிறார்.

அடடா.. இந்த மேட்டரை இப்போ சொல்லி இருக்கீங்களே..? அண்ணன் நக்கீரன் கோபால்ட்ட அப்பவே  சொல்லி இருந்தா  அண்னன் நக்கீரன்ல ஒரு காட்டு காட்டி இருப்பாரு.. அதை வெச்சு 4 வாரம் எக்ஸ்க்ளூசிவ் மேட்டர் ஓட்டி இருப்பாரே..?

3. ''நீங்க ஆரம்பிச்ச மலை வாழ் மக்கள் இயக்கம் எந்த அளவில் இருக்குது..?''
''மலை வாழ் மக்களோட உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கத்தான் அந்த இயக்கத்தை ஆரம்பிச்சேன். நான் ஜெயிலுக்குப் போயிட்டதால், கடந்த மூணு வருஷமா அதை நடத்த யாரும் இல்லை.

இப்போ அதை நடத்தும் அளவுக்கு என்கிட்ட வசதி இல்ல.

 காட்டுல கட்டு கட்டா கணவர் சேர்த்து வெச்ச பணம் எல்லாம் என்னாச்சு?


ஏன்னா, புள்ளைங்க ரெண்டு பேருக்குமே இந்த வருஷம் ஃபீஸ் கட்டணும். பெரியவ, காலேஜ்ல கடைசி வருஷம் படிக்கிறா. சின்னவ, பிளஸ் டூ எழுதி இருக்கா. அவளையும் காலேஜ்ல சேர்த்தாகணும். இப்படி நிறையச் செலவுகள் இருக்குது. அந்தக் கடமையை முடிச்சிட்டு, அதுக்குப் பிறகு முழு நேரமா மலை வாழ் மக்களுக்காகத்தான் சேவை பண்ணப்போறேன்!''

4. ''அரசியல் திட்டம் இருக்கா..?''

''என் கணவர் இறந்த பிறகு, நான் எல்லா சோதனைகளையும் சந்திச்சிட்டேன். எல்லா அரசியல்வாதிகளையும் பார்த்துட்டேன். எல்லோருமே சுய நலத்தோடதான் இருக்காங்க.

 ஆமா.. சுய நலமா இருந்தாதான் அவங்க அரசியல் வாதி.. பொது நலமா இருந்தா அவங்க காந்திய வாதி


அதனால, இனி யாரையும் நம்பி அரசியல்ல இறங்குற எண்ணம் எனக்கு இல்லை. நான் உண்டு.. என் குடும்பம் உண்டுன்னு அமைதியா இருக்கணும்.  இனி என் குழந்தைங்களோட எதிர்காலம்தான் எனக்கு முக்கியம்!''

 பார்த்தீங்களா? நீங்களும் சுயநலமாத்தான் இருக்கீங்க.. அப்போ கண்டிப்பா நீங்களும் அரசியல்வாதி ஆக  வாய்ப்பு உண்டு.. 

68 comments:

Unknown said...

hehe

MANO நாஞ்சில் மனோ said...

சத்தியமா ஏதோ உள்குத்து இருக்கு...

சக்தி கல்வி மையம் said...

ரைட்டு..

Unknown said...

வடை தின்ன வந்த மனோ பாவம்யா ஹிஹி!

MANO நாஞ்சில் மனோ said...

என்னய்யா முத்துலட்சுமியை இப்பிடி காலி பண்ணுறீங்க...பாவம்யா....

சி.பி.செந்தில்குமார் said...

>> MANO நாஞ்சில் மனோ said...

சத்தியமா ஏதோ உள்குத்து இருக்கு...

hi hi hi

சி.பி.செந்தில்குமார் said...

>>MANO நாஞ்சில் மனோ said...

என்னய்யா முத்துலட்சுமியை இப்பிடி காலி பண்ணுறீங்க...பாவம்யா....

adappaaviமாட்டி விடறியா?

MANO நாஞ்சில் மனோ said...

//விக்கி உலகம் said...
வடை தின்ன வந்த மனோ பாவம்யா ஹிஹி!///


பாதி வடையாவது குடுய்யா...

MANO நாஞ்சில் மனோ said...

//சி.பி.செந்தில்குமார் said...
>>MANO நாஞ்சில் மனோ said...

என்னய்யா முத்துலட்சுமியை இப்பிடி காலி பண்ணுறீங்க...பாவம்யா....

adappaaviமாட்டி விடறியா?///


மாட்டிவிடுரதுக்கு இதென்ன ஆணியா....

சி.பி.செந்தில்குமார் said...

>>MANO நாஞ்சில் மனோ said...

//விக்கி உலகம் said...
வடை தின்ன வந்த மனோ பாவம்யா ஹிஹி!///


பாதி வடையாவது குடுய்யா...

adhaan எப்பவும் ரெண்டு பேரும் பங்கு போட்டுக்கறீங்களா? ஹே ஹே ஹேய்

MANO நாஞ்சில் மனோ said...

நமீதா ஆண்டி போட்டோ எங்கே....

Unknown said...

"MANO நாஞ்சில் மனோ said...
//சி.பி.செந்தில்குமார் said...
>>MANO நாஞ்சில் மனோ said...

என்னய்யா முத்துலட்சுமியை இப்பிடி காலி பண்ணுறீங்க...பாவம்யா....

adappaaviமாட்டி விடறியா?///


மாட்டிவிடுரதுக்கு இதென்ன ஆணியா...."

>>>>>>>>>

திரு சிபி நல்லவருய்யா அவர போயி ஏன்யா இப்படி மனோ வேணாம்யா விட்ருய்யா..........!

MANO நாஞ்சில் மனோ said...

// சி.பி.செந்தில்குமார் said...
>>MANO நாஞ்சில் மனோ said...

//விக்கி உலகம் said...
வடை தின்ன வந்த மனோ பாவம்யா ஹிஹி!///


பாதி வடையாவது குடுய்யா...

adhaan எப்பவும் ரெண்டு பேரும் பங்கு போட்டுக்கறீங்களா? ஹே ஹே ஹேய்//


கொய்யால டபுள் மீனிங்லையே பேசுது பாரு...ஏதோ நானும் அம்பது வயசு கிழவிகிட்டே மாட்னா மாதிரி...

MANO நாஞ்சில் மனோ said...

//திரு சிபி நல்லவருய்யா அவர போயி ஏன்யா இப்படி மனோ வேணாம்யா விட்ருய்யா..........!///


ஆமா ஆமா ஆனந்தவிகடனிலும் அப்பிடி சொல்லித்தான் ஆப்பு வச்சாங்களாம்...

MANO நாஞ்சில் மனோ said...

//திரு சிபி நல்லவருய்யா அவர போயி ஏன்யா இப்படி மனோ வேணாம்யா விட்ருய்யா..........!///


ஆமா ஆமா ஆனந்தவிகடனிலும் அப்பிடி சொல்லித்தான் ஆப்பு வச்சாங்களாம்...

MANO நாஞ்சில் மனோ said...

அரபி கஸ்டமர் வந்துட்டான் வெயிட்....

Speed Master said...

ஸ்ஸ்ஸ்ஸ்

முடியல


தேவையான ஆணி !! ? முன்னெச்சரிக்கைப் பதிவு

http://speedsays.blogspot.com/2011/04/blog-post_30.html

சசிகுமார் said...

பேட்டி எடுக்குற அளவுக்கு அவ்ளோ பெரிய ஆளா முத்துலட்சுமி இந்த மீடியாக்கள் ஏன் இவ்வளவு கேவலமாக போகிறது என தெரியல

Unknown said...

" MANO நாஞ்சில் மனோ said...
// சி.பி.செந்தில்குமார் said...
>>MANO நாஞ்சில் மனோ said...

//விக்கி உலகம் said...
வடை தின்ன வந்த மனோ பாவம்யா ஹிஹி!///


பாதி வடையாவது குடுய்யா...

adhaan எப்பவும் ரெண்டு பேரும் பங்கு போட்டுக்கறீங்களா?

கொய்யால டபுள் மீனிங்லையே பேசுது பாரு...ஏதோ நானும் அம்பது வயசு கிழவிகிட்டே மாட்னா மாதிரி..."

>>>>>>>>>>..

மனோ மொராக்கோ கிழவிகிட்ட உத வாங்குநீரே ஏன்யா மறைக்கிறீர்.........உண்மை சொல்லும் ஒய்......எப்ப பாரு வீரன் மாதிரியே நடிக்குற!

சி.பி.செந்தில்குமார் said...

>>MANO நாஞ்சில் மனோ said...

//திரு சிபி நல்லவருய்யா அவர போயி ஏன்யா இப்படி மனோ வேணாம்யா விட்ருய்யா..........!///


ஆமா ஆமா ஆனந்தவிகடனிலும் அப்பிடி சொல்லித்தான் ஆப்பு வச்சாங்களாம்...

இந்த கமெண்டை ஏன் 2 தடவை போட்டே?

சி.பி.செந்தில்குமார் said...

>> சசிகுமார் said...

பேட்டி எடுக்குற அளவுக்கு அவ்ளோ பெரிய ஆளா முத்துலட்சுமி இந்த மீடியாக்கள் ஏன் இவ்வளவு கேவலமாக போகிறது என தெரியல

வருங்கால எம் எல் ஏ.. ஹா ஹா சசி.. அவங்களுக்கு சென்சேஷனல் நியூஸ் மே 13 வரை இல்லை .என்ன பண்ணூவாங்க பாவம்?

MANO நாஞ்சில் மனோ said...

ஹே ஹே ஹே ஹே ஹே ஓட்டு போட்டுட்டு வாரேன்....

Unknown said...

சிபி அண்ணே சிபி அண்ணே இந்த நியுசு சென்சிடிவுன்னு சொல்றாங்களே.......
அப்படியா டவுட்டு!

MANO நாஞ்சில் மனோ said...

எலேய் தமிழ்மணம் எங்கே காணோம்...

MANO நாஞ்சில் மனோ said...

//மனோ மொராக்கோ கிழவிகிட்ட உத வாங்குநீரே ஏன்யா மறைக்கிறீர்.........உண்மை சொல்லும் ஒய்......எப்ப பாரு வீரன் மாதிரியே நடிக்குற!///

ஹி ஹி ஹி ஹி பப்ளிக் பப்ளிக்....

MANO நாஞ்சில் மனோ said...

//சி.பி.செந்தில்குமார் said...
>>MANO நாஞ்சில் மனோ said...

//திரு சிபி நல்லவருய்யா அவர போயி ஏன்யா இப்படி மனோ வேணாம்யா விட்ருய்யா..........!///


ஆமா ஆமா ஆனந்தவிகடனிலும் அப்பிடி சொல்லித்தான் ஆப்பு வச்சாங்களாம்...

இந்த கமெண்டை ஏன் 2 தடவை போ//

அது கூகுள் செய்த சதி.....

Anonymous said...

iam also present

Unknown said...

வீரப்பன் செய்ஞ்சது குத்தமா.........அப்படியே இருந்தாலும்...........
அவரோட மனைவிய கைது பண்ணது ஏன்?

MANO நாஞ்சில் மனோ said...

//விக்கி உலகம் said...
சிபி அண்ணே சிபி அண்ணே இந்த நியுசு சென்சிடிவுன்னு சொல்றாங்களே.......
அப்படியா டவுட்டு!///


யாருக்கு சென்சிடிவ்.....?

Unknown said...

கோர்ட்ட மதிக்கலன்னு சொன்னா............இப்ப இருக்க மத்திய அரசுக்கு தினமும் சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவிக்குதே அது ஏன்...........அப்படி தெரிவிச்சாலும் துடைச்சி போட்டுட்டு சுத்துராங்களே ஆள்ரவங்க அவங்களே ஏன் கைது செய்ய தயங்குது கோர்ட்டு!

கவிதை வீதி... // சௌந்தர் // said...
This comment has been removed by the author.
சி.பி.செந்தில்குமார் said...

>>MANO நாஞ்சில் மனோ said...

//விக்கி உலகம் said...
சிபி அண்ணே சிபி அண்ணே இந்த நியுசு சென்சிடிவுன்னு சொல்றாங்களே.......
அப்படியா டவுட்டு!///


யாருக்கு சென்சிடிவ்.....?

yaarukkum யாருக்கும் இல்லை விக்கி பிரச்சனை கிளப்பறான் ராஸ்கல்

சி.பி.செந்தில்குமார் said...

>> விக்கி உலகம் said...

கோர்ட்ட மதிக்கலன்னு சொன்னா............இப்ப இருக்க மத்திய அரசுக்கு தினமும் சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவிக்குதே அது ஏன்...........அப்படி தெரிவிச்சாலும் துடைச்சி போட்டுட்டு சுத்துராங்களே ஆள்ரவங்க அவங்களே ஏன் கைது செய்ய தயங்குது கோர்ட்டு!

கவர்னர் ஆட்சி வந்தா எல்லாருக்கும் டப்பா டான்ஸ் ஆடும்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

///
கும்மியை படிக்க வந்தேன்..
படித்தாயிற்று
கிளம்பிவிட்டேன்..

சுய நலமாக இருப்பவர்கள்
அரசியல்வாதி..

உண்மைதாங்க...////////

Unknown said...

" சி.பி.செந்தில்குமார் said...
>> விக்கி உலகம் said...

கோர்ட்ட மதிக்கலன்னு சொன்னா............இப்ப இருக்க மத்திய அரசுக்கு தினமும் சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவிக்குதே அது ஏன்...........அப்படி தெரிவிச்சாலும் துடைச்சி போட்டுட்டு சுத்துராங்களே ஆள்ரவங்க அவங்களே ஏன் கைது செய்ய தயங்குது கோர்ட்டு!

கவர்னர் ஆட்சி வந்தா எல்லாருக்கும் டப்பா டான்ஸ் ஆடும்"

>>>>>>>>>>>

ஸ் ஸ் முடியல......இது விவாத மேடைன்னு சொன்னா விவாதிக்கலாம்.........

ஏன்னா இங்க கவர்னர முடிவு பண்றதே......மத்திய ஆட்சி தான் கோர்ட் இல்ல!

Unknown said...

இந்தக் காமெடிக் கும்மிய விடமாட்டீங்க போல

ராஜி said...

முத்துலட்சுமி பெரிய தியாகி, அவங்க சிறைக்கு போய் வந்ததை ஜீவி பேட்டி எடுத்து போடுது. அதை நீங்களும் போடனுமா? இதுவரை விகடனில் வந்ததை பதிவா போட்டதை ஏற்றுக்கொள்ள முடிந்த என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியலை. என்னைக்கேட்டால் இது தேவை இல்லாத பதிவு சிபி

ராஜி said...

தமிழருவி பேட்டி, திமுக, அதிமுக வை தாக்கி வந்ததை காமெடி கும்மியா போட்டீங்க அதுல ஒரு அர்த்தமிருந்தது. அவங்க பேட்டில அப்பிடி என்ன முக்கியமான விஷயமிருக்குனு நீங்க இதை ஒரு பதிவா போட்டீங்க. பதில் சொல்லுங்க

சி.பி.செந்தில்குமார் said...

ராஜி said...

தமிழருவி பேட்டி, திமுக, அதிமுக வை தாக்கி வந்ததை காமெடி கும்மியா போட்டீங்க அதுல ஒரு அர்த்தமிருந்தது. அவங்க பேட்டில அப்பிடி என்ன முக்கியமான விஷயமிருக்குனு நீங்க இதை ஒரு பதிவா போட்டீங்க. பதில் சொல்லுங்க


கேள்வி கேக்க்றது ரொம்ப ஈஸி பதில் சொல்றது ரொம்ப கஷ்டம் ஹி ஹி

ராஜி said...

இது உங்கள் தளம். இதில் என்ன பதிவிடலாம் என்ன பதிவிடக்கூடாதுனு தீர்மானிக்கும் முழு உரிமை இருக்கு. ஆனால் உங்கள் எல்லா பதிவிலும் ஏதோ ஒரு அர்த்தமிருக்கும். ஆனால் இதில் என்ன இருக்குனு எனக்கு விளக்குங்களேன் ப்ளீஸ்

Unknown said...

"இது உங்கள் தளம். இதில் என்ன பதிவிடலாம் என்ன பதிவிடக்கூடாதுனு தீர்மானிக்கும் முழு உரிமை இருக்கு. ஆனால் உங்கள் எல்லா பதிவிலும் ஏதோ ஒரு அர்த்தமிருக்கும். ஆனால் இதில் என்ன இருக்குனு எனக்கு விளக்குங்களேன் ப்ளீஸ்"

>>>>>>>>>>

சகோ இது ஒரு பேட்டியின் பதிவு இதுல நீங்க என்ன எதிர்பாகுரீங்கன்னு சொல்லுங்க............

அர்த்தம் என்றால்.....இது ஒரு செய்தி அத இவரு தொகுத்து உங்களுக்கு வழங்கி இருக்காரு அவ்ளோதான்!

ராஜி said...

சகோ விக்கி இந்த பேட்டியை தேவையே இல்லாமல் ஜீவி எடுத்திருக்கு. அதை சிபி ஏன் முக்கியத்துவம் கொடுத்து போட்டிருக்காருனு ஒரு தோழின்ற உரிமையில கேட்கிறேன் மற்றபடி பஞ்சாயத்தைலாம் கூட்டுற எண்ணமில்லை. உடனே சப்போட்டுக்கு வந்துட்டீங்க. நல்ல நண்பன்தான் நீங்க

சி.பி.செந்தில்குமார் said...

raaஜி said...

முத்துலட்சுமி பெரிய தியாகி, அவங்க சிறைக்கு போய் வந்ததை ஜீவி பேட்டி எடுத்து போடுது. அதை நீங்களும் போடனுமா? இதுவரை விகடனில் வந்ததை பதிவா போட்டதை ஏற்றுக்கொள்ள முடிந்த என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியலை. என்னைக்கேட்டால் இது தேவை இல்லாத பதிவு சிபி

டைட்டிலை நல்லா பாருங்க.. என் கேள்வியும் அதுதான்.. அவர் பேட்டி தேவையா? என கேட்டு காமெடி கும்மி அடித்துள்ளேன்..

Unknown said...

"சகோ விக்கி இந்த பேட்டியை தேவையே இல்லாமல் ஜீவி எடுத்திருக்கு. அதை சிபி ஏன் முக்கியத்துவம் கொடுத்து போட்டிருக்காருனு ஒரு தோழின்ற உரிமையில கேட்கிறேன் மற்றபடி பஞ்சாயத்தைலாம் கூட்டுற எண்ணமில்லை. உடனே சப்போட்டுக்கு வந்துட்டீங்க. நல்ல நண்பன்தான் நீங்க"

>>>>>>>>>

சப்போட்டு அல்ல...இதில் எனக்கும் வருத்தம் தான்.......ஆனா பின்புலம் இல்லாத ஒரு பெண்ணை துரத்துவதை கண்டிக்கிறேன்!

ராஜி said...

என்ன சிபி சார் சப்போர்ட்டுக்கு ஆள் தேத்தீட்டீங்க போல. பார்த்து அப்புறம் உங்க நண்பருக்கு அடிபடப்போகுது. அவரை அப்பாலிக்கா போகச்சொல்லுங்க.

Unknown said...

தந்தையின் தவறான முடிவால்..........தாய் மற்றும் சேய் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்......
இதற்க்கு ஜாதிச்சாயம் பூசிக்கொண்டு இருந்தவர்கள் இன்று அந்த பெண்மணி பின் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை!

Unknown said...

"ராஜி said...
என்ன சிபி சார் சப்போர்ட்டுக்கு ஆள் தேத்தீட்டீங்க போல. பார்த்து அப்புறம் உங்க நண்பருக்கு அடிபடப்போகுது. அவரை அப்பாலிக்கா போகச்சொல்லுங்க"

>>>>>>>>>>>

என்னங்க பெரிய வார்த்த எல்லாம் சொல்றீங்க.....சகோ!

ராஜி said...

சகோ விக்கி முத்துலட்சுமிக்காவது மீடியா பலமா இருக்கு. ஆனால் வெளிச்சத்துக்கு வராத பல பெண்கள் மீதான வன்கொடுமை நிறைய இருக்கு. அதே கோவை மாவட்டத்துல என் தோழிக்கு நேர்ந்த அவலத்தை எழுதச்சொல்லுங்க உங்க நண்பரை, முடியுமா அவரால

சி.பி.செந்தில்குமார் said...

ராஜி said...

சகோ விக்கி முத்துலட்சுமிக்காவது மீடியா பலமா இருக்கு. ஆனால் வெளிச்சத்துக்கு வராத பல பெண்கள் மீதான வன்கொடுமை நிறைய இருக்கு. அதே கோவை மாவட்டத்துல என் தோழிக்கு நேர்ந்த அவலத்தை எழுதச்சொல்லுங்க உங்க நண்பரை, முடியுமா அவரால

எழுதிட்டா?

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

தந்தையின் தவறான முடிவால்..........தாய் மற்றும் சேய் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்......
இதற்க்கு ஜாதிச்சாயம் பூசிக்கொண்டு இருந்தவர்கள் இன்று அந்த பெண்மணி பின் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை!

டாக்டர் ராம்தாஸிடம் நன்றி உணர்ச்சியை, கொடுத்த வாக்கை காப்பாற்றுவார் என எதிர்பார்க்கலாமா?

ராஜி said...

சண்டை எனக்கும் அவருக்கும். இடையில ஏன் வந்தீங்க. சண்டையில உடையாத மண்டை ஏது சகோ?

ராஜ நடராஜன் said...

இவங்க எப்படியோ சிறையிலிருந்து தப்பிச்சிட்டாங்க!நளினிக்கு நல்வாழ்வு எப்போ?

சி.பி.செந்தில்குமார் said...

@ராஜி


கோவை கொலை கேஸ் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் பலமானதும் அந்த க்ரைம் தொடர் எழுதுவேன்.அதை படமாகவும் எடுப்பேன். அது பதிவுலகில் புதிய அலையை உருவாக்கும். எழுதி வெச்சுக்குங்க

சி.பி.செந்தில்குமார் said...

>>ராஜி said...

சண்டை எனக்கும் அவருக்கும். இடையில ஏன் வந்தீங்க. சண்டையில உடையாத மண்டை ஏது சகோ?

போர் நடக்கும்போது வேடிக்கை பார்ப்பது நண்பன் பழக்கம் அல்ல.போரை தடுக்கனும். அல்லது கூட போய் போராடனும். அதான் தமிழன் பண்பு

Unknown said...

" ராஜி said...
சகோ விக்கி முத்துலட்சுமிக்காவது மீடியா பலமா இருக்கு. ஆனால் வெளிச்சத்துக்கு வராத பல பெண்கள் மீதான வன்கொடுமை நிறைய இருக்கு. அதே கோவை மாவட்டத்துல என் தோழிக்கு நேர்ந்த அவலத்தை எழுதச்சொல்லுங்க உங்க நண்பரை, முடியுமா அவரால"

>>>>>>>>

சகோ பிரச்சனைக்கு முடிவு என்னன்னு பாக்கணும்.........அது மக்களின் கையால் மட்டுமே முடியும் என்பது என் கருத்து..........இதில் துட்டு வாங்கும் மீடியா தனிக்கதை!

ராஜி said...

சரிங்க சிபி சார் டீடெய்ல்ஸ் நான் தரேன். நீங்க போடுங்க. ஆனால், இந்த கேள்வியை நான் சகோ விக்கிக்கிட்டதானே கேட்டேன். இதுக்கு பதிலை விக்கியை சொல்ல சொல்லுங்க. அவர்தான நண்பனுக்கு பரிஞ்சுக்கிட்டு வந்தார் எங்க அவர்? தைரியமா வரச்சொல்லுங்க போர்நிறுத்த ஒப்பந்ததம் போட்டாச்சுனு சொல்லுங்க

Unknown said...

சகோ போர் என்பதை வெறுப்பவன் நான்........அன்பு என்பதை மட்டுமே நினைக்கும் சாதாரண முன்னால் சிப்பாய் ஹிஹி!

ராஜி said...

சகோ விக்கி நான் அலைப்பேசியினால் கமெண்ட் பண்றேன் அதனால் உங்க பதிலை காபி பேஸ்ட் பண்ண முடியலை. எந்த மீடியா வந்தாலும் எத்தனை கோடி குடுத்தாலும் ஒண்ணும் பண்ணமுடியாது இனி. ஏன்னா என் தோழி இப்ப எங்களுடன் உயிருடனில்லை. என் தோழிக்கு நேர்ந்தது யாருக்கும் நேரக்கூடாதுனு தான் பதிவிடமுடியுமானு கேட்குறேன்

Unknown said...

"ராஜி said...
சகோ விக்கி நான் அலைப்பேசியினால் கமெண்ட் பண்றேன் அதனால் உங்க பதிலை காபி பேஸ்ட் பண்ண முடியலை. எந்த மீடியா வந்தாலும் எத்தனை கோடி குடுத்தாலும் ஒண்ணும் பண்ணமுடியாது இனி. ஏன்னா என் தோழி இப்ப எங்களுடன் உயிருடனில்லை. என் தோழிக்கு நேர்ந்தது யாருக்கும் நேரக்கூடாதுனு தான் பதிவிடமுடியுமானு கேட்குறேன்"

>>>>>>>>>>>

தாராளமா சகோ
உங்களுக்கு எங்களாலான உதவிகளை செய்யுறோம்
ஆதாரம் கொடுங்க!

ராஜி said...

சகோ விக்கி இதுவும் அன்பு போர்தான் சகோ விக்கிக்கும், சகோ ராஜிக்கும், தோழர் சிபிக்குமிடையில் நடக்குது (ஸ் அப்பா முடியலை. எப்படிலாம் சமாளிக்க வேண்டியிருக்கு)

Unknown said...

"ராஜி said...
சகோ விக்கி இதுவும் அன்பு போர்தான் சகோ விக்கிக்கும், சகோ ராஜிக்கும், தோழர் சிபிக்குமிடையில் நடக்குது (ஸ் அப்பா முடியலை. எப்படிலாம் சமாளிக்க வேண்டியிருக்கு)

>>>>>>>>>>>>>>

விடுங்க விடுங்க தீப்பொறி திருமுகம் நான்தான் ஹிஹி!

காங்கேயம் P.நந்தகுமார் said...

வீரப்பன் மனைவி முத்துலட்சுமியை பேட்டி எடுத்து ஜுவி போட்டியிருக்கிறது. இதைத்தான் அருமையாக சொல்லுவாங்க பொழப்பத்த நாசுவன் பொண்டாட்டி தலையை சரைச்சானாம். தேர்தல் முடிவு வந்தால் ஜுவியின் சாயம் வெளுக்கும்.

உணவு உலகம் said...

/MANO நாஞ்சில் மனோ said...
சத்தியமா ஏதோ உள்குத்து இருக்கு...//
இருக்குமே சி.பி. பதிவுன்னாலே!

உணவு உலகம் said...

//Blogger ராஜி said...
இது உங்கள் தளம். இதில் என்ன பதிவிடலாம் என்ன பதிவிடக்கூடாதுனு தீர்மானிக்கும் முழு உரிமை இருக்கு. ஆனால் உங்கள் எல்லா பதிவிலும் ஏதோ ஒரு அர்த்தமிருக்கும். ஆனால் இதில் என்ன இருக்குனு எனக்கு விளக்குங்களேன் ப்ளீஸ்//
அதானே! நம்ம சி.பி. விசயம் இல்லாம எழுதமாட்டாரே!

உண்மைத்தமிழன் said...

சிபி..

உங்களுடைய எந்த காமெடிகளுக்கும் நான் பின்னூட்டமிட்டதில்லை..!

ஆனால் இதனையும் காமெடியாக்கியது சகிக்கவில்லை. ஏற்றுக் கொள்ள முடியாதது..!

வீரப்பனை நீங்கள் வெறுக்கலாம். ஆனால் இவரை ஏன்..?

இவர் மீது போட்ட அனைத்து வழக்குகளுக்கும் ஆதாரமில்லை என்று சொல்லி கர்நாடக கோர்ட்டுகள் தீர்ப்பு சொல்லி அனுப்பி வைத்திருக்கின்றன.. அவர் சிறையில் இருந்த 3 ஆண்டுகள் எந்தக் கணக்கு..? வீரப்பனின் மனைவியாக இருந்ததற்காக அவர் பட்ட வேதனைகளும், சித்ரவதைகளும் நிறைய..! பாவம் அவர்.. அவரைப் போய் ஏன் இப்படி பேசுகிறீர்கள். உங்கள் மீது முதல் முறையாக வருத்தம் கொள்கிறேன்..!

இது பற்றிய சீரியஸ் விஷயங்களை முழுமையாகத் தெரிந்து கொண்டு பின்பு எழுதுவது நல்லது.

சி.பி.செந்தில்குமார் said...

ஓக்கே அண்ணே.. இனி இதுபோல் நடக்காமல் கவனமா இருக்கேன். கருத்துக்கு நன்றி அண்னே

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
Anonymous said...

The interview is needed. It tells us how the world treats the dependents of a criminal, like his children and wife; and how they view the world.

Mrs Muthulakshmi Veerappan has also told the JV that when she went to jail in Karnataka, she had the negative view of all Kannadigas that they were cruel people. But when she came out she changed it to positive view. They all treated her well and never failed to show her love on the grounds she was the wife of the criminal.

For them, she is not the criminal, only her husband. For Tamilians, she is the criminal.

She also told the JV, that as compared to Tamils, Kannadigas are better people. Oh, even the kannadigar naxalaites ! That surprised me pleasantly. Teaching them kannada, helping her draft her petiion in kannadiga, giving her all moral support !!

The comments here prove her point that Tamils are a worse lot.

Thank you for giving importance to the interview.

Keep it up. It is a social service to teach the wooden minds the right lessons of life !