Thursday, April 21, 2011

12 ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் - பிரபல ஜோதிடர் படைப்பு


ரந்த மனம் கொண்டவர் நீங்கள். குரு பகவான், 9.5.2011 முதல் உங்கள் ராசிக்குள் நுழைந்து, 16.5.2012 வரை ஜென்ம குருவாக அமர்கிறார். அவர் உங்களின் 5-ஆம் வீட்டை தனது அருட்பார்வையால் பார்ப்பதால், குழந்தை பாக்கியம் உண்டாகும். பிள்ளைகள் பற்றிய கவலைகள் விலகும். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.எனினும் ஜென்மகுரு என்பதால், உடல்நிலை பாதிக்கும். ஹீமோகுளோபின், கால்சியம் சத்துக்குறைபாடு ஏற்படலாம். கணவன்- மனைவிக்குள் வீண் சந்தேகம், சச்சரவு வரக்கூடும். ஆனாலும் குரு உங்களின் 7-ஆம் வீட்டை பார்ப்பதால் கடுமை குறையும். நல்லவிதமாக திருமணம் முடியும். சொத்து விஷயங்கள் சாதகமாகும். குடும்பத்துடன் வெளிமாநில புண்ணிய க்ஷேத்திரங்களுக்குச் சென்று வருவீர்கள்.அசைவ, கார உணவுகளைத் தவிர்க்கவும்.

தண்ணீரைக் காய்ச்சி குடிக்கவும். திடீர் பயணங்களால் கையிருப்பு கரையும். குரு பகவான் 7-ஆம் வீட்டையும் பார்ப்பதால் மனைவி வழியில் ஓரளவு மகிழ்ச்சியுண்டு. வீட்டில், தடைப்பட்டிருந்த சுப காரியங்கள் கோலாகலமாக நடக்கும். சித்தர்களின் ஆசி கிட்டும்.

வழக்குகளில் பின்னடைவு விலகும். பாக்கிய வீடான 9-ல் குருவின் பார்வை விழுவதால், எதிர்பார்த்த பணம் தக்க நேரத்தில் வந்துசேரும். தந்தைவழி சொந்தங்களால் ஆதாயம் உண்டு. அரசியல்வாதிகள் கோஷ்டிப் பூசலில் சிக்க வேண்டாம். திடீரென புதிய பதவியில் அமர்த் தப்படுவீர்கள். அக்கம்பக்கத்தாரிடம் குடும்ப விஷயங்களைச் சொல்லவேண்டாம்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 

9.5.2011 முதல் 21.7.2011 வரை மற்றும் 11.10.2011 முதல் 1.3.2012 வரையிலும் குரு பகவான் அசுவினி நட்சத்திரத்தில் செல்வ தால், அசுவினி நட்சத்திரக்காரர்கள் மேற்கண்ட நாட்களில் கவனமாக இருக்கவேண்டும். பண இழப்பு, ஏமாற்றம், நெஞ்சு வலி, செரிமானக் கோளாறு, வீண்பழி, வி.ஐ.பி-களுடன் கருத்து மோதல், குடும்பத்தில் எதிர்ப்புகள் வந்து நீங்கும்.

22.7.2011 முதல் 10.10.2011 வரை மற்றும் 2.3.2012 முதல் 1.5.2012 வரை குரு பகவான் பரணி நட்சத்திரத்தில் செல்கிறார். இந்த நட்சத்திரக்காரர்களுக்கு மறைமுக எதிர்ப்பு, மரியாதைக் குறைவான சம்பவங்கள் நிகழலாம். காய்ச்சல், சளித் தொந்தரவு, சிறு விபத்துகள், வீண் அலைச்சல், வரக்கூடும். 2.5.2012 முதல் 16.5.2012 வரை குரு பகவான் கார்த்திகை 1-ஆம் பாதத்தில் செல்வதால், அந்த பாதத்தில் பிறந்தவர்களுக்கு சோர்வு, மன இறுக்கம், ஏமாற்றம் வந்து போகும்.

வியாபாரத்தில் சந்தை நுணுக்கங்களை அறிந்து, முதலீடு செய்யுங்கள். சிலரது ஆலோசனையால் நஷ்டம் ஏற்படலாம். வாடிக்கை யாளர்களிடம் கனிவு தேவை.
ஜூன், பிப்ரவரி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். பக்கத்துக் கடைக்காரர் களைப் பகைக்கவேண்டாம். ஸ்டேஷனரி, உணவு, கெமிக்கல், ஏற்றுமதி-இறக்குமதி வகைகளால் ஆதாயம் அதிகரிக்கும். பங்குதாரர்களிடம் சலசலப்புகள் இருந்தாலும் பெரிய பாதிப்புகள் இருக்காது.

உத்தியோகத்தில் போராட்டங்கள் ஓயும். சவால்களைச் சமாளிக்கும் சக்தி கிடைக்கும். கௌரவப் பதவிகளால், ஓய்வெடுக்க முடியாத நிலை உருவாகும். சக ஊழியர்கள் உங்களைக் குறை கூறினாலும் பொறுத்துக் கொள்ளுங்கள்.
மேலதிகாரிகள் மதிப்பார்கள். தேர்வில் வெற்றி பெறுவதன் மூலம் பதவி- சம்பளம் உயரும். ஜூன், பிப்ரவரி மாதங்களில் புதிய நிறுவனங்களிலிருந்து வாய்ப்புகள் வரும். கணினித் துறையினருக்கு சம்பளம் உயரும்.

கன்னிப் பெண்கள், எவரையும் எளிதில் நம்பிவிட வேண்டாம். பெற்றோர் ஆலோசனைப் படி செயல்படவும். மாதவிடாய் கோளாறு, மன உளைச்சல் வந்துபோகும். தடைப்பட்ட கல்வியை முழுமையாக முடிக்கப்பாருங்கள். வருட மத்தியில் திருமணம் கூடி வரும்.

மாணவர்களே, நேரத்தை வீணடிக்காமல் பாடத்தில் கவனம் செலுத்துங்கள். விளையாட் டில் பதக்கம் உண்டு. கலைஞர்கள், விமர்சனங் கள் வந்தாலும் அஞ்சவேண்டாம்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, உங்கள் உடலையும், மனதையும் திடப் படுத்துவதுடன், பிரச்னைகளை எதிர்கொள்ளும் மனப் பக்குவத்தையும் ஓரளவு பண வரவையும் தருவதாக அமையும்.ப்போதும் சிரித்த முகத்துடன் திகழ்பவர் நீங்கள். குரு பகவான் 9.5.2011 முதல் 16.5.2012 வரை உங்களின் விரய வீடான 12-ஆம் வீட்டில் அமர்கிறார். செலவுகளைச் சுருக்குங்கள்.

அஷ்டமாதிபதியான குரு 12-ல் மறைவதால் எதிர்பாராத முன்னேற்றமும், எதிர்பார்த்த விஷயத்தில் ஏமாற்றமும் ஏற்படும். புதிய நண்பர்கள் கிடைப்பர். குடும்பத்தாரிடம் விட்டுக்கொடுத்துப் போகவும். உங்கள் விஷயத்தில் மூன்றாம் நபர் தலையிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

சில காரியங்கள் இழுபறியாகி முடியும். முக்கிய பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். புண்ணிய ஸ்தலங் களுக்குச் சென்று வருவீர்கள். குரு உங்கள் 4-ஆம் வீட்டைப் பார்ப்பதால், தாயாருடனான மனஸ்தாபம் நீங்கும். தாய்வழி உறவுகளால் உதவியுண்டு. பூர்வீகச் சொத்து வந்துசேரும். வீடு வாங்கும் திட்டம் நிறைவேறும்.

குரு 6-ஆம் வீட்டைப் பார்ப்பதால் மறைமுக எதிரிகளைக் கண்டறிவீர்கள். சிலநேரம், எதிரிகளாலும் ஆதாயம் கிடைக்கும். இழுபறியான வழக்குகள், சாதகமாகும்.

குரு பகவான், 8-ஆம் வீட்டைப் பார்ப்ப தால், அயல்நாட்டுப் பயணங்கள் இருக்கும். அரசு விஷயங்கள் சுமுகமாக முடியும். அரசியல் வாதிகள், தலைமையை விமர்சிக்கவோ, புதிய பதவிக்கு ஆசைப்படவோ வேண்டாம்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 

9.5.2011 - 21.7.2011 வரையிலும்; 11.10.2011 - 1.3.2012 வரையிலும் குரு அசுவினி நட்சத்திரத்தில் செல்கிறார். இந்த காலகட்டத்தில், உங்களின் பலம்- பலவீனத்தை உணர்வீர்கள். மருத்துவச் செலவுகள், திடீர்ப் பயணங்கள் உண்டு. மகான்களின் நட்பு கிடைக்கும். குலதெய்வப் பிரார்த்தனைகளை முடிப்பீர்கள்.
22.7.2011 - 10.10.2011 வரையிலும்; 2.3.2012 - 1.5.2012 வரையிலும் உங்கள் ராசி நாதனான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் செல்வதால் திடீர் பண வரவு உண்டு. கௌரவப் பதவிகள் தேடி வரும். தடைப்பட்ட கல்யாணம் முடியும்.

2.5.2012 - 16.5.2012 வரை குரு உங்கள் சுகாதிபதியான சூரியனின் நட்சத்திரமான கார்த்திகை 1-ஆம் பாதத்தில் செல்வதால், அரசால் ஆதாயம் அடைவீர்கள். பெற்றோருக்கு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். வீட்டைச் சீரமைப்பீர்கள்.

வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் நிகழ்த்து வீர்கள். பாக்கிகள் வசூலாகும். கடனுதவி பெற்று புதிய முதலீடுகள் செய்வீர்கள். பணியாட்களிடம் தொழில் ரகசியங்களை பகிர்ந்துகொள்ள வேண்டாம். கமிஷன், ஏஜென்சி, மருந்து மற்றும் உர வகைகளால் லாபம் உண்டு. இடைத்தரகர்களை நம்பி புது வியாபாரத்தில் நுழைய வேண்டாம்.

ஜூன் 15 முதல் ஆகஸ்டு 15 வரையிலும் அதிக லாபம் கிடைக்கும். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத் தாகும். பங்குதாரர்களை அனுசரித்துச் செல்லவும்.

உத்தியோகத்தில் வேலை அதிகரிக்கும். மூத்த அதிகாரிகளிடம் அதிக நெருக்கமும் வேண்டாம், பகையும் வேண்டாம். வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். செப்டம்பர், மார்ச் மாதங்களில் பதவி உயர்வுக்கு உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும். முக்கிய கோப்புகளில் கையெழுத்திடுமுன் கவனம் தேவை.

கணினித் துறையினருக்கு வேலைப்பளு அதிகரிக்கும். கன்னிப் பெண்கள், உயர் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். எந்தச் சூழலிலும் பெற்றோரின் ஆலோசனையை அலட்சியப்படுத்தாதீர்கள். வருட பிற்பகுதியில் கல்யாணம் நடக்கும்.

மாணவர்கள், படிப்பில் அலட்சியத்துடன் நடந்துகொள்ள வேண்டாம். அன்றைய பாடங்களை அன்றே படித்துவிடுவது நல்லது. விளையாட்டுப் போட்டிகளிலும் வெற்றிவாகை சூடுவீர்கள்.

கலைஞர்களே! கிசுகிசுக்கள், வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். என்றாலும் மூத்த கலைஞர்களைப் பற்றி விமர்சித்துப் பேசவேண்டாம். உங்கள் படைப்புகளை அனைவரும் பாராட்டுவார்கள்.


மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, நாலாவிதத்திலும் உங்களுக்கு அனுபவ அறிவைத் தருவதுடன், உங்களின் வாழ்வில் படிப்படியாக முன்னேற்றத்தையும் தருவதாக அமையும்.


ழைய வாழ்க்கையை மறக்காதவர் நீங்கள். குரு பகவான் 9.5.2011 முதல் 16.5.2012 வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டுக்குள் நீடிப்பதால், தொட்டது துலங்கும். உற்சாகம் கூடும். வெளிச்சத்துக்கு வருவீர்கள். பழைய கடன் பிரச்னைகள் தீரும். வருமானம் உயரும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வீட்டில் சந்தோஷம் பெருகும்.

கணவன்-மனைவிக்கு இடையே அந்நி யோன்யம் அதிகரிக்கும். சகோதரியின் தடைப் பட்டிருந்த திருமணம் சிறப்பாக நடந்தேறும். ஷேர் மூலம் பணம் வரும். தங்க நகைகள் சேரும். உங்களை அலட்சியப்படுத்திய உறவினர்கள், இனி வலிய வந்து உறவாடுவார்கள். கல்யாணம் முதலான சுப காரியங்களில் முதல் மரியாதை கிடைக்கும்.


உங்கள் ராசிக்கு 3-ஆம் வீட்டை குரு பார்ப்பதால் இளைய சகோதர வகையில் மகிழ்ச்சி உண்டு. கடினமான வேலைகளையும் மிக எளிதாகச் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த வகையில் பணம் வந்து சேரும். அடகிலிருக்கும் பொருட்களை மீட்பீர்கள். அடிமனதில் இருந்த பய உணர்வு நீங்கும்.

பணப் பற்றாக்குறை காரணமாக தடைப்பட்டுப் போன வீடு கட்டும் பணிகளை, முழுமையாக முடிப்பதற்கு வங்கிக் கடனுதவி கிடைக்கும். வி.ஐ.பி-கள் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். வெளிவட்டாரத்தில், இதுவரை உங்களை தாழ்த்திப் பேசியவர்களும் இனி உங்கள் புகழ் பாடுவார்கள். குரு 5-ஆம் வீட்டைப் பார்ப்பதால், குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்.

தடைப்பட்டிருந்த பிள்ளைகளின் திருமணம் இனிதே நடந்தேறும். குரு உங்களின் 7-ஆம் வீட்டைப் பார்ப்பதால் மனைவி மற்றும் மனைவிவழி உறவுகளுடனான மனஸ்தாபம் நீங்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகளில், நல்ல தீர்வு கிடைக்கும். கூட்டாக தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டு. அரசியல்வாதிகள் இழந்தசெல்வாக்கை மீண்டும் பெறுவர்; தலைமை, உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்கும். சமூகத்தில் மதிப்பு கூடும்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 

9.5.2011 - 21.7.2011 வரையிலும்; 11.10.2011 - 1.3.2012 வரையிலும் குரு பகவான் அசுவினி நட்சத்திரத்தில் செல்வதால், பணபலம் உயரும். புதியவர்களின் நட்பால் வாழ்க்கையில் திடீர் மாற்றம் உண்டாகும்.
22.7.2011 - 10.10.2011 வரையிலும்; 2.3.2012 - 1.5.2012 வரையிலும் உங்கள் பூர்வ புண்ணியாதிபதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் குரு செல்வதால், குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வீகச் சொத்து சிக்கல்கள் தீரும். வழக்கில் வெற்றி உண்டு.

2.5.2012 முதல் 16.5.2012 வரை குரு பகவான் கார்த்திகை 1-ஆம் பாதத்தில் செல்வதால், தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். செல்வாக்கு கூடும். சகோதர வகையில் நன்மைகள் உண்டு.

வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்வீர்கள். தேங்கிய சரக்குகளும் விற்றுத் தீரும். அனுபவசாலிகளை வேலைக்கு அமர்த்துவீர்கள். மே, மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பாக்கிகள் வசூலாகும். புது சலுகைகளை அறிவிப்பீர்கள். மருந்து, உணவு, கமிஷன் மற்றும் இரும்பு வகைகளால் லாபம் அடைவீர்கள். பங்குதாரர்களிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் மறையும்.

உத்தியோகத்தில், இழந்துபோன சலுகை களையும் மதிப்பையும் மீண்டும் பெறுவீர்கள். வேலை குறையும். தலைமைப் பொறுப்புகள் தேடி வரும். உங்களை மனச் சங்கடப்படுத்திய மேலதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப்படுவார். பதவி- சம்பள உயர்வுகள் ஜூன், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கிடைக்கும். கணினித் துறையினருக்கு வெளிநாட்டு நிறுவனங் களிலிருந்து, அழைப்பு வரும்.

கன்னிப் பெண்களுக்கு, மனதுக்கினிய கணவன் வாய்ப்பார். தடைப்பட்ட கல்வியில் வெற்றியுண்டு. மாணவர்களுக்கு, படிப்பிலிருந்த மந்தநிலை மாறும். எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் உயர்கல்வி தொடர இடம் கிடைக்கும். விளையாட்டில் பரிசு - பாராட்டு உண்டு. கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். அவர்களைப் பற்றிய கிசுகிசுக்களும் வீண் வதந்திகளும் ஓயும்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, அணைக்கட்டிலிருந்து வெளியேறும் நீரைப் போல, உங்களை விரைவாக செயல்பட வைத்து, வெற்றிகள் பலவற்றை அள்ளித் தருவதாக அமையும்.ளகிய மனம் கொண்டவர் நீங்கள். குரு பகவான் 9.5.2011 முதல் 16.5.2012 வரையிலும் உங்கள் ராசிக்கு பத்தாவது வீட்டுக்குள்ளேயே அமர்ந்திருப்பதால், எதிலும் இழுபறி நிலை உண்டாகும். வீண் விவாதங் களை தவிர்ப்பது நல்லது. எனினும் உங்கள் ராசிக்கு 2-ஆம் வீடான வாக்கு ஸ்தானத்தை குரு பார்ப்பதால், பேச்சாலேயே பல காரியங் களைச் சாதிப்பீர்கள்.

வர வேண்டிய பணம் வந்துசேரும். சொத்துப் பிரச்னைகளில் நல்ல தீர்வு ஏற்படும். குடும்பத்தில் நிம்மதி பெருகும். உங்கள் ராசிக்கு 4-ஆம் வீட்டை குரு பார்ப்பதால், உங்கள் தாயாரின் வருத்த புலம்பல்கள் இனி இருக்காது. அவருடைய உடல்நலன் மேம்படும். தாய்மாமன் வகையிலும் மனக்கசப்புகள் தீரும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். வசதியான வீட்டுக்கு குடிபெயர்வீர்கள். சிலருக்கு வீட்டு லோன் கிடைக்கும். 6-ஆம் வீட்டை குரு பார்ப்பதால் பழைய கடனில் ஒரு பகுதியை அடைக்க வழி பிறக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களால் உதவி கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு, சிறு சிறு குழப்பங்கள், டென்ஷன் வந்துபோகும். தலைமையின் பார்வை உங்கள் மீது விழும். எவருக்காகவும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். உத்தியோக ஸ்தானமான பத்தாம் வீட்டில் குரு நிற்பதால் வேலைச்சுமை வாட்டியெடுக்கும். வீண்பழி, மன உளைச்சல் வரக்கூடும். சேமிப்புகள் கரையக்கூடும்.

பிள்ளைகளின் பொறுப்பில்லாத தன்மையை நினைத்து வருந்துவீர்கள். அவர்களது போக்கிலேயே சென்று, திருத்தப் பாருங்கள். அவர்களது உயர்கல்விக்காக அதிகம் போராட வேண்டியிருக்கும். சில நேரங்களில் ஒத்துழைப்பு தரும் சகோதரர்கள், பல தருணங்களில் தொந்தரவு தருவார்கள். உங்களுடைய புகழைக் கெடுக்க சிலர் முயற்சிப்பார்கள். வதந்திகள், விமர்சனங்களைக் கண்டு அஞ்ச வேண்டாம்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 

9.5.2011 - 21.7.2011 வரையிலும்; 11.10.2011 - 1.3.2012 வரையிலும் குரு பகவான் அசுவினி நட்சத்திரத்தில் செல்வதால், திடீர் செலவுகள் அதிகரிக்கும்; பணவரவும் உண்டு. பிரபலங்களின் நட்பு கிடைக்கும்.

22.7.2011 - 10.10.2011 வரையிலும்; 2.3.2012 - 1.5.2012 வரையிலும் குரு பகவான் பரணி நட்சத்திரத்தில் செல்வதால், இந்த காலகட்டத்தில் மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு. மறைமுக எதிரிகளைக் கண்டறிவீர்கள். சொத்து வாங்குவதிலும் விற்பதிலும் கவனம் தேவை.

2.5.2012 முதல் 16.5.2012 வரை குரு பகவான் கார்த்திகை 1-ம் பாதத்தில் செல்வதால், கைமாற்று கடனை அடைப்பிர்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும்.

வியாபாரத்தில் போட்டியாளர்களைச் சமாளிக்க, விளம்பர யுக்திகளைக் கையாளுங் கள். சந்தை நிலவரங்களை அறிந்து செயல்படுவது அவசியம். முடிவெடுப்பதில் புதியவர்களின் ஆலோசனையை ஏற்க வேண்டாம். கமிஷன், கெமிக்கல், எலெக்ட்ரிக்கல் மற்றும் துணி வகைகளால் ஆதாயம் உண்டு. இதுவரை பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்த பங்குதாரர்கள், இனி உங்களுக்குப் பணிவார்கள். ஜூன், செப்டம்பர் மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். லாபம் அதிகரிக்கும்.

உத்தியோகத்தில், சிறு சிறு அவமானங்கள், இடமாற்றங்களைச் சந்திக்க நேரிடும். வேலை அதிகரிக்கும். மேலதிகாரியால் அலைக்கழிக் கப்படுவீர்கள். வீணாக விடுப்பு எடுப்பதைத் தவிருங்கள். சக ஊழியர்களால் சில இன்னல் கள் வரத்தான் செய்யும். செப்டம்பர், அக்டோபர், ஜனவரி மாதங்களில் பதவி- சம்பள உயர்வு உண்டு. கணினித் துறையினருக்கு அயல்நாட்டு வாய்ப்புகள் தேடி வரும்.

கன்னிப் பெண்கள், புதிய நட்பால் சில பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும். தூக்கமின்மை, ஹார்மோன் கோளாறுகள் வரக்கூடும். அயல்நாடு சென்று உயர்கல்வி பெற உதவிகள் கிடைக்கும். மாணவர்கள், படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவும். கலைஞர்கள், விமர்சனங்களையும் தாண்டி பெரிதும் முன்னேறுவார்கள். கடுமையான போராட்டத்துடன் தங்களின் படைப்புகளை வெளியிடுவார்கள்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, வேலைச்சுமையையும், இழப்புகளையும் தந்தாலும் செயற்கரிய செயல்களையும் செய்ய வைத்து புகழ் சேர்ப்பதாக அமையும்.வெளிப்படையாகப் பேசும் குணம் கொண்டவர் நீங்கள். குரு பகவான் 9.5.2011 முதல், பாக்கிய வீடான 9-ஆம் வீட்டில் நுழைவதால், வாழ்வில் புது வியூகங்கள் அமைத்து முன்னேறுவீர்கள். எந்த வேலை ஆனாலும் எளிதில் முடியும். குடும்பத்தில் நிலவிய கூச்சல்- குழப்பங்கள் முடிவுக்கு வரும். கணவன்-மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். தடைப்பட்டிருந்த சுப காரியங்கள் கூடிவரும். வீடு களை கட்டும்.

கையில் நாலுகாசு தங்கும். வருங்காலத்துக் காக சேமிப்பீர்கள். குடும்ப விசேஷங்களில் முன்னிலை பெறுவீர்கள். முதல் மரியாதை கிடைக்கும். வங்கியில் அடகில் இருந்த நகைகளை மீட்பீர்கள். வீடு- மனை வாங்குவீர்கள். சிலர், தங்களுடைய கனவு இல்லத்தை கட்டி முடிப்பீர்கள்.

குரு பகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால், உற்சாகம் பிறக்கும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். வட்டிக் கடனை கொஞ்சம் கொஞ்சமாக தந்து முடிப்பீர்கள். எந்தக் காரியத்திலும் உங்களின் முதல் முயற்சியே வெற்றி பெறும். குரு உங்களின் 3-ஆம் வீட்டைப் பார்ப்பதால், இளைய சகோதர வகையில் மனத்தாங்கல்கள் நீங்கும். ஆபரணங்கள் சேரும்; வாகன வசதி பெருகும். வெகு நாட்களாக தடைப்பட்டிருந்த குலதெய்வ பிரார்த்தனையை செய்துமுடிப்பீர்கள். ஆன்மிக வாதிகள், சித்தர்களின் சந்திப்பு உண்டு.

குரு உங்களின் 5-ஆம் வீட்டைப் பார்ப்பதால், குழந்தை பாக்கியம் உண்டாகும்.
மகனுக்கு அயல்நாட்டில் படிக்கும் வாய்ப்பு, வேலை கிடைக்கும். கல்யாணம் சிறப்பாக முடியும். பழைய சொந்தங்கள் தேடி வரும். அரசியல்வாதிகள், விமர்சனங்களைத் தவிர்க்கவும். தலைமையின் சொந்த விஷயங் களில் தலையிடும் அளவுக்கு அவர்களுடன் நெருக்கமாவீர்கள். வெளிநாட்டு உறவினர்கள், நண்பர்களால் பயனடைவீர்கள்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 

9.5.2011 - 21.7.2011 வரையிலும்; 11.10.2011 - 1.3.2012 வரையிலும் குரு பகவான் அசுவினி நட்சத்திரத்தில் செல்கிறார். இந்த காலகட்டத்தில் மக நட்சத்திரக்காரர் களுக்கு வேலைச்சுமை, சற்றே உடல்நலக் குறைவு வந்து நீங்கும். பண வரவும் உண்டு. கௌரவப் பதவிகள் தேடி வரும். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்.
22.7.2011 - 10.10.2011 வரை; 2.3.2012 - 1.5.2012 வரை பரணி நட்சத்திரத்தில் குரு செல்வதால், மக நட்சத்திரக்காரர்களுக்கு பண வரவு; எதிலும் வெற்றியுண்டு. கடன் பிரச்னை ஓயும்; திருமணம் கூடிவரும். ஆனால், பூர நட்சத்திரக்காரர்களுக்கு அலைச்சலும், சிறுசிறு தடைகளும் வந்து நீங்கும். ஆனால், முன்னேற்றம் தடைப்படாது.

2.5.2012 முதல் 16.5.2012 வரை குரு பகவான் உங்கள் ராசிநாதனான சூரியனின் நட்சத்திரமான கார்த்திகை 1-ஆம் பாதத்தில் செல்வதால், நிர்வாகத்திறமை கூடும். அரசால் ஆதாயம் உண்டு. வேலை கிடைக்கும்.

வியாபாரத்தில், மந்தநிலை மாறும். பெரிய முதலீடுகளால் போட்டியாளர்களை திகைக்கச் செய்வீர்கள். பாக்கிகளை கனிவாகப் பேசி வசூலிப்பீர்கள். அனுபவசாலிகளை பணியில் அமர்த்துவீர்கள். உங்களின் நிறுவனங்கள், வியாபார ஸ்தலங்களை நவீனப்படுத்துவீர்கள். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள்.

பழையசரக்குகள் விற்றுத் தீரும். எலெக்ட்ரிக்கல்ஸ், டிராவல்ஸ் மற்றும் கட்டட உதிரி பாகங்களால் ஆதாயம் உண்டு. பங்குதாரர்களிடம் இருந்து வந்த கருத்துமோதல்கள் நீங்கும்.

உத்தியோகத்தில், திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். சிலருக்கு வேறு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கணினித் துறையின ருக்கு அயல்நாட்டு வாய்ப்புகள் தேடி வரும்.

கன்னிப் பெண்களுக்கு, மே, ஜூன் மாதங்களில் திருமணம் கூடிவரும். தடைப்பட்ட கல்வியைத் தொடருவீர்கள். மாணவர்கள், அதிக மதிப்பெண்ணுடன் உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும். விளையாட்டில் பரிசு- பதக்கம் கிடைக்கும்.
கலைஞர்களே, உங்களைப் பற்றிய கிசுகிசுக்கள் ஓயும். சம்பளப் பாக்கி கைக்கு வரும். பழைய நிறுவனங்களில் இருந்து புதிய வாய்ப்புகள் வரும்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, எங்கும் எதிலும் வெற்றியையும், எதிர்பாராத வளர்ச்சியையும் தருவதாகவும் அமையும்.சுயநலம் இல்லாதவர் நீங்கள். குரு பகவான் 9.5.2011 முதல் உங்கள் ராசிக்கு 8- வது வீட்டில் சென்று மறைகிறார். 8-ல் நிற்கும் குருவால் எல்லாம் தட்டிக்கொண்டே போகுமே, இருப்பதை எல்லாம் இழக்க நேரிடுமே, என்று கலங்காதீர்கள். உபய ராசியில் பிறந்த உங்களுக்கு, குரு பாதகாதிபதியாவார். அப்படிப்பட்டவர் 8-ல் மறைவதால், கெடுபலன் குறைந்து நல்லதே நடக்கும்.

உங்கள் ராசிநாதனான புதனுக்கு பகை வரான குரு 8-ல் மறைவதால், தம்பதிக்கு இடையே சந்தோஷம் பெருகும். பிரிந்தவரும் ஒன்றுசேர்வர். ஆனாலும் ஒருவித வீண் பயமும், மனக்கலக்கமும் இருக்கும். சில விஷயங்களை அதிகச் செலவுடன் முடிக்க வேண்டியது வரும். முக்கியப் பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கவேண்டாம். எவ்வளவு பணம் வந்தாலும், செலவுகளும் துரத்தும். கௌரவப் செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது.

குரு பகவான் உங்களது 2-ஆம் வீட்டை பார்ப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். மனைவிவழி உறவினர்களால் இருந்து வந்த சங்கடங்கள் தீரும். வீட்டுக்குத் தேவையான பொருட்களைத் தடையின்றி வாங்குவீர்கள். பழுதான மின்னணு- மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். தூக்கம் இல்லாமல் தவித்த நிலை மாறும். குரு உங்கள் சுக ஸ்தானத்தைப் பார்ப்பதால் உடல் சோர்வு, வீண் டென்ஷன் விலகும். அம்மா வழி சொத்து கைக்கு வரும். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள்.

குரு 12-ஆம் வீட்டைப் பார்ப்பதால் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். பாதியில் நின்றுபோன வேலைகள் நிறைவு பெறும். இழுபறியான வழக்குகள் சாதகமாக முடியும். அரசியல்வாதிகள், பேச்சை விடுத்து செயலில் இறங்குவது சிறப்பு. தலைமையின் பார்வை உங்கள் மேல் விழும்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 

9.5.2011 - 21.7.2011 வரை; 11.10.2011 முதல் 1.3.2012 வரை குரு பகவான் அசுவினி நட்சத்திரத்தில் செல்கிறார். இந்த காலகட்டத்தில் அலைச்சல் இருந்தாலும் முன்னேற் றமும் உண்டு. சிறுசிறு விபத்துகள், பொருள் இழப்புகள் வந்து நீங்கும். ஆனால் பண வரவு குறையாது. அரசால் ஆதாயம் உண்டு.

22.7.2011 - 10.10.2011 வரை; 2.3.2012 - 1.5.2012 வரை உங்கள் தன பாக்கியாதி பதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் குரு செல்வதால், இந்த காலகட்டத்தில் திடீர் வெற்றி, வாகனம்- ஆடை-ஆபரணச் சேர்க்கை உண்டு. வீடு வாங்கும் நிலை ஏற்படும். 2.5.2012 முதல் 16.5.2012 வரை குரு பகவான் கார்த்திகை 1-ஆம் பாதத்தில் செல்வதால், அரசு விஷயங்களில் கவனம் தேவை.

வியாபாரத்தில் பழைய பாக்கிகளை கறாராகப் பேசி வசூலிக்கவும். கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்கள். விளம்பர யுக்திகளால், வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள்.

அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளை முறையாகச் செலுத்திவிடுங்கள். பங்குதாரர் களுடனான பிரச்னைகள் நீங்கும். ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

உத்தியோகத்தில், உங்களது திறமையும் பணியும் அங்கீகரிக்கப்படும். எதிர்பார்த்த பதவி- ஊதிய உயர்வு தேடிவரும். டிசம்பர், ஜனவரி மாதங்களில் புது சலுகைகள் கிடைக்கும். மேலதிகாரிகளின் அந்தரங்க விஷயங்களை, சக ஊழியர்களிடம் விமர்சிக்க வேண்டாம். புது வேலைக்கு மாறும்போது, யோசித்துச் செயல்படுங்கள். கணினித் துறையினருக்கு வேலைப்பளு அதிகரிக்கத்தான் செய்யும். புது சலுகைகளும் கிடைக்கும்.

கன்னிப் பெண்கள், உயர்கல்வியில் அக்கறை காட்டுவது நல்லது. பெற்றோரின் ஆலோசனையைப் புறந்தள்ளாதீர்கள். நீங்கள் எதிர்பார்த்த நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வருட மத்தியில் திருமண வாய்ப்பு கூடிவரும்.

மாணவர்கள், வகுப்பறையில் வீண் பேச்சுகளைத் தவிர்த்து, பாடத்தில் கவனம் செலுத்துவது நல்லது. குறிப்பாக கணிதம், அறிவியல் பாடங்களில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளுங்கள். கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி உண்டு.

கலைஞர்களுக்கு ஒருபுறம் விமர்சனம் இருந்தாலும், மற்றொரு புறம் உங்களின் திறமையால் சாதனை நிகழ்த்துவீர்கள்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, கடனையும், அதேநேரம் சொத்து சேர்க்கை யையும், அலைச்சலையும், கூடவே ஆதாயத்தையும் தருவதாக அமையும்.புதுமையான சிந்தனை படைத்தவர் நீங்கள். குரு பகவான் 9.5.2011 முதல் 16.5.2012 வரை ஏழாம் வீட்டில் நிற்பதால் மனதில் தெளிவு பிறக்கும்.

குரு உங்கள் ராசியை நேருக்குநேர் பார்ப்பதால், குடும்பத்தவர் உங்களின் ஆலோசனையின்றி எந்த முடிவும் எடுக்க மாட்டார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வீண் சந்தேகத்தால் பிரிந்திருந்த கணவன்- மனைவி ஒன்றுசேர்வர். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்.

சிலருக்கு, தடைப்பட்ட திருமணம் நல்லவிதமாக கூடிவரும். பிள்ளைகளால் பெருமை உண்டு; மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். வங்கிக் கடனுதவியுடன் சொந்த வீடு கனவு நனவாகும். வெளிமாநில புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

உங்கள் ராசிக்கு 3 மற்றும் 6-க்கு உரியவரான குரு பகவான் 7-ஆம் வீட்டில் நுழைவதால் மனைவிக்கு மருத்துவச் செலவு, சில நேரங்களில் சண்டை - சச்சரவு, மனைவிவழி உறவினர்களுடன் பகை வரக்கூடும். உங்கள் ராசிக்கு 3-ஆம் வீட்டை குரு பகவான் பார்ப்பதால் பதவி - பட்டம் பெறுவீர்கள்.

இளைய சகோதரரால் உதவியுண்டு. பூர்வீகச் சொத்துகளை மாற்றி அமைப்பீர்கள். புதிய சொத்துகளும் சேரும். வழக்குகள் சாதகம் ஆகும். குரு லாப வீட்டைப் பார்ப்பதால் கெட்டவர்களிடமிருந்து விடுபடுவீர்கள். மூத்த சகோதரர் பாசமாக இருப்பார். தங்க ஆபரணம் வாங்குவீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்கள் உதவுவர். அரசியல்வாதிகள், தலைமைக்கு நெருக்கமாவார்கள். உங்கள் மீது எதிர்க்கட்சிக்காரர்கள் சுமர்த்திய வீண் பழிகள் விலகும். அண்டை அயலாருடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 

9.5.2011 - 21.7.2011 வரையிலும்; 11.10.2011 - 1.3.2012 வரையிலும் குரு, அசுவினி நட்சத்திரத்தில் செல்கிறார். இந்த காலகட்டத்தில், இழுபறியான வேலைகள் உடனே முடிவடையும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பிரபலங்கள் உதவுவர். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். செலவும் கையைக் கடிக்கும். எவருக்காகவும் சாட்சிக் கையெழுத்துப் போட வேண்டாம். கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

22.7.2011 முதல் 10.10.2011 வரை மற்றும் 2.3.2012 முதல் 1.5.2012 வரை உங்கள் ராசிநாதனான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் குரு செல்வதால் எதிலும் வெற்றி, பண வரவு உண்டு. ஒரு சொத்தை விற்று மற்றொரு சொத்தில் முதலீடு செய்வீர்கள். மகளுக்கு திருமணம் கூடி வரும்.

2.5.2012 முதல் 16.5.2012 வரை குரு, கார்த்திகை 1-ஆம் பாதத்தில் செல்வதால், இந்த காலகட்டத்தில் எவருக்கும் பணம் நகை வாங்கித் தருவதில் ஈடுபடவேண்டாம். அரசுக்குச் செலுத்தவேண்டிய வரிகளை உரிய நேரத்தில் செலுத்தப் பாருங்கள்.

வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். செப்டம்பர், அக்டோபர், ஜனவரி, மார்ச் மாதங்களில் வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிக் கடன் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர்.

ரியல் எஸ்டேட், உணவு விடுதி, வாகன உதிரி பாகங்களால் லாபம் அடைவீர்கள் கூட்டுத்தொழிலில் பிரச்னைகள் ஓயும். அரசால் அனுகூலம் உண்டு. புதிய ஏஜென்ஸி எடுப்பீர்கள்.
உத்தியோகத்தில், நல்ல பெயர் கிடைக்கும். மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். செப்டம்பர், ஜனவரி, மார்ச் மாதத்தில் எதிர்பார்த்த பதவி- சம்பள உயர்வு கிடைக்கும். அயல்நாட்டு தொடர்புடைய நிறுவனங்களில் இருந்து நல்ல வாய்ப்புகளும் தேடிவரும். கணினித் துறையினர் இழந்த சலுகையை மீண்டும் பெறுவார்கள்.

கன்னிப் பெண்களுக்கு, கல்யாணம் கைகூடும். மாதவிடாய்க் கோளாறு விலகி ஆரோக்கியம் கூடும். மாணவர்களுக்கு சோம்பல் விலகும். நினைவாற்றல் பெருகும். சந்தேகங் களை உடனுக்குடன் ஆசிரியரிடம் தயக்கம் இல்லாமல் கேட்டுத் தெளிவு பெறுங்கள். தேர்வில் அதிக மதிப்பெண் கிட்டும்.

கலைஞர்களுக்குத் திறமைகளை வெளிப் படுத்த வாய்ப்புகள் கிடைக்கும்; நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும். அரசால் கௌரவிக்கப்படுவீர்கள்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, புதிய கோணங்களில் உங்களை யோசிக்க வைப்பதுடன், வளர்ச்சியையும் முன்னேற்றத்தை யும் அள்ளித் தருவதாக அமையும்.நியாயத்தைத் தட்டிக்கேட்பவர் நீங்கள். குரு பகவான் 9.5.2011 முதல் 16.5.2012 வரை, 6-வது வீட்டில் அமர்ந்து பலன் தரப்போகிறார். 'சத்ய மாமுனி ஆறிலே இருகாலிலே தளைப்பூண்டதும்' என்று பழைய பாடல் கூறுகிறது. அதன்படி, எல்லா விஷயங்களிலும் சிறு சிறு தடைகள் இருக்கும்.

சொன்ன சொல்லை நிறைவேற்ற போராட வேண்டி வரும். சகட குருவாக இருப்பதால் கணவன்- மனைவிக்குள் பிரிவு, வீண் சண்டை சச்சரவுகள், உடல்நலக்குறைவு என வரக்கூடும். உறவுகளால் சேமிப்பு கரைவதுடன் மன உளைச்சலும் அதிகரிக்கும்.

எனினும், குரு பகவான் குடும்ப ஸ்தானமான 2-ஆம் வீட்டைப் பார்ப்பதால், பேச்சில் நிதானம் பிறக்கும். வராமலிருந்த பணம் கைக்கு வரும். வழக்கில் வெற்றி உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். எனினும், அவ்வப்போது ஆரோக்கியமான விவாதங்களும் எழும்.

குரு 10-ஆம் வீட்டைப் பார்ப்பதால் வேலை இல்லாதவர்களுக்கு, நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும். சொந்த ஊரில் செல்வாக்கு கூடும். அரசு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அரசு வேலைகள் உடனே முடியும்.

குரு 12-ஆம் வீட்டைப் பார்ப்பதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். பயணங்களால் ஆதாயமுண்டு. மகனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். தடைப்பட்டிருந்த மகளின் திருமணம் கூடிவரும்; வி.ஐ.பி-களின் முன்னிலையில் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். கட்டடப் பணிகளும் முழுமை அடையும். குலதெய்வக் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள். அரசியல்வாதிகள், தலைமைக்கு நெருக்கமாவார்கள். சகாக்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். அக்கம்பக்கத்தாருடன் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 

9.5.2011 - 21.7.2011 வரையிலும்; 11.10.2011 - 1.3.2012 வரையிலும் குரு அசுவினி நட்சத்திரத்தில் செல்வதால், இந்த காலகட்டத்தில் அனுஷ நட்சத்திரக்காரர்களுக்கு அலைச்சலும், செலவும் வந்து போகும். ஆனால் விசாகம் 4-ஆம் பாதம், கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. தடைப்பட்ட காரியங்கள் முடிவடையும்.

22.7.2011 - 10.10.2011 வரை; 2.3.2012 - 1.5.2012 வரை பரணி நட்சத்திரத்தில் குரு செல்கிறார். இந்த காலக்கட்டத்தில் தள்ளிப் போன திருமணம் முடியும். கைமாற்றாக வாங்கிய கடனை அடைப்பீர்கள். மனைவிவழி உறவுகளுடன் சின்னச் சின்ன மனஸ்தாபங்கள் வந்து போகும்.

மனைவிக்கு அறுவை சிகிச்சை வந்து நீங்கும். 2.5.2012 முதல் 16.5.2012 வரை, குரு பகவான் உங்கள் ஜீவனாதிபதியான சூரியனின் நட்சத்திரமான கார்த்திகை 1-ஆம் பாதத்தில் செல்வதால் எதிர்பாராத பண வரவு, செல்வாக்கு, நாடாளுபவர்களின் நட்பு யாவும் உண்டாகும்.
வியாபாரத்தில், போட்டியாளர்களை சமாளிக்கப் போராட வேண்டியது வரும். அதிரடி முடிவுகள் வேண்டாம். பணியாட்களின் மீது அதிருப்தி உண்டாகும். பாக்கிகளை அலைந்து வசூலிப்பீர்கள்.

உங்களின் கனிவான பேச்சால் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர். அக்டோபர், பிப்ரவரி மாதங்களில் ஆதாயம் அதிகரிக்கும். இரும்பு, பெட்ரோ-கெமிக்கல், மருந்து, ரியல் எஸ்டேட் வகைகளால் ஆதாயம் உண்டு. தெரியாத துறையில் இறங்க வேண்டாம். பங்குதாரர்களிடம் கோபம் வேண்டாம்.

உத்தியோகத்தில் வேலை அதிகரிக்கும். மேலதிகாரியுடன் மனஸ்தாபங்கள் வெடிக்கும். அடிக்கடி விடுப்பு எடுக்க நேரிடும். திடீர் இடமாற்றமும் உண்டு. செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் அலுவலகத்தில் சுமுக மான சூழ்நிலை உருவாகும். கணினித் துறை யினருக்கு நல்ல வாய்ப்புகள் அமையும்.

கன்னிப் பெண்கள், பெற்றோரின் ஆலோசனை இல்லாமல் எந்த முடிவும் எடுக்க வேண்டாம். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். நினைவுத் திறனை வளர்க்க, உணவில் கீரை வகைகளை சேர்த்துக்கொள்ளுங்கள். கலைஞர்கள், இழந்த புகழை மீண்டும் பெறுவதற்கு, யதார்த்தமான படைப்புகளைக் கொடுங்கள். அரசு பாராட்டும்; வெளிநாட்டு நிறுவனங்களும் வாய்ப்பு தரும்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, புதிய படிப்பினைகளைத் தருவதுடன், சாதுரியமாக நடந்துகொள்ள வேண்டிய அவசியத்தையும் புரியவைப்பதாக அமையும்.


ல்ல கருத்துகள் எங்கிருந்து வந்தாலும் ஏற்றுக்கொள்பவர் நீங்கள். உங்களுக்கு குரு பகவான் 9.5.2011 முதல் 16.5.2012 வரை 5-ஆம் வீட்டில் அமர்ந்து அள்ளிக்கொடுக்கப் போகிறார்!வீட்டில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளை இல்லாமல் ஏங்கித் தவித்த தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். தாயாரின் மூட்டுவலி, சர்க்கரை நோயின் தாக்கம் குறையும். விலகிச் சென்ற நண்பர்களும் உறவினரும் வலியவந்து உறவாடுவர். குலதெய்வ நேர்த்திக்கடனை செய்து முடிப்பீர்கள். பூர்வீகச் சொத்து பிரச்னைகள் தீரும். தனிமையில் தவித்த நிலை மாறும்.குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால், மனதில் நிம்மதி பெருகும்; வாடிய முகம் மலரும். கனவுத்தொல்லை, தூக்கமின்மை விலகும். மனைவிக்கு விலையுயர்ந்த ஆடை- ஆபரணங்கள் வாங்கித் தருவீர்கள். பழைய கடனை கொஞ்சம் கொஞ்சமாக பைசல் செய்வீர்கள். சிலர், சொந்தமாக வீட்டுக்கு குடிபுகுவர். குரு பகவான் உங்களின் 9-ஆம் வீட்டைப் பார்ப்பதால், தந்தையாருடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும்.

அவர்வழி சொந்தங்களால் ஆதாயம் உண்டு. அடகில் இருந்த நகைகளை மீட்பீர்கள். நாடாளுவோரின் நட்பால் சில காரியங்களைச் சாதிப்பீர்கள். வெளிமாநில புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

உங்களின் 11-வது வீட்டை குரு பார்ப்ப தால் மூத்த சகோதர- சகோதரிகளுடனான பனிப்போர் விலகும். வழக்கில் சாதகமான நிலை ஏற்படும். வேலையில்லாமல் தவித்தவர்களுக்கு, பெரிய நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

வீட்டுக்கு வேண்டிய மின்சாதனப் பொருட்களை வாங்குவீர்கள். அரசியல்வாதிகள் இழந்த பதவியை மீண்டும் பெறுவர். அண்டைஅயலாருடன் இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் மறையும்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 

9.5.2011 - 21.7.2011 வரை; 11.10.2011 - 1.3.20
12 வரை குரு பகவான் அசுவினி நட்சத்திரத்தில் செல்வதால், இந்த கால கட்டத்தில் மூல நட்சத்திரக்காரர்களுக்கு சிறிது அலைச்சலும் ஏமாற்றங்களும் இருக்கும். ஆனால், எதிர்பார்த்த காரியங்கள் தடையின்றி முடியும். சொத்து வாங்க வங்கிக் கடன் கிடைக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். யோகா, தியானம் ஆகியவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும்.

22.7.2011 - 10.10.2011 வரை; 2.3.2012 - 1.5.2012 வரை பரணி நட்சத்திரத்தில் குரு செல்வதால், இந்த காலகட்டத்தில் புதியவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். குடும்ப அந்தரங்க விஷயங்களை பகிர்ந்துகொள்ள வேண்டாம். ஆனாலும் சவாலான காரியங்களும் எளிதில் முடியும். வீடு மாறுவீர்கள். 2.5.2012 முதல் 16.5.2012 வரை குரு பகவான், உங்கள் பாக்கியாதிபதியான சூரியனின் நட்சத்திரமான கார்த்திகை 1-ஆம் பாதத்தில் செல்வதால் வேலை கிடைக்கும். அரசால் ஆதாயம் அடைவீர்கள். திடீர் பண வரவு, வழக்கில் வெற்றி உண்டு. தந்தை வழி சொத்து சேரும்.

வியாபாரத்தில், போட்டியாளர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உங்கள் அணுகுமுறையை மாற்றுவீர்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். ஜூன், ஜூலை மாதங்களில் புதிய முதலீடுகள் செய்வீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவர். ஹோட்டல், கமிஷன், என்டர்பிரைஸ், துணி வகைகளால் லாபம் அடைவீர்கள். பங்குதாரர்கள் ஒத்துழைப்பர். வியாபாரிகள் சங்கத்தில் பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப் படுவீர்கள்.

உத்தியோகத்தில், பணி சிறக்கும்; அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். குறை கூறிக்கொண்டிருந்த சக ஊழியர்களும், இனி உங்களைப் போற்றுவார்கள். வேலைப்பளு குறையும். மேலதிகாரியுடன் பனிப்போர் விலகும்.

ஜூன், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பதவி உயரும். கணினித் துறையினருக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும்.

கன்னிப் பெண்களுக்கு, தடைகள் நீங்கி கல்யாணம் நடக்கும். நல்ல வேலையும் கிடைக்கும். மாணவர்கள், கடினமான பாடங் களிலும் அதிக மதிப்பெண் பெறுவீர்கள். கலைஞர்களின் திறமை வெளிப்படும். ஆட்சி யாளர்கள் கரங்களால் பரிசு கிடைக்கும்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, எதிலும் நாட்டமில்லாமல் இருந்த உங்களை, எல்லாவற்றிலும் சாதிக்கவைப்பதாக அமையும்.நிர்வாகத்திறமை மிகுந்தவர் நீங்கள். குரு பகவான் 9.5.2011 முதல் 16.5.2012 வரை, 4-வது வீட்டில் அமர்கிறார். விழிப்புடன் செயலாற்ற வேண்டியது அவசியம். சேமிப்புகள் கரையும். உறவினர்களின் விமர்சனங்களை மனதில் கொண்டு மனைவி-மக்களை பகைக்க வேண்டாம்.உங்களின் கோபதாபங்களை, கூடாபழக்க வழக்கங்களை மனைவி சுட்டிக்காட்டினாலும் ஏற்றுக்கொள்ளுங்கள். விரக்தி, சோர்வு, டென்ஷன் அதிகரிக்கும். எனினும் திடமான சிந்தையுடன் செயல்பட்டு, சாதிப்பீர்கள்.அம்மாவுக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். நீண்ட தூர, இரவு நேர பயணங்களைத் தவிருங்கள். வாகன விபத்துகள் நேரலாம். நண்பர்கள் உறவினர்களிடம் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. நீர், நெருப்பு, மின்சாரத்தை கவனமாகக் கையாளுங்கள். சொத்து வழக்குகளிலும் கவனம் தேவை.

மகளுக்கு கல்யாணம் திடீரென ஏற்பாடாகும். மகனின் கூடாபழக்கவழக்கங்கள் நீங்கும். 4.11.11 முதல் உங்கள் ராசிக்கு 8-ல் செவ்வாய் மறைவதால் சகோதரர்களுடன் மனத்தாங்கல், சிறுசிறு விபத்துகள் வந்து நீங்கும்.

அதேநேரம் குரு பகவான், உங்கள் ராசிக்கு 8-ஆம் வீட்டைப் பார்ப்பதால் பல்வேறு இடங்களில் இருந்தும் உதவி கிடைக்கும். பிள்ளைகளை அன்புடன் நடத்துங்கள்; அவர்களின் உடல்நலனில் கவனம் தேவை.உயர் கல்வி- உத்தியோகத்தின் பொருட்டு பிள்ளைகள் உங்களைப் பிரியலாம். உணவு விஷயங்களில் கட்டுப்பாடு தேவை. சொத்து வாங்குவது- விற்பதில் கவனம் தேவை.

உங்களின் 10-ஆம் வீட்டை குரு பார்ப்பதால் உத்தியோகத்தில் மகிழ்ச்சி தங்கும். பிரபலங்களைச் சந்திப்பீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். பிரச்னைகளுக்கு நீதிமன்றம் வரை போகாமல், பேசித் தீர்க்கப் பாருங்கள். உங்கள் ராசிக்கு 12-ஆம் வீட்டை குரு பார்ப்பதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். ஆன்மிகக் காரியங்களுக்காகவும் அதிகம் செலவு செய்வீர்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் யோகா, தியானம் செய்யுங்கள். அரசியல்வாதிகள் ஆதாரமின்றி எவரையும் விமர்சிக்க வேண்டாம்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 

9.5.2011 - 21.7.2011 வரை; 11.10.2011 - 1.3.2012 வரை குரு பகவான் அசுவினி நட்சத்திரத்தில் செல்கிறார். இந்த காலகட்டத்தில் அலைச்சலும் செலவும் இருக்கும். பழைய நண்பர்களை பகைக்கவேண்டாம். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுங்கள். ஊர் பொது விவகாரங்களில் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது.

22.7.2011 - 10.10.2011 வரை; 2.3.2012 - 1.5.2012 வரை உங்கள் யோகாதிபதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் குரு செல்வதால், எதிர்பாராத பண வரவு, திடீர் யோகம் உண்டு. காற்றோட்டம், தண்ணீர் வசதியுள்ள வீட்டுக்கு மாறுவீர்கள். தடைப்பட்ட திருமணம் நடந்தேறும். வீடு கட்டும் பாக்கியமும் உண்டு. சிலருக்கு புது வேலை கிடைக்கும். 2.5.2012 முதல் 16.5.2012 வரை, குரு பகவான் கார்த்திகை 1-ஆம் பாதத்தில் செல்வதால் வி.ஐ.பி-கள் அறிமுகமாவர். வழக்கு விவகாரத்தில் திருப்பம் உண்டாகும்.

வியாபாரத்தில் பெரிய முதலீடுகள் வேண்டாம். பாக்கிகளை கனிவாகப் பேசி வசூலியுங்கள். வாடிக்கையாளர்களை அதிகப் படுத்த புதிய அணுகுமுறைகள் நல்லது. உணவு, கெமிக்கல், எண்ணெய் வகைகளால் ஆதாயம் உண்டு. பங்குதாரர்களிடம் அனுசரித்துச் செல்லுங்கள்.

உத்தியோகத்தில், பல்வேறு வேலைகளை நீங்களே பார்க்கவேண்டி வரும். மூத்த அதிகாரி உங்களை பாராட்டுவார். பதவி- சம்பள உயர்வு தாமதமாக கிடைக்கும். அயல்நாட்டு தொடர்புள்ள நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும். குரு பகவான் 10-ஆம் வீட்டைப் பார்ப்பதால் சவால்களைச் சமாளிப்பீர்கள். கணினித் துறையினருக்கும் வேலைச்சுமை அதிகரிக்கவே செய்யும்.

கன்னிப் பெண்களுக்கு மனதுக்கினிய கணவன் வாய்ப்பார். மாணவர்கள் கணிதம், அறிவியல் பாடங்களில் அதிகக் கவனம் செலுத்துங்கள்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, வேலைச் சுமையையும், மன உளைச்சலையும் தந்தாலும் பல்வேறு வகையிலும் முன்னேற்றம் தந்து, வாழ்வில் வெற்றிபெற வைப்பதாக அமையும்.


மைதியாக சாதிப்பவர் நீங்கள். குரு பகவான் 9.5.2011 முதல் 16.5.2012 வரை 3-வது வீட்டிலேயே நீடிக்க உள்ளதால், உங்களின் அணுகுமுறையை மாற்றிக் கொள் வது நல்லது. சில விஷயங்களில் சந்தர்ப்பச் சூழ்நிலை அறிந்து முடிவெடுங்கள்.

காரியத் தடைகள், டென்ஷன் வரக்கூடும். வசதி, செல்வாக்கைக் கண்டு மயங்கி தவறானவர்களைப் பின்பற்ற வேண்டாம். பெரியவர்களிடம் முக்கிய விஷயங்களை கலந்தாலோசிப்பது நல்லது. இளைய சகோ தரருடன் உரசல் போக்கு வந்து நீங்கும்.எனினும், உங்களின் 7-ஆம் வீட்டை குரு பார்ப்பதால், மறைந்திருந்த திறமைகள் வெளிப்படும். வி.ஐ.பி-கள் அறிமுகமாவர். கணவன்- மனைவிக்குள் சச்சரவுகள் வந்தாலும், அந்நியோன்யம் குறையாது. குரு பகவான் உங்களின் 9-ஆம் வீட்டைப் பார்ப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். தந்தையாருடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும்.

அவர்வழிச் சொத்துக்கள் கைக்கு வந்துசேரும். மகன் ஆசைப்பட்ட கல்வி நிறுவனத்திலேயே படிக்க வைப்பீர்கள். மகளுக்கு அந்தஸ்துக்கு தகுந்த மணமகன் அமைவார். உறவினர்கள், நண்பர்கள் உதவி கேட்டு தொந்தரவு தருவர். வாகனத்தை இயக்கும்போது கவனம் தேவை. குரு 11-ஆம் வீட்டைப் பார்ப்பதால் காரியத்தடைகள் விலகும். சொத்துப் பிரச்னைகள் சுமுகமாக முடியும். அரசியல்வாதி கள், மேலிடத்தை அனுசரித்துப் போங்கள்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 

9.5.2011 - 21.7.2011 வரை; 11.10.2011 - 1.3.2012 வரை குரு பகவான் அசுவினி நட்சத்திரத்தில் செல்கிறார். இந்த காலகட்டத் தில் பணம் வரும். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். செலவுகளும் துரத்தும். பங்காளி பிரச்னைக்காக அவசரப்பட்டு நீதிமன்றம் செல்லவேண்டாம். முதுகு வலி, தலைவலி வந்து நீங்கும். எவருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். ஊர் பொதுக் காரியங்களில் மூக்கை நுழைக்கவேண்டாம்.

22.7.2011 - 10.10.2011 வரை; 2.3.2012 - 1.5.2012 வரை உங்கள் யோகாதிபதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் குரு செல்வ தால் அரைகுறையாக இருந்த வேலைகள் முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். திடீர் பயணங்களால் உற்சாகம் அடைவீர்கள். பெற்றோருடன் மனஸ்தாபங்கள் நீங்கும். வீடு மாறுவீர்கள். ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

2.5.2012 முதல் 16.5.2012 வரை குரு பகவான் கார்த்திகை 1-ஆம் பாதத்தில் செல்வதால், மனைவி வழியில் மனஸ்தாபங்கள், மருத்துவச் செலவுகள் வந்து போகும்.
வியாபாரத்தில், பெரிய முதலீடுகள் வேண்டாம். உங்கள் ரசனைக்கேற்ப கடையை விரிவு செய்வீர்கள். வாடிக்கையாளர்களும் விரும்பி வருவார்கள்.

ஆனால், பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். வேலையாட்களிடம் கனிவு தேவை. ஹோட்டல், விடுதிகள், வாகன உதிரி பாகங்கள், கமிஷன் வகைகளால் லாபம் அடைவீர்கள். ஜூன், நவம்பர் மாதங்கள் சாதகமாக இருக்கும். கூட்டுத்தொழிலில் சில பிரச்னைகள் எழலாம்.

உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் வீண் விவாதங்கள் வரும். எனினும் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சக ஊழியர்களிடம் உஷாராக பழகுங்கள். சிலர் எதிர்பாராத இடத்துக்கு மாற்றப்படுவீர்கள். புதிய வாய்ப்புகள் வந்தால் தீர யோசித்து முடிவெடுங்கள். மே, டிசம்பர் மாதங்களில் வேலை குறையும். கணினித் துறையினருக்கு புதிய சலுகைகள் கிடைக்கும்.
கன்னிப் பெண்களின் புது முயற்சிகள் வெற்றியடையும். கெட்டவர்களை அடையாளம் கண்டு ஒதுக்கிவிடுங்கள். இரும்பு, கால்சியச் சத்து உடம்பில் குறையும். மேலைநாட்டு உணவுகளைத் தவிர்த்து, பாரம்பரிய உணவை உட்கொள்ளுங்கள். திருமணத் தடை நீங்கும்.


மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் பிறக்கும். ஆனால் அவ்வப்போது மறதி, அலட்சியம் வந்து நீங்கும். விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் உண்டு.
கலைஞர்கள், பெரிய வாய்ப்புக்காகக் காத்திருக்காமல், கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, உங்களைப் பல்வேறு வகைகளில் பக்குவப் படுத்துவதுடன், சில காரியங்களில் வெற்றியை யும் மகிழ்ச்சியை அளிப்பதாக அமையும்.திட்டமிட்டு செயல்படுபவர் நீங்கள். குரு பகவான் 9.5.2011 முதல் 16.5.2012 வரை உங்கள் ராசிக்கு தன வீடான 2-ஆம் வீட்டில் அமர்வதால், அடிமனதில் இருந்த போராட்டம் நீங்கும். சந்தேகத்தால் பிரிந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். பணபலம் கூடும்.

குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வதால் வீட்டில் நிம்மதி உண்டாகும். சுபநிகழ்ச்சிகள் நடக்கும். உறவினர்கள் தேடி வருவர். விருந்தினர் வருகை அதிகரிக்கும். சோர்ந்த முகம் மலரும். வரவேண்டிய பணமெல்லாம் வந்து சேரும். வங்கியில் அடமானமாக வைத்திருந்த வீட்டுப் பத்திரத்தை மீட்பீர்கள். உடன்பிறந்தவருடன் உரசல் போக்கு நீங்கும். இனி பாசமாகப் பேசுவார்கள். பெரிய நோயெல்லாம் இருப்பது போன்று பயந்தீர்களே, இனி ஆரோக்கியம் பற்றிய பயம் நீங்கும். இனிய பேச்சால் சாதிப்பீர்கள்.

குரு பகவான் ஆறாவது வீட்டைப் பார்ப்ப தால், உங்களை எதிர்த்தவர்களும் அடங்குவர். கடன் பிரச்னைகள் கட்டுக்குள் வரும். வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். மறைமுக எதிரிகளைக் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். அலைச்சல்கள் குறையும். குரு பகவான் 8-வது வீட்டைப் பார்ப்பதால், எதிர்பாராத வகையில் பணம் வரும். அயல்நாட்டுப் பயணங்கள் கூடிவரும். விசா பெறுவதில் தடையிருக்காது. 10-வது வீட்டையும் பார்ப்பதால் கௌரவப் பதவிகள் தேடி வரும். வி.ஐ.பி-களுக்கு நெருக்கம் ஆவீர்கள். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அரசியல்வாதிகள் தலைமைக்கு நெருக்கம் ஆவீர்கள்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 

9.5.2011 - 21.7.2011 வரை; 11.10.2011 - 1.3.2012 வரை குரு பகவான் அசுவினி நட்சத்திரத்தில் செல்கிறார். இந்த காலகட்டத்தில் உங்கள் ரசனைக்கு ஏற்ற வீடு அமையும். புது முதலீடுகள் செய்வீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். குடும்பத்தினருடன் சுற்றுலா சென்று வருவீர்கள். வழக்குகள் மூலம் பணம் வரும். வேலை கிடைக்கும். தங்கம் சேரும். மகளுக்கு வரன் அமையும். உறவினர்களுடன் இருந்த பிணக்குகள் நீங்கும். உயர்கல்வியில் தேர்ச்சி உண்டு. போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள்.

22.7.2011 - 10.10.2011 வரை; 2.3.2012 - 1.5.2012 வரை பரணி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால், இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சொத்துப் பிரச்னை தீரும். புகழ் பெற்றவர்கள் நண்பர்களாவர். 2.5.2012 முதல் 16.5.2012 வரை குரு கார்த்திகை 1-ஆம் பாதத்தில் செல்வதால், செலவினங்கள் அதிகரிக்கும். மறைமுக எதிரிகளை இனம் கண்டறிவீர்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியாரிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். பழைய வேலையாட்களை, பிரச்னை தந்த பங்குதாரர்களை மாற்றுவீர்கள். சந்தை நிலவரத்துக்கு ஏற்ப புதிய முதலீடுகள் செய்வது அவசியம். லாபம் கணிசமாக உயரும். தேங்கிய சரக்குகள் விற்றுத் தீரும். மே, ஜூன், ஆகஸ்டு, ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். ஹோட்டல், ஃபைனான்ஸ், கெமிக்கல், கல்வி நிறுவனங்கள், கமிஷன் வகைகளால் லாபம் அடைவீர்கள்.

உத்தியோகத்தில் வேலை நிரந்தரமாகும். எதற்கெடுத்தாலும் உங்களையே குற்றம் சொல்லிக்கொண்டிருந்த மேலதிகாரி இனி பணிந்துபோவார். பதவியுயர்வு சம்பந்தப்பட்ட வழக்கில் உங்கள் பக்கம் வெற்றி கிடைக்கும். ஜூன், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வேறு சில வாய்ப்புகள் தேடி வரும். சம்பளம் உயரும். கணினித் துறையினர் இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவர்.

கன்னிப் பெண்களுக்கு, தடைப்பட்டுக் கொண்டிருந்த திருமணம் இனி கைகூடும். பெற்றோரின் ஆதரவு உண்டு. நல்ல வேலை கிடைக்கும்
.
மாணவர்கள், உயர்கல்வியில் கூடுதல் அக்கறை எடுக்காவிட்டால், பின்னர் வருத்தப்பட வேண்டியது வரும். விளையாட்டுகளில் பதக்கங்கள் வெல்வீர்கள். கலைஞர்களுக்கு, அவர்களது தனித் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் தேடி வரும். சம்பளப் பிரச்னை தீரும்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, இடியாப்ப சிக்கல்களிலிருந்து உங்களை விடுவிப்பதுடன், எதிலும் சாதிக்கும் வல்லமையைத் தருவதாக அமையும்.

25 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே! நல்ல விஷயத்தை சொல்லியிருக்கிங்க... பலரும் படித்து பயனடைய....

சி.பி.செந்தில்குமார் said...

வாங்க வாங்க.. நீங்களும் இன்னும் தூங்கலையா?

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணன் சி.பி பதிவுலகிற்கு ஆற்றும் பணி மிகவும் சிறப்பு வாய்ந்தது. சினிமா, அரசியல், ஆன்மிகம், பெண்கள், பக்தி, ஜோதிடம், இன்னும் பல சேவைகள் சிறப்பு வாய்ந்தது.

சி.பி.செந்தில்குமார் said...

வஞ்சிப்புகழ்ச்சின்னா சிலருக்குப்பிடிக்கும்.. உங்களுக்கு வஞ்சப்புகழ்ச்சின்னா பிடிக்கும் போல ஹா ஹா

ஆச்சி ஸ்ரீதர் said...

நானும் என் ராசிக்கு படிச்சுடேன்

செங்கோவி said...

நல்ல காலம் பொறக்குது..நல்ல காலம் பொறக்குது..ஜக்கம்மா வாக்கு பலிக்குது!

செங்கோவி said...

இரண்டு பதிவாப் பிரிச்சுப் போட வேண்டியது தானே?

அமர பாரதி said...

சக்தி விகடனில் வந்ததை அப்படியே காப்பி பேஸ்ட் செய்தது சரியா? மேலும் ஜோதிடரின் பெயரையோ சக்தி விகடனின் பெயரையோ கூட போடவில்லை. பொதுவான செய்தியாக இருந்தால் பரவாயில்லை, இது தனிப்பட்ட அறிவுச் சொத்து. ஏதாவது பிரச்சினை வந்து விடப் போகிறது, பார்த்துக் கொள்ளவும்.

Mahan.Thamesh said...

சார் நல்ல செய்தி சொல்லியிருக்கிங்க;
எனக்கு நல்ல காலம் வேற; நன்றி சார் உங்க பதிவுக்கு.

Unknown said...

அம்மா ஐயோ!.......... இந்தாளு வருசத்துக்கு மொத்தமா விகட குழும புக்குகளுக்கு துட்டு போட்டு வாங்கிபுட்டு அத இங்க போட்டு இருக்காரா டவுட்டு........தம்பி இது நான் கேக்கல நாடு கேக்குது சரியா........இதுக்கு நீ சொல்ற பதில் எனக்கானது இல்ல நாட்டுக்கானது.........
பதில் சொல்லு!

நிரூபன் said...

சகோ, ஆன்மீகத்துடன் கலந்த பக்குவம் உங்கள் பதிவுகளில் தோன்ற ஆரம்பிக்கிறது. நீங்கள் சாமியாராகப் போறீங்களா;-))

நிரூபன் said...

நேற்று இல்லாத மாற்றம் என்னது?

சி.பி.செந்தில்குமார் said...

>>நிரூபன் said...

சகோ, ஆன்மீகத்துடன் கலந்த பக்குவம் உங்கள் பதிவுகளில் தோன்ற ஆரம்பிக்கிறது. நீங்கள் சாமியாராகப் போறீங்களா;-))

நித்யானந்தா பாவம்..அவரை விட்டுடுங்க. ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

>>செங்கோவி said...

இரண்டு பதிவாப் பிரிச்சுப் போட வேண்டியது தானே?

அது தப்புண்ணே.. ஹிட்ஸுக்காக வேணும்னே பண்ணுனதா சொல்லிடுவாங்க.. எந்த ராசிக்காரரும் ஏமாறாம இருக்கனும்

உணவு உலகம் said...

பிரபல பதிவரின் ஜோதிட தகவல்கள்.

உணவு உலகம் said...

ரொம்ப சரியா இருக்குங்க.

கோவை நேரம் said...

அய்யயோ ...நான் அட்ராசக்க ப்ளாக் வர்றதுக்கு பதிலா நல்ல நேரம் ப்ளாக் வந்துட்டேன்னு நினைக்கிறேன்.....

காங்கேயம் P.நந்தகுமார் said...

கண்டிப்பா உறுதியா சொல்றேன் சி.பி.அண்ணனுக்கு மண்டையில பலமா அடிபட்டுருச்சுன்னு. பாவம் நல்ல மனுஷன் என்ன பண்றது?

காங்கேயம் P.நந்தகுமார் said...

கண்டிப்பா உறுதியா சொல்றேன் சி.பி.அண்ணனுக்கு மண்டையில பலமா அடிபட்டுருச்சுன்னு. பாவம் நல்ல மனுஷன் என்ன பண்றது?

dheva said...

சிபி ..நேத்து உங்க லிங்க் கொடுத்துதான் வீட்ல அப்பாவை படிக்க சொன்னேன்...!!!! நம்பாதவங்களுக்கு ஓ.கே நம்புறவங்களுக்கு நிஜமாவே யூஸ் புல் ஷேரிங்! தேங்க்ஸ்!

சக்தி கல்வி மையம் said...

யோவ் சதீஷ் போடவேண்டிய பதிவ நீ போடற...

சக்தி கல்வி மையம் said...

நீ போடவேண்டிய விமர்சனம் நல்லநேரத்தில வருது... எனக்கு ஒரு டவுட்டு .. ப்ளாக் மாத்தி படிக்கரனோ?

பாட்டு ரசிகன் said...

நீங்க ராசிபலன்..
சதீஷ் சினிமா விமர்சனம்..

வெளங்கும்...

shanmugavel said...

sathish?????????

ஜோதிஜி said...

நல்லதோ கெட்டதோ வீட்டில் இருவரும் படித்தோம். நன்றி செந்தில்.