Saturday, April 30, 2011

பிள்ளையார் பட்டி ஹீரோ நீ தான்பா கணேசா...(ஆன்மீகம்)

சரணம் கணேசா..!
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை.
- கபிலதேவநாயனார்

பொருள்: செல்வம், செய்தொழிலில் மேன்மை, வாக்கு வளம், உண்மையான பெருமை, உருவப் பொலிவு... இவை யாவும், ஆனைமுகத்தானை உள்ளன்புடன் வணங்கும் அடியாருக்குக் கைகூடும்.

'ந்தக் காலத்தில் தாத்தா- பாட்டிகள் தங்களுடைய பேரன்- பேத்தியருக்கு பக்தி உணர்வு ஏற்பட, பிள்ளையார் கதைகளைச் சொல்வார்கள். விநாயகர் வணக்கத்தாலும் நம்பிக்கையாலும் இடையூறுகள் யாவும் விலகிப்போகும் என்பதைப் பாடல்களாகப் பாடிக் காட்டுவார்கள்; பேரக்குழந்தைகளைச் சுற்றிலும் உட்காரவைத்து, பிள்ளையார் வழிபாடு பற்றிய கதை களையும் செய்திகளையும் கற்பனை நயம் கலந்து சொல்லுவார்கள்.


'கருணைவள்ளல் கணபதியைத் தொழு’ என்று பாட ஆரம்பிப்பார் தாத்தா
சங்கரிக்கு மூத்தபிள்ளை... சங்கரனார் பெற்ற பிள்ளை’ என்று பாட்டி தொடர்ந்து பாடுவாள். 'மகாவிஷ்ணுவுக்கு மாப்பிள்ளை’ என்று உறவுமுறையும் காட்டிப் பாடுவார்கள். அதுமட்டுமா? 'அப்பம், வடை, தோசை என்றால் ஆசைப்படும் பிள்ளை’ என்று பொக்கை வாய் திறந்து பாடிக்கொண்டே, கடைசியில்...'இப்பிள்ளை யார் சொல்?’ என்று ஒரு கேள்வியும் கேட்பார்கள். உடனே பேரக்குழந்தைகள் ''பிள்ளையார்!'' என்று பதில் சொல்லும்.


இப்படியாக, தாத்தாவும் பாட்டியும் கதை சொல்லச் சொல்ல, பிள்ளையாரின் யானை முகமும், பானை வயிறும், வெள்ளைக் கொம்பும், குள்ளத் தோற்றமும் பிள்ளைகளுக்குக் கண்முன் வந்து நிற்கும். பிறகென்ன... 'தொப்பை அப்பனைத் தொழுவோம் நாங்கள்’ என்று அவர்களும் உற்சாகமாகப் பாடுவார்கள்.

பள்ளிக்கூடத்தில், பிள்ளையாரைப் போற்றும் நாட்டுப் புறப் பாடல்களை ஆசிரியர்களும் பாடுவார்கள்.

'எள்ளுப் பொரியும் இடித்த அவலும்
வள்ளிக் கிழங்கும் வாழைப்பழமும்
அள்ளித் தருவோம் ஆனை முகத்தாய்’

என்று அவர்கள் பாடும்போது, தமக்குப் பிரியமான பண்டங்களைத்தானே விநாயகக் கடவுளும் விரும்புகிறார்


என்று பிள்ளைகள் இன்புறுவார்கள். 'ஆறு நூறு தேங்காயும் நூறு நூறு மாம்பழமும்...’ என்று நொடிக்குள்ளே அந்த குண்டு வயிற்றுக்குள் ஜீரணமாகிவிடும் என்று அவர்கள் எண்ணமிடும்போது, பிள்ளையாரின் ஜீரண சக்தியைக் கண்டு வியப்பார்கள். ஆக, நம் முன்னோர் பிள்ளையாரின் வல்லமையை... எவ்வளவு எளிமையாக, எத்தகைய நகைச்சுவையுடன் கலந்து பிள்ளையாருக்கு ஊட்டியிருக்கிறார்கள்?!


அடுத்து, குழந்தைகளுக்கு ஓர் ஆசை வரும்.

தினமும் பூக்களைப் பறித்து பிள்ளையாரின் திருமுடியில் சார்த்தி, கை கட்டி வாய் பொத்தி நிற்பார்கள். தலையில் குட்டிக்கொள்வார்கள். விளக்கேற்றி வைக்கவும் விரும்புவார்கள். தங்களைப் பாதுகாக்கவேண்டும் என்று வேண்டிக் கொள்வார்கள். 'நல்வாக்கு வேணும்; செல்வச்செழிப்பு வேணும்; கல்வி ஞானம் பெருகவேணும்’ என்றெல்லாம் பிரார்த்திப்பார்கள்.

இப்படிச் சிறுவயதில் ஏற்பட்ட பிள்ளையார் பக்தி, நாளாக ஆக அவர்களது வாழ்வில் விநாயகருடன் இணை பிரியாத உறவை ஏற்படுத்தி, வாழ்வை சிறக்கச் செய்யும். சிறு வயதில் கிராமங்களில் அரசமரத்தடியிலும் ஆற்றங் கரையிலும் பிள்ளையாரைத் தினமும் வழிபட்டுவிட்டு பள்ளிக்குச் சென்றவர்கள், இப்போது அதுகுறித்து நினைத்துப் பார்ப்பதே ஒரு சுகானுபவம் இல்லையா?!


தெய்வ நம்பிக்கையுடைய நாம், எந்தக் காரியத்தைத் தொடங்கினாலும் விநாயகரை வழிபடாமல் தொடங்க மாட்டோம். எடுத்த காரியம் எளிதாக- இன்பமயமாக வெற்றிபெற வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றி வைக்கும் கடவுள் விநாயகரே என்ற நம்பிக்கை நம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் நிலைத்திருக்கிறது. ஒரு வேலையைத் துவங்கும்போது, 'பிள்ளையார் குட்டியாச்சி’ என்று சொல்வது வழக்கம்.

 பிள்ளையார் சுழி போட்டாச்சு

என்று கூறி, காரியத்தைத் துவங்கும் வழக்கம், நம்மிடம் காலம் காலமாக இருந்து வருகிறது. எதை எழுத ஆரம்பித்தாலும் முதலில் பிள்ளையார் சுழி போட்டுவிட்டே எழுத ஆரம்பிக் கிறோம். சுழி என்பது வளைசல் (வளைவு). விநாயகரின் தும்பிக்கை நுனி வளைந்திருக்கிறதல்லவா?! பிள்ளையார் சுழி, கொம்பும் கோடும் சேர்ந்தது. இரண்டுமே விநாயகரின் தந்தத்தின் பெயர். 'ஏக தந்தர்’ என்பதைத் தமிழில் 'ஒற்றைக் கொம்பன்’ என்பார்கள்.

'ஓம்’ எனும் ஓங்கார எழுத்தின் தனித்தமிழ் வடிவம், ஏறத்தாழ யானை முகத்தின் வடிவம் போலக் காணப் படும். ஓங்கார ஒலியைக் காதால் கேட்க லாம்; அதை எழுதினால் கண்ணுக்குப் புலனாகும். காதால் கேட்பது நாதம்; கண்ணுக்குப் புலனாவது விந்து. நாத தத்துவத்தை வரி (கோடு) போலவும், விந்து தத்துவத்தை புள்ளியிலும் அமைப்பது உண்டு. இரண்டும் சேர்ந்ததே, 'உ’ என்கிற  பிள்ளையார் சுழி ஆகும்.

நாதமும் விந்துவும் ஒன்றுக்கொன்று துணை (சான்று) நிற்கவேண்டும். இதில், சான்று எனும் பதத்தைக் 'கரி’ என்றும் சொல்வர். ஆக, உமை வடிவாகிய 'சுழி’ வடிவமும், சிவ சக்தி சான்றாகிய 'கரி’ வடிவமும் கொண்டு நிற்கும்போது, கணபதியின் வடிவாகிய ஓம்காரம் தோன்றும். எனவேதான், ஏதேனும் எழுதத் துவங்குமுன், ஒரு சுழியும் கோடும் இடுகிறோம். தமிழ் உயிர் எழுத்துக்கள் அனைத்தும், சுழியை அடிப்படையாகக் கொண்டவையே! பிரணவத் துக்கும் ஒலி வடிவமும் வரி வடிவமும் உண்டு. வரி வடிவாக விநாயகரின் திருவுருவும், ஒலி வடிவாக அவரது ஆற்றலும் திகழ்கின்றன.முதன்முதலில் எழுதத் தொடங்கியவர் விநாயகரே! எழுத்து வடிவில் தோன்றிய முதல் நூல் வியாச பாரதமே!


'முத்தமிழ் அடைவினை முற்படுகிரி தனில் முற்பட எழுதிய முதலோனே’ என விநாயகர் துதி திருப்புகழில் போற்றுகிறார் அருணகிரிநாதர். மகாபாரத்தை வேதவியாசர் எடுத்துரைத்தபோது, அந்த மகா காவியம் காலாகாலத் துக்கும் அழியாது அனைவரும் படித்துப் பேறுபெறும் பொருட்டு, விநாயகர் தமது தந்தங்களில் ஒன்றை ஒடித்து, அதையே எழுத்தாணியாகக் கொண்டு எழுதினாராம்!  காஞ்சி மகா சுவாமிகள் இதற்கு அற்புதமான விளக்கம் ஒன்றை சொல்வார்...

''தந்தத்தை எழுத்தாணியாக வைத்துக்கொண்டு ஏன் எழுதினார் விநாயகர்? யானையின் பெருமைக்கு முக்கிய காரணம் அதன் தந்தம்தான்.

'யானை இறந்தாலும் ஆயிரம் பொன்’ என்பது

தந்தத்தின் மதிப்பை வைத்துத்தான். அப்படிப் பட்ட தந்தத்தை 'பிள்ளையார்’ என்கிற யானை முகத்தோன் ஒடித்து... தமது அழகு, கௌரவம், கர்வம் எல்லாவற்றுக்கும் காரணமாக இருக்கிற ஒன்றைக் காட்டிலும், தர்மத்தைச் சொல்கிற ஒன்றுதான் பெரியது என்பதை உலக மக்களுக் குக் காட்டினாராம்.


நியாயத்துக்காக, தர்மத்துக்காக, வித்தைக்காக எதையும் தியாகம் பண்ண வேண்டும் என்பதற் காகத்தானே தந்தத்தைத் தியாகம் பண்ணிக் காட்டியிருக்கிறார் விநாயகர்! ஸ்வாமிக்குக் கருவி என்று தனியாக எதுவும் வேண்டியது இல்லை; அவர் நினைத்தால், எதையும் கருவியாக உபயோகித்துக்கொள்வார் என்பதற்கும் இது ஓர் உதாரணம்.''

ஒருமுறை, தந்தத்தாலேயே அசுரனைக் கொன்றார் பிள்ளையார். அப்போது அது ஆயுதம். பாரதம் எழுதும்போது அதுவே பேனா! உலகத்திலேயே பெரிய புத்தகம் எது என்றால் மகாபாரதம்தான் என்று எவரும் சொல்வார்கள். 'பாரதம் பஞ்சமோ வேத:’ ஐந்தாவது வேதம் என்று அதற்குப் பெயர். மற்ற நாலு வேதங்கள் எழுதாக்கிளவி- அதாவது எழுத்தில் எழுதப்படாமல், காதால் கேட்டு மனப்பாடம் பண்ணியே ரக்ஷிக்கப்பட வேண்டியவை. ஐந்தாவது வேதமான மகாபாரதம் எழுதிவைக்கப்பட்டது.

ஆக, எழுத்தைக் கண்டுபிடித்த கருணைக் கணபதிக்கு வணக்கம் செலுத்தும் விதமாக- நன்றி அறிதலைக் காட்டும் விதமாக... நாமும் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிக்கிறோம்.

நன்றி - சக்தி விகடன்

53 comments:

Unknown said...

hehe

MANO நாஞ்சில் மனோ said...

நாதாரி இங்கேயும் வடையை புடிங்கிட்டு போயிட்டியே...

King Viswa said...

நம்ம சிபிக்கு என்னமோ ஆய்டுச்சு. சம்பந்தமே இல்லாம ஆன்மீக பதிவா வருதே?


கிங் விஸ்வா
சென்னை சூப்பர் கிங்ஸ் சித்திரக்கதை-சென்னை சூப்பர் கோமிக்ஸ்

லேட்டஸ்ட் காமிக்ஸ் தகவல்கள்-காமிக் கட்ஸ்

MANO நாஞ்சில் மனோ said...

வடை தின்னிபயலுக....

டக்கால்டி said...

vada poche

MANO நாஞ்சில் மனோ said...

இரு ஓட்டைய போட்டுட்டு ஸாரி ஓட்டு போட்டுட்டு வாரேன்....

MANO நாஞ்சில் மனோ said...

இரு ஓட்டைய போட்டுட்டு ஸாரி ஓட்டு போட்டுட்டு வாரேன்....

டக்கால்டி said...

ayyayo mano vera irukkaru

டக்கால்டி said...

aruvaal kalaacharathai cinema la kondu vanthathu hari.

blog la konduvanthathu annan mano thaan..

he he

King Viswa said...

ஏங்க,
காதல் மெய்ப்பட வேண்டும் (தமிழ்),

நேனு நா ராட்சஷி (தெலுகு),

ஷோர் இன் தி சிடி, சலோ டில்லி (ஹிந்தி),

கஜ வீரன் தோர் (ஆங்கில டப்பிங்),

என்று எவ்வளவு படங்கள் நேத்திக்கு ரிலீஸ் ஆகி இருக்கு? அதையெல்லாம் விமர்சனம் பண்ணாம இது என்ன?


கிங் விஸ்வா
சென்னை சூப்பர் கிங்ஸ் சித்திரக்கதை-சென்னை சூப்பர் கோமிக்ஸ்

லேட்டஸ்ட் காமிக்ஸ் தகவல்கள்-காமிக் கட்ஸ்

டக்கால்டி said...

@ Vishwa...

Annan mukthi adainjutaaru

Unknown said...

குறை ஒன்றும் இல்லை சிபி.............அய்யய்யோ சாமி பதிவு போட்டுட்டான்...நான் ஒன்னும் சொல்லமாட்டேன்னு நெனச்சிட்டியா!

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

குறை ஒன்றும் இல்லை சிபி.............அய்யய்யோ சாமி பதிவு போட்டுட்டான்...நான் ஒன்னும் சொல்லமாட்டேன்னு நெனச்சிட்டியா!

haa haa சாமி கண்ணை குத்தும்

சி.பி.செந்தில்குமார் said...

King Viswa said...

ஏங்க,
காதல் மெய்ப்பட வேண்டும் (தமிழ்),

நேனு நா ராட்சஷி (தெலுகு),

ஷோர் இன் தி சிடி, சலோ டில்லி (ஹிந்தி),

கஜ வீரன் தோர் (ஆங்கில டப்பிங்),

என்று எவ்வளவு படங்கள் நேத்திக்கு ரிலீஸ் ஆகி இருக்கு? அதையெல்லாம் விமர்சனம் பண்ணாம இது என்ன?

அண்ணே... எல்லா டைப்பிட்டிருக்கேன். திங்கள், செவ்வாய் புதன் என தினமும் 1 போடரேன் . சனி ஞாயிறு கூட்டம் வராததால் காப்பி பேஸ்ட் பதிவு ஹி ஹி

King Viswa said...

//எல்லா டைப்பிட்டிருக்கேன். திங்கள், செவ்வாய் புதன் என தினமும் 1 போடரேன் . சனி ஞாயிறு கூட்டம் வராததால் காப்பி பேஸ்ட் பதிவு ஹி//

பின்னுறீங்களே பாஸ்.

//Annan mukthi adainjutaaru//

சரி யாரு அந்த முக்தி? அவங்கள எப்படி அடஞ்சீங்க?

எல் கே said...

ஹ்ம்ம் நல்ல பதிவு சித்தப்பு

சி.பி.செந்தில்குமார் said...

>>டக்கால்டி said...

@ Vishwa...

Annan mukthi adainjutaaru

நான் என்ன நித்யானந்தாவா? அல்லது விக்கி தக்காளியா?

சி.பி.செந்தில்குமார் said...

எல் கே said...

ஹ்ம்ம் நல்ல பதிவு சித்தப்பு

April 30, 2011 8:01 PM

நன்றி பெரியப்பா

சக்தி கல்வி மையம் said...

நான் என்ன நித்யானந்தாவா? அல்லது விக்கி தக்காளியா?/// ரெண்டு பேரும் ஒன்னுன்னு சொல்லரியா?

சி.பி.செந்தில்குமார் said...

King Viswa said...

நம்ம சிபிக்கு என்னமோ ஆய்டுச்சு. சம்பந்தமே இல்லாம ஆன்மீக பதிவா வருதே?

நண்பா.. உங்க லிஸ்ட்ல சஞ்சய் ராம் =-ன் பூவா தலையா விட்டுட்டீங்களே?

சக்தி கல்வி மையம் said...

எல் கே said...

ஹ்ம்ம் நல்ல பதிவு சித்தப்பு //////
உன் வயசு இப்போ தெரிஞ்சு போச்சு ?

சக்தி கல்வி மையம் said...

விக்கி எங்கய்யா போன?

Unknown said...

உனக்கு இப்போ என்ன பிரச்சன.........எதுக்கு இப்போ bachelor கடவுள கூப்பிட்ட சொல்லுய்யா.......!

Unknown said...

அடப்பாவிகளா ஏன்டா இப்படி!

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

உனக்கு இப்போ என்ன பிரச்சன.........எதுக்கு இப்போ bachelor கடவுள கூப்பிட்ட சொல்லுய்யா.......!

பிரச்சனை இருக்கறப்பத்தான் கடவுளைக்கூப்பிடனும்னு நினைக்கறவன் சுயநல வாதி..
யாருக்கும் எந்த பிரச்ச்னையும் வரக்கூடாதுன்னு பிரார்த்தனை பண்னறவன் பொது நல வாதி

சி.பி.செந்தில்குமார் said...

* வேடந்தாங்கல் - கருன் *! said...

நான் என்ன நித்யானந்தாவா? அல்லது விக்கி தக்காளியா?/// ரெண்டு பேரும் ஒன்னுன்னு சொல்லரியா?

ரெண்டு பேருக்கும் வித்தியாசம் இருக்கு. நித்யானந்தாவுக்கு ரஞ்சிதாவால மட்டும் தான் பிரச்ச்னை.. விக்கி தக்காளிக்கு.. ஹி ஹி சென்சார்

Unknown said...

"சி.பி.செந்தில்குமார் said...
விக்கி உலகம் said...

உனக்கு இப்போ என்ன பிரச்சன.........எதுக்கு இப்போ bachelor கடவுள கூப்பிட்ட சொல்லுய்யா.......!

பிரச்சனை இருக்கறப்பத்தான் கடவுளைக்கூப்பிடனும்னு நினைக்கறவன் சுயநல வாதி..
யாருக்கும் எந்த பிரச்ச்னையும் வரக்கூடாதுன்னு பிரார்த்தனை பண்னறவன் பொது நல வாதி"

>>>>>>>>>>>

ராஜா கண்ணு உன்ன ஆண்டவன்தான் காப்பத்தனும் ஸ் ஸ் கண்ணா கட்டுதுரா கணேசா!

Unknown said...

" சி.பி.செந்தில்குமார் said...
* வேடந்தாங்கல் - கருன் *! said...

நான் என்ன நித்யானந்தாவா? அல்லது விக்கி தக்காளியா?/// ரெண்டு பேரும் ஒன்னுன்னு சொல்லரியா?

ரெண்டு பேருக்கும் வித்தியாசம் இருக்கு. நித்யானந்தாவுக்கு ரஞ்சிதாவால மட்டும் தான் பிரச்ச்னை.. விக்கி தக்காளிக்கு.. ஹி ஹி சென்சார்"

>>>>>>>>>

என்னை தாக்கி கொடுமையான பல அர்த்தங்கள் நிறைந்த விஷயங்களை பதியும் நீ.........நல்லவனா......!

சக்தி கல்வி மையம் said...

சி.பி.செந்தில்குமார் said...

* வேடந்தாங்கல் - கருன் *! said...

நான் என்ன நித்யானந்தாவா? அல்லது விக்கி தக்காளியா?/// ரெண்டு பேரும் ஒன்னுன்னு சொல்லரியா?

ரெண்டு பேருக்கும் வித்தியாசம் இருக்கு. நித்யானந்தாவுக்கு ரஞ்சிதாவால மட்டும் தான் பிரச்ச்னை.. விக்கி தக்காளிக்கு.. ஹி ஹி சென்சார் ////
உன்னோட பழக்கத்த எல்லாம் ஏன்யா சொல்ற விக்கி நல்லவன்யா

Unknown said...

நான் என்னமோ play boy கணக்கா சொல்லிட்டு திரியும் நண்பர்களுக்கு...........
ஒன்னு சொல்லிக்கறேன்....
மனசாட்சின்னு ஒன்னு இருக்கறவன் மனுஷன்!

Unknown said...

பதிவ போட்ட நீ பதிவ படிச்சியா காப்பி அடிச்சியா...........ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

>> விக்கி உலகம் said...

நான் என்னமோ play boy கணக்கா சொல்லிட்டு திரியும் நண்பர்களுக்கு...........
ஒன்னு சொல்லிக்கறேன்....
மனசாட்சின்னு ஒன்னு இருக்கறவன் மனுஷன்!

ஆமா.. அதே போல் மனைவியும் ஒண்ணூ தான் இருக்கனும் ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

>>விக்கி உலகம் said...

பதிவ போட்ட நீ பதிவ படிச்சியா காப்பி அடிச்சியா...........ஹிஹி!

ஆங்கிலப்படம் விமர்சனம் போட ஆங்கிலம் தெரிந்திருக்கனுமாஎன்ன?

King Viswa said...

// உங்க லிஸ்ட்ல சஞ்சய் ராம் =-ன் பூவா தலையா விட்டுட்டீங்களே//

சஞ்சய் ராமின் பூவா? தலையா? (போட்டுப்பார்) என்ற படத்தின் தலைப்பை வெறும் பூவா? தலையா? என்று மட்டுமே கூறிய சிபிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். குறிப்பாக அந்த (போட்டுப்பார்) என்ற வாசகம் ஷெரினின் இடுப்புக்கு கீழே சைடில் அச்சிடப்பட்டு இருக்கும்போது அதை எப்படி மறக்கலாம்?

நேற்று ஏன் நண்பர் சென்னை மவுன்ட் ரோட் அண்ணா தியேட்டருக்கு மதியம் ஒரு மணி காட்சிக்கு சென்றார். படப்பெட்டி வராததால் மறுபடியும் காவலன் படம் பார்த்துவிட்டு வந்தாராம். இன்றுதானே அது ரிலீஸ்?

Unknown said...

"சி.பி.செந்தில்குமார் said...
>> விக்கி உலகம் said...

நான் என்னமோ play boy கணக்கா சொல்லிட்டு திரியும் நண்பர்களுக்கு...........
ஒன்னு சொல்லிக்கறேன்....
மனசாட்சின்னு ஒன்னு இருக்கறவன் மனுஷன்!

ஆமா.. அதே போல் மனைவியும் ஒண்ணூ தான் இருக்கனும் ஹி ஹி"

>>>>>>>>>>>>

நான் என்ன ஊரெல்லாம் வச்சிட்டா திரியிறேன்......அழகா இருக்கறத ரசிக்கறது தப்பில்ல........பிட்டா பாக்குறது தான் தப்பு ஹிஹி!

அப்படி பிட்ட பாத்து புட்டு பொண்டாட்டி கிட்ட நல்லவன் மாதிரி நடிக்கறது அதவிட தப்பு ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

King Viswa said...

// உங்க லிஸ்ட்ல சஞ்சய் ராம் =-ன் பூவா தலையா விட்டுட்டீங்களே//

சஞ்சய் ராமின் பூவா? தலையா? (போட்டுப்பார்) என்ற படத்தின் தலைப்பை வெறும் பூவா? தலையா? என்று மட்டுமே கூறிய சிபிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.

illai.. இல்லை ஈரோட்ல நேத்தே ரிலீஸ். பார்த்துட்டேன் , நீங்க சொன்ன படி முழுசா சொல்லததுக்கு காரணம் இருக்கு

1. நான் ஒரு கண்ணியமான பதிவர்

2. எனக்குன்னு ஒரு இது இருக்கு.. எது? அதான்யா இமேஜ்

ஹே ஹே ஹே

MANO நாஞ்சில் மனோ said...

//டக்கால்டி said...
aruvaal kalaacharathai cinema la kondu vanthathu hari.

blog la konduvanthathu annan mano thaan..

he he//

அடபாவி வாயை வச்சிட்டு சும்மா இரும்ய்யா....

Unknown said...

பதிவு பக்தி பதிவு! பேசுறது எல்லாமே அருவருக்கத்தக்க விஷயங்கள்.......
ஆண்டவா!

Anonymous said...

விநாயகனே வினை தீர்ப்பவனே ))))

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

பதிவு பக்தி பதிவு! பேசுறது எல்லாமே அருவருக்கத்தக்க விஷயங்கள்.......
ஆண்டவா!

ஆண்டவன் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறான்

MANO நாஞ்சில் மனோ said...

//ரெண்டு பேருக்கும் வித்தியாசம் இருக்கு. நித்யானந்தாவுக்கு ரஞ்சிதாவால மட்டும் தான் பிரச்ச்னை.. விக்கி தக்காளிக்கு.. ஹி ஹி சென்சார்///


பத்தவச்சிட்டியே பரட்டை....

MANO நாஞ்சில் மனோ said...

//என்னை தாக்கி கொடுமையான பல அர்த்தங்கள் நிறைந்த விஷயங்களை பதியும் நீ.........நல்லவனா......!//


சபாஷ் சரியான போட்டி.....

சென்னை பித்தன் said...

பதிவில் பிள்ளையார் பட்டி பத்தி எதுவுமே இல்லை?!

நிரூபன் said...

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை.
- கபிலதேவநாயனார்

பொருள்: செல்வம், செய்தொழிலில் மேன்மை, வாக்கு வளம், உண்மையான பெருமை, உருவப் பொலிவு... இவை யாவும், ஆனைமுகத்தானை உள்ளன்புடன் வணங்கும் அடியாருக்குக் கைகூடும்.///

என்னம்மோ நடக்கிறதே....

சிபியின் ஆன்மீகப் பதிவுகளில் தேவாரங்களும், அதற்கான பொழிப்புரைகளும்..
அருமையாக இருக்கின்றன.

இன்னும் கொஞ்ச நாளில் தமிழில், சமயத்தில், பொழிப்புரை ஏதுமின்றி தேவாரங்கள் இருந்தால், அதனை மொழி பெயர்க்கும் முயற்சியிலும் சிபி இறங்கி விடுவார் போலிருக்கிறதே.

நிரூபன் said...

இஷ்ட தெய்வத்தின் பெருமைகளை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

பிள்ளையார் சுழி போட்டு
நீ நல்லதைத் தொடங்கி விடு..
என்று ஒரு பாடல் இருக்கிறது.

ராஜி said...

பக்தி செலுத்த எளிமையான கடவுள் பிள்ளையார், வெறும் களிமண் அல்லது பசு சாணத்தை உருட்டி வைத்தால் பிள்ளையார், அர்ச்சிக்க பூக்கள் கூட வேண்டாம் அருகம்புல்லே போதும். அவர் பற்றிய தகவலை தந்தமைக்கு நன்றி சிபி

செங்கோவி said...

நல்ல பகிர்வு..இதுவரை செஞ்ச பாவம் எல்லாம் தீரட்டும்!

Anonymous said...
This comment has been removed by the author.
உணவு உலகம் said...

என்ன நடக்குது இங்கே? பிள்ளையார் பற்றி பதிவ போட்டுட்டு, பிட்டு படம் பார்க்கற கதையெல்லாம் ஓடுது!

உணவு உலகம் said...

ஆஹா! அம்பதாவது வடை எனக்குதான்!

உணவு உலகம் said...

//செங்கோவி said...
நல்ல பகிர்வு..இதுவரை செஞ்ச பாவம் எல்லாம் தீரட்டும்!//
இது ரைட்டு!

Unknown said...

பதிவில் இருப்பது உண்மைதான் விநாயகர் எதனையும் கருவியாக்கிக்கொள்பவர், அவ்வாறு இருந்தும் தன் கருவியாகிய மௌசை நமக்கு கருவியாக தந்துவிட்டார்.

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.