Saturday, April 16, 2011

வேலூர், நாமக்கல் கோயில்களுக்குப்போனால் மோட்சம் கிடைக்குமா?ஆன்மீகத்தேடல்

ந்தப் பிறப்பில் மட்டுமல்ல, ஏழேழு பிறவிக்கும் நமக்குக் காப்பு, ஸ்ரீமந் நாராயணனின் பாதாரவிந்தங்களே! மனைவி-மக்கள், உற்றார்-உறவுகள், சொத்து-சுகங்கள் ஆயிரம் இருந்தாலும், இந்த ஜென்மம் முடிந்தபின், நம்மைப் பற்றித் தொடர்வது, எம்பெருமானின் திருவருள் ஒன்றுதான். 


கோதை ஆண்டாளும், 'இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான் நம்முடையவன் நாராயணன் நம்பி...’ என்று நாச்சியார் திருமொழியில் குறிப்பிடுகிறாள். ஆமாம்...
இறைவனுக்கும் நமக்குமான உறவு ஒன்றே நிலையானது.

 http://2.bp.blogspot.com/_8aO6Y6wBh74/SJ0VXy77mQI/AAAAAAAAADY/iJ71UeW_YvE/s400/ennappan.jpg
இந்த சூட்சுமத்தை அறிந்துகொண்டதால்தானே ரிஷிகளும், மகான்களும், ஆழ்வார்களும், ஆச்சார்யர்களும்... இவர்களுக்கெல்லாம் முன்னதாக கிருத யுகத்தில் பக்த பிரகலாதனும் பரந்தாமனின் பாத கமலங்களைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டார்கள். அதற்கு, அவர்களுக்கு உறுதுணை புரிந்தது... 'ஓம் நமோ நாராயணாய’ எனும் எட்டெழுத்து மந்திரம்!


மந்திரங்கள் ஒவ்வொன்றுக்கும் உரிய ரிஷி, தேவதை, சந்தஸ் எனத் தனித்தனியே உண்டு. ஆனால், எல்லா உயிர்களிலும் உயிராகவும் உடலாகவும் திகழும் பரம்பொருளே அஷ்டாட்சர மந்திரத்தின் தேவதையாகவும் ரிஷியாகவும் சந்தஸாகவும் திகழ்கிறாராம்! எனில், இதை உச்சரிப்பதால் கிடைக்கும் நன்மையைச் சொல்லவும் வேண்டுமா?! 

'மலைகளின் அருகில் அல்லது மனித நடமாட்டம் இல்லாத அமைதியான சூழலில் தனித்திருந்து, இதயத்தில் என்னை இருத்தி, அஷ்டாட்சர மந்திரம் ஜபிக்க... சகல சௌபாக்கியங்களும் தருவேன்’ என்று பகவானே அருளியிருப்பதாகச் சொல்வார்கள் ஆன்மிக ஆன்றோர்கள்.
 http://1.bp.blogspot.com/_0k6NigfgclQ/TLPNV-6kl1I/AAAAAAAAABI/MBcVIWwGtLM/s320/AndalKalyanam.JPG

நாமும் அனந்தனை மனதில் இருத்தி, அஷ்டாட்சர மந்திரத்தை உதட்டில் வைத்து, பரம்பொருள் சொன்னது போலவே மலைகளை நாடிச் செல்வோம்! எட்டெழுத்தால் தன்னைக் கட்டிப்போட்ட பாலகன் பிரகலாதனுக்காக அவதரித்த நரசிம்மப் பரம்பொருளின் மலைக்கோயில்கள் சிலவற்றைத் தரிசித்து வருவோம்!


திருவருள் தரும் திருக்கடிகை
வேலூர் மாவட்டம், அரக்கோணத்தில் இருந்து சுமார் 28 கி.மீ. தொலைவில் உள்ளது சோளிங்கர். ஒரு கடிகைப் பொழுது அதாவது சுமார் அரை மணி நேரம் (ஒரு கடிகை - 24 நிமிடம்) தங்கியிருந்தாலே மோட்சம் தரும் அற்புதத் தலம் இது. 

எனவே, திருக்கடிகை என்று திருப்பெயர்! ஆதி அந்தம் இல்லாத பரம்பொருளின் பிரமாண்டத்தை உணர்த்துவது போல் ஓங்கியுயர்ந்து திகழ்கிறது சோளிங்கர் மலை. அடிவாரத்தில் இருந்து சுமார் 1305 படிகள் ஏறிச் சென்று ஸ்ரீயோக நரசிம்மரை தரிசிக்க வேண்டும்.


இரண்யகசிபுவை அழித்தும் ஆக்ரோஷம் தணியாத நரசிம்மருக்கு, பிரகலாதனின் பால்வடியும் முகம் கண்டு கோபம் தணிந்தது. பிறகு, உலக மக்கள் யாவருக்கும் அருளும் விதம் கோயில் கொண்டு, யோகத்தில் ஆழ்ந்த தலமே இந்த சோளிங்கர். சோளிங்கரின் மேன்மை அறிந்த சப்த ரிஷிகள், பிரகலாதனுக்கு அருளிய ஸ்ரீநரசிம்மரின்


தரிசனத்தை காண விரும்பி இங்கே வந்து தவம் செய்தனராம். அப்போது, கும்போதரர், காலகேயர் ஆகிய அசுரர்களின் கொட்டம் இங்கு அதிகம். இவர்களால் முனிவர்களின் தவத்துக்கு பங்கம் நேரக்கூடாது என்று விரும்பிய இறைவன், அனுமனிடம் சங்கு- சக்ராயுதத்தைக் கொடுத்து அசுரர்களை அடக்கும்படி பணித்தார். 

அதன்படியே இந்திரத்யும்னன் எனும் மன்னனின் சைனியத்துடன் சென்று அசுரர்களை அழித்தார் அனுமன். அதன் பிறகு, முனிவர்களுக்கும் அனுமனுக்கும் காட்சி தந்தார் ஸ்ரீநரசிம்மர். அதுமட்டுமா? ஸ்ரீநரசிம்மரின் ஆணைப்படி அனுமனும் சங்கு- சக்கரத்துடன் அருகில் உள்ள சின்ன மலையில் யோக நிலையில் கோயில் கொண்டாராம்!

மலையின்மீது அழகிய ராஜகோபுரத்துடன் திகழும் கோயிலில், ஸ்ரீயோக நரசிம்மருக்கும் அமிர்தபலவல்லித் தாயாருக்கும் தனித்தனி சந்நிதிகள். கருவறையில், ஹேம கோட்டி விமானத்தின் கீழ், சதுர்புஜநாயகராக கிழக்கு திருமுக மண்டலமாக அருள்கிறார் ஸ்ரீநரசிம்மர்.

மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
புக்கானைப் புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையை
தக்கானைக் கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த
அக்காரக் கனியை அடைந்துய்ந்து போனேனே 
- எனத் திருமங்கையாழ்வார் போற்றும் இந்தத் தலத்தின்
ஸ்ரீயோக நரசிம்மர், வருடத்தில் 11 மாதம் யோகத்தில் ஆழ்ந்திருப்பாராம். அவர் கண் விழித்திருக்கும்  கார்த்திகை மாதத்தில்... ஞாயிற்றுக்கிழமைகளில் ஸ்வாமியை வழிபடுவது விசேஷம். தை மாதம் 3-ஆம் நாள் ஸ்வாமியே கிரிவலம் வருவது இந்தத் தலத்தின் சிறப்பு.

இங்கு வந்து அடிவாரத்தில் இருக்கும் தக்கான் குளத்தில் நீராடி, விரதமிருந்து, மலைக்கு மேல் ஏறி ஸ்வாமியைத் தரிசித்து வழிபட்டால், பில்லி-சூனியம் போன்ற சகல தீவினைகளும், பிணிகளும் நீங்குமாம்!

திருமார்பில் திருமகள்! 

நாமக்கல்- கம்பீரமாக அமைந்திருக் கும் கோட்டை- கொத்தளங்கள் வரலாற் றுச் சிறப்பையும், திருக்கோயில்கள் ஆன்மிக மகிமையையும் பறைசாற்றும் அற்புதத் திருத்தலம் இது.

லட்சுமணனுக்காக சஞ்சீவி மூலிகை எடுக்கச் சென்ற அனுமன், வழியில் கண்டகி நதிதீரத்தில் அற்புதமான சாளக்கிராம கல் ஒன்றைக் கண்டு, எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டார். அவர் திரும்பி வரும் வழியில், பூமியில் கமலாலயக் குளத்தைக் கண்டு தரையிறங்கி, சற்றே களைப்பாறினார். 

அது, லட்சுமிதேவியின் தபோவனமாக இருந்தது. சாளக்கிராமத்தைக் கீழே வைத்துவிட்டு, எம்பெருமானை தியானித்து தவம் செய்யும் தாயாரை வழிபடச் சென்றார் அனுமன். அவர் திரும்பி வருவதற்குள், சாளக்கிராமம் பெரும் மலையாக வளர்ந்து விட்டதாம்!


அதேபோல்... களைப்பாறத் தரை இறங்கிய அனுமன், அங்கு திருமகள் தவமிருந்து வழிபடுவதைக் கண்டார். தேவியை வணங்கி தவத்துக்கான காரணம் கேட்க, திருமாலை ஸ்ரீநரசிம்ம வடிவில் தரிசிக்க வேண்டி தவமிருப்ப தாகச் சொன்னார் அன்னை. 

பிறகு, சாளக்கிராமத்தை அவரிடம் தந்த அனுமன், தான் நீராடிவிட்டு வந்து பெற்றுக் கொள்வதாகச் சொன்னார். 'குறிப்பிட்ட நேரத்துக்குள் வராவிட்டால் சாளக்கிராமத்தை தரையில் வைத்துவிடு வேன்’ எனும் நிபந்தனையுடன் அதைப் பெற்றுக்கொண்டார் லட்சுமிதேவி. அனுமன் வரத் தாமதமாகவே, லட்சுமி தேவி சாளக்கிராமத்தை தரையில் வைத்த தாகவும், அது பெரும் மலையாக வளர, அந்த மலையின் மீது ஸ்ரீநரசிம்மர் தோன்றி திருமகளுக்கு அருளியதாகவும்  ஒரு வரலாறு சொல்வர்.
 http://www.dinamani.com/Images/article/2009/7/17/17velli6.jpg

கோட்டையில் பிரமாண்ட திருவுருவத்துடனும், குளக்கரையில் சிறிய வடிவின ராகவும் அருள்புரிகிறார் அனுமன். அனுதினமும் தன்னைத் தேடி வரும் அடியவர்களுக்கு வரம் வாரி வழங்கிக் கொண்டிருக்கும் ஸ்ரீஆஞ்சநேயர், தனக்கு அருள் வேண்டி எதிர்நோக்கி இருப்பது, ஸ்ரீயோக நரசிம்மரின் திருக்கோயிலை!

அனுமனை எதிர்நோக்கியபடி அமைந்துள்ளது ஸ்ரீநரசிம்மர் சந்நிதி. மலை யைக் குடைந்து சந்நிதி அமைத்திருக் கின்றனர். திருமகள் இவர் திருமார்பில் உறைந்திருப்பது விசேஷ அம்சம்! குடைவரை மூர்த்தி என்பதால், ஸ்வாமிக்கு அபிஷேகம் கிடையாது; உற்ஸவருக்கே திருமஞ்சனம் நடைபெறுகிறது.


இவரது சந்நிதிக்கு வடக்கே ஸ்ரீவைகுண்ட நாராயண  மூர்த்தியைத் தரிசிக்கலாம். ஸ்வாமி நரசிம்ம அவதாரம் எடுப்பது குறித்து, மும்மூர்த்தியரும் கூடி ஆலோசித்தது இங்குதான் என்கிறார்கள்.  இந்தத் தலத்தில் கோயில்கொண்டிருக்கும் ஸ்ரீநாமகிரி தாயாரும் வரப்பிரசாதியே! கல்வி- கேள்விகளில் சிறந்து விளங்க இந்தத் தாயாரை வழிபடுவது சிறப்பு.

 http://3.bp.blogspot.com/-nkKIudPp2nk/TZtO47YsfYI/AAAAAAAACvk/Wbwzwwy1BGQ/s320/hanuman12.jpg
மலைக்கு இடப்புறம் பேட்டையில் ஸ்ரீரங்கநாதர் கோயில் கொண்டிருக்கிறார். தந்தை காசியப முனிவரிடமே சாபம் பெற்ற கார்க்கோடகன், விமோசனம் வேண்டி இங்கு தவம் செய்தான். அவனுக்குக் காட்சி தந்த பெருமாளிடம், தன் மீது சயனித்து அருளும்படி வேண்டிக்கொண்டான். அதன்படியே கார்க்கோடகன் மீது சயனித் திருக்கிறார் இந்த ரங்கநாதர்.

நினைத்தது நிறைவேறவும்; தொழில் சிறக்கவும், உயர்பதவி வாய்க்கவும், எதிர்காலம் வளமாகவும் சனிக்கிழமை களில் நாமக்கல் அனுமனையும் ஸ்ரீநரசிம்ம ரையும் ஸ்ரீநாமகிரி தாயாரையும் வழிபட்டுச் செல்கின்றனர் பக்தர்கள்!இந்த மேட்டர் பக்தி விகடனில் இருந்து எடுக்கப்பட்டது.நன்றி டூ விகடன் குரூப்

69 comments:

Unknown said...

ஆண்டவரே இந்த பதிவர காப்பாத்தும்!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சுண்டல்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

///
விக்கி உலகம் said...

ஆண்டவரே இந்த பதிவர காப்பாத்தும்!////

சாமிகிட்டே சிபியை போட்டுக் கொடுக்கறையா...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

பிரசாதம்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

புளிசாதம்..

இருங்க அப்படியே ஒரு எட்டு படிச்சிட்டு வர்றேன்..

Unknown said...

ஆண்டவன் உன்ன நல்லவன்னு நெனசிடுவானோ டவுட்டு!

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

ஆண்டவரே இந்த பதிவர காப்பாத்தும்!

hi hi உன்னையா?என்னையா?

சி.பி.செந்தில்குமார் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...

///
விக்கி உலகம் said...

ஆண்டவரே இந்த பதிவர காப்பாத்தும்!////

சாமிகிட்டே சிபியை போட்டுக் கொடுக்கறையா...

தக்காளிக்கு மெயின் வேலையே போட்டுக்குடுக்கறது தான்.. ஹா ஹா

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

i am also on line

Speed Master said...

இது சிபி யோட பிளாக் தானா?


என்னமே மேட்டர் இருக்கு

தீடிர்னு இப்படி மாறிட்டாரு

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

ஆண்டவன் உன்ன நல்லவன்னு நெனசிடுவானோ டவுட்டு!

உன்னை மாதிரி பகல்வேஷக்காரர்களை அடிக்கப்போறார் ரிவீட்டு ஹி ஹி

கவிதை வீதி... // சௌந்தர் // said...

பக்கி பரவசமூட்டும் சிறந்த பதிவு..
சோளிங்கர் கோயிலுக்கு நான் இரு முறை சென்றிருக்கிறேன் நண்பரே...

வாழ்த்துக்கள்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

////
Speed Master said...

இது சிபி யோட பிளாக் தானா?
என்னமே மேட்டர் இருக்கு
தீடிர்னு இப்படி மாறிட்டாரு///////

இந்த வெள்ளிக்கிழமை படம் எதும் ரிலீஸ் இல்லை...

அப்ப சிபியை நல்ல பதிவா போடணுன்னா படம் எதும் ரிலீஸ் ஆகக்கூடாது..
அப்படித்தானே சிபி..

Unknown said...

"விக்கி உலகம் said...

ஆண்டவன் உன்ன நல்லவன்னு நெனசிடுவானோ டவுட்டு!

உன்னை மாதிரி பகல்வேஷக்காரர்களை அடிக்கப்போறார் ரிவீட்டு ஹி ஹி"

>>>>>>>>>>>>

யார் பகல் வேஷக்காரன் என்பது நாடறியும் ஹிஹி!

Unknown said...

"# கவிதை வீதி # சௌந்தர் said...
///
விக்கி உலகம் said...

ஆண்டவரே இந்த பதிவர காப்பாத்தும்!////

சாமிகிட்டே சிபியை போட்டுக் கொடுக்கறையா...'

>>>>>>>>>>>>>>

அந்தால அவங்க வீட்டு மாமிக்கிட்ட போட்டு கொடுக்கணும் ஹிஹி!

மாப்ள சவுந்தர் ஏன்யா நீ இந்த உத்த்மனுக்காக பேசுற ஹிஹி!

Speed Master said...

ஓ அதான் மேட்டரா
என்ன சிபி கவலையா இருக்கீங்க போல

பொன் மாலை பொழுது said...

என்ன சி.பி.? சமீபத்தில் மம்மி இங்கே விசிட் அடிச்சாங்களா என்னா? திடீரென்று பெருமாள் பக்தனாக வேஷம் கட்ட ஆரம்பித்துவிட்டீர்களே!
:))))

சி.பி.செந்தில்குமார் said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

i am also on line

நண்பா.. நீங்களும் . விக்கியும் பெண்லைன்ல தானே இருப்பீங்க? ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

Speed Master said...

இது சிபி யோட பிளாக் தானா?


என்னமே மேட்டர் இருக்கு

தீடிர்னு இப்படி மாறிட்டாரு

ஒரு மேட்டரும் இல்லய்யா அட அடா

சி.பி.செந்தில்குமார் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...

பக்கி பரவசமூட்டும் சிறந்த பதிவு..
சோளிங்கர் கோயிலுக்கு நான் இரு முறை சென்றிருக்கிறேன் நண்பரே...

வாழ்த்துக்கள்...

அடடே.. வெரிகுட்

சி.பி.செந்தில்குமார் said...

ஓ அதான் மேட்டரா
என்ன சிபி கவலையா இருக்கீங்க போல

April 16, 2011 4:15 PM
Delete
Blogger கக்கு - மாணிக்கம் said...

என்ன சி.பி.? சமீபத்தில் மம்மி இங்கே விசிட் அடிச்சாங்களா என்னா? திடீரென்று பெருமாள் பக்தனாக வேஷம் கட்ட ஆரம்பித்துவிட்டீர்களே!
:))))

ஹா ஹா மம்மிக்கும் நமக்கும் ஆகாது நீங்க வேற .. சொந்த அம்மாவை மட்டுமே ஆதரிப்பேன்.. அது என் கடமை.. போயஸ் அம்மாவை ஆதரிப்பது மடமை

சி.பி.செந்தில்குமார் said...

Speed Master said...

ஓ அதான் மேட்டரா
என்ன சிபி கவலையா இருக்கீங்க போல

இன்று இரவு 9 மணீக்கு ஒரு கில்மா பதிவு ஹி ஹி அதுக்கான பிராயசித்தத்தை முன் கூட்டியே .... ஹி ஹி

Unknown said...

சண்டைக்கு துடிக்கும் சிபி கடவுளை வணங்கிவிட்டு வருவதாக சொன்னானே இதுதானா ஹிஹி!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

சென்னிமலை நாதா - சி பி யை

வசை செய்ய எனக்கு நா தா!

MANO நாஞ்சில் மனோ said...

முதல்ல நமீதாவுக்கு வணக்கம்....

MANO நாஞ்சில் மனோ said...

என்னய்யா தடம் மாறி போனா மாதிரி இருக்கே...

MANO நாஞ்சில் மனோ said...

கி வீரமணிக்கு போனை போட்டு சிபி'யை தூக்குங்கலேய்....

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அறுபடை வீடுடை முருகா - இந்த சி பி க்கு

தினம் தினம் புதுப்படம் தா!

MANO நாஞ்சில் மனோ said...

//
சி.பி.செந்தில்குமார் said...
Speed Master said...

ஓ அதான் மேட்டரா
என்ன சிபி கவலையா இருக்கீங்க போல

இன்று இரவு 9 மணீக்கு ஒரு கில்மா பதிவு ஹி ஹி அதுக்கான பிராயசித்தத்தை முன் கூட்டியே .... ஹி //

என்கிட்டே மாட்டுன அன்னைக்கி உம்ம பருப்பை எடுத்துருவேன்....

ராஜி said...

நான் அட்ரா சக்கை பிளாக்குக்கு போகவேண்டிய ஆள், சாரி அட்ரஸ் மாறி வந்துட்டேன்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

/////Blogger MANO நாஞ்சில் மனோ said...

என்னய்யா தடம் மாறி போனா மாதிரி இருக்கே...///////

சிபி நல்லதா நாலு பதிவு போட்டா உங்களுக்கு பிடிக்காதே...

ஏங்க இப்படி ?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

கதிரமலை வீற்றிருக்கும் கந்தா - நான்

புலம்புகிறேன் இப்பதிவால் நொந்தா?

MANO நாஞ்சில் மனோ said...

பேஸ்புக் வேண்டுகோள் வச்சிருக்கேன் ஒப்பன் பண்ணு மக்கா...

MANO நாஞ்சில் மனோ said...

//ராஜி said...
நான் அட்ரா சக்கை பிளாக்குக்கு போகவேண்டிய ஆள், சாரி அட்ரஸ் மாறி வந்துட்டேன்///

ஹா ஹா ஹா ஹா நானும் அப்பிடிதான் நினச்சேன் முதல்ல.....

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நமிதாக்கு மனசு ரொம்ப பெருசு - சி பி

பண்ணுறாரே நம்மகூட ரவுசு!

MANO நாஞ்சில் மனோ said...

// கவிதை வீதி # சௌந்தர் said...
/////Blogger MANO நாஞ்சில் மனோ said...

என்னய்யா தடம் மாறி போனா மாதிரி இருக்கே...///////

சிபி நல்லதா நாலு பதிவு போட்டா உங்களுக்கு பிடிக்காதே...

ஏங்க இப்படி ?///

சிபி'யை நல்லவன்னு ஊரே ஸாரி உலகமே சொல்லுதே....

Speed Master said...

சிபி பிளாக் ஹேக் செய்யப்பட்டது

கவிதை வீதி... // சௌந்தர் // said...

///////
MANO நாஞ்சில் மனோ said...

// கவிதை வீதி # சௌந்தர் said...
/////Blogger MANO நாஞ்சில் மனோ said...

என்னய்யா தடம் மாறி போனா மாதிரி இருக்கே...///////

சிபி நல்லதா நாலு பதிவு போட்டா உங்களுக்கு பிடிக்காதே...

ஏங்க இப்படி ?///

சிபி'யை நல்லவன்னு ஊரே ஸாரி உலகமே சொல்லுதே.//////

ஆமாங்க....
அவரு நல்லவர்னா நாமும் அப்படித்தனே..

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

மனோவுக்கு சொந்த இடம் நாஞ்சில் - இந்த

பதிவுல நான் கண்டதெல்லாம் Non - ஜில்

( நடிகைகள் படம் போட்டா பதிவு ஜில்லுனு இருக்கும் னு சொல்ல வர்றேன் )

சக்தி கல்வி மையம் said...

நானும் லேட்டா வந்துட்டேன்..

சக்தி கல்வி மையம் said...

இப்புதிய களம் அருமை..
வாழ்த்துக்கள்..

ராஜி said...

யாராவது சொல்லுங்கபா நம்ம சிபி சாருக்கு என்னாச்சுனு?

ராஜி said...

மாற்றங்கள் வரவேற்கபடுகின்றன சிபி சார்.

போளூர் தயாநிதி said...

இப்புதிய களம் அருமை

Unknown said...

ஆன்மிக பகிர்வு நன்றாக இருக்கிறது.
தெய்வங்களின் திவ்விய தரிசனம் தந்ததற்கு நன்றிகள்.

MANO நாஞ்சில் மனோ said...

//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
மனோவுக்கு சொந்த இடம் நாஞ்சில் - இந்த

பதிவுல நான் கண்டதெல்லாம் Non - ஜில்

( நடிகைகள் படம் போட்டா பதிவு ஜில்லுனு இருக்கும் னு சொல்ல வர்றேன் )///

உம்மை பூச்சாண்டி கையில பிடிச்சி குடுத்துருவேன் ஜாக்கிரதை...

செல்வா said...

ஐ. இது செந்தில் அண்ணன் ப்லோக்கா ? யாரோ செந்தில் அண்ணன் ப்ளாக் க ஹேக் பண்ணிட்டாங்க போல .. ஹி ஹி

செல்வா said...

ஒரு கடிகைனா 24 நிமிடம் என்ற அறிய தகவலைத் தந்த செந்தில் அண்ணன் வாழ்க !!

செல்வா said...

ஏன் நீங்க விஸ்ணுவ கும்பிடச் சொல்லுறீங்க ?
நீங்க வைஷ்னவரா ? ஹி ஹி

செல்வா said...

அப்பாடி இன்னிக்காச்சும் ஐம்பது அடிச்சு வடை வாங்குறேன் .. இப்பத்தான் கொஞ்சம் ஆணி குறைஞ்சது. ஓ ,, இன்னிக்கு சனிக்கிழமைல . அதனான் பெருமாள் புராணமா ?

சி.பி.செந்தில்குமார் said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

மனோவுக்கு சொந்த இடம் நாஞ்சில் - இந்த

பதிவுல நான் கண்டதெல்லாம் Non - ஜில்

( நடிகைகள் படம் போட்டா பதிவு ஜில்லுனு இருக்கும் னு சொல்ல வர்றேன் )

அருமையான சொல்லாடல் நண்பா..

shanmugavel said...

சனிக்கிழமை பக்திப்படமா? நல்லாருக்கு

செல்வா said...

Where is the owner of this blog of the India of the America of the Pakistan of the Tamilnadu of the Erode of the CPS ?

சி.பி.செந்தில்குமார் said...

கோமாளி செல்வா said...

Where is the owner of this blog of the India of the America of the Pakistan of the Tamilnadu of the Erode of the CPS ?

hi hi ஹி ஹி உள்ளேன் அய்யா

சி.பி.செந்தில்குமார் said...

கோமாளி செல்வா said...

ஐ. இது செந்தில் அண்ணன் ப்லோக்கா ? யாரோ செந்தில் அண்ணன் ப்ளாக் க ஹேக் பண்ணிட்டாங்க போல .. ஹி ஹி

என்னது அண்ணனா? அப்ப அந்த பாரியூர் மேட்டரை போட்ர வேண்டியதுதான் கபர்தார்

ராஜி said...

ஒரு நிலையிலிருந்து மற்றோர் நிலைக்கு மாறனுமினா கொஞ்சம் கொஞ்சமா மாறினாதான் உடலுக்கும், உள்ளத்திற்கும் நல்லது. இப்படி தடாலடியா மாறிட்டா...????!!!!! பார்த்து சூதனமா நடந்துக்கோங்க

செல்வா said...

உண்ணாவிரத அழைப்பிதல்

இடம் : ஈரோடு பேருந்து நிலையம்.

நாள் : 17.04.2011

பொருள் : என்னை ஏமாற்றிய பிகர்கள் குறித்து.

பேரன்புகொண்ட வலையுலக நண்பர்களே ,

நமது CPS அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு என்னை ஏமாற்றிய பிகர்கள் என்ற நல்லதொரு படைப்பினை நமக்கு வழங்கினார்கள். ஆனால் அதான் தொடர்ச்சியாக வரவேண்டிய பதிவுகள் வராதது கண்டு நாம் மிக மனவருத்தத்தில் உள்ளோம். ஆதலால் அந்தப் பதிவின் அடுத்த பகுதியை உடனடியாக பதிவிட வேண்டும் என்றுகூறி கால வரையறை அற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆகவே இப்போராட்டத்தில் கலந்துகொள்ள இந்த அழைப்பு விடப்படுகிறது.

இவன்
என்னை ஏமாற்றிய பிகர்கள் தொடரின் ரசிகர் மன்றத் தலைவர் ,
செயலாளர் , பொருளார் மற்றும் உறுப்பினர்.

செல்வா said...

சரி சரி .. இனி வழக்கம் போல ஆணி வந்திரும் .. நான் வீட்டுக்குக் கிளம்புறேன் :-)

சி.பி.செந்தில்குமார் said...

கோமாளி செல்வா said...

உண்ணாவிரத அழைப்பிதல்

இடம் : ஈரோடு பேருந்து நிலையம்.

நாள் : 17.04.2011

பொருள் : என்னை ஏமாற்றிய பிகர்கள் குறித்து.

hi hi செல்வா.. கடந்த 20 நாட்களாக அரசியல் பதிவுல கான்சண்ட்ரேஷன்.. இனி தொடரும் நம்ம ரெகுலர் கில்மாக்கள் ஹி ஹி

மாதேவி said...

தலங்கள் சோளிங்கர்.....

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
விகடனுக்கும் நன்றி. உங்களுக்கும் நன்றி.
வாழ்த்துக்கள்.

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
ம.தி.சுதா said...

அனுமான்.. லக்சுமிக்கிடையில் இப்படி ஒரு தொடர்பிருக்கா இப்பத் தான் அறியுறன்... சீபி...

ம.தி.சுதா said...

ஏனையா புளொக்கில சொந்தச் செலவில சூனியம் வச்சிருக்கீர்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடுத்து ஒரு ஏடாகூடமான பதிவு ஒண்ணு இருக்குது போல.....? (அதுக்கு பிராயச்சித்தமாத்தான் இதா?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்போ அந்த 4 படத்தையும் பாத்தாச்சு.....?

நிரூபன் said...

ஆன்மீகப் பதிவின் மூலம் பல அரிய தகவல்களை, இதுவரை அறிந்திருக்காத இத் திருத்தலங்கள் பற்றி அறியக் கிடைத்தது. தமிழ் நாட்டுக்கு வந்தால் இத் தலங்களுக்கும் விஜயம் செய்து பார்க்க வேண்டும் எனும் எண்னம் உருவாகிறது.
என் பின்னூட்டங்களைச் சோதித்துப் பார்க்கும் சிபியின் வலைத் தளத்தில் நான் கட் காப்பி, பண்ணி பின்னூட்டம் போட ஆஞ்ச நேயா நீ தான் அருள் புரியனும்!

எல் கே said...

சித்தப்பு காபி பேஸ்ட் பண்ணாலும் இது நல்ல விஷயம். தொடர்ந்து இந்த மாதிரி சில பதிவுகளைப் போடவும்

நேயர் விருப்பம்

எல் கே said...

//தமிழ் நாட்டுக்கு வந்தால் இத் தலங்களுக்கும் விஜயம் செய்து பார்க்க வேண்டும் எனும் எண்னம் உருவாகிறது.//

வாங்க நான் கூட்டிகிட்டு போறேன்