Sunday, April 17, 2011

12 ராசிகளுக்குமான தமிழ்ப்புத்தாண்டு கர வருட பலன்கள்.பிரபல ஜோதிடர்-ன் விகடன் கட்டுரை

கர வருட பலன்கள் !

 ஜோதிட ரத்னா' கே.பி.வித்யதரன்
1.மேஷம்: தைரியசாலிகளே! உங்களின் தனாதிபதியான சுக்கிரன், லாப வீட்டில் பலம் பெற்றிருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். 8.5.11 வரை குரு உங்கள் ராசிக்கு 12-ல் மறைந்திருப்பதால்... புது வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. 9.5.11 முதல் ஜென்ம குருவாக உங்கள் ராசிக்குள் வந்தமர்வதால் கவலை, உடல் உபாதை வரக்கூடும். 16.5.11 முதல், இந்த வருடம் முடியும் வரை ராகு, கேதுவின் சஞ்சாரம் சரியில்லாததால்... குடும்பத்தில் சலசலப்பு வந்து நீங்கும். 20.12.2011 வரை சனி பகவான் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் வலுவாக அமர்வதால்... புது வேலை கிடைக்கும். அயல்நாட்டுப் பயணம் அமையும். கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும். வியாபாரம் சுமாராக இருக்கும். ஆனால்... வைகாசி, தை மாதங்களில் லாபகரமாக அமையும். உத்யோகத்தில் ஆனி, மாசி மாதங்கள் நிம்மதி தரும்.

இந்தப் புத்தாண்டு, உங்கள் பலம், பலவீனத்தை உணர வைப்பதுடன், ஓரளவு நன்மையையும் தரும். 


பரிகாரம்: அருகிலுள்ள சிவாலயத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ தட்சணாமூர்த்தியை வணங்குங்கள். 

------------------------------------------

2.ரிஷபம்: கடின உழைப்பாளிகளே! இந்தப் புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் உங்கள் ராசிநாதனான சுக்கிரன், 10-ம் வீட்டில் பலமாக இருப்பதால், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். குருபகவான் 8.5.11 வரை 11-ம் வீட்டில் நிற்பதால், பணம் வரும். வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள்.

ஆனால், 9.5.11-ம் தேதி முதல் 12-ம் வீட்டுக்குள் நுழைவதால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வருடம் பிறக்கும்போது ராகு 8-ம் வீட்டிலும், கேது 2-ம் வீட்டிலும் நிற்பதால், வருங்காலம் பற்றிய பயம், களைப்பு வந்து செல்லும். 16.5.11 முதல் கேது ராசிக்குள் நுழைவதால்... ஏமாற்றம், உடல்நலக் கோளாறு வந்து நீங்கும். ராகு 7-ல் நுழைவதால்... கணவருடன் வாக்குவாதம் வரக்கூடும்.

ஆனி, ஆவணி மாதங்களில் மகளுக்கு நல்ல வரன், மகனுக்கு வேலை அமையும். 21.12.11 முதல் சனி பகவான் 6-ம் வீட்டுக்குள் நுழைவதால், அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் ஆனி, ஆடி மாதங்களில் வரவு உயரும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். சம்பள உயர்வு கிடைக்கும்.

இந்தப் புத்தாண்டு தொடக்கத்தில் உங்களை துவள வைத்தாலும், இறுதியில் வெற்றியைத் தரும். 

பரிகாரம்: அம்மன் ஆலயத்துக்கு சென்று குங்கும அர்ச்சனை செய்து வழிபடுங்கள். 

----------------------------

3.மிதுனம்: நடுநிலையாளர்களே! உங்கள் ராசிநாதனான புதன், நீசபங்க ராஜயோகம் அடைந்திருக்கும் நேரத்தில் இந்த கர ஆண்டு பிறப்பதால், புதிய திட்டங்கள்  நிறைவேறும். புது வீடு, மனை வாங்குவீர்கள். 10-ல் நின்று கொண்டு பிரச்னைகளைத் தந்து கொண்டிருக்கும் குருபகவான், 9.5.11 முதல் 11-ம் வீட்டுக்குள் நுழைவதால்... எதிர்பாராத பணவரவு உண்டு.

15.5.11 வரை ராசிக்குள் கேது நிற்பதால் கவலை, வீண் விரயம் வந்து செல்லும். வருடம் பிறக்கும்போது ராகு 7-ல் நிற்பதால், கணவருடன் சச்சரவு வந்து விலகும். 16.5.11 முதல் கேது ராசியை விட்டு விலகுவதால், உடல்நலக் கோளாறு நீங்கும். உயர்ரக ஆபரணங்கள் வாங்குவீர்கள். 20.12.11 வரை 4-ல் சனி பகவான் நிற்பதால், வேலைச்சுமை அதிகரிக்கும். 21.12.11 முதல் 5-ல் சனி நுழைவதால், பிள்ளைகள் கோபப்படுவார்கள்.

24.7.11 முதல் உங்கள் ராசிக்குள்ளேயே செவ்வாய் நீடிப்பதால்... வீண் டென்ஷன் ஏற்படலாம். சித்திரை, மாசி, பங்குனி மாதங்களில் புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள்.

இந்தப் புத்தாண்டு சில சறுக்கல்களை தந்தாலும், குருவின் அனுக்கிரகத்தால் வாழ்க்கைத் தரம் உயரும்.

பரிகாரம்: அருகிலுள்ள ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் குரு பகவானையும் குலதெய்வத்தையும் வணங்குங்கள்.  

--------------------------------
4.கடகம்: கடமை தவறாதவர்களே! உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் இந்த கர ஆண்டு பிறப்பதால், அனுபவ அறிவாலும், கனிவான பேச்சாலும் காரியம் சாதிப்பீர்கள். குரு 8.5.11 வரை 9-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் மதிப்பு, மரியாதை கூடும்.

பிள்ளைகளுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும். ஆனால், 9.5.11 முதல் குரு 10-ம் வீட்டுக்குள் நுழைவதால்... வீண் விமர்சனம் வரக்கூடும். வருடம் பிறக்கும்போது கேதுபகவான் 12-ம் வீட்டில் நிற்பதால், எவ்வளவு பணம் வந்தாலும் செலவாகும். ராகு 6-ம் வீட்டில் நிற்பதால், அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.

16.5.11 முதல் கேது லாப வீட்டுக்குள் வருவதால் பணம் வரும். 16.5.11 முதல் ராகு 5-ம் வீட்டுக்குள் வருவதால், பிள்ளைகள் சில சமயங்களில் உங்களைப் புரிந்து கொள்ள மாட்டார்கள். 20.12.11 வரை சனி பகவான் 3-ம் வீட்டில் பலமாக இருப்பதால், முயற்சிகள் வெற்றியடையும்.   வியாபாரத்தில் வைகாசி, ஆவணி மாதங்களில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில்... அதிகாரிகள் தவறுகளைச் சுட்டிக் காட்டினால் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள்.


இந்தப் புத்தாண்டு... வெகுளியாக இருந்த உங்களை சில நேரங்களில் சந்தர்ப்பவாதியாக மாற்றும்.

பரிகாரம்: பிரதோஷ தினத்தன்று வில்வ இலையால் சிவனுக்கு அர்ச்சனை செய்யுங்கள்

--------------------------

5.சிம்மம்: சிந்தனைவாதிகளே! சுக்கிரன் உங்களுக்கு சாதகமாக இருக்கும் நேரத்தில் இந்த வருடம் பிறப்பதால், வருமானம் உயரும். அதேசமயம், உங்கள் யோகாதிபதிகளான செவ்வாயும், குருவும் 8-ல் மறைந்திருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால்... வீண் விரயம், டென்ஷன் வந்து நீங்கும். கேது 11-ம் வீட்டில் நிற்பதால், பழைய பிரச்னைகள் தீரும்.

15.5.11 வரை 5-ல் நிற்கும் ராகுவால் பிள்ளைகளுடன் மனவருத்தம் வரும். 9.5.11 முதல் குரு 9-ல் நுழைவதால் தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். 16.5.11 முதல் 4-ல் ராகு நுழைவதால் கடினமாக உழைக்க வேண்டி வரும். சொத்து விஷயத்தில் அவசரம் வேண்டாம்.

20.12.11 வரை ஏழரைச்சனி தொடர்வதால், உடல் உபாதை வந்து விலகும். 21.12.11 முதல் 3-ம் வீட்டுக்குள் சனி நுழைவதால், நினைத்தது நிறைவேறும். வியாபாரத்தில் ரகசியங்கள் யார் மூலம் வெளியாகிறது என்பதை அறிந்து நடவடிக்கை எடுப்பீர்கள். உத்யோகத்தில், பதவி உயர்வு உண்டு.

இந்தப் புத்தாண்டு மருத்துவச் செலவுகளை தந்தாலும், மகத்தான காரியங்களையும் செய்ய வைக்கும்.

பரிகாரம்: ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரை நெய் விளக்கேற்றி வணங்குங்கள்.

--------------------------------

6.கன்னி: கலகலப்பாக பேசுபவர்களே! உங்கள் ராசிநாதனும், குருபகவானும் உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். 9.5.11 முதல் குரு 8-ல் மறைவதால், மன இறுக்கம் வந்து நீங்கும். ஆனால், குரு உங்களின் 2-ம்  வீட்டை பார்ப்பதால், திடீர் பணவரவு உண்டு.

வருடம் பிறக்கும்போது 6-ம் வீட்டில் சுக்கிரன் மறைந்திருப்பதால், உறவினர்களுடன் உரசல் வரும். 15.5.11 வரை ராசிக்கு 4-ல் ராகு நிற்பதால், மருத்துவச் செலவுகள் வந்து போகும். கேது 10-ல் நிற்பதால், காரிய தாமதம் ஏற்படலாம். 16.5.11 முதல் ராகு 3-ல் நுழைவதால், புது வீடு கட்டி குடிபுகுவீர்கள்.

கேது 9-ம் வீட்டில் நுழைவதால், தந்தைக்கு மருத்துவச் செலவுகள் வரலாம். 20.12.11 வரை ஜென்மச் சனி தொடர்வதால் உடல் உபாதை வந்து நீங்கும். 21.12.11 முதல் சனி உங்கள் ராசியை விட்டு விலகுவதால், அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில், லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் ஆனி, மாசி மாதங்களில் புது வாய்ப்புகள் வரும்.

இந்தப் புத்தாண்டு, செலவுகளில் உங்களை சிக்க வைத்தாலும், அனுபவ அறிவால் சாதிக்க வைக்கும்.

பரிகாரம்: ஸ்ரீசரபேஸ்வரரை சனிக்கிழமையன்று வணங்குங்கள்.
--------------------------------------

7.துலாம்: நியாயவாதிகளே! உங்கள் ராசிநாதனான சுக்கிரன் வலுவடைந்திருக்கும் போதும், 3-ம் வீட்டில் ராகு நிற்கும்போதும் இந்த கர வருடம் பிறப்பதால், நேர்மறை எண்ணங்கள் உதிக்கும். உங்கள் லாப ராசியில் இந்த ஆண்டு பிறப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். 8.5.11 வரை குரு 6-ல் நிற்பதால் வீண் சந்தேகம், செலவுகள் வந்து போகும்.

ஆனால், குரு பகவான் 9.5.11 முதல் 7-ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்க்க இருப்பதால், மகளுக்கு நல்ல வரன் அமையும். 15.5.11 வரை ராகு 3-ல் நிற்பதால், புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். கேது 9-ல் நிற்பதால் தந்தைக்கு உடல் நலக் கோளாறு வந்து போகும். 16.5.11 முதல் ராகு 2-ல் நுழைவதால், கோ£பமான பேச்சால் பிரச்னைகள் வரக்கூடும். கேது 8-ல் நுழைவதால், திடீர் பயணங்கள் ஏற்படலாம்.

20.12.11 வரை 12-ல் விரயச்சனி தொடர்வதால், மறைமுக அவமானம் வந்து போகும். 21.12.11 முதல் ஜென்மச்சனியாக வருவதால், உணவில் கட்டுப்பாடு அவசியம். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். பங்குனி மாதத்தில் சம்பள உயர்வும், பதவி உயர்வும் உண்டு.

நாலா விதத்திலும் சிரமத்திலிருக்கும் உங்களுக்கு வசதியைத் தருவதாக இந்த ஆண்டு அமையும்.

பரிகாரம்: ஸ்ரீ ஆஞ்சநேயரை வெற்றிலை மாலை அணிவித்து வணங்குங்கள்.

-------------------------------------

8.விருச்சிகம்: விகடகவிகளே! உங்கள் ராசிநாதன் செவ்வாய் பகவான், குருவுடன் சேர்ந்திருக்கும் நேரத்தில் இந்த கர ஆண்டு பிறப்பதால், அடிப்படை வசதிகள் பெருகும். சுக ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்ந்திருப்பதால், வீடு கட்டும் பணி முழுமையடையும். 8.5.11 வரை குரு 5-ம் வீட்டில் சாதகமாக இருப்பதால், குடும்பத்தில் அமைதி நிலவும்.

ஆனால், 9.5.11 முதல் குரு 6-ம் வீட்டில் நுழைவதால்... சலசலப்பு, பணத்தட்டுப்பாடு ஏற்படக்கூடும். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். கேது 8-ல் நிற்பதால் வீண் அலைச்சல், ஏற்படக்கூடும். 16.5.11 முதல் ராகு ராசிக்குள் வருவதால், உடல் உபாதை வந்து போகும்.

கேது 7-ல் நுழைவதால், கணவருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். ஐப்பசி மாதம் முதல் பங்குனி மாதம் வரைக்கும் செவ்வாய் 10-ம் வீட்டிலேயே தொடர்வதால் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். 20.12.11 வரை லாப வீட்டில் சனிபகவான் தொடர்வதால் எதிர்பாராத பணவரவு உண்டு.  21.12.11 முதல் ஏழரைச்சனி தொடங்குவதால், மறைமுக எதிர்ப்பு வரக்கூடும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் இடமாற்றம் உண்டு.

இந்தப் புத்தாண்டு நீங்கள் சுய உழைப்பால் முன்னேற்றுவதற்கு வழி வகுக்கும்.

பரிகாரம்: ஸ்ரீவிநாயகப் பெருமானை அருகம்புல் மாலை அணிவித்து வணங்குங்கள்.
 --------------------------------
9.தனுசு: கூடிவாழும் குணமுடையவர்களே! சனி பகவான் சாதகமான இருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், எதிர்பார்த்த காரியங்கள் தடையின்றி முடியும். 3-ம் வீட்டில் சுக்கிரன் சாதகமாக இருக்கும் வேளையில் இந்த கர ஆண்டு பிறப்பதால், பணவரவு அதிகரிக்கும்.

8.5.11 வரை குரு 4-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், வீண் கவலைகள் வரக்கூடும். 9.5.11 முதல் குரு 5-ம் வீட்டில் நுழைவதால்... புது நிலம், வீடு வாங்குவீர்கள். 15.5.11 வரை ராசிக்குள் ராகு நிற்பதால், உடல் நலக் கோளாறு வந்து போகும். கேது 7-ல் நிற்பதால், கணவருடன் ஈகோ பிரச்னை வந்து விலகும்.

16.5.11 முதல் 12-ல் ராகு நுழைவதால் ஆரோக்கியம் கூடும். சொத்து, ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. 20.12.11 வரை 10-ல் சனிபகவான் நிற்பதால், உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். ஐப்பசி மாத மத்தியப் பகுதி முதல் பங்குனி மாதம் வரைக்கும் செவ்வாய் 9-ம் வீட்டிலேயே தொடர்வதால், தந்தையாரின் உடல்நிலை பாதிக்கப்படலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு உண்டு.

இந்தப் புத்தாண்டு உங்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்று, வெற்றியை தருவதாக அமையும்.

பரிகாரம்: சஷ்டி திதி நடைபெறும் நாளில் ஸ்ரீ முருகப் பெருமான் ஆலயம் சென்று வணங்குங்கள்.

----------------------------

10. மகரம்: மனவலிமை மிக்கவர்களே! யோகாதிபதி சுக்கிரன் உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் நிற்கும்போது இந்த வருடம் பிறப்பதால், பணப்புழக்கம் கணிசமாக உயரும். 8.5.11 வரை குரு 3-ல் நிற்பதால், இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். ஆனால் 9.5.11 முதல் குரு 4-ல் நுழைவதால் காரிய தாமதம் ஏற்படக்கூடும்.

15.5.11 வரை ராசிக்கு 12-ல் ராகு நிற்பதால், கோபம், அலைச்சல் வரக்கூடும். 16.5.11 முதல் ராகு லாப வீடான 11-ம் வீட்டுக்கு வருவதால், கௌரவம் பலமடங்கு உயரும். கேது 5-ல் நுழைவதால், பிள்ளைகளால் செலவுகள் வரும். ஐப்பசி மாத மத்தியப்பகுதி முதல் பங்குனி மாதம் வரைக்கும் செவ்வாய் 8-ம் வீட்டிலேயே தொடர்வதால் சொத்து சிக்கல்கள் ஏற்படக்கூடும். தந்தையுடன் கருத்து மோதல்கள் வரக்கூடும்.

21.12.11 முதல் உங்கள் ராசிநாதன் சனிபகவான் உச்சமடைந்து 10-ம் வீட்டுக்குள் பலமாக நுழைவதால், அரசு காரியங்கள் விரைந்து முடியும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் கார்த்திகை, பங்குனி மாதங்களில் புதிய சலுகைகளும், சம்பள உயர்வும் கிட்டும்.

இந்த கர ஆண்டு சுமைகளை அதிகம் சுமக்க வைத்தாலும், அவ்வப்போது தன்   மானத்துடன் தலைநிமிரச் செய்வதாக அமையும்.

பரிகாரம்: ஷீரடி சத்ய சாய்பாபாவை வணங்குங்கள்.

---------------------------------------------------
11. கும்பம்: சுயநலமில்லாதவர்களே! உங்கள் ராசிக்குள் யோகாதிபதி சுக்கிரன் நிற்கும்போதும், புதன் நீசபங்க ராஜயோகம் பெற்றிருக்குபோதும் இந்த ஆண்டு பிறப்பதால், பணவரவு திருப்தி தரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு க¬ளைகட்டும்.

ஆனால், 9.5.11 முதல் குரு 3-ம் வீட்டில் நுழைவதால்...  வேலைச்சுமை அதிகரிக்கும். உங்கள் ராசியைச் சந்திரன் பார்த்துக் கொண்டிருக்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால், மூளை பலத்தால் முன்னேறுவீர்கள். 15.5.11 வரை லாப வீட்டில் ராகு நிற்பதால், சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

16.5.11 முதல் 10-ல் ராகு நுழைவதால், வேலைச் சுமை சோர்வு தரும். காரிய தாமதம் ஏற்படும். ஐப்பசி மாத மத்தியப்பகுதி முதல் பங்குனி மாதம் வரைக்கும் செவ்வாய் 7-ம் வீட்டிலேயே தொடர்வதால், கணவருக்கு அலைச்சல் ஏற்படக்கூடும். சொத்துப் பிரச்னை வந்து போகும்.

21.12.11 முதல் ராசிநாதன் சனிபகவான் 9-ல் நுழைவதால். எதிலும் வெற்றி கிட்டும்.  வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில், சித்திரை மாதத்தில் இடமாற்றம் உண்டு.

இந்தப் புத்தாண்டின் முற்பகுதியில் தடுமாற்றங்களை தந்தாலும், இறுதி பகுதி சாதிக்க வைப்பதாகவும் அமையும்.
\
பரிகாரம்: ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவியை வணங்குங்கள்.

-----------------------------------------

12.மீனம்: சிந்தனைச் சிற்பிகளே! உங்கள் ராசிக்கு 6-வது வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், திடீர் யோகம் உண்டாகும். வீட்டில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குருபகவான் 8.5.11 வரை ஜென்ம குருவாக இருப்பதால்... உடல் உபாதை, வீண் அலைச்சல் வந்து போகும். 9.5.11 முதல் குடும்ப ஸ்தானமான 2-ம் வீட்டில் குரு நுழைவதால், பணவரவு அதிகரிக்கும்.

15.5.11 வரை ராசிக்கு 10-ல் ராகு நிற்பதால், மனக்குழப்பம் வரக்கூடும். 16.5.11 முதல் 9-ல் ராகு நுழைவதால், எதிர்பாராத பணவரவு உண்டு. 20.12.11 வரை 7-ல் சனி பகவான் நிற்பதால் கணவருடன் வாக்குவாதம் வந்து போகும்.

21.12.11 முதல் 8-ல் நுழைந்து அஷ்டமத்துச் சனியாக வருவதால் விமர்சனங்கள் வரும். மத்தியப்பகுதி முதல் பங்குனி மாதம் வரை செவ்வாய் 6-ம் வீட்டிலேயே தொடர்வதால், கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் புது முதலீடுகளைத் தவிர்க்கவும். உத்யோகத்தில், முக்கிய கோப்புகளை கையாளும்போது அலட்சியம் வேண்டாம்.


இந்தப் புத்தாண்டு ஓரு பக்கம் உங்களை உணர்ச்சிவசப்பட வைத்தாலும், மறுபக்கம் மனநிறைவைத் தருவதாக அமையும்.

பரிகாரம்: ஸ்ரீ நடராஜப் பெருமானை திங்கட்கிழமைகளில் சென்று வணங்குங்கள்.

49 comments:

எல் கே said...

எப்ப இருந்து இந்த ஜோசியம் பாக்கற வேலை சித்தப்பு

சி.பி.செந்தில்குமார் said...

hi hi ஹி ஹி நேத்து நைட் நான் போட்ட போஸ்ட்டை நீங்க ரகசியமா படிச்சதா உளவுத்துறை ரிப்போர்ட் வந்திருக்கு பெரியப்பா

ராஜி said...

ஏன்? ஏன் இந்த வேண்டாத வேலையெல்லாம் உங்களுக்கு

சி.பி.செந்தில்குமார் said...

ஆண்டவனை வேண்டாத,அல்லது இயற்கையை வேண்டாத மனிதர் உண்டா? ஹி ஹி

ராஜி said...

இது ஆவறதுக்கில்ல

பொன் மாலை பொழுது said...

சதீஷ் குமாரின் வேலையை ஏன் நீங்கள் எடுத்துக்கொண்டீர்கள் சி.பி. ? என்ன ஒப்பந்தம்?

ராஜி said...

சதீஷ் சார்கிட்ட எதாவது கமிஷன்?

ராஜி said...

கொன்றால் பாவம்
தின்றால் போச்சா? இதுல நோ உள்குத்து நான் பொதுவாதான் சொன்னேன்

சி.பி.செந்தில்குமார் said...

கக்கு - மாணிக்கம் said...

சதீஷ் குமாரின் வேலையை ஏன் நீங்கள் எடுத்துக்கொண்டீர்கள் சி.பி. ? என்ன ஒப்பந்தம்?

அவர் பிஸியா இருப்பதால் ஏற்பட்ட நிர்ப்பந்தம்.. ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

ராஜி said...

கொன்றால் பாவம்
தின்றால் போச்சா? இதுல நோ உள்குத்து நான் பொதுவாதான் சொன்னேன்

ஹி ஹி ஹி

ராஜி said...

இறைவனின் பாதாரவிந்தங்களை ஐயமின்றி சரணடைந்துவிட்டால்.., நாளென்ன செய்யும் கோளென்ன செய்யும் நண்பரே

ராஜி said...

மேஷம்

ராஜி said...

ரிஷபம்

ராஜி said...

மிதுனம்

ராஜி said...

கடகம்

Unknown said...

ஏன் பாஸ்? :-)

ராஜி said...

சிபி சார் உங்க ராசி என்ன னு சொன்னீங்கனா, உங்க டைம் எப்படி இருக்கு? எத்தனை பேர்கிட்ட மன்னிப்பு கேட்பீங்க? எத்தனை பேர் உங்களுக்கு கண்டனபதிவு போடுவாங்கனு தெரிஞ்சுக்குவோமில்ல

ராஜி said...

சிம்மம்

ராஜி said...

மீனம்

சி.பி.செந்தில்குமார் said...

ராஜி said...

சிபி சார் உங்க ராசி என்ன னு சொன்னீங்கனா, உங்க டைம் எப்படி இருக்கு? எத்தனை பேர்கிட்ட மன்னிப்பு கேட்பீங்க? எத்தனை பேர் உங்களுக்கு கண்டனபதிவு போடுவாங்கனு தெரிஞ்சுக்குவோமில்ல

ஒரு க்ளூ... கழுவற மீன்ல நழுவற மீன்

சி.பி.செந்தில்குமார் said...

Blogger ஜீ... said...

ஏன் பாஸ்? :-)

ஹி ஹி .. விடுங்க.. இதுவும் கடந்து போகும்

ராஜி said...

கன்னி

ராஜி said...

துலாம்

ராஜி said...

விருச்சிகம்

ராஜி said...

தனுசு

ராஜி said...

ஆளே இல்லாத கடையில டீ ஆத்திக்கிட்டிருக்கேனே. யாரையாவது துணைக்கு வரச்சொல்லுங்க சிபி சார். தனியா இருக்க பயமா இருக்கு

ராஜி said...

கும்பம்

ராஜி said...

மகரம்

ராஜி said...

ம்க்கும்.இது ஒரு க்ளுவா. இதை எல்கேஜி பாப்பா கூட கரெக்டா சொல்லிடும்.

ராஜி said...

அட போங்கப்பா. எனக்கு போரடிக்குது. நான் கிளம்புறேன்

Lali said...

ராசி பலன் போட்டீங்க சரி.. பரிகாரம் பண்றதுக்கு ஒவ்வொரு சாமியும் ஒரு ஒரு ஊர்ல இருக்கு..
போய்ட்டு வர செலவு, விளக்கு, எண்ணெய், நெய், திரி, அப்புறம் தீப்பெட்டி (நீங்க வைச்சி இருக்கீங்களா?!) இதெல்லாம் யாரு தருவாங்க? நீங்கதான் தந்து உதவனும் எல்லாருக்கும்..
இப்படிக்கு,
தங்கள் நல் ஆதரவை நாடும், தங்கள் பதிவுகளை படிக்கும் நட்பு உள்ளங்கள்.. :)
http://karadipommai.blogspot.com/

உணவு உலகம் said...

நல்ல நேரம் சதீஷுக்கு போட்டி. நல்லா இல்ல சொல்லீட்டேன்.

காங்கேயம் P.நந்தகுமார் said...

இதுல எல்லாம் எனக்கு சுத்தமா நம்பிக்கை இல்லை. உடலை வருத்தி உழைக்க தெரியாதவர்கள் மக்களை ஏமாற்ற பல வழி. அதில் இது ஒரு வழி. ஒன்னு நடந்ததை சொல்றேம்பாங்க! இல்லைன்னா நடக்க போறதே சொல்றேம்பாங்க! அட போங்கண்ணா இதுல நீங்க வேறே?

உணவு உலகம் said...

நாலு படம் பார்த்தமா, நச்சுன்னு படத்த போட்டமான்னு இல்லாம, இது என்ன புது ரூட்டு?
என் பதிவிற்கு லேட்டா வந்தா இப்படித்தான் கால வாருவோம்.

காங்கேயம் P.நந்தகுமார் said...

ராசிபலன், ஜோதிடம், நியூமராலஜி, வாஸ்து இதெல்லாம் சுத்த மூடநம்பிக்கை. நான் உங்களை மிகப்பெரிய திறமைசாலின்னு நினைச்சுகிட்டு இருக்கேன்.

Sivakumar said...

கலைஞர் வந்து கருத்து சொல்லி இருக்காரு. அம்மா படம் வச்ச பதிவர் வந்தாலும் வரலாம். சரி... 'கை' ராசி எப்படி இருக்கும்னு சொல்லவே இல்ல..

MANO நாஞ்சில் மனோ said...

என்னய்யா நடக்குது இங்கே....?
எனக்கு என்ன ராசின்னே தெரியலையே தெரிஞ்சா யாராவது சொல்லுங்கப்பூ....

MANO நாஞ்சில் மனோ said...

ராஜி பாவம் ஒத்தைக்கு மாட்டிகிட்டான்களே...என்கிட்டே சொல்லி இருந்தா நானும் வந்து சிபி கழுத்தை கடிச்சிருக்கலாமோ...

Unknown said...

வாங்க நாஞ்சில் சார் வந்து இந்த சிபியை என்னனு கேளுங்க.

Unknown said...

என்ன ஒரு பயலையும் காணோம். நைட் உங்க பதிவையும்,ஸ்டில்லையும் படிச்சி பார்த்துட்டு, நைட்டெல்லாம் கண்முழிச்சு ஓவர் டைம் டூட்டி பார்த்த களைப்புல இன்னும் எந்திரிக்கலையா

காங்கேயம் P.நந்தகுமார் said...

ஜாதகம் பார்த்து கல்யாணம் பண்றாங்க. அப்புறம் ஏன் புதுப்பெண் 20 நாளில் பலி மணமகன் பலின்னு பத்திரிக்கையில் செய்தி வருது. ராசிபலன் இன்னைக்கு கூட என் ராசிக்கு தோல்வின்னு போட்டிருக்கு ஆனா எனக்கு இன்னைக்கு வருமானம் 1400ரூபாய் வந்திருக்கு. பகுத்தறிவு பகலவன் பெரியார் பிறந்த மண்ணுக்கு நாம சொந்தக்காரங்க ! அந்த பத்திரிக்கை நடத்துறது டிங் டாங்.

காங்கேயம் P.நந்தகுமார் said...

அமைதிப்படையில சத்யராஜுக்கு ஆயுளு கம்மின்னு ஜாதகம் பார்த்து ஐயிரு சொல்வாரு. உடனே சத்யராஜ் எம் ஐயிரு உங்க ஆயுள் எப்படி? ஆயுசு கெட்டி 100 வருசம் என்பார். உடனே நம்ம சத்யராஜ் துப்பாக்கியை எடுத்து ஜாதகம் சொன்னவரை கொன்னுபோட்டு, இவன் ஆயுளையே இவனால கணிக்க முடியல! இதுக்குள்ள எனக்கு சொல்ல வந்துட்டான். என்று மூடநம்பிக்கைக்கு காமெடியாய் அந்த இடத்தில் முற்றுப்புள்ளி வைப்பார். ராசி பலன்களும் அதற்கு பரிகாரங்கள் என்று எழுதியிருக்கீங்களே இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலை?

Unknown said...

இந்த ப்ளாக் நல்ல நேர நண்பர் கைவசம் இப்போது!

சக்தி கல்வி மையம் said...

யோவ் என்னய்யா ஆச்சு ...

சி.பி.செந்தில்குமார் said...

* வேடந்தாங்கல் - கருன் *! said...

யோவ் என்னய்யா ஆச்சு ...

ஊரெல்லாம் இதே பேச்சு.. சி பி யின் இமேஜ் போயே போச்சு.. இட்ஸ் கான்

சக்தி கல்வி மையம் said...

ரைட்டு...

Unknown said...

ஆட்சி மாறியிருச்சா? உங்க வலைப்பூ இப்போது யார் வசம்?

Unknown said...

இப்போதெல்லாம் பல்துறை பகிர்வு பதிவராகி விட்டீர்கள், வாழ்க விகடன் ஆன்லைன்

R.Gopi said...

”தல”யோட ராசிக்கு ஒரு சீட்டு எடுத்து எதிர்கால பலன் சொல்லுங்களேன்...