Tuesday, April 05, 2011

ஜூ வி விசிட் VS கேப்டனின் ரிஷிவந்தியம் தொகுதி - காமெடி கும்மி

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தும், காங்கிரஸ் கட்சியின் சிவராஜும்
http://www.envazhi.com/wp-content/uploads/2009/04/news_88483393193.jpg
மோதும் ரிஷிவந்தியம் தொகுதியில் கிராமங்கள் அதிகம். விஜயகாந்த் மனைவி பிரேமலதாவின் அப்பா இந்தத் தொகுதியில் உள்ள மூங்கில்துரைப்பட்டில் உள்ள சர்க்கரை ஆலையில்  முன்பு பணிபுரிந்தவர். அந்தக் காலகட்டத்தில்தான், விஜயகாந்த் - பிரேமலதா திருமணம் நடந்தது. அதனால், 'எங்க ஊர் மாப்பிள்ளை விஜய​காந்த்' என்கிறார்கள் தொகுதியைச் சேர்ந்த தே.மு.தி.க-வினர்.  
 
மாப்பிள்ளையா? ”மப்”பிள்ளையா? 
 
 
கடந்த எம்.பி. தேர்தலில், விஜயகாந்த்தின் மைத்துனரும் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளருமான சுதீஷ் இந்தப் பகுதியில்தான் நின்றார். ரிஷிவந்தியத்தில் 24 ஆயிரம் ஓட்டுகள் வாங்கினார். கடந்த எம்.எல்.ஏ. தேர்தலில் தே.மு.தி.க வேட்பாளர் 20 ஆயிரம் வாக்குகள் பெற்றார். இதையெல்லாம் கருத்தில்கொண்டுதான் விஜயகாந்த் இந்தத் தொகுதியை அ.தி.மு.க. கூட்டணியில் கேட்டு வாங்கினார்.

கேட்டு வாங்கினாரா? கெஞ்சி வாங்கினாரா?


''காங்கிரஸ் கட்சியின் சிவராஜ், நாலு தடவை தொகுதியில் எம்.எல்.ஏ-வாக இருந்தும், பெரிய அளவில் எதுவும் செய்யவில்லை. எந்தத் தொழிற்சாலையும் கொண்டுவரவில்லை. அரசுக் கல்லூரியோ, தனியார் கல்லூரியோ குறிப்பிட்டுச் சொல்லும்படி இல்லை.


அப்படி இருந்தும் 4 தடவை அந்தாளை எம் எல் ஏ ஆக்கி இருக்காங்கன்னா அந்த தொகுதி மக்களோட அறியாமையை என்ன சொல்றது?

30 வருடங்களாக இந்தப் பகுதியில் சிவராஜின் குடும்ப ஆதிக்கம்தான் நடக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கத்தான் கேப்டன் இங்கே நேரடியாகக் களத்தில் இறங்கி இருக்கிறார்...'' என்றார், தே.மு.தி.க. தலை​வரான விஜயகாந்த்தின் சகலையும் பிரபல தொழிலதிபருமான ராமச்சந்திரன். 

ஓஹோ.. இனி கேப்டனோட குடும்ப ஆதிக்கம் தான் இருக்கனுமா?

இவர்​தான் இந்தத் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளர்.
விருத்தாசலம் தொகுதியில் விஜயகாந்த் தனிப்பட்ட முறையில் செய்த நலத் திட்டங்களைப் பட்டியல் இட்ட இவர், ''அடிக்கடி விருத்தாசலம் தொகுதிக்கு விசிட் சென்றுள்ளார் கேப்டன். 

ஆனால், ஆளும் கட்சி எந்த நலத் திட்டங்களையும் செய்து கொடுக்கவில்லை. கேப்டன் சொன்ன மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய முயன்ற இரண்டு கலெக்டர்​களையும் உடனே மாற்றிவிட்டனர். அடுத்து வந்த கலெக்டர், எதையுமே செய்யவில்லை.

இவை அனைத்தும் விருத்தாசலம் வாக்காளர்களுக்கு நன்றாகத் தெரியும். வரும் தேர்தலில் அ.தி.மு.க-தான் நிச்சயம் ஆட்சி அமைக்கும். அவர்களுடன் கூட்டணியில் இருப்பதால், இந்தத் தொகுதியில் 30 வருடங்களாகத் தீர்க்கப்படாத பிரச்னைகளை எல்லாம் கேப்டன் தீர்த்துவைப்பார்!'' என்றார் நம்பிக்கையாக.

எனக்கென்னவோ அந்த தொகுதில இருக்கற டாஸ்மாக்ல உள்ள சரக்குகளை உடனடியா தீர்த்து வைப்பார்னு தோணுது.. 


பதிலுக்கு சிவராஜ் தரப்பிலோ, ''கடந்த தேர்தலில் விஜயகாந்த்தை எல்.எல்.ஏ. ஆக்கிய விருத்தாசலம் தொகுதிப் பக்கமே அவர் எட்டிப்பார்க்கவில்லை. சட்டசபையிலும் தொகுதிக்காகக் குரல் கொடுக்கவில்லை. அங்கு மக்கள் அதிருப்தியில் இருப்பதால்தான், இங்கே ஓடி வந்து இருக்கிறார்.

அய்யய்யோ.. அவர் நடந்தாலே மூச்சிரைக்கும்.. இந்த லட்சணத்துல ஓடி வந்தாரா?

விஜயகாந்த் பற்றி விருத்தாசலம் மக்களிடம் பேசி எடுக்கப்பட்ட வீடியோ - ஆடியோ சி.டி-களை க்ளைமாக்ஸ் நேரங்களில் கிராமம்தோறும் போட்டுக் காட்டுவோம். சிவராஜ்... இந்த மண்ணின் மைந்தர். விஜயகாந்த், சென்னைக்குப் போய்விடுவார். அவரை நம்பி ஓட்டு போட மாட்டார்கள் மக்கள்!'' என்றனர் தெம்பாக.

இதுக்கு பேசாம நீங்க எங்கள் ஆசான், நரசிம்மா,விருதகிரி மாதிரி டப்பா படங்களை போட்டு காட்டுங்க.. வேலை சுலபத்துல முடியும்.. 


காங்கிரஸ் வேட்பாளர் சிவராஜுக்கும் தி.மு.க. எம்.பி-யான ஆதிசங்கருக்கும் ஏழாம்பொருத்தம். வேட்பாளராக சிவராஜை அறிவித்துப் பல நாட்கள் ஆகியும், ஆதிசங்கர் ஒதுங்கியே இருந்தார். தி.மு.க. மேலிடப் பிரமுகர்கள் பேசிய பிறகுதான் சில நாட்களாக சிவராஜுடன் கைகோத்து, பிரசாரத்தில் இணைந்து உள்ளார்.

இது எல்லா தொகுதிலயும் நடக்கறதுதானே.. காங்கிரஸ் போட்டி இடும் 63 தொகுதிகள்லயும் தி மு க ஆளுங்க பெரிசா வேலை செய்ய வேண்டாம்னு கலைஞர் வாய் மொழி உத்தரவு போட்டிருக்காரே.. 


சிவராஜிடம் பேசியபோது, ''எனக்குத்தான் வெற்றி​வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. தொகுதி மக்களுக்கு அறிமுகமான பாரம்பரியக் குடும்பத்துக்காரன். சோனியாவின் தலைமை, ராகுலின் எதிர்கால அரசியல் கனவு, மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனின் ஆலோசனை, தி.மு.க. ஆட்சியின் திட்டங்கள் எல்லாவற்றையும் எடுத்துச்சொல்லும்போது, மக்கள் வரவேற்பு மிகுதியாக உள்ளது. வெற்றி உறுதி!'' என்றார்.

சீமான் இருப்பதை மறந்துட்டீங்க... காங்கிரஸ் கட்சியை கருவறுக்க பலர் கருவிட்டு இருக்காங்க... எதுக்கும் கம்மியாவே செலவு பண்ணிக்குங்க.. விழலுக்கு இறைத்த நீராய் ஆகிடக்கூடாதே.. ?


கடைசிக் கட்டமாக, இரண்டு நாட்கள் ரிஷிவந்தியத்திலேயே தங்கிப் பிரசாரம் செய்வாராம் விஜயகாந்த். இப்போதைக்கு கடுமையான போட்டி இருந்தாலும், விஜயகாந்த்தின் பிரசாரத்தை வைத்துத்தான் வாக்கு யாருக்கு என்பதை மக்கள் முடிவெடுப்பார்கள்!

அய்யய்யோ... அங்கே யாரை அடிப்பாரு? வழக்கமா தன் கட்சி வேட்பாளரை அடிப்பதுதான் கேப்டனோட பழக்கம். இங்கே போட்டி இடுவது இவர் தான். அப்போ ஒரு ஆஃப் அடிச்சுட்டு இவரை இவரே அடிச்சுக்குவாரோ? #டவுட்டுசிவராஜ் மீது பாலியல் குற்றச்சாட்டு!

சிவராஜ் மீது குபீர் குற்றச்சாட்டு கிளப்பி இருக்கிறார் சென்னையைச் சேர்ந்த ஜெயந்தி என்ற பெண். ''சில வருடங்கள் முன்பு எங்கள் சொத்துப் பிரச்னை தொடர்பாக எம்.எல்.ஏ. சிவராஜை சந்தித்தேன். அதைத் தீர்க்காமல், என்னைக் கடத்திச் சென்று, பலாத்காரப்படுத்திவிட்டார்.

ஓஹோ.. அப்போ சொத்துப்பிரச்சனையை தீர்த்து வெச்சுட்டு அப்புறமா பலாத்காரம் பண்ணி இருந்தா பரவால்லியா?என்ன பேச்சு இது ? ராஸ்கல்.. 

நானும் எனது கணவரும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும், நடவடிக்கை இல்லை. பணம் கேட்டு மிரட்டுவதாக, என் மீதே பொய்ப் புகார் கொடுத்து ஜெயிலில் தள்ளினார்.

போலீஸ் ஸ்டேஷன்லயா புகார் குடுத்தீங்க.. நல்ல வேளை... அவங்க எதுவும் பண்ணாம விட்டதே அதிசயம் தான்


கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, சென்னை எம்.எல்.ஏ. ஹாஸ்டலில் வைத்து சிவராஜும், ஆதிசங்கர் எம்.பி-யும் எங்களை அழைத்து, சமாதானம் பேசினார்கள். ஆனால், சொன்னபடி எதுவும் செய்யவில்லை.

ஓஹோ.. என்ன சொன்னாரு? ரூ 2 கோடி செட்டில்மெண்ட் பேசி தராம விட்டுட்டரா?

இப்படிப்பட்ட மோசமானவரை அரசியலில் இருந்தே அப்புறப்படுத்த வேண்டும் என்றுதான் கடந்த 26-ம் தேதி சுயேச்சையாக ரிஷிவந்தியத்தில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்யச் சென்றேன். ஆனால், சிவராஜின் அடியாட்கள் சிலர், என்னைக் கத்தியால் குத்த வந்தார்கள். தடுத்த என் கணவருக்கு வயிற்றில் காயம். இதையும் மீறி மனுவைத் தாக்கல் செய்தும், அது தள்ளுபடியான மர்மம் புரியவில்லை!'' என்றார் கண்ணீர் மல்க.

இதுல என்ன மர்மம் வேண்டி கிடக்கு?ஆளுங்கட்சியை எதிர்த்தா இந்த கதிதான்.. நீங்க சினிமாப்படம் எதுவும் பார்ப்பது இல்லையா?


இது குறித்து சிவராஜிடம் கேட்டபோது, ''அந்தக் குற்றச்சாட்டில் உண்மை இல்லை. நடக்காத ஒன்றைச் சொல்லி, தேர்தல் நேரத்தில் எனக்கு எதிராகக் கிளம்பியுள்ளார். 

 நடக்கலைன்னு அண்ணன் ரொம்ப வருத்தப்படறார் போல.. 


இந்தப் பொய்ப் புகாரை தொகுதிவாசிகள் நம்ப மாட்டார்கள். அவர் கணவரை ஆள்வைத்துக் குத்தியதாகச் சொல்வதும் சுத்தப் பொய். தேர்தல் சமயத்தில் ஏதாவது பிரச்னையைக் கிளப்பிப் பணம் பிடுங்க நினைக்கிறார்கள்!'' என்று குமுறுகிறார்!


தொகுதிவாசிகள் எதையும் நம்ப மாட்டாங்க.. யார் அதிகம் பணம் தர்றாங்களோ  அவங்களுக்கே வாக்கு .. வாழ்க பணநாயகம்.. அடச்சே.. ஜன நாயகம்,, 


49 comments:

சக்தி கல்வி மையம் said...

vadaya?

சக்தி கல்வி மையம் said...

என்ன டைமிங் மிஸ்ஆவுது?

சக்தி கல்வி மையம் said...

உங்க வாட்ச்ல 4.00 மணி ஆயிடுச்சா..

சக்தி கல்வி மையம் said...

விமர்சனம் எதிர்பார்தேனே..

சக்தி கல்வி மையம் said...

பதிவுலகம் இன்னைக்கு எப்படியிருக்கு..

சக்தி கல்வி மையம் said...

யோவ் விக்கி மாப்ள எங்கய்யா போன? சீக்கிரம் வா..

சக்தி கல்வி மையம் said...

ஏய் யாராவது சப்போட்டுக்கு வாங்கய்யா?

சக்தி கல்வி மையம் said...

சரி பதிவாவது படிச்சிட்டு வரென்.

சி.பி.செந்தில்குமார் said...

haa haa நானே சப்போர்ட்டுக்கு வந்தேன்.. 4 மணிக்கு மின் வெட்டு

சக்தி கல்வி மையம் said...

9..

சக்தி கல்வி மையம் said...

10.. போடரதுக்குள்ள வந்துட்டியே..

சக்தி கல்வி மையம் said...

ஜனநாயக கடமையை நிறைவேத்தியாச்சு..

போளூர் தயாநிதி said...

very nise

சி.பி.செந்தில்குமார் said...

போளூர் தயாநிதி said...

very nise

ஃபோன் பேசிக்கிட்டே பதிவு படிச்சீங்க போல..

நீங்க நைஸ்னு சொன்னது போஸ்ட்டையா?ஹா ஹா

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

நல்ல அலசல்

சி.பி.செந்தில்குமார் said...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

நல்ல அலசல்

அடிச்சு துவைச்சு காயப்போட்டுட்டீங்கன்னு சொல்வீங்கன்னு எதிர்பார்த்தேன் ஹி ஹி

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

உண்மையிலேயே அடிச்சு துவைச்சு காயப்போட்டுட்டீங்க .

காங்கேயம் P.நந்தகுமார் said...

ரிஷிவந்தியத்தின் மாப்பிள்ளை நீ மப்புள்ள கடைசி ரெண்டு நாள் பிரச்சாரத்துல பிளாட் ஆக போறே. நீ ஆஃப் அடிச்சு நிற்பே அப்ப உனக்கு ஆப்பு அடிக்க வடிவேல் அங்கு வருவான். தமிழன் தமிழன் என்று கூறி மக்களை ஏமாற்றும் சீமானே? நீ காங்கிரசை கறுவறுக்கிறாயா? நீ தம்பி என்று ஒரு படம் எடுத்தாயா? அதில் ஏன் இலங்கை பெண்ணுக்கு வாய்ப்பு கொடுத்தாய்? உன்னை நீ திருத்திகொண்டு ஊருக்கு உபதேசம் செய்! நீ சீநாயா? சீமானா?

சி.பி.செந்தில்குமார் said...

என்ன நந்த குமார்.. என்ன சொல்ல வர்றீங்க.. கலைஞர் தான் நிரந்தர முதலவரா/

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சேலம் சித்த வைத்தியர் சிவராஜ் வாழ்க

சி.பி.செந்தில்குமார் said...

என்ன அநியாயம்.. கேப்டன் வாழ்க சொல்லலையா? ரமேஷ்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சி.பி.செந்தில்குமார் said...

என்ன அநியாயம்.. கேப்டன் வாழ்க சொல்லலையா? ரமேஷ்?//

தாத்தா சொல்றத கேளுங்க. ஒரு பொண்ணோட வாழ்க்கைல விளையாடாதீங்கடா பாவிகளா? நீங்கெல்லாம் தப்பு பண்றீங்க.. உங்களை தட்டி கேட்கிற உரிமை எனக்கு இருக்கு- சேலம் சித்த வைத்தியர் சிவராஜ்

காங்கேயம் P.நந்தகுமார் said...

அண்ணே 4 மணிக்கு கரண்ட் கட்டுன்னு சொல்லிட்டு அதெப்படி 4:01 ரிப்ளே எல்லாம் எதிர் கட்சியோட சதியாகத்தான் இருக்கும் என்று நான் நம்புகிறேன்

rajamelaiyur said...

I think CAPTAIN Top
Sivraj ku aappu(not half)(sun tv pola meaning a mathedatheka)

rajamelaiyur said...

Here morning 9 to 5 power cut. . Vazhka Tamilnadu

உணவு உலகம் said...

இன்னைக்கு இப்படியா? இவரை பற்றி அவர், அவரைப் பற்றி அவர் என வார பத்திரிக்கை ரேஞ்சுக்கு. ஹா ஹா ஹா!

சி.பி.செந்தில்குமார் said...

Blogger FOOD said...

இன்னைக்கு இப்படியா? இவரை பற்றி அவர், அவரைப் பற்றி அவர் என வார பத்திரிக்கை ரேஞ்சுக்கு. ஹா ஹா ஹா!

hi hi ஹி ஹி எலக்‌ஷன் முடியற வரை நமக்கும் பொழுது போகனும் இல்ல?

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இன்றைய தகவல்களும் அறிந்தேன்...

விஜயகாந்த் பிரசாரத்திற்கு செல்லாமல் இருந்தாலே அதிக வாக்குகள் வாங்கலாம் போலிருக்கிறது..

வந்தேன்..

Jana said...

தொகுதிவாசிகள் எதையும் நம்ப மாட்டாங்க.. யார் அதிகம் பணம் தர்றாங்களோ அவங்களுக்கே வாக்கு .. வாழ்க பணநாயகம்.. அடச்சே.. ஜன நாயகம்,, \\

:(

செல்வா said...

என்னை ஏமாற்றிய பிகர்கள் போடாத வரை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப்படும் :-)

செல்வா said...

//கேட்டு வாங்கினாரா? கெஞ்சி வாங்கினாரா?
//

இந்த ஆரிசிஎல்லாம் உங்களுக்கு தேவையா ? ஹி ஹி

செல்வா said...

//எனக்கென்னவோ அந்த தொகுதில இருக்கற டாஸ்மாக்ல உள்ள சரக்குகளை உடனடியா தீர்த்து வைப்பார்னு தோணுது..
///

சிரிப்பு நிக்கல .. செம அண்ணா... ஹா ஹா .. இன்னும் சிரிசிட்டே இருக்கேன் ...

Anonymous said...

மாப்பிள்ளையா மப்’பிள்ளையா சூப்பர்

தமிழ்வாசி பிரகாஷ் said...

alasi kaaya podum c.p. vaazhga. cinema vimarsana singam vaazhga. vetpaalar tholai urikkira singam c.p. vaazhga....vaazhga....

நிரூபன் said...

மாப்பிள்ளையா? ”மப்”பிள்ளையா?//

வணக்கம் சகோ, நலமா?
இதற்கான விடையினை கப்டனிடம் அடிவாங்கிய அந்த வேட்பாளர் தான் வந்து சொல்ல வேணும்.
சிலாகித்து எழுதியுள்ளீர்கள்.

நிரூபன் said...

கேட்டு வாங்கினாரா? கெஞ்சி வாங்கினாரா?//

கேட்டும் வாங்கவில்லை. நம்ம கப்டன் கெஞ்சியும் வாங்க வில்லை. பல கோடிகளை சூட்கேசிஸ் வைத்துக் கொடுத்து வாங்கினார் என்று நினைக்கிறேன்.

Jayadev Das said...

\\ஓஹோ.. அப்போ சொத்துப்பிரச்சனையை தீர்த்து வெச்சுட்டு அப்புறமா பலாத்காரம் பண்ணி இருந்தா பரவால்லியா?என்ன பேச்சு இது ? ராஸ்கல்.. \\ இந்த விஷயத்திலா காமெடி செய்வது??

நிரூபன் said...

எனக்கென்னவோ அந்த தொகுதில இருக்கற டாஸ்மாக்ல உள்ள சரக்குகளை உடனடியா தீர்த்து வைப்பார்னு தோணுது..//

கப்டன் நல்லா காதிலை வாங்கிக்குங்க..ஓவரா குடிச்சு உடம்பை கெடுத்திடாதீங்க. அப்புறம் வடிவேலு மாதிரி நடிகர்கள் கும்மியடிக்க ஆளில்லாமல் போய் விடும்,

நிரூபன் said...

போலீஸ் ஸ்டேஷன்லயா புகார் குடுத்தீங்க.. நல்ல வேளை... அவங்க எதுவும் பண்ணாம விட்டதே அதிசயம் தான்//

ஆஹா.. ஆஹா... என்னங்க உங்கை போய்க் கொண்டிருக்கிறது.

MANO நாஞ்சில் மனோ said...

//* வேடந்தாங்கல் - கருன் *! said...
பதிவுலகம் இன்னைக்கு எப்படியிருக்கு..//

வடையை தின்னுப்புட்டு கேக்குற கேள்விய பாரு....

சென்னை பித்தன் said...

நடக்கட்டும் நாடகங்கள்,ஏப்ரல் 13 வரை!

MANO நாஞ்சில் மனோ said...

// கோமாளி செல்வா said...
என்னை ஏமாற்றிய பிகர்கள் போடாத வரை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப்படும் :-//

உன்னை கண்ட இடத்தில் தூக்கி போட்டு மிதிக்க கூலிப்படை அமர்த்தப்படும்....

MANO நாஞ்சில் மனோ said...

//கோமாளி செல்வா said...
//எனக்கென்னவோ அந்த தொகுதில இருக்கற டாஸ்மாக்ல உள்ள சரக்குகளை உடனடியா தீர்த்து வைப்பார்னு தோணுது..
///

சிரிப்பு நிக்கல .. செம அண்ணா... ஹா ஹா .. இன்னும் ///

ஹா ஹா ஹா ஹ ஹா ஹா....

Unknown said...

பயபுள்ள அப்புறம் பதிவுக்கு வரலன்னு சொல்லிடும் ஹிஹி!

செங்கோவி said...

//அப்போ சொத்துப்பிரச்சனையை தீர்த்து வெச்சுட்டு அப்புறமா பலாத்காரம் பண்ணி இருந்தா பரவால்லியா?// யோவ், உம்ம நக்கலுக்கு அளவில்லாமப் போச்சுய்யா!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

இதுக்கு பேசாம நீங்க எங்கள் ஆசான், நரசிம்மா,விருதகிரி மாதிரி டப்பா படங்களை போட்டு காட்டுங்க.. வேலை சுலபத்துல முடியும்..

மாப்பிள்ளையா? ”மப்”பிள்ளையா?


கேட்டு வாங்கினாரா? கெஞ்சி வாங்கினாரா?

அப்படி இருந்தும் 4 தடவை அந்தாளை எம் எல் ஏ ஆக்கி இருக்காங்கன்னா அந்த தொகுதி மக்களோட அறியாமையை என்ன சொல்றது?

ஓஹோ.. இனி கேப்டனோட குடும்ப ஆதிக்கம் தான் இருக்கனுமா?

எனக்கென்னவோ அந்த தொகுதில இருக்கற டாஸ்மாக்ல உள்ள சரக்குகளை உடனடியா தீர்த்து வைப்பார்னு தோணுது..

சீமான் இருப்பதை மறந்துட்டீங்க... காங்கிரஸ் கட்சியை கருவறுக்க பலர் கருவிட்டு இருக்காங்க... எதுக்கும் கம்மியாவே செலவு பண்ணிக்குங்க.. விழலுக்கு இறைத்த நீராய் ஆகிடக்கூடாதே.. ?

அய்யய்யோ... அங்கே யாரை அடிப்பாரு? வழக்கமா தன் கட்சி வேட்பாளரை அடிப்பதுதான் கேப்டனோட பழக்கம். இங்கே போட்டி இடுவது இவர் தான். அப்போ ஒரு ஆஃப் அடிச்சுட்டு இவரை இவரே அடிச்சுக்குவாரோ? #டவுட்டு


யாரங்கே எடுத்துவாருங்கள் அந்த உளியை! தஞ்சாவூர் கல்வெட்டில் பொறிப்போம் ( என்னது உளியின் ஓசை டி வி டி ய கொண்டு வரப்போறீங்களா? எஸ்கேப்!! )

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

48

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

50 vada

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

50 vada