Thursday, April 28, 2011

ஆனந்த விகடன் VS - ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் பேட்டி

http://www.hope.ac.uk/thebighope/images/content/abdul%20kalam.jpg 
விகடன் மேடை - அப்துல்கலாம்

 'நண்பர்களே! உங்கள் கேள்விகளை எல்லாம் படித்துப் பார்க்கும்போது, எனக்கு ஓர் எண்ணம் தோன்றுகிறது. அதாவது, நம் நாட்டின் இளைய சமுதாயத்துக்கு, 'என்னால் முடியும்’ என்ற நம்பிக்கை மிகவும் முக்கி யம். அது நல்ல புத்தகங்களில் இருந்தும், நல்ல பெரியோர்களிடம் இருந்தும், நல்ல ஆசிரியர்களிடம் இருந்தும், தெய்வீகப் பெற்றோர்களிடம் இருந்தும்தான் கிடைக்கும்.

'என்னால் முடியும்’ என்ற நம்பிக்கை உங்களுக்குள் உதயமானால், மக்களுக்கு 'நம்மால் முடியும்’ என்ற நம்பிக்கை வளரும். நம்மால் முடியும் என்ற நம்பிக்கை வந்தால், இந்தியாவால் முடியும். அப்படிப்பட்ட நம்பிக்கை ஏற்பட்டால், வளமான இந்தியாவை... ஓர் அமைதியான இந்தியாவை நம்மால் உறுதியாக அமைக்க முடியும். 60 கோடி இளைய சமுதாயத்தின் சக்தி, 'நம்மால் செய்ய முடியும்’ என்ற நம்பிக்கையின் சக்தியாக மாறுமானால், இந்தியா 2020-க்குள் வளர்ந்த நாடாக மாறும் என்பது திண்ணம்!''

 - ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்
எஸ்.சங்கரன், காரைக்குடி.

1.''உங்கள் ரோல் மாடல் யார்?''

''என் 10-வது வயதில், பறவையின் பறக்கும் விதம்பற்றிக் கற்பித்து, வாழ்க்கையில் பறக்க வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்த என் ஆசிரியர் சிவசுப்பிரமணி ஐயர்தான் என் ரோல் மாடல்!''

கே.மாலதி, நாச்சியார்புரம்.

2. ''நீங்கள் ஜனாதிபதியாக இருந்தபோது நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஏதாவது சொல்லுங்கள்?''

''நான் 11-வது குடியரசுத் தலைவராக இருந்தபோது, தினமும் குறைந்தது, 100 மாணவர்களிடமாவது உரையாடுவது வழக்கம். அப்போது ஒருநாள், 9-ம் வகுப்பு மாணவன் என்னுடைய கேள்விக்குப் பதில் அளித்தான். பார்வையற்ற அந்த மாணவனின் பெயர் ஸ்ரீகாந்த்.

அவன் சொன்னான், 'நான் ஒருநாள் இந்தியாவின் பார்வையற்ற முதல் ஜனாதிபதி ஆவேன்’ என்று. என்ன ஒரு லட்சியம், தன்னம்பிக்கை அந்த மாணவனுக்கு!

அந்த மாணவன் அதன் பின் படித்து 10-ம் வகுப்பில் 90 சதவிகித மதிப்பெண்கள் பெற்றான். 12-ம் வகுப்பில் 96 சதவிகித மதிப்பெண்கள் பெற்றான். அவனது லட்சியம், அமெரிக்காவின் பாஸ்டன் மாநகரில் உள்ள  MIT-ல் கல்வி கற்பதாகும்.

முதன்முறையாக  MIT அவனுக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க அனுமதி அளித்தது. அவனைப் படிக்கவைக்க, 'லீட் இந்தியா 2020’ என்ற இயக்கம், GE கம்பெனி உதவியோடு அமெரிக்கா அனுப்பியது. இதில் என்ன சுவராஸ்யம் என்றால், GE கம்பெனி மேலாளர் அவனுக்கு, 'நீ படித்து முடித்ததும் உனக்கு வேலை தரத் தயாராக இருக்கிறோம்!’ என்று இ-மெயில் அனுப்பினார்.

அதற்கு ஸ்ரீகாந்த், 'உங்கள் உதவிக்கு நன்றி. ஒருவேளை, நான் இந்தியாவின் பார்வையற்ற முதல் ஜனாதிபதி ஆகாவிட்டால், உங்கள் அழைப்பை ஏற்கிறேன்’ என்று பதில் அனுப்பினான். என்ன ஒரு தன்னம்பிக்கை. இதுபோல, கொண்ட லட்சியத்தில் மாறாத உறுதி இளைய சமுதாயத்துக்குத் தேவை!''

இள.செம்முகிலன், விருத்தாச்சலம்.

3.''நீங்கள் தமிழ் சினிமாக்கள் பார்ப்பது உண்டா? உண்டு என்றால், சமீபத்தில் பார்த்த படம் என்ன?''

''கடந்த 50 வருடங்களாக சினிமா பார்க்கவில்லை. அதனால் நான் இழந்தது என்று ஏதும் இல்லை!''

ப.நலங்கிள்ளி, திருப்பத்தூர்.

4.''பால்ய கால சந்தோஷத் தருணங்களை நினைவுகூருங்களேன்?''

''நான் மேல்நிலைக் கல்வி படிக்கும்போது, தமிழ் பாடத்தில் 100-க்கு 95 மதிப்பெண்கள் பெற்றேன். என் தமிழ் ஆசிரியர் எனது விடைத் தாளை வகுப்பு முழுவதும் காண்பித்து, அனைவரும் இப்படி மார்க் எடுக்க வேண்டும் என்று கூறினார். அப்போது எனக்குக் கிடைத்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை!''

பொன்.சிங்கமுத்து, கும்பகோணம்.

5.''கவிஞர் நீங்கள். காதலித்தது இல்லை என்று சொன்னால், நம்ப மாட்டேன். உங்கள் முதல் காதலி யார்?''

''அறிவுத் தாகம்!''
ஆ.சங்கர், திருப்பூர்.

'5. B. 'உங்களின் கல்லூரிக் காலத்தில், உங்களோடு படித்தவர் எழுத்தாளர் சுஜாதா, அவருடனான உங்களின் நினைவுகளை எங்களிடம் பகிர்ந்துகொள்ளலாமே?''

''நானும் சுஜாதாவும் எப்போதும் முதல் பெஞ்சில் அமர்ந்து இருப்போம். ஆசிரியர் கேள்வி கேட்டு முடிப்பதற்கு முந்தியே நாங்கள் முந்திக்கொண்டு, எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிப்பதால், எங்களுக்கு முந்திரிக்கொட்டை என்று பெயர். சுஜாதா என் இனிய நண்பர்!''

ப.சிவராமன், பழநி.

'6. 'விஞ்ஞானி, ஆசிரியர், குடியரசுத் தலைவர் - உங்கள் மனதுக்கு நெருக்கமாக இருந்த பொறுப்பு எது?''

''ஆசிரியர்!''

ஜெ.ஜெர்லின் அபிஷகா, கன்னியாகுமரி.

7. ''இந்தியாவில் வல்லரசு என்ற வார்த்தையை நீங்கள்தான் பிரபலம் ஆக்கினீர்கள். ஆனால், காலம் காலமாக வல்லாதிக்க எண்ணம்தானே பெரிய நாடுகளை எல்லாம் சிதறடித்து வந்திருக்கிறது?''

''நான் சொல்வது 2020-ல் இந்தியா பொருளாதார மேம்பாடு அடைந்த, பாதுகாப்பு மிகுந்த, அமைதியான, ஏற்றத்தாழ்வு இல்லாத சமதர்ம சமுதாயம்கொண்ட வளர்ந்த நாடு என்ற அந்தஸ்தை எட்டுவோம் என்றுதான். தவிர, வல்லரசு என்ற கோட்பாடு உலகத்திலேயே இப்போது இல்லை!''
 http://robinindia2020.com/abdulkalam.jpg
எஸ்.பெனாசிர், புதுக்கோட்டை.

8.''2020-ல் நிச்சயம் உங்களின் கனவு நிறைவேறும் என்று இப்போதும் நம்புகிறீர்களா?''

''60 கோடி இளைய சமுதாயத்தின் சக்தி, 'நம்மால் செய்ய முடியும்’ என்ற நம்பிக்கையின் சக்தியாக மாறுமானால், இந்தியா 2020-க்குள் வளர்ந்த நாடாக மாறும் என்பது திண்ணம்.

எனது கனவு, 125 கோடி மக்களின் முகத் தில் மகிழ்ச்சி கலந்த புன்னகையைப் பார்ப் பதுதான். அது இந்தியாவின் எழுச்சிகொண்ட இளைய சமுதாயத்தால் கண்டிப்பாக நிறை வேறும் என்று நம்புகிறேன்!''

சே.செல்லத்துரை, மேட்டுப்பாளையம்.

9.''கல்பாக்கம் அணு உலை கடுமையான பூகம்பத்தைத் தாங்க முடியாத இடத்தில் இருக்கிறது என்கிறார்களே... உண்மையா?''

''இந்திய அணு உலைகளின் பாதுகாப்பு மிக முக்கியமானது. அவற்றை மீண்டும் கண் காணித்து, சுனாமியுடன் பூகம்பமும் சேர்ந்து வந்தால், அதைத் தாங்கிச் செயல்படக்கூடிய சக்தி இருக்கிறதா என்பதைத் தீவிரமாக மறு பரிசீலனை செய்து, மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது!'' 

63 comments:

Unknown said...

வணக்கம் தம்பி

சி.பி.செந்தில்குமார் said...

அண்ணே.. அப்துல்கலாமே உங்களுக்கு தம்பியாண்ணே? ஹி ஹி

ரஹீம் கஸ்ஸாலி said...

நானும் வந்துட்டேன்

சி.பி.செந்தில்குமார் said...

வாங்க கஸாலி.. மைனஸ் ஓட்டா? ஹி ஹி

Unknown said...

பகிர்வுக்கு நன்றி! இந்தியாவில் நேருவை அடுத்து மாணவர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்திய நபர்!

Unknown said...

தம்பி என்று நான் உம்மை பெருமை படுத்தினேன் சிபி அவர்களே......!

ரஹீம் கஸ்ஸாலி said...

மைனஸ் வோட்டா?//
அய்யய்யோ....இல்லண்ணே

சி.பி.செந்தில்குமார் said...

>> ரஹீம் கஸாலி said...

மைனஸ் வோட்டா?//
அய்யய்யோ....இல்லண்ணே

hi hi ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

>>விக்கி உலகம் said...

பகிர்வுக்கு நன்றி! இந்தியாவில் நேருவை அடுத்து மாணவர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்திய நபர்!

நேருவிடம் கூட பர்சனல் லைஃபில் சில சர்ச்சைகளை உண்டாக்கினார். ஆனால் இவர் சொக்கத்தங்கம்

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

தம்பி என்று நான் உம்மை பெருமை படுத்தினேன் சிபி அவர்களே......!

ஹி ஹி ஹி

Unknown said...

அவர் பிறந்த ராமேஸ்வரத்திற்கு அருகில் இருக்ககூடிய இலங்கையில் இனப்படுகொலைகள் நடந்தபோது, நம் அப்துல் கலாம் அவர்கள் மௌனமாகவே இருந்தது ஏன் என்ற கேள்வி என் மனதை உறுத்திக்கொண்டே இருக்கிறது.

Unknown said...

பகிர்வுக்கு நன்றி ...

Unknown said...

பதிவுலகில் இந்த hi hi ஹி ஹி சத்தம் அதிகமாகிவிட்டது.

Unknown said...

"சி.பி.செந்தில்குமார் said...

>>விக்கி உலகம் said...

பகிர்வுக்கு நன்றி! இந்தியாவில் நேருவை அடுத்து மாணவர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்திய நபர்!

நேருவிடம் கூட பர்சனல் லைஃபில் சில சர்ச்சைகளை உண்டாக்கினார். ஆனால் இவர் சொக்கத்தங்கம்"

>>>>>>>>>

பாத்தியா கின்டர பாரு வேணாம் விட்ரு!

சி.பி.செந்தில்குமார் said...

பாரத்... பாரதி... said...

அவர் பிறந்த ராமேஸ்வரத்திற்கு அருகில் இருக்ககூடிய இலங்கையில் இனப்படுகொலைகள் நடந்தபோது, நம் அப்துல் கலாம் அவர்கள் மௌனமாகவே இருந்தது ஏன் என்ற கேள்வி என் மனதை உறுத்திக்கொண்டே இருக்கிறது.

குட் பாயிண்ட்.. அடுத்து வரும் வாரங்களில் அதற்கு அவர் விளக்கம் கொடுப்பார் என எதிர்பார்க்கலாம்

சி.பி.செந்தில்குமார் said...

பாரத்... பாரதி... said...

பதிவுலகில் இந்த hi hi ஹி ஹி சத்தம் அதிகமாகிவிட்டது.

ஹி ஹி HE HE சத்தம் வந்தால் பாதகம் இல்லை.. ஷி ஷி SHE SHE சத்தம் வந்தால் தான் பிரச்சனை

சி.பி.செந்தில்குமார் said...

பாரத்... பாரதி... said...

பகிர்வுக்கு நன்றி ...

நன்றி.. நான் கற்றவற்றில்.,படித்தவற்றில் மற்றவர்களுக்கு உபயோகமாக இருக்க பதிவிடுவது ஒரு நல்ல பதிவரின் அடையாளம் ( காப்பி பேஸ்ட் பதிவர் என்ற கெட்ட பெயர் வந்தாலும் )

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

"சி.பி.செந்தில்குமார் said...

>>விக்கி உலகம் said...

பகிர்வுக்கு நன்றி! இந்தியாவில் நேருவை அடுத்து மாணவர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்திய நபர்!

நேருவிடம் கூட பர்சனல் லைஃபில் சில சர்ச்சைகளை உண்டாக்கினார். ஆனால் இவர் சொக்கத்தங்கம்"

>>>>>>>>>

பாத்தியா கின்டர பாரு வேணாம் விட்ரு!

இது விவாத தளமே.. உங்க கருத்துக்களை சொல்லலாம்

Unknown said...

சினிமா பற்றிய கேள்விக்கான பதில் சுவாராசியமாக இருக்கிறது.

Unknown said...

//இது விவாத தளமே.. உங்க கருத்துக்களை சொல்லலாம்///


கலாம் அவர்கள் ஜனாபதியாக இருந்தபோது பெரியதாக சாதித்தார் என்று எதை சொல்ல முடியும்?

டக்கால்டி said...

vanthutten..saptu varen

சி.பி.செந்தில்குமார் said...

பாரத்... பாரதி... said...

//இது விவாத தளமே.. உங்க கருத்துக்களை சொல்லலாம்///


கலாம் அவர்கள் ஜனாபதியாக இருந்தபோது பெரியதாக சாதித்தார் என்று எதை சொல்ல முடியும்?

அனைவரும் அணுகக்கூடியவராக, மாணவர்களுக்கு நல் வழி காட்டியாக இருந்தார். எளிமையான வாழ்வு வாழ்ந்தார். எந்த சர்ச்சைலயும் சிக்கலை

Unknown said...

C.P.S sir..
உங்களுக்கு கண்டனம் தெரிவித்து ஒரு பதிவு தயாரகிக்கொண்டிருக்கிறது. எதிர் கொள்ள தயாரா?

சி.பி.செந்தில்குமார் said...

டக்கால்டி said...

vanthutten..saptu varen

இது சாப்பாட்டுக்கடை பதிவு அல்ல. ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

பாரத்... பாரதி... said...

C.P.S sir..
உங்களுக்கு கண்டனம் தெரிவித்து ஒரு பதிவு தயாரகிக்கொண்டிருக்கிறது. எதிர் கொள்ள தயாரா?

ஹா ஹா தாராளமா போடுங்க.. அதான் தினம் 3 பதிவு அப்டி வருதே.. ஆனா நான் பதிலடி எல்லாம் கொடுக்க மாட்டேன். மன்னிப்பு கேட்டுட்டு ஓடிடுவேன் ஹி ஹி

Unknown said...

நேரு நாட்டுக்காக துட்டு போட்டவர் அதனால் அவர் வம்சாவழி திரும்ப திரும்ப இன்றுவரை எடுத்துக்கொண்டு இருக்கிறது...அதே கலாம் நாட்டு துட்டின் மூலம் படித்தவர்...........எனவே நாட்டுக்கு பிரதிவுதவி செய்து கொண்டு இருக்கிறார்!

Unknown said...

//அனைவரும் அணுகக்கூடியவராக, மாணவர்களுக்கு நல் வழி காட்டியாக இருந்தார். எளிமையான வாழ்வு வாழ்ந்தார். எந்த சர்ச்சைலயும் சிக்கலை//

இதற்கு ஜனாதிபதியாக இருந்து தான் ஆக வேண்டும் என்று அவசியமில்லையே? ஒரு விஞ்ஞானியாக கூட அதை செய்யலாமே.

நாட்டின் மிக உயர்ந்த பதவியில் இருந்த போது மக்களுக்கான செய்ய வேண்டிய வாய்ப்பு இருந்தும் அதை தவற விட்டுவிட்டார் என்பது எம் வருத்தம்.

அவரை குற்றம் சொல்லவில்லை, சற்று ஏமாற்றம் .

சி.பி.செந்தில்குமார் said...

ஏமாற்றம் இருப்பது உண்மைதான்.. ஆனால் ஆலை இல்லாத ஊருக்கு இலௌப்பைப்பூ சர்க்கரை என்பது போலே இந்த மட்டும் அவர் நல்லவரா இருந்ததே எனக்கு போதும் என தோணுது

Unknown said...

"பாரத்... பாரதி... said...

//அனைவரும் அணுகக்கூடியவராக, மாணவர்களுக்கு நல் வழி காட்டியாக இருந்தார். எளிமையான வாழ்வு வாழ்ந்தார். எந்த சர்ச்சைலயும் சிக்கலை//

இதற்கு ஜனாதிபதியாக இருந்து தான் ஆக வேண்டும் என்று அவசியமில்லையே? ஒரு விஞ்ஞானியாக கூட அதை செய்யலாமே.

நாட்டின் மிக உயர்ந்த பதவியில் இருந்த போது மக்களுக்கான செய்ய வேண்டிய வாய்ப்பு இருந்தும் அதை தவற விட்டுவிட்டார் என்பது எம் வருத்தம்.

அவரை குற்றம் சொல்லவில்லை, சற்று ஏமாற்றம்"

>>>>>>>>>

கலாமுக்கு கொடுக்கப்பட்ட பதவி...கண்துடைப்பே.......அதிலும் அவர் ஒரு முக்கியான விஷயத்தை முடித்து வைத்தார்....இல்லையென்றால்.........இட்லி அம்மாதான் இப்போ சிங் நிலையில் இருந்திருப்பார்கள்!

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

நேரு நாட்டுக்காக துட்டு போட்டவர் அதனால் அவர் வம்சாவழி திரும்ப திரும்ப இன்றுவரை எடுத்துக்கொண்டு இருக்கிறது...அதே கலாம் நாட்டு துட்டின் மூலம் படித்தவர்...........எனவே நாட்டுக்கு பிரதிவுதவி செய்து கொண்டு இருக்கிறார்!

வெளிநாட்டில் சம்பாதிக்க வாய்ப்பு இருந்தும் அவர் தாய் நாட்டுக்காக உழைத்தார்

Unknown said...

இதற்க்கு முன் அந்தப்பதவியில் இருந்த பலரில் யார் என்ன செய்து இருக்கிறார்கள் என்று ஒரு முறை சிந்திக்கவும்...இப்போது இருப்பவர் செய்வதை கவனிக்கவும்!

Mahan.Thamesh said...

cp சார் நீங்கள் கற்று கொண்டவற்றை எங்களோடு பகிர்தமைக்கு நன்றிகள்
நல்ல தகவலை தேடி தந்துள்ளிர்கள்.

Unknown said...

கலாம் ஜனாதிபதியாக தேர்வானது மிகப்பெரிய எதிர்பார்ப்பு தமிழர்களிடையே உண்டானது.

சி.பி.செந்தில்குமார் said...

பாரத்... பாரதி... said...

கலாம் ஜனாதிபதியாக தேர்வானது மிகப்பெரிய எதிர்பார்ப்பு தமிழர்களிடையே உண்டானது.

உண்மை தான். நான் சொல்ல வருவது அவர் பிரமாதமாக சாதிக்க வில்லை என்றாலும் ஜனாதிபதிகளில் பெஸ்ட் என்ற அளவில் இருந்தார் என்பதே..

Unknown said...

கலாம் ஒரு கற்பனாவாதி!
கலாம் ஒரு கம்யூனிஸவாதி!
கனவு காணச் சொல்லுவதால்!

சரியில்ல....... said...

அப்துல் கலாமின் வார்த்தைகளில் எவ்வளவு தன்னம்பிக்கை இருக்கிறது என்று கவனியுங்கள்.. இளைய சமுதாயத்திற்கு அவர் கொடுக்கும் உற்சாக டானிக், அவர் பேசும் வார்த்தைகளிலும் உண்டு.
விகடனை முந்திக்கொண்டு தந்ததிற்கு நன்றிகள். நான் பெரிதும் வணங்கும் மாமனிதர் மேதகு.ஏ.பி.ஜே.அப்துல்கலாம்.

சரியில்ல....... said...

பாரத்... பாரதி... said...

அவர் பிறந்த ராமேஸ்வரத்திற்கு அருகில் இருக்ககூடிய இலங்கையில் இனப்படுகொலைகள் நடந்தபோது, நம் அப்துல் கலாம் அவர்கள் மௌனமாகவே இருந்தது ஏன் என்ற கேள்வி என் மனதை உறுத்திக்கொண்டே இருக்கிறது//

என்ன பண்ணியிருக்'கலாம்' எங்கிரிங்க?

Unknown said...

"சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

நேரு நாட்டுக்காக துட்டு போட்டவர் அதனால் அவர் வம்சாவழி திரும்ப திரும்ப இன்றுவரை எடுத்துக்கொண்டு இருக்கிறது...அதே கலாம் நாட்டு துட்டின் மூலம் படித்தவர்...........எனவே நாட்டுக்கு பிரதிவுதவி செய்து கொண்டு இருக்கிறார்!

வெளிநாட்டில் சம்பாதிக்க வாய்ப்பு இருந்தும் அவர் தாய் நாட்டுக்காக உழைத்தார்"

>>>>>>>>>>>

அப்போ நீங்க சொல்ல வர்றது நாட்ட விட்டு வெளிய போய் சம்பதிகரவங்களுக்கு நாட்டாப்பத்தி கவலை இல்லன்னு சொல்லவரீங்களா சிபி!

செங்கோவி said...

நல்ல பதில்கள்..பதில் சொன்னவருக்கும் விகடனுக்கும் வாழ்த்துகள்!!!!!

சி.பி.செந்தில்குமார் said...

@ vikki

தாய் நாட்டில் கொள்ளை அடித்த பணத்தை வெளி நாட்டில் முதலீடு செய்யும் ஆட்கள் மத்தியில் வெளிநாட்டில் வேலை செய்து சம்பாதித்து தாய் நாட்டில் முதலீடு செய்பவர்களும் இருக்கிறார்கள் நண்பா

Unknown said...

உன்னோட சமாளிப்புக்கு நன்றி..........அதே நேரத்தில் உள் நாட்டு விஷயங்களை பல கோடி கண்கள் வெளி நாட்டில் இருந்து ஒவ்வொரு நொடியும் கவனித்து கொண்டு இருக்கிறது நண்பா!

சசிகுமார் said...

உண்மையில் கலாம் மிகச்சிறந்த மனிதர், அவர் பெரிய அளவில் சாதிக்காததர்க்கு காரணம் இந்த ஒட்டு மொத்த அரசியல் கட்சிகள் தான். இல்லையேல் அவர் இன்னும் பல நன்மைகளை செய்திருப்பார் என்பது என்பது என் நம்பிக்கை.

டக்கால்டி said...

ஆக்கப்பூர்வமாக போய்க் கொண்டிருந்த விவாதம் விக்கி-சிபி அன்னாத்தைகளின் இருமுனை போராக மாறிவிட்டது..சபாஷ் சரியான போட்டி..ஹி ஹி

Unknown said...

நல்ல பகிர்வு! நாம தல சுஜாதா பற்றியும் சொல்லியிருப்பதால்....தாங்க்ஸ் பாஸ்! :-)

Unknown said...

சும்மா இருந்த அந்தம்மாவ கூட்டிவந்து அரசியலல்ல இரக்க நெனச்சவங்க மூக்க உடைச்ச மனுசன்யா கலாம்..........அதனாலதான் மறுபடியும் அவர தேர்ந்தெடுக்கல.......ஏன்னா கலம்க்கு அரசியல் பண்ண தெரியாது........!

Philosophy Prabhakaran said...

@ சி.பி.செந்தில்குமார்
// அதான் தினம் 3 பதிவு அப்டி வருதே.. ஆனா நான் பதிலடி எல்லாம் கொடுக்க மாட்டேன். மன்னிப்பு கேட்டுட்டு ஓடிடுவேன் //

என் இனமடா நீ...!

Unknown said...

"Philosophy Prabhakaran said...

@ சி.பி.செந்தில்குமார்
// அதான் தினம் 3 பதிவு அப்டி வருதே.. ஆனா நான் பதிலடி எல்லாம் கொடுக்க மாட்டேன். மன்னிப்பு கேட்டுட்டு ஓடிடுவேன் //

என் இனமடா நீ...!"

>>>>>>>>>>>

அண்ணே வாங்கன்னே எப்படி இருகீங்கன்னே!

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

உன்னோட சமாளிப்புக்கு நன்றி..........அதே நேரத்தில் உள் நாட்டு விஷயங்களை பல கோடி கண்கள் வெளி நாட்டில் இருந்து ஒவ்வொரு நொடியும் கவனித்து கொண்டு இருக்கிறது நண்பா!

ஒரு வல்லரசை மற்ற நாடுகள் நோட் பண்ரதுல என்ன தப்பு? நாம் தான் பலவற்றுக்கும் வழிகாட்டியா இருக்கமே.. ஊழல் சாதனை உட்பட

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

சும்மா இருந்த அந்தம்மாவ கூட்டிவந்து அரசியலல்ல இரக்க நெனச்சவங்க மூக்க உடைச்ச மனுசன்யா கலாம்..........அதனாலதான் மறுபடியும் அவர தேர்ந்தெடுக்கல.......ஏன்னா கலம்க்கு அரசியல் பண்ண தெரியாது........!

அரசியல் பண்ணத்தெரியனும்னா நயவஞ்சகப்பேச்சும்,சுயநல நடத்தையும் வேண்டுமே..?

டக்கால்டி said...

50

Unknown said...

"சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

சும்மா இருந்த அந்தம்மாவ கூட்டிவந்து அரசியலல்ல இரக்க நெனச்சவங்க மூக்க உடைச்ச மனுசன்யா கலாம்..........அதனாலதான் மறுபடியும் அவர தேர்ந்தெடுக்கல.......ஏன்னா கலம்க்கு அரசியல் பண்ண தெரியாது........!

அரசியல் பண்ணத்தெரியனும்னா நயவஞ்சகப்பேச்சும்,சுயநல நடத்தையும் வேண்டுமே"

>>>>>>>>>

தவறான பார்வை நண்பா கெட்ட அரசியல் வியாதிகளிடமும் சில முக்கிய விஷயங்கள் இருக்கின்றன........அரசியல் என்பது குழந்தையிடமும் உள்ளது.......அதனை தெரிந்து கொள்ள முடியாதவர்களே வெறுக்கிறார்கள்.........

சௌந்தர் said...

இது தான் சூப்பர் பகிர்வு கலக்குங்க....

மர்மயோகி said...

மாமா வேலை பார்க்கும் ஆபாச விகடனின் ஏஜென்ட் சி பி செந்தில்குமாரே உங்களுடைய மூளையில் சொந்த சரக்கு என்று ஏதும் இல்லையா? எத்தனை நாளைக்கு தான் இந்த கேவலமான பொழைப்பு?

சக்தி கல்வி மையம் said...

இன்னைக்கும் மைனஸ் ஒட்டா?

சி.பி.செந்தில்குமார் said...

>>* வேடந்தாங்கல் - கருன் *! said...

இன்னைக்கும் மைனஸ் ஒட்டா?

hi hi ஹி ஹி 10 55 வரை மைனஸ் ஓட்டு விழலை ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

>>
தவறான பார்வை நண்பா கெட்ட அரசியல் வியாதிகளிடமும் சில முக்கிய விஷயங்கள் இருக்கின்றன........அரசியல் என்பது குழந்தையிடமும் உள்ளது.......அதனை தெரிந்து கொள்ள முடியாதவர்களே வெறுக்கிறார்கள்.........

@ vikki

குழந்தை பண்ணூவது யாருக்கும் பாதிப்பில்லை. கயவர்கள் செய்யும் அரசியலால் தானே நாட்டுக்கேஎ பாதிப்பு?

கேணியூர் வீறுடை வேந்தனார் said...

அண்ணே! எம் மாமே பன்னிக்குட்டிய ரொம்ப நாளா காணோம! எங்கயாச்சும் பார்த்தேளா? சிநேகிதனை..... சிநேகிதனை ரகசிய சிநேகிதனை.......

Anonymous said...

பகிர்வுக்கு நன்றி

ம.தி.சுதா said...

என் வெகு மதிப்பிற்குரிய முதல் இந்தியர; இவர; தான் சீபீ... எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் தான்..


அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம் (வன்னி மக்கள் கண்டுபிடிப்பு)

Jayadev Das said...

ஏ.பி.ஜெ.அப்துல் கலாம். ம்ம்... ஏவுகணைத் தொழில் நுட்பத்தில் கை தேர்ந்தவர், பல ஏவுகணைகளை இந்திய ராணுவத்திற்கு செய்து கொடுத்த வல்லுனர், நல்ல ஆசிரியர். அரசியலுக்கு லாயக்கில்லாதவர். ஐந்து வருஷம் மற்ற எல்லா ஜனாதிபதிகளைப் போலவே ஒண்ணுத்துக்கும் உபயோகமில்லாமல் உட்கார்ந்திருந்தவர். ஒரு மாநில சட்டசபையை கலைக்கும் உத்தரவில் வெளிநாட்டுச் சுற்றுப் பயணத்தின் போது அவசரம் அவசரமாக கையெழுத்துப் போட்டு, பின்னர் எதிர்ப்புகள் கிளம்பியதைத் தொடர்ந்து வாபஸ் வாங்கி வழிந்தவர். பாராளுமன்றத்தை குண்டு வைத்து தகர்க்க சதி செய்தவனை தூக்கில் போடும் உத்தரவை நிரவேற்றாமலேயே பதவிக் காலத்தை முடித்த தேசபக்தர். இவர் ஜனாதிபதியாக இருந்து மக்கள் வாழ்வு மேம்பட சாதித்தது என்ன என்று யாராவது சொன்னால் நன்றாக இருக்கும். [தயவு செய்து, இட்லி காரி பிரதமராகாமல் தடுத்ததை ஒரு சாதனையாகச் சொல்ல வேண்டாம்]. தினமும் மாணவர்களைச் சந்திப்பதும், அவர்களுடன் புகைப் படம் எடுத்துக் கொள்வது பெரிய சாதனை அல்ல. அந்த பார்வையற்ற பையன் படித்து நல்ல வேலையில் அமர்ந்தால் எதையாவது சாதிப்பான், இந்த உப்பு சப்பில்லாத ஜனாதிபதியாக வேண்டும் என்ற எண்ணம் எதற்கோ தெரியவில்லை. கல்ப்பாக்கம் அணு உலை தமிழனுக்கு உலை என்பதை வெளிப்படையாக இவரால் ஒப்புக் கொள்ள முடியாது. 2020 இந்தியா என்பது நமது நாட்டு ஊழல் பணம் கறுப்புப் பணமாக சுவிஸ் வங்கியில் உறங்கிக் கொண்டிருக்கும் வரை வெறும் கனவாகவே இருக்கும், நனவாகாது.

VELU.G said...

நல்ல பகிர்வு

Unknown said...

Blogger Jayadev Das
சொன்ன விஷயங்கள் நிறைய யோசிக்க வைக்கிறது. இது குறித்து யாரேனும் விரிவான பதிவு எழுதினால் நன்றாக இருக்கும்.

J.P Josephine Baba said...

அப்துள் கலாம் இந்திய என்ற அரசின் பொய் முகத்தின் பிரதிபலிப்பு! மாணவர்கள் மாணவர்கள் என்று உருகினார் அவர்களுக்கு என என்ன திட்டம் கொண்டு வந்தார் அவர் சந்திக்கும் குழந்தைகள் கூட இந்திய ஏழை மாணவர்கள் அல்ல. பள்ளிகலை சந்தித்து அதன் கட்டணம் உயர்த்த உதவினார் எனபதே உண்மை!!