Saturday, March 12, 2011

சினேகா-வின் பவானி - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhV5KJFadRm6Y2jOb6dv9r7qhwn31SrDkwVqPu6zNzgfoLUg3f-TDxS5BqXnMokJLUS_8Mclxb712uVQfzkRqAibSO9C3NPd6tiqg78URBN4SWUeWlSEh8HRQXHcwmXZucmyYPnuZ4-SJJ5/s1600/Bhavani.jpg
சிரிப்பு அழகி சினேகாவுக்கு திடீர்னு ஒரு விபரீத ஆசை.. நாமளும் விஜய சாந்தி மாதிரி ஒரு வைஜயந்தி ஐ பி எஸ்  டைப் ஆக்‌ஷன் படம் கொடுக்கனும்னு..அதனால வலுக்கட்டாயமா தன்னோட ஸ்பெஷல் பிராண்ட் சிரிப்பை மூட்டை கட்டி பரண்ல வெச்சுட்டு போலீஸ் யூனிஃபார்ம் மாட்டி பல வித்தைகளை காட்டி இருக்காரு.........ஆனா.....

பொதுவா போலீஸ் யூனிஃபார்ம் போட்டா எல்லாருக்கும் கெத்தாதான் இருக்கும்..ஆனா திரைக்கதைல கெத்து இல்லையே....போலீஸ் ஆஃபீசரோட வீர தீர சாகசப்படம் பார்க்க வந்தவங்க போலீஸ் ஆஃபீசரோட தங்கையை ரேப் பண்ணி கொலை செஞ்சவனை பழி வாங்கற எஸ் ஏ சந்திர சேகர் கால படக்கதையை எதிர்பார்த்திருக்க மாட்டாங்க தான்.

என்னதான் சினேகா முகத்தை இறுக்கமா வெச்சிருந்தாலும் அவரது முகம் ஒரு சாஃப்ட்டான முகம் என்பதால்  ( கண்டு புடிச்சுட்டாருய்யா துர)  போலீஸ்க்கே உரிய கண்டிப்பு முகத்தில் வெளிப்படுத்த முடியல... ஆனா அவரும் முடிஞ்சவரை சமாளிச்சிருக்காரு..அவர் ஜீன்ஸ் பேண்ட் . டீ சர்ட் போட்டுக்கிட்டு கோபமா நடந்து வர்றப்ப.... ஹி ஹி.....பார்க்க நல்லாருக்கு  .( சென்சார் சென்சார்....)

அவர் வர்றப்ப ஒரு பேக் கிரவுண்ட் ஹம்மிங்க் கொடுக்கிறாங்க.. பாருங்க .. யதா யதா தரிகிடத்தோம் யதா யதா தரிகிடத்தோம் தம் தோம்... ஸ்லோ மோஷன்ல போலீஸ் புடை சூழ சினேகா நடந்து வர்றப்ப பார்க்க நல்லாதான் இருக்கு.. ஆனா பில்லா ரேஞ்சுக்கு அதே சீன் 13 இடத்துல வர்றப்ப கடுப்பாகுது...

http://static.webdunia.com/mwdimages/thumbnail/image/izizi//mywebdunia/UserData/DataC/cinemakisukisu/images/127404_f520.jpg
இந்தப்படத்துக்கு டூயட் வேண்டாம்னு முடிவு பண்ணுன இயக்குநரை நான் பாராட்டறேன்.. ஆனா சினேகாவை ஒரு இடத்துல கூட சிரிக்கறதை காட்டாததை வன்மையா கண்டிக்கிறேன்.. ( ஒரு சீன்ல அப்பாவைப்பார்த்து சிரிக்கிறார்.. ஆனா சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராதுன்னு சொல்ற மாதிரி அப்பாவைப்பார்த்து சிரிப்பது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.. ஹி ஹி )

ஃபைட் சீன்ல சினேகா ரொம்ப படுத்தறார்.. வில்லனின் அடியாளை ஓங்கி ஒரு அடி குடுத்துட்டு 5 விரல்லயும் நெட்டை (சொடக்கு - நன்றி - கி ராஜ நாராயணன்)எடுத்துட்டு இருக்கார்.. சுத்தி 36 வில்லனின் அடியாட்கள் அவர் சொடக்கு எடுத்து முடியற வரை காத்திருந்து அப்புறம் அடிக்க வர்றாங்க...

விவேக்- செல் முருகன் காமெடி காட்சிகள் தனி டிராக்கில் படத்துக்கு சம்பந்தம் இல்லாமல் போவதால் மனதை நிற்கவில்லை.. ஆனால் மோசமில்லை.. சிரிப்பு வருது....

http://www.viduppu.com/photos/full/actresses/sneha/004.jpg
வசனகர்த்தா பவானியில் பவனி வந்த இடங்கள்

1. இந்தத்தடவை உனக்கு எம் எல் ஏ சீட் இல்லை..

யோவ்,,நீ ஜெயிக்கனும்கறதுக்காக கள்ள ஓட்டு, கொலைன்னு எவ்வளவோ கஷ்டப்பட்டிருக்கேன்..( நல்லா சொல்றாங்கய்யா டீட்டெயிலு..)

2.  யோவ்.. எஸ் ஐ.. ராஜா ராமன் மேல ஒரு சூசயிடு கேஸ் போடு.. அவனை நான் கொல்லப்போறேன்...

கேஸா..அப்படின்னா..?

சுத்தம்.. அதே தெரியாதா?    ( ரொம்ப அப்பிராணியா இருக்காரே...இந்த சப் இன்ஸ்பெக்டர்..) 

3. எனக்கு  கிம்பளம் தர்றது முதல் வீடு கட்டித்தந்தது வரை எல்லாமே அவர்தான்... அவரை எப்படி நான் அரெஸ்ட்  பண்றது?

உன் பொண்டாட்டிக்குத்தாலி கட்னதும் அவர்தானா..?

4.  ஹலோ... வந்து சேர்ந்திட்டியா.?

விவேக்.. - ஹா ஹா ஆக்சிடெண்ட் ஆகிடுச்சு. போயே சேர்ந்துட்டான்

5.  இனிமே ரன்னிங்க்ல செல் ஃபோன் பேசுவே நீ..?

ம்ஹூம்.. இனி வாக்கிங்க்ல கூட செல் ஃபோன்ல பேச மாட்டேன்...

6.  ஆஹா.. முருகன் மயில் மேல ஏறி வர்றது எனக்கு தெரியுது...

விவேக்.. - அடப்பாவி.. இங்கே பார்த்து வண்டி ஓட்டுடா.. எனக்கு எமன் எருமை மேல வந்து துரத்தறது நல்லா தெரியுது...

7. விவேக்.. -  அடப்பாவி.. வண்டில போறப்ப சாமி கும்பிடாம போனா சாமி கோவிச்சுக்கவா போகுது?ஏண்டா ஆக்சிடெண்ட் நடக்க ஒரு காரணி ஆகறீங்க..?

8.  விவேக்.. - என்னது? ரேப் பண்ணுனவனுக்கு ரூ 500 அபராதமா? இனி பாக்கெட்ல ரூ 500 வெச்சிருக்கறவன் எல்லாம் அடங்க மாட்டேனே... ( உயிர் புகழ் சங்கீதா நடித்த தனம் பட டயலாக் உல்டா.. # வாழ்க வல்லாரை லேகியம்)

9. விவேக்.. - என்னது? ஆயிலுக்கு பஞ்சமா? தமிழ் நாட்ல இருக்கற டீகடைகள்ல விற்கற பஜ்ஜிகளை பிழிஞ்சா ஆயில் கஷ்டமே வராதேடா.....

10. விவேக்.. -  நான் நினைக்கறேன்  இந்த பஜ்ஜில இருக்கற ஆயில் தான் பின் மருவி பஜாஜ் ஆயில்னு வந்ததோ..?

11.வில்லன் - இங்கே பாரு.. ஒரு அசிஸ்டெண்ட் கமிஷனர்  ஒரு சப் இன்ஸ்பெக்டரை அடிச்சான்னு பேர் வெளில வந்தா பெரிய பிரச்சனை ஆகும்...

ஓக்கே.. கான்ஸ்டபிளை விட்டு அடிக்க சொல்றேன்..

12. .வில்லன் - இவனுங்க பார்க்கற பார்வையே சரி இல்லையே.. ஓட்டு போடுவானுங்களா?

அல்லக்கை - நீங்க இதுவரை ஜனங்களுக்கு ஏதாவது நல்லது பண்ணி இருக்கீங்களா?

இல்லை..

அப்புறம் என்ன கவலையை விடுங்க.. இந்த ஜனங்க எபவும் நல்லவங்களுக்கு ஓட்டு போடவே மாட்டாங்க.. எல்லா ஓட்டும் நமக்குத்தான்..

13.  தலைவரே.. குழந்தைக்கு பெயர் வைங்க....

நம்ம சின்னம் கோடாலி சின்னம் தானே .. அதையே வை.. தேர்தலுக்கு யூஸ் ஆகும்..

14.  வில்லன் - அவ நம்மளை திட்றாளா? புகழ்றாளா? தெரியலையே..?

ஜனங்க கை தட்றாங்க.. அப்போ புகழ்றாங்கன்னு தான் அர்த்தம்..

அடப்போடா.. அவங்க எதுக்கு கை தட்றாங்கன்னு அவங்களுக்கே தெரியாது..



http://ulavan.net/wp-content/uploads/2010/12/sinega-e1292341879707.jpg
பரவை முனியம்மாவை வைத்து எடுக்கபாட்ட பாடல் அப்பட்டமாக தூள் பட ஏய் சிங்கம் போல நடந்து வரும்.. பாட்டின் உல்டா...

இயக்குநருக்கு பாராட்டு பெற வைக்கும் இடங்கள்

1. ஹீரோயின் தங்கையை வில்லனின் ஆட்கள்  கடத்தி செல்லும்போது அவளைக்காப்பாற்ற போகாமல் வில்லனின் மகனை ரிவால்வர் முனையில் மிரட்டி வில்லனை பணிய வைக்கும் இடம் விறு விறு....

2. ஆக்சிடெண்ட் ஆன செல் முருகன் பால் வண்டியிக்கு கீழே விழுவதும்.. எதேச்சையாக அவர் வாய் பால் பைப்புக்கு கீழே இருப்பதும்...செம காமெடி.. இந்த சீனில் விவேக்கின் டயலாக் டெலிவரி செம...

3. சினேகாவின் தங்கையாக வரும் ஃபிகர் புதுசா ,இளசா இருப்பது.. ஹி ஹி 
http://thangameen.com/Images/ContentImages/admin/sneha_23.gif
இயக்குநருக்கு சில கேள்விகள்

1.போலீஸ் கான்ஸ்டபிள் தனது குழந்தை இறந்ததற்கு லீவ் கேட்டும், அதை அடக்கம் பண்ணக்கூட லீவ் தராமல் எஸ் ஐ டபாய்ப்பதும்...எந்த ஊர்ல அப்படி நடக்குது..?

2.ஏ சி பவானியின் கதையில் தேவை இல்லாமல் கான்ஸ்டபிள் சம்பத்குமாரின் கிளைக்கதை எதற்கு?

3. ஹீரோயின் தங்கயின் பெண் அழைப்பு விழாவில் பன்னீர் தெளிப்பதற்குப்பதில் பெட்ரோலை தெளித்து அரை மணி நேரம் கழித்து பட்டாசு பற்ற வைத்து எரிப்பது ஓவர்...சுற்றி இருப்பவர்கள் கேட்க மாட்டாங்களா?

4. ஹீரோயின் ஆக்சிடெண்ட்டில் காலில் அடிபட்டு ஹாஸ்பிடலில்  அட்மிட் ஆன அடுத்த வாரமே எப்படி டெர்மினேஷன் லெட்டர் வரும்? மெடிக்கல் லீவ் இருக்கே..? 2 வருஷம் கழிச்சுத்தானே அந்த நடவடிக்கை எடுக்க முடியும்?

5. எந்த காலேஜ்ல எண்ட்ரன்ஸ்ல நீச்சல் குளம் இருக்கு?அதுல ரவுடிங்க நீச்சல் அடிப்பாங்களா? காலேஜ் டைம்ல...

6. ஹீரோயின் தங்கை டிரஸ் சேஞ்ச் பண்ண அறிமுகம் இல்லாதவர் வீட்டில் ஒரு அறையில் நுழையும்போது கதவைத்தாழ் போடாமல் டிரஸ் சேஞ்ச் பண்ணுவாளா? ( அப்பத்தானே வில்லன் ரேப் பண்ண உள்ளே வர முடியும்?னு சால்ஜாப்பு சொல்லக்கூடாது?)

7 கத்திக்குத்து பட்ட பொண்ணை காப்பாத்தி ஹாஸ்பிடல்ல சேர்க்காம ஏம்மா எந்திரி.. பாரு  அப்படின்னு ஹீரோயின் கத்தறாங்க.. லாஜிக்  ஓட்டை  ஓவர்...


http://www.thedipaar.com/pictures/resize_20101227131420.jpg
எட்டடுக்கு சோலை என்னுடைய சேலை எனும் டப்பாங்குத்துப்பாட்டு வரிகள் செம கில்மா .. ஆனால் அந்த பாட்டை படமாக்குவதில் ரசனைக்குறைவு..அந்த பாட்டுக்கு நடன தாரகைகளை தலைக்கு குளிக்க வைத்து  ( என்னமோ இவனே தலையை துவட்டி விட்ட மாதிரியே சொல்றானே.. )சேலை கட்ட வைத்து டீசண்ட்டாக ஆட வைத்தும் நோ யூஸ்...

கரும்புச்சாறு சொல்லழகி,கற்பூரக்கண்ணழகி  செல்ஃபோன் சிணுங்கல் சிங்காரி பாட்டு வரிகள் அழகு கற்பனை...

கோட்டா சீனிவாசராவ் வில்லன் நடிப்பில் ஓக்கே... ( ஆம்பளைங்களை இவன் பாராட்றதே இல்லைன்னு யாரும் சொல்லிடக்கூடாது பாருங்க..)

சராசரியாக 20 நாட்கள் ஓடும்

ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 38
குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க்கிங்க்  - ஓக்கே

59 comments:

ரஹீம் கஸ்ஸாலி said...

vadai.........

சக்தி கல்வி மையம் said...

மிஸ்சாயிடுச்சே... நம்ம பதிவுலக குரு தானே.

சி.பி.செந்தில்குமார் said...

ரஹீம் கஸாலி said...

vadai.........

கஸாலி.. தாராளமா கருத்து சொல்லலாம்.. அரசியல்னாத்தானே பயப்படுவீங்க?

Unknown said...

மூனாவது வடை

சி.பி.செந்தில்குமார் said...

வேடந்தாங்கல் - கருன் said...

மிஸ்சாயிடுச்சே... நம்ம பதிவுலக குரு தானே.

உங்களுக்கும் அவர்தான் குருவா?

சி.பி.செந்தில்குமார் said...

இரவு வானம் said...

மூனாவது வடை

வாங்கய்யா வாத்தியாரய்யா

ராஜி said...

Present sir

Unknown said...

//அவர் வர்றப்ப ஒரு பேக் கிரவுண்ட் ஹம்மிங்க் கொடுக்கிறாங்க.. பாருங்க .. யதா யதா தரிகிடத்தோம் யதா யதா தரிகிடத்தோம் தம் தோம்...//

தல இத்தனை நாள் டயலாக் மட்டும்தான் போட்டுட்டு இருந்தீங்க, இப்ப முயூசிக்க கூடவா? உங்க கடமை உணர்ச்சிக்கு எல்லையே இல்லையா :-)

கோவை நேரம் said...

பவானியும் பார்த்தாச்சா.....எப்படிங்க உங்களால மட்டும் முடியுது ...விமர்சனம் அருமை ...

Unknown said...

//சினேகாவின் தங்கையாக வரும் ஃபிகர் புதுசா ,இளசா இருப்பது.. ஹி ஹி //

போட்டோ போடாததை கண்டித்து வெளிநடப்பு செய்கிரேன் :-)

சக்தி கல்வி மையம் said...

சி.பி.செந்தில்குமார் said...

வேடந்தாங்கல் - கருன் said...

மிஸ்சாயிடுச்சே... நம்ம பதிவுலக குரு தானே.

உங்களுக்கும் அவர்தான் குருவா? ---- என் பதிவுலக வளர்ச்சியில் பேஸ்மென்டே அவர்தான்..
உங்களுக்கும் அவர்தான் குருவா?
அன்னடீன்னா உங்களுக்கும் அவர்தானா?

சி.பி.செந்தில்குமார் said...

>>>இரவு வானம் said...

//சினேகாவின் தங்கையாக வரும் ஃபிகர் புதுசா ,இளசா இருப்பது.. ஹி ஹி //

போட்டோ போடாததை கண்டித்து வெளிநடப்பு செய்கிரேன் :-)


அண்ணே.. தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை.. இதுக்குப்போய் கோவிச்சுக்கலாமா?

சி.பி.செந்தில்குமார் said...

இரவு வானம் said...

//அவர் வர்றப்ப ஒரு பேக் கிரவுண்ட் ஹம்மிங்க் கொடுக்கிறாங்க.. பாருங்க .. யதா யதா தரிகிடத்தோம் யதா யதா தரிகிடத்தோம் தம் தோம்...//

தல இத்தனை நாள் டயலாக் மட்டும்தான் போட்டுட்டு இருந்தீங்க, இப்ப முயூசிக்க கூடவா? உங்க கடமை உணர்ச்சிக்கு எல்லையே இல்லையா :-)

அது கேட்க காமெடியா இருந்தது.. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்னு...

சி.பி.செந்தில்குமார் said...

ராஜி said...

Present sir

இதன்னெ ஸ்கூலா? இது மாணவர்கள்க்கு படிப்பினை ஊட்டும் பல்கலைக்கழகம்.. ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

கோவை நேரம் said...

பவானியும் பார்த்தாச்சா.....எப்படிங்க உங்களால மட்டும் முடியுது ...விமர்சனம் அருமை ...

நன்றி.. முடியற வரை பாக்கலை.. கடைசில ஓடி வந்துட்டேன்.. சாரி பைக் எடுத்துட்டு....

ராஜி said...

மணப்பெண் அழைப்பு>> பெட்ரோல்>> பட்டாசு சீன் 1990 ல வைஜெயந்தி IPS ல வந்த சீன். இத எப்படி மறந்தீங்க சிபி சார்

சி.பி.செந்தில்குமார் said...

ராஜி said...

மணப்பெண் அழைப்பு>> பெட்ரோல்>> பட்டாசு சீன் 1990 ல வைஜெயந்தி IPS ல வந்த சீன். இத எப்படி மறந்தீங்க சிபி சார்

மறக்கலை.. டோட்டல் படமே அந்தப்படத்தோட இன்ஸ்பிரேஷன்ல எடுக்கப்பட்டதுதான்னு ஓபனிங்க்லயே சொல்லீட்டனே .. மறுபடி படிங்க.. ( ஹிட்ஸ் ஏறட்டும்.. ஹி ஹி )

ராஜி said...

மறுபடியும் முதல்ல இருந்தா? அவ்வ்வ் மீ எஸ்கேப்

Unknown said...

நல்ல விமர்சனங்க சி.பி.

ம்ம்.. சினேகா போட்டோஸ் சூப்பர்.. :-)

கவிதை வீதி... // சௌந்தர் // said...

விமர்சனம் படிச்சாச்சி..

ராஜி said...

மறுபடியும் படிங்க. ஹிட்ஸ் ஏறட்டும்
>> உங்க போதைக்கு நான் ஊறுகாவா? அஸ்கு புஸ்கு

சி.பி.செந்தில்குமார் said...

பதிவுலகில் பாபு said...

நல்ல விமர்சனங்க சி.பி.

ம்ம்.. சினேகா போட்டோஸ் சூப்பர்.. :-)


இனிமே ஃபோட்டோஸே போடக்கூடாது.. வர்றவஙக எல்லாம் அதுதான் நல்லாருக்குங்கராங்க.. ஹி ஹி

ராஜி said...

வந்தேன்,
படித்தேன்(படித்தேனா?),கமெண்டினேன், கிளம்புகிறேன்(அப்பா தப்பிச்சேண்டா சாமி)

சி.பி.செந்தில்குமார் said...

>>># கவிதை வீதி # சௌந்தர் said...

விமர்சனம் படிச்சாச்சி..

இன்னும் 2 லைன் சொல்விங்க .. விட்டுட்டீங்களே...சரி நானே சொல்றேன்.. ஓட்டு போட்டாச்சு. கிளம்பியாச்சு

சி.பி.செந்தில்குமார் said...

>>> Delete
Blogger ராஜி said...

வந்தேன்,
படித்தேன்(படித்தேனா?),கமெண்டினேன், கிளம்புகிறேன்(அப்பா தப்பிச்சேண்டா சாமி)

ஏன் எல்லாரும் கிளம்பறீங்க.. ஆளுக்கு பத்து நிமிஷம் இங்கேயே இருந்தா அலெக்‌ஷா ஹிட் ஏறும்னு பார்த்தா ஆளாளுக்கு எஸ்கேப் ஆகறாங்களே..

Speed Master said...

//ஹீரோயின் ஆக்சிடெண்ட்டில் காலில் அடிபட்டு ஹாஸ்பிடலில் அட்மிட் ஆன அடுத்த வாரமே எப்படி டெர்மினேஷன் லெட்டர் வரும்? மெடிக்கல் லீவ் இருக்கே..? 2 வருஷம் கழிச்சுத்தானே அந்த நடவடிக்கை எடுக்க முடியும்?

என்ன ஒரு தகவல்



நம்ம பதிவு
திருமணத்திற்கு முன் - பின்
http://speedsays.blogspot.com/2011/03/blog-post_12.html

ராஜி said...

சி.பி.செந்தில்குமார்
>இனிமே போட்டோஸ் போடக்கூடாது>
போட்டோ இல்லாத சிபி சார் பிளாக்கா? அப்புறம் அது அலையில்லா கடல், நீலமில்லா வான், வண்ணமில்லா வானவில், தென்றல் இல்லா சோலை(எல்லா எழவும் இப்பதான் வரும். நம்ம பிளாக்குக்கு எழுதும்போது பாதியிலேயே நொண்டும்) போல ஜிலோ னு இருக்கும்.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

I DEEPLY LOVE SNEHA

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

I DEEPLY LOVE SNEHA

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

i come night boss..

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

I DEEPLY LOVE SNEHA IN THIS MOVIE.Hii.........hi........

Unknown said...

கல்லால் அடித்த சுந்தரா................................. தக்காளியால அடிக்கட்டா ராஸ்கோல்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சிரிப்பு அழகி சினேகாவுக்கு திடீர்னு ஒரு விபரீத ஆசை.. ///////

சிரிப்பு போலீசு மாதிரி சிரிப்பு அழகியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////அவர் ஜீன்ஸ் பேண்ட் . டீ சர்ட் போட்டுக்கிட்டு கோபமா நடந்து வர்றப்ப.... ஹி ஹி.....பார்க்க நல்லாருக்கு .( சென்சார் சென்சார்....)////////

பாக்குறதையும் பாத்துப்புட்டு கடைசில சென்சாருன்னா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ஸ்லோ மோஷன்ல போலீஸ் புடை சூழ சினேகா நடந்து வர்றப்ப பார்க்க நல்லாதான் இருக்கு.. ஆனா பில்லா ரேஞ்சுக்கு அதே சீன் 13 இடத்துல வர்றப்ப கடுப்பாகுது...//////

இருந்தாலும் சினேகாவுக்காக பாக்கலாம்.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஆனா சினேகாவை ஒரு இடத்துல கூட சிரிக்கறதை காட்டாததை வன்மையா கண்டிக்கிறேன்.. ////////

என்ன ஒரு அக்கறை....?

Anonymous said...

bavaniyum avuttaa?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சுத்தி 36 வில்லனின் அடியாட்கள் அவர் சொடக்கு எடுத்து முடியற வரை காத்திருந்து அப்புறம் அடிக்க வர்றாங்க...//////

சினேகா சொடக்கு எடுக்குறத அவ்வளவு பக்கத்துல நின்னு பாக்க சான்ஸ் கெடைக்கும் போது மிஸ் பண்ண முடியுமா? அதான் பாத்துட்டு பொறுமையா வர்ராங்க.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////8. விவேக்.. - என்னது? ரேப் பண்ணுனவனுக்கு ரூ 500 அபராதமா? இனி பாக்கெட்ல ரூ 500 வெச்சிருக்கறவன் எல்லாம் அடங்க மாட்டேனே... ( உயிர் புகழ் சங்கீதா நடித்த தனம் பட டயலாக் உல்டா.. # வாழ்க வல்லாரை லேகியம்)///////

நம்ம மைனர் குஞ்சு கூட அட்வான்ஸ் புக்கிங்ல ரேப்பிங் பண்ணிக்கிட்டு இருந்தாரே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////3. சினேகாவின் தங்கையாக வரும் ஃபிகர் புதுசா ,இளசா இருப்பது.. ஹி ஹி //////

இதுக்கு ஏன் படம் போடலைன்னு ஏற்கனவே கேட்டுட்டாங்க, இருந்தாலும் நானும் கேட்டுக்கிறேன் (அட்லீஸ்ட் பேராவது போடலாம்ல?)

டக்கால்டி said...

பவானியை பவானி போயி பார்த்தீங்களா தலை ?

டக்கால்டி said...

சிரிப்பு போலீசு மாதிரி சிரிப்பு அழகியா?//

வேணாம் பார்ட்னர் அது செல் அழகி மாதிரி இருக்கு...

Ram said...

இதெல்லாம் ஒருபடமா.???

Unknown said...

என்னது இயக்குனரை கேள்வியெல்லாம் கேட்க ஆரம்பிச்சுடீங்க...

MANO நாஞ்சில் மனோ said...

//டீ சர்ட் போட்டுக்கிட்டு கோபமா நடந்து வர்றப்ப.... ஹி ஹி.....பார்க்க நல்லாருக்கு .( சென்சார் சென்சார்....)//

ஹி ஹி ஹி ஹி எதுக்கு ஒய் அந்த படத்தை போடலை....?
நான் வெளி நடப்பு செய்யுறேன்....

MANO நாஞ்சில் மனோ said...

//சுத்தி 36 வில்லனின் அடியாட்கள் அவர் சொடக்கு எடுத்து முடியற வரை காத்திருந்து அப்புறம் அடிக்க வர்றாங்க...//

உமக்கு பொறாமை ஒய்....
இதுக்காக டைரக்டருக்கு ஒரு பாராட்டு சொல்லாட்டா எப்பிடி...?

செங்கோவி said...

படத்தை விட, பதிவை விட ஸ்டில் நல்லாயிருக்கும் போலிருக்கே..அப்புறமா படிக்கிறேன்..இப்போதைக்கு ஓட்டு போட்டுட்டு கிளம்புறேன்..ஓட்டும் உமக்காக இல்லை, அந்த ஸ்டில்லை மறுபடியும் போட்டதுக்காக!

MANO நாஞ்சில் மனோ said...

இன்னைக்கும் நமீதா மிஸ்ஸிங்...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

Unknown said...

//அவர் ஜீன்ஸ் பேண்ட் . டீ சர்ட் போட்டுக்கிட்டு கோபமா நடந்து வர்றப்ப.... ஹி ஹி.....பார்க்க நல்லாருக்கு .( சென்சார் சென்சார்....)//
neenga ithukkuthaan poneengannu enga ellarukkum theriyanumaakkum !

good kalakkal vimarsanam CPS !

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஆனா பில்லா ரேஞ்சுக்கு அதே சீன் 13 இடத்துல வர்றப்ப கடுப்பாகுது...///

என்னது பில்லா படத்துல வர்ற நயன்தாரா மாதிரி அதே சீன் சிநேகாவுக்கு இருக்குதா? ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சிரிப்பு அழகி சினேகாவுக்கு திடீர்னு ஒரு விபரீத ஆசை.. ///////

சிரிப்பு போலீசு மாதிரி சிரிப்பு அழகியா?//

உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை?

நிரூபன் said...

வணக்கம் சகோதரம், முதன் முதலாக வலைப்பதிவில் படத்தில் இடம் பெறும் சம்பாஷணைகளோடு ஒரு விமர்சனம், அருமையாக உங்கள் கமராக் கண் மூலம் ரசித்து எழுத்தோவியமாக எங்களுக்குப் பகிர்ந்தளித்துள்ளீர்கள். நன்றிகள் அதற்காக.

காங்கேயம் P.நந்தகுமார் said...

சினேகாவோட குளு குளு கிளு கிளு போட்டாவை பார்க்கும் போது கண்ணுல கலர் லென்சு மாட்டுன எபெக்ட் தெரியுது. ஆமா குகூளில் அரை மணி நேரம் தொலாவி இருப்பீங்களோ?

இருவர் said...

நல்ல விமர்சனம் பார்வை சார்.


எங்கள் புதிய பதிவின் முதல் பதிவு - நம்ம பணம் திருட்டுப்போச்சு...

geethappriyan said...

எப்புடிங்க?
எல்லா மொக்க படத்தையும் ரிலீசாகற அன்னைக்கே பாக்குறீங்க?வெயிட்டு காட்டுறீங்களே?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஐயா செந்தில்குமாரே! இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை! காலைல ஆறுமணிக்கு ஒரு பதிவு போடுறது? அதன்னையா நான் வேலைக்குப் போற நேரம் பார்த்து பதிவு போடுறீங்க? நமக்கு ஓட்டுப் போடவும் முடியல, கமெண்டு போடவும் முடியல!! ஏதாவது ஐடியா பண்ணுங்கையா!

'பரிவை' சே.குமார் said...

விமர்சனம் அருமை ...

தீபிகா said...

இனிமே இங்க வருவியா வருவியா.???

nellai ho chi minh said...

புதிய பதிவர் நான். வருகை புரிந்து வாழ்த்துங்கள்.
நெல்லைஹோசிமின்