Monday, July 22, 2019

ப்ரியா பள்ளிபாளையம் சங்கர் ,ப்ரியா குமாரபாளையம் சங்கர்

1  பேசாம பாப் கட்டிங் வெட்டிட்டு பெமினிஸ்ட் ஆகிடலாம்னு இருக்கேன் 🚶🚶🚶


பெமினிஸ்ட்னாலே நிறைய பேச வேண்டி இருக்குமே?ஆண்களைத்தாக்கியோ ,மட்டம் தட்டியோ...?எப்டி எதுவுமே பேசாம பெமினிஸ்ட் ஆக முடியும்? மேடம்?=================


2 ஒயிடு பால்"போடக்கூடாது என்பதைத்தான்"நம்"முன்னோர்கள் அப்பவே சொல்லி இருக்காங்க


என்ன?னு


அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல்


===============3 தலைவரே!உள்ளூர்ல ஒரு"பய நம்மை மதிக்கறதில்லை,ஆனா வெளிநாட்டுக்காரன்"மட்டும்"நம்மைப்பாராட்றானே?அது எப்படி?
நல்லா கவனி!வெளிநாட்டுக்காரன் பாராட்றானா?அப்டி பாராட்ற மாதிரி நியூஸ் வருதா?தம்பி,மத்தவங்க வளர்ந்த பின்னே பித்தலாட்டம் பண்ணா நாம பிறக்கும்போதே திருடனாப்பிறந்தவங்க


==============


4 பாலியல்"புரட்சி!ன்னா இன்னா?

பாக்கெட் பால்
பால்"பவுடர்"கலந்த கெமிக்கல் பால் தவிர்த்துவிட்டு நேரடியாக"கிராமங்களில்"கிடைக்கும் பசும்பாலை நேரடியாக பசு"வைத்திருப்பவர்களிடமே வாங்க முற்படுவதே பாலியல்"புரட்சி!

==============


5 டாக்டர் ,கட்டெறும்பு கடிச்சா உடம்புக்கு நல்லதா?நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா?


என்னம்மா கலர் கலரா ரீல் விடறீங்க?இயற்கையாகவே உடலில் நோய் எதிர்ப்பு"சக்தி வளர குழந்தைக்கு 2 வயசு வரை தாய்ப்பால் தரனும்.===============6 பெண்கள் கல்யாணத்துக்கு பிறகு தன் அம்மாவை அருகில் வைத்து பார்த்து கொள்ள முடியவில்லை. அது எப்போது மாறும்....?
இப்பவே மாறுமே? வீட்டோட"மாப்ளையா இருக்க எத்தனையோ பேர்"தயாரா இருக்காங்க.3 வேளை சோறு"போட்டா போதும்


=============7 நான் என் புருசனையே ப்ரோ னு தான் கூப்பிடுவேன்
ஏன்?
அவரு புரோட்டா மாஸ்டரா இருக்காரு.செல்ல சுருக் ப்ரோ


=============8 குலத்தொழில் முறையை ஒழிச்சதே எங்க தலைவர்தான்
உங்க தலைவர் என்னவா இருந்தார்?
சரி,தலைவரோட மகன்?
ஒரு பெரிய கட்சிக்கு"தலைவரா"
அவருதான் வருங்கால தலைவர்
இப்ப அவருதான் தலைவரா இருக்கார் ஓஹோ,சரி"தலைவரோட பேரன்?
தமிழகம் பூரா குலத்தொழிலை ஒழிச்சவர் வேய்க்கானமா தன் குடும்பத்துல....


==============

9 டெய்லி 2 கேரட்"பச்சையா சாப்ட்டா கண் பார்வை தெளிவாகும்,கண்ணாடி போடவே தேவை இல்லை


முயற்சி பண்றேன் டாக்டர்,ஆனா"நான்"பார்த்தவரை எல்லா கேரட்டும் ஆரஞ்ச்சாதான்"இருக்கு,பச்சையா இல்ல


=================10 சக்தே இந்தியா அப்டிங்கறதுக்கு தமிழ்ல என்ன சார் அர்த்தம்?
பிகில்


================


11

டைரக்டர் சார் ,இந்த"சீன்ல எதுக்காக என்க்கு காக்கி சட்டையும் ,வெள்ளை பேண்ட்டும் காஸ்ட்யூம் தந்திருக்கீங்க?
ஏன்னா ஒரிஜினல் ல ஹீரோ வெள்ளை சட்டை ,காக்கி பைண்ட் .அப்டியே ஈ அடிச்சான் காபி அடிச்சா ஜனங்க கண்டுபிடிச்சிடுவாங்க


==============12 "நேர்கொண்ட பார்வை"

"பிகில்"
ரெண்டு படங்களுக்கும் என்ன ஒற்றுமை?வேற்றுமை?
2 படமும் ஹிந்திப்பட ரீமேக்
1 முறைப்படி அனுமதி வாங்கி சட்டபடி ரீமேக்கறாங்க
இன்னொண்ணு திருட்டுத்தனமா பட்டி டிங்கரிங்க் பண்ணி .....


==================


13 அத்தி வரதர் என்பது ஒரு ஏமாற்று வேலை, அதெப்பிடி 40 வருசம் தண்ணில எந்த பாதிப்பும் இல்லாம ஒரு சிலை இருக்க முடியும்?

அது இருக்கட்டும், வீட்ல யாரையுமே காணோமே தலைவரே? எங்கே போய்ட்டாங்க?
ஹி ஹி , அத்தி வரதரை தரிசிக்கத்தான், வெளில யார்ட்டயும் சொல்லிடாதய்யா , மானம் போய்டும்


=================


14 வம்புச்சண்டைக்கு தலைவி நயன்தாரா வை இழுத்தால் அவரது பதில் என்னவா இருக்கும்?

நான் பாட்டுக்கு (விக்னேஷ்)சிவனே னு இருக்கேன் ,என்னை எதுக்கு வம்புக்கு இழுக்கறீங்க?


=================
15 எம்.ஜி.ராமச்"சந்திரன்"நினைவாகத்தான் சந்திராயன் ஏவப்பட்டுள்ளது.எனவே தானிக்கு தீனியாக அடுத்த ஏவுகணைக்கு நிதிராயன் என பெயர் சூட்டவேண்டும் எனும் கருத்தை வலியுறுத்தி வெளிநடப்பு செய்கிறோம்


===============


16 தலைவரே!எட்டு வழிச்சாலை திட்டத்தை ஏன் பேரு"மாத்திட்டீங்க?

அஷ்டத்துல சனி.ஏழரைக்கு பக்கத்துல எட்டு இருக்கறதால சரி"வராதுனு ஜோசியர் சொல்லிட்டாரு


=================
17 வஞ்சிமாநகரம் நாவல் படித்தேன்
அதில் சொல்லப்படும் விஷயங்களை வைத்து பார்த்தால், வஞ்சி மாநகர் என்பது இப்போதைய திருச்சூர் தானோ?
அது சரியா தெரில ,ஆனா கேரளா ல இருக்கற 14 மாவட்ட"தலைநகரங்களையும் வஞ்சி மாநகர்னே சொல்லலாம், திரும்புன பக்கம் எல்லாம் திரிபுர சுந்தரிகளே!


==================

18 ஆமை வளர்க்கலாம்னு இருக்கேன்
அடடா,ஆமை புகுந்த வீடு உருப்படாதுனு கிராமத்து சொலவடை இருக்கே?
தெரியும்,அதனாலதான் ஆபீஸ் ல வளர்க்கலாம்னு இருக்கேன்
நான்தான் அடுத்த மாசம் பேப்பர் போடப்போறேனே?
அப்போ ஆபீஸ் உருப்படாம போனா பரவால்லியா?==============

19 இந்த கொசு கடிக்கிறது கூட நம்ம
ரத்தத்துக்காக கடிக்குதுன்னு சொல்லலாம்.
🤔

ஆனா இந்த எறும்பு ஏன் கடிக்குதுனே தெரியலயே
🤔
🤔

நாம ஒண்ணும் அவ்வளவு ஸ்வீட்
பெர்சன் இல்லையே
🤔
🤔
🤔
?
ஒரு வேளை உங்களுக்கு சுகர் இருக்கோ என்னவோ?


=================


20 என்ன சார்?உங்க 2 வது"பொண்ணுக்கு ப்ரியா பள்ளிபாளையம் சங்கர் ,3 வது பொண்ணுக்கு ப்ரியா குமாரபாளையம் சங்கர் னு பேர் வெச்சிருக்கீங்க?
ஏற்கனவே முத பொண்ணுக்கு ப்ரியா பவானி"சங்கர்னு வெச்ட்டனே?


==============0 comments: