Tuesday, July 30, 2019

=ரயில் வராத தண்டவாள்த்தில் அமர்ந்து போராட்டம் பண்றதுதானே திராவிடப்பாரம்பர்யம்?

 பணத்துக்காக நடக்கும் கொலை, கொள்ளைக்கும், அரசுக்கும் என்ன சம்பந்தம்? - அமைச்சர், சீனிவாசன்:


அப்போ காவல் துறை-னு 1 எதுக்கு இருக்கு? அதை முதல்வர் கண்காணிப்புல எதுக்கு வெச்சிருக்கீங்க?

===================
2 ,  எம்.ஜி.ஆருக்கே துரோகம் செய்த துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், வேலுார் மக்களுக்கு துரோகம் செய்ய மாட்டாரா என நினைத்து பார்த்து, ஏ.சி.சண்முகத்துக்கு மக்கள் ஓட்டு போட வேண்டும்.-மதுசூதனன்:


அப்படிப்பார்த்தாச் சசிகலாவுக்கு துரோகம் செஞ்சவர்கள் தானே நீங்க எல்லாரும்?

=================
3   பார்லிமென்டை பொறுத்தவரை, இது எனக்கு அஸ்தமன நேரமாக இருக்கலாம். ஆனால், மாநில அரசியலில், இனிமேல் தான் எனக்கு சூரியோதயம் ஆரம்பிக்கப் போகிறது -மைத்ரேயன்:

 பட்சி கட்சியை விட்டுப்பறக்கப்போகுது, திமுக வில் ஐக்கியம் ஆகப்போகுதுனு அர்த்தமா?

===============
4  ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையால், ஆயிரக்கணக்கான ரயில்வே தொழிலாளர்கள், வேலையை இழக்க நேரிடும்.-கண்ணையா 

அப்போ இத்தனை நாட்களா யாரெல்லாம் துறைல பெஞ்ஜ்சைத்தேய்ச்சுட்டு இருந்தாங்கனு தெரிஞ்சிடும்?


அப்போ அதுக்கு ரெட் சிக்னல்?

=====================


5    ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையால்,  டிக்கெட் கட்டணமும், இரு மடங்கு உயரும் என்பதால், ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுவர்-கண்ணையா 

சேவைக்கு ஏற்ற சேவைக்கட்டணம், காசுக்கேத்த தோசை

=================

6 .   ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையால், மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து, முதற்கட்டமாக நாடு முழுவதும், ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.= கண்ணையா   

ரயில் வராத தண்டவாள்த்தில் அமர்ந்து போராட்டம் பண்றதுதானே திராவிடப்பாரம்பர்யம்?
===================7   மத்திய அரசு கொண்டு வந்துள்ள, என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு அமைப்பு மசோதாவுக்கு, தி.மு.க., ஆதரவு கொடுத்து உள்ளது. இது, சிறுபான்மையினரின், தி.மு.க., மீதான நம்பிக்கைக்கு முதல் அடி; பா.ஜ., உடனான, தி.மு.க.,வின் உறவுக்கு, முதல் படி.- முரளி அப்பாஸ்  

உதயசூரியனும் , தாமரையும் இயற்கையாவே ஒன்றுக்கொன்று தொடர்புடையதுதானே?
================== 


8  தமிழக அரசுக்கு, 4 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது. வருமானத்தை மீறிய கடன் உள்ளதால், அ.தி.மு.க., அரசு திட்டங்களை அறிவிக்கலாமே ஒழிய, செயல்படுத்த முடியாது.-கே.எஸ்.அழகிரி  

எப்படி இருந்தாலும் பெரும்பாலான திட்டங்கள் அறிவிக்க் மட்டும் தானே?செயல் தலைவரே முதல்வர் ஆனாலும் திட்டங்கள் செயல்படாமதான் இருக்கும்

=================

9  குறிப்பாக, சமூக நலத்திட்ட உதவிகள், குடிநீர் பிரச்னைகள், சாலை வசதிகளை நிறைவேற்ற முடியாது. =கே.எஸ்.அழகிரி  

வழக்கம் போல எதிர்க்கட்சி மீது பழி போடுவாங்க, கஜானாவைக்காலி பண்ணிட்டுப்போய்ட்டாங்க, மேட்டர் சிம்ப்பிள்

===============


10  இங்கு, கடன் சுமை என்பது, தமிழக அரசுக்கு மட்டுமே தவிர, ஆட்சி செய்பவர்களுக்கு இல்லை. அவர்கள் மகிழ்ச்சியாகத் தான் இருக்கின்றனர்.கே.எஸ்.அழகிரி  

ஆட்சியை தக்க வைக்கவே பெரும் பாடு , உன் பாடு என் பாடு ஆகிடுது, இதுல தமிழக நலனுக்காக பாடு படுன்னா முடியுமா?

==============11 'அ.தி.மு.க., தொண்டர்கள், தி.மு.க.,வுக்கு வர வேண்டும்' என, ஸ்டாலின் கூறியிருக்கிறார். அவருக்கு எவ்வளவு ஆணவம் பாருங்கள்... தன்னிலை மறக்கும்போது தான், இந்த ஆணவம் வரும். தன்னிலை மறந்திருக்கிறார் ஸ்டாலின். அவருக்கு சவுக்கடி கொடுக்கக் கூடிய தேர்தலாக, வேலுார் தேர்தல் அமைய வேண்டும்.-   கே.பி.முனுசாமி : 

பதிலுக்கு நீங்களூம்  '.தி.மு.க., தொண்டர்கள், அதி.மு.க.,வுக்கு வர வேண்டும்னு அறிக்கை விடுங்க , எக்சேஞ்ச் பண்ணிக்கலாம்.தானிக்கு தீனி

=====================

12  குடிநீர் தேவைக்காகவும், வாய்க்கால் தண்ணீரை நம்பியுள்ள பயிர்களை காப்பாற்றவும், தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில், ஆங்காங்கே, குடிநீருக்கான தேவை இன்னும் முழுமை அடையவில்லை என்பதால், அதை பூர்த்தி செய்ய வேண்டிய அவசிய, உடனடி நடவடிக்கைகளை, அரசு மேற்கொள்ள வேண்டும்.-வாசன் :  

 டாஸ்மாக்ல வேணா தண்ணிப்பிரச்சனையே இல்லை

==================
13 ஆந்திராவில் ஆட்சி மாறினாலும், அங்குள்ள முதல்வர்கள், தங்கள் கொள்கையில் இருந்து மாறவில்லை. சந்திரபாபு நாயுடுவை மிஞ்சும் வகையில், ஜெகன்மோகன் ரெட்டி செயல்படுகிறார். பாலாற்றில் இருந்து, ஒரு சொட்டு தண்ணீர் கூட, தமிழகத்திற்கு விடமாட்டோம் என்ற வைராக்கியத்தோடு, அண்டை மாநில முதல்வர்கள் மிக கவனமாக இருக்கின்றனர். -துரைமுருகன் 

தமிழ்கத்துக்கு தண்ணி தந்தா அவங்களுக்கு அங்கே தண்ணி காட்டிடுவவாங்களே?

=====================


14   எட்டு வழி சாலை திட்டத்தின் பெயர் அதிவேக சாலை என்று மாற்றப்பட்டுள்ளது! -எடப்பாடி_பழனிச்சாமி

# மித வேகம் மிக நன்று என்பதே"போக்குவரத்து வேதம்


=================


15 8 வழிச்சாலையை மக்கள் விரும்பாவிட்டால் வேறு மாநிலத்திற்கு மாற்றலாமே? உச்சநீதிமன்றம் கேள்வி!

# மாத்தலாம்"யுவர்"ஆனர்,ஆனா"சென்னை டூ"சேலம் ரோடுதான்"பிளானே?அப்போ எதெதை"எங்கெங்கே"மாத்தனும்?


===================
16 நாங்கள் நினைத்தால் திமுக என்ற கட்சியே காணாமல் போய்விடும்!-
ராஜேந்திரபாலாஜி
# நினப்பு தான் பொழப்பைக்கெடுக்குமாம்


==================


17 புதிய கல்வி கொள்கையில், யாரோ சொல்லிக்கொடுத்த கருத்தை நடிகர் சூர்யா பேசுகிறார்!” – ஹெச்.ராஜா
# நீங்க போட்ட ட்வீட்டையே ஒரு பிரச்சனை னு வந்தப்ப அது நான் இல்லை ,அட்மின்னு ஜகா வாங்குன நீங்க அதைப்பத்தி பேசலாமா?


=============

18 "ரஜினி, சூர்யா போன்றவர்கள்
மக்களை குழப்புகிறார்கள்": தமிழிசை.
# நல்லவேளை,கமல் இன்னும் நீட் பிரச்சனை பற்றி கருத்து சொல்லல,சொல்லி இருந்தா அவரையும் லிஸ்ட்ல சேர்த்திருப்பாரு


==================


19 ஆந்திர நிறுவனங்களில் 75 சதவிகித பணி இனி ஆந்திர மக்களுக்கே..!
ஜெகன் மோகன் ரெட்டியின் அடுத்த அதிரடி..!
#இவரு போற ஸ்பீடைப்பார்த்தா அடுத்த பிரதமர் இவரு தான் போல.


===============


20 ரஜினி, சூர்யா போன்றவர்கள் மக்களை குழப்புகிறார்கள். - தமிழிசை # உங்களுக்கு (பாஜக) ஆதரவான நிலை எடுத்தப்ப ரஜினியை வாழ்த்தறேன்,வரவேற்கிறேன்,னு வசனம் பேசுனீங்க,இப்போ விசனப்படுறீங்களே?


=====================

16

0 comments: