Friday, July 05, 2019

ஒல்லியா இருக்கற ரவுடிகளை அனுப்பலாமா?

 1   நாட்டில், ஊழலுக்காக கலைக்கப்பட்டது, தி.மு.க., ஆட்சி. வேறு எந்த ஆட்சியும், ஊழலுக்காக கலைக்கப்படவில்லை-ஜெயகுமார்:

முதல்வர் பதவியில் இருக்கும்போதே சிறை தண்டனை பெற்ற்வர் யாரு?


================

 2 விவேகானந்தர், 'எனக்கு வலிமையான, 100 இளைஞர்களை மட்டும் தாருங்கள்... இந்தியாவையே மாற்றிக் காட்டுகிறேன்' என்றார். அந்த விவேகானந்தரைத்தான், நம் பிரதமர் நரேந்திர மோடியின் முகத்தில் காண்கிறேன்.- அ.தி.மு.க., - எம்.பி., ரவீந்திரநாத் குமார்: 

 இவரு அதிமுகவா? பாஜகவா?


============

எமர்ஜென்சி காலத்தின்போது, சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்களுக்கு, ஓய்வூதியமும் சான்றிதழும் அளிக்கப்படும். பணம் என்பதை விட, கவுரவமாக இதை பார்க்க வேண்டும்- மஹாராஷ்டிரா முதல்வர், தேவேந்திர பட்னவிஸ்: 

 எலக்சன் வருது எலக்சன் வருது [பராக்

==============4 


,4  காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர், 'காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில், நீர் வரத்து இல்லை. மழை பெய்தால், பிரச்னை தீர்ந்து விடும்' என, குறிப்பிட்டுள்ளார். இது மறைமுகமாக, கர்நாடகாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக உள்ளது. தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை உடனே, கர்நாடக அரசு திறந்து விட வேண்டும். இல்லாவிட்டால், தமிழகத்தில் மிகப் பெரிய கிளர்ச்சி ஏற்படும்- திருமா


கர்நாடகாவில் நடப்பது நம்ம கூட்டணிக்கட்சியான காங் ஆட்சி தானே? உங்க கூட்டணிக்கட்சித்தலைவர் ராகுலிடம் சொல்லி  ஏற்பாடு பண்ணலாமே?

==================
5  பொது மக்களின், வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட, சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை, அரை சதவீதம் வரை குறைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஏழை, நடுத்தர மக்கள் முதலீடு செய்யும் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி குறைப்பை, உடனே செயல்படுத்தும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், பொதுமக்கள் வாங்கும் சிறு வணிகக் கடன், வீட்டுக்கடன் போன்றவற்றின் மீதான வட்டியை மட்டும் குறைப்பதில்லை. இது, எந்த வகையில் நியாயம்?-ராமதாஸ் 

 விலைவாசியைக்குறைக்க முடியல , அதுக்குப்பதிலா இதைக்குறைச்ட்டாங்க போல 

===============

6  1975ல், நாட்டில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது. ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளாக நாட்டில், 'சூப்பர் நெருக்கடி நிலை' நிலவி வருகிறது. வரலாற்றில் இருந்து நாம் பாடம் கற்று, ஜனநாயக அமைப்புகளை பாதுகாக்க போராட வேண்டும்.- மம்தா பானர்ஜி, 


இன்னும் 5 வருசம் கழிச்சுப்போராடவும்


============== 
7  அ.தி.மு.க., அரசு தொடர்ந்து, தொழிலாளர்களின் ஓய்வு கால நிதிகளை சுரண்டியும், நிர்வாகச் சீர்கேடுகளை உருவாக்கியும், போக்குவரத்துக் கழகங்களை, இயற்கை மரணத்தை நோக்கி எடுத்துச் சென்று விட்டது. இந்த நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளாவிட்டால், அனைத்துச் சங்கங்களையும், பொது மக்களையும் இணைத்து, மாபெரும் போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கும்.-'மு.சண்முகம் 


பொதுமக்களின் தண்ணீர்ப்பிரச்சனைக்காகப்போராடுனீங்களா? எல்லாரும் அவங்கவங்க தேவையை மட்டும் பார்த்தா எப்படி?

============


8  அமராவதி, ஆந்திர முன்னாள் முதல்வர், சந்திரபாபு நாயுடு, கிருஷ்ணா நதிக்கரையில் கட்டிய, 'பிரஜா வேதிகா' என்ற கூட்ட அரங்கத்தை, ஜெகன்மோகன் அரசு, தரைமட்டமாக்க துவங்கியது.


 சந்திரபாபுவு நாயுடுக்கும் , பொதுமக்களுக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகலை, அதனால பிரஜா”வேதி:கா கையை விட்டுப்போச்சு

-------------------
'கொள்கையே இல்லாத கட்சிக்கு கொ.ப.செ., எதுக்கு?-தங்க தமிழ்செல்வன்
கொள்கை இல்லைனு கண்டு பிடிக்கவே 2 வருசம் ஆகி கிருக்கு இவருக்கு


------------------

10  இரண்டு குழந்தைக்கு மேல் உள்ளவர்கள், பஞ்சாயத்து தேர்தல்களில் போட்டியிட முடியாது என்ற சட்ட திருத்த மசோதா, உத்தரகண்ட் சட்டசபையில், நேற்று நிறைவேறியது


வாரிசு இருந்தா  சிபாரிசு இல்லை?

==============


11 தமிழகத்தில் மிக மோசமான ஊழல் ஆட்சியை அதிமுக செய்து வருகிறது: மக்களவையில் திமுக உறுப்பினர் தயாநிதி மாறன் பேச்சு
# உண்மைதான்,தமிழகம்"கண்டது இரண்டு வகையான ஆட்சி 1 விஞ்ஞானபூர்வமா திருடி ஆதாரம் இல்லாம தப்பிக்கற கட்சி 2 பட்டவர்த்தனமா திருடி மடத்தனமா மாட்டிக்கற கட்சி


===========


12 காங்கிரஸ் என்ற பல்லக்கை தூக்கியதால் தான் திமுக வென்றது. -ராஜேந்திர பாலாஜி.
திமுக"வுக்கு காங் என்றும்"அல்லக்கை"தான்.


================


13 மக்களுக்கு தண்ணீர் தாகம்.. ஸ்டாலினுக்கு பதவி தாகம்.. தமிழிசை விமர்சனம்!
# மொத்தத்தில் இரு தரப்பினர்"தாகமும் தீரப்போறதில்லை, அலைகள் ஓய்வதில்லை; பயணங்கள் முடிவதில்லை கோபுரங்கள்"சாய்வதில்லை மாதிரிதான்


================


14 முதலமைச்சர் பங்களாவுக்கு குடிநீர் சப்ளை : கட்டணம் செலுத்தவில்லை என மாநகராட்சி புகார்
)# 2 பக்கெட் தண்ணி தானே ஒரு நாள் பயன்பாடுன்னாரு,அதுக்கு எதுக்கு சார்ஜ்?இப்ப வெளில வரும் பாருங்க உண்மை பயன்பாடு விபரம்


===============


15 நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பயணிக்க வேண்டிய நேரம் இது! - பிரதமர் மோடி
#2000 கோடில புது பிளைட் வாங்குனாரே,அதுல நம்ம எல்லாரையும் ஒரு ரவுண்ட் கூட்டிட்டுப்போகபபோறாரு போல


===============


16 ஒரு மாதத்தில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் டெபாசிட் செய்தால் சேவை கட்டணம்: கனரா வங்கி அதிரடி அறிவிப்பு
# SBI பேங்க்கை விட பெரிய கொள்ளைக்காரன் இருக்கான் போல,நாம போஸ்ட் ஆபீஸ் SB ல பணம் வரவு செலவு வைப்போம்


==============


17   'வாடிக்கையாளரிடம் கடன் தொகையை வசூல் செய்ய, குண்டர்களை அனுப்புவதற்கு வங்கிகளுக்கு அதிகாரம் இல்லை,''  மத்திய நிதித்துறை இணை அமைச்சர், அனுராக் சிங் தாக்குர்

மிரட்டவும் கூடாது , ஆனா கடனும் வசூலிக்கனும்னா ஜட்ஜ் அய்யா தான் அதை செய்யனும்

ஒல்லியா இருக்கற ரவுடிகளை அனுப்பலாமா?


================


18  பார்லிமென்ட்டை, கேள்விக்கு உள்ளாக்கவே செய்வேன். அதில்,எந்த தவறும் இல்லை. இதற்காக நீங்கள் கோபித்தால், எனக்கு கவலை இல்லை,'' என தி.மு.க., - எம்.பி., ராஜா

 வெளிநடப்புதானே வழக்கமா நாம பண்றது ? இது என்ன புதுசா?

==============8 வருசமா அவங்க ஆட்சிலயே இல்லை , இன்னும் அவங்க:ளையே குத்தம் சொன்னா எப்படி?

===============
 இவருக்கு மோடியும் ஆகாதுன் , கிரண்பேடியும் ஆகாது போல  2 டி எதிர்ப்பு


=============

0 comments: