Tuesday, July 02, 2019

சூரியனுக்கு அருகில் இருக்கும் கோள் புதனா? சனியா? புதிய ஆராய்ச்சி முடிவு

1  தலைவரே! வாக்கும் எந்திரத்துல யாரும் தில்லு முல்லு பண்ண முடியாதுனு எப்படி உறுதியா சொல்றீங்க?


 ஏய்யா, தமிழ் நாட்ல கள்ள ஓட்டு போடறதுக்கு பிள்ளையார் சுழி போட்டதே நாம தான், அது சாத்தியம்னா  போன டைம் நான் சி எம் ஆகி இருக்க மாட்டேனா?


=============

மேடம், உங்க வாட்சப் ஸ்டேட்டஸ் ஆக கதவுச்சாவு அப்டினு போட்டிருக்கீங்களே? புரியலஎன்னய்யா உளர்றே?
DOOR DIE அப்டினு இருக்கே?
யோவ், அது DO OR DIE==============


3 தலைவரே!நாம் காட்டுவதே மத்திய அரசுன்னு ஸ்டேட்டஸ் வெச்சிருக்கீங்களே? அது எப்படி? 

 எலக்சன் ரிசல்ட் வந்ததும் யாரு ஜெயிக்கறாங்களோ அவங்க தான் அடுத்த பிரதமர்னு எல்லாரையும் முந்திக்கிட்டு கை காட்டுவோம், அப்போ நாம காட்டுனவங்க தானே மத்திய அரசு, எப்படி நம்ம மொள்ளமாரி(சாணக்கிய)த்தனம்?==============4 தலைவரே! நாம முன்னிலையா? நம்ப முடியலையே?
தபால் ஓட்டுக்கள் தான் முதலில் எண்ணப்படும். தபால் ஓட்டுப்போட்டதெல்லாம் யாரு? நம்ம ஜாக்டோ ஜியோ க்ரூப்===============5 தலைவரே! நமக்கு மட்டும் காலை ஒன்பதரைக்குத்தான் ஏழரைனு சொல்றீங்களே? புரியலை
முதல் ஒரு மணி நேரம் தபால் ஓட்டுக்கள் தான் எண்ணுவாங்க .9.30 ல இருந்துதான் வாக்கு எந்திர கவுண்ட்டிங் ஆரம்பம்,


===============


6 தலைவரே!நம்ம எம்.பி ங்க பாதிப்பேருக்கும் மேல ஹிந்தியும் தெரியாது ,இங்கிலீஷூம் தெரியாது ,எப்படி சமாளிப்பாங்க?


உள்ளே இருந்தாத்தானே மொழிப்பிரச்சனை? நாமதான் வெளிநடப்பு பண்ணிடுவமே?


============


7 ஒரு தமிழன் தான் தமிழனை ஆளனும்


அப்டியா?எங்கே ஒர்க் பண்றீங்க?
பெங்களூர்ல பெரிய ஐடி கம்பெனி
ஒரு தமிழன் தமிழ்நாட்ல தானே ஒர்க் பண்ணனும்?=============


8 ஜட்ஜ் = திருடுனதை ஒத்துக்கறியா?
கைதி /= அய்யா,நான் பெரியார் மண்ல பிறந்தவனுங்க
டேய் ,எல்லாத்திருடனுங்களுக்கும் ஒரே தண்டனைதான்


==============


9 தலைவரே!இது பெரியார் மண் அப்டிங்கற டயலாக்கை நம்ம 200 ரூபா"கோஷ்டிங்க"அடிக்கடி சொல்றாங்க
ஆமா
நம்ம தங்கச்சி ட்விட்டர் A/c ல fb a/c ல ப்ரொபைல் பிக்சர்ல ,பேக்க்ரவுண்ட் பிக்சர்ல பெரியார் தேர்தல் சமயம் மட்டும் டூர் போய்ட்டாரா?பனை மரம்"தானே வெச்சாங்க?
அது வந்து அது ,ஆக ஆக...


===============


10 தலைவரே! முகிலன் எங்கே?னு 100 நாட்களா போர்க்குரல் எழுப்பறாங்க
ஆமா
நம்ம 37 எம் பி க்களும் தண்டமாதானே இருக்காங்க,முகிலனையாவது தேடச்சொல்லுங்க


==================


11 நான் பொண்ணுங்க பக்கம் தலை வச்சு படுக்காதவன்
ஏன் அப்டி?
முதல்ல தலையணை வெச்சு அப்புறமா அதுல,தலை வெச்சுப்படுப்பேன்


==============


12 நாவல் பழம் கிலோ 160ரூபா,வேணுமா?
ரொம்ப சின்னதா இருக்கே?
இது குறு நாவல் பழம்ங்க


============


13 ஆறடி கூந்தலை 3 அடியாக வெட்டிட்டேன்
அருமை,அதை 1 3/4 அடியா"மறுடி வெட்டுங்க
ஏன்?
யாராவது"கேட்டா திருக்குறள் ஹேடர் ஸ்டைல் னு சொல்லிக்கலாம்


==============


14 பதவி ங்கறது முள்படுக்கை மாதிரி
தலைவரே!எப்ப பாரு நமக்கு அந்த டாபிக்தானா?முள் நாற்காலி..,முள் முக்காலி இப்படி சொல்லி இருக்கலாமே?

==============


15 உடன்பிறப்பே!இன்னும் 2 வருசம் பல்லைக்கடிச்ட்டு நல்லவர் போல் காட்டிக்கொள்ளுங்கள்.எங்கே எந்தக்கடைல எதை சாப்ட்டாலும் காசு குடுத்துடுங்க,2021 மே தேர்தல் முடிந்த பின் நம் சுயரூபத்தைக்காட்டுவோம்,
அண்ணா நாமம் வாழ்க! நம்மை நம்புனவங்க மடத்தனம் வளர்க!


===============


16 ஜட்ஜ் = ஏம்மா,உன்"காதலன் திருமணத்துக்கு மறுத்ததால உல்லாச வீடியோ ரிலீஸ் பண்ணுனியா?
கைதி = தமழ் ராக்கர்ஸ் ல அவெஞ்சர்சையே ரிலீஸ் பண்றாங்க,அஜித் நடிச்ச உல்லாசம் பழைய படம்,ரிலீஸ் பண்ணக்கூடாதுங்களா?


==============


17 இன்னைக்கு, வாழ்க்கையில் முதல் முறையா ஒரு கிணத்துல கழுத்துவரை தண்ணில மிதந்தேன்...
அடேங்கப்பா 6 அடி ஆழம்"இருக்குமா?
ஒரு அடிதான்,நான் தலைகீழா நின்னப்ப"கழுத்து வரை தண்ணி...


================


18 ராகுல் பிரதமர் ஆனால் மாசம்
ரூ 6000 அனைவருக்கும் தருவதாக வாக்களித்து வாக்கு"சேகரித்தோம்.ராகுல் ஜெயிக்கலை.அதனால அதுக்கு"தார்மிகப்பொறுப்பேற்று கழக நிதியிலிருந்து தரப்படும்,அனைவரும் அறிவாலயம் வருவீர்!
நாங்கள் சொன்னதைத்தான் செய்வோம்
செய்வதைத்தான் சொல்வோம்


===============


19 சயின்ஸ் மிஸ் சவுந்தர்யா = சூரியனுக்கு அருகில் இருக்கும் கோள் எது?
லொள் மாணவன் = சனி டீச்சர் அதெப்டி புதன் தானே?
2 ஜி வழக்கு மறுபடி மேல்முறையீடு வரப்போகுது.அப்போ சூரியனுக்கு சனி தானே?
நாட்டுநடப்புத்தெரியாம பேசாதீங்க


==============


20 தமிழ்மிஸ் தன்யா = கார்"குழலி ,பூங்குழலி
என்ன வித்தியாசம்?
லொள்மாணவன் = கார் குழலி"கார் வெச்சிருப்பாங்க
பூங்குழலி பூ வெச்சிருப்பாங்க


===================


0 comments: